Sunday, March 10, 2013

சாவேஸ் காட்டிய பாதையிலே முன்னேறுவோம்!






 ஹியூகோ ரபேல் சாவேஸ் பிரியாஸ் மரணச் செய்தியை  உலகம் ஆழ்ந்த வேதனை யுடனும், வருத்தத் துடனும் கேட்டது.  கடந்த ஈராண்டு காலமாக புற்றுநோயுடன் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த சாவேஸ், வெனிசுலா தலைநகர் காரகாஸில் மார்ச் 5 அன்று கடைசியில் அந்நோய்க்கு இரையாகி விட்டார்.  கடந்த பத்தாண்டு களில் லத்தீன் அமெரிக்கக் கண்டத் தில் வரலாற்றை மிகவும் புரட்சிகரமாக மாற்றியமைத்த, அனைவராலும் ஆகர்ஷிக்கப்பட்ட தலைவரை, உலகம் முழு வதும் உள்ள முற்போக்கு சக்திகள் இழந்துவிட்டன. முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே  நவீன தாராளமயப் பொருளாதாரக்  கொள்கைகளுக்கு மாற்று சாத்தியமே என்பதை நடை முறையில் மெய்ப்பித்துக் காட்டினார்.  அதுவும் அதை அவர் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் கொல்லைப் புறத்தில் நின்றுகொண்டே செய்து காட்டியுள்ளார்.    அதன் மூலம் அவர் அதன் மேலாதிக் கத்திற்கே தத்துவார்த்த ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்  சவால் விடுத் துள்ளார். குறிப்பாக சோசலிசம் குறித்த அவரது பார்வை மிகவும் விசாலமான தாகவும் மனவெழுச்சியுடன் பின்பற்றக் கூடிய விதத்திலும் இருந்தது. அதனை மக்கள் ஆதரவு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளுடன் நிறை வேற்ற முடியும் என்பதை அவர் உளப் பூர்வமாக நம்பினார்.
 கியூபப் புரட்சியும் அதன் சாதனைகளும் அவருக்கு உத் வேகம் அளித்து அவர் இறக்கும் வரை அவருக்கு  உறுதுணையாக நின்றன.ஹியூகோ சாவேஸ் நடவடிக்கைகள் லத்தீன் அமெரிக்காவின் அரசியல் மீது மிகவும் ஆழமான வகையில் செல்வாக்கு செலுத்தியது. லத்தீன் அமெரிக்க நாடு கள் அனைத்திலுமே மக்கள்திரளினரின் மகத்தான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்குக் காரணமாய் அமைந் தன. குறிப்பாக, பொலிவியாவில் ஈவோ மோரேல்ஸ் வெற்றி சாவேஸூக்கு கூடுதல் வலிமையைக் கொடுத்தது. கியூ பாவுடன் இணைந்து அவர்கள் லத்தீன் அமெரிக்காவில் ஒரு புரட்சிகரமான முற்போக்கு நடவடிக்கைகளை முன் னெடுத்துச் சென்றார்கள். இது, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும்பான்மை யானவற்றின் தேர்தல்களில் வெற்றிக்கு வித்திட்டது. உலக வர்த்தக அமைப்பு, பூமி வெப்பமயமாதல் போன்ற  உல கத்தின் பல அரங்கங்களில் அவர்  வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக, வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகளை ஒருங் கிணைப்பதில் முக்கிய பங்களிப்பினைச் செலுத்தினார். பிரிக்ஸ், இப்சா, நாம் போன்ற வளர்கின்ற நாடுகளின்  ஒற் றுமை உருவாவதற்கு ஊக்கத்துடன் ஒத் துழைத்தார்.  இவ்வாறாக அவர், உலக அளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின் னமாக விளங்கினார். 
ஹியூகோ சாவேஸ் வெனிசுலாவில் தனக்கு முன் ஆட்சியிலிருந்தவர்கள் நவீ னத் தாராளமயக் கொள்கைகள் மூலம் நாட்டின் செல்வங்கள் கொள்ளையடித் துச் செல்வதை மக்களுக்கு மிகவும் தெளிவாக அடையாளம் காட்டினார். குறிப்பாக தாராளமயக் கொள்கை களுக்கு எதிராகப் போராடிய மக்கள் படு கொலை செய்யப்பட்ட 1989  கரகாசோ இயக்கம் அவரை ஆழமாகப் பாதித்தது. நாட்டின் அதிபராக முதன்முறையாகப் பொறுப்பேற்ற போது அவர் செய்த முதல் காரியம், அரசியல் நிர்ணயசபைக்கு தேர்தல் அறிவித்து மக்கள் ஆதரவு அர சியலமைப்புச் சட்டத்தை நாட்டிற்காக உருவாக்கித்தருமாறு பணித்ததுதான். இவ்வாறாக பொலிவாரியன் அரசியல மைப்புச் சட்டத்தை உருவாக்கி, அதனை ஆயுதமாக வைத்தக்கொண்டு, சமூகத்தில் அதுநாள் வரையில் அடக் கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடந்த மக் களுக்கு உரிமைகளை அளித்தார். வெனி சுலா மக்களின் வாழ்க்கையை முற்றிலு மாக மாற்றி அமைத்தார். அவர் செய்த  காரியங்களில் மிக முக்கியமான ஒன்று, நாட்டில் நடைபெற்று வந்த எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை தேசிய மயமாக்கியதாகும். அதன்மூலம் கிடைத்த பணத்தை எல்லாம் பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தியதாகும். அதாவது, நாட்டின் செல்வங்களை நாட்டு மக்களின் நலன்களுக்குப் பயன் படுத்தினார். இதன் காரணமாக அதுநாள் வரையிலும் நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து வந்த பணக்கார வர்க்கம், அவை கையை விட்டுப் போன தைத் தொடர்ந்து நாசவேலைகளில் இறங்கின. அவற்றை சாவேஸ் தொழி லாளி வர்க்கத்தின் உதவியுடன் வெற்றி கரமாக முறியடித்தார்.
இவ்வாறு சாவேஸ் மக்கள் மத்தியில் அபரிமிதமான முறை யில் ஆதரவினைப் பெற்றதால், சாவே ஸுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்ட கூட்டம், வேறு வழியின்றி மீண்டும் அவரை அதிபராக தேர்வு செய் யப்பட்டதை தடுக்க முடியவில்லை. அரசு எந்திரத்தில் இருந்த அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தை உடைத் தெறிந்து, மக்கள் பங்கேற்கும் வகையில் ஆட்சி அதிகாரத்தை மாற்றி அமைத்தார். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்று வதற்காகப் பல்வேறு மக்கள் குழுக் களை அமைத்தார். இவ்வாறு 19க்கும் மேற்பட்ட மக்கள் குழுக்கள் அமைக்கப் பட்டன. இவை மக்களின் பிரச்சனை களை நேரடியாகத் தலையிட்டுத் தீர்த் தன. இவை நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பணிகளை மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்தின. 2006ஆம் ஆண்டு வாக்கில், நாட்டிலிருந்து எழுத் தறிவின்மை முற்றிலுமாக அகற்றப்பட் டது.  லத்தீன் அமெரிக்க நாடுகளில், சோசலிசக் கியூபாவிற்கு அடுத்தபடி யாக இரண்டாவது நாடாக, இந்த அளப் பரிய சாதனையை வெனிசுலா செய்து காட்டியது.  கியூபா நாட்டின் மருத்துவர் களின் உதவியுடன் நாட்டின் அனைத் துக் குடிமக்களுக்கும் அடிப்படைச் சுகாதாரப் பாதுகாப்பும் மருத்துவ சிகிச் சைகளும் இலவசமாக அளிப்பதை உத் தரவாதப்படுத்தினார். இத்தகைய மக்கள் குழுக்களின் மூலமாகவே அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருள்கள் கடு மையாக உயர்ந்து கொண்டிருந்த சமயத் திலும், பொருளாதார நெருக்கடி இருந்த போதிலும்கூட, மான்ய விலையில் உணவு தான்யங்கள் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்தினார்.
ஓராண்டிற்கு முன்புதான், சாவேஸ், தொழிலாளர் களுக்கு விரிவான அளவில் உரிமை களை வழங்கி, ஓர் உண்மையான புரட் சிகரமானதொழிலாளர்நலச் சட்டத்தில் கையெழுத்திட்டார், தொழிற்சாலை களைத் தொழிலாளர்களே எடுத்துக் கொள்வதை அரசாங்கம் சட்டரீதியாக அனுமதித்தது. உண்மையில் சாவேஸ், அவரது ஆட்சிக்காலத்தில் பல தொழிற் சாலைகளைத் தேசியமய மாக்கினார்.  தொழிலாளர் குழுக்கள் அவற்றை நிர் வகிக்க அனுமதித்தார். ஒவ்வோராண்டும் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப் பட்டது. ஆயினும், தொழிலாளி வர்க் கத்தின் வாழ்க்கை புரட்சிகரமான முறை யில் மாற்றி அமைக்கப்படுவதற்கு இன் னும் செய்ய வேண்டியது ஏராளமாக இருக்கிறது என்பதை  சாவேஸ் நன்கு உணர்ந்தே இருந்தார்.சாவேஸ் நிலச்சீர்திருத்தச் சட்டங் களைக் கொண்டு வந்து அமல்படுத்தத் தொடங்கினார். நாட்டில் மிகப்பெரிய அளவிலிருந்த நில ஆக்கிரமிப்புகளை உடைத்தெறிந்தார்.  நிலவுடைமையாளர் கள் மற்றும் அவர்தம் அடியாட்களின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் அவற்றை யெல்லாம் முறியடித்து நிலச்சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை முன் னெடுத்துச் சென்றார்.  சாவேஸின் ஆட் சியை எப்படியாவது பலவீனப்படுத்தி வீழ்த்திவிட வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சூழ் நிலையில் இவற்றைச் சாவேஸ் செய்து, சாதனைகளைப் படைத்தார் என்பது தான் இதில் நாம் மிகவும் முக்கியமாகக் குறித்துக்கொள்ள வேண்டிய அம்ச மாகும். ஹியூகோ சாவேஸ், ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியுடன் நின்று வளர்முக நாடுகளின் உரிமைகளுக்காகப் போராடி யவர்.
அவர் எப்போதுமே வளர்முக நாடுகளுக்கு இடையே ஒற்றுமையைக் கட்டுவதிலும், தெற்கு-தெற்கு ஒத்து ழைப்பை முன்னெடுத்துச் செல்வதிலும் உறுதியுடன் செயல்பட்டார். லத்தீன்  அமெரிக்க நாடுகளின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலாதிக்கம் செலுத்த வும், நவீன தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தவும் மேற்கொண்ட முயற் சிகளை  முறியடிப்பதற்காக . சாவேஸ், கியூபாவுடன் இணைந்து நின்று அல்பா என்னும் அமைப்பை உரு வாக்கினார்.  இதன்கீழ் பேங்க் ஆஃப சவுத்என்னும் ஒரு வங்கியை நிறுவவும் அதன்கீழ் லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் ஒரு பொது கரன்சியை உரு வாக்கிடவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை கள் நடைபெற்றுள்ளன. ஆயினும் சாவே ஸின் கனவு இன்னும் நனவாகவில்லை.  ஏகாதிபத்தியம், நிதி மூலதனம், வளர்முக நாடுகளின் செல்வாதாரங் களைக் கவர்ந்து செல்வதற்காக அவற் றிற்கிடையே நடைபெற்றுவரும் யுத்தங் கள் ஆகியவை குறித்த  நெருப்பைக் கக்கும் அவரது விமர்சனம் ஐ.நா. மன் றத்தில் அவர் ஆற்றிய உரையில் பிரதி பலித்தது. ஜார்ஜ் புஷ் பேசியதற்கு அடுத்து அவர் பேசும்போது இவ்வாறு அவர் பேசினார். ஏகாதிபத்தியத்தை பிசாசுஎன்று வர்ணித்த அவர், உலக ஒழுங்கை ஜனநாயகப் படுத்துவதற்கும், ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக் கத்தைத் திணிப்பதற்காக மேற்கொள் ளும் முயற்சிகளைத் தவிடுபொடியாக் குவதற்கும் வேண்டுகோள் விடுக்க அம் மேடையை அவர் பயன்படுத்திக் கொண் டார்.ஹியூகோ சாவேஸ் மரணத்தால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவ தென்பது சாத்தியமில்லை.
அவர் விட் டுச்சென்றுள்ள செயல்கள் அனைத்தும் ஒளிவிளக்காகத் திகழ்ந்து, உலகம் முழுதும் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுக்கு என்றென்றும் வழிகாட்டி உத்வேகமூட்டும். வளர்ந்து வரும் இத் தகைய போராட்டங்கள் சோசலிசத்தை நிதர்சனமாக்கி, உலகம் முழுதும் உள்ள பெரும்பான்மை மக்களின் அடிமைத் தளையைத் தகர்த்தெறியும்.  அத்தகைய போராட்டங்களை வலுப்படுத்துவ தென்பதுதான் ஹியூகோ சாவேஸுக்கு அளித்திடும் உண்மையான அஞ்சலி யாகும்.வெனிசுலா தலைநகர் காரகாஸில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு, ‘‘சாவேஸ் வாழ்கிறார், போராட்டம் தொடர்கிறது’’ என்று முழக்கமிட்டது, இந்த உறுதியைப் பிரதிபலித்தது.  அத் துடன், காரகாஸில், மிராபுளோரஸ் அரண்மனையில், சாவேஸூக்குப் பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள துணை அதிபர் நிகோலஸ் மதுரோ, (தேர்தல்கள் அடுத்த மாதம் நடைபெற வுள்ளது) ‘‘வெனிசுலா முதலாளிகள் மீண்டும் இங்கே எப்போதும் திரும்ப முடியாது’’ என்றும், ‘‘சாவேஸூக்கு விசு வாசமாக உள்ள நாங்கள் எங்கள் கட மைகளை என்றென்றும் தொடர்வோம்,  மக்கள் நலத் திட்டங்களில் எதுவுமே திரும்பப் பெறமாட்டாது’’ என்றும், ‘‘மீண்டும் இந்த நாட்டை முதலாளிகள் சூறையாட எங்கள் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்’’ என்றும் சூளுரைத்திருக் கிறார்.  ‘‘சாவேஸூக்கும் மக்களுக்கும் துரோகம் இழைப்பதைவிட சாவது என்பதே மேல்’’ என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.
(தமிழில்: ச.வீரமணி)


No comments: