Tuesday, November 6, 2012

நவம்பர் புரட்சியின் வெளிச்சத்தில் முன்னேறுவோம்!


சீத்தாராம் யெச்சூரி எம்.பி.


இன்று ரஷ்யப் புரட்சியின் 95ஆவது ஆண்டு தினமாகும் . உலக முதலாளித்துவம் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் பின் னணியில் இன்றைய புரட்சி தினம் வந் திருக்கிறது. பல அம்சங்களில், இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியானது, 1930 களில் முதலாளித்துவத்திற்கு ஏற்பட்ட பெரும் மந்தநிலைமையைவிட மிகவும் மோசமான விதத்தில் பல்வேறு விதங் களில் ஊடுருவிப் பரவியிருக்கிறது. நெருக் கடி உருவாகி அதன் ஐந்தாவது ஆண் டில் அது அடியெடுத்து வைத்திருக்கிறது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் உட்பட மாபெரும் முதலாளித் துவ பொருளாதாரங்கள் மந்த நிலை மைகளிலேயே நீடிப்பது தொடர்கிறது. ஐரோப்பாவில் பத்து நாடுகள், தொடர்ந்து கடந்த மூன்றாண்டுகளாக எதிர்மறை வளர்ச்சியில் இருப்பதைஅடுத்து, இன் றளவும் மந்தநிலையில் இருப்பதாக அதி காரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருக் கின்றன. (ஐரோப்பிய மண்டலத்தின் கீழ் வரும் 17 நாடுகளில்) இத்தாலி, ஸ்பெ யின், பெல்ஜியம், அயர்லாந்து, கிரீஸ், ஸ்லோவேனியா, நெதர்லாந்து ஆகிய ஏழு நாடுகளும், இங்கிலாந்து, டென் மார்க், செக் குடியரசு ஆகிய மூன்று நாடு களும் ஆக மொத்தம் பத்து நாடுகளே இவையாகும். அதன் விளைவாக இந் நாடுகளில் வேலையில்லாத் திண்டாட் டம் அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு அதிகரித்திருக்கிறது. 15 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய இளைஞர்களில் 51 விழுக்காட்டினர் கிரீஸிலும், ஸ்பெயினிலும் வேலையின்றி தவிக்கிறார்கள். இத்தாலியிலும் போர்ச் சுக்கல்லிலும் 36 விழுக்காட்டினரும், அயர்லாந்தில் 30 விழுக்காட்டினரும், பிரான்சில் 20 விழுக்காட்டிற்கும் அதிக மானவர்களும் இவ்வாறு வேலையின்றி இருந்து வருகின்றனர்.

மற்ற நாடுகளி லும் நிலைமைகள் கிட்டத்தட்ட இது வேயாகும்.ஏகாதிபத்திய உலகமயத்தால் தலைமை தாங்கப்படும் சர்வதேச நிதி மூலதனத் தின் நிலையாத்தன்மை (unsustainability) உலக முதலாளித்துவத்தை மேலும் ஆழமான நெருக்கடி வளையத் திற்குள் உந்தித் தள்ளிக் கொண்டிருக் கிறது. உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியினரின் வாங்கும் சக்தி மிகவும் சுருங்கிவிட்டதன் காரணமாக ஏற்பட் டுள்ள நெருக்கடியிலிருந்து வெளிவரு வதற்காக, அவர்களுக்குக் கடன் கொடுப் பதற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட் டன. இதன் மூலம் முதலாளித்துவம் தான் கொள்ளை லாபம் அடிப்பதைத் தொடர்வதற்கு தற்காலிகமாக அனுமதித் தது. ஆயினும், கொஞ்சகாலத்திலேயே கடனை வாங்கியவர்கள் அதனைக் கட்டமுடியாத நிலைக்கு சென்றதால், மீண்டும் நெருக்கடி (‘(`sub prime’ crisis) ஏற்பட்டு உலக நிதிக் கரைப்புக்கு (global financial meltdown) இட்டுச் சென் றது. இந்த நெருக்கடியிலிருந்தும் உலக முதலாளித்துவம் தன்னை மீட்டெடுப் பதற்காக, நெருக்கடியில் சிக்கிய கார்ப் பரேட்டுகளுக்கு மிகப் பெரிய அளவில் அந்தந்த நாடுகளில் உள்ள முதலாளித் துவ அரசாங்கங்கள் நிதிநிறுவனங் களில் கடன் வாங்கி, மானியங்கள் (bailout packages) அளித்தன. இவ்வாறு மானியங்கள் அளித்த பல அரசாங்கங் கள் தாங்கள் வாங்கிய கடனை நிதி நிறுவனங்களுக்குத் திருப்பித்தர முடி யாமல் தத்தளிக்கத் தொடங்கிவிட்டன. கார்ப்பரேட் திவால்தன்மை, இவ்வாறு, அரசாங்கத்தின் திவால்தன்மையாக மாற்றப்பட்டது. இதன்பின்னர் இவ்வாறு திவால்நிலைக்குத் தள்ளப்பட்ட அரசாங் கங்கள், திவால் நிலைமையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மற்ற செலவினங்களை வெட்டிச் சுருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த அரசாங்கங்கள் அனைத்தும் மக்களின் சமூகநலத் திட் டங்களுக்கு ஒதுக்கியிருந்த செலவினங் களைக் கடுமையாக வெட்டிச் சுருக்கி, உழைக்கும் மக்கள் மீது தாங்கொண்ணா அளவிற்குச் சுமைகளை ஏற்றின. அரசாங்கங்களின் இத்தகைய ‘சிக் கன நடவடிக்கைகள்’ மக்களின் வாங் கும் சக்தியை சுருங்கச் செய்தன. இது தற்போதைய பொருளாதார மந்த நிலையை ஆழமாக்கி மற்றுமொரு நெருக்கடிக்கான அடிப்படையாக அமைந்தது. அதன் விளைவாக பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்ததால், அரசாங்கங்க ளின் வருவாய்களை இவை குறைத் தன. இந்நெருக்கடி 2014இல் மேலும் கடுமையாகும். ஏனெனில் ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்து கடன் வாங்கி யுள்ள இந்த அரசாங்கங்கள் அனைத்தும் தங்கள் கடன்களை - சுமார் 1.3 டிரில்லி யனுக்கும் அதிகமான டாலர்கள் - தொகையை திருப்பிச் செலுத்த வேண் டிய தவணைகள் தொடங்கிவிடும். இப் போதுள்ள மந்த நிலைமை தொடரும் பட்சத்தில், அநேகமாக இந்த அரசாங்கங் களில் பெரும்பாலானவை, தாங்கள் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த இயலா நிலைமையில்தான் இருந்திடும்.முதலாளித்துவ அமைப்பிற்கு ஏற் பட்டுள்ள நெருக்கடிக்கு இந்த அமைப் புக்குள்ளாகவே தீர்வுகாண முடியாது என்பது தெள்ளத்தெளிவான ஒன்றாகும். ‘வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்’ போராட்டமும் அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் நடைபெற்ற போராட் டங்களும் முதலாளித்துவ அமைப்பு முறையையே கேள்விக்குள்ளாக்கியுள் ளன. பானர்ஸ், ‘‘இது, இந்த அமைப்பிற் குள் இருக்கிற குறைகள் அல்ல. இந்த அமைப்பே - முதலாளித்துவமே - குறையுடைய ஒன்றாகும்’’ என்றார். வெனிசுலாவில் ஹூயூகோ சாவேஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதானது, லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதுமே முற்போக்கான, நவீன-தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான சக்திகளின் அபரிமிதமான வளர்ச்சியை மீண்டும் உத்தரவாதப்படுத்தி இருக்கின்றன.
இன்றைய தினம் நமக்கு முன் உள்ள தேவை என்ன? முதலாளித்துவ முறையை சோசலிச முறையாக புரட்சிகரமான முறையில் மாற்றியமைக்கக் கூடிய விதத்தில் ஒரு வலுவான அரசியல் சக்தியே இன்றைய தேவையாகும். இந்தப் பின்னணியில், உலகில் நடைபெற்ற முதல் வெற்றிகரமான சோச லிசப் புரட்சியான ரஷ்யப் புரட்சி மூலம் அமைக்கப்பட்ட சோசலிசத்தின் மேன்மையை நன்குணர்ந்து அதனை மீண்டும் கொண்டு வருவதற்கானதோர் அவசரத் தேவையை நம் அனைவருக் கும் நவம்பர் புரட்சிதினம் மீண்டும் அறி வுறுத்துகிறது.மாபெரும் நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியும் அதனைத் தொடர்ந்து உரு வான சோவியத் யூனியனும் வர்க்க சுரண்டலிலிருந்து மனிதகுலத்திற்கு விடுதலை அளித்திட எடுத்து வைக்கப் பட்ட முதல் அடியாகும். சோசலிசத் தால் பாய்ச்சல் வேகத்தில் உருவாக்கப் பட்ட வெற்றிகள், ஒரு காலத்தில் மிகவும் பிற்போக்குப் பொருளாதாரமாக இருந்த ரஷ்யாவை ஒரு பலம்பொருந்திய பொரு ளாதாரமாக மாற்றியதிலும், ஏகாதிபத்தி யத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத் துத் தாக்குதல்களையும் எதிர்த்து முறி யடிக்கக்கூடிய ராணுவ வல்லமையை யும் உருவாக்கி, சோசலிச அமைப்பு முறையின் மேன்மையை உறுதி செய் தது. சோவியத் யூனியனில் சோசலிச அமைப்பு கட்டமைக்கப்பட்டதானது மனிதசமுதாய வரலாற்றில் பொன்னெ ழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வீர காவியமாகும். பாசிசத்தைத் தோல்வியுறச் செய்த திலும், அதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றை சோச லிச நாடுகளாக உருவாக்குவதிலும் சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பு, உலகத்தின் வளர்ச்சிப்போக்குகளில் மிக ஆழமானத் தாக்கத்தை ஏற்படுத் தியது. பாசிசத்திற்கு எதிரான வெற்றி காலனிச் சுரண்டலுக்கு எதிராக, காலனி யாதிக்க நாடுகளில் போராடிக் கொண் டிருந்த மக்களுக்கு தீர்மானகரமான ஓர் உந்து சக்தியாக விளங்கியது. சீனப் புரட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, வீரஞ் செறிந்த வியட்நாம் மக் களின் போராட்டம், கொரிய மக்களின் போராட்டம், கியூபா புரட்சியின் மகத் தான வெற்றி ஆகிய அனைத்தும் உல கின் வளர்ச்சிப் போக்குகளில் அபரிமித மான செல்வாக்கைச் செலுத்தின. வறுமை ஒழிப்பு, கல்லாமை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டத்தை இல்லாமல் ஒழித்தது, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்ற துறைகளில் சமூ கப் பாதுகாப்பை உறுதி செய்தது ஆகிய சோசலிச நாடுகளின் சாதனைகள், உல கம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் மத்தியில் தங்கள் நாடுகளில் அவர்கள் நடத்தி வந்த போராட்டங்களுக்கு ஒரு வலுவான உந்துசக்தியாக விளங்கியது.சோசலிச அமைப்பு அளித்து வந்த இத்தகைய வாழ்க்கைமுறை உலக முத லாளித்துவத்திற்கு சவாலாக அமைந் தது. எனவே அது தன்னை நிலைநிறுத் திக் கொள்வதற்காக, தான் இதற்கு முன் னெப்போதும் உழைக்கும் மக்களுக்கு அளித்திராத உரிமைகளையும் நலத் திட்ட நடவடிக்கைகளையும் பெயரள விலாவது மேற்கொள்ள வேண்டிய கட் டாயத்திற்கு ஆளாகியது. மக்கள்நல அரசு என்கிற கருத்தாக் கமும், இரண் டாம் உலகப் போருக்குப் பின் முதலா ளித்துவ நாடுகளில் உரு வான சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னலும் (தற்போது அவை இரக்கம் எதுவுமின்றி கைவிடப் பட்டு வருகின்றன) சோசலிசத்தின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டு, இந் நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவு களேயாகும். இன்றையதினம் மனிதகுல நாகரிகத்துடன் பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்துள்ள ஜனநாயக உரி மைகள் சோசலிச மாற்றத்திற்காக மக் கள் நடத்திய போராட் டங்களின் விளை பயன்களேயன்றி, முத லாளித்துவ வர்க்க ஆட்சியாளர்கள் அளித்த கருணையி னால் அல்ல.இத்தகைய புரட்சிகர மாற்றங்கள் மனிதசமுதாயத்தில் மிகவும் குறிப்பிடத் தக்க அளவிற்கு முன்னேற்றத்தை பாய்ச்சல் வேகத்தில் கொண்டுவந்தன. இன்றைய நவீன சமூகத்தில் அழிக்கப் படமுடியாத முத்திரையை இவை பதித் துள்ளன. இவை கலை, அறிவியல், அழ கியல், பண்பாடு என அனைத்துத் துறை களிலும் பிரதிபலிக்கத் தொடங்கின. ஐன்ஸ்டீன் திரைப்படத்துறையைப் புரட்சிகரமாக மாற்றிய அதே சமயத்தில், ஸ்புட்னிக் நவீன அறிவியலை வான மண்டலத்திற்கு விரிவாக்கிக் கொண்டு சென்றது. ஆயினும், இவ்வாறு அபரிமிதமான முன்னேற்றங்களை மனித சமுதாயம் கண்டிருந்த போதிலும், அதுவும் மிகவும் நெருக்கடியான சூழ்நிலைமைகளிலும், தனக்கு எதிரான சூழல் காணப்பட்ட நிலையிலும் அவற்றையெல்லாம் எதிர் கொண்டு, தரைமட்டமாக்கி, சாதனை புரிந்த சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு அவற்றை ஒருமுகப்படுத்தி, தக்கவைக்க முடியாமல் போனதேன்?

மேலோட்டமாகப் பார்க்குமிடத்து, தவறான புரிதல் மற்றும் தவறுகள் நடை பெற்ற இரு பகுதிகள் தெரிகின்றன. முத லாவது, தற்போதைய உலக எதார்த்த நிலைமைகள் குறித்த மதிப்பீடுகள் மற்றும் சோசலிசக் கருத்தாக்கம் குறித்தே இருந்து வந்த மதிப்பீடுகளில் தவறுகள் காணப்பட்டன. இரண்டாவ தாக, சோசலிச அமைப்பை உருவாக்கும் காலத்தில் எழுந்த நடைமுறைப் பிரச் சனைகள் சம்பந்தப்பட்டவை.சோசலிசக் கட்டமைப்பைக் கட்டிய மைப்பதற்கான போராட்டத்தில் உலக சோசலிச சக்திகளின் வெற்றியோ அல் லது தோல்வியோ எவ்வாறு தீர்மானிக்கப் படுகிறது? அவை, சோசலிசக் கட்டு மானத்தின்போது அடைகின்ற வெற்றி கள் மூலமாகவும், சர்வதேச அளவிலும் நாட்டிற்குள்ளேயும் இருக்கின்ற வர்க்க சக்திகளின் இடையே ஏற்படுகின்ற தொடர்புகள் மற்றும் சரியான மதிப்பீடு களை வைத்துமே தீர்மானிக்கப்படுகின்றன. தவறான மதிப்பீடுகள், சோசலிச நாடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற எதிரி குறித்து குறைத்து மதிப்பிட இட்டுச்செல்லும். சோசலிசம் குறித்து மிகையாக மதிப்பீடு செய்வது என்பதும் உலக முதலாளித்துவம் மேற் கொள்ளும் தாக்குதல் குறித்து கண்ணை மூடிக்கொள்ள இட்டுச் செல்லும். 

இயக்கவியலின் ஜீவனுள்ள சாரம் என் பது துல்லியமான நிலைமைகளை மிக வும் துல்லியமாக ஆய்வு செய்வதிலேயே அடங்கி இருக்கிறது (( the living essence of dialectics is the concrete analysis of concrete conditions) என்று மாமேதை லெனின் எப்போதும் நம்மை அறிவுறுத்தி வந்துள்ளார். நாம் மேற்கொள்ளும் ஆய் வுகள் தவறாகிப்போகுமானால், அல்லது உண்மையான நிலைமைகளைத் தவ றாகப் பார்ப்போமானால், பின் பிழையான புரிந்துணர்வுகளும், உண்மை நிலை மைகளிலிருந்து பிறழ்வுகளுமே ஏற்படும்.இருபதாம் நூற்றாண்டில் சோசலி சத்தைக் கட்டமைப்பதில் ஏற்பட்ட இந்த அனுபவத்தை, ஏகாதிபத்தியம் மிக வும் அரக்கத்தனமான முறையில் ராணுவ ரீதியாக, அரசியல்ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக மற்றும் கலாச் சாரரீதியாக தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ள இன்றைய சூழலில் மிகவும் முக்கியமாக அடிக்கோடிட்டுக் கொள்ள வேண்டும். சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் தகர்ந்த பின்னர், கடந்த இருபதாண்டுகளில், மிகவும் வெறிபிடித்த முறையில் கம் யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனும், அதன் கீழ் உள்ள அனைத்து அரசுகளும் பாசிசத்தை கம்யூனிசத்துடன் சமமாகப் பாவித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றி யுள்ளன. பாசிசத்தை கடுமையாக எதிர் கொண்டு, நிர்மூலமாக்கி, வெற்றி பெற்ற கம்யூனிசத்தின் பிரகாசமான வரலாற் றையும், பாசிசத்தைத் தோல்வியுறச் செய்வதில் சோவியத் யூனியன் ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பையும் மாற்றி எழுத, இவ்வாறாக, அவை முயற்சிக்கின் றன. ஹிட்லரின் ரெய்ச்ஸ்டாக் தலை மையகத்தின் மீது சோவியத் செஞ் சேனை வீரர்கள், செங்கொடியைப் பறக்க விட்டதன் மூலம், பாசிசத்திற்கு எதிராக கம்யூனிசத்தின் வெற்றியை உலகுக்குப் பறைசாற்றிய வீர வரலாற்றை மக்களின் ஞாபக சக்தியிலிருந்து அழித்திட அவை முயற்சிக்கின்றன. 1930களில் முதலாளித்துவத்திற்கு ஏற்பட்ட மாபெரும் பொருளாதார மந்த நிலைமை காலத்தில்தான் பாசிசம் தலைதூக்கியது என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க மறக்கக்கூடாது. 

இன்றையதினம் நடத்தப்படுகின்ற கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்துடன், உலக முதலாளித்துவத்திற்குத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் நெருக்கடியும், அதிக ரித்து வரும் வேலையில்லாத் திண்டாட் டமும் இணைந்து பாசிசக் கொள்கை கள் தலைதூக்கிட இட்டுச்செல்லும். இதுகுறித்து மக்கள் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும்.

எனவே, இறுதி ஆய்வில், முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு வலுவான அரசியல் மாற்று மட்டுமே மக்கள் மீதான மூர்க்கத்தனமான பொருளாதாரத் தாக்குதல்களிலிருந்து  மக்களைப் பாதுகாத்திட முடியும், தலைதூக்கும் பாசிச சக்திகளின் வளர்ச்சியையும் தடுத்திட முடியும்.


மாபெரும் நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியின் வளர்ச்சிக்கும் அதே போன்று அதன் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்த அம்சங்களை இன்றைய துல்லியமான நிலைமைகளில் துல்லியமாக ஆய்வு செய்வதன் அடிப்படையில், தேசிய அள விலும், உலக அளவிலும் முதலாளித் துவத்திற்கு எதிராக ஓர் அரசியல் மாற்றை வலுப்படுத்துவது, நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய படிப் பினையாகும். 

(தமிழில்: ச.வீரமணி)

Monday, November 5, 2012

அமைச்சரவை மாற்றம் : யாருக்காக?



மத்திய அமைச்சரவை மாற்றத்தில் 17 புதிய முகங்கள் சேர்க்கப்பட்டிருக் கின்றன. இது, கடலில் மூழ்கிக் கொண் டிருக்கும் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்க மாகிய கப்பலை எப்படியாவது காப்பாற் றிட பிரதமரும், சோனியா காந்தியும் மேற் கொண்ட கடைசி முயற்சியாகவே தெரி கிறது. இது எப்படி இருந்த போதிலும் இதற்குப்பின்னே அமைந்துள்ள மிக முக்கிய நோக்கம் என்பது, அரசாங்கத் தின் மீதமிருக்கும் பதவிக் காலத்திற்குள் பிரதமர் தனக்கு மிகவும் பிடித்த நவீன தாராளமய நிகழ்ச்சிநிரலை எப்படியாவது அமல்படுத்திட வேண்டும் என்பதே யாகும். பெட்ரோலியம் அமைச்சகத்தி லிருந்து ஜெய்ப்பால் ரெட்டி நீக்கப் பட்டிருப்பது இந்த நிகழ்ச்சிநிரலின் மிக வும் குறிப்பிடத்தக்க ஒன்று. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்  என்னும் நிறுவனம், ஒப்பந்தம் மூலமாக எடுத்துள்ள கிருஷ்ணா-கோதாவரி எரிவாயுப் படுகையில் அந் நிறுவனம் மிகவும் இழிவான வகையில் பல்வேறு தில்லுமுல்லுகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. உற்பத்திச் செலவினங் களை தங்க முலாம் பூசி பூதாகரமாகக் காட்டி, அதிக விலையைக் குறிப்பிட்டு, கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது. இதற்கு அரசும் உடந்தையாக இருந்து வருகிறது.
இயற்கை எரிவாயுக்களின் விலைகளை மாற்றியமைப்பதற்கான காலக்கெடு வரும் 2014 ஏப்ரலில்தான் என்ற போதிலும், அதன் விலையை உட னடியாக உயர்த்த வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக ரிலையன்ஸ் நிறுவனம் அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து வந்தது. பெட்ரோலியத்துறை அமைச்ச ராக இருந்த ஜெய்ப்பால் ரெட்டி இக் கோரிக்கையை ஏற்க மறுத்து வந்தார். இவ்வாறு உயர்த்த வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த நிர்ப் பந்தத்தையும் அவர் கண்டுகொள்ள வில்லை. மேலும் அவர் மிகவும் துணிச் சலுடன், அரசாங்கத்திற்குத் தொடர்ந்து வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரக் கூடிய விதத்தில், கிருஷ்ணா-கோதாவரி நதிப் படுகைகளில் மட்டும் எரிவாயு உற் பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரு வதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். கிருஷ்ணா-கோதாவரி எரிவாயுப் படுகை பிரச்சனை பலமுறை நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப் பப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பிரத மருக்கும் பெட்ரோலியத்துறை அமைச் சருக்கும் கடந்த ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து கடிதங்களும் எழுதி வந் திருக்கிறார்கள். உற்பத்திச் செலவினங் களில் தங்கமுலாம் பூசி விலைகளை செயற்கையாகப் பூதாகரப்படுத்துதல், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக ஓர் அலகு எரிவாயுவின் விலையை 4.12 அமெரிக்க டாலருக்கு உயர்த்துதல் அப்போதைய ஹைட்ரோ கார்பன் டைரக்டர் ஜெனரலின் ஆட்சேபகரமான பங்கு ஆகிய அனைத்தையும் அவர்கள் தங்கள் கடிதங்களில் எழுப்பியிருந்தார் கள். 2006ஆம் ஆண்டிலிருந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துவந்த நிலைப்பாடுகள் எவ்வளவு சரியானவை என்பதை, கிருஷ்ணா-கோதாவரி எரி வாயுப் படுகை ஒப்பந்தம் குறித்து தணிக்கை செய்துள்ள மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர் (சிஏஜி) அறிக்கையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. அது மேலும் ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கத்திற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலிருந்து வரும் கள்ளப்பிணைப்பையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தைப் பகைத்துக் கொண்டதற் காக, ஜெய்ப்பால் ரெட்டி அதிக விலை கொடுக்க வேண்டியதாயிற்று. நாட்டின் அமைச்சர்களை நியமிப்பதில் பெரும் முதலாளிகளின் பிடி எந்த அளவிற்கு வலுவாக இருக்கிறது என்பதை இது மிகவும் வெட்கங்கெட்டமுறையில் வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது.இப்போது நடைபெற்றுள்ள அமைச் சரவை மாற்றத்தின் மூலம், கார்ப்ப ரேட்டுகளின் நலன்களுக்கும், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும் ஆதர வாக இருக்கும் நபர்கள் அனை வரும், மிகவும் கேந்திரமான பொருளா தார அமைச்சகங்களின் கீழ், மிகவும் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டு விட்டார்கள். குறிப்பாக, பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரான பின் நிதியமைச் சர் பணியிடம் காலியானதும், நவீன தாராளமயக் கொள்கைகளின் மீது ‘‘வெறித்தனமாக வேட்கை’’ கொண் டிருக்கும் மன்மோகன் சிங், அந்த இடத் திற்கு ப.சிதம்பரத்தை நியமித்தன் மூலம் தன் வேட்கையைத் தணித்துக் கொண் டிருக்கிறார். அதுபோன்றே, வர்த்தக அமைச்சகத்தில் ஆனந்த் சர்மா, டெலி கம்யூனிகேசனில் கபில் சிபல், கனரகத் தொழில்களில் பிரபுல் பட்டேல் மற்றும் மனித வள வளர்ச்சித்துறை அமைச்ச ராகப் புதிதாக பல்லம் ராஜூ, தனிப் பொறுப்புடன் மின்சாரத்துறை இணை அமைச்சராக ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரை நியமித்ததன் மூலம் அவரது எண்ணம் ஈடேறிவிட்டது. இவர்கள் அனைவருமே கார்ப்பரேட் நலன்களைப் பிரதிபலிக்கும் பேர்வழிகளேயாவர். அமைச்சரவை மாற்றத்தில் கவ னிக்கப்பட வேண்டிய மற்றொரு மிக முக் கியமான அம்சம் என்னவெனில், அதன் அமைச்சர்களின் மீதான ஊழல் குற்றச் சாட்டுகள் குறித்தோ அல்லது அவர் களின் இரண்டகமான பேரங்கள் குறித்தோ கிஞ்சிற்றும் கவலைப்படாமல், அவற்றையெல்லாம் காங்கிரஸ் ஒதுக் கித்தள்ளியிருப்பதாகும். சல்மான் குர் ஷித் தலைமையில் உள்ள ஓர் அறக் கட்டளை ஊழல் குற்றச்சாட்டுக்களில் மாட்டிக்கொண்டிருப்பதை அடுத்து, உத்தரப்பிரதேச மாநில அரசாங்கம் அதன்மீது விசாரணை நடத்திக்கொண் டிருக்கையில், அதைப்பற்றிச் சற்றும் பொருட்படுத்தாது அவருக்கு அயல் துறை விவகாரங்கள் என்னும் மிக முக் கியமான இலாகா ஒதுக்கப்பட்டிருக் கிறது. அதேபோன்று சசி தரூர் 2010இல் அமைச்சராக இருந்த சமயத்தில், தான் திருமணம் செய்து கொள்ள இருந்த பெண்மணிக்காக ஐபிஎல் கொச்சி குழு விடம் பேரம் பேசியது வெளியானதை அடுத்து அமைச்சர் பதவியிலிருந்து அப் போது அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது.
இரண்டு ஆண்டுகள் கழித்து, ‘இது என்ன பெரிய குற்றமா?’ என்று கருதி பிரதமரும், சோனியா காந்தியும் அவரை மீண்டும் தங்கள் அமைச் சரவையில் இணைத்துக் கொண்டிருக் கின்றனர்.இரு திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட் டதை அடுத்து அவர்கள் ராஜினாமா செய்ததாலும், திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து வெளியேறியதாலும் ஏற்பட்ட காலி யிடங்களை நிரப்புவதற்காகவும் கூட அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பதவியேற்றுக்கொண்ட ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் காங்கிரசைச் சேர்ந்தவர்களேயாவர். இவ்வாறு அமைச் சரவை மாற்றியமைக்கப்பட்டபின் ஐ.மு. கூட்டணி அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களேயாகும். மன் மோகன் சிங் ஆட்சியில் நன்கு செழித்து வளர்ந்துள்ள வர்த்தகர்கள்-அரசியல் வாதிகள்-அதிகாரவர்க்கத்தினர் இடை யேயான தவறான பிணைப்பைப் பட்ட வர்த்தனமாகக் காட்டும் கையேடாக தற்போதைய அமைச்சரவை அமைந் துள்ளது. பெரும் கார்ப்பரேட்டுகளுக்கும் அந்நிய மூலதனத்திற்கும் அபரிமிதமான சலுகைகள், சாமானிய மக்களின் வாழ் வில் தாங்கமுடியாத அளவிற்குத் தாக் குதல்கள், அதிக அளவிலான ஊழல் பேரங்கள் கண்ணுக்குத் தெரியத் தொடங் கியுள்ளன. இவற்றை முறியடிக்க வேண்டு மானால், தொழிலாளர் வர்க்கமும், உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரி வினரும் அரசாங்கத்திற்கு எதிரான தங் கள் எதிர்ப்பு இயக்கங்களை மேலும் உக் கிரமாக்கிட வேண்டும். அடுத்து மக்கள வைத் தேர்தல் நடைபெறுகையில், இந்த அரசாங்கத்தை உத்தரவாதமான முறை யில் உதறித் தள்ளுவதைத் தவிர, நாட்டு மக்களுக்கு வேறு மார்க்கமில்லை.
(தமிழில்: ச.வீரமணி)

Sunday, November 4, 2012

ஊடக சுதந்தரத்தின் மீதான தாக்குதல்




மத்திய நிதி அமைச்சரின் மகன் ‘‘வாத்ராவை விட அதிகமாகவே சொத்து சேர்த்திருக்கிறார்’’ என்று டிவிட்டரில் எழுதியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது பேச்சு சுதந்திரத்தைத் தடை செய்வதற்கான வாய்ப்பான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மீண்டும் நினைவுறுத்தும் சம்பவமாக மாறியுள்ளது. இதில் குறிப்பாக அதிர்ச்சி தரத்தக்க விஷயம் என்னவெனில், கார்த்தி சிதம்பரத்திடமிருந்து மின்னஞ்சல் மூலமாக வந்த புகாரை வைத்தே ஒரு போலீஸ் படை ‘‘ஊழலுக்கு எதிரான இந்தியா’’ அமைப்பின் செயல்வீரரைப் படுக்கையிலிருந்து கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு வந்து அவரைக் கைது செய்திருக்கிறது என்பதுதான். மின்னியல் வடிவத்தில் விமர்சனரீதியான கருத்துக்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66(ஏ) பிரிவின்கீழ தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில், இந்த மேலாதிக்க நடவடிக்கை சமீபத்திய ஒன்றாகும். இது அப்பட்டமான தணிக்கை என்பதைத் தவிர வேறு அல்ல. இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டியதும் எதிர்க்க வேண்டியதும் அவசியமாகும்.
2008ஆம் ஆண்டில் சட்டத் திருத்தம் ஒன்றின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பிரிவானது, அரசியலமைப்புச் சட்ட ரீதியாக சரியானதுதான் என்று உறுதிப்படுத்த இயலாத ஒன்றேயாகும். அது மிக மோசமாக உருவாக்கப்பட்ட சட்டத் திருத்தம் என்பதுமட்டுமின்றி நிச்சயமாக மேலோட்டமான ஒன்று என்பதோடு அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(அ) பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள பல ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பேச்சு சுதந்திரத்தை அடியோடு அழிக்கும் தன்மை வாய்ந்ததுமாகும். மேலும், பெருமளவிற்குத் தாக்கும் நோக்கம் கொண்ட, அச்சுறுத்தும் தன்மை கொண்ட, அசூயை அல்லது சங்கடத்தை உருவாக்கக்கூடிய தன்மை கொண்டது என்ற அடிப்படையில் தகவல் பரிமாற்றத்தை ஒரு குற்றமாக மாற்றுவது என்பது எதேச்சாதிகாரமான அமலாக்க வழிமுறையைக் கட்டவிழ்த்து விடும். கடந்த சில மாதங்களாக இதைத்தான் இந்த நாடு பார்த்துக்கொண்டு வருகிறது. பேச்சு சுதந்திரத்தைப் பொறுத்தவரையில், இந்தியா ஒரு பாரம்பர்யத்தைக் கொண்டதாகும். அடிப்படை உரிமைகள் குறித்து சட்டரீதியான விளக்கங்கள், அனைத்து வகையான ஊடகங்களுக்கும் சமமாகப் பொருந்துவதாக இருக்க வேண்டும். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் பற்றிய பல குற்றச்சாட்டுக்களை அச்சிலோ அல்லது ஒளி-ஒலிபரப்பின் மூலமாகவோ, கொண்டு வருவதற்காகப் பத்திரிகை யாளர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க இயலாது.  அதைப் போலவே ஊழலுக்கு எதிரான இந்தியாஅமைப்பின் செயல்வீரர் ஈடுபட்டதாக கார்த்தி சிதம்பரம் சாட்டுகிற அவதூறு என்பது அடிப்படையில் உரிமையியல் (சிவில்) சமாச்சாரமாகும். மேலும் இந்த விஷயத்தில் செய்ய வேண்டியது என்னவென்பதுபற்றிய சட்டமும் தெளிவாகவே உள்ளது. அதாவது இது தொடர்பாக அறிவிப்பு அனுப்பப்பட்டு, அதற்குப் பதிலளிப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டு, அதன்பின்பு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதே அடிப்படை செயல்முறையாகும். மிக வேகமாக வளர்ந்துகொண்டு வரும் இணையதள ஊடகத்தை வேறுவகையாகக் கையாளவேண்டும் என்பதான எந்தவொரு வாதமும் மறுதலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். செல்வாக்கு மிக்கவர்களின் மீதான விமர்சனரீதியான விஷயங்களைப் பதிப்பித்ததாகவோ அல்லது மின்னியல் வடிவில் சுற்றுக்கு விட்டதாகவோ மும்பையில் கேலிச்சித்திரக் கலைஞர் அசீம் திரிவேதி, மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா மற்றும் அவரது அண்டைவீட்டுக்காரர் கைது செய்யப்பட்டதையொட்டி மக்கள் மத்தியில் எழுந்த கடுமையான கோபம், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மறுபரிசீலனை செய்ய  மத்திய அரசைத் தூண்டவில்லை என்பது துரதிர்ஷ்டவசமாகும். மேற்கு வங்கத்தில் இரண்டு பேரைத் துன்புறுத்தியதற்கு, போலீசே காரணம் என்று மேற்கு வங்க மனித உரிமைகள் கமிஷன் சுட்டிக்காட்டி அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட பின்னரும் கூட, மத்திய அரசின் மெத்தனம் நீடிக்கிறது. இதனால், பாதிக்கப்படும் பலரின் நன்மை கருதியும், பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக விருப்பமான ஒரு கருவியாக அது மாறியுள்ள நிலையிலும், தகவல் தொழில்நுட்பச் சட்டம் முழுவதுமே மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
(நன்றி: தி இந்து நாளிதழ், 2.11.12 தலையங்கம். தி இந்து போட்காஸ்ட்டில் தமிழாக்கம் செய்து ஒலிவடிவில் வீ.பா. கணேசன் வழங்கியதை, வரிவடிவமாக்கியது: ச.வீரமணி)