Showing posts with label sitaram yechuri. Show all posts
Showing posts with label sitaram yechuri. Show all posts

Tuesday, July 6, 2021

பிரடெரிக் ஏங்கெல்ஸ் 200 -சீத்தாராம் யெச்சூரி


 

பிரடெரிக் ஏங்கெல்ஸ் 200

-சீத்தாராம் யெச்சூரி

2020 நவம்பர் 28, பிரடெரிக் ஏங்கெல்ஸ் அவர்களின் 200ஆவது ஆண்டு தினம் ஆகும். இயல்பான சூழ்நிலைகளாக இருப்பின், கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், அதனையொட்டி அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தின் காரணமாகவும்,  அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் இல்லாதிருக்கும் பட்சத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த நிகழ்வை, எப்படி 2018-19இல் மார்க்ஸ் 200ஆவது ஆண்டுதினத்தை அனுசரித்ததோ அப்படிப் பொருத்தமான முறையில் கொண்டாடி இருக்கும்.

மார்க்சிஸ்ட் உலகக் கண்ணோட்டத்தின் பரிணாம வளர்ச்சியிலும், அதன் விரிவாக்கத்திலும், இந்தப் பிரபஞ்கசத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் மற்றும் மனித சமூகம் குறித்தும், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும், இயக்கியலின் கண்டுபிடிப்புகளையும், இயக்கியல் முறையையும் வெளிக்கொணர்ந்து  புரிந்துகொள்வதற்கு வளமான ஆதாரங்களை முன்வைத்ததிலும், ஏங்கெல்சின் தத்துவார்த்த பங்களிப்புகள் மகத்தானவகையில் குறிப்பிடத்தக்கவைகளாகும். அவருடைய வாழ்வையும் பணியையும் கொண்டாடுவது என்பது, அவருடைய பங்களிப்புகள் அனைத்தையும் மீளவும் ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்துவதும், மனிதனின் சிந்தனை, அறிவு மற்றும் மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள மகத்தான தாக்கத்தையும் இயல்பாகவே வெளிக்கொணர்ந்திடும்.

இவ்வாறு அவருடைய பங்களிப்புகள் அனைத்தையும் மறுஆய்வுக்கு உட்படுத்தவது என்பது ஒரு மாபெரும் பணியாகும். அவை அனைத்தையும் உள்ளடக்கிவிடமுடியாது.  கட்சி, தனக்கிருக்கிற வரையறைகளுடன், இந்த அம்சங்கள் அனைத்திலும் ஓராண்டு காலத்திற்கு தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடரும்.

எனவே, இப்போது ஒரு முக்கிய அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கையாளுகிறேன். காரல் மார்க்சின் பெயரில் கூறப்படும் மார்க்சியம், தத்துவத்தையும் நடைமுறையையும் இயக்கியல் ரீதியாக இணைத்து. இவ்வாறு மார்க்சியத் தத்துவத்தை வளர்த்தெடுத்ததில், ஏங்கெல்ஸ் ஆற்றிய பங்களிப்புகள் இரண்டாம் நிலை வகித்ததுபோல், துரதிர்ஷ்டவசமாக, கருதப்படுகிறது. இது மிகவும் பிழையான ஒரு முடிவாகும். இதற்கு மாறாக, ஏங்கெல்ஸ், உலகின் பொருளியல் மற்றும் சமூகத்தின் அனைத்து அம்சங்கள் மீதும் தன் பணிகள் மூலமாக இயக்கியலை வெளிக்கொணர்ந்திருப்பதை நாம் நன்கு காண முடியும். இன்றைய மனிதகுல நாகரிக முன்னேற்றம் மற்றும் புதிய அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நடப்புப் பின்னணியில் இவற்றை நாம் ஒவ்வொருவரும்  முறையாக மறுபடியும் படித்திட வேண்டும்.

மார்க்சியத்தைக் கூட்டாகவே உருவாக்கினார்கள்

பிரடெரிக் ஏங்கெல்ஸ், அடிக்கடி, உலகத்தின் முதல் மார்க்சிஸ்ட் என்று குறிப்பிடப்படுகிறார். அவரும் தனக்கேயுரிய இயல்பான தன்னடக்கத்துடன், இந்த அந்தஸ்தை பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டிருந்திருக்கலாம். ஒருசமயம் அவர் கூறினார்: “மார்க்ஸ் என்ன சாதித்தாரோ அதனை, நான் எய்தியிருக்க முடியாது. மார்க்ஸ் நம்மையெல்லாம்விட உயரத்தில் நின்றார், விஷயங்களை மேலும் கூர்மையாகப் பார்த்தார், நம்மையெல்லாம்விட அவர் அவற்றை மிகவும் விரிவான அளவிலும், வேகமாகவும் பார்க்கும் திறனைப் பெற்றிருந்தார். மார்க்ஸ் ஒரு மாமேதை. நாமெல்லாம் மிகச் சிறந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் இருக்கிறவர்கள். அவரில்லையேல், இந்தக் கோட்பாடு இன்றுள்ள நிலையிலிருந்து வெகுதொலைவிலேயே இருந்திருக்கும். எனவேதான், இது மிகச் சரியானமுறையில் அவர் பெயரைத் தாங்கி இருக்கிறது.”

ஏங்கெல்ஸ் அவர்களால் மார்க்ஸ் இவ்வாறு பாராட்டப்பட்டிருந்தபோதிலும்கூட, ஏங்கெல்சின் மார்க்ஸ் குறித்த மதிப்பீடும், மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் சித்தாந்த அடித்தளங்களை வெளிக்கொணர்ந்தில் மார்க்சுக்கு சிறப்பு இடத்தைக் கொடுத்திருப்பதும், வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியதும் அவசியமாகும்.

மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கூட்டுச் செயல்பாடு

மார்க்ஸ், ‘ரெனிச்சே செய்துங்’ (‘Rheinsche Zeitung’) என்னும் இதழுக்கு ஆசிரியராக இருந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார். அது, பிற்போக்குவாத பிரஷ்ய அரசாங்கத்தால், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு சக்திகளுக்கும், அரசாங்கத்தைத் தூக்கிப்பிடித்த பிற்போக்குவாதிகளுக்கும் இடையே கடும் யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில்,  1843 மார்ச்சில் அந்த ஏடு தடை செய்யப்பட்டது. மார்க்ஸ், தன்னுடைய பணியைத் தொடர்வதற்காக, 1844இன் தொடக்கத்தில் பாரிசுக்குச் சென்றார். அங்கே அவர், ‘டெட்ஸ்ச்-ஃபிரான்சோசிஸ்ச் ஜார்புஸ்சர்’ (`Deutsch-Franzosische Jahrbucher’) என்னும் இதழைத் தொடங்கினார். ஏங்கெல்ஸ் அவ்விதழுக்குப் பங்களிப்புகளைச் செய்திடுவோரில் மிகவும் இளையவராக மாறியிருந்தார். 1844இல், ஏங்கெல்ஸ் ‘அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்திற்கு ஒரு கோட்டுச்சித்திரம்’ (‘Outline of a Critique of Political Economy’) என்கிற ஒரு கட்டுரையை அளித்திருந்தார். இதில், ஏங்கெல்ஸ், முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை விமர்சிப்பதற்கான அடிப்படைக் கொள்கைகளை வகுத்திருந்தார். ஏங்கெஸ்ஸ் இதில், முதலாளித்துவ பொருளாதார அமைப்புமுறையில் அனைத்து முக்கியமான நிகழ்வுகளும் உற்பத்திச் சாதனங்களின் தனிவுடைமையின் விதிகளிலிருந்து தவிர்க்கமுடியாத விதத்தில் எழுகின்றன என்று கூறியதோடு வறுமையில்லாத சமூகமே இத்தகையதொரு தனியுடைமை இல்லாத சமூகமாக இருக்க முடியும் என்று காரண காரியங்களோடு செயல்விளக்கம் அளித்திருந்தார். இது மார்க்ஸை வெகுவாகக் கவர்ந்தது. முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனம் மூலம், தான் ஏற்படுத்தியிருந்த ஹெகலியன் தத்துவத்தின் விமர்சனத்துடன் ஒத்துப்போகக்கூடிய விதத்தில் அதே முடிவுக்கு, சுயேச்சையான முறையில் மற்றுமொரு சிந்தனையாளர் வந்திருக்கிறார் என்று மார்க்ஸ் முடிவுக்கு வந்தார்.  இதுதான் இவர்கள் இருவரையும், மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் பரிணாம வளர்ச்சியில்,  தங்கள் வாழ்நாள் முழுவதுமான கூட்டுச்செயற்பாட்டாளர்களாக, நண்பர்களாக, தோழர்களாகப் பிணைத்தது.  

ஏங்கெல்சால் எழுதப்பட்ட நூல்களில் மிகவும் முன்னோடியான நூலாக விளங்கும், ‘இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் நிலைமை’ (‘The Condition of the Working Class’) என்பது இங்கிலாந்தில் நடைபெற்றுவந்த தொழில் புரட்சியின் ஆரம்ப காலத்தில் மார்க்சின் சிந்தனையோட்டத்தின் அடிப்படையில் பெரிதும் செல்வாக்கு பெற்றிருந்தது. 1844 ஆகஸ்டில் இருவரும் பத்துநாட்கள் தங்கள் கருத்துக்களைப் பரிவர்த்தனைச் செய்துகொண்டபோது, மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மீது வைத்திருந்த அபிமானம் வெகுவாக வளர்ந்தது.  மார்க்ஸ், ஏங்கெல்ஸின் தைர்யம், அர்ப்பணிப்பு, ஒரேகுறிக்கோளுடன் செயல்படும் விதம் முதலானவற்றை மிகவும் போற்றிப்பாராட்டினார். அந்தக் காலத்தில் எழுந்த அனைத்துவிதமான தத்துவார்த்தக் கேள்விகள்மீதும் அவர்களிருவரும் ஒத்துப்போனதையும் மார்க்ஸ் குறித்துக்கொண்டார்.

அவர்கள் 1844இல் கூட்டாகப் படைத்திட்ட முதல் நூல், ‘புனிதக் குடும்பம் அல்லது விமர்சன ரீதியான விமர்சனத்தின் விமர்சகர்’ (‘The Holy Family or Critique of Critical Criticism) என்னும் நூலில் அவர்கள் தத்துவம் மற்றும அரசியல் பொருளாதாரத்தின் மீது கருத்துமுதல்வாதம் (idealism) செலுத்திய செல்வாக்கிற்கு எதிராகப் போராடினார்கள்.  

இதில் மார்க்சும் ஏங்கெல்சும் ஒருங்கிணைந்து, ‘நமக்கும் மேலான இயற்கை சக்திகள் எதுவுமோ, அல்லது மனித உணர்வுகளோ, அல்லது கதாநாயர்கள் எவருமோ (heroes) வரலாற்றைப் படைத்திடவில்லை’ என்பதை மெய்ப்பித்தார்கள். மாறாக, உழைக்கும் மக்கள் மட்டுமே தங்கள் உழைப்பு மற்றும் தங்களின் அரசியல் போராட்டங்கள் மூலமாக, சமூகத்தை முன்னெடுத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள் என்று மெய்ப்பித்தார்கள். இதில் மேலும் அவர்கள், தொழிலாளர் வர்க்கம் தற்போது இருந்துவரும் தங்கள் சொந்த நிலைமைகளை அழித்து ஒழித்திடாமல், அதாவது, தற்போதைய முதலாளித்துவ சமூகத்தை அழித்து ஒழித்திடாமல், தங்களை விடுவித்துக்கொள்ள முடியாது என்றும் காட்டினார்கள். தொழிலாளர்களை, ஒரு வர்க்கமாக, வரலாற்றுரீதியாக விடுவித்திடும் பணித்திட்டம் இதில் விரிவாகக் கூறப்பட்டது.

எனினும், இவர்களிருவரும் ஆதிக்கம் செலுத்திவந்த கருத்துமுதல்வாதத்தை எதிர்த்துப் போராட, தத்துவார்த்த ரீதியாக, செயல்பட வேண்டியிருந்தது, பொருளியல் அடித்தளங்களை நிறுவ வேண்டியிருந்தது. இதனை, மார்க்சும் ஏங்கெல்சும் ஒருங்கிணைந்து, தாங்கள் 1845-46இல் படைத்திட்ட ‘ஜெர்மன் தத்துவம்’ (‘German Ideology’) என்பதில் படைத்திட்டார்கள். முதன்முறையாக, ஒருங்கிணைந்து திட்டமிட்ட முறையில், அவர்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் அடிப்படைகளை - உழைக்கும் வர்க்கத்தின் உலகக் கண்ணோட்டத்தைப் - படைத்திட்டார்கள்.

உண்மையில், 1843 முதல் 1845 வரையிலான காலம் மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் பரிணாமவளர்ச்சியில் ஒரு நீரோட்டத்தை - புரட்சிகர ஜனநாயகத்திலிருந்து தொழிலாளர்வர்க்கப் புரட்சி நிலைக்கு, ஹெகலியன் செல்வாக்கிலிருந்து வரலாற்றுப் பொருள்வாதத்திற்கு, தத்துவத்திலிருந்து அரசியல் பொருளாதாரத்திற்கு மாறுவதைக் குறிக்கிறது. இதில், மார்க்சும் ஏங்கெல்சும் ஒருங்கிணைந்தே ஆரம்ப அடிப்படைப் பங்கினை ஆற்றினார்கள்.

சட்டம் குறித்த ஹெகலியன் தத்துவத்தின் மீதான மார்க்சின் விமர்சனபூர்வமான ஆய்வு அவரை, சட்டரீதியான உறவுகளோ அல்லது அரசியல் வடிவங்களோ தாமாகவோ அல்லது மனித மனத்தின் வளர்ச்சியின் அடிப்படையிலோ அல்லது உணர்வின் அடிப்படையிலோ புரிந்துகொள்ள முடியாது என்றும் அதற்கு மாறாக வாழ்க்கையின் பொருளியல் நிலைமைகளின் அடிப்படையில்தான் புரிந்துகொள்ள முடியும் என்ற முடிவுக்கும் இட்டுச்சென்றது. ஹெகல் ‘குடிமைச் சமூகம்’ (‘civil society’) என்ற ஒரு சொற்றொடரை உருவாக்கி இருந்தார். எனினும், மார்க்ஸ் “குடிமைச் சமூகத்தின் அமைப்பு (anatomy) குறித்து, அரசியல் பொருளாதாரத்தில் நாட வேண்டியிருக்கிறது,” என்ற முடிவுக்கு வந்திருந்தார். இது அவரை இயக்கவியல் பொருள்முதல்வாதம் குறித்த மூலாதாரமான அடித்தளத்தை (seminal foundation) ஆராய்வதற்குக் கொண்டு சென்றது: “மனிதர்களின் நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல, அதற்கு மாறாக, மனிதர்களின் சமூகநிலைதான் அவர்களின் உணர்வை நிர்ணயிக்கிறது.” என்று வரையறுத்தார்.

தத்துவம் மற்றும் அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனங்களை இணைத்து, மார்க்சும் ஏங்கெல்சும் இந்தப் புரட்சிகர சித்தாந்தத்தை வளர்த்தெடுத்தனர். இது 1848இல் இவர்கள் கூட்டாக வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் அறிக்கையில்’ வெளிப்படுத்தப்பட்டதையும், பின்னர் அது 1864இல் முதல் அகிலம் அமைக்கப்பட்டபோதும் வெளிப்படுத்தப்பட்டதைக் காண முடியும்.

 

மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான இயக்கவியல்

 

மார்க்ஸ், மூலதனம் நூலைப் படைப்பதன்மூலம் முதலாளித்துவ அமைப்பு முறையை அக்குவேறு, ஆணிவேராகப் பிரித்துத் தொங்கப் போடுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, மனிதகுலத்தின் மீதான சுரண்டல் முதலாளித்துவத்தின் உற்பத்தி நடைமுறையில் மேற்கொள்ளப்படுகிறது என்றும், எனவே, அதனைத் தூக்கி எறிவது என்பது ஒரு அறநெறி சார்ந்த கேள்வி மட்டுமல்ல, மனிதகுல விடுதலைக்கான அறிவியல்பூர்வமான அவசியமுமாகும் என்று செயல்படுத்திக் காட்டிய அதே சமயத்தில், ஏங்கெல்ஸ் நாம் மேலே குறிப்பிட்டதைப்போன்று, அனைத்துத் துறைகளிலும் இயக்கவியல் எப்படிச் செயல்படுகிறது என்பதை வெளிக்கொணர்வதில் விரிவான முறையில் கவனம் செலுத்தினார்.

இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை, மனித குலத்திற்கும் இயற்கைக்கும் இடையில் என்றென்றும் நடைபெற்றுவரும் இயக்கவியல் நடவடிக்கைகளாகும். அதாவது, சிறந்ததோர் வாழ்வுக்கும், வாழ்நிலைமைகளுக்கும் ஏற்றவிதத்தில் இயற்கையைப் பொருத்தக்கூடிய முயற்சிகளாகும். இந்த, இயக்கவியல் நடைமுறையில், மனிதர்கள் இயற்கையைப் பயன்படுத்தி மாற்றக்கூடிய அதே சமயத்தில், இயற்கையும் மனிதர்களையும், மனிதகுல வளர்ச்சியின் மீது தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் மாற்றங்களைச் செய்கிறது. ஏங்கெல்ஸ், ‘குரங்கிலிருந்து மனிதனான பரிணாம வளர்ச்சியில் உழைப்பின் பங்களிப்பு’ (‘The Part Played by Labor in the Transition from Ape to Man’) என்னும் அவருடைய கட்டுரையில்,  எப்படி மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையே இயக்கவியல் நடவடிக்கைகள் அமைந்திருந்தன என்பதைக் காட்டினார். ஏங்கெல்ஸ், எப்படி உழைப்பு கைகள், மனித உணர்வுகள், பேச்சுக்கள் முதலானவற்றின் வளர்ச்சியில் பங்களிப்பைச் செலுத்தியது என்பதையும் காட்டினார். இவை எந்தவிதமான தெய்வீக சக்தியினால் உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக, இவற்றின் மூலங்கள் வாழ்க்கையின் பொருளியல் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன.  

இயற்கையின் இயக்கவியல்:

ஏங்கெல்ஸ் மேலும் இயற்கை மற்றும் அறிவியல் வளர்ச்சி சம்பந்தமாகவும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஆராய்ந்தார். அவர் ஆய்வுகள், “இயக்கவியல் என்பது இயக்கத்தின் பொது விதிகளின் அறிவியலுக்கு அப்பாற்பட்டு மற்றும் இயற்கை, மனித சமூகம் மற்றும் சிந்தனையின் வளர்ச்சிக்கு அப்பாற்பட்டு வேறெதுவும் இல்லை.” (“dialectics is “nothing more than the science of the general laws of motion and development of nature, human society and thought”) என்ற முடிவுக்கு வந்தார்.

இயக்கவியலும் மானுடவியலும்:

ஏங்கெல்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாத விதிகளை, அவர் காலத்தில் கிடைத்த தகவல்களிலிருந்து,  மானுடவியல் சாட்சியத்திற்கும் பிரயோகித்து, முந்தைய மனித சமூகங்களை ஆய்வு செய்தார். அவர், தன்னுடைய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ (‘Origins of the Family, Private Property and the State’) என்னும் நூலில், ஏங்கெல்ஸ் நவீன வர்க்க சமுதாயத்தைச் சுற்றியிருக்கும் கட்டுக்கதைகளைத் தோலுரித்துக்காட்டுகிறார். எப்படி சொத்தின் அடிப்படையிலான வர்க்க உறவுகள் குடும்பத்தின் தோற்றத்தையும், ‘பெண் பாலினம்’ வரலாற்றுரீதியாக தோல்வியடைந்தது என்பதையும் -  ஒருவனுக்கு ஒருத்தி என்கிற நிலைமையும், ஆணாதிக்கப் போக்கும் அவற்றிலிருந்து பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் தோன்றின என்பதையும் தோலுரித்துக்காட்டுகிறார்.

இயக்க இயலும் வரலாறும்:

உண்மையில், எங்கெல்ஸ், (1849-50)இல் ‘ஜெர்மனியில் விவசாயிகளின் போர்’ (‘The Peasant War’) என்னும் நூலில், வரலாற்றை ஆய்வு செய்ததில் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை முதன்முதலாக நேரடியாகப் பிரயோகித்தார்.

 இயக்கவியலும் தத்துவமும்:

ஏங்கெல்ஸ் மார்க்சியத்திற்கு மறுப்பாக வெளிவந்த தத்துவஞானி, ஈகன் டூரிங் (Eugen Duhring), முன்வைத்திருந்த ‘பெரும் கோட்பாடு’ (‘grand theory’) என்னும் சித்தாந்தத்தை அடித்து நொறுக்கும் பணியை எடுத்துக்கொண்டார். ‘டூரிங்கிற்கு மறுப்பு’ என்னும் நூல், மார்க்சியம், இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் செல்லுபடியாகும் தன்மையை நிரூபிப்பதில் செல்வாக்குமிக்க தாக்கத்தை  செலுத்தியது.

எனவே, அநேகமாக மனித சமுதாயத்தின் நடவடிக்கைகள் அனைத்திலும் ஏங்கெல்ஸ் தனியாகவும், மார்க்சுடன் இணைந்தும் முக்கியமான பங்களிப்புகள் பலவற்றைச் செய்திருக்கிறார் என்பது இவற்றின்மூலம் தெளிவாகிறது. இயற்கை அறிவியல், மானுடவியல், வரலாறு, அரசியல் பொருளாதாரம் மற்றும் தத்துவம் ஆகிய அனைத்துத்துறைகளின் மூலமாகவும் மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையேயான இயக்கவியலை விரிவுபடுத்தியதன்மூலம், ஏங்கெல்ஸ், புரட்சிகர இயக்கத்தையும் அதன் தத்துவார்த்த அடித்தளங்களையும் வளர்த்தெடுப்பதில் தனித்துவமிக்க பங்களிப்பினை விட்டுச்சென்றிருக்கிறார். எனினும், இவ்வாறு அவர் மேற்கொண்ட ஒவ்வொரு பணியும், அவர்களில் ஒருவர் சுயேச்சையாகவோ அல்லது கூட்டாகவோ மேற்கொள்வதற்கு முன்னர், இருவரும் அதுகுறித்துப் பரஸ்பரம் விவாதங்கள் செய்தபின்னர்தான் அதனை வளர்த்தெடுத்திருக்கிறார்கள் என்பது அடிக்கோடிட்டுக் கொள்ளப்பட வேண்டும்.

அரசியல் நடவடிக்கை

இத்தகைய தத்துவார்த்த அடித்தளங்களை வளர்த்தெடுத்த அதே சமயத்தில், சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் இவ்விரு பேராசான்களும் வெறுமனே வெறும் சித்தாந்தவாதிகளாக மட்டும் இருந்திடவில்லை. மாறாக அவர்கள், தங்கள் காலங்களில் நடைபெற்ற தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்து இயக்கங்களிலும் சுறுசுறுப்பாகப் பங்கேற்றனர், சமயங்களில், அவற்றுக்குத் தலைமை தாங்கினர், வழிகாட்டினர்.

மார்ச்சியத்தை நிறுவிய இவ்விரு பேராசான்களும், வெற்றியை ஈட்டக்கூடிய விதத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கு வல்லமையை அளிக்கக்கூடிய ஒரு புரட்சிகர ஸ்தாபனத்தைக் கட்டி எழுப்புவதற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டனர். இவ்விரு பேராசான்களும் 1864இல், முதல் அகிலம் என்று புகழ்பெற்ற, சர்வதேச உழைக்கும் மக்களின் சங்கம் (International Workingmen’s Association) நிறுவியதில் முக்கியமான பங்கினைச் செலுத்தினார்கள். அப்போது செயல்பட்டுவந்த பல்வேறு இடதுசாரி தொழிலாளர் குழுக்களை ஒரு பொது ஸ்தாபனத்தின்கீழ் கொண்டுவருவதற்கான முதல் முயற்சியாகவும், சர்வதேச தொழிலாளர்வர்க்க இயக்கத்தை முன்னெடுத்துச்செல்வதற்கான முதல் நடவடிக்கையாகவும் இது அமைந்திருந்தது. 

அறிவியல்பூர்வமானது, புரட்சிகரமானது

மார்க்சின் மறைவிற்குப் பின், சர்வதேச தொழிலாளர் வர்க்கமும், உலகமும் மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் வளமான பணிகளையும், சித்தாந்த அடித்தளங்களையும் ஏங்கெல்ஸ் மூலமாகவே பிரதானமாகத் தெரிந்து கொண்டன. மார்க்சால் விட்டுச்செல்லப்பட்ட கணக்கிலடங்கா அளவிற்கு இருந்த குறிப்புகள், ஏங்கெல்சால் தொகுக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டன. ‘மூலதனம்’ நூலின் இரண்டாவது மூன்றாவது தொகுதிகளை இந்தக் குறிப்புகளைக் கொண்டு, ஏங்கெல்ஸ்தான் தயாரித்து வெளியிட்டார். ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’க்கான முன்னுரைகளையும், மற்றும் அவர்களின் பணிகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களில் ஏற்பட்டுவந்த வளர்ச்சிப் போக்குகள் குறித்தும், அதனை முன்னெடுத்துச் செல்லவேண்டியதை வலியுறுத்தியும்   எழுதுவதை ஏங்கெல்ஸ் தொடர்ந்தார்.

தோழர் லெனின் கூறியது போன்று, “ஏங்கெல்ஸ், தொழிலாளர் வர்க்கம் தன்னை அறிந்துகொள்ளவும், அவர்கள் உணர்வுபூர்வமானவர்களாக இருப்பதற்கும், தங்கள் கனவுகள் மெய்ப்பட அறிவியலைப் பயன்படுத்துவதற்கும் கற்றுத்தந்தார்.”

(தமிழில்: ச. வீரமணி)

 

 

Thursday, May 2, 2019

மதவெறி விஷத்தைக் கக்கும் மோடியின் தேர்தல் பிரச்சாரம்



சீத்தாராம் யெச்சூரி
சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம் என்று உலகம் முழுதும் உள்ள உழைப்பாளி மக்கள் தங்கள் போராட்டங்களின்மூலம் ஒருவர்க்கொருவர் ஒருமைப்பாட்டை இம் மே தினத்தன்று தெரிவித்துக்கொண்டுள்ள அதே சமயத்தில், அத்தகைய மக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்திடும் விதத்தில் பாஜகவும் நரேந்திர மோடியும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் மதவெறி விஷத்தை உமிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகளில் முதல் மூன்று கட்டங்கள் முடிவடைந்திருக்கின்றன. இவற்றில் மொத்தம் உள்ள 543 இடங்களில், 302 இடங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளதைப் பார்த்தோம். இந்தத் தொகுதிகளில் பாஜக தற்போது 113 இடங்களைப் பெற்றிருக்கிறது.
அடுத்து நான்கு கட்ட வாக்குப் பதிவுகளில் மீதம் உள்ள 241 இடங்களுக்குத் தேர்தல் நடந்து, வரும் மே 19உடன் நிறைவடைகின்றன. இவற்றில் பாஜக, தற்போது 161 இடங்களைப் பெற்றிருக்கிறது. அதாவது, மூன்றில் இரண்டு பங்கு இடங்கள். இந்த இடங்களைப் பாஜக-வினால் தக்கவைத்துக் கொள்ள முடியாது போகுமாயின், அதனால் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான அவா அதற்கு நிறைவேறாது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், முதலில் நடைபெற்றுள்ள மூன்று கட்ட வாக்குப்பதிவுகளிலும், அதற்குத் தற்போது இருக்கும் இடங்களில் 50 சதவீதத்தைக் கூட தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதனைப் பாஜகவும் மிகவும் துல்லியமாக உணர்ந்துகொண்டிருப்பதன் காரணமாகத்தான், எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக, அடுத்த நான்கு கட்ட வாக்குப் பதிவுகளின்போதும், மக்கள் மத்தியில் மதவெறி விஷத்தைக் கக்கியாவது, மக்களின் வாக்குகளைப் பறித்திட வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றனர். 2014இல் ஆட்சிக்கு வந்த பாஜக மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளில் எதையுமே நிறைவேற்றாது மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதும், அதன் மிகவும் பயங்கரமான மற்றும் மிகவும் பரிதாபகரமான ஆட்சி பரிபாலனமும், இந்தியப் பொருளாதாரத்தையே முழுமையாக நாசப்படுத்தியுள்ளமையும், ரூபாய்  நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின்மூலமும், ஜிஎஸ்டி கொண்டு வந்ததன் மூலமும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களின் மீது பொருளாதாரச் சுமைகளை ஏற்றி வைத்திருப்பதும், மக்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக வெறுப்பு மற்றும் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டு மக்கள் மத்தியில் மிகவும் ஆழமான அளவிற்கு சகிப்பின்மையை உருவாக்கியிருப்பதும் இந்த மோடி  அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடையே கணிசமான அளவிற்கு எதிர்ப்பு உணர்வைக் கட்டி எழுப்பியிருக்கிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் ஒரு பக்கத்தில் நம் ராணுவத்தினரின் வீரதீரச் செயல்களைக் கூறி மக்களின் வாக்குகளைக் கோருவதுடன் தங்களால் மட்டுமே பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்திட முடியும் என்று காட்டிக் கொண்டு வருகின்றன. (இது குறித்து ஏற்கனவே நாம் ஒரு கட்டுரை எழுதியுள்ளோம்.)
மற்றொரு பக்கத்தில் மக்கள் மத்தியில் மதவெறித் தீயைக் கிளறிவிட்டு அதன்மூலம் வாக்குகளைக் கவர்ந்திட முயல்கின்றன. இவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும்கூட இவர்கள், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,  தங்களுடைய வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். இவற்றில் அயோத்தியில் தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 370 மற்றம் 35-ஏ ஆகிய பிரிவுகளை ரத்து செய்தல் மற்றும் நாடு முழுதும் ஒரேமாதிரியான உரிமையியல் (சிவில்) சட்டம் கொண்டுவருதல் முதலானவையும் அடங்கும். மேலும் கூடுதலாக, நம் அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமான முறையில்,  முஸ்லீம்களுக்குக் குடியுரிமையை மறுக்கும் விதத்தில் மத அடிப்படையில் மிகவும்  மோசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள குடியுரிமை (திருத்தச்) சட்டமுன்வடிவையும் சட்டமாக நிறைவேற்றிவிடுவோம் என்றும் உறுதிமொழி அளித்திருக்கின்றனர்.
வெறிபிடித்த வெறுப்புப் பிரச்சாரம் மூலம் மக்களிடையே துவேஷத்தை உருவாக்கும் முயற்சி
இவ்வாறான இவர்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கிணங்க, தற்போது நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் பாஜகவின் அனைத்துத் தலைவர்களும் வெறுப்பை உமிழும் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் இந்து வகுப்புவாத வாக்குவங்கியை ஒருமுகப்படுத்த வேண்டும் என்கிற மிகவும் மட்டரகமான வாக்கு வங்கி அரசியலில் இறங்கியுள்ளனர். இவ்வாறு நரேந்திர மோடியும் பாஜக தலைவர்களும்  மிகவும் கேடுகெட்ட முறையில் மதவெறிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும், தேர்தல் ஆணையமோ நரேந்திர மோடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இதுவரையிலும் முன்வரவில்லை. இது இந்திய ஜனநாயக நலனுக்கான தீய அறிகுறியாகும்.
இந்துத்துவா வகுப்புவாத வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளின் ஒரு வெளிப்பாடுதான், பயங்கரவாத வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது நோயாளியாக இருப்பதாகக் கூறி பிணையில் வந்துள்ள பிரக்யா சிங் தாகூர் என்கிற சாமியாரினி மத்தியப் பிரதேசம், போபால் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் சங்கதியாகும். இவ்வாறு இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதை வெகுவாகப் பாராட்டியுள்ள நரேந்திர மோடி, அவரை, “நம் நாகரிகப் பாரம்பர்யத்தின் அடையாளம்” என்று புகழ்ந்திருக்கிறார்.
மோடியின் புகழுரையால் புளகாங்கிதம் அடைந்துள்ள சாமியாரினி பிரக்யா சிங் தாகூர், தன் மதவெறிப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு இந்த அரசியல் மேடையையும் பயன்படுத்தத் துவங்கி விட்டார். ‘மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புக்குழு’வின் தலைவராக இருந்த நேர்மையான மற்றும் துணிவு மிக்க ஐபிஎஸ் அதிகாரியான ஹேமந்த் கர்காரே அவர்களையே – அவர்தன் கடமையை ஆற்றிக்கொண்டிருந்தபோது பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவரையே - மிகமோசமாகத் திட்டிக் கண்டிக்கும் அளவுக்கு இறங்கிவிட்டார். ஹேமந்த் கர்காரேதான் மாலேகான் வெடிகுண்டு விபத்து தொடர்பான வழக்கைப் புலனாய்வு செய்து, இவற்றினைச் செய்தது பிரக்யா சிங் தாகூர் தலைமையிலான இந்துத்துவா வெறியர்கள் என்பதை வெற்றிகரமாகக் கண்டுபிடித்து அவர்கள் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்தவர்.  பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த நபர், “என்ன தைர்யம் இருந்தால் ‘ஓர் இந்து தேசத்தில்,’ ‘இந்து மதத் தலைவரான’ என்மீது ஹேமந்த் கர்காரே வழக்கு தொடர்வார்! நான் இட்ட ‘சாபம்’தான் அவர் இறப்பதற்குக் காரணம் என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தரம் தாழ்ந்த பேர்வழியாவார். 26/11 மும்பை தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதக் குழுவினருக்கு கர்காரே பிரதான குறியாக இருந்தவர் என்பதும், அவர்களால்தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் இத்தகைய மதவெறியர்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களாக அமைந்துள்ளன.    
முன்னாள் மத்திய அரசு ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர், குடியரசுத் தலைவருக்கு இவர் தொடர்பாக ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அதில், இவர் பாஜக வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கும்,  அதிலும் குறிப்பாக, அவரைத் தேர்வு செய்திருப்பதை மிகவும் உற்சாகத்துடன்  நாட்டின் பிரதமரே வரவேற்றிருப்பதற்கும் தங்கள் அவநம்பிக்கையையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் மேலும் சக குடிமக்களுக்கு, நாட்டின் மக்கள் மத்தியில் “வெறுப்பு மற்றும் பிரிவினை” சூழ்நிலை உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டு வருவதை நிராகரித்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள், “நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அனைத்து மதத்தினரும் தங்கள் மத வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட்டு நின்று, நமக்கு நாமேதான் நம் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டோம் என்றும் அதனை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்,” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறான தங்கள் கடிதத்திற்கு இவர்கள் அளித்துள்ள தலைப்பு, ‘நம் பாரம்பர்யம், பயங்கரவாதத்தால் உருவானது அல்ல,’ என்று குறிப்பிட்டிருப்பதுடன் மோடி மீது அவரது செயவ்களுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள்.
நரேந்திர மோடி, மேலும் வியப்பூட்டும் விதத்தில் ஒரு செய்தி சொல்லியிருக்கிறார். என்ன தெரியுமா? இந்துக்கள் என்பவர்கள் எந்தக்காலத்திலுமே வன்முறையாளர்களாக இருந்ததில்லையாம்! தான் பிரதமர் பதவியில் தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக, மோடி இந்தியாவின் வரலாறு என்பது மிகக் கொடூரமான யுத்தங்களும் போர்க் களங்களும் நிறைந்தவை என்பதை அழிக்கப் பார்க்கிறார்.  ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான மோடி, போதனை செய்து வந்த ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரு புராணங்களுமே அல்லது இதிகாசங்களுமே வன்முறையுடன் நிகழ்ந்த யுத்தங்களும் மோதல்களும் நிறைந்தவை என்பதை எப்படி மறந்தார் என்பதே ஆச்சர்யமாகும். நம்முடைய வரலாற்றிற்கு தற்போது ஆதாரமாக இருப்பதே இந்த இரு இதிகாசங்களும் மட்டும்தான். இந்திய வரலாற்றில் ‘மௌரியப்’ பேரரசின் முதல் மாமன்னராகத் திகழ்ந்த அசோகர், கலிங்கப் போரின்போது ஏற்பட்ட ரத்தக் களரியைக் கண்டு மனம் வெதும்பி, பின்னர் புத்தமதத்தைத் தழுவியதை நினைவு கூர்க.   இந்துயிசத்தைத் துறந்து, புத்திசத்தைத் தழுவிய பின்னர்தான் அசோகர், சகிப்புத்தன்மை, பிறரிடம் பரிவு காட்டுதல் மற்றும் பரஸ்பரம் மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்தல் ஆகியவற்றின் மூலமாக  வாழ்க்கையின் உன்னத லட்சியத்தைக் கண்டார்.   தன்னுடைய இந்தச் செய்தியை ஸ்தூபிகளில் செதுக்கப்பட்ட வெட்டெழுத்துக்கள் மூலமாக உலகம் முழுதும் கொண்டு சென்றார். அந்த ஸ்தூபிகளில் உள்ள வெட்டெழுத்துக்களில், “நான், மக்களை படைகளைக்கொண்டு கட்டாயப்படுத்தி வெல்வதைவிட, அவர்களிடையே அன்பு செலுத்துவதன் மூலமாக (தர்மத்தின் மூலமாக) அவர்களை வெல்ல முடியும் என்று நம்புகிறேன்,” என்று செதுக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில், அசோகரின் அடையாளமாக விளங்கும் சக்கரம் இன்றையதினம் நம் மூவர்ணத் தேசியக் கொடியில்வ பெருமைமிகு இடத்தைப் பெற்றிருக்கிறது. அசோகரின் ஸ்தூபிகளில் உள்ள நான்கு சிங்கங்கள்தான் இந்தியாவின் அதிகாரபூர்வ அடையாளமாகும். அவருடைய ஒரு ஸ்தூபியில் உள்ள பொன்மொழிகளில் ஒன்று, “ஒருவன் தன் இனத்தின் மீதான அர்ப்பணிப்பின் காரணமாக, அதனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், அதனை மதிப்பதும், அதே சமயத்தில் இதர இனங்களைக் கண்டிப்பதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவானேயானால் அவன் தன் சொந்த இனத்திற்கே மிக அதிகமான அளவில் ஊறு விளைவிக்கிறான்,” என்று கூறுகிறது.
ஆனால் ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பலின் இன்றைய நடவடிக்கைகள் அனைத்தும் அசோகர் ஸ்தூபிகளில் பொறித்து வைத்துள்ள பொன்மொழிகளுக்கு முற்றிலும் எதிரானவைகளாக இருந்து வருகின்றன.
“அனைத்து அரசியலையும் இந்துமயமாக்குங்கள், இந்துஸ்தானை ராணுவமயமாக்குங்கள்” - “HINDUISE ALL POLITICS, MILITARISE HINDUDOM”
இந்துக்கள் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது என இப்போது மோடி அடக்கி வாசித்தாலும், இந்துக்களுக்கு ராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதென்பதற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. வினாயக் தாமோதர் சாவர்க்கர்தான் இந்துத்துவா என்னும் சொல்லை உருவாக்கியவர். ஒரு தத்துவார்த்த அரசியல் கொள்கைத்திட்டத்திற்கான குணத்தையும் அதற்கு அவர் அளித்திட்டார். இவ்வாறு இவர் அளித்திட்ட இந்துத்துவா கொள்கைக்கும் இந்து மதத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது.  இதனை எய்துவதற்கு இவர் முன்வைத்த முழக்கம்தான், “அனைத்து அரசியலையும் இந்துமயமாக்குங்கள், இந்துஸ்தானை ராணுவமயமாக்குங்கள்” (“HINDUISE ALL POLITICS, MILITARISE HINDUDOM”) என்பதாகும்.   இதனால் உத்வேகம் பெற்றவரும், ஆர்எஸ்எஸ் இயக்க நிறுவனர் கே.பி. ஹெக்டேவார் அவர்களின் மூளையாகச் செயல்பட்டவருமான பி.எஸ். மூஞ்சே என்பவர், பாசிஸ்ட் சர்வாதிகாரி பெனிடோ முசோலினியை சந்திப்பதற்காக, இத்தாலிக்குப் பயணம் செய்தார். இவர்களிடையே சந்திப்பு 1931 மார்ச் 19 அன்று நடைபெற்றது. மூஞ்சே தன்னுடைய சொந்த நாட்குறிப்பில்  இதனை 1931 மார்ச் 20 என்று குறிப்பிட்டிருக்கிறார். இவர் எழுதியுள்ள தன்னுடைய நாட்குறிப்பில் இத்தாலியப் பாசிசம் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கும் விதம் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாகவும், தன்னை மிகவும் ஈர்த்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா திரும்பிய பின்னர், மூஞ்சே, 1935இல் நாசிக்கில் மத்திய இந்து ராணுவக் கல்வி சங்கம் (Central Hindu Military Education Society) என்ற ஒன்றை நிறுவினார். இதுதான் 1937இல் நிறுவப்பட்ட போன்சாலா ராணுவப் பள்ளிக்கு முன்னோடியாகும்.  இவை  அனைத்தும் பயங்கரவாதம் தொடர்பான ரேடாரின் மூலம் புலனாய்வு செய்யப்பட்டவைகளாகும். ஆர்எஸ்எஸ்-இன் குருவாகத் திகழும் கோல்வால்கர், 1939இல் நாசி பாசிசத்தின்கீழ்  ஹிட்லர் யூதர்களைக் களையெடுத்த நடவடிக்கைகளைக் கண்டு களிபேருவகை கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தன் சிஷ்யர்களுக்கு, “இந்துஸ்தானில் உள்ள நாம் கற்றுக் கொள்ளவும், ஆதாயம் அடையவும் இவை நமக்கு நல்ல பாடங்களாக  அமைந்திடும்,” என்று கூறியிருக்கிறார். இதன்பின்னர் வெகு ஆண்டுகள் கழித்து, அவர் 1970இல், “பொதுவாகக் கூறுவதென்றால்6, தீய சக்திகள் (இங்கே இந்துக்கள் அல்லாதவர்கள் என்று திருத்தி வாசிக்கவும்) நல்ல விதமாக, இனிய மொழியில் கூறினால் புரிந்துகொள்ள மாட்டார்கள்.  அவர்களை வன்முறை மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியும்,” என்று மேலும் கூறியிருக்கிறார்.
இந்துத்துவா மீது பாசிஸ்ட் தத்துவார்த்த செல்வாக்குகள்
2000, ஜனவரி 22இல் தேதியிட்ட எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி இதழில் வெளியாகியிருந்த ஓர் ஆய்வுக்கட்டுரையில், மர்சியா கசோலரி (Marzia Casolari),  இந்துத்துவா குழுக்களின் மீது பாசிஸ்ட் தத்துவார்த்த செல்வாக்குகள் இருப்பதை சான்றாவணங்களின் மூலமாக நிறுவியிருக்கிறார்- இந்துத்துவாவின் தத்துவார்த்தத் திட்டங்களையும் கொள்கைகளையும் இத்தாலியப் பாசிசமும், ஜெர்மன் நாசிசமும் வடிவமைத்திருக்கின்றன என்று அக்கட்டுரையாளர் கூறுகிறார். மேலும் அவர், “1920இன் தொடக்கத்தில் துவங்கி, இரண்டாம் உலகப் போர் வரையிலும், இந்து தேசியவாதிகள், பாசிஸ்ட் இத்தாலியின் அரசியல் எதார்த்த நிலைமைமையும் அதன் பின்னர் நாசி ஜெர்மனியையும் தங்களுக்கு உத்வேகம் ஊட்டுபவைகளாக விளங்குவதைப் பார்த்தார்கள்,” என்றும் கூறுகிறார். இந்துத்துவா சித்தாந்தத்தில் பாசிஸ்ட் செல்வாக்கு எந்த அளவிற்கு ஊடுருவியிருக்கிறது என்றால், அது, நாட்டில் வாழ்கின்ற இதர இனத்தினரையும், மதத்தினரையும் தங்கள் எதிரிகளாக மாற்றக்கூடிய அளவிற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது. ‘உள்ளார்ந்த எதிரி’ என்கிற சொற்றொடர் ஏன்கனவே சாவர்க்கரின் இந்துத்துவா சித்தாந்தத்திலும் ஒளிந்திருக்கிறது என்பது உண்மைதான் என்ற போதிலும், அதனைத் தொடர்ந்து ஜெர்மன் இனவெறிக் கொள்கையும், ஜெர்மனியின் யூதர்கள் பிரச்சனையை இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு, “பாசிஸ்ட் தத்துவார்த்தத்தின் அடிப்படையில்” மிகவும் துல்லியமானமுறையில். அந்நாட்டின் பாசிசத்தைத் இந்தியாவிற்கேற்ப மாற்றி, ‘உள்ளார்ந்த எதிரி’ கருத்தாக்கத்தை வளர்த்தெடுக்க கொண்டு சென்றுள்ளன.
ஆர்எஸ்எஸ்/பாஜகவின் தத்துவார்த்தப் பின்புலம் என்பது முசோலியின் பாசிசம் மற்றும் ஹிட்லரின் நாசிசம் ஆகியவற்றுடன் மிகவும் ஆழமானமுறையில் பின்னிப்பிணைந்தது என்று உரிய சான்றாவணங்கள் மூலமாக, இவ்வாறு மிகவும் ஆணித்தரமான முறையில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்து தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் எதிர்கால இந்தியாவைக் கட்டி எழுப்பிட இவ்வாறு இந்துத்துவா தத்துவார்த்த அடிப்படை அளிக்கப்பட்டுள்ளபோதிலும் அத்தகைய இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மூஞ்சே சொல்வது என்ன தெரியுமா?
“அந்தக் காலத்து சிவாஜி போன்ற சர்வாதிகாரி அல்லது இந்தக்காலத்து முசோலினி அல்லது ஹிட்லர் போன்று சர்வாதிகாரிகள் இல்லாமல் இத்தகைய தத்துவார்த்த அடிப்படையில் நாம் நம் சொந்த இந்து ராஷ்ட்ரத்தை அமைத்திட முடியாது.  … ஆனால் இவ்வாறு கூறுவதால் அத்தகைய சர்வாதிகாரிகள் உருவாகும்வரை நாம் நம் கைகளைக் கட்டிக்கொண்டு வெறுமனே அமர்ந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நாம் அதற்கானதொரு திட்டத்தை அறிவியல் அடிப்படையில் உருவாக்கிட வேண்டும். அதற்கான பிரச்சாரத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இத்தாலியில் ‘பாசிஸ்ட்டுகள்’ என்ன செய்தார்களோ, ஜெர்மனியில் ‘நாஜிக்கள்’ என்ன செய்தார்களோ அவற்றை எதிர்கால இந்தியாவில் சங்கிகள் செய்வார்கள் என்று நம்புவதாக.” மூஞ்சே கூறியிருப்பது என்பது மிகையான ஒன்று அல்ல.
மூஞ்சே, 1934இல் போன்ஸ்லா ராணுவப் பள்ளி என்னும் தன்னுடைய சொந்த நிறுவனத்தை அமைப்பதற்கான வேலையைத் துவக்கினார். இதற்காக, அதே ஆண்டில், மத்திய இந்து ராணுவக் கல்விச் சங்கத்தையும் அமைத்தார்.  அதன் நோக்கம், இந்துக்கள் மத்தியில் ராணுவரீதியிலான புத்துயிராக்கத்தைக் கொண்டுவர வேண்டும் மற்றும் இந்து இளைஞர்களை இந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையில் வலுவானவர்களாக உருவாக்க வேண்டும் என்பதேயாகும்.
அப்போது இந்து மகா சபையில் தலைவராக இருந்த சாவர்க்கரும் ஹிட்லரின் யூத எதிர்ப்புக் கொள்கையையே இந்துத்துவாவின் கொள்கைக்கு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டிருப்பதையும் கட்டுரையாளர் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறார். சாவர்க்கர் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்திலும் ஹிட்லரின் யூத எதிர்ப்புக் கொள்கையை ஆதரித்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கட்டுரையாளர் இந்தியாவில் முஸ்லீம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை 1938 அக்டோபர் 14 அன்ற அவர் கீழ்க்கண்டவாறு பரிந்துரைத்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
“ஒரு தேசம், அங்கே பெரும்பாலானவர்களாக வாழ்பவர்களால் அமைக்கப்படுகிறது. ஜெர்மனியில் யூதர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் சிறுபான்மையினராக இருந்ததால் ஜெர்மனியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். ஜெர்மனியில் ஜெர்மானியர்களின் இயக்கம் தேசிய இயக்கமாக இருக்கிறது. ஆனால் அதுவே அங்கே வாழ்ந்த யூதர்களுக்கு ஒரு வகுப்புவாத இயக்கமாகும்.”  
பின்னர் சாவர்க்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “தேசிய இனம் என்பது பெரும்பகுதியான பூகோளப் பகுதியை மட்டும் சார்ந்திருக்கவில்லை. அவர்களின் சிந்தனை, மதம், மொழி மற்றும் கலாச்சாரத்திலும் ஒற்றுமை இருந்திட வேண்டும். இதன் காரணமாகத்தான் ஜெர்மானியர்களும், யூதர்களும் ஒரே இடத்தில் வசித்த போதிலும் ஒரே நாட்டினராக – ஒரே தேசிய இனத்தினராக -   கருத முடியவில்லை.”
பாஜகவைத் தோற்கடிக்க வேண்டியது தலையாயக் கடமையாகும்
நரேந்திர மோடியும் அவர் தற்போது அவிழ்த்துவிடும் பொய் மூட்டைகளும் எங்கிருந்து உத்வேகம் பெற்றிருக்கின்றன என்பதற்கு இவற்றைவிட வேறென்ன ஆதாரங்கள் தேவை? தேர்தல் ஆதாயத்திற்காக ‘இந்துக்களின்’ பெயரால் இந்துத்துவா பயங்கரவாதிகளைப் பாதுகாப்பது என்பது மிகவும் மோசமான வாக்கு வங்கி அரசியலை வெளிப்படுத்தும் மாக்கியவெல்லியின் சூழ்ச்சியாகும். “பாரதம் என்கிற இந்தியாவைப்” பாதுகாத்திட இவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தமிழில்: ச.வீரமணி

Saturday, March 23, 2019

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்திடும்




தி இந்து நாளிதழில் சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

(நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களைத் தவிர மற்ற அனைத்துத் தரப்பு மக்களும், பாஜகவின் ஆட்சியில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று தி இந்து நாளிதழ் நேர்காணல் கண்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் அரசியல் உத்திகள் குறித்தும், இடதுசாரிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:)

கேள்வி: தேர்தல் மிகவும் நெருங்கிவந்துவிட்டபோதிலும், மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதில் இன்னமும் தயக்கம் காட்டிக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறதே!
சீத்தாராம் யெச்சூரி: இவ்வாறு கூறுவது உண்மையல்ல. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் நாட்டிலுள்ள அனைத்துத்தரப்பு மக்களையுமே கடுமையாகப் பாதித்திருக்கின்றன. பெரும் பணக்காரர்களைத் தவிர, மற்ற அனைத்துத் தரப்பினருமே  கடந்த ஐந்தாண்டுகளில்  கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இப்போது மக்கள் முன் உள்ள மிக முக்கியமான பிரச்சனை இதுவேயாகும். இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, மக்கள் மத்தியில் மதவெறியையும், போர் வெறியையும் கிளப்பிவிடுவதற்கான முயற்சிகளில் ஆட்சியாளர்கள் இறங்கி இருக்கிறார்கள். மேலும் மக்கள் மத்தியில்  கூருணர்ச்சிமிகுந்த பிரச்சனைகளை உருவாக்கிடவும் அதன்மூலம் மதவெறித் தீயை விசிறிவிடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவற்றை இவர்கள் தேர்தல் நெருங்க நெருங்க மேலும் தீவிரப்படுத்திடுவார்கள். இந்தத் தருணத்தில் எதிர்க்கட்சிகள் முக்கியமான மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தேர்தலின் முடிவினைத் தீர்மானிக்கப் போகிறது.
கேள்வி: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாலக்கோட்டில் விமானப் படையினர் நடத்திய தாக்குதல்கள் தேர்தலின் முடிவினை மாற்றியமைத்திடாதா?
சீத்தாராம் யெச்சூரி: மக்களின் கவனத்தை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்புவதற்காக ஆட்சியாளர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால்தான் பிரதமரே மிகவும் மூர்க்கத்தனமான முறையில் இப்பிரச்சனைகள் அரசியலாக்கப் பார்த்தார். இவரைத் தொடர்ந்து பாஜக தலைவரும், மத்திய அமைச்சர்களும் பாலக்கோட்டில் நடைபெற்ற விமானப் படையினரின் தாக்குதல் குறித்தும் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து பூஜ்யத்திலிருந்து, 450 பேர் வரையும் இறந்ததாக, தங்கள் இஷ்டத்திற்கு அள்ளிவீசினர். அந்த இடத்தில் பயன்படுத்திய செல்போன்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு அவற்றைப் பயன்படுத்திய அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்று நம் நாட்டின் உள்துறை அமைச்சரே கூறியதைப் பார்த்தோம்.   இதற்கு ஆதாரம் என்ன என்று எதிர்க்கட்சியினர் எவரும் கேட்கவில்லை. நாம் கூறியதெல்லாம், நம் விமானப்படையினர் தாக்க வேண்டிய இடங்களைச் சரியாகக் குறியிட்டு, வெற்றிகரமான முறையில் தாக்குதல் தொடுத்திருப்பதாகக்கூறி விமானப் படையினரை நாம் பாராட்டியிருக்கிறோம். இப்போது, அதன் விளைவு என்ன? விமானப் படையின் தளபதி கூறியிருப்பதைப்போல,
இப்பிரச்சனைகள் மீது  அரசாங்கம்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதேயாகும். அரசாங்கம் இவ்வாறு பதில் சொல்வதற்குப் பதிலாக, ‘எதிர்க்கட்சியினர் ராணுவத்தினரை எதிர்க் கேள்விகள் கேட்பதாக,’ எதிர்க்கட்சியினர் மீது திருப்பித்தாக்குதல் தொடுத்திருக்கிறது. இது முற்றிலும் மடத்தனமாகும். நாங்கள் கூறுவதென்னவெனில் இதன்மூலமாக இந்த அரசாங்கம் ஆதாயம் தேட முயற்சிக்கிறது என்பதேயாகும். ஊரி என்னும் ஊரில் நடைபெற்ற துல்லியத் தாக்குதல் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் என்று அரசாங்கம் கூறியது.  ஆனால் அது நடைபெறவில்லை. பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்கின்றன. அவை புல்வாமா நிகழ்வு வரையிலும் தொடர்ந்தன. இப்போது, பாலக்கோட்டிற்குப் பின்னர், இது பயங்கரவாதத் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் என்று கூறப்பட்டது. இதுவும் உண்மையல்ல. இதன்பின்னர் 12க்கும் மேற்பட்ட நம் பாதுகாப்புப்படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜம்முவில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடந்திருக்கிறது. இவையெல்லாம் மக்கள் கேட்கும் நியாயமான கேள்விகளாகும். ஜம்மு-காஷ்மீரில் உள்ள பதற்றநிலைமைகளை பாஜக-வினர் தங்களுக்குச் சாதகமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆனால். அதில் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. இந்திய வாக்காளர்கள் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில், எதிர்க்கட்சியினர் – ஆளுங் கட்சியினர் என்ற பேதம் கிடையாது. பயங்கரவாதம் என்பது நாட்டின் எதிரி. நாடு ஒன்றுபட்டு நின்று அதனை எதிர்த்திடும்.  ஆனாலும் பயங்கரவாதிகள் நாட்டு மக்களிடம் காணப்படும் ஒற்றுமையை, தங்களின் நடவடிக்கைகளின் மூலமாக பிரித்திட முயற்சிக்கிறார்கள்.  இவர்கள் வீசிய இத்தகைய சூழ்ச்சி வலையில் ஆட்சியாளர்களும் பாஜகவும் வீழ்ந்து சிக்கிக்கொண்டுவிட்டனர்.

கேள்வி: மேற்கு வங்கத்தில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்திட நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை  காங்கிரஸ் கட்சி நிராகரித்திருக்கிறதே. இதன் தாக்கம் இடது முன்னணிக்கு எப்படி இருக்கும்?
சீத்தாராம் யெச்சூரி: மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில், எப்போதுமே அங்கே கூட்டணி இருந்ததில்லை. பாஜகவையும் திரிணாமுல் காங்கிரசையும் தோற்கடித்திட வேண்டும் என்கிற எங்கள் குறிக்கோளை எய்துவதற்கு ஒரு முயற்சியை மேற்கொண்டோம். அதற்காக, பாஜக-விற்கு எதிரான வாக்குகளும், திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான வாக்குகளும் ஒரேயிடத்தில் குவிவதற்கான வேலைகளைச் செய்வோம் என்று நாங்கள் கூறினோம். இதேபோன்ற குறிக்கோளையுடைய மற்றவர்களுடனும் இணைந்துபோக தயாராக இருக்கிறோம் என்றும் நாங்கள் கூறினோம். எங்கள் நோக்கங்களை மேலும் தெளிவாக விளக்குவதற்காக, தற்போது பாஜக அல்லாது மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அல்லாது காங்கிரஸ் கட்சியும் இடது முன்னணியும் பெற்றுள்ள இடங்களில் பரஸ்பரம் போட்டியிட வேண்டாம் என்றும், நாங்கள் காங்கிரஸ் வென்ற இடங்களில் போட்டியிட மாட்டோம் என்றும் தாமாகவே முன்வந்து ஒரு யோசனையை முன்வைத்தோம். ஆனால் இதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. நாங்கள் வென்றுள்ள இடங்களிலும் அவர்கள் போட்டியிடும் விதத்தில் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்கள். இதுவரையிலும் அவ்வாறு செய்வதிலிருந்து எங்களை நாங்கள் தவிர்த்து வந்தோம். ஏனெனில் மக்கள் முன் நாங்கள் வைத்திட்ட வேண்டுகோளில் நாங்கள் உண்மையாக இருக்கிறோம் என்பதையும், இதற்குத் துரோகம் இழைப்பவர்கள் அவர்கள்தான் என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.  சென்ற மக்களவைத் தேர்தலில் 27 சதவீதம் வாக்குகளைப் பெற்ற இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்புகிறது. இங்கே மிக முக்கியமான பிரச்சனை, இடங்களின் எண்ணிக்கை அல்ல. பாஜக அல்லாத, திரிணாமுல் காங்கிரஸ் அல்லாத வாக்குகளை மிக அதிகமான அளவில் பெறக்கூடிய வேட்பாளர் யார் என்பதே இங்கே மிகவும் முக்கியமாகும்.

கேள்வி: இதன் தாக்கம் தேர்தல் முடிவுகளில் எவ்வாறு இருந்திடும்?
சீத்தாராம் யெச்சூரி: பொறுத்திருந்து பார்ப்போம். பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டையுமே தோற்கடிக்கக்கூடிய ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டால் அது வாக்காளர்கள் மத்தியில் பெரிய அளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்திடும். இதில் கூட்டணி அல்லது முன்னணி என்று கூறும் பிரச்சனையே கிடையாது.   

கேள்வி: மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே எதிர்க்கட்சியினர் பாஜகவிற்கு எதிராக அணிதிரள்வதை காங்கிரஸ் கட்சியானது தன்னுடைய பெரிய அண்ணன் மனப்பான்மை காரணமாக ஒத்துவராமல் வீணடிக்கிறது என்று நீங்கள் குறைகூறுகிறீர்களா?
சீத்தாராம் யெச்சூரி: நான் எவரையும் கூறைகூறும் ஒருவனல்ல. அவர்களின் முடிவுக்கு அவர்களுக்குப் பல காரணங்கள் மற்றும் நோக்கங்கள் இருக்கலாம். எங்கள் கவலை, நாட்டின் நலன் மற்றும் நாட்டு மக்களின் நலன், குறிப்பாக வங்க மக்களின் நலன் அடிப்படையிலானதாகும். அதன் அடிப்படையில் ஒரு திட்டத்தை தயாரித்து முன் வைத்தோம். தேர்தலில் தங்களின் முன்னுரிமைகள் என்ன என்று ஒவ்வொரு கட்சியுமே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் எங்கள் முன்னுரிமைகளை கீழ்க்கண்டவாறு தீர்மானித்திருக்கிறோம்: முதலாவது, பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் முறியடிப்போம். இரண்டாவது, மத்தியில் அமரும் ஆட்சியாளர்கள் மக்கள் நலன் சார்ந்த முறையில் கொள்கைத் திசைவழியில் மாற்றத்தை ஏற்படுத்திட நிர்ப்பந்தம் அளிக்கக்கூடியவிதத்தில், இடதுசாரிகளை வலுப்படுத்துவோம். மூன்றாவது, மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைவதை உத்தரவாதப்படுத்திடுவோம். தேர்தல்களும் அரசியலும் பள்ளிக்கூடக் கணக்கு போன்றதல்ல. (Elections and politrics is not arithmetic.) மக்கள் கடந்த காலங்களில் தங்களுக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்கள் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் தீர்மானிப்பார்கள்.
அரசியலில் இரண்டும் இரண்டும் நான்கு என்று  வாக்கு சதவீதத்தைக் கூட்டிக் காண்பிப்பதில் அர்த்தமே இல்லை. இரண்டும் இரண்டும் 22ஆகவும் மாற முடியும் அல்லது பூஜ்யமாகவும் மாற முடியும்.

கேள்வி: காங்கிரஸ் கட்சி தன்னுடைய முன்னுரிமைகளைச் சரியானமுறையில் பெற்றிருக்கவில்லை என்கிறீர்களா?
சீத்தாராம் யெச்சூரி: இதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அதன்மீது நான் விமர்சனம் செய்ய முடியாது.

கேள்வி: மக்களவையில் ஒற்றை இலக்கத்தில் இடங்களைப் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் கூட்டணி அமைத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறதா?
சீத்தாராம் யெச்சூரி: நான் கட்சியின் பொதுச் செயலாளராக மாறியபோது, மக்களவையில் எங்களுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் இடங்கள் இருந்தன. 2004க்கும் 2014க்கும் இடையே எங்கள் வீழ்ச்சி இருந்தது. இப்போது, நாங்கள் என்ன கூறிக்கொண்டிருக்கிறோம் என்றால், அமைய இருக்கும் ஆட்சியில் அவர்களின் கொள்கைத் திசைவழியில் செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு எங்கள் இடங்களை அதிகரித்திட வேண்டும் என்பதாகும். இன்றைய தினம், நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளுமே விவசாய நெருக்கடி குறித்து அல்லது வேலையில்லாக் கொடுமை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றன. இதற்கு எங்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள்தான் காரணமாகும். மக்கள் இயக்கங்களின் மூலமாக அனைத்துக் கட்சியினரின் நிகழ்ச்சிநிரல்களிலும் நாங்கள் செல்வாக்கினை செலுத்தியிருக்கின்றோம். ஆனால் அவை நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்கவேண்டியிருக்கிறது. இதற்கு எங்கள்  எண்ணிக்கை அதிகரிப்பதன்மூலமாக எங்கள் இருப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்.  நாட்டில் எங்குமே எங்களை யாராவது கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்களா என்று நாங்கள் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டைத் தவிர நாட்டின் இதர பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட பகுதிகளில் எங்கள் சொந்த பலத்தில்தான் போட்டியிடுகிறோம். தமிழ்நாட்டில் மட்டும் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறோம்.
(நன்றி: தி இந்து)
(தமிழில்: ச. வீரமணி)