Saturday, August 4, 2018

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்-ஜனநாயகத்திற்கு விரோதமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எதிர்ப்பு


நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்-ஜனநாயகத்திற்கு விரோதமானது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எதிர்ப்பு
புதுதில்லி, ஆக. 4-
நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரேசமயத்தில் தேர்தல் என்கிற பாஜகவின் முயற்சி ஜனநாயக விரோதமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 3, 4 தேதிகளில் புதுதில்லியில், மத்தியக்குழு அலுவலகமான .கே.கோபாலன் பவனில் நடைபெற் றது. அதனைத்தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பினராயி மீதான தாக்குதல் முயற்சிக்கு கண்டனம்

புதுதில்லியில் கேரளா ஹவுஸ் வளாகத்திற்குள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும்கேரள முதல்வருமான பினராயி விஜயனைத் தாக்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறதுஇத்தகைய நிகழ்வுஎப்படி நிகழ முடியும் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.


விவசாயிகள்-தொழிலாளர்கள் கிளர்ச்சிகளுக்கு ஆதரவு
2018 ஆகஸ்ட் 9 அன்று நடைபெறவுள்ள விவசாயிகள்தொழிலாளர்கள் சிறை நிரப்பும் போராட்டத்திற்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ஆதரவினை அரசியல் தலைமைக்குழு மீண்டும் தெரிவித்துக்கொள்கிறது. விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளுடன், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் அனைத்துவிதமான கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்திடவேண்டும், அனைத்து விவசாய விளைபொருள்களுக்கும் உற்பத்திச்செலவினத்துடன் ஒன்றரை மடங்குவிலை வைத்து, குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிப்பதற்கு சட்டரீதியான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும், உழுபவர்களின் பெயர்களிலேயே நில உரிமையை உடனடியாகஅளித்திட வேண்டும், வன உரிமைகள்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்,அனைத்து விவசாயத் தொழிலாளர்கள், ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஐயாயிரம் ரூபாய் அளித்திட வேண்டும் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் இன்சூரன்ஸ் திட்டம் அமல் படுத்தப்பட வேண்டும் என்பவைகள் முக்கிய கோரிக்கைகளாகும்.2018 செப்டம்பர் 5 அன்று புதுதில்லியில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்கும் மாபெரும் போராட்டத்திற்கு அரசியல் தலைமைக்குழு தனது ஆதரவினை தெரிவித்துக்கொள்கிறது. தில்லியில் நடைபெறும் இந்தப் போராட்டம், வேலை வாய்ப்புகளை அதிகரித்திட வலியுறுத்தியும், வேலை வாய்ப்புகளில் முன்னேற்றத்தைக் கொண்டுவரவும், சிறந்ததொரு வாழ்க்கை மற்றும் சிறந்ததொரு எதிர்காலத்தைத் தங்களுடைய சந்ததியினருக்கு உருவாக்குவதை வலியுறுத்தியும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், மற்றும் உழைக்கும் மக்களால் நடத்தப்படும் மாபெரும் இயக்கமாகும்.
வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்குக!
மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்றதன் விளைவாக ஏற்பட்ட நிர்ப்பந்தத்தின்கீழ் தலித்துகள்/பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்ஷரத்துக்களை நீர்த்துப் போகச்செய்திடும் விதத்தில் உச்சநீதிமன்றம்அளித்த தீர்ப்பினை செல்லாததாக்கும் விதத்தில் ஒரு சட்டமுன் வடிவை மத்திய அமைச்சரவை கொண்டுவர தாமதமாகவேனும் முடிவெடுத்திருப்பதை அரசியல் தலைமைக்குழு ஆராய்ந்தது. எனினும், இது போதுமானதல்ல.இச்சட்டத்தை, எதிர்காலத்தில் தவறான முறையில் வியாக்கியானம் செய்வதற்கோ அல்லதுநீர்த்துப் போவதைத் தடை செய்வதற்கோ இடமளிக்காதவிதத்தில் இதன் ஷரத்துக்களைப் பாதுகாத்திட வேண்டியது அவசியமாகும். அதற்கு இச்சட்டத்தை அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையின் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.இந்தப் பிரச்சனை மீது பல்வேறுஅமைப்புகள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு தன் முழுமையான ஆதரவினை அரசியல் தலைமைக்குழு தெரிவிக்கும் அதே சமயத்தில், இப்பிரச்சனை காரணமாக ஏப்ரல் 2 அன்று நடைபெற்ற பந்த்துடன் சம்பந்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோருகிறது. அன்றைய தினம்தலித்துகளுக்கு எதிராக வன்முறைவெறியாட்டங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்தியர் எவருக்கும் குடியுரிமை மறுக்கப்படக்கூடாது
அசாமில் வரைவு குடிமக்கள்தேசியப் பதிவேடு வெளியிடப்பட்டதைத்தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகளை அரசியல் தலைமைக்குழு ஆய்வு செய்தது. பாஜக தலைவர், 40 லட்சம் மக்கள் விடுபட்டிருப்பது தொடர்பாக அவர்களைசட்டவிரோத புலம்பெயர்ந்தோர்என்கிறவிதத்தில் திசைதிருப்பும்(misleading)அறிக்கையை வெளியிட்டமைக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. இத்தகைய பொறுப்பற்ற அறிக்கைகள், ஏற்கனவே கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு வெந்த புண்ணில்வேல் பாய்ச்சியது போன்றதாகும். அவர்களின் அச்சத்தையும், வேதனையையும் மேலும் அதிகரித்திடும்.பெண்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் விடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பஞ்சாயத்து சான்றிதழ்கள், ரேஷன்கார்டுகள், மற்றும் தங்கள் இருப்பிடத்தை மெய்ப்பிக்கும் இதர பல ஆவணங்களைக் காட்டியிருந்த போதிலும் பயனேதும் இல்லாமல் அவர் களின் பெயர்கள் விடுபட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரே குடும் பத்தில், சிலர் பெயர்கள் இருப்பதும் பலர் பெயர்கள் விடுபட்டிருப்பதும் விந்தையாக இருக்கிறது.இவ்வாறு விடுபட்டவர்கள் சம்பந்தமாக வந்துள்ள அனைத்து முறையீடுகளும் முழுமையாகவும் ஆழமாகவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சரிசெய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை அரசியல் தலைமைக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது. மக்கள் தங்கள் பெயர்களைச்சேர்ப்பதற்கான தங்கள் முறையீடுகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்திட வேண்டும்.அதன்பின்னர் மட்டுமே இறுதி குடிமக்கள் தேசியப் பதிவேடு வெளியிடப்பட வேண்டும். இந்தியர் எவருக்கும் குடியுரிமை மறுக்கப் படக்கூடாது என்பதை இது உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
தேர்தல் சீர்திருத்தங்களை அவசரமாகக் கொண்டுவருக!
அரசியல் தலைமைக்குழு, தேர்தல் சீர்திருத்தங்களை அவசரமாகக் கொண்டுவர வேண்டும் என்றுவலியுறுத்தும் அதே சமயத்தில், ‘பாஜக அரசாங்கத்தால் எழுப்பப்பட்டிருக்கும், மக்களவைக்கும்,மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரேசமயத்தில்தேர்தல் என்கிறமுன்மொழிவையும் நிராகரிக்கிறது. இது இயல் பாகவே ஜனநாயக விரோதமான ஒன்றாகும்.தேர்தல் சீர்திருத்தங்கள் ஒருங்கிணைந்த ஒன்றாக இருந்திட வேண்டும்.தேர்தல் செலவினம், ஊழல், கார்ப்பரேட்டுகளைக் கட்டுக்குள் வைத்தல்,
விகிதாசார பிரதிநிதித்துவம், தேர்தல் ஏஜென்சிகள் மற்றும் ஊடகங்கள் எப்பக்கமும் சாயாது, சுயேச்சையானதாக இருத்தல்போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பே நடைமுறைக்குக் கொண்டுவந்திட வேண்டியது அவசியம்.தேர்தல் பத்திரங்களுக்கான திட்டத்தினைத் திரும்பப்பெற வேண்டும், அந்நிய நிறுவனங்களின் துணைப் பிரிவுகள் இந்தியாவில் இருப்பின் அவற்றின் மூலமாகஅரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கலாம்என்கிற முறையில் நிதிச் சட்டமுன்வடிவின் மூலம் கொண்டுவரப்பட்ட அந்நியபங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்தின் மீதான திருத்தம், மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அளித்திடும் நன்கொடையின் உச்சவரம்பை நீக்கி, கம்பெனிச் சட்டத்தில்கொண்டுவந்துள்ள திருத்தம் ஆகியவற்றையும் திரும்பப் பெற்றிட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.இது தொடர்பாக தேசிய அளவிலும், மாநில மட்டங்களிலும் அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசித்து கூட்டங்களைக் கூட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிநிரலைத் தயார் செய்திடும்.
பிற்போக்கான உயர் கல்வி ஆணைய சட்டமுன்வடிவு
அரசியல் தலைமைக்குழு, முன்மொழியப்பட்டுள்ள வரைவு இந்திய உயர்கல்வி ஆணைய சட்டமுன்வடிவிற்கு விரிவான அளவில் எதிர்ப்பினைக் கட்டி எழுப்பிடக்கூடிய விதத்தில் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மற்றும்அமைப்புகளையும் அறைகூவி அழைக்கிறது.தேசிய ஜனநாயகக் கூட்டணி-2 அரசாங்கம், கடந்த நான்கு ஆண்டுகளாகவே அரசின் நிதியில் இயங்கிடும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மீது திரும்பத் திரும்பக் குறிவைத்திருந்தது. அவற்றின் செலவுகளைக் குறைத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. எம்.பில்., பிஎச்டி மாணவர்களுக்கான சலுகைகள், இடங்கள் மற்றும் தலித்/பழங்குடியினர் ஒதுக்கீடுகளில் கட்டுப்பாடு முதலானவற்றை வெட்டிக் குறைத்தது. நிரந்தரமாக ஆசிரியர்களையும், ஊழியர்களையும் பணிக்கு எடுப்பதற்குப் பதிலாக ஒப்பந்தமுறையில் பணியமர்த்தியது.தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 அரசாங்கத்தின்கீழ் உயர் கல்வி சீர்திருத்தங்கள் தனியார் மயத்தை நோக்கித்தள்ளப்படுவதுடன், சாமானிய மக்கள் கல்வி கற்க, வேலைவாய்ப்பைப் பெற,சமூக நம்பிக்கையைப் பெற கடந்த பலஆண்டுகளாக இருந்துவந்த உயர்கல்வியின் அடித்தளங்களையே அழித்து ஒழித்துக்கட்டவும் நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இவை இரண்டும் முன்மொழியப்பட்டுள்ள வரைவு இந்திய உயர்கல்வி ஆணைய சட்டமுன்வடிவில் பிரதிபலிக்கிறது.
தேசிய மருத்துவ ஆணைய சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தாதே
மோடி அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டிருக்கிற தேசிய மருத்துவ ஆணையசட்டமுன்வடிவு, நாம் இதுவரை பெற்றிருக்கிற மருத்துவக் கல்வி, அறிவியல், ஆராய்ச்சி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும். இந்திய மருத்துவக்கவுன்சிலை மாற்றியமைத்து வலுப்படுத்துவதற்குப் பதிலாக, நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின் கோட்டாட்சிக் கட்டமைப்பையே மறுதலிக்கக்கூடிய விதத்திலும், இப்போதிருக்கும் அமைப்பிற்குப் பதிலாக அதிகாரவர்க்க அமைப்பை அந்த இடத்தில் அமர்த்தக்கூடிய விதத்திலும் இருக்கிறது. பன்னாட்டு நிதி நிறுவனபகாசுரக் கம்பெனிகளைக் கொழுக்க வைப்பதற்காகவும், சுகாதார அமைப்பையே கார்ப்பரேட்மயமாக்கிடவும், இத்தகையமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை நசுக்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மருத்துவக் கல்வியும், சுகாதாரப் பாதுகாப்பு முறையும் அதிக செலவுபிடிக்கக்கூடியதாகவும், ஏழை, பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிவடைந்த மக்களால் எட்டிப்பார்க்கக்கூடிய முடியாதஅளவிற்கு மாற்றப்பட இருக்கிறது.இதற்கு எதிராகப் போராடிவரும் மருத்துவத்துறையைச் சார்ந்த அனைவருக்கும் அரசியல் தலைமைக்குழு தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது. இத்தகைய கொடூரமான சட்டமுன்வடிவை எதிர்த்திட சமூகத்தில் உள்ள அனைத்துப்பிரிவினரும் முன்வர வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு அறைகூவி அழைக்கிறது.
திரிபுரா - வங்கம் தாக்குதல் தொடர்கிறது
திரிபுராவிலும், வங்கத்திலும் இடதுசாரிகள் மற்றும் கட்சிக்கு எதிராக தாக்குதல்கள் தொடர்வதை அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது. திரிபுராவில், கட்சி அலுவலகங்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்/பாஜகவினரால் குறிவைத்துத்தாக்கப்படுவது தொடர்கிறது. மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களாலும் மாநில அரசாங்கத்தாலும் தாக்குதல்கள் நடைபெறுவதும் குறைந்திடவில்லை.
குண்டர்கள் கொலை செய்தல்
சில மாநிலங்களில் குண்டர்கள் கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்திருப்பதை அரசியல் தலைமைக்குழு ஆய்வு செய்தது. குண்டர்கள் கொலை தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது, பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மத்தியஅரசாங்கத்தின் கீழ்தான் இத்தகைய குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதையும், பசுப் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் குண்டர்கள் இவ்வாறு வன்முறை வெறியாட்டங்கள் மற்றும் கொலைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. இத்தகைய கிரிமினல்களுக்கு ஆதரவாகபல பாஜக தலைவர்களே வெளிப்படையாக வந்திருக்கிறார்கள். இவ்வாறு கொலைபாதகச் செயல்களில் ஈடுபடும் கயவர்கள் அடையாளம் காட்டப்பட்டபின்னரும்கூட எவ்விதத் தண்டனையுமின்றி சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருப்பதிலிருந்து அத்தகைய கிரிமினல்களுக்கு ஆர்எஸ்எஸ்/பாஜக அளித்துவரும் ஆக்கமும் ஊக்கமும் நன்கு தெரிகிறது.உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் குண்டர்கள் கொலை செய்வதற்கு எதிராக ஒரு பொருத்தமான சட்டத்தை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையை அரசியல் தலைமைக்குழு மீளவும் வலியுறுத்துகிறது.
சுயேச்சையான ஊடகங்கள் மீதான தாக்குதல்கள்
ஊடகங்கள் அச்சுறுத்தப்படுவது அதிகரித்துக்கொண்டிருப்பது குறித்து அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக்கொள்கிறது. கடந்த நான்காண்டுகளில் பிரதான ஊடகங்களில் பெரும்பாலானவை மிரட்டி பணியவைக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்தை விமர்சித்த அல்லது அதன் தவறுகள் பலவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த ஊடகங்களை அமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்தை எதிர்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிநிரல்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. விமர்சனத்தை எதிர்கொள்ளமுடியாத இத்தகைய சகிப்பின்மை மற்றும் வெளிப்படையாகவே ஊடகங்களை மிரட்டுதல் ஜனநாயகத்திற்கு தீங்கு பயப்பதாகும்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை
காஷ்மீர் பிரச்சனை உட்பட அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் இந்தியாவுடன் பேசத் தயார் என்று பாகிஸ்தானின் பிரதமராகப் பதவியேற்க இருப்பவர் தன் அவாவைவெளிப்படுத்தியுள்ள பின்னணியில், அதற்குப் பதிலளித்திட இந்திய அரசு முன்வரவேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

தமிழில்: .வீரமணி




No comments: