Sunday, March 31, 2013

மாற்றுக்கொள்கைக்கான திசைவழியே இப்போது தேவை




பொதுத் தேர்தல்கள் நெருங்கிவருவதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் புதிய கூட்டணிகளுக் கான பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி யிருப்பதும் கூட்டணிகள் தொடர்பான பர பரப்பும் வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல. ஆயினும், 2014 பொதுத் தேர்தலுக்கு சுமார் ஓராண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் இவ்வாறு பரபரப்பான நிலைமை காணப்படு வதற்கு, ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத் தில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்திருப் பதே பிரதான காரணமாகும். இந்த அர சாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக் கொண்ட போதே இது சிறுபான்மை அரசாக மாறிவிட்டது. இப்போது திமுகவும் கழட்டிக் கொண்டபின், மேலும் சிறுபான்மை அரசாக இது குறுகிவிட்டது. தற்போது இதன் ஆயுள் நீடிப்பது என்பது, அதனை வெளியிலிருந்து ஆதரித்துக் கொண்டிருக்கும் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற் றிடமிருந்து அதற்குக் கிடைக்கும் ஆதர வினையே பெரிதும் சார்ந்திருக்கிறது.

இப்போது, அத்தகைய வெளியிலி ருந்து கிடைத்திடும் ஆதரவினைத் தொடர்ந்து பெறுவதற்காக, அந்தக் கட்சிகளை ஆசை காட்டியோ அல்லது அச்சுறுத்தல்களைச் செய்தோ பணிய வைப்பதற்கான வேலைகளில் அரசாங் கம் ஈடுபட்டிருப்பது, தெள்ளத்தெளிவாகி இருக்கிறது. நாட்டின் அனைத்து அத் தியாவசியப் பொருட்களின் விலைகளும் நாளும் உயர்ந்துகொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்குகளைப் பெறுவதற்கான செலவும் அதிகரித்திருக்கிறது. அதேபோன்று, திமுக ஆதரவினை விலக்கிக் கொண்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே, திமுக வின் வாரிசு எனத் தெளிவாகத் தெரியும் மு.க.ஸ்டாலின் வீடுகளை மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) சோதனை செய்ததிலிருந்து, இத்தகைய கதிதான் சமாஜ்வாதி கட்சிக்கோ அல்லது பகு ஜன் சமாஜ் கட்சிக்கோ, அவை வெளி யிலிருந்து தந்திடும் ஆதரவை விலக்கிக் கொண்டால், நடந்திடும் என்கிற தெளி வான சமிக்ஞையையும் (அச்சுறுத்தலை யும்) தந்திருக்கிறது. மேலும், காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள மாநிலங்களாகக் கருதப்பட்ட வைகளிலேயே அது மிகவும் பரிதாபகர மான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதும் மத்தியில் அரசியல் நிலையற்றத் தன்மை அதிகரித்திருப்பதற்கு மற்றுமொரு கார ணமாகும். ஆந்திரப்பிரதேசத்தில், தனித் தெலுங்கானா மாநிலம் பிரச்சனையில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இரு மனப்போக்கும், மறைந்த முன்னாள் முதல்வரின் மகன் கட்சியை உடைத் திருப்பதும் அதன் தேர்தல் ஆதாயங் களை மிகவும் ஆழமான அளவிற்கு அடித்து நொறுக்கியிருக்கிறது.

தமிழ்நாட் டில் இதுவரை அதிமுக அல்லது திமுக வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கணிசமான அளவிற்குப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுவந்ததைப்போல இனியும் பெறமுடியாத நிலை தோன்றியிருப்ப தாகவே தெரிகிறது. இலங்கைத் தமிழர் களின் இன்னல்கள் தொடர்பான பிரச்ச னையில் திமுகவும் அதிமுகவும் காங்கி ரசை முற்றிலுமாக விலக்கி வைத்து விட் டன. இந்த ஆண்டு தேர்தல்கள் நடை பெறும் மாநிலங்களிலும் காங்கிரசின் வாய்ப்பு பிரகாசமானதாகத் தோன்ற வில்லை. அதேபோன்று, இந்த ஆண்டின் இறுதியில் எதிர்க்கட்சிகளால் ஆட்சி நடத்தப்பட்டு வரும் மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களிலும் காங் கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்பது போல் தோன்றவில்லை. இத்தகைய சூழ்நிலைகளின் பின் னணியில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர், முலாயம் சிங் யாதவ், மத்தியில் காங்கிரஸ் அல்லாத - பாஜக அல்லாத மூன்றாவது அணிகுறித்து திடீரென்று கூறியிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. மார்ச் 24 அன்று அவர் மராட்டிய மாநிலத்தில் ஓரிடத்தில் உரை யாற்றும்போது, சமூக மாற்றத்திற்காக பீகாரில் செயல்படும் கட்சியும் (ஐக்கிய ஜனதாதளம் என்று சேர்த்து வாசிக்க வும்), உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள கட்சியும் (தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று சேர்த்து வாசிக்கவும்) ஒரே அணியின் கீழ் வர வேண்டும் என்று பரிந்துரைத்திருக் கிறார்.

இயற்கையாகவே, மகாராஷ்டி ராவில் வலுவாக இருக்கக்கூடிய சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது மத்திய கூட்டணி அரசாங்கத் தில் முக்கியமான அங்கமாக இருப்பதால், இவரது பேச்சு ஐ.மு.கூட்டணியில் ஆட் டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய சாத்தியக்கூறுகள் முட் டாள்தனமானவை என்று காங்கிரசும், பாஜகவும் அறிவித்திருப்பதும் இயற்கை யேயாகும். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மத்திய அமைச்சரும், முலாயம்சிங் யாதவின் அபிப்பிராயங் களை, ‘இந்திய அரசியலில் பொய்த் தோற்றத்தைப்பிடிப்பதற்கான முயற்சி என்று கிண்டலடித்திருக்கிறார். அதே போன்று, பாஜகவும் இத்தகைய முயற்சி கள் இயங்கிடாதுஎன்றும், ‘மூன்றாவது அணிக்கு வாய்ப்பே இல்லைஎன்றும் கூறியிருக்கிறது. ஆயினும் இருவருமே கூட்டணி அரசாங்கங்கள்தான் இப்போது சாத்தியம் என்பதை ஏற்றுக்கொண்டுள் ளனர்.அத்தகைய கூட்டணி அரசாங் கத்தை ஏற்றுக்கொள்வது என்பது இன் றைய இந்திய எதார்த்த நிலையை அங்கீ கரிப்பதேயாகும். 1996இல் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்ப்போம். அப்போது நடைபெற்ற பொதுத்தேர்தல் களில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டபோது, நம் ஜனநாயகம் பின்னோக்கிச் செல்கிறது என்று பலரும் புலம்பினார்கள். ஆனால் நாம் மட்டும்தான், இது பின்னோக்கிச் செல்லுதல் அல்ல, மாறாக, இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியையே இது பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டிருந் தோம். நாட்டின் சமூகப் பன்முகத்தன்மை அரசியலிலும் பிரதிபலிக்கத்தான் வேண் டும். ஒற்றைக்கல்லால் ஆனது போன்ற ஒரு கட்சி அரசியல் கட்டமைப்பு இத் தகைய சமூகத்தின் வேற்றுமைகள் மற்றும் பன்முகத்தன்மைகளை முறை யாகப் பிரதிபலித்திடாது.
வரவிருக்கும் காலங்களில் கூட்டணி அரசாங்கங் கள்தான் அமையவிருக்கின்றன என்று அப்போது நாம் கூறினோம். இத்தகைய நம் புரிந்துணர்வை ஏற்றுக்கொண்டு, சரி என்று கூறிய ஒருசில தலைவர்களில் மறைந்த வி.பி.சிங்கும் ஒருவராவார். இந்தியாவை ஒரு மகா கூட்டணிஎன்று அவர் அழைத்தார். கடந்த இருபதாண்டுகளில் இத்த கைய புரிந்துணர்வுதான் சரியானது என் பது எவரும் மறுக்கமுடியாத வகையில் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 2014 பொதுத் தேர்தல் முடிந்தபின்னர் உருவாகும் அரசாங்கமும் கூட்டணி அரசாங்கமாகத் தான் இருக்கும் என்பதும் நிச்சயம். ஆயினும் அத்தகைய கூட்டணி அரசாங் கத்திற்குத் தலைமை தாங்கப்போவது யார் என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வியாகும். கூட்டணிக்கு, காங்கிரஸ் அல்லது பாஜகதான் தலைமை தாங்கும் என்று இதற்குத் தீர்வாக எவரும் கூறினால், மிகவும் சவுகரியமான விதத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களே அதிகம். இக்கூற்றை ஏகாதிபத்தியமும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும். ஏனெ னில் இரு கட்சிகளுமே ஏகாதிபத்தியத் தினுடைய அடிவருடியாக இருப்பதில் வலுவான வகையில் விருப்பம் தெரிவித் திருக்கும் கட்சிகளேயாகும். நவீன தாரா ளமயப் பொருளாதார சீர்திருத்தங்களின் மேதாவிகளும் மிகவும் மகிழ்ச்சி கொள் வார்கள். ஏனெனில் பொருளாதாரச் சீர் திருத்தக் கொள்கைகளை அமல்படுத்து வதைப் பொறுத்தவரை பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் கிடையாது. இவ்வாறு இரு கட்சிகளுக்கும் இடையே பொதுவான தன்மைகள் இருந்த போதிலும், நம்முடைய நாட்டு மக்கள், நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுடன் உளப் பூர்வமான நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்த மாய் உறுதி செய்திருக்கிறார்கள். இத னைப் பொறுத்தமட்டில், பாஜகவை இயக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வகுப்புவாதம் என்னும் அரசியல் நிகழ்ச்சிநிரல், நாட்டைப்பிடித்த பீடை என்பதை மக்கள் நன்கு கண்டுகொண் டுள்ளார்கள். பாஜக-வால் உருவாக்கப் படும் கூட்டணி எத்தகையதாக இருந்த போதிலும், தீர்க்க முடியாத முரண்பாடாக கொள்ளை நோய் போல் இது அதனைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. பாஜக தான் அமைத்திடும் கூட்டணி பெரும்பான்மை பெற்று வலுவாக அமைந் திட வேண்டுமானால், இத்தகைய வெறி பிடித்த மதவெறி நிகழ்ச்சி நிரலை அது மூட்டைகட்டி வைத்துவிட வேண்டும். ஆனால், மறுபக்கத்தில், ஆர்எஸ்எஸ்-ஆல் கட்டளையிடப்படும் மதவெறி நிகழ்ச்சி நிரலை அரக்கத்தனமான முறையில் பாஜக பின்பற்றவில்லை என்றால், பாஜக தன்னுடைய சொந்த அரசியல்தளத்தை கெட்டிப்படுத்தவோ, விரிவுபடுத்தவோ முடியாது. பாஜக விற்குள் இந்த முரண்பாடு ஏற்கனவே பிர திபலிக்கத் தொடங்கிவிட்டது. இதனை அக்கட்சி வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மாயையின் அடிப்படையில் யார் பிரதமர் என்பதற் கானத் தேர்வு குறித்து சண்டையிட்டுக் கொள்வதிலேயே பார்க்க முடிகிறது. அரசியல் கட்சிகளுக்கிடையே கூட் டணி தொடர்பான கூட்டல், கழித்தல்கள் இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருந்த போதிலும், மக்களின் உண்மையான அபிலாசைகள் மீது இவை போதுமான அளவிற்குக் கவனம் செலுத்தவில்லை. சமாஜ்வாதி போன்ற கட்சிகள் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அர சாங்கத்தை இன்னமும் தூக்கிச் சுமப்பது தொடர்கின்ற அதேசமயத்தில், மூன்றா வது அணி குறித்தும் பேசுவதற்கான காரணம் இதுதான். தன் சொந்தக் கட்சிக் குள்ளிருந்தும், சமூகத் தளத்திற்குள்ளி ருந்தும் மக்களின் தற்போதைய பரிதாபகர மான நிலைமைகளை மாற்றுவதற்காக ஏதேனும் நிவாரணம் கண்டாக வேண் டும் என்ற நிர்ப்பந்தம் வந்திருப்பதுதான் இதற்குக் காரணமாகும். பொருளாதார மந்தம், அனைத்துப் பொருள்களின் விலை களும் கடுமையாக உயர்ந்திருப்பது, விவசாய நெருக்கடி ஆழமாகியிருப்பது - அனைத்தும் மக்களின் மீது முன்னெப் போதும் இல்லாத அளவிற்குத் துன்ப துய ரங்களை அதிகரித்துள்ளன. நிவாரணத் திற்காகவும், சிறந்ததோர் வாழ்க்கைக் காகவும் மக்கள் ஏற்படுத்தும் அதிருப்தி குரல்கள்தான் மூன்றாவது அணிஅர சாங்கம் குறித்த இத்தகைய அரசியல் வெளிப்பாடுகளாகும்.

ஆயினும், இப்போது நம்முன் வாதத் திற்குரிய விஷயம் என்னவெனில், மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்களை இவ் வாறு காங்கிரஸ் அல்லாத, பாஜக அல் லாத அரசாங்கங்கள் அமைவதாலேயே தந்துவிட முடியமா என்பதேயாகும். அவ்வாறு மக்களுக்கு நிவாரணம் மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்துவதால் மட்டுமே சாத்தியமாகும். எனவே, வெறும் மாற்று அரசாங்கம் மட்டுமல்ல, மாறாக மாற்று மக்கள் ஆதரவு கொள்கைத் திசை வழியை அமல்படுத்தக்கூடிய அரசாங் கமே மக்களுக்குத் தேவையாகும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இத் தகைய மாற்றுக் கொள்கைகளை உயர்த் திப் பிடித்து போர் முழக்கப் பிரச்சாரப் பயணத்தை நாடு முழுவதும் நடத்தியது. இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த கொள்கைகளால் ஒவ் வொரு இந்தியருக்கும் பசி-பஞ்சம்-பட்டினியின்றி வாழவும், கல்வி, சுகா தாரம், வேலைவாய்ப்பு, வீட்டுவசதி ஆகி யவற்றையும் அடிப்படை உரிமைகளாக அளிக்க முடியும். பிரச்சாரப் பயணத்தின் போது இவ்வாறு மக்களுக்கான உரிமை களை உத்தரவாதப்படுத்திடத் தேவை யான வளங்கள் நாட்டில் இருப்பதையும் மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. ஆயி னும், இவ்வாறான வளங்கள் அனைத்தும் தற்சமயம் மெகா ஊழல்கள் மூலமாக கொள்ளை யடிக்கப்பட்டோ அல்லது அரசின் கொள்கைகள் வழியாகவோ பணக்காரர்களை மேலும் பணக்காரர் களாக்குவதற்கும், ஏழைகளை மேலும் வறிய நிலைக்குத் தள்ளுவதற்கும் பயன் படுத்தப்படுகின்றன என்பதும் விளக்கிக் கூறப்பட்டது.
இத்தகைய கொள்கைகள் மாற்றப்பட வேண்டியதுதான் இன்றைய தேவை. நாட்டில் இவ்வாறு ஆளும் வர்க்கங் கள் தற்போது கடைப்பிடித்து வரும் கொள்கைகளின் திசைவழியை மாற்றி யமைத்திட வேண்டுமானால் அது மக்க ளின் போராட்டங்களை வலுப்படுத்து வதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இதனைக் குறிக்கோளாகக் கொண்டு தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் மே மாதத்தின் பிற்பாதியில் நாடு தழுவிய அளவில் வெகுஜன முற்றுகைப் போராட்டத்தை நடத்திட அறைகூவல் விடுத்திருக்கிறது. இப்போராட்டம் மாபெரும் ஒத்துழையாமை இயக்கத்தின் வடிவத்தைப் பெறும். இத்தகைய உக்கி ரமான போராட்டங்கள் ஆளும் வர்க்கங் கள் மீது தங்கள் கொள்கைத் திசை வழி யை மாற்றியமைத்துக் கொள்ள தேவை யான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திட வேண் டும். அதே சமயத்தில், இத்தகைய போராட்டங்கள் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைப் பங்குபோட்டுக் கொள்வதற்காக மட்டும் தற்போது மேற்கொண்டுவரும் தங்களுடைய அரசியல் சந்தர்ப்பவாதத்தைக் கைவிடு வதற்கும், மக்களின் நிலைமைகளைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு மேம்படுத்தக் கூடிய விதத்திலும், அனைத்து இந்தியர் களுக்கும் சிறந்ததோர் இந்தியாவை உரு வாக்குவதற்கான விதத்திலும் மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கும் வலியுறுத்திட வேண்டும்.- 

தமிழில்: ச.வீரமணி

No comments: