Monday, August 4, 2008

போராட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம்--பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்



ஐமுகூ அரசாங்கம், சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களை, மிகவும் வெட்கங்கெட்ட குதிரைபேரத்தின் மூலமாகக் கட்சித் தாவல் நடவடிக்கைகளில் ஈடுபடவைத்து தப் பிப்பிழைத்ததை அடுத்து, தன்னுடைய முதல் தாக்குதலை தொழிலாளர் வர்க்கத் தின் மீது ஏவியுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் வியர்வையால் கொஞ்சம் கொஞ்ச மாக சேர்த்து வைத்திருக்கும் ஊழியர் வைப்பு நிதித் தொகையினை அப்படியே அள்ளி தனியாரிடம் தாரை வார்த்துள்ளது. ஊழி யர் வைப்பு நிதியத்திலிருந்த கிட்டத்தட்ட மூன்று லட்சம் கோடி ரூபாய் தொகை இனிவருங்காலங்களில் தனியார் நிதியங் களின் மேலாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்திடும். இவர்கள் இதனை எவ்வாறு நிர்வகிக்கப்போகிறார்களோ, அதற்கேற்ற வகையில் தொழிலாளர்களுக்கு இதிலி ருந்து ஏதேனும் கிடைத்திடலாம். ஆனால் என்ன கிடைக்கும், எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்தெல்லாம் உறுதிமொழி எதையும் அரசு தந்திடவில்லை. ஊழியர் வைப்பு நிதிக்கு இதுநாள்வரை இருந்து வந்த உத்தரவாதம் - உழைக்கும் வர்க்கம் தங்கள் கடும் போராட்டத்தால் ஈட்டியிருந்த வெற்றி - இவ்வாறு கைகழுவப்பட்டிருக் கிறது.

தங்கள்ஆட்சியைத் தூக்கிப் பிடித் துள்ள பெருமுதலாளிகளின் லாப வேட் டைக்காக இதுபோன்று மேலும் பல மக் கள் விரோத நடவடிக்கைகளை ஐமுகூ அரசாங்கம் வரவிருக்கும் காலங்களில் எடுக்க இருக்கிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்று கூறி ரிசர்வ் வங்கி அறி வித்துள்ள நடவடிக்கைகளும் மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்ற உள்ளன. ஜூலை 29 அன்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள கடன் கொள்கையானது, வட்டி வீதங்களை அதி கரித்துள்ளது. இதன்மூலம் பணப்புழக்கத் தைக் கட்டுப்படுத்தப் போகிறார்களாம். இதனால் மக்கள் பொருள் கள் வாங்குதல் மீதான தேவை குறைந்து, அதன் மூல மாக பணவீக்கத்திற்கான நிர்ப்பந்தம் குறைந்துவிடுமாம்.ஆனால் இது ஒரு தவறான கருத்தா கும். இப்போது விண்ணைமுட்டியுள்ள விலைவாசி உயர்வினை இவ்வாறு தவ றான முறையில் நடவடிக்கைகள் எடுப்ப தன்மூலம் எல்லாம் சரிசெய்துவிட முடி யாது.

மக்கள் கையில் பணப்புழக்கம் அதி கம் இருப்பதே பணவீக்கத்திற்குக் கார ணம் என்று சொல்வதைப்போன்று அபத் தம் வேறெதுவும் இல்லை. போதுமான அளவில் பொருள்கள் சந்தைக்கு வராமலி ருந்தால் அதன் மூலமாகவும் விலைகள் உயரும். ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது, நாட்டில் சுமார் 78 சதவீதம் பேர் இருக்கக்கூடிய ஒரு சூழ்நி லையில், அரசின் இத்தகைய விளக்கங்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கின்றன.தற்போதைய விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வாலும் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வாலும் ஏற்பட்டவைகளாகும். இவை பணப்புழக்கத்தால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றன.

உலக அளவில் உணவுப் பொருள்கள் மற் றும் எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவில் உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம், அத்தியாவசியப் பொருள்களின் மீது ஊக வர்த்தகத்தை அனுமதித்ததேயாகும். இடதுசாரிக் கட்சி கள் விடாது அளித்துவந்த நிர்ப்பந்தத்தின் காரணமாக ஐமுகூ அரசாங்கம் வேண்டா வெறுப்பாக ஒருசில அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஊக வர்த்தகத்தை மட்டும் தடை செய்திருக்கிறதே தவிர, நாடாளுமன்ற நிலைக்குழு கூறியது போல பட்டியலில் உள்ள 25 அத்தியாவ சியப் பொருள்களுக்கும் தடை விதித்திட வில்லை.இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்யின் விலையைக் கட்டுப்ப டுத்துவதற்காக (குறைப்பதற்காக அல்ல) சுங்க வரி தளர்த்தப்பட்டிருக்கிறது. ஆயி னும் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறதே, ஏன்? தனிப்பட்ட வர்த்தகர்களால் இறக்குமதி செய்யப்படு பவை எங்கே போகின்றன? விலைகளைக் குறைப்பதற்காக அவைகள் சந்தைக்கு வருவதில்லை. விலைகள் மேலும் உயரக் கூடும் என எதிர்பார்த்து வர்த்தகர்களால் அவை பதுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன.உணவு தானியங்களின் உற்பத்தி அதி கரித்திருக்கிறது.

அரசுத்தரப்பில் உணவு தானியங்களின் கொள்முதலும் அதிகரித் திருக்கின்றன. ஆயினும் அவற்றின் விலைகள் உயர்ந்துகொண்டே இருக்கின் றன. இதற்குக் காரணம் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரித்தது காரணமல்ல, மாறாக இப்பொருள்களின் மீது தங்கு தடையற்ற முறையில் ஊக வர்த்தகம் தொடர்ந்து அனுமதிக்கப்படுவதே காரண மாகும். இதனைத் தடை செய்யாமல், விலைவாசி உயர்வைத் தடுத்து நிறுத்த முடியாது. விலைவாசியைக் குறைத்திட அரசு மேற்கொள்ள வேண்டிய முதல் நடவடிக்கை இதுவாகும்.சர்வதேச சந்தையில், கடந்த சில வாரங்களாக, எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 145 அமெரிக்க டாலரிலிருந்து 125 அமெரிக்க டாலராகக் குறைந்திருக்கி றது. இதனையடுத்து நம் நாட்டிலும் எண் ணெய் விலை உடனடியாக குறைக்கப்பட வேண்டும். ஆனால் ஐமுகூ அரசாங்கத் தின் சிந்தனையெல்லாம் எண்ணெய் கம் பெனிகளுக்கு லாபத்தை எப்படியெல் லாம் பெருக்கிடலாம் என்று இருப்பதாகத் தான் தோன்றுகிறதே தவிர, மக்களைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில் லை.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்ததன் விளைவாக, எவ் வித முயற்சியும் இல்லாமலேயே, இந்தி யாவில் உள்ள தனியார் எண்ணெய் கம்பெ னிகள் அடைந்திட்ட கொள்ளை லாபத் திற்கு வரி (றiனேகயடட யீசடிகவை வயஒ) விதிக்கக் கோரினால் மறுக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் தேசந்தழுவிய அளவில் நடத்திய எதிர்ப்பியக்கங்களைக் கண்டுகொள்ளாமல், ஐமுகூ அரசாங்க மானது பொதுத்துறை எண்ணெய்க் கம் பெனிகளின் ஆரோக்கியமான வளர்ச் சிக்கு விலை உயர்வு தேவைதான் என்று வாதிடுகிறது. ஜூலை 28 அன்று எண் ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணை யம் (டீசூழுஊ) நடப்பாண்டின் முதல் காலாண் டில் தங்கள் நிறுவனத்தின் நிகர லாபம் 44 சதவீதமாகப் பாய்ந்திருக்கிறது என்று அறிவித்திருக்கிறது. சுமார் 6637 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் எகிறியிருக்கிறது. இதில் ஒரு சிறு துளியளவு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தி, நாட்டு மக்களைக் காப்பாற் றக் கூடாதா? இவ்வாறு செய்வதன் மூல மாக பணவீக்கமும் கட்டுப்படுத்தப்படும்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை களைக் குறைப்பதென்பது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட மேற்கொள்ள வேண்டிய இரண்டாவது நடவடிக்கையாகும்.மூன்றாவதாக, உணவுதானியங்களின் கொள்முதல் மேம்பட்டிருப்பதை அடுத்து, பொது விநியோக முறையையும் உடனடி யாக விரிவுபடுத்திட வேண்டும்.இவற்றையெல்லாம் செய்வதற்குப் பதிலாக, அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் மேற்கண்டவாறு பொருளாதார நடவடிக் கைகளை எடுத்துள்ளன. இவற்றால் பண வீக்கத்தைக் கொஞ்சமும் குறைத்திட முடியாது. அதே சமயத்தில் பொருளாதார வளர்ச்சியை இவ்வாறு இழுத்துப்பிடிப்ப தன் மூலமாக எதிர்விளைவே ஏற்படும். தற்போதுள்ள பணவீக்கத்தின் காரண மாக இடுபொருட்களின் விலை உயர்வா லும், வங்கிகள் கடன்களுக்கான வட்டி வீதத்தை அதிகரித்திருப்பதன் காரணமா கவும் உற்பத்திச் செலவினம் மேலும் அதிகமாகும். இதனால் நுகர்வோர் மேலும் பாதிக்கப்பட்டு பணவீக்கம் மேலும் உய ரும். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் நடக்கப்போவது இதுவேயாகும்.

இறுதியாக, கோடிக்கணக்கான மத் தியதர வர்க்கக் குடும்பங்கள் வங்கிகளின் மூலமாக வீடுகள் கட்டுவதற்காகவும், கார்கள் மற்றும் பல்வேறு நுகர்வுப் பொருள்களுக்காகவும் கடன்கள் வாங்கி யிருக்கின்றன. இப்போது வங்கிகள் வட்டி வீதங்களை உயர்த்தி இருப்பதன் காரண மாக, கணிசமான அளவிற்குக் கூடுதலாக தங்கள் மாதாந்திர தவணைகளைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. இது அவர்களின் வாழ்க்கையில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தாங்கள் பிற நுகர்வுப் பொருள்களுக்குச் செலுத்தி வந்த தொகையையும் பாதிக்கும். இதன் தொடர்விளைவாக ஒட்டுமொத்த பொரு ளாதார வளர்ச்சியே தேக்க நிலைக்குத் தள்ளப்படும்.இவ்வாறாக, பணவீக்கத்தைக் கட்டுப் படுத்திடுவதற்காக, சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாயை உறிஞ்சிட இலக்கு நிர்ண யித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இத் தகு நடவடிக்கைகள், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாது, மாறாக எதிர்விளை வையே உண்டாக்கும். அதுமட்டுமல்ல, தற்போது விலைவாசி உயர்வால் விழிபி துங்கியுள்ள மக்கள் மீது மேலும் சுமை களை ஏற்றிடும். இவ்வாறு அரசாங்கம் நம் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்குதல் களை முறியடித்திட, வரவிருக்கும் காலங் களில் வலுவான போராட்டங்களை நடத் திட தயாராவோம்.

தமிழில்: ச.வீரமணி

No comments: