Showing posts with label Prakash Karat article. Show all posts
Showing posts with label Prakash Karat article. Show all posts

Sunday, July 6, 2014

புத்துயிர் பெற்று எழுவோம்! - பிரகாஷ் காரத்



பிரகாஷ் காரத்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல் களில் மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன. கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, போட்டியிட்ட 93 இடங்களில் 3.25 சதவீத அளவிற்கே வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கேரளாவில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இருவர் கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணி ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், இடதுசாரிகளின் மொத்த எண்ணிக்கை 12 மட்டுமே. நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மோசமான பங்களிப்பு ஓர்ஆழமான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தி இருக்கிறது. விமர்சனப் பூர்வமான ஆய்வின் அடிப்படையில்தான் முறையான முடிவுகளுக்கு வர முடியும், அதன் அடிப்படையில் கட்சியின் அரசியல் தளம் மற்றும் ஸ்தாபனத்தை முழுமையாக சரிசெய்திட வேண்டியிருக்கிறது.

மத்தியக் குழு, ஜூன் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தின்போது கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆழமாகப் பரிசீலித்தது. கட்சியின் சுயேச்சையான பலமும், வெகுஜன தளமும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ஆழமானப் பின்னடைவு மட்டும் காரணம் அல்ல, நாடு முழுவதும் கட்சியை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்ட தோல்வியும் இதற்கு முக்கிய காரணமாகும். கட்சியையும் அதன் அரசியல் செல்வாக்கையும் முன்னெடுத்துச் செல்வதில் தோல்வி ஏற்பட்டிருப்பதற்கான பொறுப்பு கட்சியின் அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக் குழுவையே சாரும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் பாஜக தலைமையிலான அரசாங்கமாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமாக இருந்தாலும் மத்திய அரசாங்கங்கள் பின்பற்றி வந்த நவீன தாராளமயக் கொள்கைகளைத் தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வந்திருக்கின்றன. இத்தகைய கொள்கைகளின் கடுந்தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திடவும் தங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்திடவும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை அவை தொடர்ந்து மேற் கொண்டு வந்தன. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றாக, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் அரங்கங்களில் மாற்றுக் கொள்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் தொடர்ந்து இயக்கங்கள் மற்றும் பிரச்சாரங்கள் நடத்தி வந்தனர். வகுப்புவாதக் கொள்கைகளை எதிர்ப்பதுடன் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்காகவும், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் இடதுசாரிகள் தொடர்ந்து உறுதியுடன் போராடி வந்திருக்கிறார்கள்.

இவ்வளவு நடவடிக்கைகளை இடதுசாரிகள் மேற் கொண்டிருந்தபோதிலும், மக்களின் ஆதரவினைப் பெறுவதில், அதிலும் குறிப்பாக இளைஞர்களின் ஆதரவினைப் பெறுவதில், தோல்வியடைந்து விட்டதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

மத்தியக்குழு தன்னுடைய பரிசீலனை அறிக்கையில், குறைபாடுகளைக் களைந்திடவும், கட்சி மக்களிடமிருந்து அந்நியமாகியிருப்பதை உடனே சரி செய்யவும், சில முக்கிய முடிவுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசரம், அவசியம் என்று கருதுகிறது. இன்றைய நிலையை சரிசெய்து முன்னேறிடவும், கட்சி மற்றும் இடது மற்றும் ஜனநாயக சக்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அடிப்படையை அமைத்திடவும் நான்கு முக்கிய நடவடிக் கைகளை எடுத்திட தீர்மானித்திருக்கிறது.

நான்கு நடவடிக்கைகள்
1. கட்சியின் சுயேச்சையான பலத்தை அதிகரித்திட வேண்டும் என்று தொடர்ந்து கட்சியின் அகில இந்திய மாநாடுகளில் நாம் நம்முடைய அரசியல்-நடைமுறை உத்திகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்த போதிலும், நாம் அதனை செய்ய இயலாதவர்களாகவே இருந்து வந்திருக்கிறோம். மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று வலுவான மாநிலங்களுக்கு அப்பால், இது தொடர்பாக முன்னேற்றம் எதுவும் இல்லை. கட்சியின் பலம் சுயேச்சையாக வளராமல், இடது - ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவது மற்றும் இடது - ஜனநாயக மாற்றை உருவாக்குவது என்கிற அரசியல் உத்தி வெற்றி பெறாது.

நாம் மேற்கொள்ள வேண்டிய பெரிய அளவிலான முதல் நடவடிக்கை என்பது, இதுவரையிலும் கடைப்பிடித்து வந்த அரசியல் உத்தியை மறு ஆய்வுக்கு உட்படுத்துவது என்பதேயாகும். நாம் இதுநாள்வரை பின்பற்றி வந்த ஐக்கிய முன்னணி உத்தி என்கிற கட்சியின் அரசியல் நிலைப்பாட்டின் அனைத்து அம்சங்களும் விமர்சன ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு நடவடிக்கைகளை மேற் கொள்வதன் மூலம் ஒரு சரியான, பொருத்தமான அரசியல்மேடை மற்றும் முழக்கங்களை உருவாக்குவதில் நமக்கிருந்த குறைபாடுகள் அல்லது பலவீனங்களை அடையாளம் கண்டறிய முடியும்.

கட்சி முழுமையும் விவாதிக்கும்
ஒவ்வொரு அகில இந்திய மாநாட்டின்போதும், நாம் பின்பற்றி வரும் அரசியல்-நடைமுறை உத்திகளை அமல் படுத்தியது தொடர்பாக இயல்பாகவே கட்சி ஓர் ஆய்வினை மேற்கொள்ளும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் இதுமட்டும் போதுமானதல்ல. இதுவரை பின்பற்றி வந்த அரசியல் - நடைமுறை உத்திகளை ஓர் ஆழமான ஆய்வுக்கு இன்றைய தினம் உட்படுத்துவது அவசியம். இதற்காக, அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டுக்கு முன்பாக நாம் பின்பற்றி வந்த அரசியல் - நடைமுறை உத்திகள் குறித்து ஒரு மறு ஆய்வினை மேற்கொள்வது என மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் அரசியல் - நடைமுறை உத்திகள் தொடர்பான மறு ஆய்வின் முடிவுகள் அடங்கிய அறிக்கை, கட்சியின் நகல் அரசியல் தீர்மானத்துடன் கட்சி முழுமைக்கும் விவாதத்திற்காக முன்வைக்கப்படும். இதனை அடுத்து நடைபெறவிருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் புதிய அரசியல் - நடைமுறை உத்திகள் நிறைவேற்றப்படும். இவ்வாறாக, முழுமையான அளவில் ஓர் உள்கட்சி விவாதத்தை நடத்திட உள்ளோம்.

மாற்றங்களுக்கு ஏற்ற முழக்கங்கள்
கடந்த இருபத்தைந்து ஆண்டு கால வரலாற்றில், ஏகாதிபத்திய உலகமயத்தின் தாக்கம் காரணமாகவும், நவீன தாராளமயக் கொள்கைகள் நாட்டில் பின்பற்றப்பட்டு வந்ததன் விளைவாகவும், சமூக-பொருளாதார நிலைமைகளில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வர்க்கங்களின் நிலைப்பாடுகளிலும், வர்க்கங்களுக்குள்ளேயும் இத்தகு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொழிலாளர் வர்க்கம், விவசாய வர்க்கம், விவசாயத் தொழிலாளர் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கங்களுக்குள்ளேயும் இத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே, இவ்வாறான மாற்றங்கள் இவர்களின் அரசியல் ஸ்தாபன நடவடிக்கைகளில் எப்படிப்பட்ட அளவிற்கு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் பார்த்து வருகிறோம். பெரு முதலாளிகள் மற்றும் முதலாளித்துவத்தின் மற்ற பிரிவினர் மத்தியிலும் கூட வலுவான முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவினர்களின் பிரச்சனைகளை எடுத்துக்கொள்ளும்போது, முழக்கங்களை உருவாக்குகையில், இவ்வாறு ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக ஒரு வலுவான இயக்கத்தைக் கட்டி எழுப்பிட, அனைத்து வர்க்கப்பிரிவினர்களையும் அணுகக் கூடிய விதத்தில் நம்முடைய முழக்கங்களில் மாற் றங்களை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். இதற்கு, சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், அத்தகு சமயங்களில் பல்வேறு வர்க்கப் பிரிவுகளின் நிலைப்பாடுகள் மற்றும் பங்களிப்புகள் குறித்தும் ஒரு துல்லியமான ஆய்வினை மேற்கொள்வது அவசியமாகும்.

பல்வேறு துறைகளிலும் அத்தகைய துல்லியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அத்தகைய துல்லியமான ஆய்வுகளின் அடிப்படையில், கட்சியின் எதிர்கால லட்சியங்களை மனதில் கொண்டு, முழக்கங்களையும் கோரிக்கைகளையும் அமைத்திட முடியும். இத்தகைய துல்லியமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறையினை தீர்மானித்திட வேண்டும் என்றும் மத்தியக் குழு முடிவு செய்துள்ளது.

மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு
3. இவ்வாறு அரசியல் நிலைப்பாட்டை மேற்கொள்வதற்காக நாம் முயற்சிகளை மேற் கொள்வதுடன், நம் கட்சி ஸ்தாபனத்தின் நிலை குறித்தும், அதன் செயல்பாடுகளின் பாணி எப்படி இருந்தது, மக்கள் மத்தியில் அதன் வீச்சு எந்த அளவிற்கு இருந்தது என்பது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டியதும் அவசியம். கட்சியின் கீழ் அமைந்துள்ள வெகுஜன அமைப்புகள் பல்வேறு வெகுஜனப் போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்தியுள்ள போதிலும், அத்தகு இயக்கங்களில் ஈடுபட்ட மக்களை அரசியலாக மாற்ற முடியாத நிலையிலேயே கட்சி ஸ்தாபனம் இருக்கிறது என்கிற பிரச்சனை இதில் ஒன்று.

அடுத்து ஸ்தாபனம் பலவீனம் அடைந்திருக்கும் பிரச்சனையும் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களை வளர்த்தெடுக்க முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன. செயல் பாடுகளில் ஒரேவிதமான சலிப்பூட்டுகிற முறைகள் மற்றும் மக்களுடன் ஜீவனுள்ள தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாததும் பிரச்சனைகளாகும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நம்முடைய பிரச்சார முறைகளில் மாறுதல்களை மேற்கொள்ள வேண்டியதும் அவ்வகையில் மக்களிடம் விரைவில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கின்றன. கட்சி ஸ்தாபனத்தை முழுமையாக பழுதுபார்த்து, தவறான போக்குகளை சரி செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வர்க்க - வெகுஜன அமைப்புகள்
4. வெகுஜன அமைப்புகளின் வளர்ச்சி, அவற்றின் சுயேச்சையான செயல்பாடுகள் மற்றும் அவற்றின் கீழ் மக்களை விரிவான முறையில் அணிதிரட்டுதல் ஆகியவையும் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய அம்சங்களாகும். மாநிலக் குழுக்கள் நடத்தியுள்ள தேர்தல் ஆய்வுகள் காட்டுவது என்னவெனில், நம் கட்சியின் கீழ் அமைந்துள்ள வெகுஜன அமைப்புகளில் அணிதிரண்டுள்ள மக்களில் கணிசமானவர்கள் நம் கட்சிக்கோ அல்லது இடதுசாரி வேட்பாளர்களுக்கோ வாக்களிக்கவில்லை என்பதாகும். வர்க்க, வெகுஜன அமைப்புகள் மற்றும் நம் அரசியல் வேலைகளில், நம்முடைய சுயேச்சையான செயல்பாடுகளில் குறைகள் மலிந்துள்ளன. இவற்றை மிகவும் ஆழமான முறையில் சரி செய்திட வேண்டியது அவசியம். மேற்கண்ட நான்கு பிரதான நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்து முன்னெடுத்துச் செல்லவேண்டும். கட்சி எதிர்கொண்டுள்ள நிலைமைகளை கவலையுடன் பரிசீலித்திட வேண்டும் என்று கட்சி முழுமைக்கும் மத்தியக்குழு அறைகூவல் விடுத்திருக்கிறது.

புதிய நிலைமை
தேர்தலுக்குப் பின்னர் நரேந்திர மோடியின் கீழ் பாஜக தலைமையிலான அரசாங்கம் அமைந்தபின், ஒரு புதிய அரசியல் நிலைமை உருவாகி இருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகள் முன்னிலும் வெறித்தனமான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கிவிட்டன. பெரு முதலாளிகள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. இதன் எதிர்விளைவாக, மக்களின் வாழ்வைக் கசக்கிப் பிழியக்கூடிய வகையில் நடவடிக்கைகளும் துவங்கி விட்டன.

பணவீக்கத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் காரணமாக விளங்கும் கொள்கைகளை அமல் படுத்துவது தொடர்கின்றன. பாஜக/ஆர்எஸ்எஸ் கும்பல் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை உந்தித்தள்ளுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன. அரசின் கீழான பல்வேறு அமைப்புகளிலும் ஆர்எஸ்எஸ் ஊழியர்களை ஊடுருவச் செய்வதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்துத்துவா தீவிரவாத விஷமிகள் சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்ற மாண்புகளின் மீது தாக்குதல்களைத் தொடுக்கத் துவங்கி யிருக்கின்றனர். புனேயில் நடந்துள்ள நிகழ்வுகள் மற்றும் குஜராத், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ள வகுப்பு மோதல்களும் ஓர் எச்சரிக்கை மணியாகும்.

புத்துயிரோடு எழுவோம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் வலதுசாரிகளின் தாக்குதல்களுக்கு எதிராக எதிர்ப்பினை முடுக்கிவிடவும், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திடப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. வகுப்புவாத சித்தாந்தம் மற்றும் அரசியலுக்கு எதிராக உறுதியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பது இடதுசாரிகள் மட்டுமே. பெரும்பான்மை மதவெறியின் நாசகர அச்சுறுத்தல்களுக்கு எதிராக களத்தில் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை இறக்கி விடுவதில் கேந்திரமான பங்கு வகிக்க வேண்டிய நிலையில் இடதுசாரிகள் இருக்கிறார்கள்.

இப்பணிகளை வலுவாக செய்யக்கூடிய விதத்தில் இடதுசாரிகள் புத்துயிர் பெற்று எழுவதில் உடனடிக் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். அனைத்து இடதுசாரி சக்திகளுடனும் ஒன்றிணைந்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியோடு செயலாற்றும். அனைத்து இடது மனோபாவம் கொண்ட சக்திகள், குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகளையும் ஒரேகுடையின்கீழ் திரட்டிட விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். ஒன்றுபட்ட மற்றும் புத்துயிர் பெற்ற இடதுசாரிகளால் மட்டுமே 
இந்திய அரசியலில் வலதுசாரிகளால் கட்டவிழ்த்துவிடப்படும் சவால்களை எதிர் கொள்ள முடியும்.


தமிழில்: ச.வீரமணி

Sunday, February 23, 2014

ஆம் ஆத்மி கட்சி : யார் பக்கம்?


பிரகாஷ் காரத்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர விந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற முதலாளிகள் அமைப்பின் (சிஐஐ) கூட்டத்தில் தங்கள் கட்சியின் பொருளாதாரக் கொள்கை குறித்துப் பேசி யிருக்கிறார். ஏஏபி கட்சியின் சார்பாக பொருளாதாரக் கொள்கை குறித்து ஒரு முழுமையான அளவிலான ஆவணம் இல்லாத நிலையில், கெஜ்ரிவால் அங்கே பேசிய பேச்சின் தொனி ஏஏபி கட்சிக்கு பொருளாதாரக் கொள்கை தொடர்பாக உள்ள தத்துவார்த்த நிலைப்பாடு மற்றும் கொள்கை அணுகுமுறை குறித்து தெரி விப்பதாக எடுத்துக்கொள்ளலாம். கெஜ்ரிவால், “அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதற்கும் வர்த்தகத் திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அரசாங்கம் வர்த்தகம் எதையும் செய்யக் கூடாது. அவை அனைத்தையும் தனி யார் துறையிடம் விட்டுவிட வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார்.

அவர் மேலும், தான் இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம் மற்றும்லைசன்ஸ் ராஜ்ஜியத்திற்கு எதிரானவன்’’ என்றும் பிரகடனம் செய்திருக் கிறார். கெஜ்ரிவால் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசியதால் இவ்வாறு பேசியிருக்கிறார் என்றும், இதனை அக்கட்சியின் அடிப்படைப் பொருளாதார சிந்தனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் சிலர் கூறலாம். ஆனால், இந்தக் கருத்துக்களை கெஜ்ரிவால் முன்வைக்கும்போது முரண்பாடு எதுவுமின்றி மிகவும் உறுதியாகத்தான் எடுத்துவைத்துள்ளார். இதற்கு முன்பும் ஒரு தடவை அவர், “எங்கள் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை, நாங்கள் முதலாளித்துவவாதிகளுமல்ல, சோசலிசவாதிகளுமல்ல அல்லது இடதுசாரிகளுமல்ல. நாங்கள் மிகவும் `சாமானியர்கள் நாங்கள் எந்த வொரு குறிப்பிட்ட தத்துவத்துடனும் இணைந்தவர்கள் அல்ல. எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய விதத்தில் எந்த தத்துவம் இருக்கிறதோ, அது இடதாக இருந்தாலும் சரி அல்லது வலதாக இருந்தாலும் சரி, அந்த தத்துவத் திலிருந்து நாங்கள் கடன் வாங்கிக் கொள்வோம். ஆயினும் ஒன்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். `அரசாங்கம் என்பது வர்த்தகம் எதுவும் செய்யக் கூடாதுஎன்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வர்த்தகம் என்பது தனிப்பட்ட நபர்களிடம் தான் இருந்திட வேண்டும்.’’ என்றும் கூறியிருக்கிறார்.அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதற்கும் வர்த்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.’’ என்று அடிக்கடி அவர் கூறுவது என்பதும் அனைத்தையும் தனியார் துறையிடமே விட்டுவிட வேண் டும்’’ என்பதும் நவீன தாராளமயக் கண்ணோட்டத்தின் பகுதிகளில் ஒன்றே யாகும்.

இவ்வகைக் கண்ணோட்டம்தான் உலகம் முழுதும் மேலோங்கியிருக்கிறது. இந்த அளவுகோலின்படி அனைத்து வர்த்தகத் துறைகளும் மற்றும் பொருளா தார நடவடிக்கைகளும் தனியார் கைகளிடமே இருந்திட வேண்டும் என்றும், அனைத்தையும் சந்தையே ஆளும் என்றும் ஆகிறது. மின்சாரம், தண்ணீர் விநியோகம் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற அடிப்படை சேவைகளைக் கூட தனியாரிடமே தந் திட வேண்டும் என்றும் ஆகிறது. கெஜ்ரிவால் சிஐஐ கூட்டத்தில் பேசுகையில், அரசாங்கத்தின் கடமை என்ன வெனில் ஒரு நல்ல முறைப்படுத்தும் ஆட்சியை அது நடத்திட வேண்டும் என்றும், அனைத்து வர்த்தக அமைப்பு களும் அரசாங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் வாதிட்டிருக்கிறார்.

இவ்வாறு முறைப் படுத்தும் அமைப்புகள் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவான முறையில் விதிகளை உருவாக்கிட வேண்டும் என்று கூறுவதும் நவீன தாராளமய மாடலின் ஒரு பகுதிதான். தில்லியில் மின் விநியோகம் தனியார்மயமாக்க வேண்டும் என்பதை அவர் எதிர்த்த நாட்களையெல்லாம் கெஜ்ரிவால் மறந்து விட்டது போன்றே தோன்றுகிறது. இப் போது கெஜ்ரிவால் கூறிடும் அளவுகோல், தண்ணீர் தனியார்மயம் சம்பந்தமாக ஏஏபி கட்சியின் தொலைநோக்கு ஆவ ணத்தில் கூறப்பட்டிருப்பதற்கும் எதிரான நிலைப்பாடு என்கிற அளவிற்குச் சென்றிருக்கிறது.
சிஐஐ கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதில் காணப்படும் மற்றொரு முக்கிய அம்சம், “தான் முதலாளித்துவத்திற்கு எதிரானவன் அல்ல, மாறாக சலுகைசார் முதலாளித்துவத்திற்குத்தான் எதிரி’’ என்று கூறியிருப்பதாகும். தில்லியில் மின் விநியோகத்தை மேற்கொண்டுள்ள அம்பானியினுடைய கம்பெனிக்கு எதிராக அல்லது ரிலையன்ஸ் எரிவாயு விலை நிர்ணயம் சம்பந்தமான பிரச்சனைக்கு எதிராக அவர் நடத்தி வரும் போராட்டம் சலுகைசார் முதலாளிகளுக்கு எதிரான வை என்று அவர் வாதிடுகிறார். இங்கேகெஜ்ரிவாலும் அவரது ஏஏபி கட்சியும் பிரதானப் பிரச்சனையை பார்க்க மறுக் கின்றன.

அதாவது நவீன தாராளமயத்தின் குணம் என்பதே மிகப்பெரிய அளவில் சலுகைசார் முதலாளித்துவத்தை உற்பத்தி செய்திடும் என்பதை அவர்கள் பார்க்க மறுக்கிறார்கள். நவீன தாராளமய ஆட்சியில் இயல்பாய் அமைந்திருப் பதே இயற்கை வள ஆதாரங்களைக் கொள்ளையடிக்கவும் ஒட்டுமொத்தத்தில் பெரும் வர்த்தக நிறுவனங்கள் அபரிமித மான லாபம் ஈட்டவும் வசதி செய்து தர வேண்டும் என்பதேயாகும்.உதாரணத்திற்கு கனிம வளங்கள் எடுக்கப்படுவதைப் பார்ப்போம்.

கனிம வளத்துறை தனியார் கம்பெனிகளுக்குத் திறந்துவிடப்பட்டதை அடுத்து அவை அபரிமிதமான லாபம் ஈட்டியிருப்பதை அறிவோம். நவீன தாராளமயக் கொள்கையின் கீழ் அரசுக்கும் பெரும் வர்த்தக அமைப்புகளுக்கும் இடையிலான பிணைப்பு என்பது மிக உயர்ந்த நிலை யிலான சலுகை சார் முதலாளித்துவம் என்பதேயாகும். கெஜ்ரிவாலின் கூற் றின் படி, இவை அனைத்திற்கும் தேவைஒரு நல்ல முறைப்படுத்துபவர் என்றஅளவில்தான். கெஜ்ரிவாலின் அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதற்கும் வர்த்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்கிற கருத் தாக்கத்தின்படி நாட்டில் கனிம வளங்கள் எடுக்கப்படுவதும் தனியார் துறையிடம்தான் இருந்திட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது சாரிக் கட்சிகளும் கனிம வளங்கள் எடுக்கப்படுவது முழுமையாகப் பொதுத் துறையில்தான் இருந்திட வேண்டும் என்று கோரி வருகின்றன. ஏஏபி கட்சி யைச் சேர்ந்த யோகேந்திர யாதவ் என் பவர் இது, “புத்திசாலித்தனமான பொருளாதாரம் இல்லை’’ என்று பேசியிருக்கிறார். இவ்வாறு இடதுசாரிகளின் நிலைப் பாட்டை ஏஏபி தலைவர்கள் நிராகரிக் கிறார்கள். அதேபோன்று ஏஏபி தலைவர்கள் அடிக்கடி, “நாங்கள் இடதுசாரிகளும் அல்ல, வலதுசாரிகளும் அல்ல’’ என் றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை, அவர்கள், “அது இடது சாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. மாறாக நல்ல சிந்தனை எங்கிருந்து வந்தாலும், அது பழையதாக இருந்தாலும் அல்லது புதியதாக இருந்தாலும், அது நாட்டின் நலனுக்கு ஏற்புடையதாக இருந் தால், ஆதரிப்போம்’’ என்கிறார்கள். அவர்களுடைய சிந்தனாவாதியான யோகேந்திர யாதவ், “இந்தியாவின் இன்றைய நிலையில் இடதுசாரி - வலதுசாரி சிந்தனைகளுக்கு அர்த்தம் ஏது மில்லை’’ என்று கூறியிருக்கிறார். இவ்வாறு கூறும் நபர் தன்னை ஒருசோசலிஸ்ட் என்று கூறிக்கொண்டிருப் பவராவார். இவ்வாறு தாங்கள் இடது சாரிகளுமல்ல, வலதுசாரிகளுமல்லஎங்களுக்கு என்று எந்தத் தத்துவப் பின்னணியும் கிடையாது என்று ஏஏபி கட்சியின் நிலைப்பாடு என்பது நவீன தாராளமயக் கட்டமைப்பிலிருந்து வெளியே போக முடியாத, தங்கள் கொள்கைகளின் குழப்ப நிலையை மூடிமறைப்பதற்கான ஒன்றேயாகும். இத்தகைய கண்ணோட்டத்தின் அடிப் படையில், ஏஏபி கட்சித் தலைவர்கள் இடதுசாரிக் கட்சிகளிடம் காட்டிடும் மனோபாவம் ஆச்சர்யப்படத்தக்கதாக இல்லை. மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், யோகேந்திர யாதவ், “இடது சாரிகள் கொண்டிருப்பது போன்ற தத்துவத்தையோ அல்லது அரசியலையோ நாங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது தவறானது’’ என்று கூறியிருக்கிறார். அவர் மேலும், “எப்போதெல்லாம் இடதுசாரிகள் கேரளா விலோ அல்லது மேற்கு வங்கத்திலோ அரசாங்கத்தின் அங்கமாக இருக்கிறார் களோ, அப்போதெல்லாம் அவர் கள் மற்ற கட்சிகள் நடந்து கொள் வதைப் போலத்தான் நடந்து கொள்கிறார்கள்,’’ என்றும் கூறியிருக்கிறார்.

யோகேந்திர யாதவ்வைப் பொறுத்த வரை, நிலச்சீர்திருத்தங்கள் அமலாக்கம், தொழிலாளர்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துதல், பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கி யமை, இடதுசாரிகளின் தலைமையில் இவ்விரு மாநிலங்களிலும் ஆட்சி நடைபெற்ற சமயத்தில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் முற்றிலுமாக இல்லாதிருந் தமை ஆகிய எதுவுமே முக்கியத்துவம் அல்லாதவைகளாகும். அவை அனைத்துமே இடதுசாரிக் கொள்கைகளின் விளைவு கள் அல்லவா? அதேபோன்று அனைவருக்குமான பொது விநியோக முறை வேண்டும் என்கிற இடதுசாரிகளின் நிலைப்பாட்டினையும் யாதவ் எதிர்க் கிறார். மும்பையில் முதலீட்டாளர்களின் மாநாடு ஒன்றில் பேசுகையில், யாதவ், “உணவு மானியங்கள் அளிக்கப்படக் கூடாது. மக்களுக்கு நேரடியாக உணவு அளிப்பது என்பது மிகவும் திறனற்ற ஒன்று என்பதோடு, ஏழைகளுக்கு சேவைசெய்வது என்ற பெயரால் அதிக செலவு பிடிக்கக்கூடியதுமாகும்’’ என்று கூறி யிருக்கிறார்.யாதவ் மேலும், “தாங்கள் காங்கிரஸ் அல்லது பாஜகவிற்கு மாற்றாக மட்டு மல்ல, இடதுசாரிகளுக்கும் மாற்றாக ஒரு மாற்றை அளிக்க விரும்புகிறோம்,’’ என்றும் பீற்றிக்கொண்டுள்ளார். ஏஏபிகட்சியின் மாற்று என்பதன் பொருள் இப்போது தெளிவாகிக் கொண்டிருக் கிறது. அது நவீன தாராளமயக் கொள் கைகளுக்கு மாற்றாக இருக்கப் போவதில்லை, மாறாக அதே கொள்கையை நேர்மையான’’ வடிவத்தில் பின்பற்று மாம்.
தமிழில்: ச.வீரமணி


Friday, May 20, 2011

தேர்தல் முடிவுகள் : சவால் மிகுந்த, நீண்ட நெடிய போராட்டத்தை நடத்துவோம்! பிரகாஷ் காரத்

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இடது முன்னணிக் குப் பெரும் தோல்வியைத் தந்துள்ளது. இது மேற்கு வங்கத்தை இடதுசாரி களின் கோட்டை எனக் கருதிய நாட்டில் உள்ள இடது, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்குப் பெருமளவில் ஏமாற்றத் தைத் தந்துள்ளது. 1977ல் இருந்து ஏழு முறை அனைத்துத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, 34 ஆண்டு காலம் குறிப்பிடத்தக்க வரலாறு படைத்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன் னணி அரசாங்கம் பதவி விலகியுள்ளது. தேர்தல் முடிவில் சில பொதுவான அம் சங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. மக்கள் மாற்றத்திற்காகத் தீர்மானகரமான முறையில் தங்கள் விருப்பத்தைத் தெரி வித்திருக்கிறார்கள். அதற்காக, திரிணா முல் காங்கிரஸ் கூட் டணிக்குப் பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்திருக் கிறார்கள். இதற்காக இடதுசாரிகளுக்கு எதிரான அனைத்து சக்திகளும் - வலது சாரிகளிலிருந்து இடது அதிதீவிர மாவோ யிஸ்ட்டுகள் வரை - ஒன்று சேர்ந்திருக் கிறார்கள். மேலும் இடது முன்னணி இரண்டு ஆண்டுகளுக்கு முன் இழந்த தளத்தை எதிர்பார்த்த அளவிற்கு மீட்க முடியவில்லை என்பதும் தெளிவாகிறது.

விமர்சனப்பூர்வ ஆய்வு

இடது முன்னணியின் ஆதரவுத் தளத் தில் அரிப்பு ஏற்பட்டிருப்பதற்கும், கணிச மான அளவு அரசியல் திசைமாற்றம் ஏற் பட்டிருப்பதற்குமான காரணங்களை அடையாளம் காண மார்க்சிஸ்ட் கட்சி ஒரு முழுமையான ஆய்வினை மேற் கொள்ள இருக்கிறது.

2009 மக்களவைத் தேர்தலின்போது பெற்ற வாக்குகளைவிட, 11 லட்சம் வாக்கு களை இந்த முறை கூடுதலாக இடது முன்னணி பெற்றிருக்கிறது. இருப்பினும், மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகை யில் வாக்கு விகிதாசாரத்தில் 2.2 விழுக் காட்டுப் புள்ளிகள் குறைவு ஏற்பட்டிருக் கிறது. இடது முன்னணியின் ஆட்சியில் கடந்த முப்பதாண்டுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணற்றச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தபோதிலும், அரசாங்கத் தில் தொடர்ந்து நீடித்திருந்ததால், சில எதிர் மறைக் காரணிகள் குவிவதற்கும் இட்டுச் சென்றுள்ளது. கட்சியின் அரசி யல் மற்றும் ஸ்தாபனப் பணிகளின் பின் னணியில், இந்த தேர்தல் போக்குகள் குறித்து ஓர் ஆழமான ஆய்வினை மேற் கொள்வதென்பது, நம்முடைய அணுகு முறையில் காணப்படும் குறைபாடு களைச் சரிசெய்வதற்கும் ஸ்தாபனப் பல வீனங்களைக் களைவதற்கும் உரிய நட வடிக்கைகளை உருவாக்குவதற்கு உத விடும்.

கேரளாவில், இடது ஜனநாயக முன் னணி மிகவும் குறுகிய அளவிலேயே வெறும் மூன்றே மூன்று இடங்கள் குறை வாகப் பெற்று பெரும்பான்மையை பெற முடியாமல் போயுள்ளது. ஐக்கிய ஜனநா யக முன்னணி இரு இடங்களை மட்டுமே கூடுதலாகப் பெற்று நூலிழை அளவிற்கே பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையே யான வித்தியாசம் என்பது வாக்கு விகிதா சாரத்தில் வெறும் 0.89 விழுக்காடே யாகும். இது இடது ஜனநாயக முன்னணி அரசின் செயல்பாட்டின் மீது மக்கள் பரவலாக திருப்தியுடன் இருந்தனர் என் பதையும், அவர்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான மனநிலை எதுவும் இல்லை என்பதையுமே காட்டுகிறது. முதலமைச் சர் வி.எஸ்.அச்சுதானந்தன் லஞ்சத்திற்கு எதிராக மேற்கொண்ட யுத்தம் மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பினைப் பெற்றது. ஒருசில பிரிவினரிடையே சாதீய மற்றும் மத அமைப்புகள் சில சாகசமாக செல்வாக்கு செலுத்தி இடது ஜனநாயக முன்னணியின் வெற்றியை பாதிப்படைய செயல்பட்டன என்று பூர்வாங்க அறிக் கைகள் காட்டுகின்றன. மத்தியில் ஆட்சி செய்யும் ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தால் வரலாறு காணா அளவிற்கு ஊழலும் விலைவாசி உயர்வும் ஏற்பட்டுள்ளதால், காங்கிரஸ் கூட்டணியால் பெரும் பகுதி மக்களைக் கவர முடியவில்லை.

உள்நோக்கத்துடனான தாக்குதல்கள்

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட தோல்வி யை அடுத்து முதலாளித்துவ ஊடகங் கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் எதிராக வகை தொகையற்ற விதத்தில் துஷ்பிரச்சாரத் தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. தேர் தல் முடிவுகளானது மார்க்சிஸ்ட் கட்சி யின் மீது விழுந்த மரண அடி என்றும் அதி லிருந்து அது மீளவே முடியாது என்றும் சித்தரிக்க முயல்கின்றன. வேறு சில விமர்சகர் கள் தங்கள் விமர்சனங் களை வேறுவிதமாக முன்வைக்கிறார்கள். அதா வது, கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தம் அராஜகமானது, இக்காலத்திற்குப் பொருந்தாத ஒன்று என்றும், உலக அளவில் சோசலிசமும், மார்க்சியமும் பொருந்தாமல் போனதன் நீட்சியாகவே மேற்குவங்க தேர்தல் முடிவு அமைந் துள்ளது என்றும் திரிக்கின்றனர்.

சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந் ததானது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற் படுத்தவில்லை என்கிற உண்மையி லிருந்து இவர்களின் கூற்றுக்கள் பொய் யானவை என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். உண்மையில், 1990 களில் கட்சி மேற்கு வங்கத்திலும், கேர ளாவிலும் மேலும் உறுதியாகவும் வலு வாகவும் வளர்ந்தது. தத்துவார்த்த நிலை பாட்டை பொறுத்தவரை, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சியத் தத்துவத் தையும் நடைமுறையையும் இந்தியாவின் நிலைமைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமாக பிரயோகித்துக் கொண்டி ருக்கிறது. இது தேக்கமல்ல; மாறாக நிலைமைக்கேற்ப புதுப்பித்துக்கொண்டு வளரும் நிலை யாகும்.

மேற்கு வங்கத்தில் கடந்த நாற்பது ஆண்டு காலமாக எண்ணற்ற போராட் டங்களையும் மக்கள் இயக்கங்களையும் தொடர்ந்து வளர்த்தெடுத்ததன் மூலமா கத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியும், இடது முன்னணியும் வளர்ந்தன. இடது முன்னணியின் தேர்தல் வெற் றிகள் இத்தகைய இயக்கங்கள் மற்றும் போராட்டங்களின் மூலம் உருவான மக்கள் தளங்களின் வெளிப்பாடேயாகும். இடது முன்னணி, மேற்கு வங்கத்தில் வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல; தேர்தல் நடவடிக்கைகளால் மட்டுமே வலிமைமிகுந்த வெகுஜனக் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந் திட வில்லை.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும் இடது முன்னணிக் கும் முடிவுகட்டப்பட்டுவிட்டது என்று கூக்குரலிடுவோர், ஓர் உண்மை யைப் பார்க்க மறுக்கிறார்கள். அதாவது, இப் போது ஏற்பட்டுள்ள தோல்வியிலும் கூட, இடது முன்னணி 41 விழுக்காடு வாக்கு கள் பெற்றுள்ளது. ஒரு கோடியே 95 லட் சம் வாக்காளர்கள் இடது முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இத்தகைய உறுதியான வெகுஜனத் தளத்தின் காரண மாகத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி மீதும், இடது முன்னணி மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டு நிற்க முடிந்துள்ளது. கம்யூனிச எதிர்ப்பு விஷமப் பிரச்சார கர்கள் மற்றும் நவீன தாராளமய ஆதரவு விமர்சகர்களின் கூற்றுக்கள் தவறானவை என்று மெய்ப்பிக்கப்படும். விலகிச்சென் றுள்ள மக்களின் கோரிக்கைகளை முன் வைத்து வலுவான போராட்டங்களை நடத்துவதன் மூலம், விலகிச்சென்ற மக்களின் மனங்களை மார்க்சிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் வென்றெ டுக்கும் என்பது திண்ணம்.

மார்க்சிஸ்ட் கட்சி மீது தொடுக்கப்ப டும் மற்றொரு தாக்குதல், கட்சி மக் கள் மீது ஒடுக்குமுறையை மேற்கொண்ட எதேச்சதிகார சக்தி என்று சித்தரிப்பதும், இடது முன்னணி ஆட்சிக்காலத்தின் ஒட்டுமொத்த வரலாற்றின் மீதும் அவ தூறை அள்ளிவீசுவதுமாகும். இடது முன் னணியின் கடந்த கால வெற்றிகள்கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட் டளைகளுக்குக் கீழ்படிய மறுத்தவர்கள் மீது அல்லது அதனை எதிர்த்தவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவியதன் மூல மாகத்தான் கிடைத்தன என்று சொல் லும் அளவிற்குக் கூடச் சிலர் சென்றிருக் கிறார்கள். இத்தகைய விமர் சகர்கள் ஓர் அம்சத்தை வசதியாக மறந்துவிடுகிறார் கள். அதாவது, 1977க்குப்பின்னர் நடை பெற்ற ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், இடதுசாரிகளுக்கு எதிராக வாக்களித்தோரின் விகிதாசாரம் 40 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் இதற்கு முன் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் 45 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடுகள் வரை வாக்குகள் பெற்று குறிப்பிடத்தக்க வரலாறு படைத் திருக்கின்றன. மக்கள் மத்தியில் வெகு ஆழமாக வேரூன்றியிருப்பது குறிப்பாக கிராமப்புற மக்கள் மத் தியில் வெகுவாக செல்வாக்கு செலுத்தி வந்ததும்தான் இதற்குக் காரணங்களாகும். சுயநலம் சற்றும் இன்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் களை கொடுங்கோலர்கள், ஊழல் பேர் வழிகள் என்று பொய்யாக உள்நோக்கத் துடன் சித்தரிப்பதன் மூலம் கட்சியை பலவீனப்படுத்தி விடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

இடது முன்னணி அரசாங்கம் இயல் பாகவே ஜனநாயக விரோதமானது என் றும், எதிர்க்கட்சிகளுக்கு இடம் கொடாத சர்வாதிகாரத்தன்மை கொண்டது என்றும் எதிர்ப்பவர்களையெல்லாம் அழித்துவி டும் என்றும் ஒரு அவதூறு முன்வைக்கப் பட்டிருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ், ஜனநாயக முறையில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டுத்தான் இடது முன்னணி தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது சாரிகளும் நாட்டில் உள்ள அமைப்புக ளில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த பாடு படுவதில் மிகவும் உறுதியான சக்தி என்று நிரூபித்து வந்திருக்கின்றன. கேர ளாவில் 1957-ல் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வென்று நாட்டில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர வையை அமைத்ததிலிருந்தே, அது நாட் டில் ஜனநாயக நடைமுறைகளில் பெரு வாரியான மக்களைப் பங்கேற்க வைத்த தன் மூலம் ஜன நாயகத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்திருக்கிறது.

நாட்டில் அதிக மான அளவில் மக்கள் வாக்களிக்கும் மாநிலங்களாக மேற்கு வங் கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகியவை மாறியிருப்பதென்பது யதேச்சையாக நிகழ்ந்ததல்ல. இம்மூன்று மாநிலங்களி லும் நடைபெற்ற நிலச்சீர்திருத்தங்கள், அங்கிருந்த பழைய நிலப்பிரபுத்துவக் கட் டமைப்பை சுக்குநூறாக தகர்த்து, ஜன நாயக அமைப்பினை விரிவாக்கியுள்ளன. பஞ்சாயத்து அமைப்புகளுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இடது சாரிகள் உருவாக்கிய ஜனநாயகப் பாரம் பரியத்தைக் களங்கப்படுத்தவும், சீர் குலைக்கவும்தான் ஆதிக்க வர்க்கங் களின் ஏஜெண்டுகளும், பிற்போக்கு சக்திகளும் இப்போது முயற்சிக்கின்றன.

இடதுசாரி அரசாங்கங்களின் பங்களிப்புகள்

மக்களின் ஆதரவைப் பெற முடிந்த இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசாங்கங்களை நடத்துவ தில் சொந்த அணுகுமுறையைக் கை யாண்டது. இடதுசாரிகள் தலைமையி லான அரசாங்கங்கள், இடது மற்றும் ஜன நாயக இயக்கங்கள் மற்றும் உழைக்கும் மக் களின் இயக்கங்கள் வளர்ந்து வலுப் பெறக்கூடிய வகையில் செயல்பட வேண்டி இருந்தன. அரசியலமைப்புச் சட்டம் தற்போது மாநில அரசுகளுக்கு அளித்துள்ள வரையறைக்கு உட்பட்டே, மக்களுக்கு நிவாரணம் தரக்கூடிய விதத் தில் மாற்றுக் கொள்கைகளை திட்ட மிட்டு செயல்படுத்திட வேண்டும் என்று கட்சித் திட்டம் விளக்கிக் கூறியிருக்கிறது. இவ்வாறு தன்னுடைய லட்சியத்தை அடைந்திட, மேற்குவங்க இடது முன் னணி அரசாங்கம் தீவிரமாகச் செயல் பட்டிருக்கிறது என்பதை இடது முன்ன ணியின் ஈடிணையற்ற வரலாறு காட்டு கிறது. இடதுசாரிகள் தலைமையிலான இத்தகையதோர் அரசாங்கத்தின் இழப்பு என்பது ஒரு பின்னடைவுதான். ஆயினும் இதனை நிரந்தரமான, அடிப்படையான இழப்பு என்று பார்க்கக் கூடாது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உழைக்கும் மக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி அணிதிரட்ட வேண்டியதன் அவசியத் தையும், அவர்களை வர்க்க மற்றும் வெகு ஜன அமைப்புகளின் மூலமாக அணி திரட்ட வேண்டியதன் அவசியத்தையும் வெகுஜன இயக்கங்களையும் போராட் டங்களையும் வளர்த்தெடுத்து, அதன் மூலம் மக்களின் அரசியலுணர்வை மேம் படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறது. இடதுசாரிகள் தலைமையிலான அரசாங் கங்கள் அமைந்தது இத்தகைய செயல் முறையின் வெளிப்பாடேயாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர் தல் முடிவுகள் குறித்து முழுமையாக ஆய் வுகள் செய்தபின், அடிப்படை வர்க்கங் களின் பிரச்சனைகள் குறித்தும், உழைக் கும் மக்களின் நலன்களுக்கான போராட் டங்கள் குறித்தும் சரியானதொரு திசை வழியில் உத்திகளை உருவாக்கிடும். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள் கைகளுக்கு எதிரான போராட்டம், மக் களின் வாழ்க்கைத்தரத்தைப் பாதுகாப் பதற்கான போராட்டம், நாட்டின் இறை யாண்மையை மற்றும் மதச்சார்பின் மையைப் பாதுகாப்பதற்கான போராட்டம் ஆகியவைதான், காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு எதிராக நாட்டின் முன்வைக்கப்படும் மாற்று அரசியல் பாதையாக இப்போதும் திகழ்கிறது.

மேற்கு வங்கத்தில் மாறியுள்ள அரசி யல் சூழ்நிலையில், கடந்த முப்பதாண்டு களுக்கும் மேலான இடது முன்னணி ஆட்சியில் மக்களுக்குக் கிடைத்திட்ட பலன்களை அவர்களிடமிருந்து எவரும் தட்டிப்பறித்திடாமல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பாதுகாத்திடும். ஆளும் கூட்டணியின் வர்க்கக் குணத் தின் காரணமாக அது நிலச்சீர்திருத்தங் கள் மூலம் மக்களுக்குக் கிடைத்திட்ட பயன்களைப் பறித்திடவும், உழைக்கும் மக்களுக்குக் கிடைத்திட்ட பலன் களை ஒழித்துக்கட்டவும் முயற்சிக்கும். நிலச் சீர்திருத்தத்தையும் குத்தகை தாரர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுவோம். தொழிலாளர்களை அவர்களது உரிமை களுக்கான போராட்டத்திற்கும், உழைக் கும் மக்களின் அனைத்துப் பிரிவினரை யும் தங்களின் வாழ்க்கைத்தரத் தினைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கும் மேலும் வலுவாக அணிதிரட்டிடுவோம். மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்க மாண்பினையும் பாதுகாத் திடுவோம். பிரிவினை சக்திகள் நாட்டின் ஒற்றுமை யையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைத் திட மேற்கொள்ளும் முயற்சி களையும் முறியடித்திடுவோம். இவை அனைத்தை யும் இடதுசாரி ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் நிறைவேற்றிடு வோம்.

கட்சியையும் இடது முன்னணியையும் பாதுகாத்திடுவோம்

தேர்தல் முடிவின் பின்னணியில் மேற்கு வங்கத்தில் கட்சியையும், இடது முன்னணியையும் இயக்கத்தையும் காப் பாற்ற வேண்டிய கடமை உட னடியாக நம் முன் வந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவரத்தொடங்கியதுமே, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் மீது எண்ணற்றத் தாக்குதல் கள் நடைபெற்றிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன் னணி ஊழியர்கள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இரு நாட்களி லேயே கட்சியின் இரு தலைவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட் டிருக்கிறார் கள். திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் வெற்றியைப் பயன்படுத்திக் கொண்டு, மார்க்சிஸ்ட் கட்சியையும் இடதுசாரி களையும் பல பகுதிகளில் ஒடுக்கும் செயலில் இறங்கியிருக்கிறது. இது முறி யடிக்கப்பட்டாக வேண்டும். இத்தகைய வன்முறை வெறியாட்டங்களுக்கு எதி ராக மேற்கு வங்க மக்களின் ஜனநாயக உணர்வுகள் கிளர்ந்தெழச் செய்யப்பட வேண்டியுள்ளது. இத்தகைய தாக்குதல் களுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய விதத் தில் நாடு முழுவதும் உள்ள கட்சி அணி களும், இடதுசாரி ஜனநாயக சக்திகளும் மேற்கு வங்கத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் இடது முன்ன ணியுடனும் உறுதியுடன் நிற்க வேண்டும்.

தமிழில் : ச.வீரமணி

Saturday, March 26, 2011

விக்கிலீக்ஸ் கேபிள்கள் வெளிப்படுத்தும் உண்மைகள் : அமெரிக்காவிடம் நாட்டை அடகு வைத்த மன்மோகன் அரசு! -- பிரகாஷ் காரத்

ந்தியாவில் இருக்கின்ற அமெ ரிக்கத் தூதரக அதிகாரிகள் மூலமாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ள கேபிள்கள் வெளியாகி இருப்பது, ஐ.மு.கூட் டணி அரசாங்கத்தின் மீதான குறிப்பிடத் தக்கதொரு தாக்குதலேயாகும். ஒரே வரி யில் சொல்வதென்றால், இவை வெளிப் படுத்தியுள்ள விவரங்கள் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐ.மு.கூட் டணி அரசாங்கத்தின் காலத்திலேயும் சரி, அதற்கு முன்பிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் காலத்திலேயும் சரி, இரு நாடுகளுக்கும் இடையிலிருந்த உறவு முறையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளன. இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதர கத்தால் அனுப்பப்பட்டுள்ள கேபிள்களை தி இந்து நாளிதழ் விக்கிலீக்ஸ் மூலமாகத் தற்சமயம் வெளிப்படுத்திக் கொண்டிருக் கிறது. இதுவரை அது வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் மிகுந்த மோசமான சித்திரத்தை அளித்துள்ளன. அமெரிக்கா, நம் நாட்டின் ராணுவ விவகாரங்கள், அயல்துறைக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கொள் கைகளின் மீது செல்வாக்கான நிலைப்பாட் டினைக் கொண்டிருப்பது அவற்றிலிருந்து தெரிய வருகிறது. அமெரிக்காவானது நம் நாட்டின் அதிகாரவர்க்கம், ராணுவம், பாது காப்புத்துறை மற்றும் உளவுப் பிரிவுகளின் அனைத்து மட்டங்களிலும் மிகவும் வெற்றி கரமாக உள்நுழைந்து விவரங்களைச் சேகரித்துக் கொண்டுள்ளது இவற்றிலி ருந்து நன்கு வெளிப்படுகிறது. கேபிள்கள் பிரதானமாக 2005 முதல் 2009 வரையி லான கால கட்டத்தினை உள்ளடக்கி இருக் கிறது. பொதுவாக இக்காலகட்டமானது ஐ.மு. கூட்டணி அரசாங்கம் அமெரிக்காவுடன் ராணுவக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்ட காலமாகும்.

அயல்துறைக் கொள்கை: தலைகீழ் மாற்றம்

மன்மோகன் சிங் அரசாங்கமானது, சுயேச்சையான அயல்துறைக் கொள் கைப் பின்பற்றப்படும் என்று தன்னுடைய குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் கூறியிருந்ததிலிருந்து பின்வாங்கிவிட்டது என்பது அனைவரும் அறிந்ததேயாகும். இவ்வாறு அரசாங்கம் அயல்துறைக் கொள்கையில் பின்வாங்கியவுடன் அத னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் எதிர்க்க வேண்டிய தாயிற்று. இவ்வாறு ஐ.மு.கூட்டணி அரசாங் கம் பின் வாங்கியபின், அவை எப்படி அமல்படுத்தப்பட்டன என்பது அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள கேபிள்களில் இருந்தும், புஷ் நிர்வாகத் தின் உயர்மட்ட அதிகாரிகளின் செயல்பாடு களிலிருந்தும் நன்கு தெரியவருகிறது. 2005 செப்டம்பரில் சர்வதேச அணுசக்தி முகமை (ஐஹநுஹ-ஐவேநசயேவiடியேட ஹவடிஅiஉ நுநேசபல ஹபநnஉல) முன்பு ஈரானுக்கு எதிராக மன்மோ கன் சிங் அரசாங்கம் வாக்களித்ததானது அதன் கொள்கைகளில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றத்தின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றா கும். இவ்வாறு அரசாங்கத்தின் கொள்கை களில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதற்கு எப்படியெல்லாம் அமெரிக்க அரசாங்கம் நிர்ப்பந்தம் அளித்தது என்பதை விக்கி லீக்ஸ் கேபிள்கள் தெளிவுபடுத்துகின்றன. ஈரானுக்கு எதிராக உறுதியான நிலைப் பாட்டினை இந்தியா மேற்கொள்ளவில் லை என்றால் அணுசக்தி ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான சட்டத்தை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றாது என்று இந்திய அரசாங்கத்திற்குக் கூறப்பட்டிருக்கிறது. நியூயார்க்கில் ஐ.நா. பொது சபையின் அமர்வு நடைபெற்ற சமயத்தில் செப்டம்பர் 13 அன்று புஷ்சுக்கும் மன்மோகன் சிங் கிற்கும் இடையே நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னர், ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் மீது கடுமையான நிர்ப்பந்தம் கொண்டு வரப் பட்டிருந்தது. மன்மோகன்சிங்கிற்கும் புஷ்சிற்கும் இடையே நடைபெற்ற கூட்டத் திற்குப் பின்னர்தான், வியன்னாவில் இருந்த இந்தியத் தூதருக்கு சர்வதேச அணுசக்தி முகமையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டோடு ஒத்துப்போகும்படி அறி வுரைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. சர்வ தேச அணுசக்தி முகமையில் வாக்கெடுப்பு நடைபெற்றபின் அமெரிக்கத் தூதர் அனுப்பியுள்ள ஒரு கேபிளில் இந்தியா வின் நிலை குறித்துக் குறிப்பிடுகையில், ‘‘ஒரு வலுவான அமெரிக்க - இந்திய உறவு முறையைக் கட்டமைப்பதற்காக ஐ.மு.கூட்டணி அரசாங்கம் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் மிக முக்கியமான சமிக்ஞையை இது அளித்திருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எப்படி அமெரிக்க அரசாங்கம் இந்தி யாவை நேபாளம், இலங்கை மற்றும் வங் கதேசம் போன்ற தெற்காசிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து சென்றிட வைப்பதில் வெற்றி பெற்றுள்ளது என்பதை பல கேபிள்கள் வெளிப்படுத்துகின்றன. அமெ ரிக்காவின் வழிகாட்டுதலின்கீழ் இஸ்ரேலு டன் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத் திக் கொண்டுள்ளதையும் அவை நன்கு புலப்படுத்துகின்றன.

‘இந்திய அதிகாரிகள் இந்தியாவும் அமெரிக்காவும் அயல்துறைக் கொள்கை களில் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கிவிட்டன என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயங்கியபோதிலும்’ அமெரிக்காவின் அயல்துறைக் கொள் கையுடன் ‘‘முழுமையாக ஒத்துப்போகக் கூடிய’’ வகையில் இந்தியாவின் அயல் துறைக் கொள்கை முழுமையாக மாற்றி யமைக்கப்படுவதில் வெற்றி பெற்றுவிட்ட தாக, தூதரகத்திலிருந்து அனுப்பப்பட் டுள்ள கேபிள் ஒன்று புளகாங்கிதம் அடைந்து தெரிவித்துள்ளது.

ராணுவத்தில் ஒத்துழைப்பு
அமெரிக்காவின் செல்வாக்கு, அடுத்து அதிகமான அளவில் இடம்பெற்றுள்ள பகுதி ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை களில் ஏற்பட்டுள்ள கூட்டுறவாகும். ஐ.மு.கூட்டணி அரசாங்கம் 2005 ஜூனில் அமெரிக்காவுடன் பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் (குசயஅநறடிசம ஹபசநநஅநவே டிn னுநகநnஉந ஊடிடியீநசயவiடிn) கையெழுத்திட்டுள்ளது. அப்போது இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, வாஷிங்டன்னுக்குச் செல்வதற்கு முன்பு ஊடகங்களிடம் தெரிவிக்கையில், ‘‘இது வெறும் ஓர் ஆய்வுப் பயணம்தான்’’ என்று குறிப்பிட்டார். ஆனால் இது தொடர் பாக அமெரிக்கத் தூதர், அமெரிக்காவின் ராணுவ அமைச்சர் டொனால்டு ரம்ஸ்பெல் டுக்கு அனுப்பியுள்ள கேபிள் அவரது நிகழ்ச்சிநிரலைத் தெளிவாகத் தெரிவித் துள்ளது. அப்போதுதான் மேற்படி பாது காப்பு கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தா கியது. இந்தியா மற்றொரு நாடுடன் இத் தகைய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடு வது இதுவே முதல்முறையாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்பின் முழுப் பரி மாணத்தையும் இது தெளிவுபடுத்துகிறது. அமெரிக்க அரசாங்கமும், அமெரிக்க அர சாங்கத்தின் ராணுவ மையமான பென்ட கனும் இவ்வாறு இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய ஒப்பந்தம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக் காலத்திலிருந்தே பேச்சுவார்த்தைகளை யும் திட்டமிடலையும் மேற்கொண்டு வந் திருக்கிறது.

உளவுப்பிரிவுகளிலும் ஒத்துழைப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக் குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறைகளில் உயர்நிலை அள வில் வளர்ந்து வந்த ஒத்துழைப்பினை கேபிள்கள் தெளிவு படுத்துகின்றன. அப் போது நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன் அமெரிக்க அரசால், அந்நாட்டின் உளவுப் பிரிவுக ளான எப்பிஐ (FBI) மற்றும் சிஐஏ (CIA) போன்ற நிறுவனங்களுடன் மிக உயர்ந்த அளவிற்கு உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முக்கிய நபராகப் பார்க்கப்பட்டிருக்கிறார்.

நம் நாட்டின் உளவு அமைப்புகளி லும், பாதுகாப்புத்துறை அமைப்புகளிலும் எந்த அளவிற்கு அமெரிக்கர்கள் ஊடுருவி யிருக்கின்றனர் என்பதை அனுப்பப்பட் டுள்ள கேபிள்களை மேலோட்டமாகப் பார்த் தாலே தெரிந்துகொள்ள முடியும். பிரிட்டிஷ் நாளேடான தி கார்டியன், முதலில் 40 கேபிள்களை வெளியிட்டது. அவற்றில் இரண்டு கேபிள்கள் முறைகேடான தொடர் புகள் குறித்தவைகளாகும். ஒன்றில், நம் நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோச னைக் குழு உறுப்பினர் ஒருவர், அமெரிக் கத் தூதரக அதிகாரி ஒருவரைச் சந்தித்து, இந்தியாவில் ஈரானியர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள தொடர்புகள் பற்றியத் தக வல்களை அளிக்கிறார். அதற்குப் பிரதி பலனாக அவர் அமெரிக்காவிற்குப் போய் வர ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மற் றொன்றில், நம் நாட்டில் உள்ள பயங்கர வாதம் தொடர்பான தகவல்களை அதிகாரப் பூர்வமாகப் பெறுவதை விட, தில்லி காவல் துறையில் பணியாற்றும் ஒரு காவல்துறை அதிகாரியிடமிருந்து நேரடியாகவே பெற் றுக் கொள்ளலாம் என்று தூதரகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள கேபிள் களில் ஒன்று, 2006இல் நடைபெற்ற மத் திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர் பானது. இதில், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான ‘கெயில்’ (GAIL) நிறுவனத் தில் பணிபுரியும் ‘‘நம் தொடர்பாளர்’’ என்று ஒருவர் குறித்து குறிப்பிடுகிறது. இவ்வாறு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள கேபிள்களிலிருந்து அமெரிக்கத் தூதரகம் ஊடகங்களிலிருந்து மட்டுமல்ல, அரசின் பல்வேறு அமைச்சகங்களிலிருந்தும் மற் றும் நிர்வாக எந்திரங்களிலிருந்தும் தக வல்களைப் பெற்றிருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.

ஊடுருவலும் ஒற்றாடலும்

இரு நாடுகளுக்கும் இடையிலான உளவு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு என்ப தானது அமெரிக்கர்கள் ஊடுருவலுக்கு நன்கு வழிவகுத்துத் தந்திருக்கிறது. அமெ ரிக்காவிற்காக ஐந்தாம்படை வேலை பார்த்த இரு ஒற்றாடல்கள் தெரிய வந் திருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட் டணி ஆட்சிக்காலத்தில், ரவீந்தர் சிங் என்கிற நபர், அமெரிக்காவின் சிஐஏவால் நம் நாட்டின் ‘ரா’ (RAW)அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு அமெ ரிக்காவுடனான தொடர்பு அம்பலமானவு டன், சிஐஏ-இன் உதவியுடன் அமெரிக்கா விற்குப் பறந்தோடி விட்டார். அதேபோன்று ஐ.மு.கூட்டணி ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் பணி யாற்றிய விஞ்ஞானி (SYSTEMS ANALYST) ஒருவரும், சிஐஏ-ஆல் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார்.

நம் நாட்டின் அயல்துறைக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவைச் சார்ந்திருப்பது என்பது 2005-2008 கால கட்டத்தில் அதிகரித் திருப்பதை கேபிள்கள் தெளிவாக்குகின் றன. அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத் தின் மூலம் தன் நாட்டின் அனைத்து நலன்களையும் இந்தியாவை ஏற்க வைப் பதற்கு, அரசாங்கத்தின் ஒவ்வொரு கண் ணியையும் பயன்படுத்திக் கொண்டது. சர்வதேச அணுசக்தி முகமையில் ஈரா னுக்கு எதிராக 2005 செப்டம்பரிலும் அத னைத் தொடர்ந்து 2006 பிப்ரவரியிலும் வாக்களித்தபின், 2006இல் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சர வைக் கூட்டம் ஒன்று, அமெரிக்கா விரும் பியதைப் போல துர்க்மெனிஸ்தான் - ஆப் கானிஸ்தான் - பாகிஸ்தான் - இந்தியா குழாய்வழித் திட்டத்தில் இணைந்து கொள் ளத் தீர்மானித்தது. அமெரிக்கர்களால் கோரப்பட்டதுபோல் ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா குழாய்வழித் திட்டத்தை குப் பைத்தொட்டியில் தூக்கிப் போடுவதற்கான தொரு தெளிவான சமிக்ஞையாக இது அமைந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் நம் நாட்டின் ராணுவத்திலும் மற்றும் பல் வேறு பாதுகாப்பு அமைப்புகளிலும் இரு நாடுகளும் கூட்டாகப் பயிற்சிகள் மேற் கொள்வது குறிப்பிடத்தக்க அளவில் அதி கரித்தது. அமெரிக்காவின் கப்பல் படை யைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள் நம் நாட்டின் துறைமுகங்களிலும் விமானத் தளங்களிலும் வந்து எரிபொருள்கள் நிரப்பிக் கொள்ளவும், அவற்றை இயக்கிக் கொள்ளவும், மற்றும் பல்வேறு பணி களைச் செய்துகொள்ளவும் அனுமதித்தும் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதையும் கேபிள் கள் தெளிவுபடுத்துகின்றன. மத்திய அமைச்சரவையில் இந்த ஒப்பந்தத்திற் கான வரைவு தாக்கல் செய்யப்படுகையில், இடதுசாரிக் கட்சிகள் இதனைக் கடுமை யாக எதிர்த்தன.

காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்கு செலுத்துதல்

2006இல் மத்திய அமைச்சரவை விரி வாக்கம் செய்யப்பட்ட சமயத்தில், தனக்குச் சாதகமான நபர்களை அமைச்சர்களாக் கிடக்கூடிய வகையில் காங்கிரஸ் கட்சியின் மீது அமெரிக்கா செல்வாக்கு செலுத்தி யதை மற்றொரு கேபிள் வெட்டவெளிச்ச மாக்குகிறது. அமைச்சரவை மாற்றியமைக் கப்படுவது தொடர்பாக அமெரிக்கத் தூதர் மதிப்பிட்டிருப்பதாவது: ‘‘அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபின் அமைந்துள்ள அமைச்சரவையானது, இந்தியாவிலும் (ஈரானிலும்) அமெரிக்காவின் குறிக்கோள் களை நிறைவேற்றக் கூடிய வகையில் மிகவும் அற்புதமாக அமைந்திருக்கிறது.’’ அந்த அறிக்கையில் மிகவும் வலுவான அமெரிக்க ஆதரவு அமைச்சர்கள் ஐந்து பேர் இடம்பெற்றிருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. முரளி தியோரா, கபில் சிபல், ஆனந்த் சர்மா, அஸ்வினி குமார் மற்றும் சைபுதீன் சோஸ் ஆகிய ஐவருமே அவர்களாவார்கள். மாற்றியமைக்கப்பட் டுள்ள அமைச்சரவை குறித்து இடதுசாரி கள் சீற்றம் அடைந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கை சரியாகக் குறிப்பிட்டிருக் கிறது. மேலும் அந்த அறிக்கையில், ‘‘இவ் வாறான அமைச்சரவை மாற்றம், அமெ ரிக்கா பக்கம் அரசு சாய்ந்துகொண்டிருப்ப தையே காட்டுகிறது என்று கூறி இடது சாரிகள் காங்கிரசிடம் கொண்டிருந்த நட்புற வினை முறித்துக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள். மேலும் ஐ.மு.கூட்டணி அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை களையும் அயல்துறைக் கொள்கை தொடர்பான முன்முயற்சிகளையும் எதிர்க் கத் தொடங்கிவிட்டார்கள். அவை வர விருக்கும் காலங்களில் அரசியல் வான வேடிக்கைகளை அளித்திடும்’’ என்றும் உய்த்துணர்ந்திருக்கிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐயர் மாற்றியமைக் கப்பட்டு, அவருக்குப் பதிலாக முரளி தியோரா அமர்த்தப்பட்டது தொடர்பாக தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்க அமெரிக்கத் தூதர் தயங்கவில்லை. மணி சங்கர் ஐயர் ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா குழாய்வழித் திட்டத்திற்கு முன்முயற்சிகள் எடுத்ததும், சீனத்திற்குச் சென்று வந்ததும்தான் அமெ ரிக்காவின் கோபத்திற்குக் காரணமாகும். மாறாக அவரது இடத்தில் அமெரிக்க ஆதர வாளரும், பெரும் முதலாளிகளுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பவருமான முரளி தியோரா அமர்த்தப்பட்டது வெகு வாகப் புகழப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில், அரசின் ஒவ்வொரு துறையிலும் செல் வாக்கு செலுத்தவும், ஊடுருவிடவும் அமெ ரிக்கர்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டி ருக்கின்றன. இவ்வாறு தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டமைக்காக அமெரிக்கர்களைக் குறைகூறுவதில் பயனில்லை. மிகவும் சரி யாகச் சொல்வதென்றால், ஐ.மு.கூட்டணி அரசாங்கம்தான் 2007இல் தேர்வு செய் யப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் அமெரிக் காவில் உள்ள பல்வேறு பல்கலைக் கழ கங்களில் பயிற்சித் திட்டங்களை மேற் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி யுள்ளது. அவர்கள் சிவில் ஊழியர்களாக இருந்தாலும் சரி அல்லது ராணுவத்தின் அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அனை வரும் அமெரிக்கா சென்று பயிற்சி எடுத் துக்கொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.

அரசியலில் ஊழல்

இந்தியாவின் அரசியலமைப்பு முறை யில் உயர்மட்டத்தில் நிலவும் ஊழல்களை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருவ தைப் பல கேபிள்கள் படம்பிடித்துள்ளன. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் ஐ.மு.கூட் டணி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்குவதற்கு, மிகப் பெரிய அளவில் பணம் பயன்படுத்தப்பட் டது தொடர்பான கேபிளானது அமளி ஏற் படக் காரணமாக அமைந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு மன்மோகன்சிங் அரசாங்கம் எதை வேண் டுமானாலும் செய்திட வேண்டும் என்பதில் அமெரிக்கா மிகவும் ஆர்வமாக இருந்தது. ஏனெனில் அப்போதுதான் அணுசக்தி ஒப் பந்தத்தை செயல்படுத்திட முடியும். எந்த வழிமுறையாக இருந்தாலும் - அது நேர் மையானதா அல்லது நெறிபிறழ்ந்ததா என்பது பற்றி - அமெரிக்காவிற்குக் கவ லையில்லை. அனைத்தும் அதற்கு ஏற்பு டையதுதான். சென்னை தூதரக அலுவல கத்திலிருந்து சென்றுள்ள ஒரு கேபிள், திமுக, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலின்போதும், மதுரை மக்களவைத் தொகுதிக்கு நடந்த தேர்த லின்போதும் எப்படி எல்லாம் வாக்காளர் களுக்குப் பணம் விநியோகித்தது என் பதை மிகவும் துல்லியமாக அனுப்பியிருக் கிறது. இவ்வாறு நம் நாட்டின் அரசியலில் ஊழல் அரசியல்வாதிகள் யார் யார் என் பதையும் அவர்களை எப்படியெல்லாம் வாங்கிட முடியும் என்பதையும் அமெரிக்கா நன்கு அறிந்து வைத்திருந்தது.

அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக விருந்த சமயத்தில் நாட்டில் நடைபெற்ற அரசியல் போராட்டங்களில் எந்த அள விற்கு அமெரிக்கா ஆர்வம் காட்டின என் பதை பல கேபிள்கள் தெளிவாக்குகின்றன. அணுசக்தி ஒப்பந்தமானது நம் நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதைவிட, அமெ ரிக்காவின் நலன்களையே அதிகமான அளவில் முன்னெடுத்துச் செல்லும் என்ப தால் அது எப்படியும் கையெழுத்தாகிவிட வேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த தற்குப்பிறகு ஏற்பட்ட மாபெரும் விஷய மாக அணுசக்தி ஒப்பந்தத்தை பிரதமர் மன் மோகன் சிங்கும் அவரைச் சுற்றியுள்ள கும்பலும் பார்த்தன. அணுசக்தி ஒப்பந்த மானது, தன் நாட்டின் ஒருசில பில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டக்கூடிய வெறும் வணிகப் பயன்பாடாக மட்டும் அமெரிக்கா பார்க்கவில்லை, மாறாக இந்தியாவை தன் னுடைய கேந்திரமான ராணுவக் கூட்டாளி யாகவும் மாற்றிடக் கூடிய ஒன்று என்பதை பல கேபிள்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

பிரதமரும் காங்கிரஸ் தலைமையும் நாட்டை அடகு வைத்து இவ்வாறு ஒப்பந் தம் செய்துகொள்கிறோமே என்று கொஞ் சம்கூட கூச்சநாச்சம் எதுவுமின்றி இந்த ஒப்பந்தத்தைச் செய்திட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள், அமெரிக்காவிற்குச் சென்றுள்ள இந்தக் கேபிள்கள் சரிபார்க்கத்தக்கதல்ல என்றும் அவற்றை அதிகாரப்பூர்வமான தாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர் பாக அமெரிக்க அயல்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்திய அயல் துறை அமைச்சரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்தக் கேபிள்கள் கசிவு குறித்து எச்சரித்திருப்பதோடு, அவற் றால் ஏற்படக்கூடிய தர்மசங்கடமான நிலை மைகள் குறித்தும் பேசியிருப்பதிலிருந்து இது ஒரு பரிதாபகரமான சாக்குப்போக்கு தான் என்பதை அனைவரும் அறிவார்கள்.

மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைமை நாட்டை எந்த அளவிற்கு அமெ ரிக்காவின் காலடியில் வைத்திருக்கிறது என் பதை மிகவும் துயரார்ந்த முறையில் விக்கி லீக்ஸ் கேபிள்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழில்: ச.வீரமணி

Wednesday, July 7, 2010

ஜூலை 5 அகில இந்திய வேலைநிறுத்தம்: மாபெரும் வெற்றி



பிரகாஷ் காரத்

ஜூலை 5 அகில இந்திய வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை காங்கிரஸ் கட்சியைத் தவிர அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். வேலைநிறுத்தம் நாட்டின் அனைத்துப் பகுதிகளையுமே - வடகிழக்கே மணிப்பூரில் தொடங்கி வடமேற்கே ஜம்மு வரையிலும், தெற்கே கேரளா தொடங்கி வடக்கே இமாசலப்பிரதேசம் வரையிலும் - பாதித்திருக்கிறது. இம்முறை அகில இந்திய வேலைநிறுத்த அறைகூவலுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாள்தோறும் உயர்ந்து வருவதன் காரணமாக மிகவும் நொந்துபோயுள்ள மக்கள் முழுமையான ஆதரவினை அளித்துள்ளார்கள். ஐமுகூ-2 அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே விலை உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்ற எந்தவித நிவாரணமும் கிடையாது.

மக்கள் மீதான சமீபத்திய தாக்குதல் என்பது, மூன்று மாத காலத்திற்குள்ளேயே மீண்டும் இரண்டாவது தடவையாக இந்த அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியதாகும். இந்தத் தடவை, மண்ணெண்ணெய்யையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. இவை எல்லாவற்றையும்விட மிகவும் கொடுமையான அம்சம், பெட்ரோல் விலைநிர்ணயத்தின் மீது அரசு கட்டுப்பாட்டை நீக்கியிருப்பதாகும். இது பிரதானமாக தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதாயம் அளித்திடும் என்பதோடு நுகர்வோரை சந்தை சக்திகளின் தயவிற்குத் தள்ளிவிட்டுவிடும்.
பெட்ரோலியப் பொருட்ளை விலை உயர்த்தியதற்கும், அவற்றின் மீது அரசுக் கட்டுப்பாட்டை நீக்கியதற்கும் அரசு சார்பில் அளிக்கப்பட்ட அத்தனை வாதங்ளும் பொய்யானவை என்பது தோலுரித்துக் காட்டப்பட்டு விட்டன. இந்தப் பிராந்தியத்திலேயே அதிக வரி விதிப்பின் விளைவாக இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகம். ஒவ்வொரு தடவை விலையை உயர்த்தும்போதும் அரசு வருவாய் பல்கிப் பெருகியிருக்கிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அபரிமிதமான லாபத்தை ஈட்டியிருக்கின்றன. எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் திரும்பப் பெறுதல் ("under recovery") என்று சொல்லப்படுவதெல்லாம் வெறும் கற்பனாவாதமே. விலை உயர்வுகள், ஏற்கனவே இரு இலக்கமாகியுள்ள பணவீக்க விகிதத்தை மேலும் அதிகப்படுத்திடும். உணவுப் பாதுகாப்பு அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் இருந்தால் அதனை அரித்து இல்லாது ஒழித்துவிடும்.

அகில இந்திய வேலை நிறுத்தம் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து, பெறுநிறுவனங்களின் ஊடகங்கள் வழக்கமான விமர்சனத்தை ஊதிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். இவ்வாறு கூப்பாடு போடுவது யார்? சென்ற பட்ஜெட்டின்போது பல்லாயிரம் கோடி ரூபாய்களை வரிச் சலுகைகளாகப் பெற்றவர்களும், நேரடி வரிவிதிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதன் மூலம் யாருக்கு மேலும் எண்ணற்ற ஆதாயங்களை அளிக்க இருப்பதாக அரசு சார்பில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டிருக்கிறதோ அத்தகைய பெறுநிறுவனங்கள்தான் இவ்வாறு கூப்பாடு போடுகின்றன. 2009-10 பட்ஜெட்டில் பெறுநிறுவனத் துறைகளுக்கு மட்டும் 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு எண்ணற்ற விதங்களில் வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

மற்றொரு தாக்குதல் இடதுசாரிகள் மீது வீசப்பட்டிருக்கிறது. இடதுசாரிகள் பாஜக-வினருடன் கைகோர்த்துக்கொண்டு விட்டார்கள் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது. கொள்கை அடிப்படையில் செயல்படுவதாக் கூறும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு என்ன வந்தது என்று பெறுநிறுவன ஊடகங்கள் கிண்டலடிக்கின்றன.

மதவெறிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அனைவரும் அறிந்ததே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் பாஜக பிரதிநிதித்துவப்படுத்தும் மதவெறி அரசியலுக்கு எதிராக எவ்விதச் சமரசமுமின்றி செயல்பட்டு வருவதையும், மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருப்பதையும் அனைவரும் அறிவார்கள். இதில் எவ்வித ஊசலாட்டத்திற்கோ சமரசத்திற்கோ இடமில்லை.
பிரதான பிரச்சனையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே மதவெறி சக்திகளுடன் இடதுசாரிகள் கைகோர்த்துக்கொண்டு விட்டனர் என்ற பூச்சாண்டி காட்டப்படுகிறது. அரசாங்கம் பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை நிர்ணயிக்கும் அடிப்படையையே மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சியிலிருந்த சமயத்தில், அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீதான கட்டுப்பாட்டை நீக்கப்போவதாக அறிவித்தபோது, அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. எண்ணெய் இருப்பு பற்றாக்குறையைக் குறைத்திட என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையும் கட்சி சுட்டிக்காட்டியது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் அதனை அமல்படுத்தவில்லை. ஏனெனில் அவ்வாறு அறிவிக்கையை வெளியிட்டபின் அதனால் ஆட்சியில் நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியவில்லை. ஆயினும் 2002இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலிருந்த சமயத்தில் நிர்வாக விலை நிர்ணயமுறை கைவிடப்பட்டதை அடுத்து, பெட்ரோலியப் பொருட்கள் விலை மீதான அரசின் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனைக் கடுமையாக எதிர்த்து, பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிராக கிளர்ச்சிகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து 2004இல் கட்டுப்பாடு நீக்கம் (deregulation) கொள்கை கைவிடப்பட்டது.

இப்போதும்கூட, பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீதான கட்டுப்பாட்டை நீக்கிட முடிவெடுத்துள்ள மன்மோகன்சிங் அரசாங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து கடும் எதிர்ப்பினை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.
மத்திய அரசு தன்னுடைய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான கலால் மற்றும் சுங்கத் தீர்வைகளை உயர்த்தி அறிவித்தபோது, இடதுசாரிக் கட்சிகளின் முன்முயற்சியால் 13 கட்சிகள் சந்தித்து ஏப்ரல் 27 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இது, ஐமுகூ-2 அரசாங்கம் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபின்னர் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட பெரிய அளவிலான முதல் அகில இந்திய எதிர்ப்பு இயக்கமாகும்.

இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தும் அதனை உதாசீனப்படுத்திவிட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமானது இப்போது மீண்டும் தடித்தனமானமுறையில், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மீண்டும் ஒருமுறை உயர்த்தி, மக்கள் மீது சொல்லொண்ணாத அளவிற்கு சுமைகளை ஏற்றி நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட உறுதியான நடவடிக்கைகள் எடுக்க மறுப்பதோடு இதுவும் சேர்ந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் இடதுசாரிக் கட்சிகள், அஇஅதிமுக, தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாதிக்கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், அஸாம் கண பரிசத் மற்றும் இந்திய தேசிய லோக் தளம் ஆகிய ஏழு கட்சிகளுடன் இணைந்து ஜூலை 5 அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தன. மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான கடும் தாக்குதலுக்கு எதிராக நடைபெறும் அகில இந்திய எதிர்ப்பியக்கத்தில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்க எந்த வொரு எதிர்க்கட்சியாலும் இருக்க முடியாது. மற்ற எதிர்க்கட்சிகளும், பிரதானமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பந்த்துக்கு அறைகூவல் விடுத்தன.

ஐமுகூ அரசாங்கத்தை ஆதரித்து ஆர்ஜேடி மற்றும் எல்ஜேபி ஆகிய கட்சிகளும் கூட பீகாரில் ஜூலை 10 அன்றைக்கு பந்த்துக்கு அறைகூவல் விடுத்திருக்கிறது.
பிரம்மாண்டமான முறையில் எதிர்க்கட்சிகள் நடத்திய எதிர்ப்பியக்கத்தினால் மிகவும் அரண்டுபோயுள்ள காங்கிரஸ் கட்சியும், அதன் பெறுநிறுவன ஊடக ஆதரவாளர்களும் ‘‘இடதுசாரிக் கட்சிகள் - பாஜக ஒற்றுமை’’ என்னும் பூதம் உருவாகிவிட்டது என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் அநேகமாக மதச்சார்பற்ற அனைத்து எதிர்க்கட்சிகளுமே கலந்து கொண்டன என்பதை அவை வசதியாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால் மக்கள் ‘‘இடதுசாரிகள்-பாஜக ஒற்றுமை’’ என்னும் பிரச்சாரத்தால் அப்படி ஒன்றும் குழம்பிப்போய்விடவில்லை. அவர்கள் ஒவ்வொரு அரசியல் கட்சியையுமே, இவ்வாறு விலை உயர்வு மூலமாக தங்கள் மீது தாக்குதல் தொடுக்கப் பட்டிருக்கும்போது, தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக உண்மையில் எவை எவை தங்களுக்காகப் போராடுபவை என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தே இருக்கிறார்கள். மக்களின் நலன்களுக்காக இருப்பதாக அடிக்கடி பாவ்லா செய்திடும் திரிணாமுல் காங்கிரஸ், மக்கள்மீது தாக்குதல் வரும் சமயத்தில் மத்திய அரசின் ஓர் அங்கம் என்ற வகையில் மக்கள் விரோத நடடிக்கைகளுக்கு முழுமையா ஆதரவு அளித்திருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை, இத்தகைய பிரச்சாரங்கள் அவற்றின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திட முடியாது. விலை உயர்வு மற்றும் மிகவும் கேடுபயக்கக்கூடிய அரசின் பெட்ரோலியப் பொருள்கள் விலைக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும். இடதுசாரிக் கட்சிகளின் சிறப்பு மாநாடு ஏற்கனவே உணவுப் பாதுகாப்பு மற்றும் விலை உயர்வுக்கு எதிராக ஆகஸ்டில் பிரச்சாரம் மேற்கொள்ள அறைகூவல் விடுத்திருக்கிறது. இந்தப் பிரச்சாரம் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான அடிப்படையை வகுத்திடும். அதேசமயத்தில், இடதுசாரிக் கட்சிகள், இதர மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளுடன் இணைந்துநின்று, வரவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்திலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுப் பிரச்சனையை எடுத்துக்கொள்ளும். இவை அனைத்துடனும் இக்கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இயக்கத்தை எந்தத் திசைவழியில் விரிவாக்கி வளர்த்து எடுத்துச் செல்வது என்பது குறித்து கலந்தாலோசனைகள் செய்திடும்.

(தமிழில்: ச.வீரமணி)