Monday, February 13, 2012

ஆட்சியாளரின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவோம்!



த்தரப்பிரதேசத்தில் அம்மாநிலத்தின் சட்டமன்றத்திற்காக நடைபெற்று வரும் தேர் தலில் மக்கள், ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கடும் வெறுப்பை உமிழ்வது இயற்கையே யாகும். வரவிருக்கும் பதினைந்து நாட்களில் இது படிப்படியாக அதிகரிக்கவே செய்திடும். இதற்கான காரணங்கள் எண்ணிலடங்கா தவை. மாநிலத்தில் ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி(பிஎஸ்பி)க்கு எதிராக எழுந்துள்ள மக் களின் கோபம், நம்பிக்கையற்று விரக்தி நிலையில் உள்ள சமாஜ்வாதி கட்சி (எஸ்பி), ஆட்சியிலிருந்தபோது மக்களின் மனதை எப்படியாவது வென்று விடலாம் என்ற குறு கிய எண்ணத்தின் அடிப்படையில் பாபர் மசூ தியை இடித்து அதன்பின்னர் அலங்கோலமா கியுள்ள பாஜக, இளம் தலைமுறையினரை இறக்கிவிட்டு விளம்பரம் தேடும் காங்கிரஸ் ஆகிய நாலு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட் டுள்ள நான்கு முனைப் போட்டியில் மாநிலம் முழுவதும் அடங்கியிருந்த புழுதி மிக அதிகமான அளவிலேயே கிளப்பி விடப்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் முடிவு கள் தேசிய அரசியலிலும் எப்போதும் தாக் கத்தை ஏற்படுத்தும் என்பது மிக முக்கிய மாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நாட்டின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமாக இப்போதும் தொடர்ந்து இம்மாநி லம் இருந்து வருகிறது. மக்களவைக்கு அம் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப் பினர்களின் எண்ணிக்கை, மத்திய அரசாங் கம் மற்றும் அதன் தலைமையைத் தீர்மானிப் பதில் முக்கிய பங்களிப்பினைச் செய்திடும். இந்தியாவில் அதிகமானஅளவில் பிரதமர் களை அளித்திட்ட மாநிலமாகவும் அது திகழ்கிறது.

மேலும், இன்றைய சூழ்நிலையில், ஒரு வேளை ஒரு தொங்கு சட்டமன்றம் அமையும் பட்சத்தில், அதனைத் தொடர்ந்து பெரும்பான் மையைப் பெறுவதற்காக இக் கட்சிகளுக்குள் நடைபெறும் தில்லுமுல்லுகள், மத்தியில் உள்ள கூட்டணியிலும் குறிப்பிடத்தக்க அள விற்கு செல்வாக்கினை ஏற்படுத்திடும். எனவே இங்கு நடைபெறும் தேர்தல் பிரச் சாரத்தில் ஒருவிதமான பதற்றம் நிலவுவதில் ஆச்சரியப்படவோ, அதிர்ச்சியடையவோ வேண்டியதில்லை.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர், இதனுடன் மேலும் நான்கு மாநிலங்க ளான பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற் றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளுக் காகவும் தற்போது காத்திருக்க வேண்டிய நிலையிலிருக்கிறது. நாட்டுடன் சேர்ந்து நாமும் காத்துக்கொண்டிருக்கும் அதே சமயத் தில், சமீபகாலங்களில் நமக்கு நினைவு தெரிந்தவரை, எண்ணிலடங்கா ஊழல்கள் மற்றும் பிரச்சனைகளிலும் சிக்கித் தவித்துக் கொண்டுள்ள மன்மோகன் சிங் தலைமையி லான ஐமுகூ-2 அரசாங்கத்தைப் போல் எந்தவொரு அரசாங்கமும் தான் செல்லும் திசை தெரியாது தத்தளித்துக் கொண்டிருப் பதைப் பார்த்ததில்லை.

உச்சநீதிமன்றம், 2ஜி உரிமங்களை ரத்து செய்திருக்கிறது. அதன் மூலம், மத்திய டெலிகாம் அமைச்சர், ‘‘அரசின் கருவூலத் திற்கு இழப்பு என்பது பூஜ்யம்தான்’’ என்றும் எனவே, ‘‘இத்துறையில் ஊழலே நடைபெற வில்லை’’, என்றும் ‘‘முறையற்று எதுவும் நடந்துவிடவில்லை’’ என்றும் கூறியவை அனைத்தும் மறுதலிக்கப்பட்டுவிட்டன. இவையன்றி, ராணுவ உயர் அதிகாரியின் வயது தொடர்பான பிரச்சனை, ஆன்ட்ரிக்ஸ் ஊழல் தொடர்பாக அரசுத்தரப்பில் கூறப்படு பவைகளை ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானிகள் மறுத்திருப்பது, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆளும்கட்சி அரசியல்வாதிகள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்காமல், தங்கள் மீது மட்டும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப் படையில் சிபிஐ நடவடிக்கை எடுத்திருப் பதற்கு எதிராக மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் கிளர்ந்தெழுந்திருப்பது - என்று ஐமுகூ-2 ஆட்சிக்கு எதிராக புதிது புதிதாக எண்ணற்ற பக்கங்களிலிருந்தும் பிரச்சனைகள் எழுந் துள்ளன.

விலைவாசி உயர்வு, தொடர்ந்து மக்கள் மீது சுமைகளை ஏற்றி வருகிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்கின்றது. நம் நாட்டில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி உள்ள நிலை ‘‘தேசிய அவமானம்’’ என்று பிர தமரே ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் நம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தை வளர்த் தெடுக்கக்கூடிய விதத்தில் அறிவியல் ஆராய்ச்சித்துறை செயல்பாடுகள் இல்லை என்றும் புலம்பியிருக்கிறார். ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே நிலவும் பிரச்சனைகள் காரணமாக சாமானிய மக்க ளுக்காக ‘முதலைக் கண்ணீர்’ வடிப்பதும், திரிணாமுல் காங்கிரஸ் சில தந்திரங்களில் ஈடுபடுவதும் தொடர்கின்றது.

ஆட்சியாளர்கள் தங்கள் முன் உள்ள இப் பிரச்சனைகளை மூடிமறைக்க முயல்வதி லிருந்து, சில மாநிலங்களில் தேர்தல் முடிவு கள் தங்களுக்குச் சாதகமாக அமையலாம் என்று ஆட்சியாளர்கள் கருதுவதுபோல் தோன்றுகிறது. உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை எதிர்க்கட்சியினரிட மிருந்து பறித்திட முடியும் என்றும், கோவா மற் றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேவை யான அளவிற்கு எண்ணிக்கையைப் பெற் றிட முடியும் என்றும், உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சியை அமைக்கும் கட்சியைத் தீர்மானிக் கும் கட்சியாக (‘மiபே அயமநச’) உருவாகிட முடி யும் என்றும் அது நம்புகிறது. பிரதான எதிர்க் கட்சியான பாஜகவிற்குள் நடைபெறும் குடுமி பிடிச் சண்டைகள், ஐமுகூட்டணியை இவ் வாறு ‘குழம்பிய குட்டையில் மீன் பிடித்துவிட லாம்’ என்று கருத இடமளித்திருக்கின்றன.

இந்தப் பின்னணியில், ஐமுகூ-2 அர சாங்கம் சமர்ப்பிக்கவிருக்கும் பட்ஜெட்டில் மக்கள் மீது மேலும் மிகவும் கொடூரமான முறையில் தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையில் தாக்குதல்களைத் தொடுக் கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. தற்போது அரசுக்கு இருக்கின்ற நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட இந்த வகையில் அது நிகழ்ச்சிநிர லைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

ஐமுகூ அரசாங்கம், திசை தெரியாது தத் தளித்துக் கொண்டிருக்கிறது என்று நாம் சொல்லும் அதேசமயத்தில், ஒரே ஒரு விஷ யத்தில் மட்டும் இது மிகவும் தெளிவாக இருக் கிறது. அது என்னவெனில், நாடும், நாட்டு மக் களும் எக்கேடு கெட்டாலும், நவீன தாராள மயப் பொருளாதார சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதை மட்டும் விட்டுவிடக் கூடாது என்பதில் மட்டும் அது குறியாக இருக்கிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக, இடதுசாரிக் கட்சிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சட்டங் கள் மற்றும் மோசமான நிதிச் சீர்திருத்தங்கள் அனைத்தையும் இந்தப் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது கொண்டுவந்து நிறைவேற் றிட ஐமுகூ-2 அரசாங்கம் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. முந் தைய ஐமுகூ-1 ஆட்சிக்காலத்தின்போது அவ்வாறு இடதுசாரிக் கட்சிகள், அரசு கொண்டுவந்த அத்தகைய நிதி சீர்திருத்தங் களைத் தடுத்து நிறுத்திய காரணத்தால்தான் உலக முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் கடும் பாதிப்பு நம் நாட்டிற்குள் ஏற்படாதவாறு தடுத்து நிறுத்த முடிந்தது என்கிற நம் சொந்த அனுபவத்தி லிருந்துகூட அது படிப்பினைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறது.

உலக வங்கியானது தற்போதுள்ள பொரு ளாதார மந்த சூழ்நிலையில் பணக்கார நாடு கள் எதுவும் பணத்தைக் கொண்டுவந்து இந் தியாவிற்குள் கொட்டுவதற்கு உரிய சூழல் இல்லை என்று உலக வங்கி எச்சரித்திருக் கிறது. இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் நிதிச் சீர்திருத்தக் கொள்கைகளை மேலும் தாராளமாக்குவதன் மூலம் அந்நிய நிதி வந்து நம் நாட்டிற்குள் கொட்டும் என்கிற ஆட்சி யாளர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும் என்றே தெரிகிறது.

மூலதனத்தை மிகவும் தாராளமாக உப யோகப்படுத்துவதாலோ, மிகவும் குறைந்த ஆடம்பரமற்ற முறையில் செலவழிப்பதன் மூலம் மட்டுமோ பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுவிட முடியாது. இதன் மூலம் சர்வதேச நிதி மூலதனம் மற்றும் இந்தியப் பெரும் நிறு வனங்கள் லாபம் ஈட்ட வேண்டுமானால் இது உதவக்கூடும். ஆயினும், மக்களின் வாங்கும் சக்தி உயராமல், நிலையான பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.

பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகள் அளிப்பதற்குப் பதிலாக (கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகைகள் அளிக்கப் பட்டிருக் கின்றன) அத்தொகைகளை அவர்களிட மிருந்து வசூலித்து, நமக்கு அடிப்படைத் தேவைகளாக இருக்கக்கூடிய சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகளை உரு வாக்கக்கூடிய வகையில், பொது முதலீட்டில் ஈடுபடுத்தி, மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்புக்களை அதிகரித்திருக்க வேண்டும் என்று நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படு வதன் மூலமாகத்தான் ஓர் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும்.

உலகப் பொருளாதார நெருக்கடியின் கார ணமாக, வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடை பெற்று வரும் கிளர்ச்சிகள் மூலம் உலகம் முழுவதும் போராட்டங்கள் வளர்ந்து வந்த போதிலும், எதார்த்த உண்மைகளைப் பார்க் காமல் முதலாளித்துவம் கண்ணை மூடிக் கொள்ளும் போக்கையே கொண்டிருக்கிறது.

‘‘முதலாளித்துவப் பொருள் உற்பத்தி, பரி வர்த்தனை உறவுகளையும் முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளையும் கொண்ட தாகிய நவீன முதலாளித்துவ சமுதாயம், மாயவித்தை புரிந்து தோற்றுவித்தாற்போல் இவ்வளவு பிரம்மாண்டப் பொருள் உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங் களையும் தோற்றுவித்திருக்கும் இச்சமு தாயம், பாதாள உலகிலிருந்து தனது மந்திரத் தின் வலிமையால் தருவித்த சக்திகளை அடக்கியாள முடியாமற்போன மந்திரவாதி யின் நிலையில் இருக்கக் காண்கிறோம்,’’ என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார். இத்தகைய உலக முதலாளித்துவ நெருக்கடி அதன் உடல் முழுவதும் வியாபித்துள்ளது. இதற்கு எந்தத் தனிப்பட்ட நபரின் ஆசையோ பேரா சையோ காரணமல்ல. எனவே, சோசலிசம் ஒன்றுதான் மனிதகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்கத்தை எய்திட ஒரே விடையாகும்.

இதற்கான நீண்ட நெடிய போராட்டம் இந் தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய அதே சமயத்தில், ஆட்சியாளர்களின் நவீன தாராளமயக் கொள்கைத் திசைவழியை மாற்றக்கூடிய விதத்திலும், பெருமளவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கக்கூடிய வகை யில், நமக்குத் தேவையான கட்டமைப்பு வசதி களை உருவாக்கக்கூடிய முறையில் பொது முதலீட்டை அதிகப்படுத்தக்கூடிய விதத் திலும் வலுவான மக்கள் போராட்டங்களை அதிகரிப்பதும் அவசியமாகும். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் நமக்குக் கொடுக்கத் தீர்மானித்துள்ள திசைவழி இதுவேயாகும்.

தமிழில்: ச.வீரமணி

No comments: