Saturday, November 6, 2010

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பயங்கரவாதத் தொடர்புகள்


ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் ஆட்கள் பயங்கரவாதத் தாக்குதல்களில் சம்பந்தப் பட்டிருப்பது வெளியுலகத்திற்குத் தெரிய வருவது அதிகரித்திருக்கும் சூழலில், ஆர்எஸ்எஸ் இயக்கமானது ‘தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தாக்குதல்’ (‘Offence as the best form of defence’) கொள்கையைக் கடைப்பிடிக்கத் துவங்கியிருக்கிறது. அது நவம்பர் 10 அன்று அதன் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்புடன் நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இது தொடர்பான விவரங்களைப் பின்னர் தருவோம்.

2007 அக்டோபர் 27 அன்று நடைபெற்ற ஆஜ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த தலைவரான இந்த்ரேஷ் குமார் மட்டும் அல்ல என்று ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
2010 அக்டோபர் 22 அன்று குற்ற அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு (ஹகூளு-ஹவேi-கூநசசடிசளைஅ ளுளூரயன), குற்ற அறிக்கையில் இந்த்ரேஷ் குமார் ஒரு சதிகாரர் (உடிளேயீசையவடிச) என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அவரை எதிரியாக (யஉஉரளநன) குற்ற அறிக்கையில் சேர்க்கவில்லை. அவர் அல்லாது, குற்ற அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்ற ஐந்து எதிரிகளில், நான்கு பேர் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என்று பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சதியுடன் தொடர்புடைய ஆறாவது முக்கியமான நபர் இறந்து விட்டதால் எதிரியாக சேர்க்கப்படவில்லை. அவ்வாறு இறந்த நபரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புள்ளவரென்றும் அது குறிப்பிட்டிருக்கிறது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 2008 செப்டம்பர் 8 அன்று மாலேகான் பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதலுக்கு, ஒருசில வாரங்களுக்குப்பின், மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு, பலரைக் கைது செய்தது. அவற்றில் ஒரு ராணுவ அதிகாரியும், இந்துத்வா இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சாமியாரிணியும் உண்டு. தேச விரோத பயங்கரவாத நடவடிக்கை களில் ஈடுபட்டமைக்காக இந்துத்வா வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவது சமீபகாலங்களில் இது முதல் தடவையாகும். இதனைத் தொடர்ந்து மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) மற்றும் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு (ஏடிஎஸ்) மேற்கொண்ட புலனாய்வுகளின் அடிப்படையில் தற்போதைய குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆஜ்மீர் தாக்குதல் மற்றும் ஹைதராபாத்தில் 2007 மே 18 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இடையேயும் தொடர்புகள் இருப்பதாகப் பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன. 2007 பிப்ரவரி 18 அன்று நடைபெற்ற தில்லி - லாகூர் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் மீதான பயங்கரவாதத் தாக்குதலிலும் இந்த எதிரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றவுடனே, 2008 அக்டோபர் 13 அன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் கவனத்திற்குக் கீழ்க்கண்ட சம்பவங்களைக் கொண்டுவந்தது. ‘‘நாடு முழுதும் நடைபெற்று வரும் வெடிகுண்டுத் தாக்குதல்களில் பஜ்ரங் தளம் அல்லது இதர ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சம்பந்தப்பட்டிருப்பது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் காவல்துறையினரின் புலனாய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. மகாராஷ்ட்ராவில் 2003இல் பர்பானி, ஜால்னா மற்றும் ஜல்கான் மாவட்டங்களில் நடைபெற்ற சம்பவங்கள், 2005இல் உத்தரப்பிரதேசத்தில் மாவ் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம், 2006இல் நாண்டட் சம்பவம், 2008 ஜனவரியில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவம், கான்பூரில் 2008 ஆகஸ்ட்டில் நடைபெற்ற சம்பவம், மற்றும் பல சம்பவங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டிருந்தது. இந்த சம்பவங்கள் அனைத்தும் முழுமையாக புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, இவற்றிற்குக் காரணமான கயவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தி இருந்தது.
ஆரம்பத்தில், மாலேகான் கைதுகளுக்குப் பின்னர், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, ‘கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கேயுரிய பாணியில் பதிலளித்துக் கொண்டிருந்தது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில இந்திய பிரச்சார பிரமுகர், மன்மோகன் வைத்யா, அப்போது ஊடகங்களுக்கு, ‘‘சங்பரிவாரத்தின் சித்தாந்தங்களிலிருந்து அவர்கள் உத்வேகம் பெற்றிருந்திருக்கலாம், ஆயினும் அவர்கள் சங் பரிவாரத்தின் செயலாற்றும் உறுப்பினர்கள் அல்ல’’ என்று கூறியிருந்தார். இவ்வாறு இவர் கூறுவதும் ஒரிஜினல் அல்ல. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் நாதுராம் கோட்ஷே குறித்து சொல்லப்பட்ட வாசகங்கள்தான் இவைகள். ஆயினும் கோட்ஷேயின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்திட்ட நேர்காணலில் தங்கள் குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று பதிவு செய்திருக்கிறார். வேறு சிலர், இந்து அடிப்படைவாதத்தின் உதிரி அமைப்புகள் சில, பொறுமையிழந்து, இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்கள். இதே தொனியில், வேறு சில ஆர்எஸ்எஸ் தலைவர்களும்கூட, ‘இயக்கத்திலிருந்து விலகிச்சென்ற சிலர்’ வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம் என்று ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகளில் ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஆனால், அதற்காக ஆர்எஸ்எஸ் இயக்கத்தையே ஒட்டுமொத்தமாக பயங்கரவாத அமைப்பு என்று கூறுவது சரியல்ல என்று வாதிட்டார்கள். இதுவும் மகாத்மா காந்தியின் கொலை வழக்கு நடைபெற்ற சமயத்தில் ஆர்எஸ்எஸ் கூறியவைதான். இத்தகைய அடிப்படையில்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் அன்றும், ‘‘பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியது.

ஆயினும், இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்ற அறிக்கைகளிலிருந்து, பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகள் நன்கு வெளிப்பட்டுள்ளன. எனவேதான் ஆர்எஸ்எஸ் தன் உத்தியை மாற்றிக்கொண்டு, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தவறாகக் கூறப்பட்டிருப்பதாகக் கூறி நாடு தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. மூன்று நாட்கள் நடைபெற்ற அதன் அகில பாரதீய கார்யகாரி மண்டல் (Akhil Bharatiya Karyakari Mandal) மாநாட்டில் கடைசி நாளான அக்டோபர் 31 அன்று இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் நாடு முழுதும் நடைபெறும் என்றும், லக்னோவில் அதன் தலைவரும், ஹைதராபாத்தில் அதன் பொதுச் செயலாளரும் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அதன் பொதுச் செயலாளர் மிரட்டும் தொனியில், பயங்கரவாதத்துடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தொடர்புபடுத்தியிருப்பதற்கு எதிராக ‘‘இந்து சமூகம் சீற்றம் அடைந்திருக்கிறது’’ என்றும், ‘‘தேசியவாத’’ ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நற்பெயரைக் கெடுத்திட மேற்கொள்ளப்படும் எத்தகைய முயற்சியும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என்று கூறியிருக்கிறார். இத்தகைய எதிர்ப்புகள், அரசாங்கங்களையும், புலனாய்வு அமைப்புகளையும் மேலும் இதில் தொடரா வண்ணம் தடுப்பதற்கான நிர்ப்பந்தங்கள் என்பது தெளிவு.
பயங்கரவாதம் என்பது தேச விரோதம் என்றும், அதற்கு எதிராக நாடு கிஞ்சிற்றும் சகிப்புத் தன்மை காட்டக்கூடாது என்றும் நாம் அடிக்கடியும் தொடர்ந்தும் இப்பகுதியில் கூறிவந்திருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. அனைத்து விதமான பயங்கரவாதமும் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கின்றன, அதன் மூலம் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அழிக்க முயற்சிக்கின்றன. எனவே, தற்போதைய புலனாய்வுகள் எவ்விதமானத் தடங்கலுமின்றி நடைபெற்று, நாட்டின் நலன்கள் காப்பாற்றப்பட வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றுத் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Friday, November 5, 2010

பராக் ஒபாமா இந்தியப் பயணம்:பிரகாஷ் காரத்



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவிற்கு நவம்பர் முதல்வாரத்தில் வருகை தருகிறார். சென்ற முறை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவிற்கு வந்திருந்த போது, நாடு முழுதும் விரிவான அளவில் அவரது வருகைக்கு எதிராக எதிர்ப்பியக்கங்கள் நடைபெற்றன. அவரது பயணத்தின்போது பிரதானமாக இராக்கில் நடைபெற்ற யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளர்ச்சிகள் நடைபெற்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவரது பயணத்திற்கு எதிராக உறுப்பினர்களின் கிளர்ச்சிகள் நடைபெற்றன.

பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும், புஷ் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதும் உலகம் முழுதும் ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்த்தப் பட்டது. அமெரிக்க செனட் சபையில் இராக்கில் நடைபெறும் யுத்தத்தினை எதிர்த்துக் குரல் கொடுத்த ஆப்ரிக்க-அமெரிக்கரான இளம் அதிபர் பராக் ஒபாமாவிடம் மக்களுக்குப் பெருமளவில் எதிர்பார்ப்புகள் இருந்தன. புஷ் சகாப்தத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவே உலகம் பார்த்தது. ஒபாமா நிர்வாகத்தின் சுமார் ஈராண்டு கால ஆட்சியானது, அவ்வாறான எதிர்பார்ப்புகளில் பெரும்பாலானவற்றைப் பொய்ப்பித்து விட்டன. ஆட்சி புரியும் விதம் மாறியிருக்கிறது என்றபோதிலும், அமெரிக்க அயல்துறைக் கொள்கையின் சாராம்சத்தில் பெரிய அளவிற்கு மாற்றம் எதுவும் இல்லை.
இராக்கில் போரிட்டுக் கொண்டிருக்கும் துருப்புக்கள் விலக்கிக்கொள்ளப்படுவார்கள் என்று அமெரிக்கா அறிவித்திருந்தபோதிலும், 50 ஆயிரம் அமெரிக்கத் துருப்புக்களும் மற்றும் இதர கூலிப் படையினரும் இன்னமும் இராக்கிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ராணுவத் தலங்கள், அமெரிக்க நலன்களை மேற்பார்வையிடுவதற்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் முக்கிய நோக்கம் அந்நாட்டின் எண்ணெய் வளங்களில் ஒரு பெரும் பங்கினைக் கைப்பற்றுவதுதான். ஒபாமா நிர்வாகம் தொடர்ந்து ஈரானை, அணுசக்திப் பிரச்சனையில் குறிவைத்துக் கொண்டிருக்கிறது. ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலால் நிறைவேற்றப்பட்ட ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடையை நான்காவது முறையாகப் பெறுவதற்கான விஷயத்தில் முன்னணியில் நிற்கிறது. பாலஸ்தீனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வுக்கான பேச்சு வார்த்தைகளைத் தொடங்கிட உறுதிமொழி அளித்திருந்தபோதிலும், ஒபாமா நிர்வாகம் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. ஏனெனில் அது அமெரிக்காவில் வலுவாக விளங்கிடும் யூதர்களைப் பகைத்துக் கொள்ள விரும்ப வில்லை. அது தொடர்ந்து இஸ்ரேலின் சட்டவிரோதமான ஆட்சியையும் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் அதன் விரிவாக்கத் திட்டங்களையும் கவனிக்காதது போலிருப்பது தொடர்கிறது.

ஆப்கானிஸ்தானத்தில், ஒபாமா 30 ஆயிரத்திற்கும் அதிகமான துருப்புக்களை அனுப்பியிருக்கிறார். அப்பிராந்தியத்திற்காக ‘‘ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்’’ போர்த்தந்திரத்தை (‘‘Af-pak’’ strategy)த் திட்டமிட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க-நேட்டோ படையினரால் தாலிபான்களை நசுக்க முடியவில்லை, மாறாக ஆப்கான் மக்களை மேலும் துன்பத்திற்குள்ளாக்குவதில்தான் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒபாமா நிர்வாகம் கியூபாவிற்கு எதிராக மேற்கொண்டுள்ள சட்டவிரோத பொருளாதாரத் தடை தொடர்கிறது. கியூபா மீதான வர்த்தகத் தடைகளை நீக்க வேண்டுமானால், அங்கு ‘‘ஜனநாயகத்திற்காக’’ நடைபெறும் தொடர் முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமாம்.
ஒபாமா எடுத்திருக்கிற உருப்படியான நடவடிக்கை என 2009இல் பிரேக்கில் ஆற்றிய உரையைக் கூறலாம். அப்போது அவர் உலகம் முழுதும் முற்றிலுமாக அணுஆயுதங்களை ஒழித்திட அறைகூவல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவுடன் அது போர்த்தந்திர ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (Strategic Arms Reduction Treaty (START III)) செய்து கொண்டது. இதன்படி இரு நாடுகளும் தங்களுடைய அணுஆயுதங்களில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆயினும் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க செனட் சரியென்று ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டிய திருக்கிறது.

இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்குப் பின், ஒபாமா நிர்வாகம் ஒன்றை உறுதிப்படுத்திவிட்டது. அது, ஆட்சியிலிருப்பவர்கள் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு எதிராக உலக அளவிலான போர்த்தந்திர நடவடிக்கைகளிலும், அயல்துறைக் கொள்கைகளிலும் எவ்வித அடிப்படை மாற்றத்தையும் கொண்டுவர மாட்டார்கள் என்பதுதான்.
அமெரிக்கப் பொருளாதாரம் இன்னமும் மீளமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில்தான், வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 9.6 விழுக்காடு அளவிற்கு உச்சத்தில் இருக்கக்கூடிய நிலையில்தான், ஒபாமா இந்தியாவிற்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலைமையானது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த ஆதரவைக் குறைத்திருக்கிறது. இது சமீபத்தில் அங்கே நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நடைபெற்ற தேர்தல்களில் டெமாக்ரடிக் கட்சி கடும் இழப்பினை அடைந்திருப்பதில் பிரதிபலிக்கிறது. எனவே, ஒபாமாவின் பயணம் இந்தியாவின் சந்தைகளை மிக அதிக அளவில் அமெரிக்காவின் பக்கம் திறந்திடவும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் சில்லரை வர்த்தகத் துறையிலும் வேளாண்துறையிலும் அதிக அளவில் முதலீடு செய்திட அனுமதிக்கவும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஒபாமா நிர்வாகம் இந்தியாவுடன் ‘அவுட்சோர்சிங்’ வர்த்தம் வைத்துக்கொள்வதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், இந்தியா அமெரிக்காவிற்கு அதிக அளவில் வர்த்தக வாய்ப்புகளை அளித்திட வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

ஒபாமாவின் விஜயம் இந்தியாவில் பல்வேறுவிதமான சிந்தனைப் போக்குகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஆள்வோர் மத்தியில் அதிக அளவில் அமெரிக்க ஆதரவு மனப்பாங்கு இருப்பதால், இவ்வாய்ப்பை அமெரிக்காவுடனான போர்த்தந்திரக் கூட்டணியை (strategic alliance) வலுப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ராணுவத்துறையில் மேலும் விரிவான அளவில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும், இந்தியாவில் புதிய துறைகளில் அமெரிக்காவின் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரித்திடவும் ஒப்புக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல, வலதுசாரிகளில் ஒரு பிரிவினரும், கார்பரேட் ஊடகங்களும் சீனாவிற்கு எதிராகச் சரியான போட்டியை அளித்திட வேண்டுமானால் இந்தியா, அமெரிக்காவின் கொள்கைகளோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். கிளிண்டன் நிர்வாகத்தின்போது வாஜ்பாய் அரசாங்கத்தால் ‘‘ஜனநாயகங்களின் சமூகம்’’ (“Community of Democracies”) என்ற பெயரில் அமெரிக்கா வானளாவப் புகழப்பட்டதையெல்லாம் கடந்த காலத்தில் நாம் பார்த்தோம்.

இந்தியாவில் இன்றும் கூட, பலர் புஷ் சகாப்தம் மீது நாட்டம் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே இந்தியாவிற்கு மிகவும் சிறந்தவராக ஜார்ஜ் புஷ் இருந்திருக்கிறார் என்று அமெரிக்காவிற்கான முன்னாள் இந்தியத் தூதர் ரொனென் சென் கூறியிருக்கும் வாசகங்களே இதற்குச் சான்று. அமெரிக்காவின் அடிவருடியாக இருப்பதற்காக ஏங்குபவர்கள் புஷ் சகாப்தத்தை இழந்துவிட்டதற்காக மிகவும் கவலைப் படுகிறார்கள். இந்தியா, அமெரிக்காவின் நம்பகமான போர்த்தந்திரக் கூட்டணி நாடாக மாறும்பட்சத்தில், இந்தியாவை ஒரு மாபெரும் வல்லரசாக உருவாக்க முடியும் என்று உறுதிமொழி அமெரிக்காவால் அளிக்கப்பட்டது. ஆயினும், புஷ்சும்கூட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்புநாடாக இந்தியா வருவதை ஏற்க மறுத்துவிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை, புஷ்சிற்கும் ஒபாமாவிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அங்கீகரிக்கிறோம். அதே சமயத்தில், ஒபாமா நிர்வாகமும் உலகை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற அமெரிக்காவின் அடிப்படை அணுகுமுறையின் தொடர்ச்சியே என்பதையும் நாம் அறிவோம். அதனால்தான் ஒபாமாவின் பயணத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர் தலையீடுகளுக்கு நாட்டு மக்களின் எதிர்ப்பைத் தெரிவித்திடுவதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தத் தீர்மானித் திருக்கிறோம். நாட்டில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்திட அமெரிக்க அரசாங்கம் அளித்திடும் நிர்ப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்ளுக்கு நாட்டின் கேந்திரமான துறைகளான வேளாண்மை, சில்லரை வர்த்தகம் மற்றும் உயர் கல்வித்துறைகளைத் திறந்துவிட வசதிசெய்து தருவதற்கும் மக்களின் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான சிறிய கடைக்காரர்கள் மற்றும் வர்த்தகர்கள் வாழ்வாதாரங்களை அழிக்கக்கூடிய விதத்தில் நாட்டிற்குள் வால்மார்ட் நிறுவனத்தை அனுமதித்திட ஒபாமா பயணம் பயன்படுத்தப் படக்கூடாது. மத்திய வர்த்தக அமைச்சரும் (Commerce Minister) ஐமுகூ அரசாங்கத்தின் ஒருசில பிரிவுகளும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு வகைசெய்திடும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
2005இல் கையெழுத்தான இந்திய - அமெரிக்க பாதுகாப்புத்துறை கட்டமைப்பு ஒப்பந்தத்தின் (Indo-US Defence Framework Pact) கீழ் அமெரிக்கா மேலும் பல ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது. அவற்றின்படி இந்திய ராணுவம், அமெரிக்க பெண்டகனின் துணைப்படை போல் மாறிவிடுகிறது. இந்தியா, அமெரிக்காவிடமிருந்துதான் ஆயுதங்களைப் பெரிய அளவில் வாங்க வேண்டும் என்பதில் ஒபாமா மிகவும் குறியாக இருக்கிறார். ஏற்கனவே, இந்தியா சி-17 ராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கிட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டன. அமெரிக்கர்கள் மேலும் 126 போர் விமானங்களை இந்தியாவை வாங்க வைப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவற்றின் மதிப்பு பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகும். இடதுசாரிக் கட்சிகள், அமெரிக்காவுடன் இந்தியா ராணுவ ஒத்துழைப்பு வைத்திருப்பதைத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. இத்தகைய ஒத்துழைப்பானது நாட்டின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையையும், போர்த்தந்திர சுயாட்சி (strategic autonomy)யையும் கடுமையாகப் பாதிக்கும்.

போபால் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி உத்தவாதப்படுத்தப்படுவதற்கு அதிபர் ஒபாமா பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருக்குக் கூறப்பட வேண்டும். உலகில் நடைபெற்றுள்ள மிகமோசமான தொழிற்சாலைப் பேரிடர் விபத்துக்கு ஓர் அமெரிக்க நிறுவனம்தான் பொறுப்பாக இருந்திருக்கிறது. வளைகுடாக் கடற்கரையில் எண்ணெய்க் கசிவினை சுத்தம் செய்வதற்காக பல பில்லியன் டாலர்களை ஒபாமாவால் பெற முடியும் என்றால், போபால் நச்சுக் கசிவுக்குக் காரணமான டவ் கெமிகல்ஸ் (Dow Chemicals) நிறுவனத்திடமிருந்து இழப்புகளுக்கு ஈடான தொகை அவரால் ஏன் பெற முடியாது?

அமெரிக்க அரசு, கடந்த நாற்பது ஆண்டு காலமாக அரபு நாட்டின் பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேல் அரசுக்கு அளித்து வரும் உதவியை நிறுத்த வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன. அதேபோன்று கியூபா மீதான பொருளாதாரத் தடையை நிறுத்த வேண்டும் என்றும், நிர்ப்பந்த நடவடிக்கைகள் எதுவும் எடுத்திடாது அணுசக்திப் பிரச்சனையில் தீர்வு காண்பதற்கு ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்றும் இடதுசாரிகள் கோருகிறார்கள்.

நவம்பர் 8 அன்று நாடாளுமன்றத்தில் ஒபாமா உரையாற்றுகிறார். மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களும் அவர் உரையைக் கேட்பார்கள். அதே நாளன்று, நாடு முழுதும் இந்திய மக்களின் எண்ணங்களைத் தெரிவிப்பதற்காக ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் நடத்தப்படும். அவற்றை அதிபர் ஒபாமாவும் கேட்டிட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மெகா ஊழல் ஆ.ராசாவை நீக்குக! சீத்தாராம் யெச்சூரி பேட்டி



புதுதில்லி, நவ.4-

2ஜி தொலைபேசி அலைவரி சைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஏற்கெனவே கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுக் களையும், மத்திய தலைமை தணிக் கை அதிகாரி உறுதிப்படுத்தி இருக் கிறார் எனவே அதன் அடிப்படை யில் பிரதமர் செயல்பட வேண்டும், தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவை பதவி யிலிருந்து நீக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி எம்.பி., கூறினார்.

புதுதில்லியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில் வியாழனன்று பத்திரிகையாளர் கூட்டம் நடை பெற்றது. அதில் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

மத்திய அமைச்சர் ஆ. ராசா வின் கீழ் இயங்கும் தொலைத் தொடர்புத் துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்திருக்கிறதென்றும், எனவே அமைச்சர் ஆ.ராசாவைப் பதவிநீக் கம் செய்து, முறையான விசாரணை நடத்தி, ஊழலுக்குக் காரணமான வர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், அர சுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட் டக்கூடிய விதத்தில் உரிய நடவடிக் கைகள் எடுத்திட வேண்டும் என் றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தி வந்தோம். இது தொடர் பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்று கடிதங்கள் எழுதியிருக்கி றோம். 2008 பிப்ரவரியில் ஒரு கடித மும், 2008 நவம்பரில் ஒரு கடிதமும் பின்னர் கடைசியாக 2010 மே- யில் ஒரு கடிதமும் எழுதியிருக்கிறோம்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் உண்மை என்று மத்திய தலைமைத் தணிக் கை அதிகாரி தற்போது தெரிவித் திருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டின் கார ணமாக அரசுக்கு ஏற்பட்ட இழப் பை நாங்கள் கூட குறைத்து மதிப் பிட்டுவிட்டோம். உண்மையில் அதன் மதிப்பு என்பது சுமார் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடிக் கும் அதிகம் என்று தெரிவித்திருக்கி றார். நாட்டில் இவ்வளவு பெரிய மெகா ஊழல் இதற்குமுன் நடை பெற்றதில்லை.

தலைமைத் தணிக்கை அதிகாரி மேலும், 2008 ஜனவரியில் கொடுக் கப்பட்ட 122 உரிமங்களில் 85 உரிமங்கள், மத்திய தொலைத் தொடர்புத்துறை வரையறுத்துள்ள நிபந்தனைகளை திருப்திப்படுத்த வில்லை என்றும் குறிப்பிட்டிருக்கி றார். 72 உரிமங்கள் போதுமான அளவு மூலதனம் இல்லாத கம் பெனிகளுக்குக் கொடுக்கப்பட்டி ருப்பதாகவும், 27 உரிமங்கள் தொலைத்தொடர்புத்துறை வரை யறுத்துள்ள நிபந்தனைகளைத் திருப்திப்படுத்த தவறிவிட்டன என்றும் தெரிவித்திருக்கிறார்.

தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டிருக்கிற ஊழலின் அளவை ஆராய்ந்தோமானால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது மூன்று விழுக்காடாகும். சுகா தாரத்திற்காக அரசு ஒதுக்கியுள்ள பட்ஜெட் தொகையைவிட எட்டு மடங்கிற்கும் அதிகமாகும். கல்விக் காக ஒதுக்கியுள்ள தொகையைவிட மூன்றரை மடங்காகும். இந்த மிகப் பெரும் மெகா ஊழலைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.

பிரதமர் மன்மோகன் சிங், நாட் டில் உள்ள சட்டவிரோத மூலதனம் குறித்து அடிக்கடி கவலைப்படு கிறார். ஆனால் இவரது ஆட்சியில் தான் மெகா ஊழல்கள் மூலம் சட்டவிரோத மூலதனம் நாட் டையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி களில் ஊழல், தற்போது மும்பை யில் கார்கில் வீரர்களுக்கு வீடுகள் கட்டித்தந்ததில் ஊழல். சட்ட விரோதமாக கனிம வளங்களைக் கொள்ளையடித்து அயல்நாடு களுக்கு ஏற்றுமதி செய்த ஊழல், எல்லாவற்றையும் விஞ்சும் 2ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல். இவை அனைத்தும் சட்டவிரோத மூலதன மின்றி வேறென்ன?

எனவே பிரதமர், இந்த மெகா ஊழலுக்கு எதிராக உரிய நடவடிக் கைகள் எடுத்திட வேண்டும். தற் போது 3ஜி அலைவரிசை ஏலத் திற்கு விட்டதுபோல் மீண்டும் 2ஜி அலைவரிசையை ஏலத்திற்கு விட்டு, இழந்த தொகையை, உரிமம் பெற்றவர்களிடமிருந்து வசூலித் திட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அரசுக்கு இழப்பு ஏற் பட அனுமதித்திடக் கூடாது. அத் தொகைகளை உரிமம் எடுத்தவர் கள் தர மறுத்தால், அவர்களுக்கு அளித்த உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த மெகா ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, அவர்கள் ஊழல் செய்ததற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி தெரிவித்திருக்கிறார். அந்த அதிகாரிகள் மீது நடவடிக் கை எடுத்திட வேண்டும்.

இந்த விசாரணைகள் பாரபட்ச மின்றி நடைபெறுவதை உறுதிப் படுத்திட இந்த ஊழல்கள் நடை பெற்ற சமயத்தில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவரும் தற்போதும் அதன் அமைச்சராக இருப்பவருமான ஆ.ராசா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.