Saturday, May 21, 2016

பாஜகவின் நெருப்புக் கோழி மனப்பான்மை



வறட்சி என்பது அவ்வப்போது வரக்கூடிய பிரச்சனை. இதனை சமாளிக்கக்கூடிய வல்லமையை அரசாங்கங்கள் பெற்றிருக்க வேண்டும். அதன்மூலமாக நாட்டுப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரங்களையும், கிராமப்புற பொருளாதாரத்தையும் பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த நவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாக வேளாண்மை சம்பந்தப்பட்ட கொள்கைகள் சீர்குலைந்து, பலவீனம் அடைந்துவிட்டன.
நாட்டின் சமீபகாலத்தில் முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான முறையில் வறட்சி ஏற்பட்டிருப்பதை சமாளித்திட மத்திய அரசு உரியநடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. அதேபோன்றே பீகார், குஜராத் மற்றும் ஹரியானா மாநில அரசுகளும், வறட்சி பாதித்த பகுதிகள் தொடர்பாகநெருப்புக்கோழி மனப்பான்மை’’யுடன் இருந்து வருவதையும் விமர்சித்திருக்கிறது. வறட்சியை ஒரு பேரிடராகக் கருதி சமாளித்திட வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் தொடர்ந்து கட்டளைகளைப் பிறப்பித்து வந்திருக்கிறது. கிராமப்புறங்களில் வறட்சி பாதித்த பகுதிகளில் பல லட்சக்கணக்கான மக்கள் தண் ணீர் இல்லாமல், வேலை இல்லாமல், கால்நடை களுக்குத் தீவனங்கள் இல்லாமல் கடும் சிரமங் களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்தப் பின்ன ணியில்தான் உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசு கள் மீது கண்டனக் கணைகளை வீசி இருக்கிறது.
ஐந்தில் இரண்டு பங்கு பாதிப்பு
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பருவமழை பொய்த்துப்போனதன் காரணமாகவே இவ்வாறு கடும் வறட்சி ஏற்பட் டிருக்கிறது. மராத்வாடாவில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மழை பெய்யாததால், அங்கே வறட்சி நிலைமை மிகவும் கடுமையாக இருக்கிறது. நாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள 91 நீர்நிலைகளில் அவற்றின் மொத்த கொள்ளளவில் 29 சதவீத அளவிற்கே தண்ணீர் இருக்கிறது. இது கடந்த பத்தாண்டுகளில் மிகவும் குறைவான அளவாகும். இவற்றின் காரணமாக கிராமப்புறங்களில் வறுமையின் கொடுமை அதிகரித்து, பசி-பஞ்சம்-பட்டினி, ஊட்டச் சத்துக்குறைவு, புலம்பெயர்தல், கால்நடைகள் இறப்பு என்பவை கடுமையாக இருக்கின்றன.மத்திய அரசாங்கம் நாட்டில் உள்ள வறட்சி நிலைமைகள் குறித்து உச்சநீதிமன்றத்திற்கு ஏப்ரல் 3ஆவது வாரத்தில் ஓர் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. அதில், நாட்டில் 256 மாவட்டங் களில் உள்ள 33 கோடி மக்கள் வறட்சியால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. உண்மையில் நிலைமைகள் இதைவிட மிகவும்மோசமாகும். ஏனெனில், மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள வறட்சி நிலைமைகள் குறித்து உரிய காலத்தில் அறிக்கை எதுவும் மத்தியஅரசுக்கு அனுப்பிடவில்லை. மேலும் பல மாநிலஅரசுகள் தங்கள் மாநிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வில்லை. நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 54 கோடி இருக்கும் என்று மதிப் பிடப்பட்டிருக்கிறது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் இரண்டு பங்கு ஆகும்.மாநில அரசாங்கங்கள் வறட்சி பாதித்த பகுதிகள் குறித்து அறிவித்து, நிவாரண நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அதே சமயத்தில், வறட்சியை சமாளித்திட மத்திய அரசும்முக்கியமான பங்கினை செலுத்திட வேண் டும். நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளபடி, பேரிடர்மேலாண்மை சட்டத்தின்கீழ் முன்மொழியப் பட்டுள்ளபடி, பேரிடர் மட்டுப்படுத்தல் நிதியம் (Disaster Mitigation Fund) அமைக்கப்படவில்லை.
மற்றும் ஒரு தாக்குதல்
மத்திய அரசின் மற்றுமொரு பெரிய அளவிலான தாக்குதல் அது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க தடித்தனமான முறையில் மறுத்திருப்பதாகும். இத்திட்டத்தின் கீழ் 2014-15ஆம் ஆண்டில் 166 கோடி மனித நாட்கள் வேலை பார்த்தனர். ஆனால் நாட்டில் வறட்சி பாதிப்புக்குள்ளான பகுதிகள் அதிகரித்ததன் காரணமாக இத்திட்டத்தின்கீழ் வேலை செய்வதற்கான ஆட்களின் எண்ணிக்கை 2014 -16இல் 230 கோடி மனித நாட்களாக அதிகரித்தது. ஆனால், இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதன் காரணமாக 2014-15ஆம் ஆண்டின் இறுதியில் இதில் ஈடுபட்ட ஏழை மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை என்பது 12 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. காலையிலிருந்து இரவு வரை கடும் வெயிலில் வியர்வை சிந்த வேலை செய்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதற்கான கூலியைத் தராமல் பல மாதங்களாக அவர்களை மேலும் துன்பத்திற்குள்ளாக்கும் வேலையை மோடி அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.வறட்சி நிலைமையை சமாளிக்க மிகவும் தாமதமாக மோடி அரசாங்கம் முன்வந்து தற்போது உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநில முதல்வர்களை பிரதமர் மோடி சந்தித்திருக்கிறார். ஆயினும் இப்பேரிடரை சமாளித்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு இன்னமும் நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது.உச்சநீதிமன்ற கட்டளைகோடை கால விடுமுறை நாட்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருக்கிறது.
இத்துடன், பொது விநியோக முறை மூலமாக சிறப்பு ரேசன்கள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு முதல் கட்டத்தில் ஒதுக்க வேண்டிய நிதியை முழுமையாக மத்திய அரசு ஒதுக்கிட வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வறட்சி பாதித்த பகுதி என்று அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்திட வேண்டும். எடுத்துக்காட்டாக, தெலுங்கானா மாநிலம் முழுவதும் வறட்சிக்கு ஆளான பகுதியாக பிரகடனம் செய்யப்பட வேண்டும். வறட்சி மேலாண்மை நூலில் கூறியுள்ளபடி, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்குக் குடிநீர், கால்நடைகளுக்கு தண்ணீர் மற்றும் தீவனங்கள் கிடைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.வறட்சி என்பது அவ்வப்போது வரக்கூடிய பிரச்சனை. இதனை சமாளிக்கக்கூடிய வல்லமையை அரசாங்கங்கள் பெற்றிருக்க வேண்டும். அதன்மூலமாக நாட்டுப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரங்களையும், கிராமப்புற பொருளாதாரத்தையும் பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த நவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாக வேளாண்மை சம்பந்தப்பட்ட கொள்கைகள் சீர்குலைந்து, பலவீனம் அடைந்துவிட்டன.
வேளாண்மைத் துறையில் பொது முதலீட்டைக் குறைத்தது, கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கான பொது செலவினங்களைக் குறைத்தது ஆகியவை கிராமப்புறப் பொருளாதாரத்தை நலிவடையச் செய்துவிட்டது. இத்துடன், ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த சுதந்திர வர்த்தகக் கொள்கைகளும், உணவுப் பொருள்களின் விலைகளில் ஏற்ற இறக்கங்களும் விவசாயிகளை மேலும் வறிய நிலைக்குத் தள்ளி, கிராமப்புற துயரமான நிலைமைகளை மிகவேகமாக விரைவுபடுத்தின. எனவே, இக்கொள்கைகள் மாற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். விவசாயத்திற்கான பொது முதலீடு, கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு ஆதார விலை, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் விரிவாக்கம் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலாக்கம் ஆகிய வை நாடு முழுதும் அதிகரிக்கப்பட வேண்டும்.மோடி அரசாங்கத்தின் ஈராண்டு கால ஆட்சியின் முடிவில், அதன் மாபெரும் தோல்வி என்பது மிகவும் துயரமானமுறையில் உள்ள விவசாய நிலைமைகளை சமாளிப்பதில் அது படுதோல்வி அடைந்துள்ளதாகும். நாட்டில் நிலவும் வறட்சி நிலைமைகளை சமாளிக்க முடியாமல் அது திணறுவதிலிருந்தும் இதனைத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.
தமிழில் : .வீரமணி

No comments: