ஷாங்காய் ஒத்துழைப்பு
அமைப்பில் இந்தியா
கஜக்ஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஆஸ்தானா உச்சிமாநாட்டில்
பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினர்களாகச்
சேர்ந்திருக்கின்றன. இம்முக்கியமான நிகழ்வில் பிரதமர்கள் நரேந்திர மோடியும், நவாஸ்
ஷெரிப்பும் தங்கள் தங்கள் நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்கள்.ஷாங்காய்
ஒத்துழைப்பு அமைப்பு 2001இல் அமைக்கப்பட்டது. அப்போது இதில் சீனா, ரஷ்யா, கஜக்ஸ்தான்,
கிர்கிஸ்தான், தாஜிக்ஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாகச்
சேர்ந்தன.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பதுஅடிப்படையில் ஒரு பாதுகாப்புக் கூட்டணியேயாகும்.பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் (terrorism, separatism and extremism) ஆகியவற்றை எதிர்த்து முறியடித்திடவேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்ட கூட்டணியாகும். 2002இல், இது ஓர் சாசனத்தை உருவாக்கி நிறைவேற்றியது. இதில் அங்கம் வகிக்கக்கூடிய நாடு களுக்கிடையே பரஸ்பரம் அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்திட வும், நாடுகளுக்கிடையே சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்திடவும் முயற்சிகளைக் கூட்டாக மேற்கொள்வது எனவும் அந்த சாசனம் கூறியது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயலகம் பெய்ஜிங் கில் செயல்பட்டது. அதன் மண்டல பயங்கர வாத எதிர்ப்பு கட்டமைப்பு (RATS-- Regional Anti-Terrorist Structure) தாஷ்கண்டில் அமைந்தது.
இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைவது என்பதன் பொருள், மத்திய ஆசிய குடியரசுகளின் வளமான எரிசக்தி மற்றும் கனிம வளங்களுடன் அதிகஅளவில் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வது என்பதேயாகும். இது, இந்தியா வின் பொருளாதார, வர்த்தக உறவுகளுக்கு வசதி ஏற்படுத்திக்கொள்ளவும், மத்திய ஆசியநாடுகளுடன் தொடர்பினை வலுப்படுத்திக் கொள்ளவும், அவற்றின்மூலம் ரஷ்யாவுடனும் சீனாவுடனும் பொருளாதார மட்டத்தில் இணைப்பினை உயர்த்திக்கொள்ளவும் உதவிடும்.இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 2005ஆம் ஆண்டில் ஒரு பார்வையாளராகத் தன்னை இணைத்துக் கொண்டிருந்தது. ஆயினும், மன்மோகன்சிங் அரசாங்கத்தின் காலத்தில் இந்தியா அமெரிக்காவுடன் போர்த்தந்திர மற்றும் ராணுவ உறவுகளை அதிகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக, ஷாங்காய் ஒத்துழைப்புஅமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்றிட தயக்கம் காட்டியே வந்தது மிகவும் அரை மனதுடனேயே இருந்து வந்தது.
எனினும், ஐரோப்பிய ஆசிய நாடுகளிடையே போர்த்தந்திர ரீதியான ஒருங்கிணைப்பு அவசியம்என்பதால், அது நாளுக்கு நாள் அதி கரித்துக்கொண்டுமிருந்ததால், இந்தியாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினராக மாறுவதற்காக 2014இல் விண்ணப்பித்தது.இது நல்லதுதான். இப்போது இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஒரு முழு உறுப்பினராக மாறியிருக்கிறது. எனவே,இனிவருங்காலங்களில் இதுவரை பாகிஸ்தா னையும், சீனாவையும் பார்த்துவந்ததுபோல் குறுகிய பார்வையுடன் பார்ப்பதை இந்தியாவிட்டுவிட வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் என்றால்என்ன என்பது குறித்து இந்திய ஆட்சி யாளர்கள் புரிந்துகொண்டிருப்பதில் ஒருகுழப்பம் இன்னமும் நீடிப்பதாகவே தெரி கிறது. இதற்கு கடந்த பதினைந்து ஆண்டு காலமாக அது மேற்கொண்டுவந்த அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கை மற்றும்அதன்காரணமாக எழுந்துள்ள முரண்பாடு கள் காரணங்களாகும். இந்தியா தற்போது அமெரிக்காவுடன் ராணுவக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தற்போது அமெரிக்கா, இந்தியாவை தன்னுடைய ‘‘பெரியஅளவிலான ராணுவப் பங்காளி’’யாகக் கருதியிருக்கிறது. ஆனால், ஷாங்காய் ஒத்து ழைப்பு அமைப்போ ஒரு பாதுகாப்புக் கூட்டணி யாகும். இக்கூட்டணி அமெரிக்காவை ஒதுக்கி வைத்திருக்கிறது. அமெரிக்காவின் ஆசிய நாடுகள் மீதான போர்த்தந்திர நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.மோடி அரசாங்கம், ஜனாதிபதி ஒபாமா வின் கீழான அமெரிக்க அரசாங்கத்தின் ஆசியாவின் போர்த்தந்திர நடவடிக்கைகளில் தன்னையும் ஒரு கூட்டாளியாக மிகுந்த ஆர்வத்துடன் இணைத்துக்கொண்டுள்ளது. இப்போது டிரம்ப் நிர்வாகத்தின் போர்த்தந்திரக் கண்ணோட்டமானது ஒரு நிரந்தரமற்ற தன்மையில் இருப்பதன் காரணமாக, இந்தியா தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டிருப்பதன் மூலம், அமெரிக்காவுடனான ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளைக் குறைத்துக்கொள்ளத் துவங்குவதற்கு இது மிகவும் சரியான தருணமாகும்.சீனாவின் சமீபத்திய மண்டலம் மற்றும் சுற்றுத் திட்ட (BRI-Belt and Round Initiative )த்திலிருந்து இந்தியா வெளியே வந்துவிட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் இதர ஏழு நாடுகளும் மண்டலம் மற்றும் சுற்றுத் திட்டத்தில் கூட்டாளி நாடுகளாகும். அத்திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ள நாடுகளாகும். இந்தியா மட்டும்தான் அதிலிருந்து வெளியே இருக்கிறது.
இந்நிலையில் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டியது சிறப்பானதாக இருந்திடும். மத்திய ஆசியாவை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரே மண்டலம் ஒரே பாதைத் திட்டத்துடன் ஒத்துழைத்திட வழிவகைகள் காண்பதும் அவசியமாகும்.இப்போது இந்தியா, பாகிஸ்தானுடன் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைந்திருக்கும் இந்த உடன்பாட்டின் காரணமாக, மோடி அரசாங்கம் இதுவரை பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் மேற்கொண்டுவந்த மோதல் போக்கையும் எதிர்மறை நிலைப்பாட்டையும் மறுபரிசீலனை செய்வதற்குத் தூண்ட வேண்டும்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஒருசில தினங்களுக்குமுன்பு, பிரதமர் மோடிருஷ்யாவில் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார அமைப்பில் உரையாற்று கையில், மிகவும் எதார்த்தமானமுறையில் பேசியதைப் பார்க்க முடிந்தது. அங்கே அவர், ‘‘நாங்கள் சீனாவுடன் கடந்த நாற்பதாண்டு காலமாக எல்லைத் தகராறு கொண்டிருக்கிறோம் என்பது உண்மைதான்.
எனினும் கூட, கடந்த நாற்பதாண்டுகளில் எங்கள் இருநாடுகளுக்குமிடையே ஒரு துப்பாக்கி குண்டுகூட பயன்படுத்தப்பட்டதில்லை’’, என்றார். மேலும் அவர் பேசுகையில், ‘பிரிக்ஸ்’ அமைப்பின்கீழ் சீனாவும் இந்தியாவும் இரு நிதி நிறுவனங்களை நிறுவுவதில் ஒத்துழைத்து வருகின்றன என்றும் கூறினார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, இதில் அங்கம் வகிக்கும் நாடுகளிடையே பரஸ்பரம் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பினை அளிப்பதுடன் மிகவும் விரிவான அளவில் சம்பந்தப்பட்டதாகும். இந்த அமைப்பானது, ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் மிகவும் சிக்கலான மோதலைத் தீர்ப்பதற்கு ஒரு முக்கியமான பங்களிப்பினை ஆற்றிட முடியும்.
இந்தியா, இந்த அமைப்பினை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்திட முடியும். இதன் ஒரு முக்கியமான அங்கமாக, இந்தியா, பாகிஸ்தானுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவங்கிட வழிவகைகள் கண்டிட முடியும்.‘சார்க்’ நாடுகளிடையே இயல்பான உறவுமுறை நீடிக்கமுடியாமல் போனதற்கு இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதல் போக்கே காரணமாகும். இப்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இவ்விருநாடுகளும் இணைந்திருப்பதன் காரணமாக, இவ்விருநாடுகளுக்கும் இடையே இதுவரைஇருந்துவந்த கசப்புணர்வுகள் மறைந்து, மோதல்போக்குகளுக்கு மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஒருபுதிய தொடக்கம் உருவாகட்டும் என்று நம்புவோமாக.
ஜூன்
13, 2017
தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment