Sunday, June 30, 2013

உத்தரகாண்ட் துயரம்: பாதுகாப்பான விதிமுறைகளை உருவாக்கிடுக




உத்தரகாண்டில் ஏற்பட்டுள்ள இயற் கைப் பேரிடர் காரணமாக மனித உயிர்கள் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருக்கின்றன. உத்தரகாண்ட் மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கடும் வெள்ளத்தால் இறந்தோர் எண்ணிக்கை சுமார் ஐயாயிரத்தைத் தாண்டும் என்று கூறியுள்ளார். இதுவே குறைந்த மதிப் பீடுதான் என்று பலர் கருதுகிறார்கள். பத்ரிநாத், கேதர்நாத் போன்ற சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்பவர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் மேல் இருக் கும்என்றுஅதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டி ருக்கிறது. இதில், கேதர்நாத் மிகவும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய பேரழிவுகள் நடைபெறும் சமயங்களில் இவை குறித்துத் துல்லியமாக முன்னறிவித்திடக்கூடிய விதத்தில் எவ்வித ஏற்பாடும் இல்லை என்ற போதிலும்கூட, வானிலை மையத்தின் சார்பில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆயினும் இதனைத் தொடர்ந்து மக்களைக் காப்பாற்றக் கூடிய விதத்தில் உருப்படியான தயாரிப்புப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
மத்திய ஐரோப்பாவில் ஏற்பட்ட கடும் வெப்பத்தின் காரணமாக தென் மேற்கு பருவக்காற்றில் ஏற்பட்ட கடும் மாற்றம் தான் இவ்வாறு பேய்மழை பெய்ததற்குக் காரணமாகும். வானிலை மைய அதிகாரிகள் மத்தியத் தரைக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் மழை வட இந்திய மலை மாநிலங்களில் ஜூன் மத்திய வாக்கில் கடும் மழையைக் கொண்டுவரும் என்று கூறியிருந்தார்கள். அவர்கள் கூறியதையொட்டியே கடும் மழை பெய்து, கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு எண்ணற்ற ஆறுகளில் வெள்ளப் பெருக்கு இப் பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுகையில் இவற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு அறிவியலை நாம் இன்னமும் கற்றுக்கொள்ளாத நிலையில், இவ்வாறு பேரிடர் நிகழ்வுகள் ஏற்படும்போது மிகப்பெரிய அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. மிதவெப்பம் மற்றும் ஈரமான காற்று மலைகளில் மோதும் போது இடி மேகங்களுடன் பேய்மழை உருவாகிறது. சுற்றுச்சூழல் பேய்மழையால் சூறையாடப் படும்போது, இத்தகைய மிகவும் கடுமையான இடி-மின்னல்-மழை ஏற்படுகிறது. மேலும், காடுகளை கண்மூடித்தனமாக அழித்தொழித் திருப்பதால், பசுமையின்மையும் இத்தகைய மழை நீரை கடும் வெள்ளமாக மாற்றி விடுகின்றன. 1998க்குப்பின் மிகப்பெரிய அளவில் இத் தகைய இடி - மின்னல் - பேய்மழை என்பது உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆறு தடவைகள் ஏற்பட்டிருக்கின்றன. காடுகளை அழித்தது, அறிவியல்பூர்வமற்ற முறையில் ஆறுகளில் அணைகளைக் கட்டியது, மணல் மற்றும் கற்களை அளவுக்கு மீறி தோண்டி எடுத்திருப் பது, இத்தகைய பேரழிவுக்குக் காரணங்களா கும்.
நாட்டின் சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் காடுகள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து நாம் விவாதங்கள் நடத்திக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், மற்ற மாநிலங்களைப் போலல்லா மல், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓடுகின்ற ஆறுகளைப் பாதுகாத்திட மேற்கொள்ள வே ண்டிய குறைந்தபட்ச சுற்றுச்சுழல் பாதுகாப்பு நட வடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை. இம் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான புனல் மின் திட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டு, ஏற் கனவே ஆற்று நீரோட்டத்தின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து அறிவியல்பூர் வமான ஆய்வு எதுவும் செய்யப்படாமலேயே பல டஜன் அணைகள் கட்டப்பட்டுவிட்டன. ஐ.மு.கூட்டணி-1 ஆட்சிக்காலத்தின்போது அமைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண் மை அதிகாரக்குழுமம் (சூனுஆஹ-சூயவiடியேட னுளையளவநச ஆயயேபநஅநவே ஹரவாடிசவைல), இது தொடர்பாக இதுவரை எவ்வித ஆட்சேபணையும் எழுப் பிடவில்லை, ஆலோசனைகளும் வழங்கி, அவை அமல்படுத்தப்படுகிறதா என்று பரி சீலிக்கவில்லை. இத்துயரார்ந்த சம்பவத்தின் பின்னே மற்றுமொரு முக்கிய அம்சம் அடங்கி இருக் கிறது. இந்துக்களின் புண்ணியத் தலங்கள் எனப்படும் இவ்விரு இடங்களுக்கும் வரக் கூடிய யாத்ரிகர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் நான்கு மடங்காக அதிகரித் திருக்கிறது. 2003க்கும் 2012க்கும் இடைப் பட்ட ஆண்டுகளில், கேதர்நாத்திற்கு வந் தோர் எண்ணிக்கை 1.7 லட்சத்திலிருந்து 5.75 லட்சமாக வளர்ந்திருக்கிறது. அதே போன்று பத்ரிநாத்திற்கு வந்தோர் எண்ணிக்கை 1.34 லட்சத்திலிருந்து 6 லட்சங்களாக அதிகரித் திருக்கிறது. இதே கால கட்டத்தில் பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கையும் ஐந்து மடங்குகள் அதிகரித்துள்ளன. இவற்றில் 70 விழுக்காடு வாகனங்கள். சுற்றுலாப் பயணி களை ஏற்றி வந்த வாகனங் களாகும்.
மதம்சார் ந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணம் மேற் கொள்வது தொடர்பான விதிகள் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவாலும், திட்டக் கமிஷனாலும் அரசின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டி ருக்கிறது. ஆயினும், இதுவரை அவ்வாறு ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகள் எது வும் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள் ளப்படவில்லை. நாட்டில் உள்ள மதம்சார்ந்த அனைத்து சுற்றுலா மையங்களையும் முறைப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.உண்மையில், பேரழிவு ஏற்பட்ட இடங் களுக்குச் செல்வதன் மூலம் அரசியல் ஆதா யம் தேட சில அரசியல்வாதிகள் இறங்கியிருப் பது துரதிர்ஷ்டவசமானது. நரேந்திர மோடி யின் ஊடக மேலாண்மை எந்திரம் இப்பணி யில் முழுமையாக இறக்கிவிடப்பட்டிருக்கி றது. ஹாலிவுட் ராம்போஅதிசய மனித னைப்போல மோடி, 15 ஆயிரம் பேரை காப்பாற் றியதாக அவரது ஊடகங்கள் அவரை சித்தரித் துக்கொண்டிருக்கின்றன. முக்கிய பிரமுகர் கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலைத் தருகிறோம் என்றும், ஒருமைப் பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறிக் கொண்டு இப்பகுதிகளுக்குச் செல்வது என்பது பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிக்கு குந்தகம்தான் விளைவிக்கும். இந்திய விமா னப் படை, இப்போது ஏற்பட்டுள்ள பேரிடரிலி ருந்து மக்களைக் காப்பாற்ற மிகவும் பாராட்டத் தக்கவிதத்தில் செயல்பட்டு, அவர்களைக் காப்பாற்றி வருகிறது. இந்திய விமானப் படை 45 விமானங்களை இப்பணியில் ஈடுபடுத்தி, சுமார் ஆயிரம் மணி நேரத்திற்கும் மேலாகப் பறந்து, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை இதுவரை காப்பாற்றி இருக்கிறது.
திங்களன்று நாட்டிற்கு அளித்த செய்தியின் போது தலைமை விமானப்படை அதிகாரி ‘‘வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு பரிதவிக் கின்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிராம மக் கள் அனை வரையும் காப்பாற்றிக் கரை சேர்க் கும் வரையி லும் எங்கள் ஹெலிகாப்டர்களின் இறக்கைகள் சுற்றிக்கொண்டுதான் இருக் கும்’’ என்றும், ‘‘எனவே மக்கள் யாரும் எவ் வித பீதியும் அடைய வேண்டாம்’’ என்றும் கூறி இருக்கிறார். அதேபோன்று, ராணுவமும், இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை யினரும் விமானப் படையினருக்கு இணை யாக மிகவும் அற்புதமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளின்படி ஹெலி பேடு கள் (hநடiயீயனள) மட்டும் நிறுவப்பட்டிருக்குமா னால், இப்பணிகள் மிகவும் எளிதாக இருந் திருக்கும், மக்களை மிகவும் விரைவாக பாதுகாப்பான இடங்களுக்குக் காப்பாற்றப் பட்டு, கொண்டுவரப்பட்டிருந்திருப்பார்கள். இத்துயர சம்பவத்தில் இறந்த நம் சகோ தரர்களுக்காக நாம் துக்கம் அனுசரிக்கும் அதே சமயத்தில், இறந்தவர்களின் குடும்பத் தாருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரி விக்கும் அதே சமயத்தில், உயிருக்காகப் போ ராடிக்கொண்டிருப்போரைக் காப்பாற்றுவதற்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யக்கூடிய அதே சமயத்தில், அரசாங்கம் தன்னிடமுள்ள அனைத்து விதமான வழி வகைகளையும் பயன்படுத்தி, வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் மக்களைக் காப்பா ற்றி, பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும்.
இதற்கு பணம் மற்றும் பொருள்களை நன் கொடையாக அளிப்பதோடு மட்டுமல்லாமல், ஆட்சியாளர்கள் சுற்றுச்சூழல் மற்றும் காடுக ளை அழிக்கும் வேலைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டும். நம்முடைய ஆறுகள் எவ்விதத்திலும் கெட்டுப்போகாத வாறு சுற்றுப்புறத் தூய்மையைப் பேணிப் பாதுகாத்திட வேண்டும். மேலும் மதம்சார்ந்த இடங்களுக்கு சுற்றுலா வருவோர் கடைப் பிடிக்கக்கூடிய விதத்தில் பாதுகாப்பான ஒழுங்கு முறை விதிகளை உருவாக்கிட வேண்டும். இவ்வியற்கைப் பேரழிவில் பாதிக் கப்பட்டோருக்கு உதவுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறைகூவ லுக்கிணங்க நிதி உதவியும், பொருளுதவியும் செய்திட அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழில்: ச.வீரமணி

Saturday, June 29, 2013

‘‘துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமான ஆய்வு’’ - சீத்தாராம் யெச்சூரி



 

தோழர் பி.சுந்தரய்யா

 ந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்தியாவில் புரட்சிகர இயக்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கியதிலும், அவற்றைக் கட்டியெழுப்பியதிலும், சுதந்திரத்திற்குப்பின் மதச்சார்பற்ற, ஜனநாயக, இந்தியக் குடியரசை உருவாக்கியதிலும்  தோழர் பி.சுந்தரய்யாவின் பங்களிப்புகள் எண்ணிலடங்காதவை மட்டுமல்ல, குறிப்பிடத்தக்கவைகளுமாகும். இவற்றில் பல வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்திய விடுதலைக்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவரது பங்களிப்புகள் கணக்கிலடங்காதவைகளாகும். அவை அனைத்தையும் இச்சிறு கட்டுரையில் கொண்டுவருவதென்பது இயலாத ஒன்று. எனவேஇன்றையதினம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நவீன இந்தியாவை உருவாக்கியதில் மட்டுமல்ல எதிர்காலத்தில் சோசலிஸ்ட் இந்தியா நோக்கி நாம் முன்னேறுவதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பை அமைத்துக் கொடுப்பதிலும் அவரது வாழ்விலும் பணியிலும் அவர் மேற்கொண்ட நான்கு மிக முக்கியமான அம்சங்கள் குறித்து மட்டும் விளக்கிடலாம் எனக் கருதுகிறேன்.
தேசிய இனப்பிரச்சனை
இந்தியாவில் தேசிய இனப் பிரச்சனை குறித்தும் அதன் மூலமாக நவீன இந்தியாவின் அரசியல் கட்டமைப்பின் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்பது முதலாவதாகும். நமது நாடு சுதந்திரம் மற்றும் பிரிவினை அடைந்த  சமயத்தில், இந்தியா பிரிட்டிஷாரின் காலனிய நிர்வாக எல்லைகளையும், 666க்கும் மேற்பட்ட மன்னர் சமஸ்தானங்களையும் பெற்றிருந்தது. மன்னர் சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கும் பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருந்தது. அநேகமாக இப்பிரச்சனை மிகவும் வெற்றிகரமாக தீர்க்கப்பட்ட போதிலும், காஷ்மீர் பிரச்சனை போன்று இன்றளவும் நாட்டைப் பீடித்திருக்கக்கூடிய சில பிரச்சனைகளும் உண்டு. நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து மன்னர் சமஸ்தானங்களும் இணைக்கப்பட்டபின்  நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 1950இல் நிறைவேற்றப்பட்ட சமயத்தில், அதன் முதலாவது பிரிவே நமது நாட்டை, ‘‘இந்தியா, அதாவது பாரதம், என்பது மாநிலங்களின் ஓர் ஒன்றியம்’’ என்று வரையறுத்தது. இவ்வாறு வரையறுத்தபின்இந்த மாநிலங்களை எப்படி உருவாக்குவது அல்லது வரையறுப்பது என்று இயற்கையாகவே ஒரு கேள்வி எழுந்தது. 1928இல் மோதிலால் நேரு ஆணையம் காங்கிரஸ் கட்சி அமைப்பானது மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தபோதிலும், பிரதமரான ஜவஹர்லால் நேரு ஆரம்பத்தில் அத்தகைய அடிப்படையை ஆதரித்தபோதிலும், பின்னர் தன் நிலையை மாற்றிக்கொண்டு, மாநிலங்களை மறுசீரமைப்புக்கு திறமைமிகு நிர்வாகப் பிரிவுகளையே ஏற்படுத்திட வேண்டும் என்றார். எனவே அதற்காக, ‘’, ‘பி’, ‘சி’ ‘டிஎன்று மாநிலங்களை முன்மொழிந்தார்.
இந்தப் பின்னணியில்தான் தோழர் சுந்தரய்யாவின் சிறுபிரசுரமான ‘‘ஒன்றுபட்ட ஆந்திராவில்  மக்கள் ஆட்சி’’ (Vishalandhralo Prajarajyam - Peoples' Rule in Unified Andhra) என்னும் நூல் நாட்டின் நிகழ்ச்சி நிரலில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு மிகவும் தெளிவான முறையில் வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்துத் தந்தது.
ஒரு தேசிய இனத்தை உருவாக்கிடும் முக்கியமான மூலக்கூறு மொழி மட்டுமே அல்ல, மாறாக மொழியும் ஒன்று என்கிற மார்க்சியப் புரிந்துணர்வை முன்னெடுத்துச் சென்று, தோழர் பி.சுந்தரய்யாவும் கட்சியும் இந்தியாவை பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற விடுதலைக்கான போராட்டத்தில் பல தேசிய இனங்கள் ஒன்றுபட்ட ஒரு நாடு என்று வருணித்ததுடன், நவீன இந்தியக் குடியரசை அமைத்திட இந்தியா மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்கள். இத்தகைய நிலைப்பாடானது அன்றையதினம் மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்த  தெலுங்கு பேசும் பகுதிகள் அனைத்திலும் தெலுங்கு பேசும் மக்களுக்காக ஒன்றுபட்ட ஒரே பகுதி உருவாக வேண்டும் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு இட்டுச் சென்றது.  இதற்காக வெகுநாட்கள் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது பொட்டி ஸ்ரீராமுலு வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்து இவ்வியக்கம் உச்சத்தை அடைந்தது.
இக்கிளர்ச்சியின் விளைவுகள் நாட்டின் பிற பகுதிகளிலும் எதிரொலித்தது. ஐக்கிய கேரளா மற்றும் சம்யுக்த மகாராஷ்ட்ரா ஆகியவற்றிற்கான இயக்கங்களை மற்றவர்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமைதாங்கி வழிநடத்தினார்கள். இவ்வாறு நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்ற பிரம்மாண்டமான மக்கள்  போராட்டங்கள்தான்  இந்திய ஆளும் வர்க்கத்தினரை இந்திய மாநிலங்களை மொழிவாரி மாநிலங்களாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கச் செய்வதற்கு நிர்ப்பந்தத்தை அளித்தன. இவ்வாறுதான் 1956இல் - சுதந்திரம் பெற்று முழுமையாக ஒன்பது ஆண்டுகள் முடிந்த பின்னர் - நவீன இந்தியாவின் அரசியல் வரைபடம் உருவானது.
நம் நாடு தழைத்தோங்க வழிவகுத்த இத்தகைய பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஒற்றுமையானது, பி.சுந்தரய்யாவின் தொலைநோக்குப்பார்வையின்படி, பிரஜா ராஜ்யம் அல்லது மக்கள் ஆட்சி என்பதுடன் இணைய வேண்டியது அவசியம் என்பதாகும். அவ்வாறு இல்லையெனில், மொழிவாரி மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு உள்ளேயும்கூட மோதல்களும் முரண்பாடுகளும் முட்டிமோதுவது சாத்தியமே என்று அவர் கூறினார். மக்கள் ஆட்சி இல்லையேல், வர்க்கச் சுரண்டலை மேலும் கூர்மைப்படுத்துவதற்கு ஏதுவாக மத்தியத்துவப் படுத்தப்பட்ட  அரசமைப்பு முறையையே ஆளும் வர்க்கங்கள் விரும்பும். எனவே அவை மாநிலங்களுக்கு உண்மையான சுயாட்சி அந்தஸ்தை அளிக்க மறுப்பதன் மூலம்  மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலங் களுக்குள்ளே பிற்பட்ட பகுதிகளாக விளங்கும் தெலங்கானா, விதார்பா போன்ற பகுதிகளுக்கிடையிலும்  மக்களுக்கிடையே தோன்றும் இத்தகைய மோதல்களைமக்கள் ஒற்றுமையைப் பிரித்திடவும், வர்க்க ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஒற்றுமையுடன் வலுப்படுவதை சீர்குலைத்திடவும் பயன்படுத்திக் கொள்ளும். வேறுவார்த்தைகளில் சொல்வதானால், ஆளும் வர்க்கங்கள் தங்கள் வர்க்க ஆட்சியை ஒருமுனைப்படுத்திக் கெட்டியாக்கிக் கொள்வதற்காக, எப்போதுமே இத்தகைய மோதல்களையும் முரண்பாடுகளையும்  பயன்படுத்திக் கொள்ளும். மக்களுக்குத் தேவையான அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்திடும், தேவையான சுயாட்சியையும் மாநிலங்களுக்கு வழங்க மறுத்திடும். 1968இல் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தோழர் பி.சுந்தரய்யா மத்திய மாநில உறவுகளுக்கு இடையிலான இப் பிரச்சனையை மிகவும் சரியாக உயர்த்திப் பிடித்தார்.
மேலும், தோழர் பி.சுந்தரய்யா, கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது கட்சித் திட்டத்தில் ‘‘அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை’’ தொடர்பாக இருந்த ஷரத்தை நீக்குவதற்கான திருத்தத்தைக் கொண்டு வந்தார். பின்னர் இது 1972இல் மதுரையில் நடைபெற்ற கட்சியின் 9ஆவது அகில இந்திய மாநாட்டில்  இறுதிப்படுத்தப்பட்டது.  மீண்டும் ஒருமுறை ‘‘துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்தல்’’ என்ற விதியைச் சரியாக பிரயோகிப்பதன் மூலம், ‘அனைத்துத் தேசிய இனங்களுக்குமான சுய நிர்ணய உரிமை தொடர்பாக மார்க்சிச-லெனினிசக் கருத்தாக்கம் இந்தியாவில் உள்ள துல்லியமான நிலைமைகளுக்குப் பொருந்தாதுஎன்ற முடிவுக்குக் கட்சி வந்தது.   கொடுமைப்படுததும் ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கும் அதன் ஆளும் வர்க்கங்களுக்கும் எதிராக அது பிரயோகிக்கப் படுவதால், அது இந்நாட்டிற்குப் பொருந்தாது என்று கட்சி நிலை எடுத்தது.  இன்றைய நிலையில் உள்ள இந்திய ஒன்றியத்திலும் கூட இந்த முழக்கம் அரசியல் சுதந்திரம் பெறுவதற்கு முன்னிருந்ததைப்போல ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒன்று அல்ல என்றும், அதன்பின்னர் கொடுமைப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கு எதிரான (oppressor nation) ஒன்றுமல்ல என்றும், (ஏனெனில் அப்படி ஒரு தேசம் எந்த வடிவத்திலும் இங்கே இல்லை என்றும்) அப்போது கட்சி முடிவெடுத்தது.      இதனை விளக்கும் விதத்தில் கட்சி ஆவணத்தில், ‘‘பல்வேறு மொழிவாரி இனங்களின் தற்போதைய நிலைமைகளும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அவை மேற்கொள்ளும் போராட்டங்களும் இந்திய ஒன்றியத்தில் உள்ள  கொடுமைப்படுத்தும் குறிப்பிட்ட ஒரு தேசத்திற்கு எதிரான ஒன்று அல்ல’’ என்றும், மாறாக அது ‘‘பொருளாதாரப் பின்தங்கிய நிலைமைகளுக்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களும் நடத்திடும் பொதுவான போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும்’’ என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும் ஆவணத்தில்,  ‘‘இவ்வாறு அனைவராலும் நடத்தப்படும் பொதுவான போராட்டம் இந்திய ஒற்றுமையைப் பேணிப் பாதுகாத்து வைப்பதன் மூலமே எளிதாய்ச் செய்து முடிக்க முடியும். அதற்கு மாறாக, பிளவுபடுத்தும் சக்திகளின் வளர்ச்சி ஆளும் வர்க்கங்களுக்கு, போராடும் மக்களின் ஒற்றுமையை உடைப்பதற்கும், சீர்குலைப்பதற்கும் உதவிடும்.’’ என்றும் குறிப்பிட்டுள்ளது.
உழைக்கும் மக்களின் இந்த ஒற்றுமைதான், மக்கள் ஆட்சியை உருவாக்குவதற்கான வல்லமையாகும். மாறாக ஆட்சியாளர்கள் அதிகாரத்தை தங்களிடமே குவித்து வைத்துக்கொண்டுள்ள போக்குகள் பல்வேறு மாநிலங்களில் மாநிலங்களுக்குள்ளேயே பிற்பட்ட பல பகுதிகள் நிலையாக இருப்பதற்கும், இதன்காரணமாக மக்கள் மத்தியில் எழுந்த மோதல்களையும் முரண்பாடுகளையும் ஆளும் வர்க்கங்கள் தங்கள் ஆட்சியை ஒருமுகப்படுத்திக்கொள்ள பயன்படுத்திக் கொள்வதற்கும் வழிவகுத்துத்தந்துள்ளதை உழைக்கும் மக்கள் ஒற்றுமை மூலமாகத்தான் முறியடித்திட முடியும்.  இத்தகைய மக்களாட்சி இந்தியாவில் மலரக்கூடிய விதத்தில் தோழர் பி.சுந்தரய்யாவின் வாழ்வும் பணியும் நமக்கு என்றென்றும் உத்வேகம் ஊட்டும்.
நிலப் பிரச்சனை
தோழர் பி.எஸ். எடுத்துக் கொண்ட இரண்டாவது பிரச்சனை மக்களாட்சி என்னும் மகத்தான நோக்கத்தை நிறைவேற்றுவதுடன் அதனுடன் மிகவும் நெருக்கமாக சம்பந்தப்பட்டதாகும். அதாவது தோழர் பி.எஸ். எடுத்துக் கொண்ட இரண்டாவது நிகழ்ச்சிநிரல் நிலப் பிரச்சனையாகும். வீரம்செறிந்த தெலங்கானா ஆயுதப் போராட்டத்தை நடத்திய முன்னணித் தலைவர்களில் அவரும் ஒருவர் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஹைதராபாத் நிஜாம் என்னும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலனின் ஆட்சியை அடித்துநொறுக்கி, ஜமீன்தாரி அமைப்புமுறையை முற்றிலுமாக அழித்துமக்களாட்சியை நிறுவி, மூன்று ஆண்டுகளில் நான்காயிரம் கிராமங்களை விடுவித்து, உழுபவர்களுக்கே நிலங்களைச் சொந்தமாக்கி, மக்களாட்சியை நிறுவினார். இதேபோன்று நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமானவகையில் நிலப் போராட்டங்கள் வெடித்தன. கேரளாவில் புன்னப்புரா வயலார், மகாராஷ்ட்ராவில் வார்லி ஆதிவாசிக் கலகம், பஞ்சாப்பில் சிறந்த வாரத்திற்கான இயக்கம் (anti-betterment levy), வங்கத்தில் நாலில் மூன்று பங்கு வாரம் கோரி நடைபெற்ற தேபகா’ (Tebhaga) இயக்கம், அஸ்ஸாமில் சுர்மா பள்ளத்தாக்கு போராட்டங்கள் என நிலம் சம்பந்தமாக வீரம் செறிந்த எண்ணற்ற போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்றன. நிலத்திற்கான இப் போராட்டங்கள் அனைத்தும் நாட்டின் பல பகுதிகளிலும் கம்யூனிஸ்ட்டுகளால் தலைமை தாங்கப்பட்டன. இப்போராட்டங்கள்தான் இந்திய ஆளும் வர்க்கத்தினரை ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவர நிர்ப்பந்தித்தன. ஆயினும் (ஆளும் வர்க்கக் கூட்டணியில் நிலப்பிரபுக்களும் ஓர் அங்கமாக இருந்ததால்) நடைமுறையில் இந்தச் சட்டம், இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தவிர வேறெங்கேயுமே அமல்படுத்தப்படவில்லை. 
நிலப்பிரச்சனைக்குத் தோழர் பி.சுந்தரய்யாவின் பங்களிப்பு என்பது நிலப்பிரபுத்துவத்தை ஒழித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர் தெலங்கானாவில்  உழுபவனுக்கு நிலத்தைக் கொடுத்து, மக்களாட்சியை நடத்திக்காட்டிய சமயத்தில், நிலம் மற்றும் உழைப்பாளிகளின் உற்பத்தித்திறன் கணிசமான அளவிற்கு அதிகரித்தது. இவ்வாறு அவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலம் பொருளாதார ஆதாயத்தையும் அதிகரித்துக் காட்டினார். இதன்மூலம் அவர் சமத்துவ சமுதாயத்தின் கொள்கைகள் எந்த அளவிற்குப் போற்றத்தக்கது மற்றும் அவசியமானது என்பதையும் மக்களுக்கும் சமூகத்திற்கும் எடுத்துக் காட்டினார்.
ஜனநாயகத்தின் மூலவேர்கள் பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்தைவிட இந்தியாவில் ஆழமாக வேரூன்றி இருப்பதற்கும் இவைதான் முக்கிய காரணங்களாகும். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்போது இந்தியத் துணைக்கண்டத்தில் இந்நாடுகள் அனைத்தும் அவர்களின் ஒரேகுடையின்கீழ் இருந்தவை என்றபோதிலும், சுதந்திரத்திற்குப் பின் அவை வழிவிலகிச் சென்றதற்கு இந்தியாவில் நடைபெற்றதைப் போன்ற இயக்கங்கள் அங்கே நடைபெறாததே முக்கிய காரணமாகும். பெயரளவில் என்றாலும்கூட ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டிருப்பதானது, உழைக்கும் மக்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரில் பெரும் பகுதியினர் சுதந்திரத்திற்குப் பிந்தைய கால கட்டத்தில், ஜனநாயக உரிமைகளின் அனுகூலங்களையும் மதிப்பையும் நன்கு அறிந்துகொண்டு முன்னேறுவதற்கான அடிப்படையை உருவாக்கித் தந்துள்ளது.  1975இல் இந்திரா காந்தியால் அவசரநிலைப் பிரகடனம் திணிக்கப்பட்டபோது அதனை வெற்றிகரமாக முறியடிப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இது அமைந்தது. பாகிஸ்தானோ, வங்க தேசமோ தங்கள் நாடுகளில் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்திடக் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எதையும் மேற்கொள்ள வில்லை.
இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்களில் நிலச் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன என்று நாம் கம்பீரமாகக் கூறும் அதே சமயத்தில், நிலப்பிரபுக்களால் சட்டவிரோதமாகவும் உச்சவரம்புச் சட்டத்திற்கு மேலேயும் வைத்திருந்த நிலங்களைத்தான் கையகப்படுத்தி விவசாயிகளுக்கு விநியோகித் திருக்கிறோம் என்பதையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.  இந்த நிலங்கள் மட்டுமே நிலஉச்சவரம்பு சட்டத்தின்கீழ் நிலப்பிரபுக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு நிலமற்றவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்என்ற அடிப்படைப் பணி இன்னமும் முழுமையாக நிறைவேறாமலேயே இருக்கின்றன.  ஜனநாயக விவசாயப் புரட்சியை முழுமையாக்குவதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான உத்வேகத்தை அளித்திட தோழர் பி.எஸ். வாழ்வும் பணியும் நமக்கு என்றென்றும் துணைநிற்கும்.
சமூக நீதிக்கான போராட்டம்
மூன்றாவதாகசமூக நீதி மற்றும் சமூக ஒடுக்குமறைக்கு எதிரான போராட்டங்களில் தோழர் பி.எஸ்செலுத்திய பங்களிப்பு என்பது மிகவும் ஆழமானதும் விரிவானதுமாகும். தனிப்பட்ட முறையில் அவர் தன்னுடைய பெயரில் ஒட்டிக்கொண்டிருந்த ரெட்டிஎன்ற சாதிப் பெயரை வெட்டி எடுத்து, சாதி வெறிக்கு எதிரான தன் உறுதியான நிலையை சமூகத்தின் மத்தியில் நிலைநிறுத்தினார்.  இது, என்னைப்போன்றே பல தலைமுறையினருக்குத் சாதி அடையாளத்தைக் கைவிட உத்வேகம் அளித்தது.  மக்களாட்சிக்கான போராட்டத்தின் ஒரு பிரிக்கமுடியாத பகுதியாகவே சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் அவர் கருதியதோடு, நடைமுறையிலும் ‘‘உழைக்கும் மக்களே ஒன்றுபடுங்கள்’’ ('unity of the toilers') என்ற முழக்கத்தினை முன்வைத்து, அனைவரையும் சாதி வித்தியாசமின்றி மிகவும் வலுவான முறையில் ஒன்றுதிரட்டினார். தெலங்கான போராட்டக்காலத்தின்போது, இத்தகைய உழைக்கும் மக்கள் ஒற்றுமை வெற்றியையும் புகழையும் தேடித்தந்ததோடு மட்டுமல்லாமல், சாதி மற்றும் சமூக அடையாளங்களைப் பின்னுக்குத் தள்ளவும் வழிவகுத்தது.  இன்றைய நிலையில், சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் மற்றும் தலித்துகள் மத்தியில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். இது ஓர் ஆக்கபூர்வமான அம்சம்தான். ஆனால், அதே சமயத்தில்சாதி உணர்வுகளையும் சாதி அடிப்படையில் ஒரு சமூக அடையாளத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். இத்தகைய சக்திகள் மக்களை பொதுவான ஜனநாயக இயக்கத்திலிருந்து கத்தரித்துத் தனியே கொண்டு செல்ல முயல்கின்றன. மேலும் இத்தகைய போக்கானது, சமூகத்தால் ஒடுக்கப்பட்ட ஒரு குழுவினரை அவ்வாறே சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மற்றொரு குழுவினருடன் மோதச் செய்யக்கூடிய ஆபத்தையும் கொண்டுவருகிறது. எனவே, இத்தகைய எதிர்மறைப் போக்குகள் ஆளும் வர்க்கத்தினர் தங்கள் வர்க்க ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்கே வலிமையை அளித்திடும்.
தோழர் பி.எஸ். அவர்களின் வாழ்விலிருந்தும், பணியிலிருந்தும் கற்றுக்கொண்டு, இத்தகைய மக்கள் பிரிவினர் அனைவரையும் பொது ஜனநாயக இயக்கத்தில் ஒன்றுபடுத்துவதற்கான முயற்சிகளில் கடுமையாக ஈடுபட வேண்டும். பொது ஜனநாயக இயக்கமும் கட்சியும் சமூக ஒடுக்குமுறைக்கான போராட்டத்தை, பொருளாதாரச் சுரண்டலுக்கான போராட்டத்தோடு சரியாக இணைக்கும்போதுதான் இதனை வெற்றிகரமான முறையில் நடத்திட முடியும். புரட்சிக்கான அச்சாக விளங்கும் தொழிலாளர் - விவசாயிக் கூட்டணியைக் கட்ட இது ஒன்றே வழியாகும். 
கட்சி ஸ்தாபனம் குறித்து
நிறைவாக, தோழர் பி.எஸ்ஒரு சரியான அரசியல் நிலைப்பாடு அவசியம் என்றும், அதில்லாமல் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லமுடியாது என்றும் எப்போதுமே நமக்கு நினைவுபடுத்தி வந்தார்.  வலுவானதோர் ஸ்தாபனமில்லையேல்,   கட்சியால் தன்னுடைய நிலைப்பாட்டை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியாமல் போகுமாதலால்சரியானதொரு அரசியல் நிலைப்பாடும்கூட அர்த்தமற்றதாகிவிடும்.  புரட்சி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சி முன்வைக்கும் முழக்கங்களை மக்கள் தாங்களே எழுப்பக்கூடிய விதத்தில் ஸ்தாபனம் மக்களைத் தயார்படுத்திட வேண்டும். இதனை எய்திட வேண்டுமெனில், துல்லியமான நிலைமைகளை அடிக்கடி ஆய்வு செய்வது அவசியமாகும். உதாரணமாக, நிலத்திற்கான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து, பணக்கார விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையிலான உள்ளார்ந்த முரண்பாட்டை தோழர் பி.எஸ். அடையாளம் கண்டார்.  பணக்கார விவசாயிகளைப் பொறுத்தவரை விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ அந்த அளவுக்குக் குறைக்க விரும்பினார்கள்.  விவசாயத்தொழிலாளர்களோ கூலி உயர்வுக்கான போராட்டத்தை நடத்த விரும்பினார்கள். இவர்கள் இருவருமே ஒரே ஸ்தாபனத்திற்குள் இருந்ததால் ஸ்தாபனம் விரும்பிய விளைவினை உண்டுபண்ணுவதற்கு இயலாததாக இருந்தது. இவ்வாறு துல்லியமான நிலைமைகளை  துல்லியமாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், தோழர் பி.எஸ். விவசாய சங்கத்திலிருந்து விவசாயத் தொழிலாளர் சங்கத்தைத் தனியே பிரித்து அமைத்திட வேண்டும் என்று வாதிட்டார்.
அதேபோன்று, இந்திய இளைஞர்கள் மத்தியிலும் படித்த இளைஞர்கள் மற்றும் மிகப்பெரிய அளவில் படிக்காத இளைஞர்களும் இருப்பதையும் அவர் அடையாளம் கண்டார். படித்தவர்களுக்கு மாணவர் சங்கங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், படிக்காத இளைஞர்களைப் பொறுத்தவரை எவ்விதமான அமைப்பும் இல்லாமலிருந்தது. எனவேதான் அவர் இளைஞர்களுக்கான அமைப்பை உருவாக்க வேண்டும் என்று முன்வந்தார். இவ்வாறு, உழைப்பாளிகளின் ஒற்றுமையை ஒருமுகப்படுத்துவதற்குத் தேவையான ஸ்தாபனக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு துல்லியமானப் பங்களிப்புகளை அவர் புரிந்துள்ளார்.
அரசியல் நிலைப்பாட்டிற்கும் ஸ்தாபன நடைமுறைக்கும் இடையிலான இயக்கவியல் தொடர்புக்கு (dialectical linkage), சமூகத்தில் வர்க்கங்களுக்கு இடையே, தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் குணாம்சங்களைப் புரிந்துகொள்ள துல்லியமான ஆய்வுகளை நடத்திட அவர் கொடுத்து வந்த அழுத்தம் அவரது பங்களிப்பின்  மற்றோர் அம்சமாகும்.
முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் ரஷ்யாவில் விவசாயிகள் இடையேயிருந்த வித்தியாசங்களையும் துல்லியமாக ஆய்வு செய்ததன் மூலமாகத்தான் ரஷ்யப் புரட்சி வெற்றி சாத்தியமானது என்கிற லெனினது செயல்பாட்டிலிருந்து நன்கு பாடம் கற்றுக்கொண்ட தோழர் பி.எஸ். இங்கும் கிராமங்களில் ஏற்பட்டுவரும் வேறுபாடுகளையும்  அரசியல் நிலைப்பாடு மற்றும் ஸ்தாபன நடைமுறையில்  அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் நன்கு புரிந்துகொள்வதற்காக  ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக, இன்றைய இந்தியாவில் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தத் தேவையான அளவிற்கு இதனைத் தொடர முடியவில்லை. இது அவசரரீதியில் சரி செய்யப்பட்டாக வேண்டும்.
குறிப்பாக, நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இக்கால கட்டத்தில் இது மிகவும் அவசியமாகும். ஓர் உதாரணம் மூலமாக இதனை விளக்கலாம் என்று கருதுகிறேன். சில பத்தாண்டுகளுக்கு முன்னால், உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், கட்சியை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் அமைப்பும் இயக்கமும் முக்கியமான பங்கினை ஆற்றின.  முப்பதாண்டுகளுக்கு முன்னால் அவர்கள் வாங்கிய ஊதியம் என்ன? இன்று அவர்கள் வாங்கும் ஊதியம் என்ன? ஒப்பிட்டுப் பாருங்கள்.  இன்றையதினம் அது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இத்தகைய வருமானத்துடன் உள்ள அவர்களின் விருப்பங்கள்  பங்குச்சந்தை (sensex)  பக்கம் திரும்புவது இயற்கையேயாகும்.  நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தாங்கள் வாங்கியுள்ள பங்குகளுக்கு கூடுதலான தொகைகளைக் கொண்டுவந்து கொட்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய மனோபாவங்கள் இன்றையதினம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஒரு வர்க்க வேறுபாடு (class differentiation) வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆசிரியர்களுக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தக்கோபமும் கிடையாது. மாறிவரும் சூழ்நிலைகளில் அவர்கள் முக்கியமானதோர் பங்கினை ஆற்றி இருக்கிறார்கள்.  இன்றைய ஆசிரியர்கள் அவர்களுடைய வாழ்வாதாரங்களையும், போராட்டங் களையும் பாதிக்கக்கூடிய விதத்தில்  புதுவிதமான பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. இத்தகைய நிலைமைகளின் கீழ்தான்நம்முடைய கோரிக்கைகளுக்கான உடனடி முழக்கங்களையும், கிளர்ச்சிக்கான வடிவங்களையும் நடைமுறைகளையும் மிகவும் சரியாக விதத்தில் உருவாக்குவதற்கு, துல்லியமான நிலைமைகளின் கீழ் துல்லியமான ஆய்வினை மேற்கொள்வது அவசியமாகிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தோழர் இந்திரஜித் குப்தா ஒருமுறை கூறினார். ‘‘தில்லியிலிருந்து கொல்கத்தாவிற்கு ஒருவர் பயணம் செய்கிறபோது ரயில்வே லைனின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் அநேகமாக அவர்கள் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-க்களாகவும் எம்பி-க்களாகவும்தான் இருப்பார்கள்’’ என்றார். ஆனால் இன்றைய நிலை என்ன? கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவுகள் தோன்றிவிட்டன என்று மேலெழுந்தவாரியான விளக்கங்கள் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முழுமையாகவோ (comprehensively) அல்லது அறிவியல்பூர்வமாகவோ (scientifically) விளக்கிடாது. நமது வர்க்கங்களுக்குள்ளேயே நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்க வேறுபாடுகள் குறித்து மிகவும் துல்லியமான முறையில் ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் ஒருகாலத்தில் செங்கொடியின் கீழ் அணி திரண்டவர்கள் இப்போது மற்ற முதலாளித்துவ கட்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.  
மேலும் சில பிரச்சனைகளும் இருக்கின்றன. உதாரணமாக, சமூக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் வளர்ந்து கொண்டிருப்பது போன்று மேலும் சில பிரச்சனைகளும் இருக்கின்றன. எகிப்தில் தாஹ்ரீர் சதுக்கத்திலும், வங்க தேசத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஷாபாக் இயக்கத்திலும் மிகவும் வித்தியாசமான விதத்தில் மக்கள் எப்படி அணிதிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்தோம். இவை குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இவை எவ்வாறு நடைபெற்றன என்பதைப் புரிந்துகொள்வதற்காக மட்டுமல்ல, நம் நாட்டில் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல இவற்றைப் பயன்படுத்த முடியுமா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும் இவற்றை நாம் ஆய்வு செய்திட வேண்டும்.
‘‘துல்லியமான நிலைமைகள் குறித்துத் துல்லியமான ஆய்வு மேற்கொள்வது என்பது இயக்கவியலின் ஜீவனுள்ள சாரம்’’ (“concrete analysis of concrete conditions, is the living essence of dialectics”) என்று லெனின் ஒருமுறை கூறினார். லெனின் கூறிய இவ்வழிகாட்டுதலின்படிதான் தோழர் பி.எஸ். வாழ்வும் பணியும் இருந்தது என்பது நான் மேலே விவரித்த அவரது நான்கு அம்சங்களிலிருந்தும் நன்கு தெளிவாகும். இன்றையதினம், அவரது பிறந்தநாள் நூற்றாண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், நாம் அவருக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயத்தில், இத்தகைய புனிதமான லெனினது கொள்கையை ஆறத்தழுவிக்கொள்ளவும், நம் நாட்டில் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும் நாம் எடுத்துக்கொண்டுள்ள உறுதியை இரட்டிப்பாக்கிக் கொள்வோம்.
தோழர் பி.சுந்தரய்யாவுக்கு செவ்வணக்கம் !
(தமிழில்: ச.வீரமணி)



Monday, June 24, 2013

மாற்றுக் கொள்கை தேர்ந்தெடுத்திடுக!



அரசியல்வானில் சமீபத்திய நிகழ்ச்சிப் போக்குகள் நாட்டில் ஒரு மாற்று அரசியல் கூடாரத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. ஒருபக்கத்தில், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது சிறுபான்மை அரசாக சுருங்கிக் கொண்டிருக்கிறது, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த பெரிய கட்சிகளில் தேசியவாதக் காங்கிரஸ் கட்சி யைத் தவிர மற்ற அனைத்தும் தங்களைக் கழட்டிக் கொண்டுவிட்டன. அது ஆட்சியில் உயிர்பிழைத்து நீடித்திருப்பதற்குக் காரணமே, சமீபத்தில் கொஞ்ச காலமாக, அது சமாஜ் வாதிக் கட்சியிடமிருந்தும், பகுஜன் சமாஜ் கட்சியிடமிருந்தும் வெளியிலிருந்து ஆதரவு பெற்றுக் கொண்டிருப்பதை வைத்துத்தான். மற்றொரு பக்கத்தில், பாஜக தலைமையிலான தேஜகூட்டணியில் இருந்த கட்சிகளில் தற்போது அதனுடன் ஒட்டிக்கொண்டிருப்பது சிவசேனையும் அகாலி தளமும் மட்டுமே.தே.ஜ.கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியிருப்பது என்பது, பாஜக தலைமையிலான தேஜகூட்டணிக்குள் தீர்க்கமுடியாத அளவிற்கு முரண்பாடுகள் ஏற் பட்டுவிட்டதையே பிரதிபலிக்கிறது. ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் அங்கமாகச் செயல்படும் பாஜக, தன்னுடைய வெறிபிடித்த அரக்கத்தனமான இந்துத்வா நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றும் நரேந்திர மோடியை அதனால் ஏற்படும் அனைத்துவிதமான பலாபலன் களுடனும் பிரதமர் வேட்பாளராக சித்தரித்திட வும் அதன் மூலம் தன் சொந்த சமூகப் பின்ன ணியை தக்க வைத்துக்கொள்ளவும் முன் வந்திருக்கிறது. இந்தத் திசைவழியில் அது எந்த அளவிற்கு வெறியுடன் செயல்படு கிறதோ அந்த அளவிற்கு அது, அடுத்த பொதுத் தேர்தலுக்குப்பின் அமையவிருக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான வல்லமையை இழந்துவிடும்.

நாட்டின் அரசி யலில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள நிகழ்ச்சிப் போக்குகள் இத்தகைய தீர்க்கப்பட முடியாத முரண்பாட்டின் வெளிப்பாடேயாகும்.இதில் வேடிக்கை வினோதம் என்ன வெனில், நரேந்திர மோடியைவிட எல்.கே. அத்வானி மிகவும் மிதமானவர் போலவும், தாராள முகம் படைத்தவர் போலவும் பாஜக வினரால் சித்தரிக்கப்படுவதுதான். இன் றைக்கு இருக்கும் பாஜக வளர்ந்ததே இதே அத்வானி 1990 செப்டம்பரில் ‘‘பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவிலைக் கட்டு வோம்’’ என்ற முழக்கத்துடன் சோம்நாத்தி லிருந்து அயோத்திக்கு தன்னுடைய இக ழார்ந்த (infamous) ரத யாத்திரையைத் தொடங் கியதன் மூலமாகத்தான். இந்த ரத யாத்திரை யானது நாடு முழுதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மதவெறியைக் கூர்மைப்படுத்தி பல இடங்களில் வகுப்புக் கலவரங்களை ஏற் படுத்தி நாட்டையே ரத்தக்களறியாக்கியதுடன் இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத் தியது. இந்த ரத யாத்திரைதான் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கும் அடிப்படையாக அமைந்தது. 2014இல் நடைபெறவுள்ள பொதுத் தேர் தல்களிலும் இத்தகைய வளர்ச்சிப் போக்கு கள் தன் பங்களிப்பினைத் தொடர்ந்திடும் அதே சமயத்தில், நாட்டில் உள்ள பெரிய கட்சி களின் கவனத்தை அதிகமான அளவில் ஈர்க் காது இருக்கும் நிகழ்வுகள் என்னவெனில், தற்போது மக்கள் மீது ஏற்றப்பட்டிருக்கும் பொருளாதார சுமைகளாகும். நாட்டில் பொரு ளாதார மந்த நிலைமை மோசமாகிக் கொண் டிருப்பது தொடர்கிறது. அதன் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டமும், எவ்விதக் கட்டுப்பாடுமின்றி எகிறிக்கொண்டிருக்கும் பணவீக்கமும் சாமானிய மக்களின் வாழ்க்கை யை மிகவும் அவல நிலைக்குத் தள்ளியுள் ளன. எரிபொருட்களின் விலைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உயர்த்தப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் கடுமையான வறட்சியின் பாதிப்புகளிலிருந்து இன்னமும் மீளமுடியாத நிலை தொடரும் அதே சமயத் தில், வட இந்தியாவில் மழைக்காலம் முன்ன தாகவே தொடங்கி பெரிய ஆறுகள் அனைத் தும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப் பட்டு நாட்டின் பல பகுதிகளில் பேரழிவினை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு, நாட்டு மக்களில் பெரும்பான் மையோருக்கு ஏற்பட்டுள்ள துன்ப துயரங்கள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத நிலை யிலேயே தற்போதைய அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் நடந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஏற்கனவே வாழ்க்கைத்தரம் மிகவும் தாழ்ந்துபோயிருக்கக்கூடிய நிலை யில் மேலும் தொடர்ந்து ஏற்றப்படும் சுமைகளி லிருந்து நிவாரணம் கிடைக்காதா என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் இந்தப் பகுதியில் முன்பு பலமுறை சுட்டிக் காட்டியிருப்பதைப்போல, மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றால் ஆட்சியாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகள், மக்கள் நலன் சார்ந்த மாற்றுக் கொள்கையால் மாற்றி யமைக்கப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் இத்தகைய மாற்றுக் கொள்கையை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக இருக்கும், நவீன தாராளமய பொருளாதார சீர் திருத்தங்களுக்கு உண்மையாக இருந்திடும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சி களாலுமே தர முடியாது என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. எனவே, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் இத்தகையக் கொள்கைகளை எதிர்த்து ஒரு மாற்றுக் கொள் கைத் திசைவழியை உருவாக்கவேண்டியது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமீபத் தில் நாட்டின் நான்கு முனைகளிலிருந்தும் நடத்திய மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப் பயணத்தின்போது, மக்களுக்குத் தேவையான நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்திலும், அதே சமயத்தில் நம் மக்களில் பெரும்பான் மையோரின் பொருளாதார மேம்பாட்டிற்கு அடிப்படையான உள்நாட்டுத் தேவையை அதிகரிக்கக்கூடிய விதத்திலானப் பொருளா தார வளர்ச்சியைப் பெருக்கக்கூடிய விதத் திலும் ஒரு மாற்றுக் கொள்கையை முன்வைத் தது. இவ்வாறு ஒரு மாற்றுக் கொள்கைத் திசைவழியில் பயணிப்பதற்கான ஓர் அரசியல் மாற்றுக்காகச் செயல்படும் நேரத்தில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம், கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து வரையறுத்திருப்பதாவது:‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங் கிரசையும் பாஜகவையும் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டியிருக்கிறது. இவ்விரு கட்சிகளுமே பெரும் முதலாளிகள் - நிலப் பிரபுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் களின் வர்க்க சுரண்டல் என்றென்றும் தொடர்வதற்கு வழிவகுக்கும் கட்சிகளாகவும், பல்வேறு பிரிவு மக்களின் சமூக ஒடுக்கு முறைக்கும் காரணமாகவுள்ள கட்சிகளாகவும் இருக்கின்றன. அவை நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன, அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையையும் நியாயப்படுத்துகின்றன. மக்களை நசுக்கிக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் - தொழிலாளர்களின் அவல நிலைக்குக் கார ணமானதும், பெரும் வர்த்தகப்புள்ளிகள் மற் றும் பணக்காரப் பிரிவினருக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ளதும், அதற்காக நாணங் கெட்ட முறையில் ஊழலில் ஊறித் திளைக்க வும் கவலைப்படாத காங்கிரஸ் கட்சியும் ஐ.மு.கூட்டணி அரசாங்கமும் தோற்கடிக்கப் படுவது அவசியமாகும். அதேபோன்று இடது, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் முன் னேறுவதற்கு, பாஜக தனிமைப்படுத்தப்படு வதுடன் அதன் மதவெறி மற்றும் வலதுசாரி நிகழ்ச்சிநிரல் எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டி யதும் அவசியமும் முக்கியமானதுமாகும்.

‘‘காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடது மற்றும் ஜனநாயக மாற்றை முன்வைத்திருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு மாற்று ஓர் இடதுசாரி ஜனநாயக மேடையாகத் தான் இருக்க முடியும். இத்தகைய மாற்று என் பது இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் அரசியல் கூட்டணியின் மூலமாக உருவாகி டும் இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் மூலமாக மட்டுமே கட்டப்பட முடியும். இதற் கான முயற்சிகளில் ஈடுபடும்போது, ஜனநாய கம், தேசியப் பாதுகாப்பு, மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களையும் உரிமைகளையும் பாது காப்பதற்கான பங்கினைச் செலுத்தக்கூடிய, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத சக்தி களுடன் அணிவகுக்க வேண்டிய அவசியம் எழலாம், இத்தகைய கூட்டு மேடைகள் உருவாவது இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் கூட்டணியைக் கட்டுவதற்கான நடைமுறைக்கு உதவிட வேண்டும். ‘‘இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் பிரச்ச னைகளின் மீது கூட்டு நடவடிக்கைகளுக்கு முயற்சித்திட வேண்டும். அப்போதுதான் அவ்வாறு மேற்கொள்ளும் இயக்கங்களை விரி வாக்கிட முடியும். சில குறிப்பிட்ட கொள்கை விஷயங்களிலும் மக்கள் பிரச்சனைகளிலும் இக்கட்சிகளுடன் நாடாளுமன்றத்திலும் ஒத் துழைப்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும். தேவைப்பட்டால் மற்றும் தேவைப்படும் பொழுது, இக்கட்சிகளில் சிலவற்றுடன் தேர் தல் புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.’’ (பத்திகள் 2.137 முதல் 2.139 முடிய)2013 ஜூலை 1 அன்று புதுதில்லியில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் தேசிய அளவிலான அரசியல் சிறப்பு மாநாடு ஒன்று நடைபெறவிருக்கிறது. இச்சிறப்பு மாநாடு, நாட்டிற்கான மாற்றுக்கொள்கைத் திசைவழி குறித்து இடதுசாரிக் கட்சிகளின் அணுகு முறையை உள்ளடக்கி ஒரு பிரகடனத்தை விவாதித்து வெளியிட இருக்கிறது. இந்தப் பிரகடனத்தின் அடிப்படையில், இடதுசாரிக் கட்சிகள் நாட்டில் உள்ள அனைத்து காங் கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மற்றும் கட்சிகளுக்கு நாட்டிற்கான மாற்றுக் கொள்கைத் திசை வழியை ஆதரிக்குமாறும் அதற்காகச் செயல் பட முன்வருமாறும் வேண்டுகோள் விடுக்கப் படும். நாட்டின் நலன்களும் நாட்டு மக்களின் நலன்களும் பாதுகாக்கப்படவேண்டுமானால், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் இந்தத் திசைவழியில்தான் முன்னேறவேண்டும்.
(தமிழில் : ச.வீரமணி)


Sunday, June 16, 2013

மோடிக்கு ஆர்எஸ்எஸ் முழு ஆதரவு


கோவாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு, தேர்தல் பிரச்சாரக்குழுவின் தலைவராக நரேந்திர மோடியைத் தேர்ந் தெடுத்துள்ளது. இந்த முடிவின்மூலம் பாஜக தன்னுடைய கட்சியின் பிரதமருக் கான வேட்பாளராக மோடியை முன் னிறுத்தி அடுத்த அடியை எடுத்து வைத் திருக்கிறது.
மோடியை பிரதமர் வேட் பாளராக முன்னிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் தேஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களின் வாயை அடைப்பதற்கு பாஜக இந்நடவடிக்கை யை மேற்கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் / பாஜக பரிவாரத்தினுடைய வெறிபிடித்த இந்துத் துவா சித்தாந்தத்தின் சின்னமாக விளங் குகிறார். 1980களில் மத்தியிலிருந்து சங் பரிவாரக்கூட்டத் தினால் நடத்தப்பட்ட இந்துத்துவா பரிசோதனையின் ஆய்வுக் கூடமாக குஜராத் இருந்தது.
சமூகத்தை படிப்படியாக மதவெறி சமூகமாக மாற்றி முஸ்லீம் மற்றும் கிறித்துவ சிறுபான் மையினருக்கு எதிராக 2002 இல் தாக்கு தல்களைத் தொடுத்து படுகொலைகள் புரியக்கூடிய அளவிற்கு இவர்களது பரி சோதனை வெற்றி பெற்றதைப் பார்த் தோம். இத்தகைய பிற மதத்தினர் படு கொலை செய்யப்பட்டதன் மூலமாகத் தான் நரேந்திர மோடி முன்னுக்கு வந்தார். மோடியின் ஏற்றம் என்பது இவ்வாறு மோடி பிற மதத்தினரைக் கொல்ல மேற் கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆர்எஸ்எஸ் தலைமை முழு ஆதரவு அளித்ததன் விளைவேயாகும்.
பாஜக எப்போதும் ஆர்எஸ்எஸ் இயக் கத்தின் ஓர் அரசியல் அங்கமாகக் செயல் பட்டு வந்த அதே சமயத்தில், 2004 மக்க ளவைத் தேர்தல்களில் அது தோல்வி யைத் தழுவியதை அடுத்து, கட்சியின் மீது ஆர்எஸ்எஸ்-இன் பிடி படிப்படியாக இறுகத் தொடங்கியது. 2009 இல் நடை பெற்ற மக்களவைத் தேர்தலின்போது மறு படியும் இரண்டாவது முறையாக பாஜக தோல்வி அடைந்ததை அடுத்து, அத் வானியைப் பிரதான தலைவராகப் பார்க் கும் பார்வை மாறியதையும், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு யார் வருவது என்பது குறித்து கட்சிக்குள் குடுமிபிடிச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த தையும் பார்க்க முடிந்தது.
பாஜகவின் தலைவராக நிதின் கட்காரி நியமிக்கப்பட் டதானது இந்த அமைப்பின்மீது ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் அதிகரித்து வந் ததைக் காட்டியது. அப்போது ஆர்எஸ்எஸ் இயக்கம் வலியுறுத்திவரும் வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை அமல் படுத்த வேண்டும் எனக் கோரி அழுத்தம் தரப்பட்டது. ஆனால் பாஜகவின் இத்த கைய போக்கானது அதன் தலைமை யிலான கூட்டணியை விரிவுபடுத்து வதற்கு உதவவில்லை. அதனுடன் கூட் டணியிலிருந்த கட்சிகள் ஒவ்வொன் றாகத் தங்களைக் கழற்றிக் கொண்டு விட்டன. தற்போது அதனுடன் ஐக்கிய ஜனதா தளம், சிவ சேனை மற்றும் அகாலி தளம் மட்டுமே கூட்டணி வைத்துக் கொண்டுள்ளன. இந்தக் கூட்டணியை யாவது எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அத்வானி யின் முயற்சிதான், இதுவரை மோடியை மேலே உயர்த்தாமல் தடுத்து நிறுத்தி வந்தது. கட்சிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை மோடியிடம் ஒப்படைத்தோ மானால், தற்போது ஒட்டிக் கொண்டிருக் கும் கூட்டணிக் கட்சிகளும் தங்களை கழற்றிக்கொண்டுவிடும் என்று வாதி டப்பட்டது. நரேந்திர மோடி கட்சியினுடைய தேர் தல் களத்தின் தலைவராக நியமிக்கப்பட் டிருப்பது இன்றைய தினம் பாஜகவின் கொள்கை என்ன என்பதை மிகச் சரியாக அடையாளப்படுத்தி இருக்கிறது.
அதா வது எவ்விதக் கலப்புமற்ற தூய்மையான மதவெறி நிகழ்ச்சிநிரலை (யn ரயேடடடிலநன உடிஅஅரயேட யபநனேய) கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் வர்த்தகப்புள்ளிகளின் நலன்களுடன் இணைத்து முன்னெ டுத்துச் செல்ல வேண்டும் என்கிற பாஜக வின் கொள்கையை நன்கு பறைசாற்றி விட்டது. நரேந்திர மோடி, குஜராத் மாநி லத்தின் முதல்வராக, சுதந்திர இந்தியா வில் முஸ்லீம்களுக்கு எதிரான மிகவும் மோசமான படுகொலைகளுக்குத் தலைமை தாங்கி நடத்தியவர். அதிலி ருந்தே அவர் பெரும் வர்த்தகப் புள்ளி களின் நேசமிகு நபராக மாறிவிட்டார். நாட்டில் உள்ள அனைத்துப் பெரும் வர்த் தகப் புள்ளிகளும் - இரண்டு அம்பானி சகோதரர்களும், டாட்டாக்களும், பிர்லாக் களும், அடானி மற்றும் ஈசார் ஆகிய அனைவரும் - குஜராத்தில் அளப்பரிய அளவில் ஆதாயம் அடைந்துள்ளார்கள்.
குஜராத்தில் நிலம் மற்றும் இதர வளங்கள் அனைத்தும் அவர்களுக்குத் தாராள மாகத் தாரை வார்க்கப்பட்டுள்ளன. இவ் வாறு மோடி மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பிற மதத்தினர் மீது விஷத்தைக் கக்கும் இந்துத்துவா சித்தாந்தத்தையும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் நலன் களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் நபராக, நாட்டின் வளர்ச்சியின் குஜராத் மாதிரி எனப்படும் வலதுசாரி எதேச் சதிகாரத்தின் சின்னமாக மாறி இருக் கிறார்.எல்.கே. அத்வானி தன் எதிர்ப்பைக் காட்டக்கூடிய விதத்தில் தான் வகித்த பொறுப்புகள் அனைத்திலிருந்தும் ராஜி னாமா செய்தது 24 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கவில்லை.
ஆர்எஸ்எஸ் தலைமை அவரது ராஜினாமா பிரச்சனையைத் தீர்த்துவைத்துவிட்டது. ஆயினும் அது கட்சிக்குள் உள்ள மோதல்களையும் முரண்பாடுகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துவிட்டது. இந்துத்துவா வின் அரசியல் நிகழ்ச்சிநிரலை அமல் படுத்திய மூத்த தலைவரான அத்வானி, தன்னிடமிருந்து அந்நிகழ்ச்சி நிரல் மற்றொருவரால் பறிக்கப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 2005 வரை சுயம்சேவக்குகளின் அவதாரப் புருஷராகக் கருதப்பட்ட அத்வானியைத் தற்போது கழட்டிவிட்டிருப்பதன்மூலம் ஆர்எஸ்எஸ்-க்கும் சுயம்சேவக்குகளுக் கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளும் மோடி குறித்து பாஜகவிற்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடையே முரண் பாடு ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து இறுதியில் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறுமானால், பின் அது ஒரேவிதமான பொதுவான மத வெறிக் கண்ணோட்டம் கொண்ட பாஜக, சிவசேனை மற்றும் அகாலிதளம் - என்னும் மூன்று கட்சிகளின் கூட் டணியாக மாறிவிடும்.
அத்வானியின் எதிர்ப்பையும் மீறி, பாஜக தலைமையினை மாற்றி இருக் கிறது. மோடியின் தலைமையை வர்க்க ரீதியாக பெரு முதலாளிகளும், அரசியல் ரீதியாக ஆர்எஸ்எஸ் இயக்கமும் உத்த ரவாதப்படுத்திடும். மோடியின் தலை மையிலான பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதா; வேண்டாமா என் பது குறித்து ஐக்கிய ஜனதா தளம் விரைவில் தீர்மானித்திடும். இடது மற்றும் ஜனநாயக சக்திகளைப் பொறுத்தவரை, அதன் முன்னுள்ள பணி மிகவும் தெளி வானது. காங்கிரசின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதுடன், வரவிருக்கும் காலங்களில் மோடி தலைமையிலான பாஜகவை முறியடித்திடவும் அனைத்து விதங்களிலும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட வேண்டும்.(தமிழில்: ச.வீரமணி)

Sunday, June 9, 2013

உணவுப் பாதுகாப்பு: தேவை சிறப்பு உறுதியே



சத்தீஸ்கரில் சமீபத்தில் மாவோயிஸ்ட் டுகள் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுத்ததை அடுத்து, ஓர் அரசியல் கருத் தொற்றுமையை ஏற்படுத்திடுவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் கூட்டிடலாம் என்று அரசாங்கம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் மூலமாக பரிந்துரைத்துள்ள அதே சமயத்தில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர் வையும் கூட்டிடலாம் என்றும் மிகப்பெரிய அளவில் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின் றன, ஆயினும் ஊடகங்களில் வெளி வந்துள்ள தக வல்களின் அடிப்படையில், உணவுப் பாது காப்புச் சட்டமுன்வடிவை நிறைவேற்று வதற்கு வசதி செய்துகொடுக்கும் விதத்தில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படலாம் என்றும் தெரிகிறது. ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்பு, அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் நாடாளுமன்றத்தின் இரு அவை களின் கூட்டுக் கூட்டத்தொடரில் உரையாற் றுகையில் அரசாங்கம் தன்னுடைய முதல் நூறு நாட்களில் அமல்படுத்தவிருக்கும் பல் வேறு நடவடிக்கைகள் குறித்துக் கூறி னார். அவ்வாறு அவர் பட்டியலிட்டதில் உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவும் பிரதானமான ஒன்றாகும்.

அவ்வாறு அவர் கூறி நான்கு ஆண்டு கள் கழிந்து விட்டன. அத்தகையதொரு சட்டமுன் வடிவை நாடாளுமன்றத்தின் பரிசீலனைக் கும், ஏற்புக்கும் கொண்டு வர அரசாங்கத்தால் இன்னமும் முடியவில்லை. அவ்வாறு அர சாங்கம் கொண்டு வருவதை எவரும் தடுத் திடவில்லை. அத்தகையதொரு சட்டமுன் வடிவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் நினைத்திருந் தால் அதனை எவராலும் தடுத்திருக்கவும் முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதா னால், அரசாங்கம் நாட்டுக்கும், நாட்டு மக்க ளுக்கும் கொடுத்த உறுதிமொழியை நிறை வேற்றாததற்காகத் தமக்குத் தாமே தான் குறை சொல்லிக் கொள்ள முடியுமே தவிர வேறு எவ ரையும் குறை சொல்ல முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாடாளு மன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர்தொடர் பாக எவ்விதமான வரையறையையும் ஏற்படுத் திடவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் 85(1)ஆவது விதி கூறுவதாவது: ‘‘குடியரசுத் தலைவர் அப்போதைக்கப்போது நாடாளுமன் றத்தின் ஒவ்வொரு அவையையும் கூட்டு வதற்கு, அவர் உசிதமெனக் கருதும் காலத் தையும், இடத்தையும் நிர்ணயம் செய்து அழைப் பாணை அனுப்பிடுவார். ஆனால், ஓர் அமர் வின் கூட்டத்தொடரின் கடைசி நாளுக்கும்,

அடுத்த அமர்வுக்காக நிர்ண யிக்கப்படும் கூட் டத்தொடரின் முதல் நாளுக்கும் இடையே ஆறு மாதங்கள் குறுக்கிடக்கூடாது.’’ எனவே அமைச்சரவையின் அறிவுரையின்படி, குடி யரசுத் தலைவர் வழக்கமாக காலங்காலமாகச் செய்துவருவதைப்போன்று, பட்ஜெட் கூட் டத்தொடர், மழைக்காலக் கூட்டத் தொடர் மற் றும் குளிர்காலக் கூட்டத் தொடர் ஆகிய மூன்று கூட்டத்தொடர் களுக்கும் கூடுதலாக, நாடாளுமன்றத் தைக் கூட்ட அழைப்பாணை அனுப்பிட லாம். ஆனால் மழைக்காலக் கூட் டத் தொடர் வழக்கமாக ஜூலையில் கூட்டப் படுமாதலால், அதற்கு முன் ஒரு கூட்டத் தொடர் என்பதில் அர்த்தமேதுமில்லை.ஊடகங்களின் வாயிலாக சிறப்புக் கூட் டத்தொடரை நடத்தவிருப்பதாக செய்திகளைக் கசியவிடுவதன் மூலம் ஐ.மு. கூட்டணி-2 அர சாங்கமானது மக்களுக்கு உணவுப் பாது காப்பை உத்தரவாதப்படுத்திட மிகவும் உறுதி பூண்டிருப்பதுபோல் காட்டி அரசியல் ஆதா யம் தேட முயற்சித்துக்கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. மாறாக, அரசாங்கத்திடம் கேட் கப்பட வேண்டிய கேள்வி என்னவெனில், இத னைக் கொண்டுவர நான்கு ஆண்டுகளாகக் காலம் கடத்தியது ஏன் என்பதுதான். எனவே இந்த விஷயத்தில் மக்களுக்கு இரண்டகம் செய்திருப்பது அரசாங்கம்தானேயொழிய வேறு யாருமல்ல

.அரசாங்கத்திற்குள் கணிசமான அள விற்கு குடுமிபிடிச்சண்டை நடைபெற்றபின் னர்தான் அரசாங்கம், அனைவருக்கும் 25 கிலோ கிராம் உணவு தானியங்கள் - அரிசி கிலோ 3 ரூபாய் என்ற வீதத்திலும் கோதுமை கிலோ 2 ரூபாய் என்ற வீதத்திலும், இதர தானி யங்கள் கிலோ 1 ரூபாய் என்ற வீதத்திலும் வழங்கிட முன்மொழிவினை ஏற்படுத்தி இருப் பதாகக் கடைசியாகத் தெரிய வந்திருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் (கிராமப்புறங்களில் 75 விழுக்காடும், நகர்ப்புறங்களில் 50 விழுக் காடும் என்கிற முறையில்) நாட்டு மக்களில் 67 விழுக்காட்டினரைச் சென்றடையக் கூடிய விதத்தில் முன் மொழிவு உருவாக்கப்பட்டிருக் கிறது. கடந்த காலங்களில் இப்பகுதியில் நாம் திரும்பத் திரும்ப பலமுறை சுட்டிக்காட்டி இருப்பதைப்போல, நம் நாட்டிலிருந்து பசி - பஞ்சம் - பட்டினியை ஒழித்துக்கட்ட இது போதுமானதல்ல. ஓர் அர்த்தமுள்ள விதத்தில் உணவுப் பாதுகாப்பு அமைந் திட வேண்டு மானால் நாட்டிலுள்ள அனைத்துக் குடும் பத்தினருக்கும் - குறைந்தபட்சம் 90 விழுக் காட்டினர் - மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியங்களை கிலோ 2 ரூபாய்க்கு மிகைப் படாத வீதத்தில் அளித்திட வேண்டும். இதற் குக் குறைந்த எவ்வித நடவடிக்கையாலும் நாட்டுமக்களுக்கு முழுமையான அளவில் உணவுப் பாதுகாப்பை அளித்திட முடியாது. ஆயினும் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் இதனை ஏற்க மறுக்கிறது.மேலும் உணவுப்பாதுகாப்பு என்பது உண் மையிலேயே மக்களைச் சென்றடைய வேண் டுமானால் அதனை பொதுவிநியோக முறையை அனைவருக்குமான ஒன்றாக மாற்றி, நாட்டு மக்கள் அனைவ ரையும் அதன் கீழ் கொண்டு வருவதன் மூலமே செய்திட முடியும். இவ் வாறு செய்வதற்குப் பதிலாக, நியாய விலைக் கடைகளின் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருள்களை விநியோகிப்பதற்குப் பதிலாக அரசாங்கம் நேரடி பணப் பட்டுவாடா என்னும் திட்டத்தைக் கொண்டுவரவிருக்கிறது. ஆனால் இத்திட்டம் அமல்படுத்தப் பட்டால், இதன்மூலம் பொது விநியோக முறை என்பதே அவசியமற்ற ஒன்றாக மாறிப்போகும்.

ஏனெ னில் அரசாங்கம் மக்களிடம் பொருள்களைத் தாங்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு வெளிச்சந்தையில்தான் வாங்குமாறு கேட் டுக்கொள்கிறது. பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டுவதற்கு மிகச்சிறந்த வழிமுறை இதைவிட வேறெதுவும் கிடையாது.மேலும் பணவீக்கம் அதிகரித்துக் கொண் டிருப்பதால், மக்களுக்குத் தரப் படும் பணத் தின் உண்மையான மதிப்பு என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்லும். விளைவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள குறைந்தபட்ச அளவைக் கூட வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள் ளப்படுவார்கள். பொது விநியோகமுறை ஒழித் துக் கட்டப்பட்டு, மக்கள் மேலும் மிகப்பெரிய அளவில் வறுமைக் குழிக்குள் தள்ளப்படுவது என்பதும் தவிர்க்க முடியாததாகிவிடும். இவ்வாறு பொது விநியோகமுறை ஒழித் துக் கட்டப்படுவதென்பது மற்றுமொரு மோச மான பாதிப்பை ஏற்படுத் திடும். தற்சமயம் உணவு தானியங்களை அரசாங்கமே நிர்ண யம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக்கு விவசாயி களிடமிருந்து கொள் முதல் செய்கிறது. இவ்வாறு கொள்முதல் செய் யப்படும் உணவுதானியங்கள் பின்னர் நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிர் ணயிக்கப்பட்ட விலையில் விநியோகிக் கப்படுகின்றன. பொது விநியோக முறை ஒழித் துக்கட்டப்பட்டபின்பு அரசாங்கம் இவ்வாறு உணவு தானியங்களைக் கொள்முதல் செய்ய வேண்டிய தேவை எழப்போவதில்லை. இவ் வாறாக விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை தரவேண்டிய பொறுப்பிலிருந் தும் அரசாங்கம் தன்னைக் கழட்டிக் கொள் கிறது. அதன்மூலம் அரசாங்கம் விவசாயிக ளுக்கு இதுவரை மிகக் குறைந்த அளவில் என்ற போதிலும் அளித்து வந்த பொருளா தாரப் பாதுகாப்பையும் பறித்துக் கொள்கிறது. மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கி அதன்மூலம் அவர்களை பசி - பஞ்சம் - பட் டினிக் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து நேரடி பணப் பட்டுவாடா திட்டத் தின் மூலமாக, அரசாங்கம் தன்னைக் கழட்டிக் கொள்வது மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அளிப்பதிலிருந்தும் தன்னைக் கழட்டிக் கொள்கிறது.
இத்தகைய நடவடிக்கை மூலமாக அர சாங்கமானது மக்களைக் கொஞ்சமா வது பசி - பஞ்சம் - பட்டினியிலிருந்துக் காப்பாற்றும் வண்ணம் அளித்து வந்த மிகச் சொற்ப அள விலான மானியங்க ளையும் கொஞ்சம் கொஞ் சமாகத் தொடர்ந்து குறைக்கத் திட்டமிட் டிருக்கிறது. விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதற்காக அளித்து வந்த மானியங்களையும் இனி கொடுக்க வேண்டிய பொறுப்பிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறது.வேறுவார்த்தைகளில் சொல்வதானால், தற்போது அரசாங்கம் மக்களின் கண்களைக் கட்டி வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. அர சாங்கம் கொண்டுவரவி ருக்கும் உணவுப் பாது காப்புச்சட்ட முன்வடிவோ அல்லது பணப் பட்டுவாடா திட்டமோ மக்களுக்குத் தேவை யான நிவாரணத்தை அளித்திட முடியாது. மாறாக காலம் செல்லச் செல்ல விலைவாசி கள் உயர்ந்துகொண்டே செல்லும்போது, இத் தகையப் பணப் பட்டுவாடாக்கள் குடும்பத் தின் உணவு ஊட்டத்திற்குரிய தேவைகளை எதிர்கொள்ள போதாததாக மாறிவிடும். இவ் வாறு ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர் களை வறுமைக்குழிக்குள் தள்ள திட்டமிட்டி ருக்கிறது.

எனவே இப்போது நமக்குத் தேவை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் அல்ல. மாறாகத் தேவைப்படுவது என்னவெ னில் மக்களுக்கு உண்மை யான முறையில் உணவுப் பாதுகாப்பை அளிப்பதற்கான உறுதி யேயாகும். மக்கள் முதலில் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும், பின்னர் தங் கள் வாழ்நிலையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கேற்ற முறையில் அனை வருக்குமான பொது விநியோக முறையை உத் தரவாதப்படுத்திட வேண்டும், அதற்குத் தேவையான அளவு ஒதுக்கீடுகளையும் செய் திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி