Thursday, January 3, 2019


காஷ்மீரில் பதற்றநிலைமை நீடிப்பதையே பாஜக விரும்புகிறது
மாநிலங்களவையில் டி.கே. ரெங்கராஜன் பேச்சு
புதுதில்லி, ஜன. 4-
காஷ்மீரில் பதற்றநிலைமை நீடிப்பதையே பாஜக விரும்புகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2018 டிசம்பர் 19 அன்று குடியரசுத்தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டிருப்பதற்கு ஏற்பளிப்பு அளிப்பதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்மீது டி.கே. ரெங்கராஜன் பேசியதாவது:
இந்தத் தீர்மானம், காலம் கடந்த ஒன்றாக மாறியிருக்கிறது. மத்திய அரசின் கட்டளைக்கிணங்க, ஜம்மு-காஷ்மீர் ஆளுநர், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தைக் கலைத்த நடவடிக்கை, சட்டவிரோதமான ஒன்று என்றும் மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கையே என்றும் நான் கருதுகிறேன். ‘எதிரெதிர் தத்துவங்களை’க் கொண்ட கட்சிகள் ஒரு பொருத்தமான அரசாங்கத்தை அமைத்திட முடியாது என்று தீர்மானிக்கிற வேலை ஆளுநருக்குக் கிடையாது. ஆனால், இந்த அளவுகோலின்படி பார்த்தால், பிடிபி-பாஜக அரசாங்கம் அமைந்திடவும் அங்கே அனுமதித்திருக்கக் கூடாது. ஏனெனில் இவ்விரண்டுமே வெவ்வேறான தத்துவங்களின் அடிப்படையில் செயல்படுபவைகளாகும். ஆனாலும், எப்படியாவது பாஜக, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பியது. எல்லா விஷயங்களிலும் நீங்கள் நுழைவதற்கு விரும்புகிறீர்கள். அங்கிருந்த நிலைமையை நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள்.
ஆளுநர் என்ன செய்திருக்க வேண்டும்? பெரும்பான்மை இருப்பதாகக் கூறும் அரசியல் கட்சியின் தலைவரிடம் அவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.  அதைத்தான் ஆளுநர் செய்ய முடியும். தயவுசெய்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதித்திடுங்கள். இந்த வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் பொம்மை தீர்ப்பு ஏற்கனவே உங்களுக்கு அறிவுரை நல்கியிருக்கிறது. நீங்கள் சட்டமன்றத்தை மதித்திருக்க வேண்டும்.
மோடி அரசாங்கம், இவ்வாறு எதேச்சாதிகார நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம், அம்மாநிலத்தில் உள்ள நிலைமையை மேலும் சிக்கலானதாகவும் மோசமானதாகவும் மாற்றியிருக்கிறது. இது தொடர்பாக இந்தப் பக்கத்தையோ அல்லது அந்தப் பக்கத்தையோ குறைகூறுவதில் பொருளேதுமில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டிருப்பது காஷ்மீர் மக்கள்தான். கடந்த மூன்றாண்டுகளில் 300 பேர் இறந்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இது தொடர்பாக எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. எவரும் இதற்குப் பொறுப்பாக்கப்படவில்லை. இத்தகைய நிலைமை, அங்குள்ள மக்களை மேலும் அந்நியப்படுத்துவதற்கே இட்டுச்சென்றிருக்கிறது.
பாஜக, மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி, மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்கிற தங்களுடைய பெரிய அளவிலான அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு உதவுவதற்காக, இதேபோன்று நிலைமை அங்கே நீடிப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறது. அங்கே எப்போது தேர்தல் நடத்த இருக்கிறீர்கள்? மக்களவைத் தேர்தலுடனா? அல்லது அதற்கு முன்பா? மாண்புமிகு உள்துறை அமைச்சர் இதுகுறித்து எங்களுக்குக் கூற வேண்டும் என்று விரும்புகிறேன். தயவுசெய்து தேதியைக் கூறுங்கள். கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுமா என்றும் எங்களுக்குக் கூறுங்கள். கடந்த மூன்றாண்டுகளில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவை தொடர்பாக பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்தப்படுமா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து உண்மையைக் கூறுங்கள். அங்கே ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு எவரும் அரசியல்ரீதியாகப் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. காஷ்மீர் பிரச்சனைகளைத் தவறாகக் கையாண்டிருப்பது இந்தியாவையே புண்படுத்திக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் பிரச்சனையை நீங்கள் கையாண்ட விதத்திற்கு எங்கள் கட்சி கண்டனம் செய்திருக்கிறது.
இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் கூறினார்.
(ந.நி.)


SHRI T.K. RANGARAJAN (TAMIL NADU): Now, this Resolution has become here a fait accompli. The action of Jammu and Kashmir Governor, dissolving the Legislative Assembly at the behest of the Centre, in my opinion, is an illegal and unconstitutional step. The Governor has no business to decide that parties with 'opposing ideologies' cannot form a suitable Government. But by this yardstick, the PDP-BJP Government has got different ideologies. These different ideologies Government should not have been allowed to be formed after the elections. But somehow or the other, the BJP wanted to capture power. You want to infiltrate in everything. You used that situation. What happened? All that the Governor can do is to ask the leader who is staking claim with a majority support to prove that majority on the floor of the House. You please respect the Supreme Court Judgements. The Bommai Judgement has already given you how to do this job. You have to respect the Assembly. Sir, the Modi Government has, by taking this authoritarian measure, further complicated and worsened the situation in the State. There is no meaning in blaming this side or that side. The real sufferers are the Kashmiri people. Over 300 civilians have died in the last three years. Unfortunately, no enquiry has been conducted into these deaths and no one responsible has been held accountable. This situation has only led to further alienation of the people. Sir, the BJP is interested in the continuation of the situation to aid their larger political agenda of communal polarization in view of the General Elections. Here, I request the Home Minister to tell us when you are going to conduct the elections, with the Parliamentary elections or before that. Please tell us the date. Please tell us whether you are going to conduct an enquiry into the deaths of those who are killed. Innocent people have been killed in the past three years. I want to know whether you would conduct an enquiry with a sitting Supreme Court Judge. Please tell us the fact. There is no political accountability, no responsibility for the mess it has created. The gross mishandling of these issues is hurting India. Our Party is condemning the way you have handled the Kashmir issue. With this, I request you to conduct the enquiry. Please also tell us when you are going to conduct the elections. Thank you. (Ends)


No comments: