உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மே தினப் பிரகடனம்
புதுதில்லி, ஏப். 27-வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம், கண்ணியமான
வேலைமற்றும் வாழ்வாதாரங்களுக்காக அணி திரள்வோம், போராடுவோம் என்று உலகத் தொழிற்சங்கங்களின்
சம்மேளனம்(WFTU-World
Federation of Trade Unions) மே தினப் பிரகடனமாக அறைகூவல் விடுத்துள்ளது.இது
தொடர்பாக உலகத் தொழிற் சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள பிரகடனம் வருமாறு:“உலகத்
தொழிற்சங்கங்களின் சம் மேளனம், தன்னுடன் இணைந்துள்ள உல கம் முழுதும் உள்ள 120க்கும் அதிகமான
நாடுகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்த9 கோடி அமைப்புகளைச் சேர்ந்த தொழி லாளர்களும்
தன்னுடைய வர்க்க, சர்வதேசிய மற்றும் வீரஞ்செறிந்த வாழ்த்துக்களை இம் மே தினத்தில் உரித்தாக்கிக்
கொள்கிறது. இம் மே நன்னாளை வேலைநிறுத்தங்கள், வீரஞ்செறிந்த பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும்
ஆர்ப்பாட்டங்கள் மூலமாக கௌரவித்திட வேண்டுமாயும் உலகத் தொழிலாளர்களை சம்மேளனம்
அறைகூவி அழைக்கிறது.
இந்த ஆண்டு மே தினத்தை உலகத் தொழிலாளர் வர்க்கம் மிகவும்
இடர்சூழ்ந்த சூழ்நிலையில் எதிர்கொள்கிறது. தற்போது நீடித்துவரும் உலகப் பொருளாதார
நெருக் கடியிலிருந்து மீள்வதற்காக அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களும், ஏகாதிபத்தி
யத்தின் எந்திரங்களாக விளங்கும் சர்வ தேச நிதியம், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் முதலானவைகளும் “இந்த
நெருக்கடியிலிருந்து வெளிவருதற்காக’’ தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தில் வெட்டு, ஓய்வூதியத்தில்
வெட்டு, எதேச்சதிகாரம், சிக்கன
நடவடிக்கைகள் என்ற பெயரில் தொழிலாளர்களின் பல்வேறு சலுகைகள் பறிப்பு, சமூக உரிமைகள்
ஒழிப்பு, ஆட் குறைப்பு என
அனைத்துவிதமான தொழி லாளர் விரோத நடவடிக்கைகளிலும் இறங்கிஇருக்கின்றன.
அதே சமயத்தில், சமீபத் தில் உக்ரைனில் ஏற்பட்டதுபோன்று
ஏகாதிபத்தியத்திற்குள்ளேயே உள்ள முரண்பாடு களும் தொழிலாளர் வர்க்கத்திற்கு மேலும்
ஆபத்தான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அபாய அறிவிப்பு மணி ஒலிக்கத்
தொடங்கி இருக்கிறது. சர்வதேச தொழி லாளர் ஸ்தாபனத்தில், முதலாளித்துவ
அரசாங்கங்கள் தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று
கோரி வருகின்றன. அதனால்தான் அவை, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் 87வது கன்வென்ஷனான “வேலை நிறுத்த
உரிமை’’ என்னும்
அங்கீகாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கோரி வருகின்றன. வேலை நிறுத்த உரிமை
என் பது எந்த அரசாங்கத்தாலோ அல்லது சர்வதேச அமைப்பாலோ கொடையாக வழங் கப்பட்டதல்ல.
தொழிலாளர்களின் கடும்போராட்டங்களின் விளைவாக வென் றெடுக்கப்பட்ட ஒன்று. இதனைத்
தொடர்ந்துநீட்டித்திடக்கூடிய விதத்தில் தொழி லாளர்களின் போராட்டங்கள் தொடரும்.
எனவேதான், உலகத்
தொழிற்சங்கங்களின் சம்மேளனம், “வேலைநிறுத்த உரிமைமீது கை வைக்காதே’’ என்ற முழக்கத்தை
சர்வதேச தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்களும் வீரஞ்செறித்த போராட்டங்களின் மூலம் உரக்க
முழங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறது.
சர்வதேச அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் தொழிலாளர்
வர்க்கத்தையும் அவர்தம் குழந்தைகளையும் கருணையற்ற முறையில் தாக்கிக்
கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் தன் சுரண்டலை அதிகரித்திட, அதிலும் குறிப்பாக
பெண்கள் மற்றும் இளைஞர் இடையே மிகவும் கொடூரமான முறையில் அதிகரித்திட, வேலை யில்லாத்
திண்டாட்டத்தை ஒரு காரணியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த மே தினத்தை
வேலையில்லாத் திண் டாட்டத்திற்கு எதிராகப் போராடவும் தொழிற் சங்க இயக்கம்
முன்வரவேண்டும் என்று உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறைகூவி
அழைக்கிறது.வேலையில்லாதோரின் வாழ்வுக்காக, தொழிற்சங்கங்கள் வேலையில்லாதோரையும்
அணிதிரட்டிட முன்வரவேண்டும், வேலையில்லாதோரின் சமூகநலப் பயன்களுக் காகவும் போராட
வேண்டும், உலகில் உள்ள
அனைவருக்கும் நிரந்தர மற்றும் உறுதியான வேலைக்கான உரிமைக்காகப் போராட
முன்வரவேண்டும், ஒட்டுமொத்தத்தில் வேலையின்மைக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் தொழிலாளர்
வர்க்கத் தை உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறைகூவி அழைக்கிறது.
இம்மேதினம் உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் சார்பில் 2014 அக்டோபர் 3 அன்று
வேலையின்மைக்கு எதிரான போராட்டத்தை பிரதான கோரிக்கையாக முன்வைத்து
அனுசரிக்கப்படவுள்ள சர்வதேச நடவடிக்கை தின தயாரிப்புப் பணிகளுக் கான தொடக்கமாக
அமைந்திடட்டும். உலகத் தொழிலாளர்களே, வறுமை,வேலையின்மை, பசி, பஞ்சம், பட்டினி,ஏகாதிபத்திய யுத்தங்கள் மற்றும் பொது சுகாதாரம்
மற்றும் கல்வி கிடைக்காமல் உழைக்கும் வர்க்கம் ஏன் திண்டாட வேண்டும்? அவ்வாறு திண்டாட
வேண்டியதற்கான அவசியமே கிடையாது.
உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தன் பதாகை யின் கீழ்
உலகத் தொழிலாளர்கள் அனை வரும் ஒன்றுபட்டு நின்று, உலகில் உள்ளஅனைவருக்கும் வேலை
கிடைத்திடவும்,
வேலைநிறுத்த
உரிமையைப் பாதுகாத்திட வும், அனைவருக்கும் நிரந்தர மற்றும் உத்தர வாதமான முறையில் வேலை
கிடைத்திடவும்,
பெற்ற தொழிற்சங்க
உரிமைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாத்திடவும் போராட அறைகூவி அழைக்கிறது.
தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்காலம் சுரண்டப்படுவதற்கும் முதலாளித்துவ
காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடமளிக்கக் கூடிய வகையில் இருந்திடக்கூடாது. உலகத்
தொழிலாளர்களே,
முதலாளித்துவ
காட்டுமிராண்டித்தனத்திற்கு எதி ராக எழுங்கள், சமூக நீதிக்காக எழுங்கள், சுரண்டலற்ற
உலகத்தை உரு வாக்கு வதற்காக, ஒன்றுபடுவோம், போராடு வோம் என்று கூறப்பட்டுள்ளது.
-தமிழில்:
ச.வீரமணி
2 comments:
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
vanakkam. eppadi endru vivaramaga ezhuthungal. muyarchikkiren
Post a Comment