Saturday, April 12, 2008

மாற்றுக் கொள்கைக்கான திசைவழி நோக்கி போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்



மீபத்தில் முடிவடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது அகில இந்திய மாநாடு, நாட்டின் எதிர்காலக் கொள்கை திசைவழி எப்படி இருக்க வேண் டும் என்பது குறித்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நான்கு முக்கிய அம்சங் களை மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக் கிறது. நாட்டின் எதிர்காலம் மற்றும் நாட்டு மக் களின் நலம் என்பது நாட்டின் ஒற்றுமை - ஒருமைப்பாடு மற்றும் அதன் சமூகக் கட் டமைப்பை வலுப்படுத்துவதன் அடிப்படையி லேயே அமைந்திருக்கிறது. இந்திய சமூகத் தில் உள்ள பொதுமைப் பண்புகளும் வேற்று மைப் பண்புகளும் உலகில் வேறெந்த நாட்டி லும் இல்லாத அளவிற்கு விரிந்த அளவின தாகும். நாட்டில் நிலவும் வளமான வேற்று மைப் பண்புகளுக்கிடையே உள்ள பொது மையான பிணைப்பை வலுப்படுத்துவதன் மூலமாகவே நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஒருங்கிணைக்க முடியும் என்று இப்பகுதியில் நாம் பலதட வை சொல்லி வந்திருக்கிறோம். இதற்கு மாறாக - மதரீதியாகவோ, மொழிவாரியா கவோ, இனவாரியாகவோ அல்லது கலாச் சார ரீதியாகவோ - ஒரு சீரான தன்மை யைக் கொண்டுவர வேண்டும் என்று முயற் சித்தோமானால், அது பிரிவினை சக்தி களையே வலுப்படுத்தி, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையே அழித்து விடும். வகுப்புவாதமானது, இத்தகைய சீரான தன்மையைத்தான் கொண்டுவர வேண்டுமென்று நிர்ப்பந்தித்து வருகிறது. இத்தகைய மதவெறி சக்திகள், இப்போதி ருக்கிற நவீன இந்தியக் குடியரசின் மதச் சார்பற்ற ஜனநாயக மாண்பினை, ஆர்எஸ் எஸ்-இன் ‘‘இந்து ராஷ்ட்ரம்’’ என்னும் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிசக் கொள்கையாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் பாதுகாத்து வலுப்படுத்துவதே முதலாவதும் முக்கியமானதுமான பணியா கும். இதனைச் செய்திடாமல், இந்தியா வின் எதிர்காலம் மற்றும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்கள் வெற்றி பெற முடியாது என்பது தெளிவு. நாட் டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மதவெறி சக்திகள் இயங்கி வருகின்றன. வகுப்புவாதம் முழு மையாக முறியடிக்கப்பட்டாக வேண்டும். இதனை சமரசங்கள் மூலமாக இளகச் செய்திடவும் முடியாது, தோற்கடித்திடவும் முடியாது. ‘‘இளகிய இந்துத்வா’’ அல்லது ‘‘வெளுத்துப்போன காவி’’ போன்ற கொள் கைகள் மதவெறி சக்திகளுக்கே பயனுள்ள தாய் அமையும். இத்தகைய மதவெறி அச் சுறுத்தலை முற்றிலுமாக முறியடித்திட ஆட் சியாளர்களின் கொள்கையில் தீர்மானகர மான மாறுதல் அவசியம். அதன் மூலம் தான் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் வலுப்படுத்த முடியும்.

இந்தச் சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணி அரசாங்கங்கள் இயங்கிடும் மேற்கு வங் கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகிய மாநி லங்களில் மதவெறிக் கட்சியான பாஜக-விற்கு சட்டமன்றத்திலும் சரி அல்லது நாடாளுமன்றத்திலும் சரி ஓரிடம் கூட கிடையாது என்பது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு என்று சொல்வதற்கில்லை.

இரண்டாவதாக, இந்திய ஆளும் வர்க் கத்தால் கடந்த இருபதாண்டு காலமாகக் கடைப்பிடித்து வரப்பெற்ற நவீன தாராள மயப் பொருளாதார சீர்திருத்தத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தி, கோடிக் கணக்கான மக்களை மிகக்கொடிய வறு மை நிலைக்குத் தள்ளி இருக்கின்றன. ‘‘ஒளிர்கின்ற’’ இந்தியாவுக்கும் ‘‘அல்ல லுறுகின்ற’’ இந்தியாவுக்கும் இடையிலான இடைவெளி வளர்ந்து கொண்டே இருக் கிறது. எனவே, மக்களின் நலன்களை மேம் படுத்தக்கூடிய வகையில், தற்சமயம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங் கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ள ஆட்சியாளர்களின் ‘‘சீர் திருத்த’’க் கொள்கைகளை மக்கள் நலஞ் சார்ந்ததாக மாற்றியமைப்பதற்கான போராட்டங்களையும் வலுப்படுத்த வேண்டி யது இன்றையத் தேவையாகும். இன்று, நாட்டின் மக்கள் தொகையில் 54 சதவீதத் தினர் 25 வயதுக்கும் குறைவான இளை ஞர்களாவர். இந்த இளைஞர்களுக்கு தர மான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டால், அவர்கள் நாட்டை உலகமே வியக்கக்கூடிய அளவிற்கு உன் னத நிலைக்கு எடுத்துச் செல்வார்கள். எனவே, நவீன தாராளமயப் பொருளா தாரக் கொள்கைகளினால் விளைந்துள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்களை முழுமை யாக ஈடுபடுத்துவதன் மூலமாகத்தான் நாட்டு மக்களின் வாழ்வில் முன்னேற்றத் தைக் கொண்டுவர முடியும் என்பதும் தெளிவு. மூன்றாவதாக, நவீன தாராளமயக் கொள்கையின் மற்றுமோர் மோசமான பாதிப்பு என்பது, நாட்டில் பல்வேறு மாநிலங் களுக்கிடையே பொருளாதார ஏற்றத்தாழ் வுகளும் அதிகரித்திருப்பதாகும். இன்றைய சூழ்நிலையில், மாநிலங்களின் பிற்பட்ட தன்மைக்கு எதிராக நடைபெறும் போராட் டங்கள் பல மக்கள் மத்தியில் பிரிவினைக் கோரிக்கைகள், இருக்கின்ற மாநிலங் களை மேலும் பிரித்தெடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளோடு எழுவதைப் பார்க்க முடிகிறது. இத்தகைய முழக்கங்கள் மக்கள் மத்தியில் ஒருவித சமூகப் பதட்டத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல சமயங்களில் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகச் சரியான முறையில் போராடி வந்த மக்களை யும் கூட திசைதிருப்பி அவர்களது சக் தியை வீணடிப்பதிலும் வெற்றி பெற்று விடு கின்றன. எனவேதான், நம் மாநிலங்களுக்கு போதிய அளவு நிதி மற்றும் அரசியல் சுயாட்சி அளிப்பதன் மூலமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவம் வலுப்பெறக்கூடிய வகையில் ஒரு மாற்றுக் கொள்கை திசைவழி தவிர்க்க முடியாததாகிறது. அவ்வாறு ‘‘மாநிலங் களில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’’ என்னும் தத்துவம் வெற்றிபெறும்போதுதான் நாட்டு மக்களுக்கு மிக உயர்ந்த அளவில் சுபிட்சத்தைக் கொண்டுவர முடியும், நாட் டை மேலும் சிறந்த முறையில் கட்ட முடியும். நான்காவதாக, உலக நாடுகளுக்கிடையே நம் நாட்டின் மரியாதை தொடர்ந்து நிலைத்து நிற்கவேண்டுமானால், அது தன்னுடைய பொருளாதாரம் மற்றும் அரசியல் இறை யாண்மையை வலுப்படுத்துவதன் மூலமே சாத்தியம். இதற்கு, அது இதுநாள்வரை கடைப்பிடித்து வந்த சுயேட்சையான அயல் துறைக் கொள்கையை எக்காரணம் கொண்டும் தளர்த்திடாது கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஆனால் இன்றைய ஏகாதிபத்திய உலக மயக் கொள்கைகளின் விளைவாக இந் தியா போன்ற வளர்முக நாடுகள் தங்களு டைய பொருளாதார இறையாண்மையை, ஏகாதிபத்தியத்தின் காலடியில் வைக்க வேண்டிய கட்டாயச் சூழல் இயல்பாகவே ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளால், இந்தியாவின் அயல்துறைக் கொள்கையை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் கொள்கையாக மாற்றுவதற்காக நடை பெறும் எத்தகைய முயற்சியும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் கேட்டையே உண்டாக்கும்.

இந்தியாவை, அமெரிக்கா வின் ‘இளைய பங்காளியாக’ மாற்றிட இந் திய ஆளும் வர்க்கங்கள் மேற்கொள்ளும் தற்போதைய முயற்சிகள், நிச்சயமாக நம் நாட்டின் நலனுக்கானவை அல்ல. எனவே, நம் நாட்டு மக்களில் பெரும்பான்மையோ ருக்கு உயர்தரமான வாழ்வாதாரத்துடன் சிறந்ததோர் இந்தியாவைக் கட்டுவதற் கான போராட்டம் என்பது, இந்திய ஆளும் வர்க்கங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் இந்திய மக்கள் அடையும் வெற்றிகளையே முழுமையாக சார்ந்திருக்கிறது. இவ்வாறாக, அனைத்து முக்கிய மட்டத் திலும், நாட்டில் மாற்றுக் கொள்கைக்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டியது இன்றைய உடனடித் தேவை யாகும். இதனை எய்துவதற்காகத்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது அகில இந்திய மாநாடு, இத்தகு போராட்டங்களை வலுப்படுத்துவதற்கு நம்முடன் இணையத் தயாராகவுள்ள அரசி யல் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஓர் அரசியல் மாற்றைக் கட்டுவதற்கு அறை கூவல் விடுத்திருக்கிறது. காங்கிரஸ் அல்லாத பாஜக-விற்கு எதிரான, மாற்றுக் கொள்கைத் திசைவழியுடன் கூடிய ஒரு மூன்றாவது அரசியல் மாற்று இன்றைய காலத்தின் கட்டாயமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டு மக் களில் பெரும்பான்மையோருக்கு சுபிட்சத் தைக் கொண்டுவரக்கூடிய வகையில், சிறந்ததோர் இந்தியாவைக் கட்டுவதற்கு, நடைபெறும் போராட்டங்களில் நாட்டு மக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டு, அவற்றை வலுப்படுத்த வேண்டும் என்று நாட்டு மக்களை அறைகூவி அழைக்கிறது.

தமிழில்: ச. வீரமணி

No comments: