Sunday, March 31, 2013

மாற்றுக்கொள்கைக்கான திசைவழியே இப்போது தேவை




பொதுத் தேர்தல்கள் நெருங்கிவருவதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் புதிய கூட்டணிகளுக் கான பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி யிருப்பதும் கூட்டணிகள் தொடர்பான பர பரப்பும் வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல. ஆயினும், 2014 பொதுத் தேர்தலுக்கு சுமார் ஓராண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் இவ்வாறு பரபரப்பான நிலைமை காணப்படு வதற்கு, ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத் தில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்திருப் பதே பிரதான காரணமாகும். இந்த அர சாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக் கொண்ட போதே இது சிறுபான்மை அரசாக மாறிவிட்டது. இப்போது திமுகவும் கழட்டிக் கொண்டபின், மேலும் சிறுபான்மை அரசாக இது குறுகிவிட்டது. தற்போது இதன் ஆயுள் நீடிப்பது என்பது, அதனை வெளியிலிருந்து ஆதரித்துக் கொண்டிருக்கும் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற் றிடமிருந்து அதற்குக் கிடைக்கும் ஆதர வினையே பெரிதும் சார்ந்திருக்கிறது.

இப்போது, அத்தகைய வெளியிலி ருந்து கிடைத்திடும் ஆதரவினைத் தொடர்ந்து பெறுவதற்காக, அந்தக் கட்சிகளை ஆசை காட்டியோ அல்லது அச்சுறுத்தல்களைச் செய்தோ பணிய வைப்பதற்கான வேலைகளில் அரசாங் கம் ஈடுபட்டிருப்பது, தெள்ளத்தெளிவாகி இருக்கிறது. நாட்டின் அனைத்து அத் தியாவசியப் பொருட்களின் விலைகளும் நாளும் உயர்ந்துகொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்குகளைப் பெறுவதற்கான செலவும் அதிகரித்திருக்கிறது. அதேபோன்று, திமுக ஆதரவினை விலக்கிக் கொண்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே, திமுக வின் வாரிசு எனத் தெளிவாகத் தெரியும் மு.க.ஸ்டாலின் வீடுகளை மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) சோதனை செய்ததிலிருந்து, இத்தகைய கதிதான் சமாஜ்வாதி கட்சிக்கோ அல்லது பகு ஜன் சமாஜ் கட்சிக்கோ, அவை வெளி யிலிருந்து தந்திடும் ஆதரவை விலக்கிக் கொண்டால், நடந்திடும் என்கிற தெளி வான சமிக்ஞையையும் (அச்சுறுத்தலை யும்) தந்திருக்கிறது. மேலும், காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள மாநிலங்களாகக் கருதப்பட்ட வைகளிலேயே அது மிகவும் பரிதாபகர மான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதும் மத்தியில் அரசியல் நிலையற்றத் தன்மை அதிகரித்திருப்பதற்கு மற்றுமொரு கார ணமாகும். ஆந்திரப்பிரதேசத்தில், தனித் தெலுங்கானா மாநிலம் பிரச்சனையில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இரு மனப்போக்கும், மறைந்த முன்னாள் முதல்வரின் மகன் கட்சியை உடைத் திருப்பதும் அதன் தேர்தல் ஆதாயங் களை மிகவும் ஆழமான அளவிற்கு அடித்து நொறுக்கியிருக்கிறது.

தமிழ்நாட் டில் இதுவரை அதிமுக அல்லது திமுக வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கணிசமான அளவிற்குப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுவந்ததைப்போல இனியும் பெறமுடியாத நிலை தோன்றியிருப்ப தாகவே தெரிகிறது. இலங்கைத் தமிழர் களின் இன்னல்கள் தொடர்பான பிரச்ச னையில் திமுகவும் அதிமுகவும் காங்கி ரசை முற்றிலுமாக விலக்கி வைத்து விட் டன. இந்த ஆண்டு தேர்தல்கள் நடை பெறும் மாநிலங்களிலும் காங்கிரசின் வாய்ப்பு பிரகாசமானதாகத் தோன்ற வில்லை. அதேபோன்று, இந்த ஆண்டின் இறுதியில் எதிர்க்கட்சிகளால் ஆட்சி நடத்தப்பட்டு வரும் மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களிலும் காங் கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்பது போல் தோன்றவில்லை. இத்தகைய சூழ்நிலைகளின் பின் னணியில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர், முலாயம் சிங் யாதவ், மத்தியில் காங்கிரஸ் அல்லாத - பாஜக அல்லாத மூன்றாவது அணிகுறித்து திடீரென்று கூறியிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. மார்ச் 24 அன்று அவர் மராட்டிய மாநிலத்தில் ஓரிடத்தில் உரை யாற்றும்போது, சமூக மாற்றத்திற்காக பீகாரில் செயல்படும் கட்சியும் (ஐக்கிய ஜனதாதளம் என்று சேர்த்து வாசிக்க வும்), உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள கட்சியும் (தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று சேர்த்து வாசிக்கவும்) ஒரே அணியின் கீழ் வர வேண்டும் என்று பரிந்துரைத்திருக் கிறார்.

இயற்கையாகவே, மகாராஷ்டி ராவில் வலுவாக இருக்கக்கூடிய சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது மத்திய கூட்டணி அரசாங்கத் தில் முக்கியமான அங்கமாக இருப்பதால், இவரது பேச்சு ஐ.மு.கூட்டணியில் ஆட் டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய சாத்தியக்கூறுகள் முட் டாள்தனமானவை என்று காங்கிரசும், பாஜகவும் அறிவித்திருப்பதும் இயற்கை யேயாகும். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மத்திய அமைச்சரும், முலாயம்சிங் யாதவின் அபிப்பிராயங் களை, ‘இந்திய அரசியலில் பொய்த் தோற்றத்தைப்பிடிப்பதற்கான முயற்சி என்று கிண்டலடித்திருக்கிறார். அதே போன்று, பாஜகவும் இத்தகைய முயற்சி கள் இயங்கிடாதுஎன்றும், ‘மூன்றாவது அணிக்கு வாய்ப்பே இல்லைஎன்றும் கூறியிருக்கிறது. ஆயினும் இருவருமே கூட்டணி அரசாங்கங்கள்தான் இப்போது சாத்தியம் என்பதை ஏற்றுக்கொண்டுள் ளனர்.அத்தகைய கூட்டணி அரசாங் கத்தை ஏற்றுக்கொள்வது என்பது இன் றைய இந்திய எதார்த்த நிலையை அங்கீ கரிப்பதேயாகும். 1996இல் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்ப்போம். அப்போது நடைபெற்ற பொதுத்தேர்தல் களில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டபோது, நம் ஜனநாயகம் பின்னோக்கிச் செல்கிறது என்று பலரும் புலம்பினார்கள். ஆனால் நாம் மட்டும்தான், இது பின்னோக்கிச் செல்லுதல் அல்ல, மாறாக, இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியையே இது பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டிருந் தோம். நாட்டின் சமூகப் பன்முகத்தன்மை அரசியலிலும் பிரதிபலிக்கத்தான் வேண் டும். ஒற்றைக்கல்லால் ஆனது போன்ற ஒரு கட்சி அரசியல் கட்டமைப்பு இத் தகைய சமூகத்தின் வேற்றுமைகள் மற்றும் பன்முகத்தன்மைகளை முறை யாகப் பிரதிபலித்திடாது.
வரவிருக்கும் காலங்களில் கூட்டணி அரசாங்கங் கள்தான் அமையவிருக்கின்றன என்று அப்போது நாம் கூறினோம். இத்தகைய நம் புரிந்துணர்வை ஏற்றுக்கொண்டு, சரி என்று கூறிய ஒருசில தலைவர்களில் மறைந்த வி.பி.சிங்கும் ஒருவராவார். இந்தியாவை ஒரு மகா கூட்டணிஎன்று அவர் அழைத்தார். கடந்த இருபதாண்டுகளில் இத்த கைய புரிந்துணர்வுதான் சரியானது என் பது எவரும் மறுக்கமுடியாத வகையில் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 2014 பொதுத் தேர்தல் முடிந்தபின்னர் உருவாகும் அரசாங்கமும் கூட்டணி அரசாங்கமாகத் தான் இருக்கும் என்பதும் நிச்சயம். ஆயினும் அத்தகைய கூட்டணி அரசாங் கத்திற்குத் தலைமை தாங்கப்போவது யார் என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வியாகும். கூட்டணிக்கு, காங்கிரஸ் அல்லது பாஜகதான் தலைமை தாங்கும் என்று இதற்குத் தீர்வாக எவரும் கூறினால், மிகவும் சவுகரியமான விதத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களே அதிகம். இக்கூற்றை ஏகாதிபத்தியமும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும். ஏனெ னில் இரு கட்சிகளுமே ஏகாதிபத்தியத் தினுடைய அடிவருடியாக இருப்பதில் வலுவான வகையில் விருப்பம் தெரிவித் திருக்கும் கட்சிகளேயாகும். நவீன தாரா ளமயப் பொருளாதார சீர்திருத்தங்களின் மேதாவிகளும் மிகவும் மகிழ்ச்சி கொள் வார்கள். ஏனெனில் பொருளாதாரச் சீர் திருத்தக் கொள்கைகளை அமல்படுத்து வதைப் பொறுத்தவரை பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் கிடையாது. இவ்வாறு இரு கட்சிகளுக்கும் இடையே பொதுவான தன்மைகள் இருந்த போதிலும், நம்முடைய நாட்டு மக்கள், நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுடன் உளப் பூர்வமான நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்த மாய் உறுதி செய்திருக்கிறார்கள். இத னைப் பொறுத்தமட்டில், பாஜகவை இயக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வகுப்புவாதம் என்னும் அரசியல் நிகழ்ச்சிநிரல், நாட்டைப்பிடித்த பீடை என்பதை மக்கள் நன்கு கண்டுகொண் டுள்ளார்கள். பாஜக-வால் உருவாக்கப் படும் கூட்டணி எத்தகையதாக இருந்த போதிலும், தீர்க்க முடியாத முரண்பாடாக கொள்ளை நோய் போல் இது அதனைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. பாஜக தான் அமைத்திடும் கூட்டணி பெரும்பான்மை பெற்று வலுவாக அமைந் திட வேண்டுமானால், இத்தகைய வெறி பிடித்த மதவெறி நிகழ்ச்சி நிரலை அது மூட்டைகட்டி வைத்துவிட வேண்டும். ஆனால், மறுபக்கத்தில், ஆர்எஸ்எஸ்-ஆல் கட்டளையிடப்படும் மதவெறி நிகழ்ச்சி நிரலை அரக்கத்தனமான முறையில் பாஜக பின்பற்றவில்லை என்றால், பாஜக தன்னுடைய சொந்த அரசியல்தளத்தை கெட்டிப்படுத்தவோ, விரிவுபடுத்தவோ முடியாது. பாஜக விற்குள் இந்த முரண்பாடு ஏற்கனவே பிர திபலிக்கத் தொடங்கிவிட்டது. இதனை அக்கட்சி வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மாயையின் அடிப்படையில் யார் பிரதமர் என்பதற் கானத் தேர்வு குறித்து சண்டையிட்டுக் கொள்வதிலேயே பார்க்க முடிகிறது. அரசியல் கட்சிகளுக்கிடையே கூட் டணி தொடர்பான கூட்டல், கழித்தல்கள் இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருந்த போதிலும், மக்களின் உண்மையான அபிலாசைகள் மீது இவை போதுமான அளவிற்குக் கவனம் செலுத்தவில்லை. சமாஜ்வாதி போன்ற கட்சிகள் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அர சாங்கத்தை இன்னமும் தூக்கிச் சுமப்பது தொடர்கின்ற அதேசமயத்தில், மூன்றா வது அணி குறித்தும் பேசுவதற்கான காரணம் இதுதான். தன் சொந்தக் கட்சிக் குள்ளிருந்தும், சமூகத் தளத்திற்குள்ளி ருந்தும் மக்களின் தற்போதைய பரிதாபகர மான நிலைமைகளை மாற்றுவதற்காக ஏதேனும் நிவாரணம் கண்டாக வேண் டும் என்ற நிர்ப்பந்தம் வந்திருப்பதுதான் இதற்குக் காரணமாகும். பொருளாதார மந்தம், அனைத்துப் பொருள்களின் விலை களும் கடுமையாக உயர்ந்திருப்பது, விவசாய நெருக்கடி ஆழமாகியிருப்பது - அனைத்தும் மக்களின் மீது முன்னெப் போதும் இல்லாத அளவிற்குத் துன்ப துய ரங்களை அதிகரித்துள்ளன. நிவாரணத் திற்காகவும், சிறந்ததோர் வாழ்க்கைக் காகவும் மக்கள் ஏற்படுத்தும் அதிருப்தி குரல்கள்தான் மூன்றாவது அணிஅர சாங்கம் குறித்த இத்தகைய அரசியல் வெளிப்பாடுகளாகும்.

ஆயினும், இப்போது நம்முன் வாதத் திற்குரிய விஷயம் என்னவெனில், மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்களை இவ் வாறு காங்கிரஸ் அல்லாத, பாஜக அல் லாத அரசாங்கங்கள் அமைவதாலேயே தந்துவிட முடியமா என்பதேயாகும். அவ்வாறு மக்களுக்கு நிவாரணம் மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்துவதால் மட்டுமே சாத்தியமாகும். எனவே, வெறும் மாற்று அரசாங்கம் மட்டுமல்ல, மாறாக மாற்று மக்கள் ஆதரவு கொள்கைத் திசை வழியை அமல்படுத்தக்கூடிய அரசாங் கமே மக்களுக்குத் தேவையாகும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இத் தகைய மாற்றுக் கொள்கைகளை உயர்த் திப் பிடித்து போர் முழக்கப் பிரச்சாரப் பயணத்தை நாடு முழுவதும் நடத்தியது. இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த கொள்கைகளால் ஒவ் வொரு இந்தியருக்கும் பசி-பஞ்சம்-பட்டினியின்றி வாழவும், கல்வி, சுகா தாரம், வேலைவாய்ப்பு, வீட்டுவசதி ஆகி யவற்றையும் அடிப்படை உரிமைகளாக அளிக்க முடியும். பிரச்சாரப் பயணத்தின் போது இவ்வாறு மக்களுக்கான உரிமை களை உத்தரவாதப்படுத்திடத் தேவை யான வளங்கள் நாட்டில் இருப்பதையும் மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. ஆயி னும், இவ்வாறான வளங்கள் அனைத்தும் தற்சமயம் மெகா ஊழல்கள் மூலமாக கொள்ளை யடிக்கப்பட்டோ அல்லது அரசின் கொள்கைகள் வழியாகவோ பணக்காரர்களை மேலும் பணக்காரர் களாக்குவதற்கும், ஏழைகளை மேலும் வறிய நிலைக்குத் தள்ளுவதற்கும் பயன் படுத்தப்படுகின்றன என்பதும் விளக்கிக் கூறப்பட்டது.
இத்தகைய கொள்கைகள் மாற்றப்பட வேண்டியதுதான் இன்றைய தேவை. நாட்டில் இவ்வாறு ஆளும் வர்க்கங் கள் தற்போது கடைப்பிடித்து வரும் கொள்கைகளின் திசைவழியை மாற்றி யமைத்திட வேண்டுமானால் அது மக்க ளின் போராட்டங்களை வலுப்படுத்து வதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இதனைக் குறிக்கோளாகக் கொண்டு தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் மே மாதத்தின் பிற்பாதியில் நாடு தழுவிய அளவில் வெகுஜன முற்றுகைப் போராட்டத்தை நடத்திட அறைகூவல் விடுத்திருக்கிறது. இப்போராட்டம் மாபெரும் ஒத்துழையாமை இயக்கத்தின் வடிவத்தைப் பெறும். இத்தகைய உக்கி ரமான போராட்டங்கள் ஆளும் வர்க்கங் கள் மீது தங்கள் கொள்கைத் திசை வழி யை மாற்றியமைத்துக் கொள்ள தேவை யான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திட வேண் டும். அதே சமயத்தில், இத்தகைய போராட்டங்கள் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைப் பங்குபோட்டுக் கொள்வதற்காக மட்டும் தற்போது மேற்கொண்டுவரும் தங்களுடைய அரசியல் சந்தர்ப்பவாதத்தைக் கைவிடு வதற்கும், மக்களின் நிலைமைகளைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு மேம்படுத்தக் கூடிய விதத்திலும், அனைத்து இந்தியர் களுக்கும் சிறந்ததோர் இந்தியாவை உரு வாக்குவதற்கான விதத்திலும் மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கும் வலியுறுத்திட வேண்டும்.- 

தமிழில்: ச.வீரமணி

Sunday, March 17, 2013

தோழர் சாவேஸ் விட்டுச்சென்ற பணிகளை முன்னெடுத்துச் செல்ல உறுதி ஏற்போம்







புதுதில்லியில் நடைபெற்ற உறுதி ஏற்புக் கூட்டத்தில் பிரகாஷ் காரத்
புதுதில்லி, மார்ச் 17-
தோழர் ஹியூகோ சாவேஸ் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற உறுதி ஏற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
வெனிசூலா அதிபர் தோழர் ஹியூகோ சாவேஸ் மார்ச் 6 அன்று மரணம் அடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் தலைநகர் புதுதில்லியில் கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில் அமைந்துள்ள மக்களவைத் தலைவர் அரங்கில் உறுதி ஏற்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வெனிசுலாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாக, வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு, ஆறு மாதங்கள் முடிவதற் குள்ளாகவே புரட்சித் தலைவரான ஹியூ கோ சாவேஸ் இறந்துவிட்டார். புற்று நோய்க்கு எதிராக 2011 ஜூனிலிருந்தே அவர் போராடிக் கொண்டிருந்தார். ஆயி னும் இறுதியாக, அவர் 58 வயதாக இருக் கும்போதே, லத்தீன் அமெரிக்க நாடு களில் இடதுசாரிகளின் புதிய அலை யை ஏற்படுத்தும் சின்னமாக இருந்த அம்மாபெரும் தலைவரின் உயிரை அது பறித்து விட்டது. அவரது மறைவு வெனி சுலா மற்றும் லத்தீன் அமெரிக்க நாட்டு மக்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தி யுள்ளது. அவரது இழப்பு உலகம் முழுவ தும் உள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கு சக் திகளை பெரிதும் பாதித்துள்ளது.
சாவேஸ் மிகவும் தேவைப்படக் கூடிய நேரத்தில் இறந்துவிட்டார். 2012 அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் 55 விழுக்காடு பெரும்பான்மையுடன் அவர் வெற்றி பெற்ற பின், 2013 முதல் 2019 வரை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய இருந்த நிலையில் - அவர் இறந்துவிட்டார். உண்மையில் இக்கால கட்டத்தில் அவர் தொடங்கி வைத்த இடதுசாரி நடைமுறைகளை ஒருங்கி ணைத்திடவும், அவர் கேந்திரமான பங் களிப்பினைச் செய்திட்ட லத்தீன் அமெ ரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பை முன்னெடுத்துச் செல்லவும் திட்டமிட்டி ருந்தார். ஆயினும் அது நடக்கவில்லை. ஹியூகோ சாவேஸ் அதிபராக இருந்த கடந்த பதினான்கு ஆண்டு களில் சாதித்தவை உண்மையிலேயே பிரமிக்கத்தக்கவைகளாகும், இவரது சாதனைகள் இரு பரிமானங்களைக் கொண்டவைகளாகும். ஒன்று வெனி சுலா நாட்டிற்குள்ளேயே அவர் மேற் கொண்டவை. மற்றொன்று லத்தீன் அமெ ரிக்க நாடுகள் முழுவதும் மற்றும் பொது வாக அயல்துறைக் கொள்கையில் அவர் மேற்கொண்ட வைகளாகும். நவீன தாராளமயத்திற்கு மாற்றுசாவேஸ் வெனிசுலாவில் நவீன தாராளமயக் கொள்கைக்கு மாற்றுப் பாதையை அமைத்திட முயற்சிகள் மேற் கொண்டார். இதில் அவர் அடைந்த வெற்றி லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள அனைத்து இடதுசாரி சக்திக ளிடமும் அவர் மீதான ஈர்ப்பை அதிகப் படுத்தியது. 1999இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின்பு, சாவேஸ் உண்மையில் மக்க ளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கக் கூடிய விதத்தில் புதிய அரசியலமைப் புச் சட்டத்தை உருவாக்குவதில் முத லில் ஈடுபட்டார்.
2002இலிருந்து அவ ருக்கு எதிராக நடைபெற்ற ராணுவச் சதியை மக்கள் எழுச்சியின் மூலமாக முறியடித்தபின்பு, நாட்டின் எண்ணெய் வளங்கள் மீது தேசிய இறையாண் மையை வலுப்படுத்தும் பணிகளில் இறங்கினார். வெனிசுலாதான் உலகி லேயே அதிக அளவில் எண்ணெய் இருப்பு உள்ள நாடாகும். சாவேஸ் உல கப் பகாசுர நிறுவனமான பிடிவிஎஸ்ஏ என்னும் நிறுவனத்தை அரசின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தார். மேற்கத் திய எண்ணெய் நிறுவனங்களை அரசின் கடும் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் கொண்டு வந்தார். பொதுவாக எண் ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் எல்லாம் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய வங்கிகளின் பெட்ரோ-டாலர்கள் மூல மாகத்தான் ஏற்றுமதிகளைச் செய்திடும். இதனை சாவேஸ் புறக்கணித்தார். இத னைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் டெலிகாம் தொழில்களும் தேசியமயமாக் கப்பட்டன. நிலச்சீர்திருத்தங்கள் அமல்படுத்தப் பட்டன. ஒட்டுமொத்தமாக 30 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் லட்சக்கணக்கான விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப் பட்டன. சாவேஸ் மேற்கொண்ட அடுத்த நட வடிக்கை, எண்ணெய் வருவாய்களை மக்களின் நலத்திட்டங்களுக்குப் பயன் படுத்தியதாகும், சமூக நலத் திட்டங் களில் ஈடுபடுவதற்காக எண்ணற்ற சமூக மிஷன்கள் (மக்கள் குழுக்கள்) அமைக்கப்பட்டன. தென் அமெரிக் காவில் விடுதலைக்காகப் போராடிய ராபின்சன். சக்கர் ஆகியோர் பெயர் களில் எண்ணற்ற மிஷன்கள் அமைக் கப்பட்டன.
இவை மக்களின் எழுத்தறி வின்மையை ஒழிப்பதற்காகவும், கல்வி, சுகாதாரம், உணவு, வீட்டு வசதி ஆகி யவற்றை அளிப்பதற்காகவும் அற்புத மாகச் செயல்பட்டன. இத்தகைய மக்கள் ஆதரவுக் கொள்கைகளின் விளை வுகள் மகத்தானவைகளாக இருந்தன. பொலிவாரியக் குடியரசு வறுமையை பாதியாகக் குறைத்தது. 1999இல் 42.8 விழுக்காடாக இருந்த வறுமை விகிதம் 2011 ல் 26.5 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்தது.70 விழுக்காடு அளவிற்கு மிகவும் அதீதமாக இருந்த வறுமை நிலை. 16.6 விழுக்காடாக வீழ்ச்சியடைந்து பின்னர் 7 விழுக்காடு அளவிற்கு அதேகாலகட் டத்தில் குறைக்கப்பட்டது. எழுத்தறி வின்மை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. 65 ஆயிரமாக இருந்த ஆசிரி யர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்தது.சுகாதார மிஷன்கள் மூலம் நாடு முழு வதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையங் களில் 14 ஆயிரம் கியூபா மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் வருகை தந்து மிகத்தரமான மருத்துவ சிகிச்சையை மக்களுக்கு அளித்தார்கள்.ஐ.நா.வளர்ச்சித் திட்டம் வெளியிட் டுள்ள அறிக்கையின்படி. லத்தீன் அமெ ரிக்க நாடுகளில் 1990 களில் ஏற்றத் தாழ்வில் மிகவும் உயர்ந்த அளவில் இருந்த வெனிசுலா தற்போது மிகவும் குறைவான இடத்திற்கு (2011 ல் வெறும் 0.39 அளவிற்கு) மாறிவிட்டது. மக்கள் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தியதே இவ்வாறு மாபெரும் வகையில் சமூக மாற்றத்தை நிறை வேற்ற முடிந்ததற்கு அடிப்படைக் காரண மாகும். பொலிவாரியப் புரட்சி நடை முறை மூலம் 35 ஆயிரம் மக்கள் கவுன் சில்கள் அமைக்கப்பட்டன. இவை சமூ கத்தின் ஆணிவேர் வரை சென்று செயல் பட்டன. சாவேஸ் கட்சி ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்தார்
. எனவே ஐந்தாவது குடி யரசுக்கான இவ்வியக்கத்தை ஒரு அர சியல் கட்சியாக - ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி என - மாற்றி அமைத்தார். சாவேஸும் அவர் மேற்கொண்ட புரட்சிகர நடவடிக்கைகளும் பெரும் வர்த்தகநிறுவனங்கள், நிலச்சுவான்தார் கள், அதிகார வர்க்கத்தின் மேல்தட்டு வகுப்பினரையும் கொண்ட ஆளும் வர்க் கத்திடமிருந்து தாக்குதல்களையும் உக் கிரமான பகைமையையும் தொடர்ந்து சந் திக்க வேண்டி இருந்தது. இவர்களுக்கு அமெரிக்காவும் அந்நிய மூலதனமும் பக்கபலமாக இருந்தன. இவர்கள் கக்கிய வெறுப்பின் காரணமாகத்தான் சாவேஸ் நாட்டின் ராணுவத்தையே செல்வாக்கு மிக்க மக்கள் படையாக மாற்றி அமைத் தார். உழைக்கும் மக்கள் மற்றும் ராணு வத்தின் ஆதரவுடன், சதிகாரர்கள் புரட்சி கர நடைமுறைகளைப் பலவீனப்படுத்த ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொண்ட நட வடிக்கைகள் அனைத்தையும் முறியடித்தார். நாட்டிற்கு வெளியே சாவேஸ் கியூ பாவுடன் மிகவும் நெருக்கமாகவும் வலு வாகவும் உறவுகளை ஏற்படுத்தினார். பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகர சித்தாந் தத்தை அவரும் ஆரத் தழுவிக்கொண் டார். விரைவாகவே அதன் வெற்றிகர மான நடைமுறையாளராக மாறினார். வெனிசுலாவில் அவரது தலைமை லத் தீன் அமெரிக்காவில் இடதுசாரிகளின் முன்னேற்றத்திற்கு உதவியது. 1998இல் அவர் முதன்முதலாக வெற்றிபெற்ற பின்பு, பிரேசில், பொலிவியா, ஈக்வடார், எல்சால்வடார், ஹோண்டுராஸ், நிகர குவா முதலான நாடுகளிலும் இடதுசாரி களின் வெற்றிகள் தொடர்ந்தன. லத்தீன் அமெரிக்காவை ஒன்றுபடுத்துதல்சாவேஸ் ஸ்பானிஷ் ஆட்சியி லிருந்து தென் அமெரிக்காவை விடு தலை செய்த சைமன் பொலிவாரின் தொலைநோக்குப் பார்வையுடன், ஏகாதி பத்தியத்தின் ஆதிக்கத்திலிருந்து விடு தலை பெறக்கூடிய விதத்தில் , ஐக்கிய லத்தீன் அமெரிக்காவை உருவாக்க ஒரு திட்டத்தை - பொலிவாரிய தொலை நோக்குத் திட்டத்தை - முன்மொழிந் தார். வெனிசுலா, கியூபா, பொலிவியா ஆகிய கேந்திரமான நாடுகளுடன் எட்டு நாடுகளை உள்ளடக்கிய அமெரிக் காவில் உள்ள பொலிவாரிய மக்கள் கூட் டணி என்னும் அல்பா அமைப்பை உரு வாக்குவதில் அவர்தான் முக்கிய கருவி யாகும். இதனை அடுத்து அவர் தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் என் னும் அமைப்பை உருவாக்கினார்.
கடை சியாக, அவரது மாபெரும் நடவடிக்கை 2011 டிசம்பரில் காரகசில் செலாக்அமைப்பை உருவாக்கியதாகும். இத் தகைய அமைப்புகள் அனைத்தும் வட அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவை யும், கனடாவையும் தனியே ஒதுக்கி வைத்தன. இத்தகைய மண்டல அளவிலான ஒத்துழைப்பின் விளைவாகத்தான் பேங்க் ஆஃப் தி சவுத், டெலாசர் டெலி விஷன் நிலையம், சக்கர் என்னும் கரன்சி என அனைத்தும் உருவாயின. ஹைதி போன்ற ஏழை நாடுகளுக்கு எண்ணெய் வழங்க வேண்டும் என்பதற் காக பெட்ரோகேரிப் என்னும் மிக மலி வான நிதிக்கொள்கையை சாவேஸ் ஏற் படுத்தியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலானது, சாவேஸ் கியூபாவுடன் வலுவான கூட்ட ணியை உருவாக்கிக் கொண்டிருந்த தாகும். இது சோவியத் யூனியன் வீழ்ச் சிக்குப் பின்னர் மிகவும் சிரமமான கால கட்டத்தில் இருந்து கியூபா தன் இடர் களைக் களைந்து முன்னேறிச்செல்ல உதவியது. பிடல், பிப்ரவரி 17 அன்று சாவேஸூக்கு எழுதிய கடிதத்தில், ‘‘சோசலிச முகாம் நிர்மூலமான, சோ வியத் யூனியன் தகர்ந்த சமயத்தில், ஏகாதிபத்தியம் தன்னுடைய கூர்மை யான கத்தியுடன் கியூபப் புரட்சியை ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்க முயன்ற நேரத்தில், வெனிசுலா, பிளவுபட்ட அமெ ரிக்காவின் ஒரு மிகச்சிறிய நாடாக இருந்தபோதிலும்கூட, அதனைத் தடுத்திட வல்லமை படைத்ததாக இருந்தது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். புரட்சிகரமான தொலைநோக்குப் பார்வை இவ்வாறு சாவேஸ் புரட்சிகரமான சர்வதேச தொலைநோக்குப் பார்வை யைக் கொண்டிருந்தார். அவரது அயல் துறைக் கொள்கை ஒரு மையமான அம் சத்தை வழிகாட்டுதலாகக் கொண்டிருந் தது. அதாவது, ஏகாதிபத்திய மேலாதிக் கத்தை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதையும், மூன்றாம் உலக நாடு களின் இறையாண்மையை எப்படிப் பாதுகாப்பது என்பதையும் அது அடிப் படையாகக் கொண்டிருந்தது. அப்போது தான் மூன்றாம் உலக நாடுகள் தங்க ளின் சொந்த சுயமான அதிகாரத்தைச் செலுத்திட முடியும்.நான், 2004 டிசம்பரில் காரகசில் சாவேஸை சந்தித்திருக்கிறேன். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அச்சந்திப் பில், தெற்கு - தெற்கு ஒத்துழைப்பு குறித்த அவரது தொலைநோக்குப் பார்வை, அணிசேரா இயக்கத்தை எப் படி மீண்டும் புனரமைப்பது, சோசலிசம் குறித்த அவரது சிந்தனைகள் அனைத் தையும் வெளிப்படுத்தினார். 2005இல் இந்தியாவிற்கு வரவிருந்த அவரது பய ணம் குறித்தும் அவர் என்னுடன் விவா தித்தார். அப்போது கொல்கத்தா செல்ல வேண்டுமென்கிற அவரது பேராவலை யும் அவர் வெளிப்படுத்தினார். 21ஆம் நூற்றாண்டில் புதிய அத்தி யாயத்தை உருவாக்குவதில் சாவேஸ் அளவிற்கு உலகில் வேறெந்தத் தலை வரும் ஈடுபட்டதில்லை.வெனிசுலாவில் உள்ள இடதுசாரி மற்றும் செல்வாக்கு படைத்த சக்திகள் ஹியூகோ சாவேஸ் மேற்கொண்ட பாதையை முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளன. வரவிருக்கும் காலங்களில் எண்ணற்ற சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக் கும். நம்முடைய ஒருமைப்பாடும் ஆதரவும் அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எல் லாக் காலத்திலும் தொடரும்.
இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.
கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, ஏ.பி. பரதன், து.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, ஏ.கே. பத்மனாபன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் வரதராஜன், புரட்சி சோசலிஸ்ட் கட்சி சார்பில் அபனி ராய், வெனிசூலா நாட்டின் இந்தியத் தூதர், கியூபா நாட்டின் இந்தியத் தூதர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றார்கள்.
(ச.வீரமணி)

Wednesday, March 13, 2013

இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் - மனித உரிமை மீறல்கள் - விசாரணை வேண்டும்!





ஜி.ராமகிருஷ்ணன்மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

இலங்கை தமிழ்மக்களின் துன்ப-துயரங்கள் முடிவில்லாத தொடர்கதை யாக தொடர்வது வேதனையளிப்பதாக உள்ளது. இலங்கை விடுதலை பெற்ற பிறகு தொடர்ச்சியாக வந்த அரசுகள் பின்பற்றிய தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கைகள்தான் அங்கு இனரீதியான பிரச்சனை எழுவ தற்குக் காரணமாக அமைந்தது. இதன் காரணமாக சொந்த நாட்டிற்குள்ளேயே இரண்டாம்தர குடிமக்களாக தமிழ் மக் கள் உணரத்தலைப்பட்டனர். அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்துடன் பெரும்பான்மை மக்களை மட்டும் திருப்திபடுத்தக்கூடிய, இலங்கை அர சின் நியாயமற்ற அந்த அணுகுமுறை இப்போதும் மாறவில்லை என்பதுமட்டு மல்ல, தீவிரமடைந்துள்ளது என்பது தான் உண்மை.இலங்கையின் பூர்வகுடிகளான தமிழ்மக்கள் அனைத்து நிலைகளிலும் சமமாக நடத்தப்பட வேண்டும்.
அவர் களது சமூக, பொருளாதார, பண் பாட்டு, வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்பின் முரணின்றி தொடர்ச்சியாக வலியுறுத்திவந்துள் ளது. இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்ச னைக்கு அரசியல்ரீதியான தீர்வு காணப்படவேண்டும் என்பது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்து வரும் தொடர்ச்சியான நிலைபாடாகும்.இந்தப் பின்னணியில் இலங்கை யில் நீடித்துவந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 4 ஆண்டுகள் ஆன பின்னும் கூட இறுதிக்கட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட கடுமையான, சகிக்கமுடியாத மனித உரிமை மீறல் களில் ஈடுபட்டவர்களை தண்டிப்ப திலோ, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவர்களது சொந்த வாழ் விடத்தில் மீள்குடியமர்த்தி நிவாரணம் வழங்குவதிலோ, மெய்யான அர்த்தப் பூர்வமான அதிகாரப்பரவல் மூலம் இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வு காண்பதிலோ ராஜபக்சே அரசுக்கு கொஞ்சம்கூட அக் கறையில்லை என்பது மீண்டும் மீண் டும் மெய்ப்பிக்கப்பட்டுவருகிறது.அண்டைநாடு என்ற முறையிலும், சார்க் கூட்டமைப்பில் அங்கம் என்ற முறையிலும் இலங்கைத் தமிழ் மக்க ளின் பிரச்சனைகள் தமிழகத்திலும் இயல்பான முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற முறையிலும் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனை யில் ராஜீய ரீதியாக இந்தியா தலை யிட்டு தீர்வுக்கு உதவ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச் சியாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசின் அணுகுமுறையும் திருப்தியளிப்பதாக இல்லை.
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் விவாதத்திற்கு வந்துள்ள நிலையிலும், எல்டிடிஇ தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட மனித உரிமை மீறல் தொடர்பான புதிய ஆதா ரங்கள் வெளிவந்துள்ள நிலையிலும் இலங்கைத் தமிழர் பிரச்சனை மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது.நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலையை தெளிவாக எடுத்துவைத்தது.இறுதிக்கட்ட போரின்போது இலங் கை ராணுவம் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல் குற்றங்களைப் புரிந்துள்ளது. சொந்த மக்களுக்கு எதி ராக இழைக்கப்பட்ட கொடுமைகள் மிக வும் பயங்கரமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியதோடு, தமிழ் மக்களை திட்டமிட்டு கொன்று குவித்திட காரண மாக இருந்தவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிப்பதில் கால தாமதம் செய்வது சகித்துக்கொள்ள முடியாதது என்றும் எடுத்துரைத்தனர்.ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை செயல்படுத்த இலங்கை தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், அதை தட்டிக்கேட்க ஐக்கிய முற்போக் குக்கூட்டணி அரசு தயங்குவது ஏன் என கேள்வியெழுப்பியதோடு, இந்தப் பிரச்சனையில் இந்திய அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையையும் கேள் விக்குறியாக உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை கவுன்சில் அமர்வில் இலங் கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது தமிழ்மக்களுக்கு எதி ராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகள், அட் டூழியங்கள் குறித்து நியாயமான, உயர்மட்ட, நம்பகத்தன்மை கொண்ட, சுயேட்சையான விசாரணையை இந் தியா கோரவேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.இறுதிக்கட்ட போரின்போது தமிழ் மக்களுக்கு ஏராளமான கொடுமைகள் இழைக்கப்பட்டது குறித்து பொதுவாக தகவல்கள் வெளியானாலும் அடுத்த டுத்து வரும் தகவல்கள் இதயத்தை பதறவைப்பதாக உள்ளது. 40ஆயிரத் திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக் கள் போரின்போது கொல்லப்பட்டதாக ஐ.நா.நியமித்த குழுவின் அறிக்கையே கூறுகிறது. உண்மையில் இந்த எண் ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.வெற்றி என்ற ஒற்றை இலக்கை மட்டுமே வைத்துக்கொண்டு இலங்கை ராணுவம் சர்வதேச ரீதியிலான அனைத்து நியதிகளையும், நியாயங் களையும் அப்பட்டமாக மீறியுள்ளது என்பது வெளிப்படை. உயிருக்குப் பயந்து காட்டுக்குள் பதுங்கியி ருந்த தமிழ்மக்கள் மீது காற்றில் உள்ள ---- 

ஆக்சிஜனை உறிஞ்சும் வேதியியல் குண்டுகளை வீசி மக்கள் மூச்சுத்திணறி இறந்து போகும்படி செய்யப்பட்டிருக் கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.போர் நிறுத்தப்பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங் களுக்குச் சென்ற மக்கள் மீது கூட கொத்துக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. மருத்துவம னைகள், செஞ்சிலுவைச் சங் கம் போன்ற மனித முகாம் கள் மீதும் வெறித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள் ளது. இந்த தாக்குதலால் படுகாயமடைந்து உயி ருக்குப் போராடிய மக்க ளுக்கு மருத்துவ உதவிகூட மறுக்கப்பட்டுள்ளது. மருத் துவமனைகளில் அனுமதிக் கப்பட்டு ரத்தம் சிந்திக்கொண் டிருந்த சிலரின் ரத்தத்தைப் பிடித்து மீண்டும் அவர்க ளுக்கு ஏற்றுமளவிற்கு நிலை மை கொடூரமாக இருந்துள் ளது.விடுதலைப்புலிகள் என்று முத்திரை குத்தப்பட்டு பிடித் துச் செல்லப்பட்ட ஏராளமான இளைஞர்களின் கதி என்ன வென்று இன்றுவரை தெரிய வில்லை.
தமிழ்ப் பெண்கள் ஏராளமானோர் பாலியல் பலாத்காரத்திற்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.ஏராளமானோர் கை,கால்களை இழந்து, மன நிலை பாதிக்கப்பட்டு உயிரை மட்டும் கையில்பிடித்தபடி வாழ்ந்து வருகின்றனர். முள் வேலி முகாம்களில் அடைக் கப்பட்டிருந்தவர்களில் பெரும் பகுதியினர் வெளியேற்றப் பட்டுவிட்டதாக இலங்கை அரசு கூறிக்கொண்ட போதும், அவர்களது சொந்த வாழ் விடங்களில் அவர்கள் மரி யாதையோடு குடியமர்த்தப் பட்டார்கள் என்று கூறமுடி யாது. போரின் போது காணா மல்போன அல்லது ராணு வத்தினரால் பிடித்துச்செல் லப்பட்ட தங்களது உறவினர் களின் கதி என்ன என்ற அழு குரல்கள் இன்னமும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.எல்டிடிஇ தலைவர் பிரபா கரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட புகைப்படத்தை சேனல்-4 என்ற தொலைக் காட்சி நிறுவனம் அண்மை யில் வெளியிட்டது. இதைப் பார்க்கும் மனித நேயம் கொண்ட யாரும் பதறாமல் இருக்கமாட்டார்கள். இலங் கை அரசின் ஒப்புதல் இல் லாமல் இப்படியொரு படு கொலை நடந்திருக்க வாய்ப் பில்லை. ஆனால் இந்தப் புகைப்படம் போலியானது என்று கூறுவதன் மூலம் தனது போலித்தனத்தின் அடர்த்தியை இலங்கை அரசு வெளிப்படுத்திக் கொண்டுள் ளது.
இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட போர் படிப்பி ணைகள் மற்றும் நல்லிணக் கக் குழுவின் பரிந்துரைக ளில் 99 சதவீதத்தை நிறை வேற்றிவிட்டதாக இலங்கை அரசின் அமைச்சர் கூறுகி றார். ஆனால் இது உண்மை யில்லை என்பதுதான் உண்மை. ஐ.நா.நியமித்த குழுவின் பரிந்துரைகளும் நிறைவேற் றப்படவில்லை.போர் முடிந்தபிறகு அதி காரப்பரவல் மூலம் இலங் கைத் தமிழர்களுக்கு உரிமை கள் வழங்கப்படும் என்றும் 13வது அரசியல் சாசன திருத்தம் மட்டுமல்ல, அதற்கு மேலாகவும் உரிமைகள் தரு வோம் என்று ராஜபக்சே கூறி னார். ஆனால் சமீபத்தில் திரிகோணமலையில் பேசும் போது, இலங்கைத் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பரவல் தரமுடியாது என்றும், ராணுவத்தை தமிழ்மக்கள் வாழும் பகுதியிலிருந்து விலக் கிக்கொள்ளமுடியாது என் றும் ஆணவமாகக் கூறியுள் ளார். அதிகாரப்பரவல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசு நடத்தும் பேச்சு வார்த்தை வெறும் இழுத் தடிப்பு உத்தியாகவே உள் ளது.தமிழ்மக்கள் பாரம்பரிய மாக வசித்த பகுதிகளில் ராணுவத்தை நிரந்தரமாக நிறுத்திவைப்பதும் பெரும் பான்மை சிங்கள மக்களை குடியமர்த்துவதும் வேகவேக மாக நடந்துவருகின்றன. புராதன பெருமை மிக்க ஊர் களின் தமிழ்ப் பெயர்கள் கூட சிங்களமயமாக்கப்படுகிறது. தமிழ் மக்கள் தங்களது வழி பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்குக் கூட ராணுவத்தின் அனுமதி பெறவேண்டிய அவல நிலை நீடிக்கிறது.இந்தப் பின்னணியில் வடக்கு-கிழக்கு மாகாணங் களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும். தமிழ் மக்களும் தமிழ் மொழி யும் பண்பாடும் அனைத்து நிலைகளிலும் சமமாக நடத் தப்படவேண்டும் என்று மீண் டும் மீண்டும் வலியுறுத்து வது அவசியமாகிறது. இதற் கான அழுத்தத்தை இலங் கை அரசுக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது இலங்கை ராணுவம் நிகழ்த் திய மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேட்சையான, உயர்மட்ட, நம்பகத்தன்மை யுள்ள விசாரணை நடத்த இலங்கை அரசை ஒத்துக் கொள்ள வைக்க ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இந்தியா கோர வேண்டும்.
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் கடந்த முறை இலங்கைக்கு எதிராக தீர்மா னம் கொண்டுவரப்பட்ட போது இந்திய அரசு தீர்மா னத்தை ஆதரித்தது. இப் போது அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர் மானத்தை ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வந் துள்ளது. இந்தத் தீர்மானமே இலங்கைத் தமிழ்மக்களின் அனைத்து துன்ப-துயரங் களுக்கும் தீர்வு கண்டுவிடும் என்ற மாயத்தோற்றம் ஏற் படுத்தப்படுகிறது.அமெரிக்காவைப் பொறுத்த வரை இலங்கைத் தமிழ் மக் களுக்கு ஆதரவாக இந்தத் தீர்மானத்தை கொண்டுவர வில்லை. மாறாக மூன்றாம் உலக நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு ஏகாதிபத்திய நலனை நிலை நிறுத்த வேண்டும் என்ற அத னுடைய அப்பட்டமான சுய நலமும் இதில் கலந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.இராக், ஆப்கானிஸ் தான், சிரியா போன்ற நாடு களில் அமெரிக்கா அப்பட்ட மான ஆக்கிரமிப்பு நோக்கு டன் தலையிடுகிறது. அந் நாட்டு மக்களின் மனித உரி மைகளை காலில் போட்டு மிதிக்கிறது. அதே நேரத்தில் மனித உரிமை மீறல் என் பதை பிற நாடுகளுக்கு எதி ரான மிரட்டல் ஆயுதமாகவே அமெரிக்கா தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளது. உண்மையில் உலகளவில் அதிகமான போர்க்குற்றங் களில் ஈடுபடுவதிலும், மனித உரிமைளை மீறுவதிலும் முத லிடத்தில் இருப்பது அமெரிக் காவே ஆகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண் டும்.1980களில் இலங்கை யில் நடந்த கொடூரமான படுகொலைகளை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண் டித்தது. ஆயுத மோதலால் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்று வலி யுறுத்தியது. இதைத்தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதோடு இறுதிக்கட்ட போர் முடிந்த நிலையில் போரினால் பாதிக் கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து சென் னையில் சிறப்புக்கருத்தரங்கு ஒன்றை மார்க்சிஸ்ட்கம்யூ னிஸ்ட் கட்சி நடத்தியது. இதில் கட்சியின் அகில இந் திய பொதுச் செயலாளர் பிர காஷ் காரத் மற்றும் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் தில் லியிலும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.இலங்கை கடற்படையின ரால் இந்திய மீனவர்கள் சுட் டுக்கொல்லப்படுவதைக் கண் டித்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முன்பு கட்சியின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந் தப்பிரச்சனைக்காக தொடர்ந்து கட்சி போராடி வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாம் களில் தங்க வைக்கப்பட் டுள்ள மக்களின் பிரச்சனை களுக்காகவும் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.பல பத்தாண்டுகளாக குறிப் பாக இறுதிக்கட்ட போரின் போது, இலங்கைத் தமிழ் மக் களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டும். அவர்கள் இனி யாவது நிம்மதியாக வாழ வேண்டும். அதற்குரிய அதி காரப்பரவல் அடிப்படையி லான அரசியல் தீர்வு வேண் டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்து வந்துள்ளது. அதற் கான போராட்டம் தொய் வின்றி தொடரும்.


Sunday, March 10, 2013

சாவேஸ் காட்டிய பாதையிலே முன்னேறுவோம்!






 ஹியூகோ ரபேல் சாவேஸ் பிரியாஸ் மரணச் செய்தியை  உலகம் ஆழ்ந்த வேதனை யுடனும், வருத்தத் துடனும் கேட்டது.  கடந்த ஈராண்டு காலமாக புற்றுநோயுடன் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த சாவேஸ், வெனிசுலா தலைநகர் காரகாஸில் மார்ச் 5 அன்று கடைசியில் அந்நோய்க்கு இரையாகி விட்டார்.  கடந்த பத்தாண்டு களில் லத்தீன் அமெரிக்கக் கண்டத் தில் வரலாற்றை மிகவும் புரட்சிகரமாக மாற்றியமைத்த, அனைவராலும் ஆகர்ஷிக்கப்பட்ட தலைவரை, உலகம் முழு வதும் உள்ள முற்போக்கு சக்திகள் இழந்துவிட்டன. முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே  நவீன தாராளமயப் பொருளாதாரக்  கொள்கைகளுக்கு மாற்று சாத்தியமே என்பதை நடை முறையில் மெய்ப்பித்துக் காட்டினார்.  அதுவும் அதை அவர் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் கொல்லைப் புறத்தில் நின்றுகொண்டே செய்து காட்டியுள்ளார்.    அதன் மூலம் அவர் அதன் மேலாதிக் கத்திற்கே தத்துவார்த்த ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்  சவால் விடுத் துள்ளார். குறிப்பாக சோசலிசம் குறித்த அவரது பார்வை மிகவும் விசாலமான தாகவும் மனவெழுச்சியுடன் பின்பற்றக் கூடிய விதத்திலும் இருந்தது. அதனை மக்கள் ஆதரவு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளுடன் நிறை வேற்ற முடியும் என்பதை அவர் உளப் பூர்வமாக நம்பினார்.
 கியூபப் புரட்சியும் அதன் சாதனைகளும் அவருக்கு உத் வேகம் அளித்து அவர் இறக்கும் வரை அவருக்கு  உறுதுணையாக நின்றன.ஹியூகோ சாவேஸ் நடவடிக்கைகள் லத்தீன் அமெரிக்காவின் அரசியல் மீது மிகவும் ஆழமான வகையில் செல்வாக்கு செலுத்தியது. லத்தீன் அமெரிக்க நாடு கள் அனைத்திலுமே மக்கள்திரளினரின் மகத்தான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்குக் காரணமாய் அமைந் தன. குறிப்பாக, பொலிவியாவில் ஈவோ மோரேல்ஸ் வெற்றி சாவேஸூக்கு கூடுதல் வலிமையைக் கொடுத்தது. கியூ பாவுடன் இணைந்து அவர்கள் லத்தீன் அமெரிக்காவில் ஒரு புரட்சிகரமான முற்போக்கு நடவடிக்கைகளை முன் னெடுத்துச் சென்றார்கள். இது, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும்பான்மை யானவற்றின் தேர்தல்களில் வெற்றிக்கு வித்திட்டது. உலக வர்த்தக அமைப்பு, பூமி வெப்பமயமாதல் போன்ற  உல கத்தின் பல அரங்கங்களில் அவர்  வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக, வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகளை ஒருங் கிணைப்பதில் முக்கிய பங்களிப்பினைச் செலுத்தினார். பிரிக்ஸ், இப்சா, நாம் போன்ற வளர்கின்ற நாடுகளின்  ஒற் றுமை உருவாவதற்கு ஊக்கத்துடன் ஒத் துழைத்தார்.  இவ்வாறாக அவர், உலக அளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின் னமாக விளங்கினார். 
ஹியூகோ சாவேஸ் வெனிசுலாவில் தனக்கு முன் ஆட்சியிலிருந்தவர்கள் நவீ னத் தாராளமயக் கொள்கைகள் மூலம் நாட்டின் செல்வங்கள் கொள்ளையடித் துச் செல்வதை மக்களுக்கு மிகவும் தெளிவாக அடையாளம் காட்டினார். குறிப்பாக தாராளமயக் கொள்கை களுக்கு எதிராகப் போராடிய மக்கள் படு கொலை செய்யப்பட்ட 1989  கரகாசோ இயக்கம் அவரை ஆழமாகப் பாதித்தது. நாட்டின் அதிபராக முதன்முறையாகப் பொறுப்பேற்ற போது அவர் செய்த முதல் காரியம், அரசியல் நிர்ணயசபைக்கு தேர்தல் அறிவித்து மக்கள் ஆதரவு அர சியலமைப்புச் சட்டத்தை நாட்டிற்காக உருவாக்கித்தருமாறு பணித்ததுதான். இவ்வாறாக பொலிவாரியன் அரசியல மைப்புச் சட்டத்தை உருவாக்கி, அதனை ஆயுதமாக வைத்தக்கொண்டு, சமூகத்தில் அதுநாள் வரையில் அடக் கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடந்த மக் களுக்கு உரிமைகளை அளித்தார். வெனி சுலா மக்களின் வாழ்க்கையை முற்றிலு மாக மாற்றி அமைத்தார். அவர் செய்த  காரியங்களில் மிக முக்கியமான ஒன்று, நாட்டில் நடைபெற்று வந்த எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை தேசிய மயமாக்கியதாகும். அதன்மூலம் கிடைத்த பணத்தை எல்லாம் பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தியதாகும். அதாவது, நாட்டின் செல்வங்களை நாட்டு மக்களின் நலன்களுக்குப் பயன் படுத்தினார். இதன் காரணமாக அதுநாள் வரையிலும் நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து வந்த பணக்கார வர்க்கம், அவை கையை விட்டுப் போன தைத் தொடர்ந்து நாசவேலைகளில் இறங்கின. அவற்றை சாவேஸ் தொழி லாளி வர்க்கத்தின் உதவியுடன் வெற்றி கரமாக முறியடித்தார்.
இவ்வாறு சாவேஸ் மக்கள் மத்தியில் அபரிமிதமான முறை யில் ஆதரவினைப் பெற்றதால், சாவே ஸுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்ட கூட்டம், வேறு வழியின்றி மீண்டும் அவரை அதிபராக தேர்வு செய் யப்பட்டதை தடுக்க முடியவில்லை. அரசு எந்திரத்தில் இருந்த அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தை உடைத் தெறிந்து, மக்கள் பங்கேற்கும் வகையில் ஆட்சி அதிகாரத்தை மாற்றி அமைத்தார். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்று வதற்காகப் பல்வேறு மக்கள் குழுக் களை அமைத்தார். இவ்வாறு 19க்கும் மேற்பட்ட மக்கள் குழுக்கள் அமைக்கப் பட்டன. இவை மக்களின் பிரச்சனை களை நேரடியாகத் தலையிட்டுத் தீர்த் தன. இவை நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பணிகளை மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்தின. 2006ஆம் ஆண்டு வாக்கில், நாட்டிலிருந்து எழுத் தறிவின்மை முற்றிலுமாக அகற்றப்பட் டது.  லத்தீன் அமெரிக்க நாடுகளில், சோசலிசக் கியூபாவிற்கு அடுத்தபடி யாக இரண்டாவது நாடாக, இந்த அளப் பரிய சாதனையை வெனிசுலா செய்து காட்டியது.  கியூபா நாட்டின் மருத்துவர் களின் உதவியுடன் நாட்டின் அனைத் துக் குடிமக்களுக்கும் அடிப்படைச் சுகாதாரப் பாதுகாப்பும் மருத்துவ சிகிச் சைகளும் இலவசமாக அளிப்பதை உத் தரவாதப்படுத்தினார். இத்தகைய மக்கள் குழுக்களின் மூலமாகவே அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருள்கள் கடு மையாக உயர்ந்து கொண்டிருந்த சமயத் திலும், பொருளாதார நெருக்கடி இருந்த போதிலும்கூட, மான்ய விலையில் உணவு தான்யங்கள் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்தினார்.
ஓராண்டிற்கு முன்புதான், சாவேஸ், தொழிலாளர் களுக்கு விரிவான அளவில் உரிமை களை வழங்கி, ஓர் உண்மையான புரட் சிகரமானதொழிலாளர்நலச் சட்டத்தில் கையெழுத்திட்டார், தொழிற்சாலை களைத் தொழிலாளர்களே எடுத்துக் கொள்வதை அரசாங்கம் சட்டரீதியாக அனுமதித்தது. உண்மையில் சாவேஸ், அவரது ஆட்சிக்காலத்தில் பல தொழிற் சாலைகளைத் தேசியமய மாக்கினார்.  தொழிலாளர் குழுக்கள் அவற்றை நிர் வகிக்க அனுமதித்தார். ஒவ்வோராண்டும் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப் பட்டது. ஆயினும், தொழிலாளி வர்க் கத்தின் வாழ்க்கை புரட்சிகரமான முறை யில் மாற்றி அமைக்கப்படுவதற்கு இன் னும் செய்ய வேண்டியது ஏராளமாக இருக்கிறது என்பதை  சாவேஸ் நன்கு உணர்ந்தே இருந்தார்.சாவேஸ் நிலச்சீர்திருத்தச் சட்டங் களைக் கொண்டு வந்து அமல்படுத்தத் தொடங்கினார். நாட்டில் மிகப்பெரிய அளவிலிருந்த நில ஆக்கிரமிப்புகளை உடைத்தெறிந்தார்.  நிலவுடைமையாளர் கள் மற்றும் அவர்தம் அடியாட்களின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் அவற்றை யெல்லாம் முறியடித்து நிலச்சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை முன் னெடுத்துச் சென்றார்.  சாவேஸின் ஆட் சியை எப்படியாவது பலவீனப்படுத்தி வீழ்த்திவிட வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சூழ் நிலையில் இவற்றைச் சாவேஸ் செய்து, சாதனைகளைப் படைத்தார் என்பது தான் இதில் நாம் மிகவும் முக்கியமாகக் குறித்துக்கொள்ள வேண்டிய அம்ச மாகும். ஹியூகோ சாவேஸ், ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியுடன் நின்று வளர்முக நாடுகளின் உரிமைகளுக்காகப் போராடி யவர்.
அவர் எப்போதுமே வளர்முக நாடுகளுக்கு இடையே ஒற்றுமையைக் கட்டுவதிலும், தெற்கு-தெற்கு ஒத்து ழைப்பை முன்னெடுத்துச் செல்வதிலும் உறுதியுடன் செயல்பட்டார். லத்தீன்  அமெரிக்க நாடுகளின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலாதிக்கம் செலுத்த வும், நவீன தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தவும் மேற்கொண்ட முயற் சிகளை  முறியடிப்பதற்காக . சாவேஸ், கியூபாவுடன் இணைந்து நின்று அல்பா என்னும் அமைப்பை உரு வாக்கினார்.  இதன்கீழ் பேங்க் ஆஃப சவுத்என்னும் ஒரு வங்கியை நிறுவவும் அதன்கீழ் லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் ஒரு பொது கரன்சியை உரு வாக்கிடவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை கள் நடைபெற்றுள்ளன. ஆயினும் சாவே ஸின் கனவு இன்னும் நனவாகவில்லை.  ஏகாதிபத்தியம், நிதி மூலதனம், வளர்முக நாடுகளின் செல்வாதாரங் களைக் கவர்ந்து செல்வதற்காக அவற் றிற்கிடையே நடைபெற்றுவரும் யுத்தங் கள் ஆகியவை குறித்த  நெருப்பைக் கக்கும் அவரது விமர்சனம் ஐ.நா. மன் றத்தில் அவர் ஆற்றிய உரையில் பிரதி பலித்தது. ஜார்ஜ் புஷ் பேசியதற்கு அடுத்து அவர் பேசும்போது இவ்வாறு அவர் பேசினார். ஏகாதிபத்தியத்தை பிசாசுஎன்று வர்ணித்த அவர், உலக ஒழுங்கை ஜனநாயகப் படுத்துவதற்கும், ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக் கத்தைத் திணிப்பதற்காக மேற்கொள் ளும் முயற்சிகளைத் தவிடுபொடியாக் குவதற்கும் வேண்டுகோள் விடுக்க அம் மேடையை அவர் பயன்படுத்திக் கொண் டார்.ஹியூகோ சாவேஸ் மரணத்தால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவ தென்பது சாத்தியமில்லை.
அவர் விட் டுச்சென்றுள்ள செயல்கள் அனைத்தும் ஒளிவிளக்காகத் திகழ்ந்து, உலகம் முழுதும் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுக்கு என்றென்றும் வழிகாட்டி உத்வேகமூட்டும். வளர்ந்து வரும் இத் தகைய போராட்டங்கள் சோசலிசத்தை நிதர்சனமாக்கி, உலகம் முழுதும் உள்ள பெரும்பான்மை மக்களின் அடிமைத் தளையைத் தகர்த்தெறியும்.  அத்தகைய போராட்டங்களை வலுப்படுத்துவ தென்பதுதான் ஹியூகோ சாவேஸுக்கு அளித்திடும் உண்மையான அஞ்சலி யாகும்.வெனிசுலா தலைநகர் காரகாஸில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு, ‘‘சாவேஸ் வாழ்கிறார், போராட்டம் தொடர்கிறது’’ என்று முழக்கமிட்டது, இந்த உறுதியைப் பிரதிபலித்தது.  அத் துடன், காரகாஸில், மிராபுளோரஸ் அரண்மனையில், சாவேஸூக்குப் பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள துணை அதிபர் நிகோலஸ் மதுரோ, (தேர்தல்கள் அடுத்த மாதம் நடைபெற வுள்ளது) ‘‘வெனிசுலா முதலாளிகள் மீண்டும் இங்கே எப்போதும் திரும்ப முடியாது’’ என்றும், ‘‘சாவேஸூக்கு விசு வாசமாக உள்ள நாங்கள் எங்கள் கட மைகளை என்றென்றும் தொடர்வோம்,  மக்கள் நலத் திட்டங்களில் எதுவுமே திரும்பப் பெறமாட்டாது’’ என்றும், ‘‘மீண்டும் இந்த நாட்டை முதலாளிகள் சூறையாட எங்கள் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்’’ என்றும் சூளுரைத்திருக் கிறார்.  ‘‘சாவேஸூக்கும் மக்களுக்கும் துரோகம் இழைப்பதைவிட சாவது என்பதே மேல்’’ என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.
(தமிழில்: ச.வீரமணி)


Tuesday, March 5, 2013

பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஒருபோதும் வரமுடியாது: பிரகாஷ் காரத்





ராஞ்சி, மார்ச் 5-
பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஒருபோதும் வரமுடியாது என்றும் ஏனெனில் இரு கட்சிகளுமே கார்ப்பரேட்டுகள் மற்றும் பணக்காரர்களின் நலன்களுக்கு சேவகம் செய்வதையே நோக்கமாகக் கொண்ட கட்சிகள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கைகளுக்கு மாற்றாக, மாற்றுக் கொள்கைகளை முன் வைத்து மாற்றுக் கொள்கைக்கான போர் முழக்கப்பயணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு முழுதும் நடைபெற்று வருகிறது. கிழக்குப் பயணக்குழுவில் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர்களுடைய பயணக்குழு திங்கள் அன்று ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சிக்கு வருகை புரிந்தது. ராஞ்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்திலேயே பிரகாஷ்காரத் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
‘‘பாஜக தன்னுடைய தேசியக்குழுக் கூட்டத்தில், தாங்களே காங்கிரசுக்கு மாற்று என்றும், நாடு முழுதுக்கும் ‘‘குஜராத் மாடலை’’க் கொண்டுவருவோம் என்றும் கூறியிருக்கிறார்கள். குஜராத் மாடல் என்பது கார்ப்பரேட்டுகளை எவ்விதக் கடிவாளமுமின்றி கொள்ளை லாபம் அடிக்கஅனுமதிப்பது என்பதேயாகும்.  இதன் காரணமாகத்தான் அம்பானிகளும், அடானிகளும் ஓஹோஎன்று குஜராத் மாடலையும், நரேந்திர மோடியையும் புகழ்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலே, குஜராத் மாடல் நாட்டின் மிகமோசமான இனப்படுகொலைகளுக்கு சாட்சியமாக அமைந்திருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உண்மையான மாற்றுக் கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. எனவேதான் நாங்கள்அத்தகைய மாற்றுக் கொள்கைள் மீது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, நாடு முழுதும் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். நிலச் சீர்திருத்தங்கள், வீட்டுமனைப் பட்டாக்கள், உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய பிரச்சனைகளைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் மக்கள் கருத்தைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.அடுத்த பிரதமர் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘காங்கிரஸ் கட்சியோ அல்லது பாரதீய ஜனதா கட்சியோ இனிமேலும் கட்டளைகளைப் பிறப்பிக்க முடியாது. ‘‘பிரதமர் பதவிக்கு’’ யார் வேட்பாளர் என்பதைப் பொறுத்தவரை, இந்தியாவில் ஒன்றும் ஜனாதிபதி ஆட்சிமுறை அமலில் இல்லை என்று கூறினார். ``இவர்கள் பிரச்சாரம் வெறும் கள்ளத்தனமானதுமோசடியானது’’ என்றார்.
பிரகாஷ் காரத்  மேலும், ‘‘இடதுசாரிக் கட்சிகளின் முன்னேற்றம் என்பது தேர்தல்களால் மட்டும் ஏற்படுவது அல்ல. நாம் மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் முன்னேறி இருக்கிறோம். மேலும் வலுவான போராட்டங்களை உருவாக்க விரும்புகிறோம். அவை தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலிக்கும்.’’ என்றார்.
‘‘மூன்றாவது அணி’’ குறித்து ஒரு செய்தியாளர் கேட்டபோது, பிரகாஷ் காரத், ‘‘மாற்றுக் கொள்கைகள் மீது ஒற்றுமையைக் கட்டுவதிலேயே நாங்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். மாற்றுக் கொள்கை இல்லாமல், எந்தவொரு கூட்டணியும் உருப்படியான பலனைக் கொண்டு வர முடியாது,’’ என்றார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், பிரகாஷ் காரத், ‘‘மேற்கு வங்கத்தில், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கருத்துச் சுதந்திரம் இடருக்குள்ளாகி இருக்கிறது. விமர்சனம் செய்வோர் சிறையில் அடைக்கப்படுகின்றனர்,’’ என்றார்.
மாற்றுக் கொள்கைக்கான கிழக்குப் பயணக்குழு ஜார்கண்ட் மாநிலத்தில் ராம்கார், ஹசாரிபாக் மற்றும் கொடேர்மா பகுதிகளில் திங்களன்று பயணம் மேற்கொண்டது.  
ராம்கார் நகரம், நிலக்கரிச் சுரங்கம் அமைந்துள்ள இடமாகும். திங்களன்று காலை இங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், நாட்கூலித் தொழிலாளர்களும் பெருவாரியாகக் கலந்து கொண்டார்கள். அவர்கள் தலைவர்களிடம், நாளும் விலைவாசி உயர்வு குறித்து முறையிட்டார்கள்.
மத்திய நிலக்கரிச் சுரங்கங்களில், தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் வேலையிலிருக்கும் தொழிலாளர்களின் பணிச்சுமை  அதிகரித்திருப்பதாகவும் கூறினார்கள். முன்பு நான்கு தொழிலாளி செய்த வேலையை இப்போது ஒருவர்  செய்ய வேண்டியிருப்பதாக ஒரு தொழிலாளி கூறினார். தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதிகளில் நிலக்கரிக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் இவற்றால் வெளியாகும் விஷவாயுக்கள் மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்தி வருவதாகத் தொழிலாளர்கள் கூறினார்கள்.
ஹசாரிபாக்கில் நடைபெற்ற கூட்டத்தில் பெரும் திரளாகப் பெண்கள் பங்கேற்றனர். அண்டை கிராமங்களிலிருந்து அவர்கள் அணிதிரண்டு வந்திருந்தனர்.  நாட்டில் பெண்கள் படும் அவலங்களையெல்லாம் சுபாஷினி அலி கூறுகையில் அவர்கள் மிகுந்த கவனத்துடன் கேட்டனர். வறுமைக்கோட்டுக்குக் கீழானவர்களுக்குத் தரப்பட வேண்டிய குடும்ப அட்டைகள் தங்களுக்குத்தரப்படவில்லை என்று அவர்கள் முறையிட்டார்கள்.
கொடேர்மா, ஜும்ரி திலாயா என்னும் பகுதியில் மாபெரும் கூட்டம் நடைபெற்றது.  நாட்கூலித் தொழிலாளர்களும், விவசாயிகளும் கலந்து கொண்டார்கள்.  இங்குள்ள இளைஞர்களுக்கு உரிய வேலை கிடைக்காததாலும், கிடைத்தாலும் கூலி மிகவும் அற்பமாக இருப்பதாலும் பல்லாயிரக் கணக்கான  இளைஞர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து சென்று விட்டார்கள் என்று கூறப்பட்டது. 50 ரூபாய்க்கும் குறைவாக நாட்கூலி தரப்படுவதாகப் பலர் கூறினார்கள். ஆயினும் நகர்ப்புறங்களில் பணியாற்றும் ஏழைத் தொழிலாளர்கள் செங்கொடியின்கீழ் அணிதிரண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளிலும், பல இடங்களில் தலைமறைவாக இருந்தும்  வேலை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.  
ராம்காரிலும் ஹசாரிபாக்கிலும் நடைபெற்ற கூட்டங்களில் பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். ஜும்ரியாதாலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் சிபிஐ(மா-லெ)(லிபிரேசன்) உட்பட இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றார்கள். அவர்கள் பிரகாஷ் காரத், பிமன் பாசு மற்றும் பயணத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு மலர்க்கொத்துக்களை அளித்து கவுரவித்தார்கள்.
(தெபாசிஸ் சக்ரவர்த்தி, கணசக்தி செய்தி ஆசிரியர்)



பிருந்தா காரத் உரை





வரலாற்றுச் சிறப்புமிக்க அமிர்தசரஸ் நகரத்திலிருந்து மாற்றுக் கொள்கைக்கான போர் முழக்கப்பயணத்தின் வடக்குப் பயணக்குழு பிருந்தா காரத் தலைமையில் புறப்பட்டது








வரலாற்றுச் சிறப்புமிக்க அமிர்தசரஸ் நகரத்திலிருந்து
மாற்றுக் கொள்கைக்கான போர் முழக்கப்பயணத்தின்
வடக்குப் பயணக்குழு பிருந்தா காரத் தலைமையில் புறப்பட்டது
அமிர்தசரஸ், மார்ச் 5-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்றுக் கொள்கைக்கான போர் முழக்கப்பயணத்தின் மூன்றாவது பயணக்குழுவான வடக்குப் பயணக்குழு தன் பயணத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க அமிர்தசரஸ் நகரத்திலிருந்து ஞாயிறு அன்று தொடங்கியது.
பஞ்சாப்பில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஷோஹன் சிங் ஜோஷ் அவர்களின் மகனான டேவிந்தர் சிங் ஜோஷ்  வடக்குப் பயணக்குழுவின தலைவரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிருந்தா காரத்திடம் பயணத்தைத் துவக்கும் அடையாளமாக பயணக்குழுவின் செங்கொடியை ஒப்படைத்தார்.  பஞ்சாப்பில் பயணக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான கட்சியின் பஞ்சாப் மாநில செயற்குழு உறுப்பினர் விஜய் மிஷ்ரா உடன் இருந்தார்.
முன்னதாக, பயணக்குழு தன் பயணத்தைத் துவக்குவதற்கு முன்னர்பிருந்தா காரத், ஜாலியன்வாலாபாக் பூங்காவிற்குச் சென்று அங்கு பயணக்குழுவினருக்கு வரவேற்பளித்த நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் அங்குள்ள தியாகிகளின் ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பிருந்தா காரத், ‘‘மக்களின் பிரச்சனைகள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு மட்டுமே சேவை செய்திடும் காங்கிரஸ் - பாஜக ஆகிய கட்சிகளிடமிருந்து முற்றிலும் வித்தியாசமான விதத்தில் சிறந்ததொரு மாற்றுக் கொள்கையை மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்திருக்கிற மாற்றுக் கொள்கையைப் பரிசீலனை செய்யுங்கள் என்று மக்களை அழைப்பதே இப்பயணக்குழுவின் செய்தியாகும்’’ என்று கூறினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடிய பிருந்தா காரத், ஆட்சியாளர்களின் கொள்கைகளின் விளைவாகவே விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது என்று விளக்கினார். ‘‘ஐமுகூ-2 அரசாங்கம் நேற்றிரவு கூட 20ஆவது தடவையாக பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி இருக்கிறது’’ என்று  பிருந்தா காரத் சுட்டிக்காட்டினார்.
‘‘காங்கிரசும், பாஜகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே’’ என்று வர்ணித்த பிருந்தா காரத், ‘‘பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதெல்hலாம், அந்நிய மற்றும் உள்நாட்டு ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்குச் சேவை செய்திடும்  நவீன தாராளமயக் கொள்கைகளையே தூக்கிப் பிடிக்கும்’’ என்றார்.
நாட்டின் நான்குமுனைகளிலிருந்தும் புறப்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போர் முழக்கப் பயணக்குழு மார்ச் 19 அன்று தில்லியில் சங்கமிக்கிறது என்றும் அன்று தில்லி, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றும் பிரம்மாண்டமான பேரணி/பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டு, போர் முழக்கப் பயணத்தை மாபெரும் வெற்றியாக்கிட வேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
நாட்டுப்புற ஏழைத் தொழிலாளர்களும், பெண்களும்  பெரும் திரளாகக் கலந்து கொண்டிருந்த கூட்டத்தில் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஹன்னன் முல்லா, ஹர்யானா மாநில செயலாளர் இந்திரஜித் சிங், பஞ்சாப் மாநில செயலாளர் சரன் சிங் விர்தி முதலானோர் உரையற்றினார்கள்.
ஜம்மு
மார்ச் 3 அன்று ஜம்முவிலிருந்து புறப்பட்ட பயணக்குழு  அமிர்தசரசில் வடக்குப் பயணக்குழுவுடன் இணைந்து கொண்டது.  கட்சியின் ஜம்மு மண்டலக் குழு செயலாளரான ஷியாம் பிரசாத் கேசார் ஜம்மு குழுவிற்குத் தலைமை வகித்து நடத்தி வந்தார். அவரும் கூட்டத்தில் உரையாற்றினார்.
(அமிர்தசரசிலிருந்து கே. வீரய்யா)