கோவாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு, தேர்தல் பிரச்சாரக்குழுவின் தலைவராக நரேந்திர மோடியைத் தேர்ந் தெடுத்துள்ளது. இந்த முடிவின்மூலம் பாஜக தன்னுடைய கட்சியின் பிரதமருக் கான வேட்பாளராக மோடியை முன் னிறுத்தி அடுத்த அடியை எடுத்து வைத் திருக்கிறது.
மோடியை பிரதமர் வேட் பாளராக முன்னிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் தேஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களின் வாயை அடைப்பதற்கு பாஜக இந்நடவடிக்கை யை மேற்கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் / பாஜக பரிவாரத்தினுடைய வெறிபிடித்த இந்துத் துவா சித்தாந்தத்தின் சின்னமாக விளங் குகிறார். 1980களில் மத்தியிலிருந்து சங் பரிவாரக்கூட்டத் தினால் நடத்தப்பட்ட இந்துத்துவா பரிசோதனையின் ஆய்வுக் கூடமாக குஜராத் இருந்தது.
சமூகத்தை படிப்படியாக மதவெறி சமூகமாக மாற்றி முஸ்லீம் மற்றும் கிறித்துவ சிறுபான் மையினருக்கு எதிராக 2002 இல் தாக்கு தல்களைத் தொடுத்து படுகொலைகள் புரியக்கூடிய அளவிற்கு இவர்களது பரி சோதனை வெற்றி பெற்றதைப் பார்த் தோம். இத்தகைய பிற மதத்தினர் படு கொலை செய்யப்பட்டதன் மூலமாகத் தான் நரேந்திர மோடி முன்னுக்கு வந்தார். மோடியின் ஏற்றம் என்பது இவ்வாறு மோடி பிற மதத்தினரைக் கொல்ல மேற் கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆர்எஸ்எஸ் தலைமை முழு ஆதரவு அளித்ததன் விளைவேயாகும்.
பாஜக எப்போதும் ஆர்எஸ்எஸ் இயக் கத்தின் ஓர் அரசியல் அங்கமாகக் செயல் பட்டு வந்த அதே சமயத்தில், 2004 மக்க ளவைத் தேர்தல்களில் அது தோல்வி யைத் தழுவியதை அடுத்து, கட்சியின் மீது ஆர்எஸ்எஸ்-இன் பிடி படிப்படியாக இறுகத் தொடங்கியது. 2009 இல் நடை பெற்ற மக்களவைத் தேர்தலின்போது மறு படியும் இரண்டாவது முறையாக பாஜக தோல்வி அடைந்ததை அடுத்து, அத் வானியைப் பிரதான தலைவராகப் பார்க் கும் பார்வை மாறியதையும், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு யார் வருவது என்பது குறித்து கட்சிக்குள் குடுமிபிடிச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த தையும் பார்க்க முடிந்தது.
பாஜகவின் தலைவராக நிதின் கட்காரி நியமிக்கப்பட் டதானது இந்த அமைப்பின்மீது ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் அதிகரித்து வந் ததைக் காட்டியது. அப்போது ஆர்எஸ்எஸ் இயக்கம் வலியுறுத்திவரும் வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை அமல் படுத்த வேண்டும் எனக் கோரி அழுத்தம் தரப்பட்டது. ஆனால் பாஜகவின் இத்த கைய போக்கானது அதன் தலைமை யிலான கூட்டணியை விரிவுபடுத்து வதற்கு உதவவில்லை. அதனுடன் கூட் டணியிலிருந்த கட்சிகள் ஒவ்வொன் றாகத் தங்களைக் கழற்றிக் கொண்டு விட்டன. தற்போது அதனுடன் ஐக்கிய ஜனதா தளம், சிவ சேனை மற்றும் அகாலி தளம் மட்டுமே கூட்டணி வைத்துக் கொண்டுள்ளன. இந்தக் கூட்டணியை யாவது எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அத்வானி யின் முயற்சிதான், இதுவரை மோடியை மேலே உயர்த்தாமல் தடுத்து நிறுத்தி வந்தது. கட்சிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை மோடியிடம் ஒப்படைத்தோ மானால், தற்போது ஒட்டிக் கொண்டிருக் கும் கூட்டணிக் கட்சிகளும் தங்களை கழற்றிக்கொண்டுவிடும் என்று வாதி டப்பட்டது. நரேந்திர மோடி கட்சியினுடைய தேர் தல் களத்தின் தலைவராக நியமிக்கப்பட் டிருப்பது இன்றைய தினம் பாஜகவின் கொள்கை என்ன என்பதை மிகச் சரியாக அடையாளப்படுத்தி இருக்கிறது.
அதா வது எவ்விதக் கலப்புமற்ற தூய்மையான மதவெறி நிகழ்ச்சிநிரலை (யn ரயேடடடிலநன உடிஅஅரயேட யபநனேய) கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் வர்த்தகப்புள்ளிகளின் நலன்களுடன் இணைத்து முன்னெ டுத்துச் செல்ல வேண்டும் என்கிற பாஜக வின் கொள்கையை நன்கு பறைசாற்றி விட்டது. நரேந்திர மோடி, குஜராத் மாநி லத்தின் முதல்வராக, சுதந்திர இந்தியா வில் முஸ்லீம்களுக்கு எதிரான மிகவும் மோசமான படுகொலைகளுக்குத் தலைமை தாங்கி நடத்தியவர். அதிலி ருந்தே அவர் பெரும் வர்த்தகப் புள்ளி களின் நேசமிகு நபராக மாறிவிட்டார். நாட்டில் உள்ள அனைத்துப் பெரும் வர்த் தகப் புள்ளிகளும் - இரண்டு அம்பானி சகோதரர்களும், டாட்டாக்களும், பிர்லாக் களும், அடானி மற்றும் ஈசார் ஆகிய அனைவரும் - குஜராத்தில் அளப்பரிய அளவில் ஆதாயம் அடைந்துள்ளார்கள்.
குஜராத்தில் நிலம் மற்றும் இதர வளங்கள் அனைத்தும் அவர்களுக்குத் தாராள மாகத் தாரை வார்க்கப்பட்டுள்ளன. இவ் வாறு மோடி மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பிற மதத்தினர் மீது விஷத்தைக் கக்கும் இந்துத்துவா சித்தாந்தத்தையும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் நலன் களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் நபராக, நாட்டின் வளர்ச்சியின் குஜராத் மாதிரி எனப்படும் வலதுசாரி எதேச் சதிகாரத்தின் சின்னமாக மாறி இருக் கிறார்.எல்.கே. அத்வானி தன் எதிர்ப்பைக் காட்டக்கூடிய விதத்தில் தான் வகித்த பொறுப்புகள் அனைத்திலிருந்தும் ராஜி னாமா செய்தது 24 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கவில்லை.
ஆர்எஸ்எஸ் தலைமை அவரது ராஜினாமா பிரச்சனையைத் தீர்த்துவைத்துவிட்டது. ஆயினும் அது கட்சிக்குள் உள்ள மோதல்களையும் முரண்பாடுகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துவிட்டது. இந்துத்துவா வின் அரசியல் நிகழ்ச்சிநிரலை அமல் படுத்திய மூத்த தலைவரான அத்வானி, தன்னிடமிருந்து அந்நிகழ்ச்சி நிரல் மற்றொருவரால் பறிக்கப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 2005 வரை சுயம்சேவக்குகளின் அவதாரப் புருஷராகக் கருதப்பட்ட அத்வானியைத் தற்போது கழட்டிவிட்டிருப்பதன்மூலம் ஆர்எஸ்எஸ்-க்கும் சுயம்சேவக்குகளுக் கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளும் மோடி குறித்து பாஜகவிற்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடையே முரண் பாடு ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து இறுதியில் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறுமானால், பின் அது ஒரேவிதமான பொதுவான மத வெறிக் கண்ணோட்டம் கொண்ட பாஜக, சிவசேனை மற்றும் அகாலிதளம் - என்னும் மூன்று கட்சிகளின் கூட் டணியாக மாறிவிடும்.
அத்வானியின் எதிர்ப்பையும் மீறி, பாஜக தலைமையினை மாற்றி இருக் கிறது. மோடியின் தலைமையை வர்க்க ரீதியாக பெரு முதலாளிகளும், அரசியல் ரீதியாக ஆர்எஸ்எஸ் இயக்கமும் உத்த ரவாதப்படுத்திடும். மோடியின் தலை மையிலான பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதா; வேண்டாமா என் பது குறித்து ஐக்கிய ஜனதா தளம் விரைவில் தீர்மானித்திடும். இடது மற்றும் ஜனநாயக சக்திகளைப் பொறுத்தவரை, அதன் முன்னுள்ள பணி மிகவும் தெளி வானது. காங்கிரசின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதுடன், வரவிருக்கும் காலங்களில் மோடி தலைமையிலான பாஜகவை முறியடித்திடவும் அனைத்து விதங்களிலும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட வேண்டும்.(தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment