தோழர் சுர்ஜித் இன்று நம்முடன் இல்லை.
இதனை நான் எழுதத் தொடங்கும் போது, அவருடன் பழகிய காலத்தில் ஏற் பட்ட நினைவுகள் அலை அலையாக வந்து என்னைத் திக்குமுக்காடச் செய்கின்றன. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், 1973இல் நான் அவரை முதல்முறை யாகச் சந்தித்தேன். அவருடைய வாழ்வும் பணியும் குறித்து ஒரு முழுமையான மதிப் பீடு நிச்சயமாக வரவிருக்கும் காலங் களில் மேற்கொள்ளப்படும். ஆனால் இப் போது இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக் கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர், விவசாய இயக்கத்தின் தலைவர், மார்க்சியம் - லெனினியத்தின் புரட்சிகர சாராம்சத்தை உயர்த்திப்பிடித்து அதற்கெ திராக இயக்கத்தில் முன்வந்த அனைத்து விதமான திரிபுகளுக்கும் எதிராக விடாப் பிடியாகப் போராடியவர் இயக்கத்தின் உத்திகளைத் தேர்ந்தெடுப்பதில் அற்புத மான தலைவர் என்று சுருக்கமாகச் சொ ல்லலாம். பிரச்சனைகள் மோதும்போது எப்போதும் மிக விரைவாகத் தீர்வினைக் கண்டிடுவார். அவருடைய அரசியல் எதி ரிகளை விட எப்போதும் இரண்டு அடி முன்னால்தான் சென்றுகொண்டிருப்பார்.நான் 1984இல் இந்திய மாணவர் சங் கத்தின் தலைவர் பொறுப்பு வகித்ததைத் தொடர்ந்து மத்தியக் குழுவிற்கு வந்து, கட்சியின் மையத்தில் பணிபுரியத் தொடங்கியபோது, அவருக்கு உதவும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. அப் போது சுர்ஜித் கட்சியில் சர்வதேசத் துறைக்குப் பொறுப்பாக இருந்தார். அதில் அவருடன் இணைந்து பணியாற்றிய சம யத்தில் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் கட்சிகள் குறித்து எனக்குக் கிடைத்த அனுபவங்கள் ஏராளம். ஒரு சம்பவம் இன்றும் என் மனதில் நிலைத்து நிற்கிறது. 1987இல் அக்டோபர் புரட்சியின் 70ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, அப்போது கட்சியின் பொதுச் செயலாள ராக இருந்த தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரி பாத், சுர்ஜித் ஆகியோருடன் நானும் மாஸ் கோ சென்றிருந்தேன். அப்போது மிகயீல் கோர்பச்சேவ் சோவியத் யூனியன் தொடர் பாக முன்வைத்த ஆய்வுக்குறிப்பு (thesis) குறித்து, அவரிடம் நேரிடையாகவே, ‘‘இது தவறான ஒன்று’’ என்றும், ‘‘இது சோவி யத் யூனியனைத் தகர்த்து விடும், கம்யூ னிஸ்ட் இயக்கத்தையே சர்வதேச அள வில் தடம்புரளச் செய்துவிடும்’’ என்றும் தயவுதாட்சண்யமின்றி கூறினார். அதன் பின்னாட்களில் அவர் மதிப்பீடு மிகவும் சரியென மெய்ப்பிக்கப்பட்டது. சோவியத் தகர்வு குறித்து சுர்ஜித் எப்போதும் வருத் தத்துடன் இருந்தார்.இந்தியாவில், அவசரநிலைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இனி நம் நாட்டில் மத்தியில் ஒரு கட்சி ஆட்சி என் பது முடிவடைந்துவிட்டது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உணர்ந் தது. அமையவிருக்கும் கூட்டணியில், இடதுசாரிகளுக்குள்ள நிலை குறித்தும் அது ஆற்றவேண்டிய முக்கியமான பங்கு குறித்தும் இந்திய அரசியலை முன்னெ டுத்துச் செல்வதில் உதவ வேண்டிய அம் சங்கள் குறித்தும் ஆய்வு செய்தது. இந்தி யாவில் கம்யூனிசத்தின் எதிர்காலம் என் பது இந்தியாவின் எதிர்காலத்தை ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக நிலைநிறுத்துவதுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்திருக்கிறது என்கிற ஆழமான முடிவுக்கு சுர்ஜித் வந் தார். அனைத்துவிதமான சேர்மானங் களையும் இந்த குறிக்கோளை அடிப்ப டையாகக் கொண்டே உருவாக்குவதற் கும், இதன்மூலம் இந்தியாவின் பன்முகத் தன்மையை வலுப்படுத்திப் பாதுகாப்ப தற்கும் அவர் உதவினார். வி.பி.சிங் அர சாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவ ளிப்பதாக தாமாகவே முன்வந்தார். இவ் வாறு சுர்ஜித் மேற்கொண்ட உத்தியினால், பாஜக-வும் ஆட்சியில் பங்கெடுக்காமல், அதேமாதிரி முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானது. ஐக்கிய முன் னணியில் (1996இல்) அங்கம் வகித்த மதச் சார்பற்ற கட்சிகள் அதன்பின் தேர்த லுக்குப்பின்னும் தொடர்ந்து ஒன்றாக இருந்திடும் என்று அவர் நம்பினார். இதன் காரணமாகத்தான் பெரிய கட்சி என்ற முறை யில் பாஜக ஆட்சி அமைக்க அழைக்கப் பட்டபோதும், 13 நாட்களுக்கு மேல் அத னால் ஆட்சியில் நீடிக்க முடியாமல் ஆட் சியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜோதிபாசு பிரதமர் ஆக வேண்டும் என்கிற யோசனையை அவர் முழுமை யாக ஆதரித்துநின்ற போதிலும், அதன் பின்னர் கட்சி அவர்களது யோசனையை நிராகரித்தபோது, கட்சியின் முடிவுக்குத் தோழர்கள் சுர்ஜித்தும் ஜோதிபாசுவும் கட் டுப்பட்டு நின்று கட்சியின் முடிவை முக மலர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதானது அவர்களது அளப்பரிய மன வலிமையி னையும் கம்யூனிஸ்ட் கட்சி நெறியினை யும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தன. ஐக்கிய முன்னணியின் வழிநடத்தும் குழுவில் சுர்ஜித்துடன் இணைந்து நானும் செயல்பட வேண்டும் என்று கட்சி பணித்ததன் அடிப்படையில் நான் அவரு டன் இருந்த சமயத்தில் அவர் மற்ற கட்சி களுடன் கலந்து பேசி அவர்களை வென் றெடுக்க மேற்கொண்ட நடவடிக்கை களை உன்னிப்பாகக் கவனித்து வந் தேன். அப்போது அவர் எந்த ஒரு சமயத் திலும் நாட்டின் மதச்சார்பற்ற மாண்பி னைப் பாதுகாத்தல் என்கிற அடிப்படைக் குறிக்கோளிலிருந்து கொஞ்சம்கூட வழு வாது செயல்பட்டதை என்னால் பார்க்க முடிந்தது.பாகிஸ்தான் - இந்தியா பிளவுண்ட சமயத்தில் நடைபெற்ற கசப்பான அனு பவங்களையெல்லாம் அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார். பாகிஸ்தான் பிரி யாது நாடு ஒன்றாக இருந்த தன்னுடைய இளமைக்காலத்தில் அவர் அமிர்தசரஸி லிருந்து லாகூருக்கு சைக்கிளில் செல் லும் வழக்கத்தை அடிக்கடி என்னிடம் நினைவுகூர்ந்த அவர், அதுபோல் மீண் டும் ஒருமுறை சைக்கிளில் செல்ல வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்பார். இறுதியாக, அவர் இறப்பதற்கு ஒருசில ஆண்டுகளுக்கு முன்புதான், அவர் கடும்முயற்சிகள் மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றார். (அப்போது அவர் அதிபர் முஷாரப்பால் அற்புதமாக வர வேற்று சிறப்பிக்கப்பட்டார்.) 1947இல் நாடு பிரிவினை அடைந்தபோது நடை பெற்ற மதக்கலவரங்களில் எண்ணற் றோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் அவர் மனதில் என்றென்றும் வலியினை ஏற்ப டுத்திக்கொண்டிருந்தது. இவ்வாறு மத வெறியின் கோரத்தாண்டவத்தை நேரடி யாக அனுபவித்தவர் என்ற முறையில் தான் அவர் எப்போதும் ‘மதச்சார்பின் மை’ அரசியலை உயர்த்திப்பிடித்திட வாழ்நாள் முழுவதும் ஓய்வுஒழிச்சல் இல் லாது பாடுபட்டார். மதவெறிச் சம்பவங் களை நேரில் பார்த்து அதன் துன்பதுயரங் களைக் காணாது வளர்ந்துள்ள இளம் தலைமுறைக்கு அதன் பாதிப்புகள் அவ் வளவாகத் தெரிய வாய்ப்பில்லை. அந்த வகையில் அவர்கள் அதிர்ஷ்டக்காரர் களேயாவார்கள்.1980களில் காலிஸ்தான் பிரிவினை வாதிகள் மற்றும் பயங்கரவாதத்திற்கெதி ரான போராட்டத்தில் கட்சியை எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி நடத்திச் சென் றார். இப்போராட்டத்தில் கட்சி 200க்கும் மேற்பட்ட முன்னணித் தோழர்களையும், பல நூற்றுக்கணக்கான ஆதரவாளர்க ளையும் இழந்தபோதிலும் கட்சிக்கு உத் வேகத்தையும் உறுதியையும் அளித்து முன்னெடுத்துச் சென்றார். சுர்ஜித்தின் மாபெரும் வலிமை என்பது ஓர் உண்மை யான மார்க்சிஸ்ட் என்ற முறையில் அவ ரது திறமைதான். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அவற்றின் துல்லியமான நிலைமைகளை ஆய்வு செய்து சரியாக மதிப்பீடு செய்துவிடுவார், எந்தக் காலத் திலும் எப்போதும் எதற்கும் அவர் அதிர்ச் சியடைந்ததே இல்லை.அவர் கட்சியில் எந்த நிலையில் இருந்தபோதிலும், எவ்வளவு உயர் பொறுப்புகளை வகித்தபோதிலும், சுர்ஜித் சாராம்சத்தில் ஓர் எளிய விவசாயி யாகத்தான் வாழ்ந்தார். அவர் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில்தான் பிறந்தார். கட்சி மாநாடுகளுக்காக மாஸ்கோ மற் றும் பெய்ஜிங் சென்றிருந்தபோதெல்லாம், காலையில் அவர் என் அறைக்கதவைத் தட்டி, ‘‘சீத்தாராம், தேநீர் தயார்’’ என்று அழைத்திடுவார். குளியலறை குழாயில் வரும் வெந்நீரைப் பயன்படுத்தி, தேநீர் தயார் செய்து வைத்திருப்பார். ஒருதடவை நான் காலணி வாங்க வேண்டியிருந்தது. அப் போது அவர், ‘‘வீட்டிற்குப்போனதும் சொல், என்னிடம் இன்னொரு ஜோடி கூடுத லாக இருக்கிறது. அதனை நீ பயன்படுத் திக்கொள்’’ என்றார். கட்சியின் முழுநேர ஊழியர்கள்பால் அவர் காட்டும் அன்பு அற்புதமானது, எவ ரையும் நெகிழ வைத்துவிடும். எவரேனும் தங்கள் வாழ்க்கையைத் தள்ளுவதற்கு காசில்லாமல் சிரமப்படுவதை அவர் கண்ணுற்றால், அவர் கட்டுரை எழுதி (முதலாளித்துவப் பத்திரிகைகளுக்கு) அதற்காக வரும் காசோலையை அப்படியே காசின்றி சிரமப்படும் தோழருக்குத் தந்து விடுவார். ஆரம்பக் கல்வியை முறையாகப் படிப் பதற்கான வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட் டிருந்தபோதிலும், அவர் படிப்பதையோ எழுதுவதையோ விடவில்லை. தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். அவர் தன் கட் டுரைகளுக்குப் பயன்படுத்திய புனை பெயர்தான் ‘சுர்ஜித்’. அவர் இயற்பெயர் என்பது வெறும் ஹர்கிசன் சிங் மட்டுமே. அவர் தனது இளமைக் காலத்தின் நுழைவாயிலில் இருந்தபோதே மூவண் ணக் கொடியை ஏற்றியதற்காகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டு காலம் சிறைக் கம்பிகளுக்குப் பின் கழித்தார். விடுதலையானபின்னும் பல ஆண்டு காலம் தலைமறைவாக இருந்து பிரிட்டி ஷாருக்கு எதிராகப் போராடிக்கொண்டி ருந்தார். பிரிட்டிஷ் இந்தியாவில் அவருக்கு திரு மணம் ஏற்பாடாகியிருப்பதை அறிந்து காவல்துறையினர் அவரைக் கைது செய்வதற்காக வந்திருந்தனர். திரு மணம் முடிந்தவுடனேயே அவரைக் கைது செய்து தனிமைச் சிறையில் அடைத்து விட்டனர். பின்னர் எட்டாண்டுகள் கழித்து அவர் திரும்பியபோது அவருடைய மனைவி யார் என்று அவருக்குச் சுட்டிக்காட்ட வேண்டியதாயிருந்தது. பிரிதம் கவுர் இன்பத்தையும் துன்பத்தையும் சமமான அளவிலேயே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ள ஓர் அற்புதமான மனைவியாக அவ ருக்கு விளங்கினார். அதன்பின் அவர் தன் வாழ்நாள் முழுவதும் அவருடைய லட்சியத் திற்கு உறுதுணையாக இருந்து வந்தார். மிக உன்னதமான உயர்ந்த எண்ணங் களை சுர்ஜித் கொண்டிருந்தாலும், அடிப் படையில் மிகவும் எளிமையானவர். இந் தியாவின் சிறப்பே அதன் பன்முகத்தன் மைதான் என்பதை அடிக்கடி அவர் கூறு வார். எனவேதான், இத்தகைய பல்வேறு பட்ட மற்றும் முற்போக்கான யதார்த்தத் தைப் பிரதிபலிக்கின்ற அனைத்து அரசி யல் கூட்டணிகளையும் ஒருசேர உரு வாக்குவது என்பதும் சாத்தியமே என்று கூறுவார். 2004 பொதுத் தேர்தல் முடிவு கள் அவருடைய இந்த நம்பிக்கையை சற்றே அசைத்தது என்றாலும், அதன்பின் ஐமுகூ - இடதுசாரிக் கூட்டணி அவரது நம்பிக்கையை மீண்டும் துளிர்விட வைத்தது.தோழர் சுர்ஜித்தின் இறுதிப் பயணத் திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேளையில் என் மனதில் ஓடும் சிந்த னைகளில் இவை சிலவாகும். அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கும் இடதுசாரி இயக்கத்திற்கும் மட்டும் இழப்பல்ல, இந்திய அரசியலுக்கும் ஒட்டுமொத்த இழப்பாகும்.தோழர் சுர்ஜித் நீடூழி வாழ்க!
தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment