பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்
கடைசியில் பாஜக, 16வது மக்களவைக்கான தன்னுடைய தேர்தல் அறிக்கையை
வெளியிட்டுவிட்டது. இந்திய கார்ப்பரேட்டுகளும் அவற்றின் ஊடகங்களும் பாஜக-தான்
ஆட்சி அமைக்கப்போகிறது என்று மிகவும் தம்பட்டம் அடித்துவந்த போதி லும், அத்தேர்தல் அறிக்கையில் எதிர்கால இந்தியாவை எப்படி
உருவாக்கப்போகிறோம் என்பது குறித்து சரியானமுறையில் தெளிவு படுத்தப்படவில்லை
என்கிற கருத்தும் வெளியாகி இருக்கிறது. தேர்தல் நடைமுறை அமல்படுத்தத்
துவங்கியபின்னர் தேர்தல் அறிக்கை வெளியாகி இருப்பது என்பதுஇதற்குமுன்னெப்போதும்
இல்லாத ஒன்றாகும். இந்தியத் தேர்தல் வரலாற் றினை ஆய்வு செய்தால், இவ்வாறு இதற்கு முன்னெப்போதுமே நடந்ததில்லை என்பதை
அறிந்துகொள்ள முடியும். இதிலிருந்தே பாஜக வின் தேர்தல் அறிக்கை ஒரு சடங்காகத்தான்
வெளியிடப்பட்டிருக்கிறது என்பதும், உண் மையில் அதன் உண்மையான நிகழ்ச்சிநிரல் வேறு என்பதும் அதனை அவர்கள் மக்க
ளுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க விரும்ப வில்லை என்பதும் தெளிவாகிறது.
எப்படி இருந்தபோதிலும், தேர்தல் அறிக் கையைப் பரிசீலிக்கும்போது, தன்னுடைய மறைமுகமான குறிக்கோளை எய்துவதற்கு அது மேற்கொள்ள
விருக்கும் முக்கியமான நடவடிக்கைகளை கழித்துவிட்டுப் பார்த்தோ மானால், அதில் படாடோபமான வார்த்தை களுக்குப் பஞ்சமில்லை என்பது
தெரிய வரும். பல்வேறுவிதமான ஸ்லோகங்களுக்கிடையே இரு அடிப்படையான அம்சங்கள்
வெளியாகி இருப்பதையும் காணமுடியும். முதலாவது அம்சம், பாஜக மீளவும் தன்னுடைய வெறி பிடித்த இந்துத்துவா
நிகழ்ச்சிநிரலை வலி யுறுத்தி இருப்பதாகும். அயோத்தியில் தாவா வுக்குரிய இடத்தில்
ராமர் கோவில் கட்டுவோம் என்று மீளவும் அது உறுதி அளித்திருக்கிறது. ஆயினும், இந்த தடவை இதனை அது ``அரசியலமைப்புச் சட்டத்திற்கு” உட்பட்டு செய்யும்
என்று மிகவும் எச்சரிக்கையுடன் கூறியிருக்கிறது.அப்படியானால் பாபர் மசூதி அரசிய
லமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இடிக்கப்பட்டதா என்கிற கேள்வியை
இயற்கையாகவே எழுப்புமாறு இது நம்மைத் தூண்டுகிறது. அந்த சமயத்தில், பாஜக மிகவும் கேடுகெட்டமுறையில் இந்திய அரசிய லமைப்புச்
சட்டத்தை மீறியது. மாநிலத்தில் ஆட்சி செய்த அதன் அரசாங்கம் உச்சநீதி மன்றத்தில்
பாபர் மசூதியை முழுமையாகப் பாதுகாத்திடுவோம் என்று அளித்த உறுதி மொழிகளையெல்லாம்
அது காற்றில் பறக்கவிட்டு விட்டது.
மேலும், அப்போது ஆட்சியிலிருந்த முதலமைச்சர் மீண்டும் இப் போது
பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பதுடன், அன்றையதினம், ``நன்கு பயிற்சிபெற்ற ஒப்பந்தக்காரர்கள் பல மாதங்
களில் செய்யக்கூடிய வேலையை எங்கள் `கரசேவகர்கள்’ ஐந்தே மணி நேரங்களில் இடித்துத்
தள்ளியுள்ளார்கள்” என்று பீற்றிக் கொண்டுள்ளார். பாஜகவின் தேர்தல்
அறிக்கை வெறித்தனமான இந்துத்துவாவின் மற்ற கோரிக்கை களையும்கூட வலியுறுத்திக்
கூறியிருக்கிறது. ஒரே சீரான சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும், காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்
அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு
ஒழித்துக்கட்டப்படும் என் றும் அது கூறியிருக்கிறது. பாஜக 1999ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையைத் தவிர 1996க்குப்பின் வெளியிட்ட அனைத்துத் தேர்தல் அறிக்கைகளிலுமே
இந்துத்துவாவின் இந்த நிகழ்ச்சிநிரல்களை எல்லாம் அது உயர்த்திப்பிடித்திருக்கிறது.
இவ்வாறு பாஜக மிகவும் தெளிவாகவே இருக்கிறது. அன்றைக்கிருந்த பாஜக இன்றைக்கும்
சிறிதும் மாறவே இல்லை. அது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கம்தான் என்ப
தைத்தவிர வேறெதுவும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாகவே இன்றையதினம் பறைசாற்றிவிட்டது.
தங்களுடைய `இந்து வாக்குவங்கி`யை ஒருமுகப்படுத்துவதற்காக மதவெறி விஷத்தை மிகவும் ஆழமான முறையில் இப்போது
விதைத்திருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது. அடுத்து, அதன் பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கு வருவோம். பாஜக ``உள்கட்டமைப்பு வசதிகள்” மற்றும் ``தெரிவு செய்யப்பட்ட ராணுவத் தொழில்கள்” உட்பட அனைத்துத் துறைகளிலும் அந்நிய நேரடிமுதலீட்டை அனுமதித்திடும்
என்று கூறி யிருக்கிறது. ``தொழில்தகராறு சட்டங்கள்” மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும், ``வர்த்தகர்களுக்கு உரிமங்கள் வழங்குவதற் கான நெறிமுறைகள்” தளர்த்தப்படும் என் றும் கூட கூறியிருக்கிறது. மத்திய
அரசின் வரிவிதிப்பு முறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்படும் என்றும் பொருட்கள்
மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மேலும் எளிமைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கிறது.
குஜராத் உட்பட அதன் மாநில அரசுகளே இதனை இதுவரை உறுதியாக எதிர்த்து வந்திருக்கின்
றன. இவை அனைத்துமே இந்திய மற்றும் சர்வதேச நிதி மூலதனத்திற்கு தேன் தடவிய
வார்த்தைகளாகும்.
அதாவது, பாஜக தலைமையில் மத்திய ஆட்சி அமைந்தால் இந்தியாவின் இயற்கை
வளங்களையும் கனிம வளங்களை யும் பன்னாட்டு மற்றும் இந்நாட்டு கார்ப்ப ரேட்டுகள்
தங்கள் கொள்ளைலாப வேட் கைக்கு மிக எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே இதன்
உட்பொருளா கும். அதாவது, இத்தாலி பாசிஸ்ட் சர்வாதிகாரி முசோலினி
ஒருசமயம் வரையறுத்ததைப் போல, ``பாசிசம் என்பது, அதற்குள் வேறுபல அம்சங்கள் அடங்கியிருந்தபோதிலும் அத்துடன், அரசு மூலதனத்துடன் கைகோர்ப்பது என்பதுதான்.” தேர்தல் அறிக்கையில் மீதம்உள்ள 42 பக்கங்களும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசும்
வகையில்தான் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. பாஜகவின் உண்மையான உள்நோக்கம் முற்றிலும்
வேறானதாகும். பாஜகவின் பிரச்சாரம் முழுக்க முழுக்க அதனுடைய `தலைவரைச் சுற்றியே அமைக்கப்பட்டிருக்கிறது. ``நமது தேசம் எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரச்சனைகளுக் கும், ``ஒளிமயமான எதிர்காலத் திற்கும்” சர்வலோக நிவாரணியாக ``மோடி மந்திரம் செயல் படும்” என்று பாஜகவின்
இணையதளம் கூறுகிறது. ஆயினும் இவற்றை அது எப்படிச் செய்யப்போகிறது என்பதற்கு அதில்
ஒன்றும் பதில் இல்லை. நாட்டில் எதிர்காலத்தில் `பாலும் தேனும்` ஓடும் என்பதற்கு நமக்குக் காட்டப்படும் திசைவழி, `குஜராத் மாடல்’ என்பதாகும். ஆனால் `குஜராத் மக்கள் வாழ்நிலைமைகள் எவ்வளவு மோசமாக
இருக்கின்றன என்பதைப் பல்வேறு ஆய்வுகள் தற்போது வெட்டவெளிச்சமாக்கி வருகின்றன.
உதாரணமாக, பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீதான மதிப்புக் கூட்டல் வரி என்பது நாட்டிலேயே பிற
மாநிலங்களை விட குஜராத் மாநிலத்தில்தான் அதிகமாகும்.
அதாவது 15 சதவீதம் அங்கே வரி. விலைவாசி உயர்வுக்காக மத்திய அரசைக்
குறைகூறும் அதே சமயத்தில் இவ்வாறு மதிப்புக்கூட்டல் வரி மூலமாக பல மாநில அரசுகள்
தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொண்டுள்ளன. வேலைநிறுத்தங்கள், கதவடைப்புகள் உட்பட தொழிலாளர் அமைதியின்மை நிகழ்வுகள்
அதிகம் நடந்துள்ளது குஜராத் மாநிலத்தில்தான். பொது விநியோக முறை மிகவும் மோசமாக
உள்ள மாநிலம் குஜராத் மாநிலம்தான். இந்தியாவிலேயே தொழிலாளர் பகுதிகள் மிகவும் மாசு
அடைந்திருப்பது குஜராத் மாநிலத்தில் உள்ள அங்கலேஸ்வர் மற்றும் வாப்பி
பகுதிகளாகும். குஜராத் மாநில அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள் மின்
உற்பத்தியை மிகவும் குறைத்துவிட்டதாகவும், அது தனியார் நிறுவனங்களிடமிருந்து மிகவும் அதிக விலை கொடுத்து மின்சாரம்
வாங்குவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் விமர் சகர்கள் கூறுகிறார்கள்.
நாட்டில் சுகாதாரத்திற்காக தனிநபர் செலவு செய்வது என்பது குஜராத்தில்தான் மிகவும்
குறைவு.இந்தியாவிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவ மனைப் படுக்கைகள்
கொண்டிருப்பது, குஜராத் மாநிலம் தான்.
அதாவது ஒரு லட்சம் மக்கள்
தொகைக்கு 143 படுக்கைகளே அங்கே உள்ளன. கர்ப்பிணிப் பெண்கள்
பிறந்த குழந்தைகள் இறப்பதும் குஜராத்தில்தான் அதிகம். அநேகமாக ஐந்து வயதுக்குக்
குறைவாக வுள்ள குழந்தைகளில் இரண்டில் ஒரு குழந்தை போதிய சத்துணவு இன்றியும், நான்கில் மூன்று குழந்தைகள் ரத்தச்சோகையுட னும் குஜராத்தில்
காணப்படுகின்றன. (முழு மையான தகவல்களுக்கு, 2014 ஏப்ரல் 6, தி வீக் இதழைப் பார்க்கவும்.)
`குஜராத் மாடல்’ அவலட்சணங்களை ஏற்கனவே நாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம். அதன்
சாராம்சம் என்னவெனில், இந்தியா மற்றும் பன்னாட்டு
கார்ப்பரேட்டுகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சலுகைகளும், உதவி களும் வாரி வழங்கிருப்பதேயாகும். இத்தகைய பேர்வழி
மாநில முதல்வராயிருப்பதிலிருந்து, மத்திய
ஆட்சியின் பிரதமராக வந்துவிட்டால், இதைவிடப் பல்மடங்கு சலுகைகளும் உதவிகளும் கிடைத்திடுமே என்று அவை ஏங்குவதில்
ஆச்சர்யம் எதுவும் இல்லை. ஒரு மாநிலத்தில் கிடைப்பதைப்போல அனைத்து மாநிலங்களிலும்
தங்களுக்குக் கொள்ளை லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
என்று அவர்கள் கனவு காண்கிறார்கள். பாஜகவின் பொருளாதாரப் பார்வை என்பது பன்னாட்டு
மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவதுதான். இருவித
இந்தியர்களை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என்பதே அதன் பொருளாதாரப் பார்வை.
இதனால்தான் கார்ப்ப ரேட்டுகள் பாஜகவையும் மோடியையும் தூக்கிநிறுத்துகின்றன.
ஆனால், நாட்டின் பெரும் பான்மை மக்களின் கதி? பாஜக ஆட்சிக்கு வருமாயின் அவர்களின் அன்றாட வாழ்க்கை கடும்
துன்பத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாக்கப்படும். ஊடகங்களில் நேர்காணல் நடைபெறும்
போது பாஜகவின் தலைவர் பல கேள்விகளுக்கு பதில் கூற மறுப்பதானது, அவரது ஜனநாயக விரோத அணுகுமுறையை முழுமையாகவே வெளிப்படுத்துகிறது.
சமீபத்தில் மோடியின் வலதுகரமாக விளங்குபவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முஸ்லிம்
மக்களுக்கு எதிராக மதவெறித் தீயை கிளறிவிட்டு, வரும் தேர்தலில் அவர்களைப் `பழிக்குப்பழி’ வாங்க வேண்டும் என்கிற முறையில் பேசியிருப்பது அவர்களின்
உண் மையான கோர முகத்தை உலகுக்குக் காட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்களின்
மூலமாகத்தான் இவர்கள் வளர்கிறார்கள்.
முதலில் கலவரங்களை
உருவாக்கு வார்கள், பின்னர், அந்தப் பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களையே கலவரங்களுக்குக் காரணமானவர்கள் என்று குற்றம்
சுமத்துவார்கள். பின்னர், அவர்கள் மீது மேலும் மதவெறி வன்முறையை ஏவ இதனையே ஒரு சாக்காகப் பயன்படுத்திக்
கொள் வார்கள். மிகமோசமான முறையில் வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தும் செயலை -
பெரும்பான்மை இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தும் செயலை இவ்வாறு இவர்கள்
மேற்கொள்வதற்கு இது மிகச் சரியான எடுத்துக்காட்டாகும்.
பிரதமர் வேட்பாளர் மோடியின்
பேச்சுக் களை உற்றுக்கவனித்தால் ஒன்றை நாம் நன்கு புரிந்துகொள்ள முடியும்.
ஐ.மு.கூட்டணி அரசாங்கம் மோசமாக ஆட்சி செய்தது என்று அவர் கூறும் அதே சமயத்தில்
அதைவிட மிகவும் கூர்மையான முறையில் நாட்டில் மதக்கலவரங்களைத் தூண்டும் விதத்தில் மதவெறித்
தீயை விசிறிவிட்டுக் கொண்டிருப்பதை நன்கு உணர முடியும். காங்கிரஸ் கட்சியும்
உத்தரப்பிரதேச மாநிலஅரசும் `இளஞ்சிவப்பு
புரட்சி’ யை ஊக்குவிக்கின்றனவாம். அதாவது, உத்தரப் பிரதேசத்தில் பசுக்களுக்குப் போதிய அளவு தீவனமோ
தண்ணீரோ இல்லை என்பதும், அவற்றின் காரணமாகவே அம்மாநிலத்தில் பசுக்கள்
கொல்லப்பட்டு, மாட்டுக்கறிக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன
என்பதும் இதன் பொருளாகும்.
பசுவதையைத் தடை செய்ய
வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் கோரிக்கையை இது பிரதிபலிப்பதுபோல்
இல்லையா? இது குஜராத்தில் நடைபெற்று வரும் வெண்மைப்
புரட்சிக்கு எதிராக இருக்கிறதாம். குஜராத்தில் அமுல் கூட்டுறவு நிறுவனம் மூலம்
பால் உற்பத்தி அதிகரித்திருப்பதைத்தான் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். உண்மையில்
அமுல் கூட்டுறவு நிறுவனம் மோடி தான் பிறந்ததாகக் குறிப்பிட்டிருக்கும்
அதிகாரப்பூர்வமான தேதிக்கு முன்பாகவே, 1946லேயே அமைக்கப்பட்ட ஒரு நிறுவன மாகும். அக்கூட்டுறவு நிறுவனம் 1946 டிசம்பர் 14 அன்று
முழுமையாகப் பதிவு செய்யப்பட்டது. இதற்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கும் அல்லது
மோடிக்கும் எவ்விதத்திலும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆயினும் மேலும் ஒரு
வரலாற்றைச் சிதைத்து தங்களுக்கு சாதகமாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டுக்
கொண்டிருக்கிறார்.
வாரணாசி(காசி)யைத் தேர்வு
செய்ததுகூட உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும்
என்பதற்காகத்தான் நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயக அடித்தளங்களைத் தாங்கள் விரும்பக்கூடிய அளவிற்கு
வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்டிரியமாக’ மாற்ற வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்
நிகழ்ச்சிநிரலை எப்படியாவது அரங்கேற்றிடவேண்டும் என்பது அடிநாதமாக அவர்கள்
ஒவ்வொருவரின் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் இருந்து வருகிறது. நாட்டு மக்களில்
பெரும்பான்மையோர் மீது ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகள் சொல்லொண்ணாத் துன்ப
துயரங்களைக் கொண்டு வந்தது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. எனவே இவர்களது
இக்கொள்கைகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
இதற்கான மாற்றுக் கொள்கைத் திசைவழியை இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்திருக்கும் அதே
சமயத்தில், பாஜக அவ்வாறு எந்த மாற்றுக் கொள்கையையும்
முன்வைத்திடவில்லை என்பது மட்டுமல்ல, உண்மையில் அக்கட்சி, அதனை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வோம்
என்றுதான் கூறிக்கொண்டிருக்கிறது.
ஊழல் புரிவதிலோ அல்லது
பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டிருப்பதிலோ காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இடையே
எவ்விதமான வித்தியாசமும் கிடையாது. பாஜகவின் தேர்தல் அறிக்கையை உன்னிப்பாகப்
பார்த்தோமானால் அது ஆர்எஸ்எஸ்-இன் ஸ்லோகமான ``ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே தேசம்” என்பதை உயர்த்திப்பிடித்திருப்பதைக் காண
முடியும். இந்தியில் இதனை ``ஹிந்து, ஹிந்தி, ஹிந்துஸ்தான்” என்று பிரபலப்படுத்தி வருகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை கண்டுள்ள நம் நாட்டை
அவர்களால் ஏற்க முடியாமல் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஹிட்லர், முசோலினி ஆகியோர் பின் பற்றிய நாஜி பாசிசத்தின்
வாரிசுகள்தான் இவர்கள். அதன் காரணமாகத்தான் கார்ப்பரேட்டுகள் இவர்களைத் தூக்கிக்
கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே வரவிருக்கும்
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளையுமே
புறந்தள்ளிவிட்டு, இடது ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின்
வலுவுடன் அமையக்கூடிய எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதன் மூலம் மட்டுமே, அதன் மூலம் மாற்று மக்கள் ஆதரவுக் கொள்கை திசைவழியில்
நாட்டை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் மட்டுமே, நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்ததோர் வாழ்க்கைத்தரத்தை அளித்திட முடியும்.
- தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment