Monday, August 29, 2016


கம்யூனிஸ்ட்டுகளின் இருக்க வேண்டிய
   நான்கு முக்கிய அம்சங்கள்
கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டும், மற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும் திகழக்கூடிய விதத்தில், தங்களை உருக்குபோன்று ஆக்கிக் கொள்ளக்கூடிய விதத்தில்,  தங்களை வலுவான மற்றும் அர்ப்பணிப்புடனான உறுப்பினர்களாக மாற்றிக்கொள்ள வேண்டுமானால் அதற்குத் சித்தாந்த ரீதியாகத் தங்களை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சியை சுயமாகவே தொடர்ந்து மேற்கொண்டு வரவேண்டும்.
இதற்கு நான்கு முக்கிய அம்சங்கள் நமக்குத் தேவையாகும். அவையாவன:
1. மார்க்சிசம்-லெனினிசத்தைக் கற்பதன் மூலமாகவும், புரட்சிகரப் போராட்டத்தில் பங்கெடுப்பதன் மூலமாகவும் நாம் நம்முடைய கம்யூனிஸ்ட் உலகக் கண்ணோட்டம் மற்றும் ஓர் உறுதியான கட்சி மற்றும் தொழிலாளி வர்க்க நிலைப்பாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
2. நம் சிந்தனை மற்றும் செயல்பாடுகளை நமக்கு நாமே ஆய்வு செய்து கொள்ள, நம் அனைத்துவிதமான பிழையான சிந்தனைகளையும் சரி செய்து  கொள்ள மற்றும் அதே சமயத்தில் நம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் மற்றும் இதர தோழர்களின் பிரச்சனைகளையும், நம் கம்யூனிஸ்ட் உலகக் கண்ணோட்டம் மற்றும் நம் உறுதியான கட்சி மற்றும்  தொழிலாளிவர்க்க நிலைப்பாட்டின்கீழ் நின்று, சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
3. கட்சியில் பிழையான  சிந்தனைக்கு எதிரான, அதிலும் குறிப்பாக நடப்பு புரட்சிகர போராட்டத்தைப் பாதிக்கக்கூடிய விதத்தில் பிழையான  சிந்தனைக்கு எதிரான, போராட்டத்தில் ஒரு சரியான அணுகுமுறை மற்றும் பொருத்தமான வழிமுறைகளை எப்போதும் பின்பற்றிட வேண்டும். 
4. சிந்தனை, பேச்சு மற்றும் செயல்களில் நமக்கு நாமே ஓர் உறுதியான கட்டுப்பாட்டை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.  குறிப்பாக, நடப்பு புரட்சிகர போராட்டத்தை ஒட்டிய அரசியல் சிந்தனைகள், அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை சரியான கொள்கை வழிநின்று உறுதியான நிலைப்பாட்டினை மேற்கொண்டிட வேண்டும். மேலும் கூடுதலாக, நாம் நம்முடைய சில (நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை, அணுகுமுறை, போன்ற)  "அற்ப விஷயங்கள்" குறித்தும் மிகவும் கவனமாக இருப்பதும் தேவை. ஆனால், இதர தோழர்களின் கோரிக்கைகள் குறித்த பிரச்சனைகள் வரும்போது, அதாவது அவர்களின் கொள்கை மற்றும்  பெரிய அளவிலான அரசியல் பிரச்சனைகளுக்கு அப்பால், சொந்தமான கோரிக்கைகள் குறித்த பிரச்சனைகள் வரும்போது நாம் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது அல்லது அவர்களின்  "அற்ப விஷயங்களை" பூதாகரப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது.  
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் தத்துவார்த்த சுய பயிற்சி குறித்து பேசும்போது, அடிப்படையில் மேற்கண்ட நான்கு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.
(தோழர் லியு ஷோசி)

The aim of ideological self-cultivation by members of the Communist party is to temper themselves to become staunch and utterly devoted members and cadres of the Party who make constant progress and serve as examples for others. What is required of us is the following:

1. To build up our communist world outlook and a firm Party and proletarian class standpoint through the study of Marxism-Leninism and participation in the revolutionary struggle.

2. To examine our own thinking and behaviour, to correct all erroneous ideas and at the same time to judge questions and judge other comrades on the basis of our communist world outlook and our firm Party and proletarian class standpoint.

3. Always to adopt a correct attitude and appropriate methods in the struggle against erroneous ideology in the Party, and especially against the erroneous ideology which affects the current revolutionary struggle.

4. To keep a firm control over ourselves in thought, speech and action, especially to take a firm standpoint and adhere to correct principles with regard to political ideas, statements and activities which are related to the current revolutionary struggle. In addition, it is as well to be careful even over “trifles” (in one’s personal life, attitude, etc.). But as for making demands on other comrades, apart from matters of principle and major political questions, we should not be too severe or fault finding over “trifles”.
In my opinion, the above is what we mean, fundamentally, when we talk about ideological self-cultivation by members of the Communist Party.
(Comrade Liu shaoqi pronounced as Liu shochi)
  


No comments: