-பிரகாஷ் காரத் |
நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய கணக்கு மற்றும் தணிக் கைத்துறைத் தலைவர் (சிஏஜி) அறிக்கை, எப்படியெல்லாம் நாட்டின் நிலக்கரி வளம் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு உதவி டும் வகையில் ஒப்படைக்கப்பட்டிருக் கின்றன என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. சிஏஜியின் அறிக்கையின் படி, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக் கப்பட்ட ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான’ நிலக்கரிப் படுகைகள் அந்நிறுவனங் களுக்கு சுமார் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆதா யத்தை அளித்திருக்கின்றன.
நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு கள் என்பவை பெரும் முதலாளிகளும் கார்ப்பரேட்டுகளும் நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க வழி செய்து தருகின்ற ஐ.மு.கூட்டணி அர சாங்கத்தின் கொள்கையின் ஒரு பகுதி யேயாகும். இயற்கை எரிவாயு, நிலம் மற்றும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஆகியவற்றிலும் அதுதான் நடந்தது. சிஏஜியின் அறிக்கையானது, நிலக் கரி போன்ற நாட்டின் இயற்கை வளங் களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது தொடர்பாக மத்தியில் 1991இலிருந்தே ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங் கங்களின் ஒட்டுமொத்த தலையீடு குறித்தும் ஆராயவில்லை என்பது உண் மைதான். அது 2006-07 இலிருந்து 2010-11ஆம் ஆண்டுக்கு உட்பட்ட காலத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்தும், 2004ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் நிலக்கரித் துறை அமைச்சகத்தால் நிலக்கரிப் படுகை கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்தும் தான் தணிக்கை மேற்கொண்டிருக் கிறது. நிலக்கரியைப் பொறுத்தவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகிய இரு அரசாங்கங்களுமே ஓர் இடை யூறை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாட்டில் இருந்த நிலக்கரிச் சுரங்கங்கள் அனைத்தும் 1972-73ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்டுவிட்டன. 1973இல் நிலக்கரிச் சுரங்கங்கள் (தேசியமயம்) சட்டம் நிறைவேற்றப் பட்டது. காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான அரசாங்கங்கள் எவ் வளவோ முயன்றும் நிலக்கரிச் சுரங்கங் களுக்குள் தனியார் நுழைவதற்கு ஏற்றவகையில் சட்டத்தைத் திருத்தும் முயற்சியில் அவற்றால் வெற்றி பெற முடியவில்லை. 2000இல் தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசாங்கத்தால் நிலக்கரிச் சுரங்கங்களில் தனியார் துறையை அனுமதிப்பதற்கு வகை செய் யக்கூடிய விதத்தில் நிலக்கரி தேசிய மயத் திருத்தச் சட்டமுன்வடிவு அறி முகப்படுத்தப்பட்டது. ஆயினும் அச் சட்டமுன்வடிவு இதுநாள்வரையில் நிறைவேற்றப்படவில்லை. நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் சங்கங்களும் நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற் சங்கங்களும் நிலக்கரிச் சுரங்கங் களைத் தனியாருக்குத் தாரை வார்ப் பதை உறுதியுடன் எதிர்த்து வந்தன. நிலக்கரிச் சுரங்கங்களில் தனியார்மயத் திற்கு எதிராக தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. இந்தச் சங்கடத்திலிருந்து மீள்வதற் காக “குறிப்பிட்டநோக்கத்திற்கான சுரங்கங்கள்” (“captive coal blocks”) ஒதுக்கீடு மார்க்கம் என்ற ஒன்று புதிதாக உரு வாக்கப்பட்டது. 1993இலும் 1996இலும் பிரதான சட்டத்திற்கு இதன் மூலம் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, மின் சார உற்பத்தி மற்றும் சிமெண்ட் உற்பத்தி யில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் “குறிப் பிட்ட நோக்கத்திற்கான” நிலக்கரிச் சுரங்கங்களைப் பெற்றிட அனுமதிக்கப் பட்டன. 1976இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்துடன் இந்தப் புதிய ஷரத்தும் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்பட் டது. இதன்படி இரும்பு மற்றும் உருக்கு உற்பத்தியாளர்கள் “குறிப்பிட்ட நோக் கத்திற்கான” நிலக்கரிச் சுரங்கங்க ளைத் தங்கள் உபயோகத்திற்காக அனு மதித்துக் கொள்ளலாம். “குறிப்பிட்டநோக்கத்திற்கான” சுரங்கங் களின்’ ஒதுக்கீடுகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள், ‘‘ஒதுக்கீடுகள் இறுதிப் பய னாளருக்கு (end user) மட்டுமே - அதாவது, உருக்கு அல்லது மின் உற்பத்தி யாளர்களுக்கு மட்டுமே - அளிக்கப்படும்’’ என்றுதான் ஆரம்பத்தில் கூறியது. ஆனால் இதுவும் 2006இல் நீர்த்துப் போகும்படி செய் யப்பட்டது. இப்போது என்ன நிலைமை என் றால், ஒரு சுரங்க நிறுவனம் தனக்கு நிலக்கரி விநியோகம் செய்ய வேண்டும் என்று இறுதிப் பயனாளருடன் ஒப்பந்தம் செய்துகொண் டிருந்தால் அவை நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்து கொள்ள முடியும். இவ்வாறுதான், அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கண்காணிக்கும் குழு (screening committee) நிலக்கரிப் படுகை களை பலருக்கு ஒதுக்கி இருக்கிறது. இப் போது அவர்களில் பலர் அந்தப் படுகைக ளிலிருந்து நிலக்கரி எடுக்கவில்லை. மாறாக வேறொருவருக்கு அதனை விற்றிருக்கிறார் கள். சில ஒதுக்கீடுகள் தொடர்பாக ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) புலனாய்வு மேற்கொண்டிருக்கிறது. அவர்களின் மீது மோசடி மற்றும் பல்வேறு கிரிமினல் குற்றங் களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகைகளை’ ஒப்படைக்கும் வேலைகள் என்பவை 2000க்குப் பின்னர் தான் சூடுபிடித்தது. இதற்குப் பிரதானமாக முன்வைக்கப்பட்ட வாதம் என்ன தெரியுமா? நாட்டில் அதிகரித்து வரும் மின் உற்பத்தி மற் றும் பல்வேறு காரணங்களுக்காக அதிகரித்து வரும் நிலக்கரித் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் கோல் இந்தியா லிமிடெட் (Coal Indian Limited) நிறுவனம் மற்றும் அதன் துணை உறுப்புக்கள் இருக்கின்றனவாம். போதிய அளவிற்கு நிலக்கரி உற்பத்தி இலக் குகள் நிறைவேற்றப்படாததால் உண்டான முட்டுக்கட்டையானது உருக்கு, சிமென்ட் மற் றும் அவற்றுடன் இணைந்த பல்வேறு தொழில்பிரிவுகளின் வளர்ச்சியைப் பாதித்துக் கொண்டிருந்தது. பொதுத்துறையின் கீழ் இயங்கிவந்த நிலக்கரித் துறை நிறுவனங் களின் செயல்பாடுகள் படிப்படியாக வலு விழக்கப்பட்டு, கீழ்நிலைக்கு இறக்கப்பட்டு இவ்வாறு சாக்குப் போக்காகச் சொல்லப் பட்டது. கோல் இந்தியா லிமிடெட் நிறுவ னத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, நிலக்கரித் துறையில் நிலவி வந்த ஊழல் மற்றும் ஆடம்பர செயல்பாடுகளையும், குறை பாடுகளையும் சரி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான ஐ.மு.கூட்டணி மற்றும் தே.ஜ.கூட்டணி ஆகிய இரு அரசாங்கங்களுமே நிலக்கரித் துறையில் தனியார் நுழைவதற்கு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சூழ்நிலையை உருவாக்கிச் செயல் பட்டன. மத்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் (சிஏஜி) அறிக்கை, தனி யார்மயத்திற்குப் பாதை அமைத்துத்தரும் அரசாங்கத்தின் ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரி’ என்னும் குதர்க்கமான வாதத்தை நன்கு தோலுரித்துக்காட்டியிருக்கிறது. அந்த அறிக்கையின்படி, (2010-11 முடியவுள்ள) பதினோராவது திட்டக் காலத்தில், 86 நிலக்கரிப் படுகைகள் 73 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்திட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 28 படுகைகளில் மட்டுமே (இவற் றில் 15 படுகைகள் மட்டுமே தனியாருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது) 2010-11ஆம் ஆண் டில் 34.64 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகைகளி லிருந்து’ நிலக்கரி உற்பத்தியில் 52.55 விழுக் காடு குறைவு ஏற்பட்டது. 68 படுகைகளில் உற்பத்தி முழுமையாகத் தொடங்கப்படவே இல்லை. அரசின் இந்தப் புதிய ‘குறிப்பிட்ட நோக் கத்திற்கான நிலக்கரிச்சுரங்கங்கள்’ என்னும் கொள்கையை நிலக்கரி அமைச்சகம் கோல் இந்தியா லிமிடெட்டை பலவீனப் படுத்துவதற்கும், பொதுத்துறை நிலக்கரி சுரங்கங்கள் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கும் நன்கு பயன்படுத்திக்கொண்டது. கோல் இந் தியா லிமிடெட் நிறுவனம் தனியாருக்கு ஒதுக் குவதற்குக் கடும் ஆட்சேபணைகள் தெரி வித்து, தனக்கு ஒதுக்குமாறு எவ்வளவோ வற் புறுத்தியும் அமைச்சகம் தன் கீழ் இருந்த நிலக்கரிப் படுகைகளை அதற்கு ஒதுக்க மறுத்துவிட்டது. இவ்வாறு கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் 116 படுகைகளை 49,790 மில்லியன் டன்கள் இருப்புடன் தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரியிருந்ததற்கு ஒப்புதலே அளித்திடவில்லை. சிஏஜியின் அறிக்கை இவ்வாறு அமைச்சகம் நடந்து கொண்டதானது கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தித் திட்டத்தைக் கடு மையாகப் பாதித்துவிட்டது என்று குறிப் பிட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரதமரின் அறிக்கையானது, எவ்விதத்திலும் நியாயம் என்று கூறமுடியாத ஒரு கொள்கை யைப் பாதுகாத்திட மேற்கொள்ளப்பட்ட கேவலமான முயற்சியாகும். பிரதமரின் மேற் பார்வையுடன் நிலக்கரி அமைச்சகத்திற் கென்று இரு இணை அமைச்சர்களின் கீழ் நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய் வதற்கான ஒழுங்கீனமான முறை உந்தித் தள் ளப்பட்டது. ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகைகள்’ தாங்கள் உற்பத்தி செய்த நிலக்கரியை கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு விதி இருந்தது. 2010இன் பிற் பகுதியில் அதனை பிரதமர் அலுவலகம் மாற்றிவிட்டது. உற்பத்தி செய்யப்பட்ட உபரி நிலக்கரியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய நிறுவனங்களைப் பிரதமர் அலு வலகம் தாங்கிப்பிடித்திருக்கிறது. (மற்றொரு சிஏஜியின் அறிக்கை சசன் பவர் பிராஜக்ட் நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட படுகை களில் உற்பத்தியாகி மிகையாக இருந்த நிலக் கரியை உபயோகப்படுத்திக்கொள்ள ரிலை யன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தை அனு மதித்திருப்பதற்காக அரசாங்கத்தைக் குற் றஞ்சாட்டியிருக்கிறது.) ஐ.மு.கூட்டணி அரசாங்கமும், காங்கிரஸ் கட்சித் தலைமையும் உயர்மட்ட அளவில் நடைபெற் றுள்ள ஊழல் புகார்களிலிருந்து தங்கள் பொறுப்புக்களைத் தட்டிக் கழித்து தப்பித் துக்கொள்ள முடியாது. பிரதமர் ராஜினாமா செய்திட வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தை நடக்கவிடா மல் சீர்குலைத்து வரும் பாஜகவின் கபட நாடகம் மிகவும் அதிசயமான ஒன்று. ‘குறிப் பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகை’ என்னும் மார்க்கத்தைத் தோற்றுவித்ததே பாஜக தான். நாடாளுமன்றத்தில் நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியார்மயமாக்குவதற்கான சட்டமுன்வடிவைக் கொண்டு வந்ததும் அதுதான். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம்தான் நிலக்கரி விலை மீதிருந்த அரசின் கட்டுப்பாட்டை நீக்கியது. அதனைத் தொடர்ந்து கோல் இந்தியா லிமிடெட் நிறு வனத்தைப் பலவீனப்படுத்தப் பல்வேறு நட வடிக்கைகளையும் அது எடுத்தது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசாங்கங்கள் மிகவும் மோசடியான நிறுவனங்களுக்கு நிலக்கரிப் படுகைகளை ஒப்படைப்பதில் இதே பாதையைத்தான் பின்பற்றிக் கொண்டிருக் கின்றன. இவ்வாறு நாட்டின் இயற்கை வளங் களைக் கொள்ளையடித்திட பெரும் வர்த்தக நிறுவனங்களை அனுமதிப்பதில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் போட்டிபோட்டுக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. தனியார்மயத்திற்கு ஆதரவாகக் கொண்டு வரப்பட்ட ‘‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரி படுகை’’ என்கிற மார்க்கமானது, அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட விதி முறைகளை அமைச்சகமே மீறி நடந்து கொள்ளுதல், ‘‘குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலக்கரி படுகைகளை’’ ஒருவர் பெற்றபின் விரைந்து லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக, சில நிறுவனங் களுக்குக் கொள்ளை லாபத்திற்கு மாற்றுதல் ஆகியவற்றிற்கு இட்டுச் சென்றன என்பது தெளிவாகி இருக்கிறது. சிஏஜி அறிக்கை மீதான கூக்குரல் நிலக் கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்வதில் போட்டியால் நிர்ணயிக்கப்படுகிற ஒரு நேர்மையான முறையின் தேவைக்கு அனை வரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தனி யாருக்கு நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்யும்போது பாரபட்சமாக நடந்துகொள் வதையும், ஊழலுக்கு இரையாவதையும் ஒழித்திட வேண்டுமானால் இப்போது இருக் கும் முறையைவிட ஏலம் விடும் முறை சிறந்த முறையாகும். (ஏலம் விடும் முறையையும் கூட தனியார் தங்கள் வசப்படுத்திக்கொள்ள முடியும். இதுகுறித்து இக்கட்டுரையின் பிற்பகுதியில் ஆராய்வோம்.) ஆயினும், மிகவும் பிரதானமான பிரச்சனை என்னவெனில், நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதா, கூடாதா என்பதாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத் தவரை, நிலக்கரித் துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை அது உறுதியுடன் எதிர்க் கிறது. அதனால்தான், நிலக்கரித்துறைக்குள் தனியார் நிறுவனங்களைப் புக வழிவகுத்துத் தந்துள்ள ‘‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக் கரிப் படுகைகள் மார்க்கத்தைப்’’ பயன்படுத் துவதையும் அது எதிர்த்துக் கொண்டிருக் கிறது. நிலக்கரி என்பது பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் ஓர் எரிபொருள், புதுப் பிக்க முடியாத ஓர் இயற்கை வளமாகும். கோடிக்கணக்கான உள்நாட்டு நுகர்வோரும், ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் மின்சாரத்திற்கும் எரிசக்திக்கும் தங்களின் பிரதான மூலக் கூறாக நிலக்கரியையே சார்ந்திருக்கின்றன. எனவே, மிகவும் எச்சரிக்கையுடன் திட்ட மிட்டு நாட்டின் வளர்ச்சியையும், சமத்துவத் தையும் மேம்படுத்தக்கூடிய அளவில் நிலக் கரி பயன்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. நிலக்கரிச் சுரங்கங்களை அரசாங்கம் தன் சொந்த இருப்பிலேயே வைத்துக் கொள்ள வேண்டுமேயொழிய, தனியார் நிறுவனங்ள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகவோ அல்லது தாங்களே அதிக வருவாயைப் பெறக்கூடிய விதத்திலோ இவற்றை மாற்றிடக் கருதக்கூடாது. அதனால்தான், நிலக்கரி எடுக்கும் பணி பொதுத்துறையால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்கிறோம். தனியார்துறையில் அமைந்துள்ள மின்சாரம் மற்றும் உருக்குத் தொழிற்சாலைகளுக்கு நிலக்கரித் தேவை எனில், அதற்கான ஒதுக்கீடு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் மூலமாகவே செய்யப்பட வேண்டும். கோல் இந்தியா லிமிடெட்டும் அதன் துணை அமைப் புகளும் நிலக்கரித் தோண்டி எடுக்கும் பணி களைச் செய்து அவைதான் படுகைகளை அவற்றிற்கு வழங்கிட வேண்டும். மாநிலங் களில், அந்தந்த மாநில அரசுகளால் நடத்தப் படும் சுரங்க நிறுவனங்கள் மூலமாக இப் பணியினைச் செய்து கொள்ள முடியும். தனி யார் துறை, உருக்கு உற்பத்தி போன்றவற்றிற் கான மின் உற்பத்தித் தேவைகளை இவ்வாறு நிறைவேற்றிக்கொள்ள முடியும். உலகில் நிலக்கரி வளம் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை வகிக்கிறது. மின் உற்பத்திக் கொள்ளளவில் 55 விழுக்காடு அனல் மின் திட்டங்கள் மூலம் தான் மேற்கொள்ளப்படுகின்றன. பொருளா தாரத்தில் நிலக்கரியின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்வேறு காரணங்களால், நிலக்கரி உற்பத்தியையும், மின் உற்பத்தியை யும் அதிகரிப்பதற்கான இலக்குகள் எட்டப் படமுடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், நிலக்கரித் தொழிலை தனியார்மயமாக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, பொதுத் துறை நிலக்கரி நிறுவனங்களை வலுப்படுத் திட அரசாங்கம் முன்வர வேண்டும், அவற் றின் தொழில்நுட்பங்களை மேம்படுத்திட வேண்டும், போதுமான அளவிற்கு நிலக்கரிச் சுரங்கங்கள் அமைத்திட நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலக்கரியைப் பெறுவதற்கு ஏலம் விடும் முறை மிகவும் ஆழமான முறையில் சிரமங் களை உருவாக்கக்கூடும். ஏலம் விடும் முறை, தனியார் பெருமுதலாளிகளுக்குச் சாத கமாக அமைந்திடும். அது தனியார் ஏகபோகத் திற்கும், அவர்களுக்குள் ஓர் ரகசிய உடன் பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இட்டுச் செல்லும். அவர்களுடன் பொதுத்துறை நிறு வனங்கள் - அது மத்திய பொதுத்துறை நிறு வனமாக இருந்தாலும் சரி, அல்லது மாநிலப் பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் சரி, - போட்டிபோடவே முடியாது. மேலும், இது வரை நிலக்கரிப் படுகை ஒதுக்கீட்டில் நமக் குக் கிடைத்த அனுபவம் என்ன? ஒரு குறிப் பிட்ட நோக்கத்திற்காக அவர்கள் நிலக்கரிப் படுகைகளைப் பெற்றாலும், அந்த நோக் கத்தை அவர்கள் நிறைவேற்றினார்களா என் றால், இல்லை என்பதுதான். அதனை உத்தர வாதப்படுத்திடவும் முடியாது. ஏலம் விடு வதன் மூலம் ஏற்படும் மற்றொரு அம்சம், மின் உற்பத்திச் செலவினத்தை இது அதிகப் படுத்திடும். விளைவு, மின்துறையில் மின்கட் டணத்தை உயர்த்த இது நிர்ப்பந்தித்திடும். நிலக்கரிச் சுரங்கங்களைக் கொண்டுள்ள மாநிலங்கள் ஒரு வலுவான வாதத்தை முன் வைத்துள்ளன. தங்கள் மாநிலங்களில் உள்ள நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்வ தில், தங்கள் அனுமதியைப் பெற்று ஒதுக்கீடு செய்தால் மட்டுமே, தாங்கள் தங்கள் மாநி லத்தில் உள்ள தொழில் வளர்ச்சி மற்றும் எரி சக்தித் தேவைகளைத் தங்களால் நிறை வேற்றிக்கொள்ள முடியும் என்று அவை கூறு கின்றன. ‘‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகைகள்” தொடர்பாக கடந்த பதினைந்து ஆண்டு காலத்திற்கும் மேலாக மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் எடுத்த நிலை கீழ்க்கண்ட மூலக்கூறுகளை அடிப்படை யாகக் கொண்டிருந்தது. முதலாவதாக, ஒதுக்கீட்டில் மாநில அரசாங்கமும் முற்றிலும் ஈடுபட வேண்டும். இரண்டாவதாக, மாநில அரசின் கருத்தைக் கேட்காமல், எந்தவொரு தனியார் நிறுவனத் திற்கும் நிலக்கரிப் படுகைகள் நேரடியாக ஒதுக்கீடு செய்யக்கூடாது. மூன்றாவதாக, மாநில அரசின் கவனத்திற்கு வராமல் எங் கெல்லாம் நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றதோ அங்கெல்லாம், சம்பந் தப்பட்ட உருக்கு அல்லது மின் நிறுவனத் துடன் மாநில நிலக்கரி கார்ப்பரேஷனை ஒரு கூட்டு ஸ்தாபனமாக (joint venture) ஏற்படுத் திக் கொண்டு நிலக்கரி எடுக்கப்பட வேண் டும், பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். நேரடியான ஏலம் விடும் முறை குறித்து இடது முன்னணி அரசாங்கத்திற்கு இருந்த ஐயங்கள் தொடர்பாக வலதுசாரி கார்ப்பரேட் ஊடகங்களில் சில, தங்கள் இஷ்டத்திற்கு திரித்து செய்திகளை வெளியிட்டன. ஊழ லுக்கு எதிராக இயக்கம் நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால் வகையறாக் களும் அவ்வாறே உண்மையைத் திரித்துக் கூறினர். தெரிந்துதான் செய்கிறார்களா அல் லது தெரியாமல்தான் செய்கிறார்களா என்று தெரியவில்லை, இவர்கள் நோக்கம் எல்லாம் நாட்டில் உள்ள நிலக்கரி சொத்துக்கள் ஏலம் விடும் முறை மூலம் முழுமையாகத் தனியாரி டம் சென்றடைய வேண்டும் என்பதேயாகும். மன்மோகன்சிங் அரசை முழுமையாக சூழ்ந்துகொண்டுள்ள நிலக்கரிப் படுகை ஊழல், ஆட்சியாளர்களின் கொள்கைகள் மூலம் ‘‘நாட்டின் வளங்களைக் கொள்ளை யடிக்கும்’’ கயவர்களை அடையாளம் காட்டு வதற்கு மட்டுமல்ல, இயற்கை மற்றும் கனிம வளங்களைத் தனியார்மயமாக்க வேண்டும் என்கிற அரசின் கொள்கையை அடியோடு மாற்றி அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைப்பதற்கும் ஒரு வாய்ப்பாகும். நிலக்கரிப் படுகைக் கொள்கையில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதற்கு ஓர் உயர்மட்ட அளவிலான புலனாய்வு அவசியம். இதற்குப் பொறுப்பான வர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண் டும். முறைகேடாக வழங்கப்பட்டுள்ள அனைத்து ஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட வேண்டும். கொள்ளை லாபம் ஈட்டப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளிலும், அரசுக்கு ஏற் பட்டுள்ள இழப்புகளை மீட்டிட உரிய நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய அதே சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நாட்டின் வளங்கள் கொள்ளைபோவதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணுகிற நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நிலக்கரி ஒதுக்கீடுகளும் நிலக்கரிச் சுரங்கப்பணிகளும் எதிர்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக மட் டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோர வேண்டும். (தமிழில்: ச.வீரமணி) |
Sunday, September 2, 2012
நிலக்கரி சுரங்க ஊழல் தனியார்மயத்திற்கு தரப்பட்ட விலை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment