Monday, June 21, 2010

அமெரிக்காவின் அடாவடித்தனம்



ஈரானுக்கு பொருளாதாரத் தடை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நான்கு நிரந்தர உறுப்பினர்களின் ஆதர வைப் பெறுவதில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டது. இதன்மூலம், அமெரிக் காவும், மேற்கத்திய வல்லரசு நாடுகளும் அணுசக்தி பிரச்சனையில் ஈரானுடன் ஒரு மோதுதல் பாதையைத் தேர்ந் தெடுத்திருப்பது தெளிவாகிவிட்டது. பொருளாதாரத் தடைகள், ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தித் தொழில் களைக் குறி வைத்து மேற்கொள்ளப்பட்டி ருக்கின்றன. மேலும் தனிநபர்கள் மற்றும் பல நிறுவனங்களும் பொருளாதாரத் தடைக்கு உட்படும். சுமார் 40 கம்பெனி கள் கருப்புப் பட்டியலிடப் பட்டிருக்கின்றன.

பிரேசிலும் துருக்கியும் ஈரானுடன் சமீபத்தில் ஓர் ஒப்பந்தம் செய்துகொண் டுள்ளன. அதன்படி ஈரான் 1200 கிலோ கிராம் எடையுள்ள குறைந்தளவு செறிவூட் டப்பட்ட யுரேனியம் எரிபொருளை துருக் கிக்கு மாற்றல் செய்திட ஒப்புக்கொண் டிருக்கிறது. இவ்வாறு ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டவுடனேயே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக் கிறது. டெஹ்ரான் ஆய்வு அணுஉலை மையம் மருத்துவப் பரிசோதனைகளுக் காக அணுசக்தி எரிபொருளைப் பயன் படுத்துவது வரை, அதற்கு மாற்றாக இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. பிரே சில் அதிபர் லூலாவும் துருக்கி பிரதமர் எர்டோகானும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக டெஹ்ரான் சென் றிருந்தனர். இந்த ஒப்பந்தம், 2008 அக் டோபரில் சர்வதேச அணுசக்தி முகமை மூலம் அமெரிக்கா முன்வைத்த நிபந் தனைகளின் அடிப்படையிலேயே மேற் கொள்ளப்பட்டது.

அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தை, போதுமான அளவிற்கு நல்லதாக இல் லை என்று இப்போது குறைகூறி இருக் கிறது. பாதுகாப்பு கவுன்சில் முன் பொரு ளாதாரத் தடை விதிக்கக்கோரி தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது, அமெரிக்கா சொன்ன வார்த் தைகளிலிருந்தே அது பின்வாங்கி இருப் பது, அதிபர் ஒபாமா, அதிபர் லூலாவுக்கு அனுப்பியிருந்த கடிதத்தின் நகலை பிரேசில் அரசாங்கம் வெளியிட்டிருப்ப தைக் பார்க்கும் எவரும் தெரிந்துகொள்ள முடியும். 2010 ஏப்ரல் 10 தேதியிட்ட அந்தக் கடிதத்தில், ஒபாமா, வாஷிங்டன்னில் அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாடு நடைபெற்ற சமயத்தில் லூலா மற்றும் எர் டோகான் ஆகியோருடன் ஏற்பட்ட சந்திப் பைக் குறிப்பிட்டிருக்கிறார். “எங்களைப் பொறுத்தவரை, 1200 கிலோகிராம் குறைந் தளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரி பொருளை அந்நாட்டிலிருந்து வெளி யேற்று வதற்காக செய்துகொள்ளப்படும் ஈரானுடைய ஒப்பந்தம், நம்பிக்கை ஏற் படுத்தும், பிராந்தியத்தில் நிலவும் பதட்ட நிலைமையைக் கணிசமாகத் தணிக் கவும் உதவும்” என்று அந்தக் கடிதத்தில் ஒபாமா மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டி ருக்கிறார். மேலும் அவர் அந்தக் கடிதத் தில், “மிகவும் முக்கியமான சமரசம் ஒன்று இதில் அடங்கியிருக்கிறது. சென்ற நவம்பரில், சர்வதேச அணுசக்தி முகமை ஈரானுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. அதில் ஈரான், துருக்கி நாட்டிற்கு 1200 கிலோ கிராம் குறைந்தளவு செறிவூட்டப் பட்ட யுரேனியம் எரிபொருளை அனுப்பிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டி ருக்கிறது.

அதன்படி பிரேசிலும் துருக்கியும் ஈரானிடமிருந்து குறைந்தளவு செறிவூட் டப்பட்ட யுரேனியத்தைப் பெறுவதற்கு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அமெ ரிக்கா மீண்டும் தன் நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒபாமா மிகவும் மோசமாக நடந்துகொண்டிருக்கிறார். இது தொடர் பாக அமெரிக்கா முன்வைத்திடும் வாதம் என்னவெனில், 2008 அக்டோபரில் அமெரிக்கா அவ்வாறு கோரிய சமயத்தில், 1200 கிலோகிராம் என்பது ஈரானிடம் இருந்த குறைந்தளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பில் முக்கால் பங்கு என்றும், ஆனால் அதன்பின் ஈரான் அதிக அளவு உற்பத்தி செய்திருக்கிறது என்றும், எனவே, இப்போது, 1200 கிகி என்பது ஈரானில் உள்ள இருப்பில் பாதி அளவாகும் என்றும் சொல்கிறது. இவ் வாறு அமெரிக்கா இப்போது தன் நிலைக்கு தவறான முறையில் நியாயம் கற்பிக்கிறது.

ஈரானுக்குப் பொருளாதாரத் தடை விதித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மா னம் பாதுகாப்புக் கவுன்சிலில் ஒருமன தாக நிறைவேற்றப் படவில்லை. அதனை பிரேசிலும், துருக்கியும் எதிர்த்துள்ளன. லெபனான் வாக்களிக்கவில்லை. சீனா, பொருளாதாரத் தடைகள் தொடர்பாக தீர்மானத்திலிருந்த பல வாசகங்களை நீக்கச் செய்திருக்கிறது. எரிசக்தித் துறை யில் பொருளாதாரத் தடைக்கு அது ஒப்புக் கொள்ளவில்லை. மேற்கத்திய வல்லரசு நாடுகளுடன் சேர்ந்துகொண்டு மற்ற நிரந்தர உறுப்பினர் நாடுகளும் ஏன் வாக்களித்தன என்பது இன்னமும் விளங்காத புதிராகவே இருக்கின்றன.

இந்த நிகழ்வானது, ஒபாமா நிர்வாகத் தின் மத்தியக் கிழக்கு நாடுகள் கொள்கை தொடர்பாக நிறைய அம்சங்களை வெளிப் படுத்தி இருக்கின்றன. இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தொடர் பாக கருத்துக்கள் வெளியிட்டபோதிலும், அதற்கு அமெரிக்காவின் கண்மூடித்தன மான ஆதரவு என்பது தொடர்கிறது. காசா விற்கு உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல்களின் மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதல்கள் குறித்தும், பலர் அதில் கொல்லப்பட்டிருப்பது குறித்தும் இன்னமும் அது வாய் திறக்கவில்லை. இது தொடர்பாக சர்வதேச விசார ணைக்கு எதிராகவும் அமெரிக்கா நிலை எடுத்திருக்கிறது. கடைசியாக, ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் கொண்டுள்ள அதே அளவு பகைமை உணர்ச்சியுடன் அமெ ரிக்காவும் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது என்பது இப்போது தெளிவாகி விட்டது.

பிரச்சனைகளைத் தீர்த்திட பொருளா தாரத் தடைகள் வழியல்ல என்று இந் தியா பதிவு செய்திருக்கிறது. ஆயினும், சர் வதேச அணுசக்தி முகமையில் ஈரான் குறி வைத்துத் தாக்கப்படும் போதெல் லாம், அமெரிக்காவின் பக்கம்தான் இந் தியா நிலை எடுத்திருக்கிறது. சர்வதேச அணுசக்தி முகமையின் தீர்மானத்தின் அடிப்படையில்தான் இப்போது பாது காப்பு கவுன்சிலில் பொருளாதாரத் தடைக்கான வழிகள் திறக்கப்பட்டிருக் கின்றன. அமெரிக்காவின் பக்கம் நின்று ஆதரவு நிலை எடுத்ததற்காக இந்தியா வின் முதுகில் தற்போது அமெரிக்கா தட் டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் காரண மாக, இந்தியாவிற்கு ஈரானிலிருந்து குழாய் வழியாக எரிவாயு கொண்டுவரும் திட்டத்தை இன்னமும் இறுதிப்படுத்தா மல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இப் போதும்கூட, ஈரானுடன் உறவுகளை வலுப்படுத்துவதில்தான், அதனுடன் நம் முடைய பொருளாதார மற்றும் வர்த்தகப் பிணைப்புகளை, அதிலும் குறிப்பாக எரிசக்தித்துறையில் விரிவாக்கிக் கொள் வதில்தான் நாட்டின் உண்மையான நலன்கள் அடங்கியிருக்கின்றன என்ப தை ஐ.மு.கூட்டணி அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை ஒரு பொருட்டாக கருதாமல், இந்தத் திசை வழியில் சென்றிட இந்தியா முன்வர வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

No comments: