Tuesday, February 7, 2012

ஐமுகூ அரசின் இருமுனை கொடூரத் தாக்குதல்



உலகம் முழுவதும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் கடும் வீழ்ச்சி யடைந்தபோதிலும் ஐ.மு.கூட்டணி-2 அர சாங்கம் மட்டும் இன்னமும் அதனை உயர்த் திப்பிடிப்பதைத் தொடர்கிறது. வரவிருக்கும் வருடாந்திர பட்ஜெட்டுக்கு முன்னால் அதிக அளவில் அந்நிய மூலதனத்தைக் கவர்ந்திட லாம் என்கிற நப்பாசையுடன் தாராளமயக் கொள்கைகளை மிகவும் தாராளமாகவே அந்நிய மூலதனத்திற்குத் திறந்து விட்டிருக் கிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி மேலும் சீர்கேடடையும் நிலை தொடரும் சூழ லில், அந்நிய மூலதனம் வருவதற்கான சாத் தியம் இல்லை என்றபோதிலும், அரசாங்கம் அதுபற்றிப் பரிசீலித்ததாகத் தெரியவில்லை. ‘‘பொருளாதாரத்துறையில் பிரகாசமாய் வளர்ந்துவருவதாக’’க் கூறி அந்நிய மூல தனத்திற்கு வரவேற்பளித்து, நம் நாட்டு மக்களை வறிய நிலைக்குத் தள்ளி, அவர் களைக் கொள்ளையடித்துச் செல்ல வழி அமைத்துத் தரவே ஐ.மு.கூட்டணி-2 அர சாங்கம் விரும்புகிறது.

பிப்ரவரி முதல் வாரத்தில், அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடத் தயாராகிவிட்டதாக அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியமோ கடுமையான நெருக்கடியில் சிக்கி தன் ஈரோ நாணயத்தையே காப்பாற்ற முடியுமா என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. லாபம் ஈட்ட முடியாது, பசி யால் தவித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய மூலதனத்திற்கு இந்திய சந்தையைத் திறந்து விட இவ்வாறு ஐ.மு.கூட்டணி அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவு செய் திருக்கிறது. இதன் மூலம் மிகவும் தாராள மான வகையில் மானியங்கள் கொடுத்து உற் பத்தியாகியுள்ள வேளாண் பொருள்கள் மற் றும் பால், வெண்ணெய் முதலானவை இந்திய சந்தைக்குள் வெள்ளம்போல் பாய வகை செய் யப்பட்டிருக்கிறது. இது ஏற்கனவே கடுமை யாக பாதிப்புக்குள்ளாகியுள்ள நம் இந்திய விவ சாயத்தையும் விவசாயப் பொருளாதாரத்தை யும் மேலும் கடுமையாகப் பாதிக்கச் செய் திடும். நாட்டின் பல பகுதிகளில் அரசாங்க நிறுவனங்களே தாங்கள் ஒப்புக்கொண்டபடி விவசாயிகளுக்கு, கொள்முதல் செய்யும் விவ சாயப் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆத ரவு விலை கொடுக்க முடியாத நிலை இருக் கிறது. இச்சூழலில் பொருளாதாரத்தை ஐரோப் பிய ஒன்றிய நாடுகளுக்குத் திறந்து விடுவது, நம் விவசாயிகளின் வாழ்வில் மேலும் கொடூ ரமான முறையில் தாக்குதலைத் தொடுத்து, ஏற்கனவே தற்கொலைப் பாதைக்குத் தள்ளப்பட்டுள்ள அவர்களை மேலும் கொடூர மான முறையில் தாக்கிடும். இதற்கு முன்ன தாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்ட மைப்புடன் செய்துகொண்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் விளைவாக நம் நாட்டில், குறிப்பாக கேரளாவில் பணப் பயிர்கள் உற்பத்தி செய்து வந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை அறிவோம்.

பிரதமர் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர் தல்கள் முடிவடைந்த பின் சில்லரை வர்த் தகத்துறையில் அந்நிய முதலீடு அனுமதிக் கப்படவுள்ளதாக மிகவும் தெளிவுபடத் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நாட்டில் நாலு கோடி மக்களின் வாழ்வாதாரங்களை (அவர்களின் குடும்பத் தினரையும் சேர்த்தால் சுமார் 20 கோடிக்கும் மேலாகும்) சவக்குழிக்கு அனுப்பிட வகை செய்யும் விதத்தில் சர்வதேச நிதி மூல தனத்தை அனுமதித்து நாட்டு மக்களைக் கொள்ளையடித்திட வழிவகுத்துத் தர அரசு தயாராகி விட்டது. இதேபோன்று காப்பீடு மற்றும் வங்கித் துறைகளிலும் அந்நிய மூல தனத்தை அனுமதிப்பதற்கும் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஓய்வூதிய நிதியத்தி லிருந்த பல லட்சம் கோடி ரூபாய்களைத் தனி யாருக்குத் தாரை வார்க்க வகை செய்யும் ஓய் வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி அதிகாரக்குழுமம் சட்டமுன் வடிவை நாடாளுமன்றத்தில் பாஜக, ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்துடன் கூட்டுச்சதி செய்து நிறைவேற்றிவிட்டது. கோடிக்கணக்கான ஊழியர்களின் எதிர் காலப் பாதுகாப்பிற்குப் பேரழிவினை ஏற்படுத் தியிருப்பதுடன், இம்மாபெரும் தொகையை சர்வதேச நிதி மூலதனத்தின் விருப்பத்திற் கேற்ப ஊக வணிகத்தில் செலுத்தி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கும் வழிசெய்து தந்துள்ளது.

அந்நிய முதலீடு நம் நாட்டிற்குள் வருவ தென்பது தற்போது வீங்கியுள்ள நிதிப் பற் றாக்குறையைச் சரிக்கட்ட உதவிடும் என்று ஐ.மு.கூட்டணி அரசாங்கம் வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்டு களுக்கும் பணக்காரர்களுக்கும் அளித்துள்ள வரிச்சலுகைகளை விலக்கிக்கொண்டிருந் தாலே இந்நிதிப் பற்றாக்குறையை மிக எளிதாக இல்லாது செய்திருக்க முடியும். இத் தகைய வரிச் சலுகைகள் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதற்கும், நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கினை வைத்திருக்கக்கூடிய அமெரிக்க டாலர் பில்லியனர்களின் எண்ணிக்கையை அதிக ரிப்பதற்குமே உதவியாக இருந்திருக்கிறது. எனவே அரசின் கொள்கைகள் பெரும்பான் மையான நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து, அந்நிய மூலதனமும் இந்தியப் பெரும் முத லாளிகளும் கொள்ளை லாபம் ஈட்ட வசதி செய்து தரக்கூடிய விதத்திலேயே அமைந் திருக்கின்றன.

மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிற நிதிப் பற்றாக்குறையைச் சுருக்குகிறோம் என்ற பெயரில், அரசாங்கமானது வரவிருக் கும் பட்ஜெட்டில் சமூக நலத் திட்டங்களுக்கு தற்சமயம் ஒதுக்கியுள்ள அற்பத் தொகை களைக்கூட மேலும் கடுமையாக வெட்டிக் குறைத்திட இருப்பதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக அரசாங்கத் துறைகளில், அதிலும் குறிப்பாக ரயில்வேத் துறையில் காலி யாக இருக்கும் லட்சக்கணக்கான பணியிடங் களை நிரப்பாமலேயே விட்டுவிட இருக் கிறது. அரசின் செலவினங்களைக் குறைப் பதற்காக அரசின் அதிகாரவர்க்கத்தைக் குறைக்கப்போகிறோம் என்று சொல்கிற அதே சமயத்தில், எதார்த்தத்தில் உலகில் மிகக் குறைந்த விகிதாச்சாரத்தில் அரசு ஊழி யர்கள் பணியாற்றுவது இந்தியாவில்தான் என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. நமது நாட்டில் மத்திய - மாநில அரசு ஊழி யர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை எடுத்துக் கொண்டாலும், ஒரு லட்சம் பிரஜைகளுக்கு 1,600 அரசு ஊழியர்கள் என் பதைக்காட்டிலும் சற்றுக் கூடுதலாக இருப்ப தாக ஆய்வுகள் காட்டும் அதே சமயத்தில், அமெரிக்காவில் இதை விட ஐந்து மடங் குக்கும் அதிகமாக, அதாவது 7,681 அரசு ஊழி யர்கள் என்ற விகிதத்தில் இருக்கிறது. இதிலி ருந்து ரயில்வேயைத் தனியே பிரித்து விடோமானால், இந்த எண்ணிக்கை மேலும் கடுமையாகக் குறைந்துவிடும். அதாவது, ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 125 மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே என்ற முறையில் குறைந்துவிடுகிறது. ஆனால் அமெரிக் காவில் உள்ள அரசு ஊழியர்களின் எண் ணிக்கை என்பது லட்சம் பேருக்கு சுமார் 800 என்ற அளவில் இருந்து வருகிறது.

நமது நாட்டில் மக்களின் சமூகநலத் திட் டங்களை அமல்படுத்துவதற்குத் தேவை யான அரசு ஊழியர்களை நாம் பெற்றிருக்க வில்லை என்பது தெள்ளத் தெளிவாகும். ஏன், நம் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்தக்கூடிய அளவிற்குக்கூட நாம் ஊழியர்களைப் பெற்றிருக்கவில்லை. ஐ.நா. அமைப்பு ஸ்தாபனம் இத்தனை மக்கள் தொகை இருந்தால், இத்தனை காவல் துறையினர் இருக்க வேண்டும் என்று ஒரு விகிதாச்சாரத்தை நிர்ணயித்திருக்கிறது. இந்தப் பரிந்துரையின்படி நம் நாட்டின் நிலை மையை ஆராய்ந்தோமானால், நாம் மூன் றாவது இடத்தில்தான் இருக்கின்றோம். இதன் விளைவாக மக்களுக்கு அளிக்க வேண்டிய கல்வி, சுகாதாரம், உணவுப் பாது காப்பு ஆகிய அனைத்துமே மிகவும் மோச மான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. அர சாங்கம் மக்களுக்காக ஒதுக்கிடும் தொகை யில் ஒரு ரூபாயில் 15 காசுகள் அளவிற்குத் தான் மக்களுக்குச் சென்றடைகின்றன என்று ஒருமுறை ராஜீவ்காந்தி சொல்லி இருக்கிறார். இதனைக்கூட மக்களுக்குக் கொண்டுசெல்லக்கூடிய அளவிற்கு இப் போது அரசு ஊழியர் எண்ணிக்கை இல்லா திருக்கிறது. சுகாதாரம், கல்வி, உணவுப் பாது காப்பு போன்ற அத்தியாவசியத் துறைகளில் மக்களின் சமூகப் பொருளாதாரத் தேவை களைப் பூர்த்தி செய்திடப் போதுமான அள விற்கு அரசு ஊழியர்களை நியமிப்பது இன் றைய தினம் அவசியமாகும். அதனைச் செய்ய அரசு முன்வராதது மட்டுமல்ல, நிதிப் பற்றாக் குறையைச் சரிக்கட்டுகிறோம் என்ற பெயரில் இருக்கின்ற எண்ணிக்கையையும் குறைத் திடத் திட்டமிட்டு வருகிறது.

ஒரு பக்கத்தில் நவீன தாராளமயப் பொரு ளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து அந்நிய மற்றும் நம் நாட்டின் பெரும் முதலாளிகளுக்குக் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய வகையில் அமல்படுத்துவதன் மூலமாக நம் நாட்டின் பெரும் பகுதி மக்களை வறியவர்களாக்கு கிறது. மறு பக்கத்தில் அரசு பெயரளவில் விளம்பரப்படுத்திடும் சமூகநலத் திட்டங் களை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண் டிய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை யும் மேலும் வெட்டிக்குறைத்திட முன்வந் திருக்கிறது. இவ்வாறு நாட்டு மக்கள் இரு முனைகளில் மிகவும் கொடூரமாகத் தாக்கப் பட்டு வருகிறார்கள்.

என்ன வளம் இல்லை இத்திரு நாட்டில்? அதேபோன்று மக்கள் செல்வத் திற்கும் குறைவில்லை. நம் நாட்டின் வளங் கள் மெகா ஊழல்கள் மூலமாக கொள்ளை யடிக்கப்படுவதும் பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளும் தடுத்து நிறுத் தப்பட்டு, அவற்றிற்கு மாறாக மக்களுக்குத் தேவையான சமூகப் பொருளாதாரக் கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தக் கூடிய விதத்தில் பொது முதலீடுகளை அதிகரித் தோமானால், பின்னர் நம் நாட்டு மக்கள் அனைவரின் தேவைகளையும் நாம் மிக எளிதாக நிறைவேற்ற முடியும். இதன் காரணமாக அதிகரிக்கும் வேலைவாய்ப்பு களின் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத் தையும் உயர்த்திட முடியும்.

‘‘இந்திய மக்களாகிய, நாம்’’ சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய விதத்தில் அதற்கான ஆற்றலையும் அளப்பரிய வளங் களையும் பெற்றிருக்கிறோம். இதனை அடை யக்கூடிய விதத்தில் ஆட்சியாளர்கள் தற் போது பின்பற்றிவரும் கொள்கைகளை மாற்றி யமைத்திட, வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

தமிழில்: ச.வீரமணி

No comments: