Sunday, September 30, 2012

‘‘சீர்திருத்தங்கள்’’ மீதான விவாதம்



இந்தியா, 1991இல் நவீன தாராளமய ‘‘சீர்திருத்தங்களை’’த் தழுவிக் கொண்ட சமயத்தில், பொருள்கள் (goods), சேவைகள் மற்றும் மூலதனம் நம் நாட்டிற்குள் தாராளமாகப் பாய்வதற்கு வழிகாணப்பட்டிருப்பதானது, நாட்டில் உள்ள பெரும்பான்மையான உழைப் பாளி மக்களின் வாழ்வாதாரங்கள் மீது, சர்வதேச ஊகவர்த்தகர்களின் நடவடிக் கைகளுக்கு இணங்க, கடும் பாதிப்பு களை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் வாதிட்டனர். ஊக வர்த்தகர்கள் நம் பொருளாதாரத்தின் மீது ‘‘நம்பிக்கை’’ இழந்து, அவர்கள் நம் நாட்டில் போட் டுள்ள முதலீடுகளைத் திரும்ப எடுத்துக் கொண்டுவிட்டார்களானால், பின் இவர்களின் ‘‘நம்பிக்கை’’யைப் புதுப்பித் திட தவிர்க்கவியலாத வகையில் அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக் கும். இவ்வாறு மேற்கொள்ளும் நட வடிக்கைகள் நிச்சயமாக மக்களுக்கு ஊறு விளைவித்திடும். ஏனெனில் பணக்காரர்கள், கார்ப்பரேட்டுகள், நிதி முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு எதி ராக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத் தால் நிச்சயமாக அது பொருளாதாரத் தில் எதிர்மறை விளைவையே அளித் திடும். இவ்வாறு, மிகச் சிறிய அளவி லான சர்வதேச ஊகவர்த்தகர்கள் நம் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ் வைத் தீர்மானித்திட அனுமதிப்பது என் பதன் பொருள், நாம் ஜனநாயகத்தை, சமத்துவத்தை, இறையாண்மையையே மறுதலிக்கிறோம் என்பதாகும் என்று அவர்கள் வாதிட்டனர்.

அப்போது நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கும், நவீன தாராளமயக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கியவர் களும் விமர்சகர்களின் இவ்வாதத்தை எள்ளிநகையாடினர். பத்தாம்பசலிகள் என்று பரிகசித்தார்கள். பொருளாதா ரத்தை இவ்வாறு தாராளமாகத் திறந்து விடுவது நம் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும், ‘‘திறமைமிகுந்த தாக’’ மாற்றும், சர்வதேச அளவில் போட்டிபோட்டு முன்னேறச் செய்து, ஒரு வெற்றிகரமான ஏற்றுமதியாளராக நம் நாட்டை உருவாக்கிடும், சர்வதேச மூல தனத்திற்கு ஒரு சாதகமான இடமாக நம் நாடு மாறும் என்றெல்லாம் கதை அளந் தார்கள். பணம் சமநிலை நெருக்கடி Balance of Payments crisis) 1991இல் நாட் டைத் தாக்கியபோது, அதற்குக் காரணம் நாம் தாராளமய சீர்திருத்தங்களைக் கடைப்பிடிக்காததே என்றும், மாறாகப் பிற்போக்குக் கொள்கைகளைப் பின்பற்றி யதுதான் என்றும் கூறினார்கள். ‘‘சீர் திருத்தங்கள்’’ மூலம் இத்தகைய பிற் போக்குத்தனங்களிலிருந்து நாம் மீண்டு விட்டால், இத்தகைய பணம் சமநிலை நெருக்கடிகள் என்பது வராது என்றும், அவை கடந்தகாலங்களில் நடைபெற்ற விஷயங்களாக மாறிப்போகும் என்றும் தம்பட்டம் அடித்தார்கள்.

ஆனால், செப்டம்பர் 21 அன்று மன் மோகன் சிங் நாட்டிற்கு அளித்த தொலைக்காட்சி உரையில், விமர்சகர் கள் முன்வைத்த வாதங்கள் மிகச்சரி யானவை என்பதையும், நவீன தாராள மயத்திற்கு வக்காலத்து வாங்கியவர்கள் கூறிய அனைத்தும் தவறாகிப் போன தையும் தெள்ளத்தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அவ்வாறு அவர் ஒப்புக்கொண்டுள்ள அதே சமயத்தில், நாட்டின் ‘‘ஏற்றுமதி-வெற்றி’’ குறித்தும், இந்தியா ‘‘பொருளா தார வல்லமைமிக்க நாடாக’’ உருவாகியிருப்பதாக அளந்து கொண்டிருக்கும் அதே சம யத்தில், சர்வதேச ஊக வர்த்தகர்கள் திடீ ரென நம்பிக்கையிழந்துள்ள நிலையில், அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, அரசாங்கம் மக்களை மேலும் படுகுழி யில் தள்ளக்கூடிய விதத்தில், மிகமோச மான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சுருக்கமாகச் சொல்வதென்றால், பொரு ளாதாரத்தை அந்நிய நிதிமூலதனத்திற்கு சுதந்திரமாகத் திறந்துவிட்டதுதான், நிதி நெருக்கடிகளுக்கும் காரணமாகும். இத்தகைய தாராளமயப் பொருளாதாரத் தில் ‘‘ஊகவர்த்தகர்களின் நம்பிக்கை யைப்’’ பெற வேண்டியது மிகவும் முக் கியமாகையால், மக்களின் வாழ்நிலையை அதற்கேற்றவகையில் சரி செய்ய வேண் டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.

மன்மோகன் சிங் அரசாங்கம் அறி வித்திருக்கிற பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளும், பொதுத்துறை நிறு வனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல், அதன் மூலம் மக்களின் சொத்தை, உள்நாடு மற்றும் வெளிநாட்டு மூலதனங்களிடம் ஒப்படைத்தல் ஆகிய நடவடிக்கைகள் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்தி, ரூபாய் மதிப்பு குறைந்து வருவதையும் சரி செய்திடும் என்று வாதத்திற்காக ஒப்புக்கொள்வோம். இதன் காரணமாக அயல்நாடுகளி லிருந்து மேலும் அதிக அளவில் நிதி கொட்டும் என்றும், அது ஒரு புதிய ‘‘நீர்க் குமிழி’’யை உருவாக்கி, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச் சியை புதுப்பித்திடும் என்றும் வைத்துக் கொள்வோம்.

சிறிது காலம் கழித்து, உலக அளவில் அல்லது நம் நாட்டின் வளர்ச்சிப்போக்கு கள் ஊகவர்த்தகர்களின் ‘‘நம்பிக் கையை’’ நிலைகுலையச் செய்தால், (அவ்வாறுதான் அவ்வப்போது நடைபெற் றுக் கொண்டிருக்கிறது) பின்னர் இவர் கள் கூறிடும் நீர்க்குமிழி அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் மீண் டும் ஒருமுறை நிலைகுலைந்து வீழ்ச்சி யடைந்தால், இவர்களின் ‘‘நம்பிக் கை’’யை மீண்டும் புதுப்பிப்பதற்காக மக் களின் மேல், மேலும் கொடூரமான முறை யில் தாக்குதல்களை அறிவிப்பார்கள். இவ்வாறு ஆட்சியாளர்கள் ‘‘ஊகவர்த்த கர்களின்’’ நம்பிக்கையைப் பெறுவதற் காக மக்களை மேலும் மேலும் கசக்கிப் பிழியும் நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

நவீன தாராளமயக் கொள்கைக ளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இவ் வாறு நடவடிக்கைகள் எடுக்காது வேறு ‘‘மாற்று வழி’’ இல்லை என்றும், தனியார் மய,தாராளமய, உலகமயக் கொள்கைகள் தொடர வேண்டும் என்றும் கூறுவார்கள். இதுதான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக் கும் நல்லது என்றும் உரைப்பார்கள். ஆனால், இவை அனைத்தும் உண்மை யல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு அளித்துள்ள உரிமைக ளையும் வாழ்வாதாரங்களையும் ஆட்சி யாளர்களின் உலகமய நிதிக் கொள்கை கள் பறித்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய கொள்கைகளைக் கடைப் பிடிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என்று ஆட்சியாளர்கள் நம்புவார்களா னால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அவர்கள் ஆட்சியில் நீடிக்க அவர்களுக்கு எவ்விதத் தார்மீக உரிமை யும் கிடையாது.

தமிழில்: ச.வீரமணி

No comments: