Showing posts with label RSS. Show all posts
Showing posts with label RSS. Show all posts

Monday, August 19, 2019

காஷ்மீர் மீதான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் அமலாகி இருக்கிறது

இந்து ராஷ்ட்ரத்தை நோக்கி முதல் அடியாக
காஷ்மீர் மீதான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் அமலாகி இருக்கிறது
-பூர்ணிமா எஸ். திரிபாதி
பாஜக, தனக்கு நாடாளுமன்றத்திலிருக்கின்ற முரட்டுத்தனமானப் பெரும்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்-இன் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது. இது, சங் பரிவாரத்தின் கனவான இந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்காக எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் அடியாகும்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தினால் கற்பனை செய்யப்பட்டுள்ள இந்து ராஷ்ட்ரத்தை நம் நாட்டில் நிறுவிட வேண்டும் என்கிற வெறித்தனத்துடன் மோடி-2 அரசாங்கத்தால் அசூசையான உணர்வினை எடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 5 அன்று உண்மையாகிவிட்டது. ஆம், அன்றையதினம் அரசாங்கம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்திருந்த சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக்கட்டிவிட்டது. மேலும் அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததன் மூலம் அம்மாநிலத்தின் உரிமையையும் சூறையாடியிருக்கிறது.
ஆர்எஸ்எஸ். 1952இல் தன்னுடைய மத்திய நிர்வாகப் பிரிவு (Kendriya Karyakari Mandal) என்னும் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து முதல் தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானமானது, அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ உதவி தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமான பாகிஸ்தான்-அமெரிக்கா திட்டத்தை (Pak-American Pact) கண்டித்தது. மேலும் அந்தத் தீர்மானத்தில்  காஷ்மீரில் வெளிப்படையான வன்தாக்குதல் தொடர்வதாகவும் கூறப்பட்டிருந்தது.
அதற்கு அடுத்த ஆண்டு, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமான பாரதிய ஜன சங்கம், 370ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுதும் மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது. பாரதிய ஜன சங்கம், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு விசுவாசியான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்டது. இவ்வாறு பிரச்சாரம் மேற்கொண்டிருந்த சமயத்தில், முகர்ஜி 1953 மே மாதத்தில் ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் செய்தார். அப்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் எவரேனும் செல்ல விரும்பினால் மத்திய அரசின் அனுமதி (பர்மிட்) பெற வேண்டும். ஆனால் அவ்வாறு அவர் எதையும் பெறாது அரசின் விதிகளை மீறி ஜம்மு-காஷ்மீருக்குச் சென்றார்.
இவ்வாறு அம்மாநிலத்திற்குள் சென்றதுமே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சுமார் ஒரு மாதம் சிறையிலிருந்தார். சிறையிலிருந்தபோது ஜூன் மாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றார்.
1964இல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முடிவுகளைத் தீர்மானித்திடும் உச்சபட்ச அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபா (Akhil Bharatiya Pratinidhi Sabha) ‘பாரதத்தின் காஷ்மீர் கொள்கை’ என்னும் தலைப்பில் ஒரு  தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானம், நம்முடைய அரசமைப்புச்சட்டத்தில் காஷ்மீர் மீது தற்காலிக ஷரத்தாக சேர்க்கப்பட்டுள்ள 370ஆவது பிரிவு உடனடியாக நீக்கப்பட வேண்டும். மற்றும் அம்மாநிலம் இதர மாநிலங்களுக்கு இணையாகக் கொண்டுவரப்பட வேண்டும்,என்று கூறியது.   
ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கம், பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்து சென்றுள்ள முஸ்லீம்கள் திரும்பி வரவேண்டும் என்று அழைப்புவிடுத்தும் அவ்வாறு வருவார்களெனில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியபின்னர், 1982இல் ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கும் அகில பாரதிய நிர்வாகப் பிரிவு (Akhil Bharatiya Karyakari Mandal) என்னும் அமைப்பும் இதே கோரிக்கையை மீளவும் எழுப்பியது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மதவெறி மற்றும் பிரிவினை உணர்வுகளைத் தூண்டிவிட 370ஆவது பிரிவு அம்மாநில அரசாங்கத்தால் துஷ்பிரயோகம் செய்துவருவதாகவும், எனவே அப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து கூறி வந்தது.
இதே கோரிக்கை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளாலும் 1984, 1986 மற்றும் 1993 ஆகிய ஆண்டுகளிலும் திரும்பத்திரும்ப எழுப்பப்பட்டது.
1995இல் ஆர்எஸ்எஸ் முதன்முறையாக, ஜம்மு பிராந்தியம் தனி சுயாட்சி கவுன்சிலாக அமைக்கப்பட வேண்டும் என்று கோரியது. இதற்கு, இந்தப் பகுதியை மாநில அரசாங்கம் புறக்கணித்துக்கொண்டிருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. 1996இல் அகில பாரதிய நிர்வாகப் பிரிவு (Akhil Bharatiya Karyakari Mandal), ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. 370ஆவது பிரிவு தற்காலிகமான ஒன்றே என்றும் எனவே அதனை முழுமையாக செயலிழக்கச் செய்திட வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
2000இல் மத்தியில் அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையில் பாஜக அரசாங்கம் அமைந்தபோது, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் சுயாட்சி கோரி தீர்மானம் நிறைவேற்றியது.  அதைத்தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில பாரதிய நிர்வாகப் பிரிவும் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டிருந்தால் அம்மாநில அரசுக்கு இந்த அளவிற்குத் துணிவு வந்திருக்காது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  
ஜம்மு தனி மாநிலக் கோரிக்கை
2002இல் ஆர்எஸ்எஸ் முதன்முறையாக தனி ஜம்மு மாநிலத்திற்கான கோரிக்கையை எழுப்பியது. 2010இல், அகில பாரதிய பிரதிநிதி சபா, 370ஆவது பிரிவு குறித்து மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றியது. அதில், நம்முடைய அரசமைப்புச்சட்டத்தில் தற்காலிகமான மற்றும் நிலைமாற்ற ஷரத்தாகக் கொண்டுவரப்பட்ட 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படாததன் காரணமாக, பிரிவினைவாதிகள் மற்றும் பிரிந்துசெல்ல விரும்புகிறவர்களின் கைகளில் ஆயுதமாக இருப்பது தொடர்கிறது,என்று கூறப்பட்டிருந்தது.
ஆனாலும், இந்தப் பிரச்சனை தொடர்பாக இதுதான் கடைசித் தீர்மானமாகும். 2014இல் மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், ஆர்எஸ்எஸ் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை.
2019 ஆகஸ்டு 5 அன்று மாநிலங்களவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், மாநில உரிமையையை சிதைத்தும் சட்டமுன்வடிவு கொண்டுவந்து அதை நிறைவேற்றியபோது, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அரசாங்கம் மிகவும் துணிச்சலான நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறி, அரசாங்கத்தை வெகுவாகப் பாராட்டியும், மேலும் இது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவசியம் என்றும் கூறி பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டார். மேலும், இந்த நடவடிக்கைக்காக அனைவரும் அரசியல் வேறுபாடுகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த அரசாங்கத்தை ஆதரித்திட வேண்டும் என்றும் புத்திமதி கூறியிருக்கிறார். 
370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது, பாஜக, 1980 ஏப்ரலில் உருவான காலத்திலிருந்தே அவர்களின் தேர்தல் அறிக்கையின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அங்கம். அதன் செயல்பாடுகள் அனைத்தும் சங்பரிவாரத்தினால்தான் தீர்மானிக்கப்படுகிறது.
அரசியல் அரங்கில், 370ஆவது பிரிவை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை, முதன் முதலாக ஜம்முவில் இயங்கும் பிரஜா பரிசத் கட்சியால்தான் எழுப்பப்பட்டது. இது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஜம்முவிற்குப் பொறுப்பு வகித்துவந்த பிரேம் நாத் டோக்ரா என்பவரால் இந்து மகாசபையைச் சேர்ந்த பால்ராஜ் மதோக்குடன் இணைந்து நிறுவப்பட்டது. பால்ராஜ் மதோக்கும் சங் பரிவாரத்தின் சித்தாந்தங்களுக்கு உட்பட்டவர்தான்.
ஜம்முவில் உள்ள இந்துக்களின் பிரதிநிதியாகக் கூறிக்கொள்ளும் பிரஜா பரிசத் கட்சி, ஷேக் அப்துல்லா அரசாங்கத்தின் கீழ் ஜம்முவில் உள்ள இந்துக்கள் கடும் அட்டூழியங்களுக்கு ஆட்பட்டார்கள் என்றும், எனவே மத்திய அரசாங்கம் 370ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் ஒட்டுமொத்த மாநிலத்தையும் இதர மன்னர் சமஸ்தானங்களை இணைத்ததுபோன்று இந்தியாவுடன் இணைத்திட முடியும் என்றும் கூறிவந்தது.
ஷியாமா பிரசாத் முகர்ஜி முதன்முதலாக 1952இல் நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் தில்லியிலிருந்து  ஒரு பாரதிய ஜனதா சங்க வேட்பாளராகத் தேர்வுசெய்யப்பட்டு வெற்றிபெற்றபோது, கட்சியின் கோரிக்கை,  தெளிவாக முன்வைக்கப்பட்டது.
ஷியாம் பிரசாத் முகர்ஜி, ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்திருக்கிறார். எனினும் 370ஆவது பிரிவு உட்பட பல்வேறு பிரச்சனைகளில் தத்துவார்த்தரீதியாக வேறுபாடுகள் ஏற்பட்டதைத்தொடர்ந்து அமைச்சரவையிலிருந்து விலகிவிட்டார். முகர்ஜி, ஜம்மு மக்களின் குரலுக்கு நேருவும் ஷேக் அப்துல்லாவும் செவி சாய்த்திட வேண்டும் என்று கோரிப்பார்த்தார். எனினும் பயனேதும் இல்லை.
அவர் 1953 ஜனவரி 9க்கும், பிப்ரவரி 23க்கும் இடையே, ஜம்முவில் இந்துக்கள் கிளர்ச்சி நடத்தி வருவதாகவும், மாநில அரசாங்கம் அவர்கள்மீது அடக்குமுறையை ஏவிவிட்டிருப்பதாகவும் கூறி, நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் அவர்களின் கவனத்தை ஈர்த்து, பத்து கடிதங்கள் எழுதினார். இந்தக் கடிதங்களுக்கு அநேகமாகப் பதிலேதும் இல்லை.
ஷியாம் பிரசாத் முகர்ஜி, 1953 ஜனவரி 9 அன்று நேருவுக்கு எழுதிய முதல் கடிதத்தில், பிரஜா பரிசத் தலைமையிலான இயக்கம் கோரிவந்தபடி, ஜம்மு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடக்குமுறை மக்களின் அடிப்படைக் கேள்விகளுக்குப் பதிலாகிவிடாது. இந்தியாவில் பிறபகுதிகளில் வாழும் மக்களுக்குள்ள அரசமைப்புச் சட்டமே ஜம்முவில் வாழும் தங்களுக்கும் வேண்டும் என்று அவர்கள் கோருவது, அவர்களின் இயல்பால உரிமை (inherent right) இல்லையா? காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் வேறுவிதமாக நினைத்தால், அதற்காக ஜம்மு மக்களும் கஷ்டப்பட வேண்டுமா? ஏனெனில் காஷ்மீரிகளுக்கு இந்தியாவுடன் முழுமையாக இணைவதில் விருப்பமில்லை. ஜம்மு மக்கள் தங்கள் போராட்டத்தின்போது எழுப்பிடும்,  ஒரே கொடி, ஒரே அரசமைப்புச்சட்டம், ஒரே தலைவர் – என்பது மிகவும் உயர்ந்த தேசப்பற்று மிக்க மற்றும் உணர்ச்சிகரமான கோஷமாகும். நீங்களோ அல்லது ஷேக் அப்துல்லாவோ இந்தக் கேள்விக்குப் சிறையில் அடைத்தல் அல்லது புல்லட்டுகளால்  பதில் சொல்ல முடியாது,  என்று அவர் எழுதினார்.
இவ்வாறு அன்றையதினம் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, ஒரே தேசம், ஒரே கொடி, ஒரே அரசமைப்புச்சட்டம், ஒரே தலைவர் – என்று எழுப்பிய கோஷத்தை அடிப்படையாக வைத்துத்தான இந்தத் தேசத்தில் இரண்டு அரசமைப்புச் சட்டங்கள், இரண்டு கொடிகள், இரண்டு தலைவர்கள் ஏன்? அனுமதிக்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம்என்று இன்று பாஜகவினர் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகைளைத் தீர்த்திட அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தபோது, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நேரடியாகவே ஜம்மு-காஷ்மீருக்குச் சென்றார். அவ்வாறு செல்வதற்கு அரசாங்கத்தின் அனுமதி  (பர்மிட்) பெற வேண்டும் என்பதை மீறினார். அங்கே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையிலிருக்கும்போது இறந்துபோனார். எனவே, 370ஆவது பிரிவின்மீதான பிரச்சனை என்பது பாஜக-விற்கு மிகவும் புனிதமான ஒன்றாக மாறிப்போனது. 
வாஜ்பாயி ஆட்சிக் காலத்திலும், இதில் தீர்வுகாண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் தீர்வு எதுவும் ஏற்படவில்லை. அப்போது வாஜ்பாயி, நமக்குப் பெரும்பான்மை இல்லாததால் நம்மால் எதுவும் செய்ய முடியாது, என்று ஒப்புக்கொண்டார்.
இப்போது, மோடி அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் முரட்டுத்தனமான பெரும்பான்மை இருக்கிறது. ஆயினும் இப்போது அனைவர் மனதிலும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய அம்சம் என்னவென்றால், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படை நிகழ்ச்சிநிரலான, இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிட, மோடி அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறதா என்பதாகும்.
பாஜக தலைவர்கள் எப்போதுமே மதச்சார்பின்மை என்கிற வார்த்தை மீதும், இந்திரா காந்தியால் ஒரு திருத்தத்தின்மூலமாக அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட வழியின்மீதும் அவநம்பிக்கை கொண்டவர்கள். இப்போது,  நேரு-காந்தி மரபினை கிஞ்சிற்றும் ஈவிரக்கமின்றி இடித்துத்தள்ள மோடி-அமித்ஷா இரட்டையர் மேற்கொண்டிருக்கும் முரட்டுத்தனமான நடவடிக்கைகள், மேலும் இவர்கள் மனதில் என்னவெல்லாம் திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
(நன்றி: ப்ரண்ட்லைன்)
(தமிழில்: ச.வீரமணி)

இந்து ராஷ்ட்ரத்தை நோக்கி முதல் அடியாக காஷ்மீர் மீதான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் அமலா இருக்கிறது -பூர்ணிமா எஸ். திரிபாதி

இந்து ராஷ்ட்ரத்தை நோக்கி முதல் அடியாக
காஷ்மீர் மீதான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் அமலா இருக்கிறது

Monday, October 1, 2018

சிறுத்தைப்புலியால் தன் புள்ளிகளை எப்போதுமே மாற்றிக்கொள்ள முடியாது. -சீத்தாராம் யெச்சூரி

சிறுத்தைப்புலியால் தன் புள்ளிகளை எப்போதுமே மாற்றிக்கொள்ள முடியாது.
-சீத்தாராம் யெச்சூரி
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத் சமீபத்திய மூன்று நாள் உரையின்போது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தோற்றத்தை நவீனமாக மாற்றுவதற்கு முயற்சித்திருக்கிறார். எப்படி தங்கள் ஆர்எஸ்எஸ் முகாம்கள் இளைஞர்களைக் கவர்வதற்காக “உடற்பயிற்சி மையங்கள்”” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதோ அதேபோன்றதொரு முயற்சிதான் இது.
எனினும், இவர்களுடைய முக்கிய நோக்கம், ‘இந்து ராஷ்ட்ரம்’ என்று தாங்கள் அடிக்கடி கூறுவதன்மூலம் மக்கள் மத்தியில் இது முஸ்லீம்களுக்கு எதிரான ஒன்று என்பதும், தாங்கள் அமைத்திடும் இந்து ராஷ்ட்ரத்தில் முஸ்லீம்களுக்கு இடமில்லை என்றும் மக்கள் மத்தியில் ஏற்படும் உணர்வை மாற்ற வேண்டும் என்பதேயாகும்.
”ஆர்எஸ்எஸ் உலகளாவிய சகோதரத்துவத்திற்காக வேலை செய்கிறது. இத்தகைய சகோதரத்துவத்தின் அடிப்படைக் கொள்கை வேற்றுமையில் ஒற்றுமை காண்பதேயாகும். இந்த சிந்தனையே நம்முடைய கலாச்சாரத்திலிருந்துதான் வருகிறது. இதனை உலகம் இந்துத்துவா என்று அழைக்கிறது. அதனால்தான் நாம் அதனை ஓர் இந்து ராஷ்ட்ரம் என்று அழைக்கிறோம்.”
இவ்வாறு மோகன் பகவத் கூறியிருக்கிறார். இவர் கூறியதில் உள்ள, ‘இந்துத்துவா’ மற்றும் ‘இந்து ராஷ்ட்ரம்’ என்னும் இரண்டு வார்த்தைகளையும் முதற்கண் ஆராய்வோம். 1923இல் வி.டி. சாவர்க்கரால் உருவாக்கப்பட்ட வார்த்தைதான் ’இந்துத்துவா’ என்பதாகும். அப்போது அவர் இந்துத்துவா’-விற்கும் இந்து மதத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடக் கூறினார். இந்து தேசத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் திட்டம் அது என்றார். இதனை எய்திட, ‘இராணுவத்தை இந்துமயமாக்கு, இந்துதேசத்தை இராணுவமயமாக்கு’ (`Hinduise the military, militarise Hindudom’) என்ற முழக்கத்தை முன்வைத்தார். அவருடைய அடிப்படை உந்துதல் என்னவெனில் (முஸ்லீம்கள், கிறித்தவர்களைத் தவிர) மற்றபடி இந்தியாவில் பல்வேறு மத நம்பிக்கைகளுடனும், மதங்களுடனும் வாழும் பல்வேறுதரப்பு மக்களையும், வகையினரையும் எப்படி ஒன்றுபடுத்துவது என்பதேயாகும்.
1939இல் நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்’’ (We or Our Nationhood defined (1939) என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவரான எம்.எஸ். கோல்வால்கர் எழுதிய தன் புத்தகத்தில், ‘இந்து ராஷ்ட்ரம்’ என்றால் என்ன என்று வரையறுத்திருக்கிறார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ என்னும் குறிக்கோளை எய்திட தேவையான தத்துவார்த்த அடித்தளங்களையும், ஸ்தாபன வலைப்பின்னலையும் இந்நூலில் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். இவ்வாறு தாங்கள் விரும்பும் ‘இந்து ராஷ்ட்ரம்’ அமையும்போது,, அந்நியர்களாக இருப்பவர்களுக்கு  (அதாவது முஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு) இரு மார்க்கங்கள் மட்டும்தான் வெளிப்படையாக உண்டு என்றும்,  அதாவது, ஒன்று அவர்கள் தேசிய இனத்துடன் முழுமையாக இணைந்து, அவர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது தேசிய இனம் அவ்வாறு அவர்கள் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கும் வரையில்   மற்றும் தேசிய இனத்தவரால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று சொல்லும்வரையில், அவர்களது கருணையின் கீழ் வாழ்ந்து கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும், இந்துஸ்தானில் உள்ள அந்நிய இனங்கள் ஒன்று இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இந்து மதத்தை மதித்திடவும், பயபக்தியுடன் போற்றித் துதித்திடவும் வேண்டும், இந்து இனத்தையும்,  கலாச்சாரத்தையும், அதாவது இந்து தேசத்தை வானளாவப் புகழ்வதைத் தவிர வேறெந்த சிந்தனையையும் ஏற்காதிருக்க வேண்டும், தங்களுடைய தனிப்பட்ட அடையாளங்களை யெல்லாம் துறந்துவிட்டு இந்து இனத்துடன் சங்கமித்திட வேண்டும்,  அல்லது எதையும் கோராமல், எவ்விதமான சிறப்புரிமைகளையும் உரிமைபாராட்டாமல், முன்னுரிமை சலுகைகள் எதனையும் கோராமல், ஒரு பிரஜைக்குரிய உரிமைகளைக் கூடக் கோராமல்,  இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து இருந்து கொண்டு, நாட்டில் தங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் அவர்கள் வேறெந்த விதத்திலும் இருந்துவிடக்கூடாது. (கோல்வால்கர், 1939, பக். 47-48)/
பின்னர், 1966இல் அவர் எழுதிய ‘சிந்தனைக் கொத்துக்கள்’ (`Bunch of Thoughts’) என்னும் நூலில், (இந்து ராஷ்ட்ரத்திற்கு) ‘உள்ளுக்குள்ளேயே இருந்திடும் அச்சுறுத்தல்கள்’ என்னும் அத்தியாயத்தில், அவர் முஸ்லீம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளை வரிசைப்படுத்தி, பட்டியலிட்டிருக்கிறார். இதுகுறித்து, மோகன் பகவத் கூறும்போது, இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பவை எல்லாம் எல்லாக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய அளவிற்கு சாசுவதமானது அல்ல என்றும் அது ஒரு சூழ்நிலையில் கூறப்பட்டது அவ்வளவே என்றும், அது எப்போதும் நிலையானது அல்ல என்றும் சொல்கிறார். இவ்வாறு கோல்வால்கர் கூறியதை, மோகன் பகவத் மறுதலித்திருக்கிறார்.
இது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நிச்சயமாக, இந்தியாவில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் 200 மில்லியன் (20 கோடி) முஸ்லீம்களை, வெளியேற்றிவிட முடியாது. ஆனால், ‘இந்து ராஷ்ட்ரத்தில்’ அவர்களின் தகுநிலை என்ன? இந்திய அரசமைப்புச்சட்டமானது, நாட்டில் வாழும் அனைவருக்கும், அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அனைவரும் சமம் என்கிறது. அதேபோன்று இந்து ராஷ்ட்ரத்தில் இந்துக்களுக்கு இணையாக சம அந்தஸ்துள்ள பிரஜைகளாக சுதந்திரத்துடனும், கண்ணியத்துடனும் அவர்கள் வாழ்ந்திட முடியுமா?
மோடி அரசாங்கத்தின் கடந்த நான்காண்டு கால ஆட்சியின் அனுபவம், நமக்கு, பாஜக என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கம் என்பதை மேலும் தெளிவாக, உறுதிப்படுத்தி இருக்கிறது. பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லீம்கள் மீதும், தலித்துகள் மீதும் ஏவப்பட்ட கொலைபாதகத் தாக்குதல்களும், நம்முடைய குழந்தைகள் எப்படி உடை உடுத்திட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எவருடன் நண்பராக இருந்திட வேண்டும் என்று கட்டளையிடுகிற தனியார் ராணுவங்கள், அவ்வாறு அவர்கள் செய்ய மறுத்தால் அவர்களைத் தாக்குவதும், குண்டர் படையினர் முஸ்லீம்களைக் கொலை செய்து வருவதும், ‘புனித ஜிகாத்’ என்னும் பெயரில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பதும், மனிதாபிமானமற்ற முறையில் சிறுமிகளைக்கூட வன்புணர்வு செய்து கொலை புரிவதும் – இவை அனைத்தும் நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு பகுதி மக்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு, சிறுபான்மை இன மக்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றன.
கடந்த நான்காண்டு கால பாஜக ஆட்சியின் அனுபவங்கள், கோல்வால்கர் ’இந்து ராஷ்ட்ரம்’ குறித்துக் கூறியிருப்பவனவற்றை நமக்கு நம் இரத்தத்தை உறையக்கூடியவிதத்தில் நினைவூட்டுபவைகளாக, அமைந்துள்ளன. மோகன் பகவத் வேறுபல விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற கொலைகள் மற்றும் வன்முறைகள் குறித்து அவர் குறிப்பிடும்போது, சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராகக் கடும் தண்டனை அளித்திட வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவ்வாறு அவர் பேசும்போதுகூட முன்னுக்குப்பின் முரண் ஏன்? முஸ்லீம்களைக் கொன்றதற்கு எதிராகக் குரல் எழுப்பும் அதே சமயத்தில், பசுக்களைக் கடத்திச் செல்வதற்கு எதிராகவும் கிளர்ச்சிகள் நடத்திட வேண்டும் என்று திருவாய்மலர்ந்திருக்கிறார். இது ஏன்? உள்ளொன்று வைத்துக்கொண்டு, புறம்பொன்று பேசுவதற்குச் சரியான உதாரணம் இதுவேயாகும். பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்துமே பசுப் பாதுகாப்புக்கு என்று சட்டங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன. எனினும் அதனை அவை ஏன் அமல்படுத்தவில்லை.
மோகன் பகவத், புதிய கல்வி கொள்கை கூறித்தும் பேசியிருக்கிறார். நம்முடைய மதிப்பு அடிப்படையிலான கல்விமுறைகள் (value based systems) நம் கல்விக் கொள்கையில் இணைக்கப்பட வேண்டும் என்று அறிவுரை நல்கியிருக்கிறார். (அதாவது ‘இந்து ராஷ்ட்ரம்’ அடிப்படையிலான கல்விமுறைகள் என்று புரிந்துகொள்க) அடுத்து, மொழிக் கொள்கையைப் பொறுத்தவரையில், அனைத்து மொழிகளும் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தாலும், நம் தாய்மொழியை, அதாவது சமஸ்கிருதத்தை மதித்திட வேண்டும் என்றும், இம்மொழியில் ஏராளமான இலக்கியங்களைப் படைப்பதன்மூலம் இதனைப் பிரபல்யப்படுத்திட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
மதமாற்றங்கள் குறித்து அவர் பேசுகையில் அது உள்நோக்கங்களின் (ulterior motives) அடிப்படையில் அமைந்திடக்கூடாது என்று கூறியிருக்கிறார். இதற்கு அவர் கூறிடும் உதாரணம், தேவாலயங்களில் நடைபெறும் கூட்டத்திற்கு மக்கள் வரவேண்டும் என்பதற்காக பணம் தரப்படுவதாகவும், அதனைத் தடுத்திட வேண்டும் என்பதுமாகும். மதச்சிறுபான்மை நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகளும் தாக்குதல்கள் தொடுப்பதற்கான காரணங்கள் புரிகிறதல்லவா?
மொத்தத்தில், மோகன் பகவத் உரை என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தை, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அழகுசாதன மையத்தின் மூலமாக, மக்கள் ஏற்கும் விதத்தில் மாற்ற முயற்சித்திருப்பதேயாகும். இவ்வாறு அவர்கள் என்னதான் தங்கள் முகலட்சணத்தை மாற்ற முயற்சித்தாலும், நம் நாட்டில் புழங்கும் முதுமொழிக்கிணங்க, “சிறுத்தைப்புலியால் தன் புள்ளிகளை எப்போதுமே மாற்றிக்கொள்ள முடியாது.”
தமிழில்: ச.வீரமணி

Wednesday, May 25, 2016

கட்டப் பஞ்சாயத்தாக மாறி வரும் என் ஐ ஏ எஸ்.எம். முஷ்ரிஃப்

( மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி மாறியபின் தேசிய புலனாய்வு ஏஜென்சியும் காவிமயமாகத் தொடங்கிவிட்டது. மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டு சிறையில் இருந்துவரும் சாமியாரினி பிரக்யா தாகூர், கர்னல் புரோஹித் உட்பட ஆறு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்வதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட நீதிமன்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதிடும் வழக்குரைஞர்களைப் போலவே என்ஐஏ அதிகாரிகள் இப்போது பேசத் துவங்கிவிட்டனர்.)
இந்து பயங்கரவாத அமைப்பு என்ற ஒன்று செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததே ஹேமந்த்கர்காரேதான். மும்பை 26/11 தாக்குதலின் போது பயங்கரவாதிகளுக்கு எதிராக அவர் காட்டிய வீரமும், தீரமும் அதில் அவர் தன்உயிரை இழந்ததும் அனைவரும் அறிந்தஒன்றேயாகும். அவரது புலனாய்வுத் திறமைகள் புலனாய்வு அதிகாரிகளாலும், மற்றவர்களாலும் போற்றிப் புகழப் பட்டு வருகின்றன. ஏர் இந்தியா நிறு வனத்திற்குச் சொந்தமான ஐசி 814 விமானம் கடத்தப்பட்ட சமயத்தில் அதுதொடர்பாக முக்கியமான துப்பு அளித்தவர் என்றுராஅமைப்பின் தலைவர் ஏஎஸ் துலாத் அவர்களால் பாராட்டப்பட்டவர்.ஹேமந்த் கர்காரே, 2008ஆம் ஆண்டு ஆறு பேரை பலி கொண்ட மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் குறித்துபுலனாய்வினைத் தொடங்கியபோது தான், அபினவ் பாரத் என்னும் இந்து பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் செயல்பட்டு வருவதையும் அது 2006-07ஆம் ஆண்டு களுக்கு இடையே ஒன்பது வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தி 449 பேரைக் கொன்று குவித்திருக்கிறது என்பதையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.ஹேமந்த் கர்காரேயின் புலனாய்வின் மூலம் அபினவ் பாரத்தைச் சேர்ந்த 14 பேர் - மாலேகான் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமானவர்கள்- சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைக் கப்பட்டார்கள். இவர்களில் சாமியாரினி பிரக்யா தாகூர் மற்றும் ராணுவ அதிகாரி கர்னல் புரோஹித் ஆகியோரும் அடங்குவர்.மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி மாறியபின் தேசியபுலனாய்வு ஏஜென்சியும் காவிமயமாகத் தொடங்கிவிட்டது.
மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதலில் சம்பந்தப் பட்டு சிறையில் இருந்துவரும் சாமியாரினி பிரக்யா தாகூர், கர்னல் புரோஹித் உட்பட ஆறு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்வதற்கான வேலைகளில் இறங்கிஇருக்கிறது. கிட்டத்தட்ட நீதிமன்றங் களில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதிடும் வழக்குரைஞர்களைப் போலவே என்ஐஏ அதிகாரிகள் இப்போது பேசத் துவங்கிவிட்டனர்.சாமியாரினி பிரக்யாவிற்கு எதிராக உள்ள ஒரேயொரு சாட்சியம் வெடிகுண்டுத் தாக்குதலின்போது பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் அவருடையதாக இருந்தபோதிலும், அந்தமோட்டார் சைக்கிளை அவர் பயன் படுத்தவில்லையாம், மாறாக ராமச் சந்திர கல்சங்க்ரா என்பவர்தான் பயன்படுத்தினாராம். அதேபோன்று கர்னல்புரோகித்திற்கு எதிராக கர்காரே தலைமை யில் செயல்பட்டு வந்த பயங்கரவாத எதிர்ப்புப் படை தான் சாட்சியத்தைத் திணித்தது என்று கூறி இவ்விருவருக்கும் எதிராக போடப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழான வழக்குகளைத் தள்ளுபடி செய்து விட்டது.இதைவிட கொடூரமான அம்சம் என்ன வெனில், இவ்வழக்கில் நீதித்துறை நடுவர் முன் ஏழு பேர் அளித்த சாட்சியங்களும் காணாமல் போய்விட்டதாம். குற்றவியல் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு களில் காவல்துறையினர் முன் அளித்த சாட்சியங்களை நீதிமன்றங்கள் ஏற்று வழக்கைத் தீர்மானிக்காது. ஆனால் நீதித்துறை நடுவர் முன் அளிக்கப்பட்ட சாட்சியங்களை அது ஏற்றுக்கொண்டு, அதன்கீழ் தண்டனை அளித்திடும். எனவேதான் என்ஐஏ இவ்வாறு நீதித்துறை நடுவர் முன் அளித்த சாட்சியங்களை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதர வாக, மும்பையில் உள்ள என்ஐஏ நீதிமன் றத்திலிருந்து காணாமல் போய்விட்டன என்று கூறியிருக்கிறது.அதுமட்டுமல்ல, கர்காரே மேற்கொண்ட விசாரணை மிகவும்இரண்டகமானதுஎன்றும் அது குப்பைத் தொட்டி யில் தூக்கி எறியப்பட வேண்டியது என்றும் கூறியிருக்கிறது.
இந்த சமயத்தில் ஹேமந்த் கர்காரே யின் மூத்த அதிகாரியாக செயல்பட்ட மகாராஷ்டிர காவல்துறை முன்னாள் தலைவர்எஸ்.எம். முஷ்ரிஃப் மாலேகான் வெடி குண்டு தாக்குதல் வழக்கு குறித்தும், அதனை விசாரணை செய்த ஹேமந்த் கர்காரே குறித்தும் கூறுவது மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.இவர் ஹேமந்த் கர்காரே கொல்லப் பட்ட சம்பவம் குறித்து மீண்டும் விசார ணை செய்ய வேண்டும் என்று, “கர்காரே கொல்லப்பட்டது யாரால்?’’ என்று எழுதியுள்ள புத்தகத்தில் கோரியுள்ளார். இந்த புத்தகத்தின் அடிப்படையில் ஒருவழக்கு தற்போது மும்பை உயர்நீதிமன்றத் தில் நிலுவையில் இருந்து வருகிறது.எஸ்.எம்.முஷ்ரிஃப் கேட்ச் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கு குறித்தும், இந்து பயங்கரவாத வழக்குகள் குறித்தும், என்ஐஏ இப்போது தாக்கல் செய்துள்ள துணை குற்ற அறிக்கையில் உள்ள குறைபாடுகள் குறித்தும், கர்காரேயின் திறமைகள் குறித்தும் குறிப்பிடுகிறார்.கேட்ச் நியூஸ் செய்தி நிறுவனம் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: உங்களுக்குக் கீழ் ஹேமந்த் கர்காரே வேலை செய்திருக்கிறார். இந்து பயங்கரவாத வழக்குகளை வெளிக்கொணர்ந்த அவர் குறித்து கொஞ்சம் கூறுங்கள்.முஷ்ரிஃப்:
ஆம், நான் அவருடன் வேலை செய்திருக்கிறேன். மிகவும் நேர்மையானவர். வேலையில் மிகவும் கறாராக இருப்பார். அபினவ் பாரத் என்னும் இந்து பயங்கரவாத அமைப்பு குறித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் அவர்தான். மாலேகான் வெடிகுண்டு தாக்குதல் வழக்கை கர்காரே விசாரித்த போதுதான், கர்னல் புரோகித்தை அவர் கைது செய்தார். புரோகித், மயக்க நிலைஆய்வுகள் மூலம் கர்காரேயால் விசாரிக்கப்படுகையில் இந்து பயங்கரவாதிகள் மேற்கொண்ட அனைத்து தாக்குதல் சம்பவங்கள் குறித்தும் அவர் கக்கிவிட்டார்.பயங்கரவாத எதிர்ப்புக் குழு தாக்கல் செய்த குற்ற அறிக்கைக்கும், தற்போது என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்ற அறிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதில் எதை எடுத்துக் கொள்வது என்று நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.ஆஜ்மீர் ஷரீப், மெக்கா மசூதி மற்றும் பல தாக்குதல்களில் அபினவ் பாரத் சம்பந்தப்பட்டிருப்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியது. புரோகித் மற்றும் தயானந்த் என்பவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிக் கணினிகள் (லேப்டாப்புகள்) இந்து பயங்கரவாதக் குழுக்கள் எங்கெங்கெல்லாம் பயிற்சி முகாம்கள் நடத்தின,வெடிகுண்டுகளை எப்படித் தயார் செய் தன மற்றும் அவர்கள் உபயோகப்படுத்திய பல்வேறு விதமான ஆயுதங்கள் மற்றும் அவற்றைப் புதிதாக இயக்கத்திற்குத் தேர்வுசெய்யப்பட்டவர்கள் பெற்ற பயிற்சிகள் குறித்துமான விவரங்களைக் கொண்டிருந்தன.ஹேமந்த் கர்காரே கொல்லப்பட்டு மூன்றாண்டுகள் உருண்டோடிவிட்டன. எனினும் அவரைக் கொலை செய்தவர் கள் யார் என்பது குறித்த விசாரணை நம்பிக்கை அளிக்கக்கூடிய விதத்தில் நடைபெறவில்லை.
இப்போது அவர் மேற் கொண்ட விசாரணைகள் கூட குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.என்ஐஏ என்னும் ஸ்தாபனம் இதுநாள் வரையில் மிகவும் உயர்ந்த விதத்தில் மிகவும் நம்பகமான ஓர் அமைப்பாக செயல்பட்டு வந்தது. இது தாக்கல் செய்யும்வழக்குகளில் 95 சதவீதம் தண்டனை யைப் பெற்றுவிடும். இந்த நிறுவனமே இன்று அரசியல் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு இந்தஅமைப்பு இப்போது தாக்கல் செய்துள்ள துணை குற்ற அறிக்கையே சாட்சியமாகும். இதில் அபினவ் பாரத்தின் சாமியாரினி பிரக்யா பெயர் இடம் பெறவில்லை.கர்காரேயும் அவரது குழுவும் இவருக்கு எதிராக வலுவாக சாட்சியங்களை பதிவு செய்துள்ளபோதிலும் இது நடந்திருக்கிறது. மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் இவருடையது. மேலும் போபால் மற்றும் இந்தூரில் நடைபெற்ற அபினவ் பாரத் நடத்திய கூட்டங் களில் இவர் பங்கேற்றிருப்பது காணொளி மூலம் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.என்ஐஏ மிகவும் அருமையாகச் செயல்பட்டு வந்தது. இப்போது அதன் உயர்அதிகாரிகள் அனைவரும் திடீரென்று மாற்றப்பட்டுவிட்டார்கள். இப்போது பொறுப்பு ஏற்று இருக்கும் அனைவரும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்கள். இயல்பாகவே வகுப்புவாதிகள். மும்பை யில் 26/11 நடைபெற்ற தாக்குதல் குறித்து இந்த அமைப்புக்கு ஐந்து நாட்களுக்கு முன்பே தெரியும். எனினும் இது மும்பை காவல்துறையினரிடம் இதுகுறித்துக் கூறி அவர்களை எச்சரிக்கைப்படுத்த அது முன்வரவில்லை.தற்போது என்ஐஏ அடிப்படையாக மேற்கொள்ள வேண்டிய, பெயரளவிலான புலன் விசாரணையைக் கூட செய்ய வில்லை.கர்காரே மேற்கொண்ட விசாரணையின் ஒரு பகுதி, சாமியாரினி பிரக்யா வெடி குண்டுத் தாக்குதலுக்குப்பின் நடத்திய தொலைபேசி உரையாடலாகும். அதில் அவர், ஏன் ஆறு பேர் மட்டுமே இறந்தார்கள் என்று தாக்குதல் நடத்தியவர் களிடம் எரிந்து விழுவது பதிவாகி இருக்கிறது. வழக்கில் புரோகித்திடமிருந்தும் ஸ்வாமி தயானந்த்திடமிருந்தும் கைப்பற்றப்பட்ட மடிக் கணினிகளில் கண்டுள்ள விவரங்களிலிருந்து கர்னல் புரோகித் வெடிகுண்டுத் தாக்குதலுக்குத் தேவையான வெடிமருந்துகளைத் தான் ஏற்பாடு செய்துதருவதாகவும், அவற்றை நிறைவேற்று வதற்கான ஆள் பலத்தை சாமியாரினி பிரக்யா ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் காணப்படுகிறது. போபால் மற்றும் இந்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் இவ்வாறு கூறப் பட்டிருப்பது சாட்சியமாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.ஆயினும் புதிய என்ஐஏ அதிகாரிகள் இதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.
பயங்கரவாத எதிர்ப்புக் குழு விசாரணை மேற்கொண்டுதாக்கல் செய்த குற்ற அறிக்கையை என்ஐஏ எப்படி நிராகரிக்க முடியும்?
நீதிமன்றம் இப்போது இதனைத் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கர்காரே தாக்கல் செய்த குற்றஅறிக்கையை நீதிமன்றம் எடுத்துக் கொண்டு வழக்கை நடத்தினால் சாமியாரினியும் இந்து பயங்கரவாதிகளும் சிறைக்குச் செல்வது நிச்சயம். மாறாக, இப்போதைய என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்ற அறிக்கையின் அடிப்படையில் வழக்கை நடத்தினால் உண்மையான பயங்கரவாதிகள் தப்பிப்பது நிச்சயம்.நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது என்று பார்க்க வேண்டும்.இப்போதுள்ள என்ஐஏ வட இந்தியா வின் கிராமங்களில் இன்றும் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக இயங்கிக் கொண் டிருக்கும் கட்டைப் பஞ்சாயத்து போலவே மாற்றப்பட்டுவிட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஆதரவாகச் செயல்படும் ஓர்அமைப்பாக மாற்றப்பட்டுவிட்டது.
கர்னல் புரோகித் பரிதாபாத்தில் நடை பெற்ற அபினவ் பாரத் கூட்டம் ஒன்றில் பேசுவது பதிவாகி இருக்கிறது. அதில் அவர் என்ன கூறுகிறார் தெரியுமா?
இப்போதுள்ள அரசாங்கத்தைத் தூக்கிஎறிந்துவிட்டு, அங்கே வேதங்கள் மற்றும்மனுஸ்மிருதியின் அடிப்படையில் செயல்படும் நம் அரசாங்கத்தை அமர்த்துவதற் காகவே அபினவ் பாரத் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.’’ மோடி அரசாங்கத்தின் தலைமை யிலான மத்தியஅரசாங்கம் என்ஐஏ நிறு வனத்தை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆதரவு அமைப்பாக மாற்றி அமைத்ததற்கான காரணம் இப்போது நன்கு புரிகிறது, இல்லையா?
நன்றி : கேட்ச் நியூஸ்
கட்டுரையாளர்: மகாராஷ்டிர மாநில காவல்துறை முன்னாள் தலைவர்
தமிழில் : .வீரமணி