புதுதில்லியில் நடைபெற்ற உறுதி ஏற்புக் கூட்டத்தில் பிரகாஷ் காரத்
புதுதில்லி, மார்ச் 17-
தோழர் ஹியூகோ சாவேஸ் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற உறுதி
ஏற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
வெனிசூலா அதிபர் தோழர் ஹியூகோ சாவேஸ் மார்ச் 6 அன்று மரணம் அடைந்தார். அவருக்கு
அஞ்சலி செலுத்தும் வகையில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் தலைநகர் புதுதில்லியில்
கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில் அமைந்துள்ள மக்களவைத் தலைவர் அரங்கில் உறுதி ஏற்புக் கூட்டம்
நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத்
தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வெனிசுலாவின் ஜனாதிபதியாக நான்காவது
முறையாக, வரலாற்றுச் சிறப்புமிக்க
முறையில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு, ஆறு மாதங்கள் முடிவதற் குள்ளாகவே புரட்சித் தலைவரான ஹியூ கோ சாவேஸ்
இறந்துவிட்டார். புற்று நோய்க்கு எதிராக 2011 ஜூனிலிருந்தே அவர் போராடிக் கொண்டிருந்தார். ஆயி னும்
இறுதியாக, அவர் 58 வயதாக இருக் கும்போதே, லத்தீன் அமெரிக்க நாடு களில் இடதுசாரிகளின் புதிய அலை
யை ஏற்படுத்தும் சின்னமாக இருந்த அம்மாபெரும் தலைவரின் உயிரை அது பறித்து விட்டது.
அவரது மறைவு வெனி சுலா மற்றும் லத்தீன் அமெரிக்க நாட்டு மக்களை மிகுந்த
வருத்தத்தில் ஆழ்த்தி யுள்ளது. அவரது இழப்பு உலகம் முழுவ தும் உள்ள இடதுசாரி
மற்றும் முற்போக்கு சக் திகளை பெரிதும் பாதித்துள்ளது.சாவேஸ் மிகவும் தேவைப்படக் கூடிய நேரத்தில் இறந்துவிட்டார். 2012 அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் 55 விழுக்காடு பெரும்பான்மையுடன் அவர் வெற்றி பெற்ற பின், 2013 முதல் 2019 வரை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய இருந்த நிலையில் - அவர் இறந்துவிட்டார். உண்மையில் இக்கால கட்டத்தில் அவர் தொடங்கி வைத்த இடதுசாரி நடைமுறைகளை ஒருங்கி ணைத்திடவும், அவர் கேந்திரமான பங் களிப்பினைச் செய்திட்ட லத்தீன் அமெ ரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பை முன்னெடுத்துச் செல்லவும் திட்டமிட்டி ருந்தார். ஆயினும் அது நடக்கவில்லை. ஹியூகோ சாவேஸ் அதிபராக இருந்த கடந்த பதினான்கு ஆண்டு களில் சாதித்தவை உண்மையிலேயே பிரமிக்கத்தக்கவைகளாகும், இவரது சாதனைகள் இரு பரிமானங்களைக் கொண்டவைகளாகும். ஒன்று வெனி சுலா நாட்டிற்குள்ளேயே அவர் மேற் கொண்டவை. மற்றொன்று லத்தீன் அமெ ரிக்க நாடுகள் முழுவதும் மற்றும் பொது வாக அயல்துறைக் கொள்கையில் அவர் மேற்கொண்ட வைகளாகும். நவீன தாராளமயத்திற்கு மாற்றுசாவேஸ் வெனிசுலாவில் நவீன தாராளமயக் கொள்கைக்கு மாற்றுப் பாதையை அமைத்திட முயற்சிகள் மேற் கொண்டார். இதில் அவர் அடைந்த வெற்றி லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள அனைத்து இடதுசாரி சக்திக ளிடமும் அவர் மீதான ஈர்ப்பை அதிகப் படுத்தியது. 1999இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின்பு, சாவேஸ் உண்மையில் மக்க ளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கக் கூடிய விதத்தில் புதிய அரசியலமைப் புச் சட்டத்தை உருவாக்குவதில் முத லில் ஈடுபட்டார்.
2002இலிருந்து அவ ருக்கு எதிராக நடைபெற்ற ராணுவச் சதியை மக்கள் எழுச்சியின் மூலமாக முறியடித்தபின்பு, நாட்டின் எண்ணெய் வளங்கள் மீது தேசிய இறையாண் மையை வலுப்படுத்தும் பணிகளில் இறங்கினார். வெனிசுலாதான் உலகி லேயே அதிக அளவில் எண்ணெய் இருப்பு உள்ள நாடாகும். சாவேஸ் உல கப் பகாசுர நிறுவனமான பிடிவிஎஸ்ஏ என்னும் நிறுவனத்தை அரசின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தார். மேற்கத் திய எண்ணெய் நிறுவனங்களை அரசின் கடும் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் கொண்டு வந்தார். பொதுவாக எண் ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் எல்லாம் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய வங்கிகளின் பெட்ரோ-டாலர்கள் மூல மாகத்தான் ஏற்றுமதிகளைச் செய்திடும். இதனை சாவேஸ் புறக்கணித்தார். இத னைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் டெலிகாம் தொழில்களும் தேசியமயமாக் கப்பட்டன. நிலச்சீர்திருத்தங்கள் அமல்படுத்தப் பட்டன. ஒட்டுமொத்தமாக 30 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் லட்சக்கணக்கான விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப் பட்டன. சாவேஸ் மேற்கொண்ட அடுத்த நட வடிக்கை, எண்ணெய் வருவாய்களை மக்களின் நலத்திட்டங்களுக்குப் பயன் படுத்தியதாகும், சமூக நலத் திட்டங் களில் ஈடுபடுவதற்காக எண்ணற்ற சமூக மிஷன்கள் (மக்கள் குழுக்கள்) அமைக்கப்பட்டன. தென் அமெரிக் காவில் விடுதலைக்காகப் போராடிய ராபின்சன். சக்கர் ஆகியோர் பெயர் களில் எண்ணற்ற மிஷன்கள் அமைக் கப்பட்டன.
இவை மக்களின் எழுத்தறி வின்மையை ஒழிப்பதற்காகவும், கல்வி, சுகாதாரம், உணவு, வீட்டு வசதி ஆகி யவற்றை அளிப்பதற்காகவும் அற்புத மாகச் செயல்பட்டன. இத்தகைய மக்கள் ஆதரவுக் கொள்கைகளின் விளை வுகள் மகத்தானவைகளாக இருந்தன. பொலிவாரியக் குடியரசு வறுமையை பாதியாகக் குறைத்தது. 1999இல் 42.8 விழுக்காடாக இருந்த வறுமை விகிதம் 2011 ல் 26.5 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்தது.70 விழுக்காடு அளவிற்கு மிகவும் அதீதமாக இருந்த வறுமை நிலை. 16.6 விழுக்காடாக வீழ்ச்சியடைந்து பின்னர் 7 விழுக்காடு அளவிற்கு அதேகாலகட் டத்தில் குறைக்கப்பட்டது. எழுத்தறி வின்மை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. 65 ஆயிரமாக இருந்த ஆசிரி யர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்தது.சுகாதார மிஷன்கள் மூலம் நாடு முழு வதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையங் களில் 14 ஆயிரம் கியூபா மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் வருகை தந்து மிகத்தரமான மருத்துவ சிகிச்சையை மக்களுக்கு அளித்தார்கள்.ஐ.நா.வளர்ச்சித் திட்டம் வெளியிட் டுள்ள அறிக்கையின்படி. லத்தீன் அமெ ரிக்க நாடுகளில் 1990 களில் ஏற்றத் தாழ்வில் மிகவும் உயர்ந்த அளவில் இருந்த வெனிசுலா தற்போது மிகவும் குறைவான இடத்திற்கு (2011 ல் வெறும் 0.39 அளவிற்கு) மாறிவிட்டது. மக்கள் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தியதே இவ்வாறு மாபெரும் வகையில் சமூக மாற்றத்தை நிறை வேற்ற முடிந்ததற்கு அடிப்படைக் காரண மாகும். பொலிவாரியப் புரட்சி நடை முறை மூலம் 35 ஆயிரம் மக்கள் கவுன் சில்கள் அமைக்கப்பட்டன. இவை சமூ கத்தின் ஆணிவேர் வரை சென்று செயல் பட்டன. சாவேஸ் கட்சி ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்தார்
. எனவே ஐந்தாவது குடி யரசுக்கான இவ்வியக்கத்தை ஒரு அர சியல் கட்சியாக - ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி என - மாற்றி அமைத்தார். சாவேஸும் அவர் மேற்கொண்ட புரட்சிகர நடவடிக்கைகளும் பெரும் வர்த்தகநிறுவனங்கள், நிலச்சுவான்தார் கள், அதிகார வர்க்கத்தின் மேல்தட்டு வகுப்பினரையும் கொண்ட ஆளும் வர்க் கத்திடமிருந்து தாக்குதல்களையும் உக் கிரமான பகைமையையும் தொடர்ந்து சந் திக்க வேண்டி இருந்தது. இவர்களுக்கு அமெரிக்காவும் அந்நிய மூலதனமும் பக்கபலமாக இருந்தன. இவர்கள் கக்கிய வெறுப்பின் காரணமாகத்தான் சாவேஸ் நாட்டின் ராணுவத்தையே செல்வாக்கு மிக்க மக்கள் படையாக மாற்றி அமைத் தார். உழைக்கும் மக்கள் மற்றும் ராணு வத்தின் ஆதரவுடன், சதிகாரர்கள் புரட்சி கர நடைமுறைகளைப் பலவீனப்படுத்த ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொண்ட நட வடிக்கைகள் அனைத்தையும் முறியடித்தார். நாட்டிற்கு வெளியே சாவேஸ் கியூ பாவுடன் மிகவும் நெருக்கமாகவும் வலு வாகவும் உறவுகளை ஏற்படுத்தினார். பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகர சித்தாந் தத்தை அவரும் ஆரத் தழுவிக்கொண் டார். விரைவாகவே அதன் வெற்றிகர மான நடைமுறையாளராக மாறினார். வெனிசுலாவில் அவரது தலைமை லத் தீன் அமெரிக்காவில் இடதுசாரிகளின் முன்னேற்றத்திற்கு உதவியது. 1998இல் அவர் முதன்முதலாக வெற்றிபெற்ற பின்பு, பிரேசில், பொலிவியா, ஈக்வடார், எல்சால்வடார், ஹோண்டுராஸ், நிகர குவா முதலான நாடுகளிலும் இடதுசாரி களின் வெற்றிகள் தொடர்ந்தன. லத்தீன் அமெரிக்காவை ஒன்றுபடுத்துதல்சாவேஸ் ஸ்பானிஷ் ஆட்சியி லிருந்து தென் அமெரிக்காவை விடு தலை செய்த சைமன் பொலிவாரின் தொலைநோக்குப் பார்வையுடன், ஏகாதி பத்தியத்தின் ஆதிக்கத்திலிருந்து விடு தலை பெறக்கூடிய விதத்தில் , ஐக்கிய லத்தீன் அமெரிக்காவை உருவாக்க ஒரு திட்டத்தை - பொலிவாரிய தொலை நோக்குத் திட்டத்தை - முன்மொழிந் தார். வெனிசுலா, கியூபா, பொலிவியா ஆகிய கேந்திரமான நாடுகளுடன் எட்டு நாடுகளை உள்ளடக்கிய அமெரிக் காவில் உள்ள பொலிவாரிய மக்கள் கூட் டணி என்னும் அல்பா அமைப்பை உரு வாக்குவதில் அவர்தான் முக்கிய கருவி யாகும். இதனை அடுத்து அவர் தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் என் னும் அமைப்பை உருவாக்கினார்.
கடை சியாக, அவரது மாபெரும் நடவடிக்கை 2011 டிசம்பரில் காரகசில் ‘செலாக்’ அமைப்பை உருவாக்கியதாகும். இத் தகைய அமைப்புகள் அனைத்தும் வட அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவை யும், கனடாவையும் தனியே ஒதுக்கி வைத்தன. இத்தகைய மண்டல அளவிலான ஒத்துழைப்பின் விளைவாகத்தான் பேங்க் ஆஃப் தி சவுத், டெலாசர் டெலி விஷன் நிலையம், சக்கர் என்னும் கரன்சி என அனைத்தும் உருவாயின. ஹைதி போன்ற ஏழை நாடுகளுக்கு எண்ணெய் வழங்க வேண்டும் என்பதற் காக பெட்ரோகேரிப் என்னும் மிக மலி வான நிதிக்கொள்கையை சாவேஸ் ஏற் படுத்தியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலானது, சாவேஸ் கியூபாவுடன் வலுவான கூட்ட ணியை உருவாக்கிக் கொண்டிருந்த தாகும். இது சோவியத் யூனியன் வீழ்ச் சிக்குப் பின்னர் மிகவும் சிரமமான கால கட்டத்தில் இருந்து கியூபா தன் இடர் களைக் களைந்து முன்னேறிச்செல்ல உதவியது. பிடல், பிப்ரவரி 17 அன்று சாவேஸூக்கு எழுதிய கடிதத்தில், ‘‘சோசலிச முகாம் நிர்மூலமான, சோ வியத் யூனியன் தகர்ந்த சமயத்தில், ஏகாதிபத்தியம் தன்னுடைய கூர்மை யான கத்தியுடன் கியூபப் புரட்சியை ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்க முயன்ற நேரத்தில், வெனிசுலா, பிளவுபட்ட அமெ ரிக்காவின் ஒரு மிகச்சிறிய நாடாக இருந்தபோதிலும்கூட, அதனைத் தடுத்திட வல்லமை படைத்ததாக இருந்தது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். புரட்சிகரமான தொலைநோக்குப் பார்வை இவ்வாறு சாவேஸ் புரட்சிகரமான சர்வதேச தொலைநோக்குப் பார்வை யைக் கொண்டிருந்தார். அவரது அயல் துறைக் கொள்கை ஒரு மையமான அம் சத்தை வழிகாட்டுதலாகக் கொண்டிருந் தது. அதாவது, ஏகாதிபத்திய மேலாதிக் கத்தை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதையும், மூன்றாம் உலக நாடு களின் இறையாண்மையை எப்படிப் பாதுகாப்பது என்பதையும் அது அடிப் படையாகக் கொண்டிருந்தது. அப்போது தான் மூன்றாம் உலக நாடுகள் தங்க ளின் சொந்த சுயமான அதிகாரத்தைச் செலுத்திட முடியும்.நான், 2004 டிசம்பரில் காரகசில் சாவேஸை சந்தித்திருக்கிறேன். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அச்சந்திப் பில், தெற்கு - தெற்கு ஒத்துழைப்பு குறித்த அவரது தொலைநோக்குப் பார்வை, அணிசேரா இயக்கத்தை எப் படி மீண்டும் புனரமைப்பது, சோசலிசம் குறித்த அவரது சிந்தனைகள் அனைத் தையும் வெளிப்படுத்தினார். 2005இல் இந்தியாவிற்கு வரவிருந்த அவரது பய ணம் குறித்தும் அவர் என்னுடன் விவா தித்தார். அப்போது கொல்கத்தா செல்ல வேண்டுமென்கிற அவரது பேராவலை யும் அவர் வெளிப்படுத்தினார். 21ஆம் நூற்றாண்டில் புதிய அத்தி யாயத்தை உருவாக்குவதில் சாவேஸ் அளவிற்கு உலகில் வேறெந்தத் தலை வரும் ஈடுபட்டதில்லை.வெனிசுலாவில் உள்ள இடதுசாரி மற்றும் செல்வாக்கு படைத்த சக்திகள் ஹியூகோ சாவேஸ் மேற்கொண்ட பாதையை முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளன. வரவிருக்கும் காலங்களில் எண்ணற்ற சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக் கும். நம்முடைய ஒருமைப்பாடும் ஆதரவும் அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எல் லாக் காலத்திலும் தொடரும்.
இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.
கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி,
ஏ.பி. பரதன்,
து.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, ஏ.கே. பத்மனாபன், அகில இந்திய பார்வர்ட் பிளாக்
சார்பில் வரதராஜன், புரட்சி சோசலிஸ்ட் கட்சி சார்பில் அபனி ராய், வெனிசூலா நாட்டின் இந்தியத் தூதர்,
கியூபா நாட்டின் இந்தியத்
தூதர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றார்கள்.
(ச.வீரமணி)
No comments:
Post a Comment