Saturday, July 4, 2020

தமிழ்ச் சுருக்கெழுத்துப் பாடநூல் (சில புரட்சிகர மாற்றங்களுடன்)


தமிழ்ச் சுருக்கெழுத்துப் பாடநூல்
(சில புரட்சிகர மாற்றங்களுடன்)

அன்பார்ந்த சுருக்கெழுத்துக் கற்றுக்கொள்ளும் மாணவச் செல்வங்களே,
தமிழ்ச் சுருக்கெழுத்து (சீனிவாசராவ் முறை) நூல் தற்போது தமிழ்நாடு அரசின் சார்பாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. எனவே தமிழ்ச்சுருக்கெழுத்துக் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் அதனை வாங்கிப் பயிற்சி செய்யக் கேட்டுக்கொள்கிறேன்.
இத்துடன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நானும் என்னுடன் பணியாற்றிய நண்பர்களும் மற்றும் என்னிடம் பயின்ற மாணவர்களும் உருவாக்கிப் பயன்படுத்திய சில புரட்சிகரமான மாற்றங்களை இந்தச் சிறிய நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
சுருக்கெழுத்துக் கற்றுக்கொண்ட மாணவர்களும், கற்றுக்கொள்கின்ற மாணவர்களும் இதனை நன்கு ஆராய்ந்து, அதன்பின் பயிற்சி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் யூ-ட்யுப் வலைதளத்திலும் என்னுடைய இடுகையான illakkia.blogspot.com-இலும் பதிவேற்றம் செய்துள்ள தமிழ்ச் சுருக்கெழுத்து வரிவடிவங்களில் இந்த மாற்றங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதால் இவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு பயிற்சி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.



No comments: