Tuesday, July 28, 2020

தமிழ்ச் சுருக்கெழுத்து - முதுநிலை - ஆகஸ்ட் 2010




தமிழ்ச் சுருக்கெழுத்து - முதுநிலை - ஆகஸ்ட் 2010



தலைவர் அவர்களே,
இன்று அவையில் விவாதிக்கப்படவிருக்கும் பொருள் குறித்து என்னுடைய கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு, எனக்கு இந்த நல்வாய்/ப்பினை வழங்கிய தங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
பல்வேறு நலத் திட்டங்கள் இந்த அர//சால் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து மக்களுக்கு நன்மை /// பயக்கும் விதமான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன என்பதை நான் சுட்டிக்காட்டும்போது யாரும் அதனை மறுக்க மாட்டார்கள் என்று நம்புகின்றே(1)ன்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.  பொது விநியோகக் கடைகளில் மக்கள் மகிழ்ச்சியுடன் அதனை வாங்கிச் சென்று சமைத்து சா/ப்பிடுகின்றனர். இல்லங்களில் குதூகலம் தொடர்கிறது என்பதை அவர்களது முகங்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது என்பதை நான் இங்கே தெரிவி//ப்பது என்னுடைய தலையாய கடமை எனக் கருதுகின்றேன்.
விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு /// வருகிறது. மின் உற்பத்தி நிலையங்களில் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து, உபரியாக இருக்கும் அளவிற்கு நிலைமையைக் கொண்டு செல்ல வேண்டியது (2) அரசின் கடமைப் பொறுப்பாகும் என்பதை ஆணித்தரமாக நான் கூற விரும்புகின்றேன்.  எதற்கெடுத்தாலும் அரசைக் குறைகூறும் எண்ணம் இருக்கக்கூடாது /என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
அண்டை மாநிலங்களோடு நல்லுறவு கொண்டுள்ள இந்த அரசை நான் பெரிதும் பாராட்ட விரும்புகின்றேன். இந்த நிலை // தொடர்ந்தால்தான், நம்முடைய தேவைகளை அவர்கள் மூலம் நிறைவு செய்து கொள்ள முடியும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது என்கின்ற கருத்///தை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.
புதிய பேருந்துகளை அதிக எண்ணிக்கையில் இயக்கிக் கொண்டிருப்பதற்காக எனது நன்றிகளை இந்த அரசிற்கு(3)த் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். அவற்றைப் பராமரிக்கின்ற அளவிற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், போதுமான பணியாள/ர்களை அதில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் என்னுடைய ஆலோசனையைக் கூற விழைகின்றேன். நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளில் கூடுதல் பணியாளர்களை நி//யமித்து இயக்கினால் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்க முடியும் என்பது என்னுடைய கருத்தாகும் என்பதைக் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ///
முதலமைச்சர் பெயரில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளியவர்களின் வாட்டத்தைப் போக்கி இருக்கிறது என்(4)பதில், எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். மருத்துவமனைகளில் நவீன சிகிச்சை வசதிகள் உருவாக்கப்பட்டி/ருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.
இப்படிப்பட்ட நல்ல திட்டங்களோடு, சிறப்பாகச் செயல்பட்டுவரும் அரசுக்கு எனது வாழ்த்துக்களைத்// தெரிவித்து, இவ்விதமான அரும்பணிகள் தொடர்ந்து ஆற்றப்பட வேண்டும் என்ற என்னுடைய அன்பான வேண்டுகோளையும் இங்கே முன்வைக்க விரும்புகின்றேன். நே///ரத்தின் அருமை கருதி, எனது உரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன். எனக்கு வாய்ப்பு வழங்கிய தங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூற விழைகின்றேன். (5)
கும்பகோணம் காந்தி சாலையிலுள்ள மோகன் மின்சாதன விற்பனை நிறுவனத்தின் மேலாளர் சென்னை பெரியார் சாலையிலுள்ள சரவணன் மின் சாதன விற்பனை நிர்/வாகிக்கு, எழுதும் கடிதம்.
அன்புடையீர்,
எங்களுடைய வேண்டுகோளின்படி தாங்கள் அனுப்பி வைத்த முப்பது குளிர்சாதனப் பெட்டிகள் கிடைக்கப் பெற்றோம். // அவை ஒவ்வொன்றையும் சரிபார்த்தபோது, அவற்றில் மூன்று பெட்டிகளில் சில குறைபாடுகளைக் காண முடிந்தது. எனவே, தங்களது நிறுவனத்திலிருந்து பொறு///ப்பான ஒருவரை இங்கு அனுப்பி வைத்து, அவர் மூலமாக அந்தக் குறைகளை நிவர்த்தி செய்து, தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். எங்களது வாடிக்(6)கையாளர்கள் தங்களது நிறுவனத் தயாரிப்புகளைர் பெரிதும் விரும்பி வாங்கி வருகின்றனர் என்பதால்தான் தொடர்ந்து தங்களுடன் நல்லுறவு வை/த்திருக்கின்றோம். அந்தப் பெயர் கெடாத அளவிற்கு தங்களது சேவை கிடைக்குமானால், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி யடைவோம். தற்போது வழங்கப்பட்டுள்ள // பொருட்களுக்கான விலைப்பட்டியை தங்களது நிறுவனத்திலிருந்து வரும் நபர் மூலம் கொடுத்து அனுப்பினால், அவரிடமே அதற்கான தொகை முழுவதையும் /// செலுத்தி விடுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்களது ஆதரவை என்றென்றும் தொடர வேண்டுமென்று விரும்புகிறோம்.
தங்கள் நம்பிக்கையுள்ள, (7)    

No comments: