Saturday, April 30, 2011

உரிமைகளைப் பறிக்கும் தாராளமயம் : சுகுமால் சென்

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கம், சிகாகோவில் 1886ஆம் ஆண் டின் வீரஞ்செறிந்த மே தினப் போராட்டங் களின் புரட்சிகரமான சாதனைகளை எந்த விதத்திலும் மறந்திட முடியாது. தொழிலாளர் வர்க்கத்திற்கு எட்டு மணி நேர வேலை உரி மையும், ஒரு நாளின் மீதமுள்ள 16 மணி நேரத்தை ஓய்வு, கலாச்சார நடவடிக்கை கள் மற்றும் குடும்ப வாழ்க்கையை அனுப வித்திடப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையையும் மே தினப் போராட்டங் களின் விளைவாக நடைமுறைப் படுத்தப் பட்டவைகளாகும்.

ஆனால் இன்றைய நிலைமை என்ன? சில பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நிலைமை கள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. எட்டு மணி நேர வேலை உரிமையைக் காலில் போட்டு மிதித்து நசுக்கிட, தனியார் நிறுவனங்களுக்கு நடைமுறையில் முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

எட்டு மணி நேர வேலை என்பதும், நாளின் மீதமுள்ள 16 மணி நேரம் ஓய்வு, மனமகிழ் நிகழ்வுகள் மற்றும் குடும்பத்தாரு டன் மகிழ்வுடன் இருப்பதற்கு என்கிற விதி படிப்படியாக அரிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் மற் றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் மதிப்பீடுகளின்படி, உலகில் கடைப்பிடிக் கப்படும் நவீன தாராளமய உலகமயக் கொள் கைகளின் காரணமாகவும், உலக முதலா ளித்துவ நெருக்கடியின் விளைவாகவும் சுமார் ஐந்து கோடி தொழிலாளர்கள் வேலை களை இழந்துள்ளார்கள்.

கொள்ளை லாபமீட்டுவதே

கொள்கையாகிப் போனது

நவீன தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஆட்சிகளினுடைய, லாப மீட்டும் கொள்கை மனித சமூகத்தின் ஒட்டு மொத்த முகத்தோற்றத்தையே மாற்றிவிட் டது. அதனால்தான் எட்டு மணி நேர வேலை குறித்தோ, வேலையில் இருப்பவர் கள் வேலை யிலிருந்து வெளியேற்றப் படுவது குறித்தோ ஆட்சியாளர்கள் கவ லைப்பட வில்லை.

நவீன தாராளமயக் கொள்கை கடைப் பிடிக்கப்படும் ஓர் ஆட்சியில், வணிகம் நன்று, அரசாங்கங்கள் தீது. பெரும் வணிகம் மிகவும் நன்று, பெரும் அரசாங்கங்கள் மிக வும் தீது. பணக்காரர்கள் மீதான வரிகள் தீது, ஏழைகளுக்கும், தொழிலாளர் வர்க்கத்திற் கும் சமூக நலத் திட்டங்களுக்குச் செல விடுவதென்பது மிக மிகத் தீது. சமூகத்தில் மக்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வு அதிகரிப் பதென்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல, அவசியமானதும் கூட. சமூகத்தில் பணக்காரர்களாக இருப்பவர் கள் மேலும் பணக்காரர்களாகக்கூடிய வகையில் அவர்களுக்கு ஊக்குவிப்புகள் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் முதலீடுகளை அதிகரிப்பதற்கு அவை தூண்டுகோலாக அமையும். அதே போன்று ஏழைகள் கடின உழைப்பினை மேற்கொள்ள எப்போதும் ஆர்வத்துடன் முன்வரவேண்டும். சந்தைகள் தவறிழைக் காது. மனித சமூகத்தை ஒழுங்குபடுத்தும் உயர்ந்த மார்க்கம், சந்தைகள்தான். இவை தான் அனைத்து விடுதலைகளுக்கும் அடிப்படையாகும். அரசாங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்கள் மூலமாக இதில் தலை யிடுவது - அது என்னதான் நல்ல நோக்கத் துடன் இருந்தபோதிலும் - நீண்டகால ஓட்டத்தில் விஷயங்களை அவை மிகவும் மோசமாக்கிவிடும். ஏனெனில், இவை சந்தைத் தீர்விலிருந்து பிரச்சனைகளை வேறு வழிகளில் இழுத்துச் சென்று விடு கின்றன. சுதந்திர சமூகத்தில் அரசாங்கம் என்பது சந்தையின் அதிகாரத்தை உயர்த் திடவே முன்வர வேண்டும். சமூகத்தில் உள்ள எவரும் தங்கள் சொத்துக்களை எந்த விதத்தில் வேண்டுமானாலும் - அது நேர்மையாக வேண்டுமானாலும் இருக்க லாம் அல்லது மிகவும் இழிவான முறையில் வேண்டுமானாலும் இருக்கலாம் - பெருக் கிக்கொள்ள சுதந்திரம் உண்டு. இந்த வகை யில்தான், நவீன தாராளமயக் கொள்கை என் பது மூலதனத்திற்கு ஆதரவாக கூச்ச நாச்சமின்றி வாதிடுகிறது.

நவீன தாராளமயக் கொள்கை 1980 களில் ரீகன் - தாட்சர் காலத்தில் தலை தூக்க ஆரம்பித்தது. 1990களின் முந்தைய ஆண்டுகளில் சோசலிச நாடுகளில் பின் னடைவு ஏற்பட்ட சமயத்தில் இக் கொள்கை வேகமாக வளரத் தொடங்கியது. அப்போது, ‘‘வரலாறு முடிந்துவிட்டது என்று கூறி முதலாளித்துவம் புளகாங்கிதம் அடைந்தது. மார்கரெட் தாட்சர், ‘‘இனி மாற்று எதுவுமில்லை என்று கொக்கரித்தார்.

நவீன தாராளமயத்தின் தத்துவம்

நவீன தாராளமயத்தின் தத்துவமானது வசதிபடைத்தவர்கள் கைகளில் அதிகா ரத்தை ஒப்படைப்பதை நியாயப்படுத்து கிறது. ஆயினும் நவீன தாராளமயத்தின் திவாலாகிப்போன தன்மையும், முரண் பாடுகளும் 1990களின் இறுதியில் வெட்ட வெளிச்சமாயின. உலகமயத்திற்கு எதிரான இயக்கம், உலகம் முழுவதும் பல்வேறு நாடு களில் நடைபெற்ற ஜனநாயகத் தேர்தல் களில் நவீன தாராளமயக் கொள்கைகள் மிகவும் விரிவான வகையில் நிராகரிக்கப் பட்டன. அதிலும் குறிப்பாக லத்தீன் அமெ ரிக்க நாடுகளில் நடைபெற்ற தேர்தல்கள் ‘‘வரலாறு முடிந்துவிட்டது’’ என்று கொக் கரித்தவர்களின் கூற்றுக்களைத் தரைமட் டமாக்கின. இந்த சமயத்தில்தான் முதலா ளித்துவம் பொதுவாகவும், ஊடக அமைப் புகள் குறிப்பாகவும் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களைப் பெரும் அளவில் சார்ந் திருக்க வேண்டும் என்பதனைப் புரிந்து கொண்டன. நவீன தாராளமயம் அரசின் பாத் திரத்தை அழிப்பதற்கு முயலவில்லை. மாறாக அரசு என்பது முதலாளித்துவத்தின் நலன்களுக்கு அல்லது ஊடக கார்ப்ப ரேஷன்களின் நலன்களுக்கு மட்டுமே முழுமையாகச் செயல்பட வேண்டும் என்கிற முறையில் நவீன தாராளமயம் தன் முயற்சிகளை மேற்கொண்டது. இத்தகைய தத்துவார்த்தக் கண்ணோட்டத்துடன் ஊட கங்களின் அரசியல் பொருளாதாரம் புத்துயிர் பெற்றன. இந்த அடிப்படையில் அமெரிக் காவிலும், இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் ஊட கங்களால் பெருமளவில் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டன. இன்றைய கால கட்டத் தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சிப் போக்காகும்.

ஊடகங்களின் பங்கு
நவீன தாராளமய சமூகத்தில் கார்ப்பரேட் டுகளின் ஊடகங்கள் முதலாளித்துவத் திற்கு மாற்று சாத்தியமே இல்லை என்கிற கருத்தை மக்கள் மத்தியில் நம்பும் அள விற்கு எடுத்துச் சென்றுள்ளன.

சர்வதேச மூலதனத்திற்கு சேவகம்
இன்றைய தினம் அமெரிக்காவில் மட் டுமல்ல உலகம் முழுவதும் ஊடகங்கள் தங் கள் ஆளுகையை விரிவாக்கி இருக்கின் றன. அதீத அளவில் லஞ்ச ஊழல் தலை விரித்தாடக்கூடிய விதத்தில் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் மாறி யிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், நவீன தாராளமயவாதிகள், தங்கள் சர்வதேச மூலதனத்திற்கு சேவகம் செய்வதற்காக வகைதொகையின்றி ஊடகங்களுக்கு லஞ் சம் தர தயாராக இருக்கின்றனர்.

1880களில் சிகாகோவில் மே தின நிகழ்வுகள் நடைபெற்றபோது உலக முத லாளித்துவத்தின் நிலைமை வேறாக இருந் தது. அதன்பின்னர் உலக முதலாளித்துவம் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் அடைந்து, இன்றைய காலகட்டத்தில், நவீன தாராள மய உலகமயமாக உருவெடுத்து, மிக உக்கி ரமான வடிவத்தினைப் பெற்றுள்ளது.

உலக அளவில், இன்றைய தினம், தொழிலாளர் வர்க்கம் மிகவும் வஞ்சிக்கப் பட்ட வர்க்கமாக, பல்வேறு உரிமைகள் பறிக் கப்பட்ட வர்க்கமாக மாறியிருக்கிறது. பணக் காரர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகத் தங்கள் உழைப்புச் சக்தியைக் கட்டாயமாகக் குறைந்த கூலிக்கு அளிக்கக்கூடிய அள வுக்கு மிகவும் மோசமானதாகத் தொழிலா ளர் வர்க்கம் மாறியிருக்கிறது. பணக்காரர் களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்திருக்கிறது. ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழப்பதென்பதும், எட்டு மணி நேரத்திற்கும் மேலாக, குறைந்த கூலிக்கு வேலை செய்வ தென்பது போன்ற மே தின சகாப்தத்திற்கு முந்தைய நிலைமை இப்போது ஏற்பட்டி ருக்கிறது.

உலக அளவில், ஊடகங்களின் வெறித் தனமான பிரச்சாரங்கள், மக்களின் சிந்த னைகளையும் செயல்பாடுகளையும் மழுங் கடித்து வருகின்றன. அமெரிக்காவும், பல முதலாளித்துவ நாடுகளும் மிகவும் மோச மான முறையில் பொருளாதார நெருக்க டிக்கு ஆளாகிய பின்னர், அவை தொழிலா ளர் வர்க்கத்தின் மீதும் கடும் தாக்குதலை தொடுத்தன. இருபதாம் நூற்றாண்டில் சமூக உரிமைகளுக்காக எண்ணற்ற போராட்டங் களை நடத்தி பல்வேறு உரிமைகளைப் பெற்றிருந்த தொழிலாளர் வர்க்கம் படிப்படி யாக அவற்றை இழக்கக்கூடிய நிலை ஏற் பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் அதிக ரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் வேலையிலிருக்கும் தொழிலாளர்களையும் கடுமையான முறையில் பாதித்திருக்கிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் மூல மாக பெற்றிட்ட எண்ணற்ற உரிமைகள் ஒவ் வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருக்கின் றன. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டமானது, வேலை இழப்புகள், வேலையிலிருப்போரை அதிக மணி நேரத் திற்கு வேலை வாங்குதல், பணிப் பாது காப்பின்மை, நியமனங்களில் ஒப்பந்தமுறை அமல், தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப் படுதல் போன்ற நிலைமைகளைக் கொண்டு வந்திருக்கிறது.

சோசலிசத்திற்காக

போராடுவது ஒன்றே மாற்று

இன்றைய தினம் தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவ நெருக்கடியால் ஏற்பட் டுள்ள விளைவுகளை முற்றிலுமாகத் துடைத்தெறியக் கூடிய வகையில் அணி திரளாமல், துண்டு துண்டான சில அற்பக் கோரிக்கைகளுக்காக நடத்திடும் போரா ட்டங்களால் மட்டும் வலுவடைந்து விடாது.

தொழிலாளர் வர்க்கம், தன்னுடைய புரட்சிகர லட்சியத்தையும் (ளவசயவநபல) அதனை அடைவதற்கான உத்திகளையும் (வயஉவiஉள) அறிந்திருந்தால் மட்டுமே அத னால் ஒரு வலுவான அரசியல் சக்தியாக மாறிட முடியும்.

இல்லாவிடில், இவர்களது போராட்ட அனுபவங்கள் அப்போதைக்கு அவர்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ள முதலாளித் துவக் கழிசடை சித்தாந்தங்களின் செல் வாக்கால் மழுங்கடிக்கப்பட்டு, அவர்களை சீர்திருத்தவாதம் மற்றும் சந்தர்ப்பவாத நிலைகளை எடுக்க வைத்திடும். முதலா ளித்துவ அமைப்பை, தொழிலாளர்களுக்கு ஆதரவான ஓர் அமைப்பாக சீர்திருத்தி டவோ அல்லது நவீனப்படுத்திடவோ முடி யாது. முதலாளித்துவ அமைப்பு முறையா னது சீர்திருத்தவாத மற்றும் சந்தர்ப்பவாத சக்திகளின் கூட்டணிகளோடு தனக்குச் சாதகமான அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளும். ஆயினும், முதலாளித்துவ அமைப்பு முறையை உறுதியாகவும் விடாப் பிடியாகவும் ஆதரிக்கும் ஒரு முதலாளித் துவ அரசாங்கத்தைத்தான் தொழிலாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

எனவே, தொழிலாளர்கள் தற்போதுள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் மீதுள்ள பிரேமைகளை அகற்றிட வெளிப்படையாக வும், ஒளிவுமறைவற்ற முறையிலும், நடை முறை நடவடிக்கைகளுடன் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட் டத்திற்கு மாற்று இல்லை என்பதை உறுதி யுடன் ஏற்றுக்கொண்டு, அதனை அடை வதற்கான போராட்டத்தில் தன்னை முழு மையாக இணைத்துக் கொள்ள தொழிலாளர் வர்க்கம் முன்வர வேண்டும். அது ஒன்று தான் வீரம் செறிந்த மே தினத் தியாகிகளின் கனவை நனவாக்கும் விதத்தில் மே தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடிட தொழிலாளர் வர்க்கத்திற்குப் பொருத்தமான செயலாக அமைந்திடும்.

தமிழில்: ச.வீரமணி

No comments: