Thursday, July 2, 2020

தமிழ்ச் சுருக்கெழுத்து - 2014 பிப்ரவரி - முதுநிலை


                    

பிப்ரவரி 2014  
மாண்புமிகு துணைத் தலைவர் அவர்களே,
    இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை முழுமனதோடு ஆதரிக்கும் முறையில் என் கருத்துக்கள் சிலவற்றைச் சொ/ல்ல விரும்புகிறேன். இவ்வாண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செவுத் திட்டம் எதிர்காலத்தில் ஏழைகளுக்கு நல்ல வழிவகைகள் வகுக்கும் திட்ட//மாகவும் மக்களுக்குப் பொறுப்பு உணர்ச்சியை எடுத்துரைக்கும் திட்டமாகவும் இருக்கிறது.
   இந்த நாட்டின் ஆசிரியர்களின் குறைகளையும் காவலர்///களின் குறைகளையும் உடனடியாகக் கவனிக்க வேண்டும். காரணம், நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், சத்திய நெறிக்கும், நாணய வாழ்க்கைக்கும், நீ(1)தியைக் காக்கவும் முக்கிய பொறுப்புள்ள ஆசிரியர்களுக்கும் காவலர்களுக்கும் பொருளாதாரத்தில் வசதி செய்துதர வேண்டுமென்று மிகவும் தாழ்மை/யுடன் கேட்டுக் கொள்கிறேன். ஆசிரியர்களுக்கும் காவலர்களுக்கும் அவசியம் ஊதிய உயர்வினாலோ வேறு விதமாகவோ அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தி//ற்கு வழி செய்ய வேண்டுகிறேன். இது அரசின் நிர்வாகத்திற்கு மிகவும் அவசியம் எனவும் வற்புறுத்துகிறேன்.
      தவிர, தொழிலாளர்களின் நிலைமை அரசைப் பொறு//த்தவரையில், அனுதாபத்துக்கு உரியதாக இருந்து வருவதோடு, பல நன்மை பயக்கும் சட்டம் செய்வதையும் பாராட்டுகிறேன். ஆனால் தொழிற்சாலை முதலாளிக(2)ள் எங்கு பார்த்தாலும் ஆள் குறைப்புத் திட்டம் கொண்டு வந்து வேலை இல்லாத நிலைமையை உண்டாக்கி வருகிறார்கள். இது விஷயத்தில் தொழிலாளர்கள் மிகவு/ம் பரிதாபத்துக்குரிய நிலைமையில் இருந்து வருகிறார்கள். ஆகையால் இதில் அரசு தலையிட்டு நியாயமான குறையைக் கண்டு ஆவன செய்யக் கோருகிறேன். கி//ராமங்களில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க, கிராமங்களில் இருக்கும் புறம்போக்கு நிலங்களை ஏழை விவசாய மக்களுக்குக் கொடுத்து கூட்டுற///வு முறையில் பயிர் செய்தால், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதோடு, உற்பத்தியையும் பெருக்க வசதி ஏற்படும் என்று கூற விரும்புகிறேன்.
     அடுத்து, (3) மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு கடல் ஓரங்களில் வசிக்கிற மக்களுக்கு அரசு தனி இலாகா அமைத்து, அவர்கள் குறையைப் போக்க, பல முறைகளில் / வேலை செய்தாலும். உண்மையில் அரசு நினைக்கிற அளவுக்கு அவர்களுக்கு நன்மை கிடைக்கவில்லை என்று சொல்லலாம். உதாரணமாக, விற்பனைக்கு மீனைக் கொண்டு // போக, லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதன் மேற்பார்வையை அந்த சமூகத்தில் இருப்பவர்களுக்கோ அந்த சமூகத்தினரால் நடத்தப்///படுகிற கூட்டுறவு சங்கங்களுக்கோதான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லாததால், தனிப்பட்டவர்கள் கூட இதை நடத்துகிறார்கள். இதனால் (4) சில இடங்களில் இந்த லாரி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது. ஆகவே, இந்த வேலைக்கு அந்த சமூகத்தில் பிறந்தவர்/களை முன் வைத்து, மீன்துறை வேலை செய்யவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் இவர்கள் தொழிலுக்கு மிக முக்கியமான கட்டுமரங்களை அரசே முன்பணம் // போட்டு, வெளி இடங்களிலிருந்து வரவழைத்து, மீன்படிக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு நியாயமான விலையில் கொடுத்து, இந்த ஏழை சமூகத்தை ஆதரிக்க///க் கோருகிறேன்.
     இதேபோல சென்னையில் சாலை ஓரங்களில் நடைபாதை மேடையில் வாழ்கிற ஏழை மக்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுத்தால், அது நலமாய் இருக்கும். (5)

    மும்பை, வள்ளுவர் கூட்டமைப்பிடமிருந்து சென்னை, திருவாளர்கள் முருகன் கூட்டமைப்பிற்கு எழுதும் கடிதம்.
அன்புடையீர்,
     தாங்கள் நீண்டகாலமாக /ங்களோடு தொடர்பு கொண்டுள்ளீர்கள். எங்களுடைய பொருள்கள் நாடு முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இது எங்களுக்கு மிகுந்த உற்சாக//த்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இப்பொழுது நாங்கள் எங்களுடைய தொழிலை விரிவாக்க முனைந்துள்ளோம். அதற்காக சில நவீன கருவிகளை வாங்க வேண்டிய /// அவசியம் ஏற்பட்டுள்ளது. அவைகளை வாங்கி நிறுவுவதற்கு சிறிது காலம் ஆகலாம். அதனால் இடைக் காலத்தில் இப்பொழுது உள்ள உற்பத்தித் திறனுக்கு(6)த் தடை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆகையால், கோரியுள்ள பொருள்களை அனுப்புவதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படக்கூடும். புதிய கருவிகள் நி/றுவப்பட்டு, உற்பத்தியைக் கூடிய விரைவில் அதிகரிக்க நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். வாடிக்கையாளர்களுடைய கோரிக்கைகளையும் தேவை//களையும் பூர்த்தி செய்ய நாங்கள் ஆவன செய்து வருகிறோம்.
    தற்போது உள்ள காலதாமதத்திற்கு வருந்துகிறோம். இதனால் தங்களுக்கு ஏற்படக்கூடிய /// சிரமத்தினைப் பொருட்படுத்தாமல், எங்களுக்கு தங்கள் ஆதரவைத் தொடர்ந்து அளித்து வருவீர்கள் என்று நம்புகின்றோம்.
                                    தங்கள் நம்பிக்கையுள்ள, (7)


No comments: