பிப்ரவரி
2011
தலைவர் அவர்களே,
மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களால், கொண்டுவரப்பட்டு
இருக்கும் இந்த வரவு செலவுத் திட்டத்தை நான் வரவேற்கிறேன். கைத்/தறித் துறையில் ஏராளமான
துணிகள் உற்பத்தி செய்வதற்கு ஏற்றமுறையில், வழிவகைகள் இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த நாட்டில் விவ//சாயத்திற்கு, அடுத்தபடியாக இந்தத் தொழில் இருக்கிறது. பண்டிகைக்
காலங்களிலேதான், கைத்தறித் துணிகள் விற்கப்படுகின்றன. மற்ற காலங்களி///லே, விற்பனை
ஆவதில்லை. நெசவாளர்களுக்கும் வேலை இல்லை. இதற்கு ஒரு நிரந்தரப் பரிகாரம் காண வேண்டுமென்று
நீண்ட காலமாக இந்த அவையிலே நாங்கள் (1) எடுத்துச் சொல்லி இருக்கிறோம். ஆனால் இந்தப்
பிரச்சனையில், இதுவரையில் தீர்வு காணாத நிலை இருக்கிறது. இதற்கு ஒரு நல்ல சட்டவடிவம்
அமைத்/து, நெசவாளர்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை
இந்த நிதிநிலை அறிக்கையிலே காணப்படுகிறது.
கடந்த முறை ஆ//ளுநர் உரையின்மீது பேசுகிறபோது,
நூல்விலை ஏறிக்கொண்டே போகிறது என்று சொன்னேன். நூல்விலை ஏறிக்கொண்டே போவதால், இன்றைக்கு
நெசவாளர்களின் வாழ்க்கைத்///தரத்திலே, பிரச்சினைகள் ஏற்பட்டு, அவர்களுடைய கூலி குறையுமோ
என்ற சந்தேகமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், நம்முடைய மாநில அரசு மத்தி(2)ய அரசிடத்திலே
சில கோரிக்கைகளை வைக்க வேண்டும் என்று சொன்னேன். மத்திய அரசில் இருக்கிற மாண்புமிகு
அமைச்சர் அவர்கள், “நூல் நிலையை விரைவிலே
/ குறைப்பேன்” என்று பாராளுமன்றத்திலே
சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இன்று வரை நூலின் விலை குறைய வில்லை. அதைக் குறைக்க
வேண்டுமென்று மத்திய அரசைக்// கேட்டுக் கொள்ளுகிறேன்.
அடுத்து, ஏழை எளிய மக்களுக்கு பல நல்ல வேலைவாய்ப்புத்
திட்டங்களை இங்கே வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். காடு வளர்///க்கும் திட்டத்தின்கீழ்,
பல கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆனால், காடுகள் வளரவில்லை. காடுகளில்
நிறைய சின்னச் சின்ன செடிகள் (3) வளர்ந்து இருப்பதைப் பார்க்கிறோம். நம் நாட்டில் பழங்காலங்களில்
பரம்பரையாக, மாந்தோப்பு போன்று பல தோப்புகள் இருந்தன. அவைகள் எல்லாம் / இப்போது இல்லை
என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். கனி தரும் தோப்புகள் நிறைய முன்பு இருக்கும். சாலைகளின்
ஓரங்களில் எல்லாம் பழம் தரும் மர//ங்கள் இருக்கும். இப்போது அந்த மரங்கள் இல்லை. இப்படிப்பட்ட
மரங்களை யெல்லாம், காட்டு இலாகா வளர்க்க வேண்டும் என்று, கேட்டுக் கொள்ளு///கிறேன்.
கனி தரும் மரங்கள் இருந்தால் பறவைகள் கூட பழங்களைத்
தின்ன நிறைய வரும். ஆகவே மரங்களை வளர்த்தால், மக்களுக்குப் பயன்படும் என்பதைத் தெரிவித்துக்
கொண்டு, காடு வளர்க்கும் திட்டத்திலே இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்
கொள்ளுகிறே/ன்.
கிராமங்களில் சங்கங்களை ஆரம்பித்து வாதாட முடியாமல்,
குடிதண்ணீரின்றி வாடுகிற மக்கள் இருக்கிறார்கள். காலையில் எழுந்தவுடனே, கூலி வேலையை//த்
தேடிப் போகிறார்கள். ஆனால், அந்தக் கூலி வேலையும் கிடைப்பதில்லை. அவர்களுடைய வறுமையைப்
போக்கிட மத்திய அரசுத் திட்டத்தின்கீழ், கோதுமையைக்/// கொடுப்பது என்றும், ஒரு நாளைக்கு
மூன்று ரூபாய் கூலி கொடுப்பது என்றும், ஒரு திட்டத்தை நமது அரசு, கொண்டு வந்திருக்கிறது.
இது பாராட்டுக்கு உரியது. (5)
ஆமதாபாத், கோபால் கூட்டமைப்பு, சென்னை, ராமசாமி
கூட்டமைப்பிற்கு எழுதும் கடிதம்.
அன்புடையீர், எங்களுடைய தயாரிப்பான “கமலா”
சோப் தூள் அடங்கிய / ஒரு மாதிரி டின்னை இன்று நாங்கள் உங்களுக்கு அனுப்பி இருக்கிறோம்.
இதை இப்பொழுதுதான் சந்தையில் புகுத்தியுள்ளோம்.
இந்தப் பொருள் எங்களுடைய நீண்//ட கால ஆராய்ச்சியின் பலன். இது ஒரு நீண்டகாலத்
தேவையைப் பூர்த்தி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இத்துடன் ஓர் அட்டவணை நகலை இணைத்து///ள்ளோம்.
அதிலிருந்து இந்தப் பொருளின் நல்ல அம்சங்களை நன்கு அறியலாம். இது மிகவும் சிக்கனமானது.
தண்ணீரில் உடனே கரைந்துவிடும். எல்லா வகையா(6)ன துணிகளையும் சுத்தம் செய்துவிடும்.
மேலும் இது துணிகளுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
நம் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இது குறித்து
தகவ/ல் கேட்டு கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனுடைய நல்ல அம்சங்களை முன்னிட்டு,
இது விரைவில் விற்பனையாகும் பொருள் என்று தோன்றுகிறது.
இப்//பொருளை நாங்கள் உங்களுக்கு பதினைந்து விழுக்காடு
தள்ளுபடியில் விற்க இசைவு தெரிவிக்கிறோம். இந்த இசைவை கவனத்துடன் பரிசீலனை செய்து,
தங்க///ளுடைய தேவையைத் தெரிவித்தால், நாங்கள் உடனடியாக ஆவன செய்யத் தயாராக உள்ளோம்.
தங்களுடைய பதிலை எதிர்பார்க்கிறோம்.
தங்கள் நம்பிக்கையுள்ள,(7)
No comments:
Post a Comment