Monday, May 30, 2016

பகாசுரன் - இரண்டாம் நாள்



வைகறைப் பொழுது புலர்ந்துகொண்டிருந்தது. ரவியும் பிரதீப்பும் எழுந்துவிட்டனர்.   இதற்குமுன் கேட்டிராத பலவிதமான ஒலிச்சத்தங்களைக் கேட்டு திடுக்கிட்டு அவ்வாறு அவர்கள் வைகறைப்பொழுதிலேயே எழுந்துவிட்டனர். ஏற்கனவே எழுந்து உடைகள் அணிந்து தயாராகிவட்ட அபி, சிரித்துக்கொண்டே அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தான். ஆயினும் அந்த சத்தங்களைக் கேட்டு அவர்கள் முதத்தில் தெரிந்த ஆச்சர்யத்தைப் பார்த்துவிட்டு, ``ஓ, இதுவா, இவை நம்மை எழுப்புவதற்காக மயில்கள் கரையும் சத்தம். இவ்வாறான மேடான பகுதிகளில் வாழும் மக்களுக்கு இதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இல்லாவிடில், தில்லியில் வாழும் மக்கள் வாகனங்களின் ஆரன் சத்தத்தைத்தான் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.  எழுந்து வாங்க. அப்பா நமக்காக ஏற்கனவே காத்துக்கொண்டிருக்கிறார்.’’ அவர்கள் விரைந்தார்கள்.
அவர்கள் பூங்காவை அடைவதற்காக மலைமீது ஏறிக்கொண்டிருந்தார்கள். வாயிலின் வெளியே ஏராளமான கார்களும், இரு சக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்துக்கொண்டே அவர்கள் பூங்காவிற்கள் நுழைந்தார்கள். ஏராளமான அளவில் ஆண்களும், பெண்களும், இளையவர்களும் முதியவர்களும், நடந்துகொண்டும், மெதுவாக ஓடிக்கொண்டும் இருந்தார்கள். பூங்காவின் ஒரு பக்கத்தில் பலர் உட்கார்ந்து கொண்டு யோகாசனம் செய்வதைப் பார்த்துக்கொண்டே அவர்களும் நடந்து சென்றார்கள். இவ்வாறு நடந்து செல்பவர்கள் ஒவ்வொருவரையும்  அங்கே மரங்களில் வீற்றிருந்த குரங்குகளும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தன. அவர்கள் மேலும் சிறிது தூரம் நடந்தசென்றதும், அங்கே மரக்கிளைகளில் அமர்ந்திருந்த மயில்களையும் அவர்கள் பார்த்தனர். அம்மரங்களின் கீழ் பலர் அமர்ந்து ஒருவர்க் கொருவர் உரக்கப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர். மேலும் கொஞ்ச தூரம் அவர்கள் சென்றபோது, சாலையோரங்களில் குரங்குக் கூட்டங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவை நெருக்கமாக உட்கார்ந்துகொண்டு, ஒன்றின் தலையிலிருந்து பேன்களைப் பிடித்து மற்றொன்று ஏதோ தின்பண்டங்களைத் தின்பதைப்போல் தின்றுகொண்டிருந்தன. அவர்கள் மேலும் கொஞ்ச தூரம் சென்றபோது, அணில்கள் ஒன்றையொன்று துரத்தி விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். அவற்றின் அருகே மக்களும் அமர்ந்துகொண்டு அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். ரவி, அபியிடம் ``இந்த அணில்களைப் பிடிக்கணும் என்றால் எப்படி?’’ என்று மிகவும் சீரியசாகக் கேட்டான். அதற்கு பிரதீப், ``ரொம்ப சுலபம். மரத்தின் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு அது சாப்பிடுகிற கொட்டை மாதிரி நடி’’ என்றான். ``ஏ, நிறுத்து, உன் மடத்தனமான ஜோக்கெல்லாம் வேண்டாம்’’ என்று ரவி அவன் மீது பாய்ந்தான்.  அணில்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே அவை தங்கள் கண்களைத் திறப்பதற்கு முன்பே அவற்றின் கூடுகளிலிருந்து எப்படி மக்கள் சேகரிப்பார்கள் என்பதை சேகர் அவர்களிடம் கூறினார்.
பூங்காவைவிட்டு அவர்கள் வெளிவந்தபின்னர், விதான் சபா வழியே  மற்றும்  சிவில் லைன்ஸ் காவல் நிலையம் வரை சென்றனர். பின்னர், ராஜ்பூர் ரோடு வழியே திரும்புகையில், தொழிலாளர் குடிசைகளைக் கடந்து வரவேண்டியிருந்தது. அங்கே வரும்போது மலைபோல் கொட்டிக்கிடந்த குப்பை மேட்டைக் கடந்து அவர்கள் வரும்போது தங்கள் மூக்குகளை மூடிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வேகமாகக் கடந்து வந்தனர். ``நான்கு சக்கரங்களும் இருக்கும், அதே சமயத்தில் பறக்கும் பூச்சிகளும் இருக்கும், அது என்ன?’’ என்று மற்றொரு புதிரைப் போட்டான் பிரதீப். ``ஏ, இதுபோன்ற மடத்தனமான புதிர்களை யெல்லாம் அபியிடம் போடாதே. அவன் ரொம்பவும் புத்திசாலி. இதற்கு நானே பதில் சொல்ல முடியும். அது ஒரு குப்பை வண்டி.’’ இவ்வாறு விளையாட்டாகப் பேசிக்கொண்டே வந்த பிரதீப்பைப் பார்த்து சேகர் சிரித்துக் கொண்டே வந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்த சிவன் கோவில் அருகே சிறிது நேரம் நின்றார்கள்.  
கோவில் குருக்கள் ஒரு கையால் கையிலிருந்த மணியை ஆட்டிக்கொண்டே, மறு கையால் சூடத்தை ஏற்றி பூசை செய்தார்.  ஒரு பக்தர் அங்கிருந்த கோவில் மணியை அடித்தார்.  மக்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தனர். அவ்வாறு மக்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருப்பதை வெளியில் நின்ற ஆண் குரங்குகள் காவல் காப்பதுபோல் பார்த்துக் கொண்டு நின்றன. குட்டிக் குரங்குகள் தங்கள் தாயின் வயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டும், கொஞ்சம் பெரிதாக இருந்தவை அவற்றின் முதுகில் ஏறி சவாரி செய்துகொண்டுமிருக்கத் தாய்க் குரங்குகள் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டும் கையிலிருந்த வாழைப் பழங்களை இறுகப் பற்றிக்கொண்டுமிருந்தன. சில குரங்குகள் பழங்களின் தோல்களை மிகவும் திறமையுடன் உரித்து, அவற்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. குரங்குகளின் சேஷ்டைகளையெல்லாம் பையன்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  குரங்குகளும் இவர்களைப் பார்த்து கண் சிமிட்டின. பிரதீப் ஒரு குரங்கைப் பார்த்து சிரித்துக்கொண்டே, ``ஹலோ’’ சொன்னான். குரங்கும் பதிலுக்கு பல்லைக் காட்டிக் கோபத்துடன் இளித்ததுடன் அவன் முன்னே தாவி பயமுறுத்தியது.
அவன் கூர்ந்து பார்த்ததை அடுத்து ஒரு பெரிய குரங்கு தன்னுடைய சிவப்பு அடிப்பாகத்தைக் காண்பித்தபின் அமைதியாகப் பின்வாங்கியது.  ``இப்போது நாம் போகலாமா?’’ என்று பையன்களிடம் சேகர் கேட்டார்.``இன்னும் ஒரு நிமிஷம், மாமா’’ என்று கூறிக்கொண்டே பிரதீப் ஒரு குரங்குடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தான்.  சேகர், ரவியுடனும் அபியுடனும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று, பிரதீப் சத்தம் போடுவதை அவர்கள் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் அந்தப் பக்கம் பார்க்கையில், ஒரு குரங்கு வேகமாக ஒரு மரத்தின் மீது ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.  என்ன நடந்தது என்பதை எல்லாரும் உணர்ந்துவிட்டனர். பிரதீப்புக்கு கொஞ்ச நேரம் எதுவுமே புரியவில்லை. இவனைப்பார்த்துப் பின் வாங்கிய குரங்கு அவன் பின்புறமிருந்து திடீரென்று அவன் மீது பாய்ந்தது. என்ன நடந்தது என்று அவன் உணர்ந்து செயல்படுவதற்கு முன்னமேயே, அவன் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை அது பறித்துச் சென்றுவிட்டது. மரக்கிளை ஒன்றின் உச்சிக்கு சென்று உட்கார்ந்தபின் அவன் மூக்குக் கண்ணாடியைக் கையில் வைத்து ஆட்டிக்கொண்டே அவனைப் பார்த்துப் பல்லிளித்தது. பிரதீப் என்ன செய்வதென்று தெரியாது திகைத்து அதனையே பார்த்துக்கொண்டு நின்றான். விரைந்து, சேகர் செயலாற்றினார். பக்கத்தில் வாழைப்பழம் விற்றுக்கொண்டிருந்தவரின் கடையிலிருந்து ஒரு வாழைப்பழத்தை  எடுத்து அந்தக் குரங்கைப் பார்த்து வீசி எறிந்தார்.  அதனைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, குரங்கு தன் கையிலிருந்த கண்ணாடியைக் கைவிட்டது.
பிரதீப் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு கடைசியில் சிரிக்கத் தொடங்கினான். வாழைப் பழத்திற்கு உண்டான காசைக் கடைக்காரரிடம் கொடுத்துக் கொண்டே சேகர் அவர்களிடம் கூறினார்: ``குரங்குகளின் சேஷ்டைகளைப் பார்ப்பது நன்றாகத்தான் இருக்கும்.  ஆனாலும் உங்களுக்குத் தெரியுமா, அவை இந்த ஏரியா முழுவதும் ஒரே தொந்தரவுதான். அவைகள் காலனிகளுக்குள் புகுந்துவிட்டால் அங்கே வைக்கப்பட்டிருக்கும் பூந்தொட்டிகள் மற்றும் காய்கறித் தொட்டிகளை வகைதொகையின்றி உடைத்து நாசப்படுத்திவிடும். இவற்றை விரட்டுவதற்காக, சில சமயங்களில், நகராட்சியைச் சேர்ந்த ஒருவன் தன்னுடை சைக்கிளில் இவை பயப்படக்கூடிய லங்கூர் என்னும் நீண்ட வாலுடைய கருங்குரங்குடன் பவனி வருவான். ஆனால், இப்போதெல்லாம் அவை கூட உதவுவதில்லை. ஒரு நாள் குரங்குக் கூட்டம் ஒன்று சேர்ந்து வந்து அந்த லங்கூரையே தாக்கிவிட்டன.’’ இவ்வாறு கூறிக்கொண்டே அவர் நடந்தார். பையன்களும் சிரித்துக்கொண்டே அவருடன் நடந்து சென்றனர்.
அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். மிகவும் திகிலடைந்து வந்து கொண்டிருந்த பையன்களின் மூக்குகள் கரிபடிந்து காணப்பட்டதைக் கண்ட ரேகா, ``தில்லி ரொம்பவும் ஊழல்மயமாகி விட்டது. எங்கே பார்த்தாலும் மாசு படிந்து ஊரே மிகவும் மோசமாகிவிட்டது.’’ அபி தொடர்ந்து, ``காற்று  மாசு படிந்து ரொம்பவும் மோசமாகிவிட்டது.  இதனை சுவாசிப்பவர்களுக்கு, புற்றுநோயை உண்டாக்கக்கூடிய தனிமங்கள் இதில் இருப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.’’ இதனைக் கேட்டபின்னர் மிகவும் பயந்துபோய் அவர்கள் விரைந்துசென்று தங்கள் முகங்களைக் கழுவி சுத்தப்படுத்திக் கொண்டனர். பின்னர், நன்கு உடை தரித்துக்கொண்டு, காலை உணவு அருந்துவதற்கான மேசைக்கு முன் வந்து அமர்ந்தார்கள்.
ரவி, ஆழ்ந்து சிந்தனை செய்துகொண்டே மிகவும் மிருதுவாக இருந்த இட்டிலியை சாம்பாரில் தொட்டுக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், திடீரென்று தன் தலையைத் தூக்கி, சேகரைப் பார்த்து., ``மாமா, நாட்டின் தலைநகரமான தில்லி, ஒரு மாடல் சிட்டியாக இருக்கும் என்று உண்மையிலேயே நான் எதிர்பார்த்தேன். ஆனால், இன்றைக்குக் காலையில் நான் பார்த்தவை என்னை மிகவும் திகைக்கச் செய்துவிட்டன,’’ என்று கூறினான். ``எதைக் குறித்து சொல்கிறாய்?’’ என்று சேகர் ஆச்சர்யத்துடன் கேட்டார். ``மலைபோல் குவிந்தகிடந்த குப்பை மேட்டைத்தான் சொல்கிறேன்,’’ என்று ரவி குறிப்பிட்டான்.
சேகரும் தலையை ஆட்டிக்கொண்டே, ``உண்மைதான். உண்மையில் இதுபோன்று பல இடங்களில் பார்க்கலாம்.  இத்தகைய குப்பைகள் மலைபோல் குவியும் வரை நகராட்சி நிர்வாகம் காத்துக்கொண்டிருக்கிறது.  இவை அவற்றைச் சுற்றியுள்ள பகுதி முழுவதையுமே துர்நாற்றம் வீசி மாசு படுத்துவதைப் பற்றியோ, பல்வேறு நோய்களுக்குக் காரணமான, கொசுக்களை உற்பத்தி செய்வதைப் பற்றியோ அது கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.’’
``ஏன் அப்படி அவை இருக்கின்றன? அவற்றின் மீது எவ்விதமான கட்டுப்பாடும் கிடையாதா?’’ ரவி மிகவும் அக்கறையுடன் கேட்டான். சேகர் பெருமூச்சுவிட்டுக் கொண்டு மிகவும் வேதனையுடன், ``ம்...இதற்கு உங்களுக்கு ``பிசாசு ஊழியர்கள்’’ பற்றிய கதையை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்.
``பிசாசு ஊழியர்களா?’’ அனைவருமே அவர் கூறப்போவதைக் கேட்கத் தங்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டார்கள். சேகர் கூறத் தொடங்கினார்:
நல்லது. ஒரு நாள் நகராட்சிப் பொறியாளர்கள் அனைவரும் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். கிளர்ச்சியில் ஈடுபட்ட பொறியாளர்கள் அனைவரும் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு கொடுத்தார்கள்.  போராட்டம் நடத்த இருந்த அன்று அதிகாலையிலேயே அவர்களில் பதினைந்து பேரை பாய்ந்து சென்று கைது செய்து காவலில் அடைக்கப் பட்டார்கள். அதுபோன்று அதற்கு முன் நடந்ததே இல்லை.
அதிர்ச்சிக்குள்ளாகி எதுவும் பேசாமல் சிடுசிடுப்புடன் லாக்கப்பில் இருந்த பொறியாளர்களுக்கு, காலை உணவைத் தருகையில்,  எப்போதும் கலகலப்பாக இருக்கும் எங்கள் போலீஸ்காரர் ஒருவர், அவர்களைக் குஷிப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்.  அந்த சமயத்தில், நகராட்சி ஆணையர் மிகவும் ஆடிப்போய்விட்டார். தன் தொங்கிய முகத்துடன் லெப்டினன்ட் கவர்னரைப் போய்ச் சந்தித்த அவர், ``சார், இவ்வாறு எல்லா பொறியாளர்களையும் கைது செய்துவிட்டீர்களானால் நான் என் வேலையை எப்படிச் செய்ய முடியும்?’’  என்று முறையிட்டார்.
லெப்டினன்ட் கவர்னர் உடனடியாக நகராட்சியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து வர ஆணையிட்டார். அப்போதுதான் பொறியாளர்களும், உள்ளூர் அரசியல்வாதிகளும் சேர்ந்துகொண்டு, துப்புரவு ஊழியர்களே இல்லாத நிலையில் ஆயிரக்கணக்கான பெயர்களில், பதிவேடுகளில் மட்டும் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு, பல கோடி ரூபாய் சூறையாடி வந்த உண்மை அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
``இவ்வளவு கேவலமான முறையிலா?’’ என்று ரவி குறுக்கிட்டான்.
சேகர் பதிலளித்தார்: ``ஆம், அப்படித்தான் நடந்து கொண்டார்கள். அதனால் என்ன நடந்தது என்று கற்பனை செய்து பார். இதனால் உண்மையிலேயே வேலையில் இருந்த ஊழியர்களின் பணிச் சுமை மேலும் அதிகமாகியது. எனவேதான் பூங்காக்கள் ஒழுங்காக பராமரிக்கப்படாமல் இருப்பது குறித்தோ, நகரில் துப்புரவுப் பணிகள் கிராமங்களில் இருப்பது போல மோசமாக இருப்பது குறித்தோ, ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமே இல்லை. இந்தப் பொறியாளர்கள் எல்லாம் தங்களுடைய ஒப்பந்தக்காரர்களிடம் பேசுவதை நீ அறிந்துகொண்டாலே மிகவும் ஆச்சர்யப்படுவாய். தங்களுடைய லஞ்சக் காசை வசூல் செய்வதற்கு என்று மிகவும் பிரத்யேகமான வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவார்கள். ஓர் ஊடகம் மேற்கொண்ட ரகசியமான பேட்டி ஒன்று இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது.’’ ஆர்வத்துடன் இருந்த பையன்களிடம் அவர் ஓர் எடுத்துக்காட்டைக் கூறினார்.
ஓர் ஒப்பந்தக்காரர், உதவிப் பொறியாளரிடம் இவ்வாறு கூறினார்:  ``உங்களிடம் கொஞ்சம் கடன்கள் வாங்கியிருப்பது போல நினைத்துக்கொண்டு நான் உங்களிடம் கடன்பட்டதை அடைப்பதுபோன்று பணத்தைத் தருகிறேன். இப்போது கொஞ்சம் என்னிடம் பணம் இருக்கிறது. அதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.’’  அதனை எடுத்துக்கொள்ள அந்தப் பொறியாளர் மறுத்துவிட்டார். ``இதில் என்ன இவ்வளவு கொஞ்சமாக வைத்திருக்கிறாய்.  முழுத் தொகையையும் கொண்டுவா,’’ என்று அவனிடம் கேட்டார்.
பின்னர், அவர் செயற் பொறியாளரிடம் பேசியபோது, அவர்  ஒப்பந்தக்காரர் தன்னிடம் பேசுவதற்கு முன்னர்,  வேலையை ஆரம்பிக்கச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.  ஆரம்பிக்கக்கூடிய அளவில் எந்த வேலையும் கிடையாது என்று எல்லோருக்குமே தெரியும். எனினும் இதன் உண்மையான பொருள் என்னவெனில்,  `வேலையை முதலில் ஆரம்பி’ என்றால் ஒப்பந்தக்காரர் `லஞ்சத்தை முதலில் தந்திடவேண்டும்’ என்பதும், அதனை ஒப்பந்தக்காரர் உறுதிப்படுத்திட வேண்டும் என்பதுமாகும். அப்போதுதான் அவருக்குச் சேரவேண்டிய காசோலை அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.
``அப்படியானால், தர்ணா போராட்டம் என்னாச்சு?’’ என்று ரவி கேட்டான். சேகர் கதையைத் தொடர்ந்தார்: 
நல்லது. மிகவும் சீரியசான முகத்துடன் லெப்டினன்ட் கவர்னர் கேட்டார்: ``தயவுசெய்து கூறுங்கள், கமிஷனர் சார், உங்கள் பொறியாளர்கள் இடையே நேர்மையை உங்களால் உத்தரவாதம் செய்ய முடியுமா?’’ முனிசிபல் கமிஷனர் பதில் கூற முடியாமல் தடுமாறினார்.
லெப்டினன்ட் கவர்னர் கமிஷனரை மிகவும் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே, ``உங்கள் நிறுவனத்தில் ஊழலை என்னால் கட்டுப்படுத்த முடியும் என்றெல்லாம் உங்களால் உத்தரவாதம் எதுவும் எனக்குத் தர முடியாது. அதே சமயத்தில், யாரேனும் அதிகாரி அதனைச் சரி செய்ய முன்வந்தாரென்றால், அதனை ஜீரணித்துக்கொள்ளவும் நீங்கள் தயாராயில்லை.  நான் உங்களிடம் என் மனம் திறந்து சொல்லிவிடுகிறேன். அவர் செய்த செயல் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். அதில் தலையிட நான் விரும்பவில்லை. உங்களுடைய பொறியாளர்களுடன் அவர் உறுதியாகச் செயல்படட்டும். அவர்கள் உங்கள் பேச்சைக் கேட்க மறுத்தார்களானால், அவர்களை சஸ்பெண்ட் செய்யுங்கள்.’’ அவர் இவ்வாறு உறுதிபடப் பேசியபின்னர், ஆணையர் மேலும் வாதிடுவது வீண் என்று புரிந்துகொண்டார். பின்னர் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டே, ``சரி சார்’’ என்று கூறி இடத்தைக் காலி செய்தார்.
அவ்வளவுதான். பின்னர் ஆணையர் பொறியாளர்களிடம் லெப்டினன்ட் கவர்னரின் தீர்மானகரமான முடிவைத் தெரிவித்தார்.  தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதையும் அவர்களிடம் கூறினார். தங்களுடைய தர்ணா போராட்டத்தால் உயர் அதிகாரிகளை எதுவும் செய்ய முடியவில்லை என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டனர்.  பின்னர் அமைதியாகத் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டுவிட்டனர். லாக்கப்பில் இருந்த பொறியாளர்களை நாங்கள் நன்கு பார்த்துக்கொண்டோம். பின்னர் சிறை அதிகாரிகளும் அவ்வாறே அவர்களை நன்கு பார்த்துக் கொண்டார்கள். 
ரவி உற்சாகத்துடன் கூறினான்: ``லெப்டினன்ட் கவர்னர் மிகவும் சரியாகவே நடந்துகொண்டிருக்கிறார்,’’ என்று கூறிய ரவி, ``ஆனாலும் மாமா, இவ்வளவு நடந்தபிறகும்கூட, குப்பை மேடு இந்த அளவிற்கு மலைபோல் குவிந்திருக்கிறதே, அது ஏன்?’’ என்று கேட்டான். சேகர் பதிலளித்தார்: ``அதுதான் பிரச்சனை. கைது செய்வது மட்டும் போதுமானதல்ல.  கயவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்படவில்லையெனில், இதுபோன்ற கைதுகளுக்கெல்லாம் பயப்பட மாட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை. அவர்கள் தங்கள் வேலையை வைத்து அதிகமான அளவிற்குப் பணம் பண்ணுவதற்குப் பழகி விட்டார்கள். அவர்களது குற்றப் பிணைப்பு என்பது மிகவும் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அதனை அவ்வளவு எளிதாக அறுத்தெறிந்துவிட முடியாது.’’
 ``தில்லி என்ன இவ்வளவு மோசமாக இருக்கிறது,’’ என்று சகோதரர்கள் இருவரும் மிகவும் ஆச்சர்யப்பட்ட அதே சமயத்தில், ரேகா. சுமனிடம் ``உனக்குத் தெரியுமா? அந்த சமயத்தில், சில மாதர் அமைப்புகள் பொறியாளர்களின் தர்ணாவிற்கு ஆதரவாக  வந்தார்கள்.’’ ``மிகவும் வெட்கக் கேடு.  லாக்கப்பில் இருந்த பொறியாளர்களுடைய மனைவிமார்களால் ஒருவேளை அவர்கள் தூண்டப்பட்டிருக்கலாம்.’’ சுமன் தன் விரல்களை தாவங் கொட்டையில் வைத்துக்கொண்டார்.  அவர்கள் அனைவரும் பின்னர் எழுந்து வாசீராபாத் பாலத்தைப் பார்ப்பதற்குப் போவதற்காகத் தயாரானார்கள்.
மிகவும் விரைந்து வந்து முதலில் காரில் ஏறியது சுமன்தான். கிருஷ்ண பகவானைப் போற்றும் ஜெயதேவின்  ``யமுனா தீரே...’’ என்னும் பக்திப் பாடலை முணுமுணுத்துக்கொண்டே அவர் காரில் ஏறினார். அத்தைப் பாடுவதைக் கேட்ட அபி சிரித்துக்கொண்டே, ``அத்தை, யமுனா மாதா எப்படி இருப்பாங்களோ அதேமாதிரியே நீங்களும் இருக்கீங்க’’ என்றான். அவளும் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே காரில் ஏறினாள். மற்றவர்களும் வந்து காரில் ஏறிக் கொண்டார்கள். பாலத்தை நோக்கி அவர்கள் சென்றார்கள். பாலத்தின் மீது நின்று யமுனை நதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தில்லியில் இன்னும் மழைக்காலம் தொடங்கவில்லை. வெயிலின் கடுமையைத் தாங்கமுடியாத பிரதீப் சூரியனை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான். அது மேகங்களுக்கிடையே ஒரு வெள்ளைப் பந்து போல அவனுக்குக் காட்சி அளித்தது. ரவி ஆற்றின் இரு கரைகளிலும் பசுமையாக இருந்த நெல் மற்றும் காய்கறித் தோட்டங்களைப் பார்த்தான். அவற்றிற்குப் பின்னால் பின்புற சுவரைப்போல பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்தோங்கி இருந்தன. எல்லாவற்றிற்கும் அப்பால் அடிவானத்தில் வட்ட வில் போன்றதொரு வளைவு தெரிந்தது.
இவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்தின் அருகில் இவர்களைக் கடந்து இரு புளு லைன் எனப்படும் தனியார் பேருந்துகள் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு சென்றன. இதனைப் பார்த்துக்கொண்டிருந்த ரேகா சுமனிடம் ``உள்ளுக்கு வாங்க, ஜாக்கிரதை. இங்கே இது ரொம்ப மோசம்,’’ என்றார். பாலம் இலேசாக அதிர்ந்ததால், சேகர் கீழே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த கால்வாயை சுமனுக்குக் காட்டிக்கொண்டே, ``இங்கே பார், உன்னுடைய புனித யமுனா-மாதா பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.  ஆற்றில் தண்ணீர் சேறும் சகதியுமாக மிகவும் மோசமான முறையில் வந்து கொண்டிருந்தது. பக்தர்கள் விட்டுச்  சென்ற பிரார்த்தனைப்பொருட்களும், பயனற்ற புல்பூண்டுகளும் மட்டும்தான் ஆற்றில் வந்துகொண்டிருக்கின்றன. எவ்வளவு மோசமாக துர்நாற்றம் வீசுகிறது என்று பார். தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுப்பொருட்கள் அனைத்தும் ஆற்றில் கலப்பதால்தான் இந்த நிலை,’’ என்று கூறினார். அவள் மிகவும் குழப்பத்துடனும் நொந்த மனதுடனும் தண்ணீர் ஓடாது இருக்கும் ஆற்றையே பார்த்துக்கொண்டிருந்தார்.
அவள் ஆற்றிற்கு மேலே ஒரு நாரை ஒன்று வேகமாகப் பறந்து வந்து, ஆற்றில் தண்ணீர் ஓடாத இடத்திலிருந்து ஒரு மீனைத் தன் அலகில் பற்றிக்கொண்டு பறந்ததைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சேகர் தன் கைகளைத் தட்டி அவர்களது கவனத்தைப் பக்கத்தில் சலவை செய்வோர் படித்துறையைக் காட்டினார். அதற்குப் பக்கத்தில் ஏழை ஜனங்கள் குளித்துக் கொண்டும் தங்கள் உடைகளைத் துவைத்துக் கொண்டும் இருந்தனர்.    அவர்களுடைய குழந்தைகள் அங்கே சொதசொத என்று ஈரமாக இருந்த கரையைச் சுற்றிலும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. சிறிது தூரம் தள்ளி எரிந்து கொண்டிருந்த சிதை ஒன்றைச் சுட்டிக்காட்டி, அவர் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்:
ஒரு சமயம் மிகவும் ஆத்திரத்துடன் ஓர் இளைஞன் ஒரு புகார்க் கடிதத்துடன் என் அலுவலகத்திற்கு வந்தான். `` சார், எங்கள் அம்மா ஒரு சில நாட்களுக்கு முன்பு இறந்துட்டாங்க. அவங்களுக்கு ஈமச்சடங்கெல்லாம் செய்துவிட்டோம். நேற்று என் அண்ணன் அவங்க ஆஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்காக வாரனாசிக்குப் போய்விட்டார். மற்ற பலவிதமான காரியங்களைச் செய்ய வேண்டியிருந்ததால் நான் தங்கிவிட்டேன்.’’ அவன் கூறியதையெல்லாம் அதிகாரி மிகவும் இரக்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
கண்களிலிருந்து ஆறாய் வடிந்துகொண்டிருந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் தொடர்ந்தான்: ``அவங்க இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக அதற்கான அலுவலகத்திற்கு நான் சென்றபோது, சம்பந்தப்பட்ட நபர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார். அவங்க செய்ய வேண்டியதெல்லாம் ஒரு கம்ப்யூட்டர் பிரிண்ட் எடுத்துக் கொடுக்க வேண்டியதுதான். அவங்க கேட்பதை என்னால் கொடுக்க முடியும் என்றாலும், நான் ரொம்பவும் காயப்படுத்தப்பட்டுவிட்டேன். ஒரு காசு கூட நான் அவங்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை.’’
``என்ன? ஒரு இறப்புச் சான்றிதழ் கொடுப்பதற்குக்கூட அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டுமா?’’ சுமன் ஆச்சர்யப்பட்டார். ``அப்புறம், நீங்க என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கீங்க. இங்கே காசு இல்லாமல் எதுவும் நகராது.’’  என்று ரேகா அவரிடம் கூறினார். சேகர் பின்னர் அந்த நிகழ்ச்சியை இவ்வாறு முடித்தார். ``மேலோட்டமாகப் பார்த்தால் இது ஏதோ இரண்டு சாதாரண ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் போலத் தோன்றும். ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் அவருடைய உதவியாளர் இதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். ஆயினும், இவ்வாறு விவகாரங்கள் இருப்பதை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் லஞ்சம் வாங்கும்போது அவர்களைப் பொறி வைத்துப் பிடித்தோம்.’’
எல்லோரும் சேகர் சொல்வதையே கவனத்துடன்  கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே நிலவிய இறுக்கத்தைச் சற்றே தளர்த்தும் நோக்கத்துடன் பிரதீப் கேட்டான்: ``சுடுகாட்டில் ஏன் கேட் போட்டிருக்காங்க,  தெரியுமா?’’ பிறகு அவனே பதிலும் சொன்னான்: ``செத்துக்கிட்டிருக்கிறவங்க அந்த வழியாத்தான் வரணும்.’’ என்று கூறி மிகவும் சீரியசாக இருந்த அவங்க முகங்களில் மலர்ச்சியைக் கொண்டு வந்தான்.
சேகர் தொடர்ந்து, ``நாங்கள் அன்றையதினமே இறப்புச் சான்றிதழ் அவருக்குக் கிடைப்பதற்கும் உத்தரவாதம் செய்தோம்,’’ என்றார்.  அந்த சமயத்தில் ஆற்றில் பல இடங்களில்  மணல் தோண்டி எடுக்கப்பட்ட பள்ளங்கள் இருப்பதையும் அவற்றின் அருகில் சில தூர்வாரும் இயந்திரங்கள் இருப்பதையும் ரவி பார்த்தான். ``மாமா, எந்தவிதமான கட்டுப்பாடுமின்றி ஜனங்க மணல் வெட்டி எடுக்கிற மாதிரி தெரிகிறதே. இவ்வாறு செய்வது ஆற்றின் கரைகளை அரித்து வெள்ளம் ஏற்படக் காரணமாகி விடாதா?’’ என்று கேட்டான். அவன் முதுகைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே சேகர் கூறினார்:
நிச்சயமாக. ஆனாலும்  மிகப்பெரிய அளவில் மஃபியா கும்பல் இதில் ஈடுபட்டிருக்கிறது. அந்தக் கும்பல் பவானா, நரேலா மற்றும் பல பகுதிகளிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கிட்டிருக்கின்றன. நாடு முழுதும் இதே மாதிரி மணல் கொள்ளையர்களைப் பார்க்கலாம். அனுமதியின்றி மணல் அள்ளுவது திருட்டுக் குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்ற போதிலும், எவனும் இதைப்பற்றிப் பொருட்படுத்துவதில்லை.  ஏனென்றால் இவ்வாறு அள்ளப்படுகிற ஒவ்வொரு டிரக் மணலுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தனியே காசு சென்று விடுகிறது. இதற்கு எதிராக சில சமயங்களில் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடுகிறார்கள். உண்மைதான். ஆயினும் யார் அதையெல்லாம் பொருட்படுத்துகிறார்கள்? இவ்வாறு நடைபெறுவதை ஓர் ஊடகம் தன் புலனாய்வு நடவடிக்கை  மூலம் வெளிக்கொணர்ந்தது. ஆயினும் அதன்பிறகும் பெரிதாக ஒன்றும் நடந்து விடவில்லை. கொஞ்ச காலம் நின்றிருந்தது. பின்னர் முன்னிலும் பன்மடங்கு வேகத்துடன் தொடர ஆரம்பித்து விட்டது. யமுனா-மாதா மழைக்காலங்களில் மிகவும் சீற்றத்துடன் இருப்பாள். அதன் இரு கரைகளிலும் வாழும் ஏழை மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் அவளது செல்வத்தை அள்ளிச் செல்லும் கயவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நன்கு தொடர்பு வைத்திருக் கிறார்கள்.
சுமனிடம் யமுனா-மாதாவைப் பார்க்க வேண்டும் என்றிருந்த ஆர்வம் யமுனையைப் பார்த்தபின்  விரக்தியுடன் மிகவும் குன்றிவிட்டது. சுமன், ``சரி, நாமெல்லாம் வீட்டிற்குத் திரும்பலாம்’’ என்று கூறினார். பின்னர் அனைவரும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்கள்.
மதிய உணவு தயாராக இருந்தது. சுமன் இன்னமும் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்து மீளவில்லை.  சுமன் மேசையின் முன் அமர்ந்திருந்த மற்றவர்களுடன் இணைந்து கொண்டார். பின்னர் திடீரென்று அங்கே ஒருவிதமான நறுமணம் காற்றில் கலந்து வந்து அவள் மூக்கைத் துளைத்தது. அவளுடைய தூங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் மீளவும் உயிர்ப்பிக்கப்பட்டுவிட்டன.    உணவு பரிமாறுதற்கான தட்டில் வைத்து தாளிக்கப்பட்ட மீன் வறுவலை ரேகா கொண்டுவருவதைப் பார்த்து அவளது கண்கள் பிரகாசம் அடைந்தன. மிகவும் மனமகிழ்ந்து புன்சிரிப்புடன் ``இனிய மணம்’’ என்று கூறி, ``ரேகா, இந்த நறுமணத்திற்காக என்ன சேர்த்தாய்?’’ என்று கேட்டார். ரேகா, ``வினிகர் கொஞ்சம் சேர்த்தேன், சுமன்’’ என்று கூறி எல்லோருடைய தட்டுகளிலும் மீனைப் பரிமாறினார்.   
தன் தங்கை மீன்துண்டுகளை ஒருவித அசூயையுடன் வெறித்துப் பார்ப்பதைக் கண்ட சேகர், அவளிடம், ``முதலில் நான் உனக்கு ஓர் உறுதியைத் தந்துவிடுகிறேன். நிச்சயமாக இந்த மீன் உன்னுடைய யமுனையிலிருந்து பிடித்துக் கொண்டு வரப்பட்டதல்ல,’’ என்றார். அது எப்படி என்கிற முறையில் அவள் தன் அண்ணனைப் பார்த்தாள். பின்னர் மிகவும் பொறுப்புணர்ச்சியோடு அவர் பதிலளித்தார்:
``இது மாதிரியான விஷயங்களில் நாம் மிகவும் முன்னெச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருந்திட வேண்டும். யமுனை நதியில் பல்வேறுவிதமான கழிவுகள் கலப்பதுடன், லிண்டேன் என்கிற ரசாயனப் பொருள் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய அளவில் யமுனை நதியில் காணப்படுகிறது. அது கிருமிகளால் உற்பத்தியாகும் ஒரு வித நச்சுப் பொருளாகும்.  அதனை கொசு விரட்டி சாதனங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த நச்சுப்பொருள் யமுனை நதியில் வளரும் மீன்களை உட்கொள்ளுபவர்களிடத்திலும், யமுனை நதிக்கரையில் வளரும் புல்லைத் தின்கின்ற பசுக்களிடமிருந்து கறக்கப்படும் பால் மற்றும் அங்கே மேய்கின்ற ஆடு மாடுகளின் இறைச்சி ஆகியவற்றை உண்பவர்களிடமும்  மற்றும் அங்கே விளைகின்ற காய்கறிகள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்து பவர்களிடமும் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்ச் சேருகிறது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
``நீங்கள் சொல்கிற தகவல் மிகவும் பீதியை உண்டாக்குகிறதே, மாமா’’ என்று ரவி தன் கண்களை அகலமாகத் திறந்து கொண்டும், புருவங்களை உயர்த்திக்கொண்டும் கூறினான். அவன் மேலும், ``இங்கே மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இருக்க வேண்டுமே? அவர்கள் ஏன் எதையேனும் செய்யக்கூடாது?’’ என்று கேட்டான். இதற்கு சேகர் பதிலளித்தார்:
நல்லது. மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்கள் சட்டை பாக்கெட்டுகளை நிரப்புவதில் மட்டும்தான் குறியாக இருக்கிறார்கள்.  யமுனை நதியை சுத்தப்படுத்த வேண்டும் என்று ஒதுக்கப்படுகிற பல்லாயிரம் கோடி ரூபாயில் கணிசமான அளவு வஞ்சகர்களால் சுருட்டப்பட்டு விடுகின்றன. மேலும், இதுதான் அதிகாரிகளின் மனோபாவமும் ஆகும். உங்களுக்குத் தெரியுமா, மேலை நாடுகளில், ஆறுகளை மாசு படுத்துதல், ஏன், அதில் வீணான சாதாரண பொருள்களைத் தூக்கி எறிவதுகூட, மாபெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. அங்கே அவ்வாறு செய்பவர் எவராக இருந்தாலும் விட்டுவைக்க மாட்டார்கள். ஆனால் இங்கே? நாம் நதிகளையெல்லாம் மிகவும் புனிதமான தேவதைகளாகக் கருதுகிறோம். ஆயினும், நாம் அவற்றை மாசுபடுத்தவும் எவ்விதப் பொறுப்புணர்வுமின்றி   கேடு பயக்கவும் அனுமதிக்கிறோம்.
``தன்னைச் சுற்றி நடக்கிற அக்கிரமங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாலும், உங்களுடைய ஏழை யமுனா மாதா வெறும் பார்வையாளராகத்தான் இருக்கிறாள்,’’என்று சுமனிடம் ஏளனமாகக் கூறிய சேகர், மேலும் கிண்டலாக, ``இப்போதும் கூட மக்கள், தன்னையே சரிவரப் பார்த்துக்கொள்ள முடியாத இந்த உதவாக்கரை தேவதைக்கு, கண்மூடித்தனமாக தானியங்களையும், பலவிதமான பொருள்களையும் ஆற்றில் கொண்டுவந்து பிரார்த்தனைப் பொருட்களாக, கொட்டிக் கொண்டிருப் பதைப் பார்க்கலாம்.’’ இவ்வாறு மிகவும் இழிவாக யமுனா மாதாவைக் குறித்து சேகர் கூறியதைக் கேட்ட சுமன் மிகவும் மனந்தளர்ந்தார். அவளது நெஞ்சம் அளவுக்குமீறி அடித்துக் கொண்டது. இவை அனைத்தும் அவள் முகத்தில் நன்கு வெளிப்பட்டது.
அவளது நிலைமையைப் பார்த்து சங்கடப்பட்ட ரேகா அவளது கவனத்தைத் திருப்பும் நோக்கத்துடன், ``சுமன், தில்லியில் சுற்றுச்சூழல் மாசு அடைந்திருப்பது மிகவும் மோசமான பிரச்சனையாகும்,’’ என்றார்.
பையன்களைப் பார்த்துக்கொண்டே, சேகர் கூறினார்: ``உங்க மாமி சொல்வது சரிதான். நீங்க யமுனை ஆற்றையும் பார்த்தீர்கள், சிறிது தூரம் நடந்துபோனபோது  ஒருவிதமான புகைக்கரி உங்கள் மூக்கைத் துளைத்த தையும் உணர்ந்திருப்பீர்கள். உலகில் சுற்றுச்சூழல் மிகவும் மாசு அடைந்திருக்கிற மாநகரங்களில் தில்லியும் ஒன்றாக மாறிப் போயுள்ளது.  அதிர்ஷ்டவசமாக அவ்வப்போது நீதிமன்றங்கள் தலையிட்டு  கொஞ்சம் சரி செய்கின்றன. அவை சிஎன்ஜி வாயு மூலம் இயங்கிடும் வாகனங்களை  ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன. அதேபோன்று புகைகளைக் கக்கும் தொழிற்சாலைகளை மாநகரத்திற்கு  வெளியே கொண்டுசெல்லப்பட வேண்டும் என்றும் ஆணைகள் பிறப்பித்திருக்கின்றன. ஆனால், மக்களின் மனதில் புரையோடிப்போயுள்ள மோசமான எண்ணங்களை, அதாவது பிறரை ஏமாற்றி மோசடி செய்தல், அளவுக்கு மீறி சொத்து சேர்த்து சுகம் காண வேண்டும் என்கிற பேராசை போன்றவற்றிற்கு யார் சிகிச்சை அளிப்பது? எப்படி சிகிச்சை அளிப்பது? நீங்கள் சந்தைக்குச் சென்று பாருங்கள். வர்த்தகம் என்ற பெயரில் அவர்கள் உங்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் பார்க்க முடியும். நீங்கள் தனியார் மருத்துவமனைக்கு ஏதேனும் சிகிச்சைக்காக செல்லுங்கள். தேவையே இல்லாமல் அதிக செலவு பிடிக்கக்கூடிய ஏராளமான ஆய்வுகளை எடுக்க வேண்டும் என்று நீங்கள் வற்புறுத்தப்படுவதைப் பார்க்க முடியும்.  மருந்துக் கடைகள் போலி மருந்துகளை விற்பதையும் பார்க்க முடியும். இவ்வாறு போலி மருந்துகள் விற்கப்படுவது மருந்துக் கட்டுப்பாட்டாளர்களுக்குத் தெரியாது என்று சொல்வதற்கில்லை. உங்களுக்குத் தெரியுமா, இத்தகைய போலி மருந்துகள் முனிசிபல் ஆயுர்வேத மருத்துவ மனைகளில் கூட காணப்படுகின்றன. அந்த மருத்துவ மனைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரி தங்க பஷ்பம் போன்ற விலை உயர்ந்த மருந்துகளைக் கொள்முதல் செய்கின்றன. ஆனால் அவற்றை ஆராய்ந்து பார்த்தோமானால் தங்க பஷ்பத்திற்குப் பதிலாக அநேகமாக வெறும் சாம்பல் துகள்கள் மட்டுமே இருப்பதைக் காண முடியும்.’’
``தலைநகரம் என்ன இப்படி இருக்கிறது!’’ என்று ரவி ஆச்சரியப்பட்டான். பின்னர் அனைவரும் சற்றே ஓய்வெடுப்பதற்காக எழுந்தபோது, சேகர் அலுவலகத்திற்கு விரைந்தார்.  ரேகா தங்கள் தோட்டத்தில் இருக்கின்ற பல்வகையான பழ மரங்களிலிருந்து செய்திட்ட ஜாம் தடவிய உணவுப் பதார்த்தங்களைக் கொண்டுவந்தபோது, மிகவும் மகிழ்ச்சியுடனும் நன்றியறிதலுடன் பிரதீப் அந்தத் தட்டை எடுத்துக் கொண்டான். மிகவும் இனிப்பாக இருந்த அவற்றை மென்றுகொண்டே, ``இந்த நேரத்தில் இதைச் சாப்பிடுவது ரொம்பவும் நன்றாக இருக்கிறது. இங்கே மிகவும்   இறுக்கமாக இருக்கிறது,’’ என்றான். ஒருவேளை மழைக்காலம் தில்லியை விரைவில் தாக்கக்கூடும்  என்று அபி யூகித்தான். இதற்குள் அங்கிருந்த நாய்க்குட்டிகள் விருந்தினர்களிடமும் சகஜநிலைக்கு வந்துவிட்டதால், சகோதரர்கள் இருவரும் அவற்றுடன் நட்புடன் விளையாடத் தொடங்கிவிட்டார்கள்.
பகல்பொழுது மறைந்து மாலை வந்தது. சுமனும் ரேகாவும் சிவன் கோவிலுக்குச் சென்றார்கள். ஆயினும், பையன்கள் வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். அவர்கள் புல்வெளியில் நாய்க்குட்டிகளுடன் விளையாடத் தொடங்கிவிட்டார்கள்.  அபியின் கட்டளைகளுக்கு அவை கீழ்ப்படிவதைக் கண்டு பிரதீப் மிகவும் வியப்படைந்தான். அவன் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பொருள் அவற்றுக்கும் தெரிந்திருந்தன. பிரதீப், அபியிடம் எந்த அளவிற்கு இந்த நாய்க்குட்டிகளுக்கு இவை தெரியும் என்றும், எப்படி இவை எல்லாவற்றையும் அவை கற்றுக் கொண்டன என்றும் கேட்டான். அபி, அவனுக்குக் கூறினான்:
உனக்குத் தெரியுமா?  சராசரியாக ஒரு நாய் ஓர் இரண்டு வயது குழந்தையைப் போன்றது. அவற்றால் சுமார் 165 இலிருந்து 200 வார்த்தைகள் வரை கற்றுக்கொள்ள முடியும்.  எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்  ஃப்ரூட்டிக்கு மேலும் அதிக வார்த்தைகள் தெரிந்திருக்கலாம். புஜ்ஜியும் கூட மிகவும் புத்திசாலிதான். பாப்லு இப்போதும் கற்றுக்கொண்டிருக்கிறான். இந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் பெயரும் அவனுக்குத் தெரியும். அவைகள் சொந்தமாகவும் புதுப்புது வார்த்தைகளைக் கற்றுக்கொள்கின்றன. இவ்வாறு கற்றுக்கொள்ளும்போது சிலவற்றிற்கு அவை பரிசுகள் வாங்குவதும் உண்டு, ஒரு சிலவற்றிற்கு அன்புத் தண்டனைகள் பெறுவதும் உண்டு.
இவ்வாறு இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, கோவிலுக்குச் சென்ற இரு பெண்மணிகளும் கைகோர்த்துக் கொண்டும், சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் திரும்பிவிட்டார்கள். ரேகா வாங்கி வந்த தின்பண்டங்களை காலி செய்த பின்னர் பையன்கள் வெளியே உலாவச் சென்றுவிட்டார்கள். வழியில், தொழிலாளர்கள் நடைபாதைகளில்  மூங்கில் கம்புகளால் வரிசையாக  அமைக்கப்பட்ட தற்காலிக ஷெட்டுகளைக்  கடந்து அவர்கள் சென்றார்கள்.      அவற்றின் உச்சி நீலநிற பிளாஸ்டிக் தாள்களால் மூடப்பட்டிருந்தன. உள்ளுக்குள் 40 வாட் குண்டு பல்புகள் எரிந்துகொண்டிருந்தன.
அவர்கள் வீடு திரும்புகையில் சேகர் வீட்டிற்குத் திரும்பி இருந்தார். தேநீரை அருந்திக்கொண்டிருந்த அவர், ``இன்றைய பகல்பொழுது எப்படிக் கழிந்தது?’’ என்று அவர்களை முகத்தில் புன்னகை ததும்பக் கேட்டார். ``நன்றாக இருந்தது. மிக அற்புதமான ஜாம் தடவிய உணவுப் பண்டங்களைச் சாப்பிட்டோம். பின்னர் நம் நாய்க்குட்டிகளுடன் விளையாடினோம்,’’ என்று ரவி உற்சாகத்துடன் கூறினான். பின்னர், நடைபாதைகளில் குடிசைகள் அமைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிற ஏழை மக்கள் நினைவு வந்ததும் மிகவும் அக்கறையுடன், அங்கிருந்த ஆட்கள் காலையில் அங்கு நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரிகளின் குழாய்களிலிருந்து வந்த தண்ணீரில் எப்படிக் குளித்துக் கொண்டிருந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டான். அவர்கள் அவர்களின் நிலை குறித்து மிகவும் வருத்தப்படுவதைக் கண்டுகொண்ட சேகர் அவர்களிடம், ``உங்களுக்குத் தெரியுமா? கடும் குளிர்காலத்தில்கூட அவர்கள் இப்படித்தான் குளிப்பார்கள், என்பது உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார். மிகவும் வியப்புடன் தன்னைப் பார்த்த அவர்களிடம் அவர் விவரித்தார்:
ஆம், அவர்கள் அப்படித்தான் குளிப்பார்கள். அப்போதுதான், அரசு ஊழியர்களைப் போல அல்லாமல்  விரைந்து அவர்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களுக்குச்  செல்ல முடியும். உங்களுக்குத் தெரியுமா?  இங்கேயெல்லாம் அரசு ஊழியர்கள் பனி அல்லது போக்குவரத்தைக் காரணம் காட்டி 11 மணி அளவிற்குத்தான் அலுவலகங்களுக்கே போய்ச் சேருவார்கள்.    பின்னர் தங்கள் கைகளில் தேநீர்க் குவளைகளுடன், வெயிலில் சிறிது நேரம் காய்ந்து கொண்டிருப்பார்கள். பின்னர்தான் வேலை செய்யத் தொடங்குவார்கள். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நீண்ட உணவு இடைவேளையின் போது மீண்டும் வெயில் காயப் போய் விடுவார்கள். பின்னர், மீண்டும் ஒரு மணி நேரம் வேலை பார்ப்பார்கள். பின்னர் அவசரம் அவசரமாக கோப்புகளை எல்லாம் கட்டி வைத்துவிட்டு, அப்போதும் பனியையும், குளிரையும் மற்றும் மாலை நேரத்து போக்குவரத்து நெரிசலையும் காரணம் காட்டி,  நான்கு மணிக்கெல்லாம் திரும்பத் தொடங்கி விடுவார்கள். இதுதான் தில்லியின் வாழ்க்கை என்று அநேகமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
 ஆனால், ஒப்பந்தக்காரர்கள் இத்தகைய சுதந்திரத்தைத் தன் தொழிலாளர்களுக்கு அனுமதிக்க மாட்டார்கள். எனவே, அவர்களை அதிகாலையிலேயே அவர்கள் வீட்டுப்பெண்கள் வேலைக்குச் செல்லத் தயார்படுத்திவிடுவார்கள். சால்வைகளால் தங்கள் உடலைப் போர்த்திக்கொண்டு, காலி சாக்குப் பைகளை கீழே விரித்து அதில் உட்கார்ந்துகொண்டு,  மூன்று செங்கற்களை வைத்து தங்களால் உருவாக்கப்பட்ட அடுப்பில், காடுகளிலும், தெருக்களிலும் சேகரித்த சுள்ளிகளைக் கொண்டு நெருப்பு உருவாக்கி, அதிவிரைவான வேகத்தில் சப்பாத்திகளை  போடத் துவங்கி விடுவார்கள். அவசர அவசரமாக அவற்றை விழுங்கிவிட்டு, மதியத்திற்கும் கொஞ்சம் கட்டி எடுத்துக்கொண்டு, ஆண்கள் தங்கள் சைக்கிள்களில் வேலைக்குப் புறப்பட்டுச் சென்று விடுவார்கள்.
ஆயினும், ரேகா, ``நான் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம், தங்களிடம் உள்ள டிரான்சிஸ்டர் ரேடியோக்களில் இந்திப் பாடல்களைக் கேட்ட வண்ணம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படி எல்லைகளில் நிற்கும் ராணுவத்தினர் போன்றும், காடுகளில் வாழும் பழங்குடியினர் போன்றும் எது கிடைக்கிறதோ, அதில் திருப்தி கொள்வது என்ற மனோபாவத்துடன் அவர்கள் இருப்பதுபோலவே எனக்குத் தோன்றும்,’’ என்றார்.
சேகர் ஏழைகள்பால் எந்த அளவிற்கு அக்கறை கொண்டிருந்தார் என்பது வீட்டில் இருந்த அனைவருக்குமே அவர் மேலும் பேசுகையில் தெரிந்தது:
நல்லது, சற்றே சமூகத்தை ஒட்டுமொத்தமாகப் பாருங்கள். பிச்சைக்காரர்கள், மிகவும் வறிய நிலையில் இருக்கின்ற ஏழைகள், தொழிலாளர்கள், ஊழியர்கள், மத்தியதர வர்க்கத்தினர், பணக்காரர்கள் மற்றும் மிகப்பெரிய பணக்காரர்கள். முதலில் கூறியவருக்கும் கடைசியில் கூறியவருக்கும் இடையேயுள்ள இடைவெளி என்ன என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? சிலர் தங்களுடைய தற்போதைய நிலையிலிருந்து எப்படியாவது மேலும் பணக்காரர்களாக மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது நேர்மையான வழிகளாகத்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் பார்ப்பது இல்லை. எவ்வளவு இழிவான வழியாக இருந்தாலும் சரிதான். அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவது இல்லை. சில அரசு ஊழியர்கள், நடைபாதைக் குடிசைகளில் நாம் பார்த்த தொழிலாளர்களைவிட நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள். அவ்வாறு தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நல்லமுறையில் ஏற்றுக்கொண்டு வசதியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும் சிலர் மிகப்பெரிய அளவிற்குப் பணக்காரர்களாக மாற வேண்டும் என்ற பேராசையின் காரணமாக தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சகலவிதமான இழிசெயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.  இவ்வாறு இழிசெயல்களில் ஈடுபடுவோரில் எவரேனும் ஒருவர் என்றாவது கையும் களவுமாகக் கைது செய்யப்படலாம் என்பது இவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.  இவ்வாறு எவரேனும் பிடிக்கப்பட்டால்கூட அவர்கள் தண்டிக்கப்படுவது என்பது மிகவும் அபூர்வமாகத்தான் இருக்கிறது.
``நல்லது, ஏழை மக்களுக்காக அரசாங்கம் பல நல்ல திட்டங்களைத் தீட்டி அமல்படுத்தியபோதிலும், ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள். காரணம் என்ன? ஏனெனில் அவர்களுக்காகத் தீட்டப்படும் திட்டங்கள் எல்லாமே முடிவில் ஊழலிலும், மோசடிகளிலும் முடிவதுதான்.’’ இவர் கூறுவதையெல்லாம் பையன்கள் மிகவும் அதிர்ச்சியுடனும் அதே சமயத்தில் ஆர்வத்துடனும் கேட்பதைக் கண்டு, சேகர் தொடர்ந்தார்:
ரேஷன் கார்டுகள் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கப்படுவதைப்பற்றி நாம் அனைவரும் கேள்விப் பட்டிருக்கிறோம். அதேபோன்று ரேஷன் கடைகளுக்கு வரும் உணவு தான்யங்களும் தரமற்றவைகளாக இருக்கின்றன. நல்ல பொருள்கள் அனைத்தும் சந்தைக்குத் திருப்பிவிடப்பட்டு விடுகின்றன.  இதற்கு மிகவும் சரியான உதாரணம் அருணாசலப் பிரதேசம்.  மிகவும் நெடுந்தொலைவில் மலைகளில் உள்ள மக்களுக்கும் மான்ய விலையில் உணவு தான்யங்கள் சென்று அடைய வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அங்கு உணவு தான்யங்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்துக் கட்டணங்களை அரசாங்கமே ஏற்றுக்கொண்டது. எதார்த்தத்தில், எந்த உணவு தான்யமும் அங்கே எடுத்துச் செல்லப்படவில்லை. அனைத்தும் சந்தைக்குத் திருப்பிவிடப்பட்டுவிட்டன. அதே சமயத்தில், ஒப்பந்தக்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட கும்பல் ஒன்று, உணவு தான்யங்கள் டிரக்குகளில் குவஹாத்தியிலிருந்து அருணாசலப் பிரதேசத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து கோவேறுக் கழுதைகள் மற்றும் போர்ட்டர்கள் மூலமாக நெடுந்தொலைவில் உள்ள மலைப்பகுதிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும்  பொய்க் கணக்குகள் எழுதப்பட்டு அனைத்துத் தொகையும் இக்கும்பலில் உள்ளவர்களுக்குள் பங்குபோட்டுக் கொள்ளப்பட்டது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றொரு பாராட்டத்தக்க திட்டமாகும். எங்கெல்லாம் அது நேர்மையாக அமல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் கிணறுகளைத் தோண்டுவதற்காகவும், பாதைகளை செப்பனிடுவதற்காகவும், குளங்களைத் தூர்வாரியதற் காகவும், தங்கள் நாட்கூலித் தொகையை பெற்றுக் கொள்கிறார்கள்.  ஆனால், பல இடங்களில் என்ன நடக்கிறது என்பது வேறு. எந்த வேலையையும் எங்கேயுமே செய்யாமல், கிராமப்புற மக்களுக்குக் கொடுக்க வேண்டிய கூலியில் பாதியை மட்டும் கொடுத்துவிட்டு, மீதித் தொகையை இந்நிதியைக் கையாளுகிறவர்கள் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, தொழிலாளர்களும் சோம்பேறிகளாக மாறிவிடுகிறார்கள். எப்போதாவது நிலவுடைமையாளர்களால் தங்கள் நிலத்தில் வேலை செய்ய இவர்கள் அழைக்கப்படும்போது இவர்கள் நிலத்தில் வேலை செய்வதற்குப் போக மறுத்துவிடுகிறார்கள். இதனால் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, நாட்டின் ஏதாவது ஒரு மூலையில், மதிய உணவு உட்கொண்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்கள், சிலர் இறந்துவிட்டார்கள் என்றும் இதற்குக் காரணம் அவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி அல்லது தேள் கிடந்தது என்றும், அல்லது அவர்களுக்கு  கலப்படமான உணவுப் பொருள்கள் அனுப்பப்பட்டு அவற்றை சாப்பிட்டதால்தான் அவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படுவதையும் கேள்விப்பட்டிருப்போம். அரசாங்க அதிகாரிகள்  எந்த அளவிற்கு தடித்தனமாகவும் பொறுப்பின்றியும் நடந்துகொள்கிறார்கள் என்று பாருங்கள்.
மிகவும் வெறுப்புணர்ச்சியுடன் அவர் மேலும், ``இவர்களுக்கு மனச்சாட்சி என்பதே இருக்காது. இவர்கள் விலங்குகளைக்கூட விட்டுவைப்பதில்லை,’’ என்று கூறி, கால்நடைத் தீவன ஊழல் பற்றி அதிகம் பேசப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
நாளொன்றுக்கு ஒரு பறவைக்குத் தீவனமாக ஐந்து கிலோ கிராம் கால்நடைத் தீவனம் கொள்முதல் செய்யப்பட்டதாக உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஆனால் அதுதான் நடந்தது. கால்நடைத் தீவன ஊழலின் அளவு அந்த அளவிற்கு மிகவும் பெரிய அளவிலான ஒன்றாகும். மக்கள், மிகப்பெரிய அளவில் தங்களிடம் கால்நடைகள் இருப்பதாகவும் அவற்றிற்குக் கால்நடைத் தீவனங்கள், மருந்துப்பொருள்கள், கால்நடைப் பராமரிப்புக்கான உபகரணங்கள்  வேண்டும் என்றும் போலியாக ஆவணங்கள் உருவாக்கி கொள்முதல் செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மிகச் சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்த மோசடி, நாளடைவில்  இதில் ஏராளமான அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் இணைந்த ஒரு முழுமையான மஃபியா நடவடிக்கையாக வளர்ந்துவிட்டது. ஒட்டுமொத்தத்தில் இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக சுமார் 950 கோடி ரூபாயை சுரட்டிவிட்டார்கள். மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) இவை தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்துள்ள போதிலும், அவற்றின் மீதான விசாரணை இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.
``இலஞ்சமும் ஊழலும் எங்குதான் இல்லை. எல்லா இடத்திலும்தான் இருக்கின்றன. சந்தேகமில்லை. ஆனால், நீங்கள், இப்படி எல்லாவற்றையும் கூறி இந்தக் குழந்தைகளை மிரட்சி அடைய வைக்கிறீர்களோ என்று கருதுகிறேன்,’’ என்று ரேகா மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி மிரண்டுபோயிருந்த  பையன்களைப் பார்த்துக் கொண்டே சொன்னார். ரவி, அவரிடம், ``நிச்சயமாக இல்லை, மாமி. இந்த விஷயங்கள் எங்கள் கண்களைத் திறக்க மட்டுமே,’’ என்றான்.
ஆயினும்கூட, ரேகா சொன்னதைச் சரியான விதத்தில் உணர்ந்துகொண்ட சேகர், அவர்களைச் சந்தோஷப்படுத்தும் முயற்சியில், ``இதற்காக எல்லாம் வருத்தப்பட வேண்டும். இது வாழ்க்கையின் உண்மை நிலை மட்டுமே. மேலும், உங்களுக்குத் தெரியுமா? இதுபோன்ற நிலைமைகள் காலம் காலமாக இருந்துதான் வந்திருக்கின்றன,’’ என்று கண்களில் ஒளிவீச சிரித்த முகத்துடன் கூறிவிட்டு, அவர்களிடம், ``நீங்கள் அக்பரின் அரசவையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு  இருந்த ஒருவன் குறித்து, அக்பரின் புகழ்பெற்ற அமைச்சரான பீர்பால் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஒரு கதை உண்டு. அதை நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?’’ அவர்கள் தெரியாது என்பது போல் தலையை ஆட்டியதும், அவரது கதையைச் சொல்லத் தொடங்கினார்:
ஒருவன் எங்கே சென்றாலும் பணம் பண்ணிவிடுவான்.  அந்த அளவிற்கு அதிபுத்திசாலி அவன். அவனை  என்ன  செய்வது என்றே தெரியாமல் அனைவரும் விழித்தார்கள். அப்போது பீர்பால் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். இதில் அவனுக்கு இலஞ்சம் வாங்குவதற்கான வாய்ப்பு இருக்காது என்று அவர் நினைத்தார். ஒவ்வொரு நாளும் யமுனை நதியில் வருகின்ற அலைகளை எண்ணி, அறிக்கை அளிக்குமாறு அவன் கேட்டுக் கொள்ளப்பட்டான். ஆம், அந்தக்காலத்தில் யமுனை நதி இந்த அளவிற்கு மாசு அடைந்து வீணாகிவிட வில்லை. சரக்குப் படகுகளும், பயணிகள் படகுகளும் மிகவும் சௌகரியமாக இயங்கிக் கொண்டிருந்தன.
அலைகளை எண்ணுவதற்காகப் பணிக்கப்பட்ட அந்த எமகாதகப் பேர்வழியும்  தனக்கு இடப்பட்ட கட்டளையை செவ்வனே செய்து கொண்டிருந்தான். ஆயினும் மனதில் இதில் எப்படிக் காசு பண்ணுவது என்கிற சிந்தனைதான். விரைவில் அவனுக்கு ஒரு யோசனை உதித்தது. அங்கே போய்க்கொண்டும், வந்து கொண்டும் இருந்த படகுகளை நிறுத்தி, படகோட்டிகளிடம் அரசர் தனக்குப் பிறப்பித்திருக்கும் கட்டளையைக் காட்டினான். இவ்வாறு படகுகள் போய்க்கொண்டும், வந்துகொண்டும் இருப்பதால் அரசரின் கட்டளையை தன்னால் ஒழுங்காக நிறைவேற்ற முடியவில்லை என்று அவர்களிடம் கூறினான். இதனால் அவனிடம் எவரும் கேள்வி கேட்கமுடியவில்லை.  பின்னர், மெதுவாக, தங்களுக்கு ஏதேனும் சலுகை காட்டுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டு சில நன்கொடை களையும் அவனுக்கு அளித்தார்கள். அவன் தயங்குவது போல் தன்னைக் காட்டிக்கொண்டான். அதனைத் தொடர்ந்து அவர்கள் நன்கொடைத் தொகையை அதிகரித்த பின்னர், அவர்களுக்காக மனம் இரங்குவதுபோல் காட்டிக் கொண்டான். இறுதியில் அவனுக்கு மிகவும் சந்தோஷம். இதற்குமுன் அவன் சம்பாதித்த அளவைவிட இப்போது அதிகமாகவே அவனுக்குக் கிடைத்தது.
பின்னர், சேகர், பையன்களிடம், ``இவ்வாறு இழிநடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து கூச்ச நாச்சமின்றி இருப்பவர்கள் ஊழல் புரிவதற்கான வழிகளை எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள். அர்த்த சாஸ்திரம் எழுதப்பட்ட காலத்திலேயே, சாணக்கியன்  பொது ஊழியன் குறித்து குறிப்பிடுகையில் அவன் தண்ணீரில் உள்ள மீனுக்கு ஒப்பானவன் என்று குறிப்பிட்டு, ``மீன் தண்ணீரிலிருக்கும்போது அது தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறதா அல்லது தூங்கிக் கொண்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியாது. அதேபோலத்தான் பொது ஊழியனும்,’’ என்று குறிப்பிட்டிருப்பார். இவ்வாறு சேகர் கூறிய அனைத்தையும் கேட்ட பிரதீப் முகத்தில் புன்னகை மலர்ந்தது. ரேகா கொண்டுவந்து கொடுத்த சூப்பைக் குடித்துக்கொண்டே அவர் கூறியவற்றை ரசித்தான்.
ஆனால், ரவி, இன்னமும் விசனத்துடனேயே காணப்பட்டான். அவன் சேகரிடம், ``மாமா, ஒரு பக்கம் ஏழைகள் மிகவும் பரிதாபகரமான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக, தில்லியில் உள்ள பணம் படைத்தவர்கள் மிகவும் ஆடம்பரமான முறையில் வாழ்வதாக, அபி, எங்களிடம் கூறினான். ஏன், அவர்கள் தாங்கள் வளர்க்கும் செல்ல நாய்களைக்கூட ஸ்பெஷல் ரெஸ்டாரெண்டுகளுக்கு எடுத்துச் செல்வார்கள் என்று கூறினான். அந்த அளவுக்கு அவர்களிடம் செல்வம் இருக்கிறதா?’’
ரேகா கூறினாள்:  ``அபி சொல்வது மிகவும் சரி. இங்கேயுள்ள பணக்காரர்கள் மிகவும் வசதி படைத்தவர்கள். தங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்று அவர்களுக்கே தெரியாது.  செல்வங்களா, இதுகுறித்து எனக்குக்கூட ரொம்ப நாட்கள் தெரியாமல்தான் இருந்தது. என்னுடைய தோழி ஒருத்தி அவளுடைய செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு என்னை அழைத்திருந்தாள். அப்போதுதான் நான் இந்தக்கூத்தையெல்லாம் பார்த்தேன். அந்த நாய்க்குத்தான் என்னென்ன அலங்காரங்கள்? ஆடை அணிகலன்கள்? நவநாகரிக டிசைனர்களைக் கொண்டு அவற்றின் ஆடைகள் தைத்து அணிவிக்கப்பட்டிருந்தன. அவற்றின் சடைகள் கூட ஸ்பெஷல் பார்லர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டன. இன்னும் என்னென்னவோ? மிக அதிக விலையுள்ள டானிக்குகள் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டன. நாமும் விலங்குகளை நேசிக்கிறவர்கள்தான். ஆனால் அவர்கள் அவற்றிற்கு செலவு செய்வது இருக்கிறதே, நம்மால் எல்லாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.’’
``தில்லி என்பது ஏழைகள் சொல்லொண்ணா துன்பங்களுடனும், பணக்காரர் வீட்டு செல்ல நாய்கள் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையும் வாழும் ஓர் இடம்,’’ என்று சொல்லலாம்தானே என்று ஒரு முதிர்ந்த சமூக தத்துவஞானிபோல இளம் மருத்துவ மாணவனான அபி சொன்னான்.
சேகர் தன்னுடைய சூப்பின் கடைசி சொட்டையும் ஸ்பூனில் எடுத்து கடைசியாகக் குடித்து காலி செய்துவிட்டு, பெருமூச்சு விட்டுக்கொண்டே கூறினார்: ``கல்யாண ஊர்வலத்துக்கு ஹெலிகாப்டர் அன்பளிப்பாகக் கொடுப்பவர்கள்கூட தில்லியில் உண்டு. இதில் மிகவும் வருந்தவேண்டிய அம்சம் என்னவெனில் இவ்வாறு இவர்கள் பணத்தைத் தண்ணீராக வாரியிறைப்பது ஒரு தொத்துநோயாகவே மாறி, பலரது வாழ்வை இங்கே சூறையாடிவிடுகிறது. திருமண வைபவங்களில் பணத்தை மிகவும் ஊதாரித்தனமாக செலவு செய்வது என்பது இங்கே தங்களுடைய கவுரவத்தைக் காட்டும் ஓர் அடையாளமாக மாறியிருக்கிறது. ஒரு மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவனும் கூட பல்வேறு இழிவழிகளிலும் பணத்தைத் தேடி திருமணங்களை மிகவும் ஆடம்பரமாகச் செய்கிறான். தன்னை மிகவும் பகட்டானவனாகக் காட்டிக்கொண்டு, அதைப்பற்றியே பீற்றிக்கொண்டிருப்பான். கடைசியில், வீதியில் இருக்கும் ஏழைகள்தான் இவ்வளவையும் வெறும் பார்வையாளர்களாக இருந்து பார்த்துக்கொண்டும், இவர்களால்  ஏற்படுத்தப்படும் அநியாய சத்தம்,  சுற்றுச் சூழல் மாசு மற்றும் பலவிதமானவற்றையும் சகித்துக் கொண்டும் இருக்க வேண்டிய நிலையில் இருந்து வருகிறார்கள்.’’
பிரதீப் மிகவும் சீரியசாகவே கேட்டான்: ``தில்லியில் உள்ள பணக்காரர்களின் மனைவிமார்கள் உண்மையிலேயே வெற்றி பெற்ற பெண்களாகவே இருக்க வேண்டும் என்பதுவே இதன் பொருள், இல்லையா?’’
பின்னர், தான் சரியாகப் பேசிவிட்டதுபோலத் தன்னை மற்றவர்கள் பார்ப்பதைப் பார்த்து, சிரித்துக் கொண்டே, ``ஒரு வெற்றிபெற்ற மனிதன் என்பவர், அவன் மனைவி செலவு செய்வதைவிட அதிகம் சம்பாதிப்பவன். அதேபோன்று ஒரு வெற்றிபெற்ற பெண்மணி என்பவள் அத்தகைய ஆணைக் கண்டுபிடிப்பவள், அப்படித்தானே,’’ என்றான்.
எல்லோரும் அவன் கூறியதைக் கேட்டு சிரித்து விட்டார்கள். ரேகாவும் தான் குடித்துக்கொண்டிருந்த சூப்பைக் காலி செய்துவிட்டு, ``சேகர், நாம் ஏற்கனவே இந்தப் பையன்கள் மண்டையில் நிறையவே ஏற்றி விட்டோம் என்றே நினைக்கிறேன். இப்போது நாம் நிறுத்திக்கொள்ளாவிட்டால், இவர்களுக்காக ஸ்பெஷலாக நான் தயார் செய்திருக்கிற இரவு உணவை இவர்களால் உண்டு ஜீரணித்துக்கொள்ள முடியாது,’’  என்றார். பின்னர் எல்லோரும் சிரித்துக்கொண்டே, இரவு உணவை அருந்த அமர்ந்தார்கள். அங்கே அவர்கள் அனைவரும் தங்கள் குடும்ப விஷயங்களை மட்டுமே பேசினார்கள். முடிவில், ரேகா ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்ட பொன் னிறமாக இருக்கும் பங்கனபள்ளி மாம்பழங்களைத் துண்டு துண்டாக நறுக்கி எடுத்து வந்தார். அப்போது அது சந்தையில் மிகவும் அதிகமாக விற்றுக்கொண்டிருந்தது. ஒரு சில நாட்களுக்கு  மக்கள் மத்தியில் ஆட்சி செய்யும் ஒன்றாக அது இருந்தது.
பின்னர், புல்வெளியில் காபி அருந்தும் வேளையில் அவர்கள் அரட்டை அடித்துக்கொண்டிருந்த சமயத்தில், ரவி சட்டவிரோதமாக செல்வம் சேர்ப்பவர்கள் குறித்து வேறேதேனும் சம்பவம் இருக்கிறதா என்று சேகரை உசுப்பேற்றிக்கொண்டிருந்தான்.  சேகர் தன் பணிக்காலத்தில் தான் எதிர்கொண்ட மேக ராணி என்பவரது நிகழ்ச்சி குறித்து விவரிக்கத் தொடங்கினார். 
மேக ராணி என்பவர் வருமான வரி ஆணையராக மிக உயர்ந்த பதவியில் இருந்தார்.  அவள் கணவரும் ஒரு சீனியர் இன்ஜினியர்தான்.  பொருளாதார ரீதியாக இவர்கள் இருவருமே நல்ல வருமானத்துடன் வாழ்பவர்கள்தான். அவர்களுக்கு ஒரேயொரு மகன்தான். அவன் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். ஆயினும், நேர்மையாக வாழ்வதற்குப் பதிலாக, பேராசை பிடித்த அந்தப் பெண் மேக ராணி, வருமான வரி ஏய்ப்போரிடம் சமரசம் செய்து கொண்டு, ஏராளமாக சம்பாதித்தார். எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அப்படித்தான் கூறின.
அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருடைய வீடு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அவரது வங்கி `லாக்கர்’ ஒன்றும் சோதனையிடப்பட்டது. அதிலிருந்து வெளியே தெரியாமல் அவர் வைத்திருந்த சொத்துக்கள் குறித்தும்  தெரிய வந்தது.
அவ்வாறானா சொத்துக்களில்  மிகவும் வசதி படைத்தோர் வாழும் தெருவில் உள்ள அரண்மனை போன்ற வீடும் ஒன்றாகும். அந்த வீட்டின் சாவிக் கொத்து குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று அந்த வீட்டில் காவலராக பணிபுரிந்து வந்தவர் தெரிவித்தார். மேக ராணியும் அவரது கணவரும் அது தங்கள் வீடு இல்லை என்று ஆரம்பத்தில் மறுத்தார்கள். ஆயினும் அண்டை வீட்டுக்காரர்கள் எங்களிடம் இரகசியமாக இது அவர்கள் வீடுதான் என்பதை உறுதிப்படுத்தினார்கள். 
அந்தப் பெண்மணி கைது செய்யப்பட்டபோது உடனே மூர்ச்சையாகிவிட்டார். தனக்கு என்னவோ செய்கிறது என்று நடித்தார். வேண்டுமென்றே, அரசு மருத்துவமனைக்கு சென்றார். ஆயினும் அங்கே மருத்துவ மனையில் இருந்த மருத்துவ அலுவலர் அவரை ஜெனரல் வார்டில் அனுமதிப்பார் என்று அந்தப்பெண்மணி கிஞ்சிற்றும் கூட நினைத்துப்பார்க்கவில்லை. ஆனால், என்ன துரதிர்ஷ்டம்? அதுதான் நடந்தது. அவர் எந்த அளவிற்கு அதிர்ச்சி அடைந்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள்.  சுகபோக வாழ்க்கையில் பழக்கப் பட்டிருந்த அந்தப்பெண்மணி அரசாங்க மருத்துவமனையில் இருந்த நிலைமை குறித்து இதற்குமுன்  நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது.
அதேசமயத்தில், அந்தப் புதிய பங்களாவின் கதவுகளில் இருந்த பூட்டுகள் உடைத்துத் திறக்கப்பட்டன. அனைத்து அறைகளும் காலியாக இருந்தன. ஒரேயொரு அறை மட்டும் பூட்டி இருந்தது. அந்தப் பூட்டும் உடைத்துத் திறக்கப்பட்டது. உள்ளே, இரு சூட்கேசுகள் மட்டும் இருந்ததையும் அவை நம்பர் பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்ததையும் புலனாய்வு டீம் பார்த்தது. பூட்டைத் திறப்பதற்கான எண்கள் என்ன என்பது குறித்து எதுவும் தங்களுக்குத் தெரியாது என்று மேகராணியின் கணவரும், அவரது மகனும் ஆரம்பத்தில் தெரிவித்தார்கள். அந்தப் பையனிடம் உன் எதிர்கால வாழ்வைக் கெடுத்துக் கொள்ளாதே, உண்மையைச் சொல்லிவிடு என்று அறிவுறுத்தியபின் அவன் உண்மையைக் கக்கிவிட்டான். பின்னர் சூட்கேசுகளைத் திறந்து பார்த்தபோது, கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் உள்ளே இருந்தன. எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கக்கூடிய வகையில் அதற்குள் ஒரு கோடி ரூபாய் முழுமையாக இருந்தது.
அந்த சமயத்தில், ரேகா சிரித்துக் கொண்டே,``உங்களுக்குத் தெரியாமா?  அடுத்த நாள், மேக ராணி, புலனாய்வு அதிகாரிக்கு ஒரு செய்தி அனுப்பி இருந்தார். அதில் அவர் தன்னை மருத்துவ மனையிலிருந்து மீண்டும் லாக்-அப்பிற்கே மாற்றிவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.  அந்த ஒரு நாள் அரசாங்க மருத்துவமனை வார்டில் இருந்ததே அவளுக்குப் பெரிய தண்டனையாக இருந்திருக்கிறது. எந்த போலீஸ் லாக்-அப்பைவிட மிகவும் மோசமாக அரசு மருத்துவமனை வார்டுகள் இருந்தன,’’ என்றார். சுமனும் பையன்களும் விழுந்து விழுந்து சிரிப்பதைப் பார்த்த சேகர், தொடர்ந்தார்: ``புலனாய்வு டீம் அவரது வேண்டுகோளை உடனே நிறைவேற்றியது. அவர்களுடைய உத்தி இதில் நன்றாகவே வேலை செய்தது.’’
``மாமா, இவ்வளவு பெரிய அதிகாரி இந்த அளவிற்கு பேராசை பிடித்தவராக இருந்திருப்பார் என்பதை நம்பவே முடியவில்லை,’’ என்று பிரதீப் ஆச்சர்யப்பட்டான். அவன் முகத்தில் அந்த அதிகாரி குறித்து மிகவும் கேலியாக அவன் கருதிக்கொண்டிருந்தது அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.
``இது மிகவும் மோசமான விஷயம்தான். உண்மையில் இது மிகவும் சீரியசான பிரச்சனையாகும்.  நன்கு ஊதியம் வாங்குபவர்களே, நல்ல நிலையில் உள்ள மூத்த அதிகாரிகளே, இவ்வாறு நேர்மையற்றவர்களாக இருந்தால், அவருக்குக் கீழே உள்ளவர்கள் எப்படி நேர்மை யாளர்களாக இருப்பார்கள்? இவ்வாறு, ஊழலின் ஊற்றுக்கண் மேலிருந்துதான், மேலிருந்து மட்டுமேதான் தொடங்குகிறது.  ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டுதான், ஒரு காவல்நிலைய அதிகாரியை ஒரு காவல்துறை ஆணையர் நியமிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். பின் அந்த காவல் நிலைய அதிகாரியிடமிருந்தும் அவருக்குக் கீழ் வேலை செய்பவர்களிடமிருந்தும் என்ன நீங்கள் எதிர்பார்க்க முடியும்? அவர்களிடம் வரக்கூடிய பொதுமக்களை எந்த அளவிற்குக் கசக்கமுடியுமோ அந்த அளவிற்குக் கசக்கத்தான் அவர்கள் பார்ப்பார்கள். வரதட்சணை வழக்குகளில் காவல் நிலையத்தை நாடி வருபவர்கள், எந்த அளவிற்குத் துன்புறுத்தப்படுகிறார்கள், தெரியுமா?’     ’ என்று சேகர் தன் மனதில் உள்ளதை யெல்லாம் கொட்டித்தீர்த்தார். பின்னர், அவர் ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார். ``ஆயினும், நேர்மையான போலீஸ் அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அது அவர்களிடைய பிதுரார்ஜிதமாக இருந்து வரும் நேர்மைக் குணமாகும். அவர்கள் மிகவும் குறைந்த அளவு சம்பளம் வாங்கும் கான்ஸ்டபிள்களாகவோ அல்லது எழுத்தர்களாகவோ கூட இருக்கலாம். அத்தகையவர்கள் குறித்து கூறுகையில் நான் அவர்களுக்கு மிகவும் தலை வணங்குகிறேன். உண்மையில் நாம் அவர்கள் குறித்து பெருமைப்பட வேண்டும்,’’ என்றும் சேகர் கூறினார். பின்னர், அன்றைய விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய விதத்தில், ``நல்லது, இன்றைக்கு இது போதும் என்று கருதுகிறேன், நாம் பின்னர் மீண்டும் இது குறித்துப் பேசலாமா?’’ என்று கூறி விடை பெற்றார்.
``சரி, மாமா. ஆனாலும் அதற்கு முன்னால், தயவுசெய்து எனக்குச் சொல்லுங்க. இவ்வளவு பணத்தையும் வைத்துக்கொண்டு இவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்? ஒருவருடைய தேவைகள் என்பதே ஒரு வரையறைக்கு உட்பட்டதுதானே. பணத்துக்காக எப்போதும் அடங்காத ஆசை கொண்டிருப்பதே ஒருவிதமான நோய் இல்லையா?’’ என்று எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருக்கும் பிரதீப் மிகவும் சீரியசாகக் கேட்டான்.
சேகர், பிரதீப்பின் கூருணர்ச்சியைக் கண்டு மிகவும் பாராட்டிவிட்டு, ``பிரதீப், நீ நினைப்பது முற்றிலும் சரி. ஆரம்பத்தில் அவர்களுக்கு சில தேவைகள் இருக்கலாம். பின்னர் அதுவே பழக்கமாக மாறிவிடும்.  போகப்போக, அது பேராசையாக மாறிவிடும். காலப்போக்கில், அதுவே ஒரு வியாதியைப்போல அவனை நச்சரிக்கத் துவங்கிவிடும். தன்னுடைய தேவைகளின் அளவை ஒவ்வொரு தடவையும் உயர்த்திக்கொண்டே போவான். முதலில் ஒரு கார் வாங்க வேண்டும் என்று நினைப்பான். பின்னர் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கார். முதலில் ஒரு பங்களா. பின்னர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பங்களா.  முதலில் ஒரு கோடி ரூபாய் இருந்தால் போதும் என்று நினைப்பான். பின்னர், நூறு கோடி, அதன் பின்னர் ஆயிரமாயிரம் கோடி ரூபாய்கள் வந்தாலும் மனம் திருப்தியுறாது.  இவ்வாறு இருப்பதும் ஒரு நோய்தான். இது மனிதனுடைய பகுத்தறிவை, நல்லறிவை மழுங்கச் செய்துவிடுகிறது.’’ பின்னர் அவர் மேலும் தொடர்ந்தார்: ``செல்வத்தை செலவிடும் வழியாக மூன்றைக் கூறுவார்கள். தானம், போகம் மற்றும் நாசம். தானம் என்பது அல்லது தர்மம் செய்வது என்பது மிகச் சிறந்த வழி. போகம் என்பது அனுபவிப்பது. சுகபோகமாக வாழ்வது.  எந்த அளவிற்கு ஒருவனால் சுகபோக வாழ்வில் மிதக்க முடியும்? தன்னிடம் மிதமிஞ்சி இருக்கும் செல்வத்தை ஒருவன் பல்வேறு விதமான வழக்குகள் மூலம் செலவழிப்பான், அல்லது தேவையற்ற கெட்ட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி வீணடிப்பான் மற்றும் தன்னையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொள்வான். இவ்வாறு பணத்தை மிதமிஞ்சி சேர்த்திடுவோர் சோம்பேறிகளாகவும் எதற்கும் பயனற்றவர்களாகவும் மாறி தங்களைத் தாங்களே அழித்தும் கொள்வார்கள். நாசம் என்பது நாசமாய்ப்போவது. இது தவிர்க்க முடியாதது. இதிலிருந்து எவரும் தப்பவும் முடியாது.’’
``மாமா, பணத்தின் மேல் இவர்களுக்கு இருக்கும் பசி உண்மையிலேயே அளவுகடந்ததாகத்தான் இருக்க வேண்டும்,’’ என்று ரவி கூறினான்.
அவர்கள் பகாசுரன் போன்றவர்கள். நேற்று நீங்கள் மகாபாரதத்தில் பார்த்தீர்களே, அதிலே வரக்கூடிய பகாசுரன் போன்றவர்கள். அவனுக்கு இருந்ததைப்போலவே இவர்களும் பிரம்மாண்டமான முறையில் பசியெடுத்தவர்கள்,’’ என்று சேகர் ``ஹா, ஹா, ஹா’’ என்று சிரித்துக்கொண்டே அவர்களிடம் கூறினார். ``இவர்கள் நவீனகால பகாசுரன்கள்.  அவர்களைச் சுற்றிலும், அவர்களுக்குத் துதிபாடும் நண்பர்கள். சாமியார்கள் அவர்களை எப்போதும் ஆசிர்வதித்துக் கொண்டிருப்பார்கள்.   சிவப்பு-விளக்கு கார்கள் பறந்துகொண்டே இருக்கும். அதாவது தன்கீழ் உள்ள அதிகாரிகளின் கழுத்துக்களை நெறித்துக்கொண்டே இருப்பார்கள்.  தாங்கள் சம்பாதிக்கும் கத்தை கத்தையான நோட்டுகளை நீதியின் கண்களுக்குத் தெரியாதபடி சத்தமில்லாமல் மறைத்து வைப்பதிலேயே குறியாக இருப்பார்கள். இவர்களால்தான் காந்திஜி கல்லறையில் சென்று படுத்துக் கொண்டிருக் கிறாரோ, என்னவோ?’’ என்றார்.
தன் ஒப்பீடுகளையும் பையன்கள் மிகவும் ரசிப்பதைக் கண்ட சேகர், தொடர்ந்தார்: ``நம் புராணக் கதைகள் ஒவ்வொன்றுமே தீமைக்கும் நன்மைக்கும் இடையே நடக்கும் சண்டை குறித்துத்தான் பேசுகின்றன.  உங்களுக்குத் தெரியுமா? அவை அனைத்துமே அறிவார்ந்த மக்களால் ஒரு சமூகப் பொறுப்புணர்வோடு, சமூக நோக்கத்திற்காக எழுதப் பட்டவைகள்தான்.  மக்களிடம் காணும் நற்பண்புகளை எல்லாம் பொறுக்கி எடுத்து,   அவற்றை ஒருங்கிணைத்து ஒருசில கதாபாத்திரங்களாக உருவாக்கி இருப்பார்கள். சில மிகைப்படுத்தல்களை ஏற்படுத்தியபின் அவர்களுக்குக் கடவுள் தன்மையையும் ஏற்படுத்தி அவர்களை ராஜா - ராணி போன்ற ஆடைகளில் உலவ விட்டிருப்பார்கள். இதுபோன்ற தீய குணங்கள் படைத்தோரையும் உருவாக்கி, அவர்களிடம் அனைத்துவிதமான அசிங்கமான தீய குணங்களும் இருப்பதாகக் காட்டி, அவர்களை விசித்திரமான விதத்திலும், நீண்ட கோரப் பற்களும் நகங்களும் கொம்புகளும் இருப்பவர்களைப் போலவும், மாபெரும் உடலைப் பெற்றிருப்பவர்கள் போலவும், பரட்டைத் தலையர் களாகவும் காட்டி இருப்பார்கள்.   அவர்களுக்கு இவர்கள் அணிவிக்கிற உடைகள் கூட மிகவும் அசிங்கமானதாக இருந்திடும். அவர்கள் நர மாமிசமும் மற்றும் பல்வேறு விலங்குகளின் மாமிசமும் சாப்பிடுகிறவர்கள் போலவும் காட்டி இருப்பார்கள். ஆனால் ஒன்றை நிச்சயமாகத் தெரிந்து கொள்ளுங்கள். ராட்சசர்கள் என்று உண்மையில் யாரும் கிடையாது. இவ்வாறான சித்தரிப்புகள்  சமூகத்தில் நிலவிய தீய அம்சங்கள் மற்றும் குற்றங்களுக்கு உருவங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன, அவ்வளவுதான். இவ்வாறு,  மக்கள், ராமன், கிருஷ்ணன் போன்றவர்களை வணங்கிடவும், அவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வாழ்ந்திடவும்தான் இதுபோன்ற கதா பாத்திரங்கள் இக்கதைகள் மூலமாகப் போதுமான அளவு படைக்கப் பட்டிருக்கின்றன. அதேபோன்று, அருவருத்து, வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய கதாபாத்திரங்களும் உருவாக்கப்பட்டன.  மகாபாரதத்தில் பகாசுரன் அத்தகையதொரு  ராட்சசன்தான்.’’
``மாமா, நீங்கள் ரொம்பவும் சரியாக ஒப்பிட்டிருக்கீங்க,’’ என்று ரவி பாராட்டினான். பின்னர் சிரித்துக்கொண்டே, ``இனிமேல் நாமும், ஒவ்வொரு ஊழல் பேர்வழியையும் பகாசுரன்கள் என்று அழைக்கலாம்தானே,’’ என்றான். சுமனும் சிரித்துக்கொண்டே, ``சேகர், இதைவிட சிறந்த ஒப்பீடு வேறு எதுவும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு ஊழல் பேர்வழிக்கும் இது முத்திரைப்பதித்த பெயராக மாற வேண்டும். நான், போபாலுக்குத் திரும்பிப் போகும்போது, என் அண்டை வீட்டுக்காரர்களிடம் எல்லாம் இதைச் சொல்லி, இந்த வார்த்தையைப் பிரபலப்படுத்தி விடுவேன்.  உண்மையிலேயே பகாசுரன்களாக இருக்கிறவர்களுடைய மனைவிமார்களைத் தவிர மற்ற அனைவரிடமும் இதைச் சொல்லி இந்த வார்த்தையை பிரபல்யப்படுத்திவிடுவேன்.’’
ஆனால்,  ``பணத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பசியைப் பொறுத்தவரையில் அவர்களை பகாசுரன் என்று ஒப்பிடுவது சரிதான். ஆனால், வெறும் ஊழல் பேர்வழிகளாக இருக்கிற அவர்களை ஏன் ராட்சசர்கள் என்றும் கருதுகிறீர்கள்?’’ என்று பிரதீப் அப்பாவித்தனமாகக் கேட்டான்.
சேகர் சற்றே பெருமூச்சுவிட்டுக்கொண்டு, அவனை நம்ப வைப்பதற்கு முயற்சித்தார்.
``ஒரு கிரிமினல் என்றால் யார் என்று முதலில் எனக்குச் சொல். ஒருவன்  கிரிமினல் என்று எதை வைத்துச் சொல்கிறோம்? திருட்டு, வழிப்பறி, கொள்ளை, ஏமாற்றி மோசடி செய்தல், கொலை போன்ற குற்றங்களைச் செய்பவனைக் கிரிமினல் என்கிறோம், இல்லையா? அப்படி இருக்கையில் இலஞ்ச ஊழல் தடைச் சட்டத்தின்கீழும் குற்றங்களைச் செய்வோர், ஆவணங்களைத் திருத்தி  மோசடி செய்தல், ஏமாற்றுதல், குற்றமுறு நம்பிக்கை மோசடி செய்தல், நம்பிக்கைத் துரோகம், சதி, பலவந்தமாய் அச்சுறுத்திக் கைப்பற்றுதல், பொய் சாட்சியம் கூறுதல் போன்ற குற்றங்களைச் செய்பவர்களையும் அதேபோன்று அழைக்கலாம், அல்லவா? அதுபோன்றே, வருமான வரி, சுங்க வரி, முத்திரைக் கட்டணம், அந்நியச் செலாவணி ஆகியவற்றின்கீழ் மோசடியில் ஈடுபடுகிறவர்களையும் அதே போன்றே அழைக்கலாம், அல்லவா? இவர்கள் எல்லோம் மாபெரும் கிரிமினல்கள், இல்லையா? இவர்கள் ஒரு சமூகத்திற்கு எதிராகக் குற்றம் இழைப்பவர்களாக இருப்பதால், இவர்கள் சமூக விரோதிகள். இவர்கள் நாட்டிற்கு எதிராகக் குற்றங்கள் புரிவதால், இவர்கள் தேச விரோதிகளுமாவார்கள். போலீஸ் ரிக்கார்டுகள் பாஷையில் கூறுவதென்றால் இவர்கள் எல்லாம் கிரிமினல் அரசியல்வாதிகள். புராணங்களில் இவர்களது பெயர் ராட்சசர்கள்.’’
இப்போது பையன்கள் தான் கூறியதை ஏற்றுக் கொண்டனர் என்பதைக்காட்டும் விதத்தில் தலை யாட்டியதைக் கண்டு அவர் மேலும் கூறினார்:
  ``இவ்வாறு சுயநலமிகளாக இருப்பவர்கள்பற்றி ஏன் மரியாதை தர வேண்டும்? இத்தகைய பேர்வழிகள் இப்போதும்கூட மேடைகளில் ஏறி மக்களுக்கு உயரிய மாண்புகள் குறித்து நீதிபோதனைகள் செய்வதைப் பார்க்கிறோம். எவரையேனும் பார்த்து அவர்கள் சிரிக்கிறார்கள் என்றால், அவர்கள் தாங்கள் திருமுழுக் காட்டப் பெற்றதாகத் தங்களைக் கருதிக் கொள்கிறார்கள்.  எவரையேனும் பார்த்து நலம் விசாரித் தார்கள் என்றால், அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி கொள்கிறார்கள்.  இதற்குக் காரணம் என்ன? அவர்கள் ஆள்பவர்களாக இருக்கிறார்கள் என்ற ஒரே காரணம்தானே. இத்தகைய ராட்சசர்களுடன் கைகுலுக்குவதன் மூலம் மக்கள் தங்களைத் தாங்களேதாழ்த்திக்கொள்கிறார்கள் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?’’
பையன்கள் மிகவும் சிந்தனைவயப்பட்டதால், அவர் மேலும் கூறினார்: சமூகத்தின் இரு விதமான பிரிவுகளையும் பாருங்கள். எவனாவது திருடிவிட்டு ஓடுகிறான் என்றால், மக்களை அவனை விரட்டிப் பிடிக்கிறார்கள், அவனைத் தாக்குகிறார்கள், சில சமயங்களில் அவனைக் கொன்றே போட்டுவிடுகிறார்கள். உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன், எவரேனும் நலிவடைந்து இருந்தால் பலரது வீடுகளில் அவர்களைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.  இவ்வாறு அவர்கள் நலிவடைந்து பட்டினி கிடக்கும்போது அவர்கள் ஏதேனும் குற்றங்கள் புரிந்தாவது தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயல்வார்கள்.  இதன் பொருள், அவர்கள் ஒரு நாகரிகமான வாழ்க்கை வாழ்ந்திடக்கூடிய விதத்தில் சமூகம் அவர்கள்மீது அக்கறை காட்டவில்லை. அவருடைய குற்றம் என்பது தேவையை அடிப்படையாகக் கொண்டது. இதனால் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய இழப்பு என்ன? ஒருசில ஆயிரங்கள் அல்லது ஒரு சில லட்சம் ரூபாய்கள் அளவிற்கு இருக்கலாம். ஆனால், அதே சமயத்தில், ஊழல் பேர்வழிகள் அனைத்தையும் மிகவும் தாராளமாகப் பெற்றிருக்கிறார்கள். ஒரு நல்ல வேலை, நல்ல ஊதியம், அடிப்படை வசதிகள், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சமூகப் பாதுகாப்பு. ஆயினும்,  இவை அனைத்தையும் இவர்கள் பெற்றிருந்தாலும்கூட, இவர்கள் பொதுப் பணத்தை சூறையாடவோ, இலஞ்சம் வாங்குவதற்கோ தயங்குவதேயில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இது தாங்கள் பெற்ற சிறப்புரிமை என்று அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள்.’’
இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ரேகா மிகுந்த வெறுப்பும் கோபமும் கலந்த தொனியுடன், ஒன்றுமே இல்லாமல் அரசாங்க வேலையிலோ அல்லது அரசியலிலோ புகும் ஒருவன் கொஞ்ச காலத்திற்குள்ளேயே ஒரு நிலப்பிரபுவாக மாறிவிடுகிறான். பணத்தின் மீதான பேராசைதான் இவ்வாறு அவனை அனைத்துவிதமான மாபெரும் குற்றங்களையும் புரிவதற்கு வெறித்தனமாக இட்டுச்செல்கிறது,’’ என்றார்.
அவள் கூறியதுடன் ஒத்துப்போன சுமனும் தன் மகன்களிடம், உங்கள் மாமா மிகவும் சரியாகத்தான் சொல்கிறார். இத்தகைய பேர்வழிகள் உண்மையிலேயே ராட்சசர்கள்தான். இவர்கள் பேராசைபிடித்த பகாசுரன்கள்.’’
இதற்குமுன், இந்தப்பையன்கள் இப்படி யெல்லாம் நினைத்தது இல்லை. சேகர் கூறிய கூற்றுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டமாதிரி, ரவி தன் தலையை ஆட்டினான். ஆயினும், முகத்தில் புன்னகை தவிழ, பிரதீப், மிகவும் மெதுவாக ஆனால் அதேசமயத்தில் அறிவுபூர்வமாக வார்த்தைகளை வெளிப்படுத்தினான். சில பேர் தாங்கள் எங்கே சென்றாலும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவார்கள். ஆனால், இத்தகைய ஊழல் பேர்வழிகளோ எப்போது தொலைகிறார்களோ அப்போதுதான் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறார்கள். எனவே, அவர்கள் தொலைய வேண்டும்,’’ என்றான்.    பிரதீப் இவ்வாறு கூறியதும், அனைவரின் முகங்களிலும் புன்னகை மலர்ந்தது. அதன்பின்னர் அனைவரும் ஓய்வெடுக்கச் சென்று விட்டார்கள்.
சகோதரர்கள் இருவரும் பின்னர் அபியுடன் சேர்ந்துகொண்டு, வரவேற்பறையிலிருந்த சோபாவின் மேல், புஜ்ஜி, ஃபுரூட்டி, பாப்லு ஆகியவை இரவில் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக, நேற்றையதினம் செய்ததைப் போல படுக்கை விரிப்புகளை விரிக்க அபிக்கு உதவினார்கள்.
படுக்கையில் அனைவரும் படுத்தபிறகு, ரவியின் மனம், தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களில் யார் யாரை பகாசுரன்கள் என்று சொல்வது என்பது குறித்து யோசிக்க ஆரம்பித்தது. பின்னர் அபியிடம் அரட்டை அடிக்கும் விதத்தில் பிரதீப் தன் வகுப்பில் உள்ள நல்ல பெண்மணி ஒருவர் தன்னைக் கிண்டலும் கேலியும் செய்த தன் வீட்டு முதியவர்களை எப்படிச் சமாளித்தார் என்று கூறினான். அவளுடைய வீட்டிலிருந்த பாட்டிமார்கள் எல்லாம் அவளிடம் வந்து, திருமணம் குறித்து வேடிக்கையாகப்பேசி அவளது கவனத்தைத் திருப்பக்கூடிய விதத்தில், அடுத்தது நீதானா?’’ என்று கேட்கும்போது, இதவைத் தவிர்ப்பதற்காக அந்தபெண், சவ ஊர்வலம் குறித்து வேடிக்கையாகக்குறிப்பிட்டு, அடுத்தது யார், நீங்கதானா?’’ என்று கேட்பார். இதைக்கேட்டபின் எந்தக் கிழவியும் அங்கே நிற்பது கிடையாது, ஓடியே விடும் என்றான். ஹா, ஹா, ஹா’’ என்று அபி சிரித்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இதயத்தில் இருந்த பாரம் இறங்கியதைப்போன்று இருந்தது. பின்னர் அனைவரும் ஆழ்ந்த நித்திரைக்கு உள்ளானார்கள்.

No comments: