Tuesday, February 28, 2017

குஜராத் கொலைவெறியாட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 14 ஆண்டாகியும் பரிதவிக்கும் அவலநிலை



குஜராத் கொலைவெறியாட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 14 ஆண்டாகியும் பரிதவிக்கும் அவலநிலை
அகமதாபாத், பிப்.28-
2002ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலை,கொள்ளை, தீக்கிரை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் கள் அவர்கள் வீடுகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு தனியேபலஇடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் அவர் களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றுஅரசாங்கத்தரப்பில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், குடிநீர் வசதி, பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துப்புரவு வசதிகள் அல்லது சாலை வசதிகள் எதுவுமின்றிகடந்த பதினான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து அவதிக்குள் ளாகி வருகிறார்கள்.இவ்வாறு தங்க வைக்கப் பட்டிருக்கும் முஸ்லிம்கள் சிலரைதி ஒயர் இணைய இதழ் செய்தியாளர் நேர்காணல் கண்டு தன்னுடைய இதழில் பதிவு செய்திருக்கிறார். அவற்றின் விவரம் வருமாறு:இந்து மதவெறியர்கள் நரவேட்டையாடிய இடங்களில் நரோடா பாட்டியா என்பதுஒன்று. இங்கே வசித்து வந்த சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலவரத்திற்குப்பிறகு சிட்டிசன் நகர் என்னும் பகுதிக்குவந்துவிட்டனர். இங்கே வசித்துவந்த நதீம்பாய் சையது (42)என்பவருக்கு ஒரு வீடும் வீட்டைஒட்டி ஒரு மரப்பட்டறையும் இருந் தது. மதவெறியர்கள் அவற்றைத் தீக்கிரையாக்கிவிட்டனர். ஐந்துபேரைக் கொண்ட அவரது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு நதீம்பாய் 2003இல் சிட்டிசன் நகர் என்னும் பகுதிக்கு வந்துவாழத் தொடங்கினார். இவர்களுக்கு ஓர் அறை ஒதுக்கித்தரப் பட்டது. இப்போது அவரது பையன்கள் வளர்ந்துவிட்டனர். அவரது பையன்களுக்கு திருமணமும் நடந்துவிட்டது. இப்போது அவரது குடும்பத்தில் ஒன்பது பேர் இருக்கின்றனர். இவர்கள்அனைவரும் ஒரே அறையில்வாழ்வது என்பது இயலாததாகிவிட்டது என்று சையது கூறுகிறார்.பம்பாய் ஓட்டல் பகுதி என்றுமக்களால் அழைக்கப்படும் சிட்டிசன் நகர் என்னும் பகுதி இந்தஆண்டு பிப்ரவரியில் இறந்துவிட்ட கேரள, மலப்புரத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான .அகமது என்பவரது தலைமையிலிருந்த கேரள முஸ்லிம் லீக் நிவாரணக்குழுவுக்குச் சொந்தமானது. அவர் இந்த இடத்தை பாதிக்கப்பட்டோருக்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டார். குஜராத்தில் பல இடங்களில் அமைந்துள்ளதைப்போல சிட்டிசன் நகர் என்பதும் ஒரு தற்காலிக முகாமாகத்தான் உருவானது.
ஆனால் இப்போது அதுஒரு நிரந்தரக் குடிசைப் பகுதி போன்று மாறிவிட்டது.இவ்வாறு இவர்கள் வசிக்கும் இடத்தில் இவர்கள் தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதித்த முஸ்லிம் அமைப்புகள் அவற்றைஇவர்களுக்கு சொந்தமாக்கித் தந்திடுவதற்கு முன்வரத் தயங்குகின்றன. எனவே இவர்களால் இந்த இடங்களில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் செய்து கொள்ளவும் முடியவில்லை.2002 இல் முஸ்லிம்களுக்குஎதிராகக் கட்டவிழ்த்துவிடப் பட்ட கலவரங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள்இடங்களை இழந்து வெளியேற் றப்பட்டனர். இவர்கள் மாநிலம் முழுதும் சுமார் 83 காலனிகளில் தங்க வைக்கப்பட்டனர். இதில்17 காலனிகளில் மட்டும்தான் வசிப்பவர்களின் முகவரிகளுடன் வீடுகள் இருக்கின்றன. இங்கே வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதார் அட்டைகள், பான் கார்டுகள், பாஸ்போர்ட்டுகள் அல்லது வங்கிகளிலிருந்து கடன்கள் அவ்வளவு எளிதாகவாங்கிட முடியாது என்று இவர் களுக்காகப் பாடுபட்டுவரும் ஜன்விகாஷ் என்னும் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த ஹொசிபா உஜ்ஜையினி என்பவர் கூறுகிறார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களில் இந்தக் காலனிகளில் இப்போது 16,087 பேர் வசிக்கின்றனர்.
மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து அரசாங்கத்திடமோ அல்லது வேறு எவரிடமுமோ எந்தத் தகவலும் இல்லை. சேரிகளில் சுமார் 5 ஆயிரம் பேர் தற்போது வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் களுக்கு இடமளிப்பதற்கே இந்த அரசாங்கத்தால் முடியவில்லை என்று பதான் என்பவர் தெரிவிக்கிறார்.இந்தக் காலனிகளில் வசிப்பவர்களுக்கு இவற்றின் மீது உரிமை அளிக்கப்படாதது மட்டுமல்ல. இந்தக் காலனிகளில் அடிப்படை வசதிகளும் எதுவும் கிடையாது. ஜூகாபுரா என்பதுதான் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் கொட்டடியாகும். இங்கே தண்ணீர் வசதி கிடையாது. அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான தண்ணீர் வரும் குழாய் வழியானது பக்கத் தில் இந்துக்கள் அதிகமாக வாழும் ஜோத்பூர் என்னும் பகுதியோடு முடிந்து விடுகிறது. “என்னுடைய மகன் முறையாகக் கல்வி கற்காமல், கூலி வேலைக்குப் போய் வருகிறான். என் கணவரும் கூலிதான். பலநாட்களில் வருமானம் எதுவும்இருக்காது. சென்ற ஆண்டு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட் டார். அவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கடன் வாங்கினேன். எனினும் என் கணவரைக் காப்பாற்ற முடியவில்லை. இருமாதங்களுக்கு முன் இறந்துவிட்டார்,” என்று ரெஹனா பானுஎன்பவர் கூறுகிறார்.இப்போது தான் தங்கியிருந்த அறையையும் காலி செய்யச் சொல்லி கடன் அளித்தவர்கள் தன்னை நிர்ப்பந்தித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.“எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் முற்றிலுமாக அழிக்கப் பட்டுவிட்டன. இவர்களில் பெரும்பாலானவர்கள் தினக் கூலிகளாக மாறிவிட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு எங்களால் கல்வி எதுவும் அளிக்க முடியவில்லை. எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளிலேயே மிகப்பெரிய இழப்பு இதுவாகும்.” என்று ஷேக்கட்டூன் பீவி என்பவர் கூறுகிறார்.
(நன்றி: தி ஒயர் இணைய இதழ்)
(தமிழில்: .வீரமணி)

1 comment:

Unknown said...

கோத்ரா ரயில் எரிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தெரியுமா?