Thursday, March 8, 2012

சட்டமன்றத் தேர்தல்கள்: முடிவுகளும் விளைவுகளும்


சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து எண்ணற்ற வகையில் வியாக்கி யானங்கள் செய்யப்பட்டு வந்த போதி லும், அனைவரின் ஆய்வுகளிலும் ஒன்று மட்டும் பொதுவான அம்சமாக முன் வந் திருப்பதைப் பார்க்க முடியும். அதாவது, எளிய மக்கள் தலையில் தொடர்ந்து பொருளாதாரச் சுமைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக, மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக, குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவருக் கும் எதிராக அதிருப்தி அதிகரித்திருப் பது தெரிகிறது.

பஞ்சாப்பில் ஆட்சி புரிந்து வரும் சிரோன்மணி அகாலிதளம் - பாஜக ஆட் சிக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து வந்த கோபத்தைக் காட்டிலும், மத்திய ஆட்சியாளர்கள் மீது அதிகமாக கோபம் இருந்ததால்தான், மக்கள் மீண்டும் சிரோன்மணி அகாலிதளம் - பாஜக ஆட் சியையே தேர்வு செய்திருக்கிறார்கள். இதேபோன்றுதான், உத்தரகாண்ட் நிலை மையும். அங்கே ஒரேயொரு இடத்தை பாஜகவை விட அதிகமாகப் பெற்றிருப் பதன் மூலம் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரசைப் பொறுத்தவரை அனைத்து மாநிலங்களின் நிலைமை களுக்கும் ஒரேயொரு விதிவிலக்கு மணிப்பூர்தான். ஆயினும், இது மற்ற மாநி லங்களில் உள்ள பொதுவான தன்மையை மாற்றி அமைத்திடவில்லை. இதனை அம்மாநில மக்களின் ஸ்தல நிலைமை களுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்குக் கிடைத்துள்ள மகத்தான வெற்றி வாக்காளப் பெருமக்களின் அரசியல் முதிர்ச்சிக்கு சாட்சியமளிக் கிறது. அம்மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சிக்கு எதிராக மிகவும் ஆழமான விதத்தில் வெறுப்பு இருந்து வந் ததை இது மிகவும் தெளிவுபடுத்தி யுள்ளது. சென்ற தேர்தல்களின்போது இதே மக்கள்தான் பகுஜன் சமாஜ் கட் சியை முன்னெப்போதும் இல்லாத அள விற்கு ஆட்சி பீடத்தில் அமர்த்தியவர்கள். பிரதானமாக நான்கு முனைப் போட்டி யில், வாக்காளர்கள் சமாஜ்வாதி கட் சியை எவ்வித ஐயப்பாட்டிற்கும் இட மில்லாத வகையில் மிகவும் தெளிவாக ஆட்சிபீடத்தில் அமர்த்திவிட்டார்கள். இதன்மூலம் மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் அமையலாம், அதன் காரண மாக மத்தியிலும், மாநிலத்திலும் கட்சி களின் கூட்டணியில் மாற்றங்கள் ஏற் படலாம் போன்ற பல்வேறு ஊகங்களுக் கும் மக்கள் விடைகொடுத்துவிட்டார் கள். ஆயினும், உத்தரப்பிரதேச வாக்கா ளர்கள், கடைசியாக, சாதி மற்றும் மத வித்தியாசங்களையெல்லாம் முற்றிலு மாக முறித்துக்கொண்டு, அவற்றையெல் லாம் கடந்து வந்து விட்டார்கள் என்று அளவுக்குமீறிய தன்னம்பிக்கையுடன் முடிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாநில அரசாங்கம் ஸ்திரத் தன்மையுடன் இருக்க வேண்டும் என் பதில் மக்கள் உறுதியுடன் இருப்பது ஐய மற நன்கு வெளிப்பட்டிருக்கிறது. தொங்கு சட்டமன்றம் அமையுமானால், அதனை யொட்டி உருவாகக்கூடிய கட்சிகளின் அணி சேர்க்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில், அவர்களின் வாயை அடைக்கக்கூடிய விதத்தில் மக்கள் தெளிவான விதத்தில் பதிலளித்துவிட்டார்கள்.

கோவா மாநிலத்தில் மக்கள் மத்தி யில் ஆட்சியாளர்களுக்கு எதிராக இருந்த அதிருப்தி உணர்வைப் பயன்படுத்திக் கொண்டு பாஜக ஆதாயம் அடைந்திட்ட போதிலும்கூட, மற்ற மாநிலங்களில், குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் மக்கள் மனதை அதனால் வெல்ல முடிய வில்லை. காரணம், தங்கள் மீது பொரு ளாதாரச் சுமைகளை ஏற்றுவதில் காங் கிரசிலிருந்து பாஜகவை வேறுபடுத்தி அவர்களால் பார்க்க முடியவில்லை. பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்தில் காங் கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கம் கொண்டு வந்த நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கை கள் அனைத்தையும் பாஜக ஆதரித் திருக்கிறது. ஊழலிலும் கூட, காங்கிர சிலிருந்து பாஜக வேறுபட்டதல்ல என் பது நன்கு வெளிப்பட்டுவிட்டது. பல் வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில், குறிப்பாக கர்நாடகாவில், அதன் தலை வர்களும் இடம்பெற்றிருப்பதானது மக் கள் மத்தியில், ஓர் யோக்கியமான கட்சி என்று இருந்த நிலையிலிருந்து அது ஓரங்கட்டப்பட்டு விட்டது. இது தொடர் பாக அதன் யோக்கியதை இன்றைய தினம் வெட்டவெளிச்சமாகிவிட்டது.

ஆயினும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் கொடுக்காகச் செயல்படும் பாஜக பிரதிநிதித்துவப்படுத்தும் வகுப்பு வாதம் பின்னுக்குச் சென்றுவிட்டது என்ற முடிவுக்கு வருவோமானால், மாபெரும் தவறைப் புரிந்தவர்களாவோம். மதவெறி உணர்வை ஊதி விட்டு வாக்கு களைச் சேகரித்திட அக்கட்சி மேற் கொண்ட முயற்சிகள் தற்போது வெற்றி பெறவில்லை. ஆயினும், நவீன இந்தி யாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித் தளங்களைத் தகர்க்கக்கூடிய விதத் திலும், மக்களின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய விதத்திலும் ஆர் எஸ்எஸ்/பாஜக தன் வெறிபிடித்த மத வெறி நிகழ்ச்சிநிரலை மீண்டும் உயிர்ப் பித்திடலாம். எனவே, நாடும், நாட்டு மக்களும் இவ்வாறு இவர்களது மதவெறி நிகழ்ச்சிநிரலை எதிர்கொள்ள எப் போதும் தயாராக இருந்திட வேண்டும் என்பது மட்டுமல்ல, அவ்வாறு மத வெறிக் கிளப்பப்படுமானால், விழிப்புடன் இருந்து அதனை முறியடித்திடவும் தயா ராக இருக்க வேண்டும்.

மீண்டும் ஒருமுறை, அனைத்துக் கருத்துக்கணிப்புகளும், குறிப்பாக வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வருபவர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்புகளும் முழுமையாகப் பொய்த்துப்போய்விட்டன. அந்தக் காலத் தில் கருத்துக் கணிப்புகளைக் கிண்டல் செய்து ஆர்.கே.லெட்சுமணன் ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தார். அக்கார்ட் டூனில் வாக்களித்து விட்டு வெளியே வரும் கணவர் தன் மனைவியிடம் கூறு வதாக அது அமைந்திருக்கும். அதில் அவர், தனக்கு அளித்த வாக்குச் சீட் டைத் தவறான பெட்டியில் போட்டு விட் டதாகவும், ஆயினும் வெளியே வந்தபின் கருத்துக்கணிப்பு கோரியவரிடம் வாக்க ளித்ததை மாற்றிக்கூறி, அத்தவறைத் தான் சரி செய்துவிட்டதாகவும் கூறுவார். ‘காசுக்கு செய்தி’ (‘paid news') வெளி யிடும் இழிவானப் போக்கு மேலோங்கியுள்ள இன்றைய காலகட்டத்தில், நாட்டின் ஜனநாயக நலன்களில் அக்கறை கொண்டு, இது தொடர்பாக புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

தேர்தல் முடிவுகளிலிருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் ஏதேனும் படிப்பி னையைப் பெற்றுக் கொண்டிருக்கிறதா என்பதே நம்முன் வந்துள்ள பிரதான கேள்வி. துரதிர்ஷ்டவசமாக, அவ்வாறு எதையும் அக்கட்சி பெறவில்லை என்றே தோன்றுகிறது. அவ்வாறு அது பாடம் கற்றுக்கொண்டிருக்குமானால், அது வரவிருக்கும் பட்ஜெட்டில் நிச்சய மாக பிரதிபலித்தாக வேண்டும். கார்ப் பரேட் முதலாளிகள் மேலும் கொள்ளை லாபம் அடையக்கூடிய விதத்தில் அவர் களுக்கு வரிச்சலுகைகள் அளிப்பதற் குப் பதிலாக, அத்தொகைகள் நம் அவ சியத் தேவைகளான கட்டமைப்பு வசதி களை உருவாக்கக்கூடிய விதத்தில் பெருமளவில் பொது முதலீடுகளில் செல வழித்தோமானால், அதன் மூலமாக பெரு மளவில் வேலைவாய்ப்புகளை அதிகப் படுத்திட முடியும், மக்களின் வாங்கும் சக்தியையும் அதிகரித்திட முடியும். இத னைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் உள்நாட்டுத் தேவையும் அதிகரித்து, நிலையான வளர்ச்சிப் பாதையை உரு வாக்கிட முடியும். இதனைச் செய்யா விடில், தேர்தல்களின்போது மக்கள், காங்கிரஸ் கட்சியைக் கழட்டிவிடுவது என்பது தொடரும்.

மத்தியில் ஆட்சியில் உள்ள ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கத்தை தற்சமயம் சமாஜ்வாதி கட்சியும் வெளியிலிருந்து ஆதரித்து வருகிறது. பகுஜன் சமாஜ் கட் சியும் அதேபோன்று வெளியிலிருந்து ஆதரித்து வருகிறது. இதில் மாற்றம் வராதவரை ஐ.மு.கூட்டணி-2 அரசாங் கத்தின் ஸ்திரத்தன்மைக்கு உடனடி அச் சுறுத்தல் எதுவும் கிடையாது. இன்றைய சூழ்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி, மத்திய ஆட்சியாளர்களைப் பகைத் துக் கொள்ளாது என்றே தெரிகிறது. சமாஜ் வாதி கட்சியும் கூட மத்திய அரசாங்கத் துடன் நல்லுறவு வைத்துக் கொள்வதே உசிதம் என்று நினைக்கக் கூடும்.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளிலிருந்து ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமும், காங்கிரஸ் கட்சியும் சரியான பாடங்களைக் கற்றுக் கொண்டு, தங்கள் மக்கள் விரோத நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைத்திட முன் வந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு அது தன்னை மாற்றிக்கொள்ளாது, தொடர்ந்து மக்கள் விரோதப் பாதையிலேயே செல்லு மானால், ஆட்சியாளர்களின் கேடுபயக் கும் பொருளாதாரத் திசைவழியை மாற்றி யமைத்திடக்கூடிய வகையில், மக்கள் போராட்டங்களைப் பெருமளவில் முன் னெடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

No comments: