Wednesday, May 25, 2016

கட்டப் பஞ்சாயத்தாக மாறி வரும் என் ஐ ஏ எஸ்.எம். முஷ்ரிஃப்


( மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி மாறியபின் தேசிய புலனாய்வு ஏஜென்சியும் காவிமயமாகத் தொடங்கிவிட்டது. மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டு சிறையில் இருந்துவரும் சாமியாரினி பிரக்யா தாகூர், கர்னல் புரோஹித் உட்பட ஆறு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்வதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட நீதிமன்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதிடும் வழக்குரைஞர்களைப் போலவே என்ஐஏ அதிகாரிகள் இப்போது பேசத் துவங்கிவிட்டனர்.)
இந்து பயங்கரவாத அமைப்பு என்ற ஒன்று செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததே ஹேமந்த்கர்காரேதான். மும்பை 26/11 தாக்குதலின் போது பயங்கரவாதிகளுக்கு எதிராக அவர் காட்டிய வீரமும், தீரமும் அதில் அவர் தன்உயிரை இழந்ததும் அனைவரும் அறிந்தஒன்றேயாகும். அவரது புலனாய்வுத் திறமைகள் புலனாய்வு அதிகாரிகளாலும், மற்றவர்களாலும் போற்றிப் புகழப் பட்டு வருகின்றன. ஏர் இந்தியா நிறு வனத்திற்குச் சொந்தமான ஐசி 814 விமானம் கடத்தப்பட்ட சமயத்தில் அதுதொடர்பாக முக்கியமான துப்பு அளித்தவர் என்றுராஅமைப்பின் தலைவர் ஏஎஸ் துலாத் அவர்களால் பாராட்டப்பட்டவர்.ஹேமந்த் கர்காரே, 2008ஆம் ஆண்டு ஆறு பேரை பலி கொண்ட மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் குறித்துபுலனாய்வினைத் தொடங்கியபோது தான், அபினவ் பாரத் என்னும் இந்து பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் செயல்பட்டு வருவதையும் அது 2006-07ஆம் ஆண்டு களுக்கு இடையே ஒன்பது வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தி 449 பேரைக் கொன்று குவித்திருக்கிறது என்பதையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.ஹேமந்த் கர்காரேயின் புலனாய்வின் மூலம் அபினவ் பாரத்தைச் சேர்ந்த 14 பேர் - மாலேகான் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமானவர்கள்- சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைக் கப்பட்டார்கள். இவர்களில் சாமியாரினி பிரக்யா தாகூர் மற்றும் ராணுவ அதிகாரி கர்னல் புரோஹித் ஆகியோரும் அடங்குவர்.மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி மாறியபின் தேசியபுலனாய்வு ஏஜென்சியும் காவிமயமாகத் தொடங்கிவிட்டது.
மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதலில் சம்பந்தப் பட்டு சிறையில் இருந்துவரும் சாமியாரினி பிரக்யா தாகூர், கர்னல் புரோஹித் உட்பட ஆறு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்வதற்கான வேலைகளில் இறங்கிஇருக்கிறது. கிட்டத்தட்ட நீதிமன்றங் களில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதிடும் வழக்குரைஞர்களைப் போலவே என்ஐஏ அதிகாரிகள் இப்போது பேசத் துவங்கிவிட்டனர்.சாமியாரினி பிரக்யாவிற்கு எதிராக உள்ள ஒரேயொரு சாட்சியம் வெடிகுண்டுத் தாக்குதலின்போது பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் அவருடையதாக இருந்தபோதிலும், அந்தமோட்டார் சைக்கிளை அவர் பயன் படுத்தவில்லையாம், மாறாக ராமச் சந்திர கல்சங்க்ரா என்பவர்தான் பயன்படுத்தினாராம். அதேபோன்று கர்னல்புரோகித்திற்கு எதிராக கர்காரே தலைமை யில் செயல்பட்டு வந்த பயங்கரவாத எதிர்ப்புப் படை தான் சாட்சியத்தைத் திணித்தது என்று கூறி இவ்விருவருக்கும் எதிராக போடப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழான வழக்குகளைத் தள்ளுபடி செய்து விட்டது.இதைவிட கொடூரமான அம்சம் என்ன வெனில், இவ்வழக்கில் நீதித்துறை நடுவர் முன் ஏழு பேர் அளித்த சாட்சியங்களும் காணாமல் போய்விட்டதாம். குற்றவியல் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு களில் காவல்துறையினர் முன் அளித்த சாட்சியங்களை நீதிமன்றங்கள் ஏற்று வழக்கைத் தீர்மானிக்காது. ஆனால் நீதித்துறை நடுவர் முன் அளிக்கப்பட்ட சாட்சியங்களை அது ஏற்றுக்கொண்டு, அதன்கீழ் தண்டனை அளித்திடும். எனவேதான் என்ஐஏ இவ்வாறு நீதித்துறை நடுவர் முன் அளித்த சாட்சியங்களை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதர வாக, மும்பையில் உள்ள என்ஐஏ நீதிமன் றத்திலிருந்து காணாமல் போய்விட்டன என்று கூறியிருக்கிறது.அதுமட்டுமல்ல, கர்காரே மேற்கொண்ட விசாரணை மிகவும்இரண்டகமானதுஎன்றும் அது குப்பைத் தொட்டி யில் தூக்கி எறியப்பட வேண்டியது என்றும் கூறியிருக்கிறது.
இந்த சமயத்தில் ஹேமந்த் கர்காரே யின் மூத்த அதிகாரியாக செயல்பட்ட மகாராஷ்டிர காவல்துறை முன்னாள் தலைவர்எஸ்.எம். முஷ்ரிஃப் மாலேகான் வெடி குண்டு தாக்குதல் வழக்கு குறித்தும், அதனை விசாரணை செய்த ஹேமந்த் கர்காரே குறித்தும் கூறுவது மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.இவர் ஹேமந்த் கர்காரே கொல்லப் பட்ட சம்பவம் குறித்து மீண்டும் விசார ணை செய்ய வேண்டும் என்று, “கர்காரே கொல்லப்பட்டது யாரால்?’’ என்று எழுதியுள்ள புத்தகத்தில் கோரியுள்ளார். இந்த புத்தகத்தின் அடிப்படையில் ஒருவழக்கு தற்போது மும்பை உயர்நீதிமன்றத் தில் நிலுவையில் இருந்து வருகிறது.எஸ்.எம்.முஷ்ரிஃப் கேட்ச் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கு குறித்தும், இந்து பயங்கரவாத வழக்குகள் குறித்தும், என்ஐஏ இப்போது தாக்கல் செய்துள்ள துணை குற்ற அறிக்கையில் உள்ள குறைபாடுகள் குறித்தும், கர்காரேயின் திறமைகள் குறித்தும் குறிப்பிடுகிறார்.கேட்ச் நியூஸ் செய்தி நிறுவனம் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: உங்களுக்குக் கீழ் ஹேமந்த் கர்காரே வேலை செய்திருக்கிறார். இந்து பயங்கரவாத வழக்குகளை வெளிக்கொணர்ந்த அவர் குறித்து கொஞ்சம் கூறுங்கள்.முஷ்ரிஃப்:
ஆம், நான் அவருடன் வேலை செய்திருக்கிறேன். மிகவும் நேர்மையானவர். வேலையில் மிகவும் கறாராக இருப்பார். அபினவ் பாரத் என்னும் இந்து பயங்கரவாத அமைப்பு குறித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் அவர்தான். மாலேகான் வெடிகுண்டு தாக்குதல் வழக்கை கர்காரே விசாரித்த போதுதான், கர்னல் புரோகித்தை அவர் கைது செய்தார். புரோகித், மயக்க நிலைஆய்வுகள் மூலம் கர்காரேயால் விசாரிக்கப்படுகையில் இந்து பயங்கரவாதிகள் மேற்கொண்ட அனைத்து தாக்குதல் சம்பவங்கள் குறித்தும் அவர் கக்கிவிட்டார்.பயங்கரவாத எதிர்ப்புக் குழு தாக்கல் செய்த குற்ற அறிக்கைக்கும், தற்போது என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்ற அறிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதில் எதை எடுத்துக் கொள்வது என்று நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.ஆஜ்மீர் ஷரீப், மெக்கா மசூதி மற்றும் பல தாக்குதல்களில் அபினவ் பாரத் சம்பந்தப்பட்டிருப்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியது. புரோகித் மற்றும் தயானந்த் என்பவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிக் கணினிகள் (லேப்டாப்புகள்) இந்து பயங்கரவாதக் குழுக்கள் எங்கெங்கெல்லாம் பயிற்சி முகாம்கள் நடத்தின,வெடிகுண்டுகளை எப்படித் தயார் செய் தன மற்றும் அவர்கள் உபயோகப்படுத்திய பல்வேறு விதமான ஆயுதங்கள் மற்றும் அவற்றைப் புதிதாக இயக்கத்திற்குத் தேர்வுசெய்யப்பட்டவர்கள் பெற்ற பயிற்சிகள் குறித்துமான விவரங்களைக் கொண்டிருந்தன.ஹேமந்த் கர்காரே கொல்லப்பட்டு மூன்றாண்டுகள் உருண்டோடிவிட்டன. எனினும் அவரைக் கொலை செய்தவர் கள் யார் என்பது குறித்த விசாரணை நம்பிக்கை அளிக்கக்கூடிய விதத்தில் நடைபெறவில்லை.
இப்போது அவர் மேற் கொண்ட விசாரணைகள் கூட குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.என்ஐஏ என்னும் ஸ்தாபனம் இதுநாள் வரையில் மிகவும் உயர்ந்த விதத்தில் மிகவும் நம்பகமான ஓர் அமைப்பாக செயல்பட்டு வந்தது. இது தாக்கல் செய்யும்வழக்குகளில் 95 சதவீதம் தண்டனை யைப் பெற்றுவிடும். இந்த நிறுவனமே இன்று அரசியல் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு இந்தஅமைப்பு இப்போது தாக்கல் செய்துள்ள துணை குற்ற அறிக்கையே சாட்சியமாகும். இதில் அபினவ் பாரத்தின் சாமியாரினி பிரக்யா பெயர் இடம் பெறவில்லை.கர்காரேயும் அவரது குழுவும் இவருக்கு எதிராக வலுவாக சாட்சியங்களை பதிவு செய்துள்ளபோதிலும் இது நடந்திருக்கிறது. மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் இவருடையது. மேலும் போபால் மற்றும் இந்தூரில் நடைபெற்ற அபினவ் பாரத் நடத்திய கூட்டங் களில் இவர் பங்கேற்றிருப்பது காணொளி மூலம் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.என்ஐஏ மிகவும் அருமையாகச் செயல்பட்டு வந்தது. இப்போது அதன் உயர்அதிகாரிகள் அனைவரும் திடீரென்று மாற்றப்பட்டுவிட்டார்கள். இப்போது பொறுப்பு ஏற்று இருக்கும் அனைவரும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்கள். இயல்பாகவே வகுப்புவாதிகள். மும்பை யில் 26/11 நடைபெற்ற தாக்குதல் குறித்து இந்த அமைப்புக்கு ஐந்து நாட்களுக்கு முன்பே தெரியும். எனினும் இது மும்பை காவல்துறையினரிடம் இதுகுறித்துக் கூறி அவர்களை எச்சரிக்கைப்படுத்த அது முன்வரவில்லை.தற்போது என்ஐஏ அடிப்படையாக மேற்கொள்ள வேண்டிய, பெயரளவிலான புலன் விசாரணையைக் கூட செய்ய வில்லை.கர்காரே மேற்கொண்ட விசாரணையின் ஒரு பகுதி, சாமியாரினி பிரக்யா வெடி குண்டுத் தாக்குதலுக்குப்பின் நடத்திய தொலைபேசி உரையாடலாகும். அதில் அவர், ஏன் ஆறு பேர் மட்டுமே இறந்தார்கள் என்று தாக்குதல் நடத்தியவர் களிடம் எரிந்து விழுவது பதிவாகி இருக்கிறது. வழக்கில் புரோகித்திடமிருந்தும் ஸ்வாமி தயானந்த்திடமிருந்தும் கைப்பற்றப்பட்ட மடிக் கணினிகளில் கண்டுள்ள விவரங்களிலிருந்து கர்னல் புரோகித் வெடிகுண்டுத் தாக்குதலுக்குத் தேவையான வெடிமருந்துகளைத் தான் ஏற்பாடு செய்துதருவதாகவும், அவற்றை நிறைவேற்று வதற்கான ஆள் பலத்தை சாமியாரினி பிரக்யா ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் காணப்படுகிறது. போபால் மற்றும் இந்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் இவ்வாறு கூறப் பட்டிருப்பது சாட்சியமாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.ஆயினும் புதிய என்ஐஏ அதிகாரிகள் இதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.
பயங்கரவாத எதிர்ப்புக் குழு விசாரணை மேற்கொண்டுதாக்கல் செய்த குற்ற அறிக்கையை என்ஐஏ எப்படி நிராகரிக்க முடியும்?
நீதிமன்றம் இப்போது இதனைத் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கர்காரே தாக்கல் செய்த குற்றஅறிக்கையை நீதிமன்றம் எடுத்துக் கொண்டு வழக்கை நடத்தினால் சாமியாரினியும் இந்து பயங்கரவாதிகளும் சிறைக்குச் செல்வது நிச்சயம். மாறாக, இப்போதைய என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்ற அறிக்கையின் அடிப்படையில் வழக்கை நடத்தினால் உண்மையான பயங்கரவாதிகள் தப்பிப்பது நிச்சயம்.நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது என்று பார்க்க வேண்டும்.இப்போதுள்ள என்ஐஏ வட இந்தியா வின் கிராமங்களில் இன்றும் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக இயங்கிக் கொண் டிருக்கும் கட்டைப் பஞ்சாயத்து போலவே மாற்றப்பட்டுவிட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஆதரவாகச் செயல்படும் ஓர்அமைப்பாக மாற்றப்பட்டுவிட்டது.
கர்னல் புரோகித் பரிதாபாத்தில் நடை பெற்ற அபினவ் பாரத் கூட்டம் ஒன்றில் பேசுவது பதிவாகி இருக்கிறது. அதில் அவர் என்ன கூறுகிறார் தெரியுமா?
இப்போதுள்ள அரசாங்கத்தைத் தூக்கிஎறிந்துவிட்டு, அங்கே வேதங்கள் மற்றும்மனுஸ்மிருதியின் அடிப்படையில் செயல்படும் நம் அரசாங்கத்தை அமர்த்துவதற் காகவே அபினவ் பாரத் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.’’ மோடி அரசாங்கத்தின் தலைமை யிலான மத்தியஅரசாங்கம் என்ஐஏ நிறு வனத்தை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆதரவு அமைப்பாக மாற்றி அமைத்ததற்கான காரணம் இப்போது நன்கு புரிகிறது, இல்லையா?
நன்றி : கேட்ச் நியூஸ்
கட்டுரையாளர்: மகாராஷ்டிர மாநில காவல்துறை முன்னாள் தலைவர்
தமிழில் : .வீரமணி


No comments: