Thursday, April 10, 2014

மக்களவைத் தேர்தல் : பணம் பாய்கிறது!


People's Democracy Editorial

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி, எதிர்காலத்தில் அமைய
விருக்கும் அரசாங்கத்தில் பிரதமர் வேட் பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நபரின் வெற்றியை உத்தரவாதப்படுத்துவதற்காக ஆர்எஸ்எஸ்/பாஜக-வினரால் பணமும் மற்றும் பல்வேறுவிதமான பொருள்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வாரி இறைக்கப்பட்டு வருகின்றன.  வேட் பாளர்  ஒருவர் தன் தொகுதிக்கு 70 லட்சம் ரூபாய்தான் செலவு செய்யலாம் என்று தேர் தல் ஆணையம் விதித்துள்ள வரம்பை ஆர்எஸ்எஸ்/பாஜக தங்களுடைய பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான செலவை (மொத்தம் உள்ள 542 தொகுதி களுக்கும்) ஏற்கனவே விஞ்சிவிட்டது என்று  மதிப்பிடப்பட்டிருக்கிறது.  பாஜக ஓர் அரசியல் கட்சி என்ற முறையில் பிரச்சாரத்திற்காக செய்துள்ள செலவினத்தையும், அது தன் கட்சி சார்பாக நிறுத்தப்பட்டுள்ள மற்ற வேட் பாளர்களுக்காக ஒதுக்கியுள்ள தொகையையும் சேர்த்தால் நிச்சயமாக தேர்தல் ஆணையம் விதித்துள்ள உச்சவரம்பை விட ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாகவே வரும். இவர்கள் ஏற்கனவே செலவு செய்துள்ள பணமும் மற்ற பல்வேறுவிதமான செலவுகளும் உண்மை யில் மிகவும் அதிகமாகும். இந்த அளவிற்கு சுதந்திர இந்தியாவில் இதற்குமுன் எவரும் செலவு செய்ததில்லை.
தேர்தல் செலவுகளைக் கண்காணிக்கும் ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்திடம் துல் லியமாக இல்லாததன் காரணமாகத்தான் இவர்கள் இந்த அளவிற்குப் பணத்தையும் பொருள்களையும் வாரி இறைக்க முடிகிறது.  தற்போது நாட்டிலுள்ள சட்டங்களின்படி ஓர் அரசியல் கட்சி தன்னுடைய தேர்தல் பிரச் சாரத்திற்காக செலவிடும் தொகைக்கு வரம்பு எதுவும் கிடையாது. வேட்பாளரின் செலவுக்கு வரம்பு விதித்திருப்பதுபோல, கட்சிகளின் செலவுகளுக்கும் வரம்பு விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கோரி வருகிறது. ஆனால், நாம் முன்வைக்கும் இந்த யோசனையை நாட்டில் உள்ள வேறெந்த தேசியக் கட்சியும் ஒப்புக்
கொள்ளவில்லை.  இதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவும் இல்லை. இதன் விளைவாக, நம் நாட்டின் இன்றைய தேர்தல் நடைமுறைச் சட்டங்களின்படி குறைந்த வள ஆதாரங்கள் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் நன்கு ஆதரவினைப் பெற்றிருந்தபோதிலும், அவை மற்ற கட்சி களுடன் சரிசமமாகப் போட்டியிட்டுப் பிரச்சாரம் செய்வதில் மிகவும் சிரமப்படுகின்றன.
நல்ல அறிகுறியல்ல
சுவர் விளம்பரங்கள் செய்வதற்கும், சுவ ரொட்டிகள் ஒட்டுவதற்கும், குறைந்த செல விலான பிரச்சாரங்களைச் செய்வதற்கும் பலவிதமான கட்டுப்பாடுகள் கொண்டுவரப் பட்டிருக்கின்றன. ஆனால் அதே சமயத்தில் மிகவும் வசதியுடன் திகழும் அரசியல் கட்சிகள் ஊடகங்களில் விளம்பரங்கள் செய்வதற்கோ, காசுகொடுத்து தங்கள் கட்சிக்கான பிரச்சாரத்தை செய்தி போல வெளியிடுவதற்கோ, அதேபோன்று காசு கொடுத்து கருத்துக்கணிப்பை திணிப்பதற்கோ, ஹெலிகாப்டர்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்வதற்கோ நடைமுறையில் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இவ்வாறு இன்றைய இந்திய ஜனநாயகம் என்பது பணம் படைத்தோரும், வசதி வாய்ப்புகள் நிறைந்தோரும் எவ்விதத் தங்குதடையுமின்றி செயல்படக் கூடிய அளவிற்கு மிக வேகமாக தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது. இதனை நம் எதிர்கால ஜனநாயகத்திற்கு நல்லதோர் அறிகுறியாகக் கூறுவதற்கில்லை.
தனிநபரின் பணபலம் மற்றும் செல்வாக்கு எதுவாக இருந்தபோதிலும் அதற்கும் அப்பாற்பட்டு, நம் நாட்டின் ஜனநாயகம் தொடர்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ள சட்டங்களும் நடைமுறைகளும் மற்றும் வயது வந்த அனைவருக்குமான வாக்குரிமையில் பழுது ஏதும் ஏற்படாதவாறு நாட்டின் ஜனநாயகம் நிலைநிறுத்தப்படு வதற்கும் ஏற்ற வகையில், தேவைப்பட்டால், உரிய சட்டத் திருத்தங்களை தேர்தல் ஆணை யம் பரிந்துரைத்திட வேண்டும். 
இவ்வாறு இவர்கள் செலவு செய்வதற் கான பணம் மற்றும் வசதி வாய்ப்புகள் எங் கிருந்து வருகிறது என்பதும் புலனாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு இவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக செல விடப்படும் தொகைகளை, நமக்கு மிகவும் அவசியத் தேவையாக இருக்கக்கூடிய பொருளாதார உள்கட்டமைப்புக்கான கட்டிடங்கள் கட்டுவதற்காக முதலீடு செய்யப்பட்டால், பல லட்சம் வேலைகளை உருவாக்கிட முடியும்.
வெறிப்பிடித்த, சகிப்புத் தன்மையற்ற
ஆயினும் ஆர்எஸ்எஸ்/பாஜக பரி வாரம் இந்த அளவிற்குப் பணத்தையும் பொருள்களையும் வாரி இறைப்பதற்கு, இந்தத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற வெறித்தனமான ஆர்வம்தான் காரண மாகும்.  அதன்மூலம் தங்களுடைய நீண்ட காலக் குறிக்கோளான வெறிபிடித்த, சகிப்புத் தன்மையற்ற பாசிச ’இந்து ராஷ்ட்ரமாகதற்போதைய இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகத் தன்மையை மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்க மாகும். முன்பு இருந்ததைவிடத் தற்போது அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர்கள் பார்க்கிறார்கள்.   
1996ல் வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாஜக அரசாங்கம் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை அதனை ஆதரித்த கட்சிகள் எதனையும் கவராததன் காரணமாக, ஆட்சிப் பொறுப்பேற்ற 13 நாட்களிலேயே நாடாளுமன்றத்தில் அது தோற்கடிக்கப்பட்டது. இவ் வாறு மிகவும் குறுகிய காலம் ஆட்சியிலிருந்த சமயத்தில்கூட, நாடாளுமன்ற மக்க ளவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த  சமயத்திலேயே, அவ்வாக்கெடுப்பின்போது தங்கள் ஆட்சி வீழ்ந்துவிடும் என்று நன்கு தெரிந்தபின்பும்கூட, வாஜ்பாய் அரசாங்கம் மிகவும் கேலிக்குரிய விதத்தில் அப்போது திவாலாகிக் கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனமான என்ரான் நிறுவனத்திடமிருந்து ‘மின்சாரம் வாங்கும் ஒப்பந்தம்ஒன்றைக் கையெழுத்திட்டது. உண்மையில், “சலுகைசார் முதலாளித்துவத்துடன்’’ அதற்கிருந்த பிணைப்பு அப்போதே அந்த அளவிற்கு அதனிடம் இருந்தது.
1998ல் பாஜக தன்னுடைய இந்துத்துவா நிகழ்ச்சிநிரலுடன் சற்று சமரசம் செய்துகொண்டு வாஜ்பாய் தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைத்தது. இப்போது அது 13 மாத காலம் நீடித்தது. அதன்பின் அஇஅதிமுக ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டதை அடுத்து ஆட்சி கவிழ்ந்தது.  அதன்பின்னர் 1999ல்தான் பாஜக தன்னுடைய வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை ஒதுக்கி வைத்தபின்னர்தான்  அரசாங்கத்தை அதனால் முழுமையாக நடத்தி முடிக்க முடிந்தது.
2004ல் ஆர்எஸ்எஸ் மீண்டும் தன்னு டைய பிரச்சாரத்தைத் துவக்கியது. அதனு டைய “ஒளிரும் இந்தியா’’ மற்றும் “எல்லாம் நன்றாகவே நடக்கிறது’’ என்கிற பிரச்சாரமும் அதனைத் தொடர்ந்து பலவிதமான கருத்துக் கணிப்புகள் பாஜக அபரிமிதமான வெற்றியை ஈட்டும் என்றும் அளந்தன. ஆயினும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்களது அனைத்துவிதமான பிரச்சாரங்களும் படுதோல்வி அடைந்தன என்பது இன்றைய வரலாறாகும்.
நாஜி பாசிச பிரச்சார உத்தி
2014 தேர்தல்களிலும், ஆர்எஸ்எஸ் கூட் டம், தங்களுடைய வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமலேயே,  மத்திய அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனை அது எய்துவதற்காக,  மிகவும் நயவஞ்சகமான நாஜி பாசிச பிரச்சார உத்திகளை இந்திய நிலைமைகளுக்கேற்ப நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய பிரச்சார உத்திகளில் இரு அடிப்படையான அம்சங்கள் காணப் படும். முதலாவதாக, தங்களுடைய “லட்சியம்’’ தான் சரியானது என்று முன்னி றுத்துவதற்காக, வரலாற்றையே எவ் விதத் தயவுதாட்சண்யமுமின்றி திரித்
துக் கூறுவது. இரண்டாவதாக, தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங் களிலிருந்து, எப்படி ஹிட்லர் தன்னுடைய ஆரிய வம்சத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக யூதர்களுக்கு எதிராக கிரிமினலாக வெறுப்பை விதைத்தானோ அதேபோன்று, முற்றிலும் வேறுபடுத்திக் காட்டக்கூடிய விதத்தில் “எதிரி’’யை உருவாக்குவது. இந்திய நிலை மைகளில்,  பெரும்பான்மையாகவுள்ள இந்துக்களின் உயர்தன்மையை நிறுவுவதற்காக, இத்தகைய வெறுப்பு விஷத்தை மதச் சிறுபான்மையினருக்கு எதிராக, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக, விதைத்திட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக இந்துக்களிலேயே பல்வேறு வேற்றுமைகளுடன் இருக்கக் கூடியவர்களையும் ஒன்றுபடுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்றுவருகிறது. குறிப் பாக சாதிய அடிப்படையிலான சமூக ஒடுக்கு
முறைக்கு ஆளானவர்களையும் தங்க ளுடைய ஒரேமாதிரியான இந்து சமூக அமைப்பிற்குள் ஒருமுகப்படுத்துவதற்கும் முயற்சிகள்  நடைபெற்று வருகின்றன. இத்தகைய முயற்சிகள், மற்ற மதச் சிறுபான் மையினருக்கு எதிராக இந்துக்களை ஒரு முகப்படுத்துவதற்கான  பகைமை பாராட்டும் வாக்கு வங்கி அரசியலே தவிர வேறல்ல.
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரத்தால் முன் னிறுத்தப்பட்டுள்ள பிரதமர் வேட்பாளரின் தற்போதைய தேர்தல் பிரச்சாரம் இதற்கு மிகச் சரியான உதாரணமாகும்.  சமீபத்தில் அவர் நாடாளுமன்றத்தில் தனக்கு ஆதரவாக 300 உறுப்பினர்களைத் தாருங்கள் என்று மக்களைக் கேட்டிருக்கிறார். அவ்வாறு அவருக்குத் தந்துவிட்டால் உலகமே அவர் சொல்வதைத்தான் கேட்குமாம்.  மனித சமுதாய நாகரிகம் உருவான காலத்திலிருந்தே உலகம் எப்போதும் இந்தியாவை உற்றுக் கவனித்துத்தான் வந்திருக்கிறது. அவ்வாறு உலகம் இந்தியாவை உற்றுக் கவனித்து வந்ததற்கு, அதனுடைய ஆள்பலமோ அல்லது பொருளாதார வளமோ காரணம் அல்ல. மாறாக, அதன் தத்துவார்த்த சிந்தனைகளின்  வல்லமைதான் காரணமாகும்.  நமது நாடு தன்னிகரற்ற முறையில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டுள்ள மிகச்சிறந்த நாடாகும். அதுதான் நம் நாட்டின் பலமுமாகும். இத்தகைய மகத்தான சிந்தனையை வலுப் படுத்துவதற்குப் பதிலாக ஆர்எஸ்எஸ் பார்வை என்பது, இத்தகைய மண்ணின் மாண்பை, நாட்டின் இயல்பான வல்லமையை, அழித்து வீழ்த்துவது என்பதாகும்.
நயவஞ்சக கருத்து விதைப்பு
புராதன புத்திஸ்ட் மையம் பீகாரில் டாக்சிலா என்னுமிடத்தில் இருந்தது (இப் போது அது இன்றைய பாகிஸ்தானில் இருக்கிறது) என்று கதையளந்ததை அடுத்து, அலெக் சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்து, கங்கை நதிக்கரையில் இறந்தான் என்றும், பகத் சிங் மிக நீண்டகாலம் அந்தமான் செல்லு லர் சிறையில் தண்டனையை அனுபவித்தார் என்றும், தப்பும் தவறுமாக கதையளந்தபின், தற்போது மாமன்னர் அக்பரின் அரசவையில் வீற்றிருந்த வரலாற்றுச்சிறப்புமிக்க இசைக் கலைஞர் தான்சென் தன்னுடைய பிறந்த இடத்தில்தான் இசையைக் கற்றுக்கொண்டார் என்றும் அளந்திருக்கிறார். வரலாற்று அறிவு இல்லாமையால் மட்டும் இவ்வாறெல்லாம் கூறப்படவில்லை.  மாறாக இந்திய வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ள அனைத்துமே இந்து மூலக்கூறுகளால்தான் என்று நிலைநாட்டுவதற்காகவும் நய வஞ்சகமான முறையில் இவ்வாறெல்லாம்  கருத்துக்கள் விதைக்கப்படுகின்றன.
பாசிசத் தற்புகழ்ச்சிக் கிறுக்குக் குணம் படைத்த ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் பிர
தமர் வேட்பாளர் சமீபத்தில் நாடு “தாம ரை’’யையும், “மோடி’’யையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறார். இதுதான் ஆர்எஸ்எஸ்-இன் குறிக்கோளாகும்.  இந்திய கார்ப்பரேட்டுகளும் இந்தப் பேர்வழியைத்தான் தங்கள் “மீட்பர்’’ என்றும், மக்களைக் கசக்கிப் பிழிந்துகொள்ளை லாபம் ஈட்டுவதற்கு இவர்தான் வாய்ப்புவாசல்களை அகல மாகத் திறந்துவிடுவார் என்றும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மோடி நிற்பதற்கு வாரணாசியைத் தேர்ந் தெடுத்திருப்பதற்கே காரணம் தங்களுடைய மதவெறி நிகழ்ச்சிநிரலை மிகவும் வெளிப் படையாகவே முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்காகத்தான்.  கார்ப்பரேட் ஊடகங்கள் தம்பட்டம் அடித்து வரு வதைப்போல உள்ளபடியே மோடி ’’அலை’’ வீசிக்கொண்டிருக்குமாயின், பின் ஏன் ஆர்எஸ்எஸ்/பாஜக எப்போதும் அத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் பாஜக தலைவரை ஓரங்கட்டிவிட்டு அதற்குப் பதிலாக தங்கள் “மீட்பரை’’ அங்கே நிறுத்திட வேண்டும்?  உண்மையிலேயே அலை வீசு கிறது என்றால் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவர் வெல்ல வேண்டுமே, இல்லையா?  இது மதவெறியைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்பதற்கான கேவலமான முயற்சியேயாகும்.
இத்தகைய ஆபத்துக்கள் நம்முன்னே உள்ளன.  பெரும்பாலான மக்களின் அடிப்
படைப் பிரச்சனைகள் மிகவும் சீர்கேடடைவது தொடரக்கூடிய நிலையில் இவற்றைத் தீர்க்கக்கூடிய வகையில் தே.ஜ.கூட்டணியிடமோ அல்லது ஐ.மு.கூட் டணியிடமோ எவ்விதமான திட்டங்களும் கிடையாது. நம் வளமான மற்றும் தன்னிகரற்ற நம் வரலாற்றுப் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் காத்திடவும் மற்றும் மனித சமுதாய நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்லவும் நாட்டு மக்களுக்குத் தேவைப் படுவது என்னவெனில்  காங்கிரஸ் அல் லாத, பாஜக அல்லாத பொருளாதாரக் கொள்கைத் திசைவழிக்கு மாற்றான ஒரு கொள்கையேயாகும். 2014 மக்களவைத் தேர்தலுக்குப்பின்னர் நமக்குத் தேவை இதுவேயாகும்.

- தமிழில் : ச. வீரமணி

No comments: