Thursday, June 9, 2016

பகாசுரன் - ஒன்பதாவது நாள் மற்றும் முடிவுரை



ஒன்பதாவது நாள்
ரவி, பைகளில் சாமான்களை வைத்துக்கொண்டே தன்னுடைய கைக்கடிகாரத்தை ஒருகணம் பார்த்தான். போபால் செல்வதற்கான ரயிலில் ஏறுவதற்கு அவர்களுக்கு இன்னும் ஒருசில மணி நேரம்தான் இருந்தன. சற்றே மனதில் கொஞ்சம் வருத்தத்துடனேயே காலை உணவை உண்பதற்காக மேசையின் முன்னே சென்று உட்கார்ந்தான்.
கடந்த ஒருவாரமாகத் தங்களைப் பார்த்துக் கொண்ட அன்பான உறவினர்களை விட்டுப் பிரியப்போகிறோமே என்ற உணர்வுடனேயே,  சூடாக இருந்த பூரியை அதற்கான மசாலாவில் தொட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தான். பிரதீப்பும் ஒரு துண்டு பூரியை எடுத்து மென்றுகொண்டே, தூங்கிக்கொண்டிருந்த நாய்க் குட்டிகளை அன்புடன் பார்த்தான். சேகரைப் பார்த்து மிகவும் நன்றியுடன் ரவி, மாமா, உங்கள் அனைவருக்கும் நன்றி. எங்கள் பயணம் உண்மையிலேயே மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நாங்கள் நிறைய இடங்களைப் பார்த்தோம், நிறைய விஷயங்களையும் கற்றுக்கொண்டோம். பணக்காரர்கள், ஏழைகள், அயோக்கியர்கள், யோக்கியர்கள், ஊழலும் பன்றிகளும், அழகும் அசிங்கமும்... எப்படியெல்லாம் வாழ்கின்றன என்பதைப் பார்த்தோம். எல்லாவற்றையும்விட முக்கியமாக, பகாசுரன்கள் பஞ்சாயத்து அமைப்புகளிலிருந்து, நாடாளுமன்றம் வரை அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதையும் பார்த்தோம்.’’
சேகரும் சற்றே நெகிழ்ச்சியோடு, நிச்சயமாத்தான் சொல்கிறாயா? நான் சொன்ன மோசமான கதைகளையெல்லாம் கேட்டு என் காலை ஒன்றும் வாரவில்லையே?’’ என்று நகைச்சுவையுடன் கேட்டார்.
பிரதீப், என்ன மாமா சொல்றீங்க? சில விஷயங்கள் வேண்டுமானால் அற்பமானவைகளாக இருக்கலாம். ஆனால், எங்களைப் பொறுத்தவரை, அவை மிகவும் பயனுள்ளவை களாகும். நம் சமூக அமைப்பு குறித்தும், மக்கள் குறித்தும் நிறையவே நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம்.’’ இவ்வாறு கூறி விட்டு, ரவியின் ஒப்புதலுக்காக ரவியைப் பார்த்தான்.
நிச்சயமாக, மாமா. உண்மையில்,  எங்களுடைய அனுபவங்களையும், நீங்கள் எங்களிடம் கூறிய கதைகளையும் சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கள் நண்பர்களிடைய பகிர்ந்து கொள்ள ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறேன். பிரதீப்பும் அதேபோன்று செய்யலாம்,’’ என்று ரவி கூறினான்.
ஓ, உண்மையிலேயே நல்ல விஷயம்தான். உங்களால் முடிந்தால் எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும்.  பகாசுரன்கள் பற்றியும் பன்றிகள் பற்றியும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  அனைத்தும் மாற வேண்டியிருக்கிறது. மக்களின் விருப்பங்களை யெல்லாம் எப்படி இவர்கள் நசுக்குகிறார்கள் என்பதையும், அவர்களையெல்லாம் கிட்டத்தட்ட பிச்சைக்காரர்களாகவே மாற்றியிருப்பதையும் பாருங்கள்.  தேர்தல்கள் வரும் சமயங்களில் இது அதிகமாகவே இருக்கிறது. அவர்களிடமிருந்து வாக்குகளைப் பறிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு நிறையவே தானங்கள் வழங்குகிறார்கள். கிட்டத்தட்ட நாட்டை பிச்சைக்காரர்களின் நாடாகவே மாற்றி விட்டார்கள்.  அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு திட்டமும் மற்றும் பல்வகை திட்டங்களும் இத்தகையவைதான்  என்று நீங்கள் கருதவில்லையா? இல்லாவிட்டால், இவை குறித்தெல்லாம் இதற்குமுன் இவர்கள் ஏன் சிந்திக்கவில்லை?  இவ்வளவு காலமும் நாட்டை எப்படிச் சூறையாடுவது என்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். தேர்தல் முடிந்தபின்னர் பாருங்கள், மீண்டும் அவர்கள் நாட்டின் செல்வங்களைச் சூறையாடுவதைத் தொடங்கிவிடுவார்கள். இத்தகைய நலத்திட்டங்களும் சில மோசடிகளுடன் முடிந்து விடும். இத்தகைய கோணல் திட்டங்கள் அரசின் கருவூலத்தைக் காலி செய்வதற்குத்தான் பயன்படும். நாட்டில் உள்ள ஒவ்வொருமனிதனும் உழைத்துத் தனக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்கக்கூடிய நிலை என்று வருகிறதோ அன்றுதான் மக்கள் உண்மையான நலத்துடன் வாழ முடியும். அவர்களும் தங்கள் நெஞ்சை நிமிர்த்தி முன்னேற முடியும். இந்த வழியில் நாட்டின் உற்பத்தித் திறன் உயரவே இல்லை, அல்லவா?’’
நீங்கள் சொல்வதன் பொருள், ஒவ்வொரு ஊழல் பேர்வழியையும் பகாசுரன் என்ற அடைமொழியுடன் அழைக்கலாம்,தானே?’’
நிச்சயமாக,’’ சேகர் சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டார்.
அப்படியானால், நாம் நம் பிரச்சாரத்தைத் தொடங்கி விடுவோம்,’’ என்று பையன்கள் அனைவரும் ஒரே குரலில் கூறினார்கள். கண்களில் ஒளிவீச, சேகர், உண்மையில் அது பெரிய விஷயம்தான். நாம் அனைவரின் கனவுகள், கற்பனைகள் அதுதான்.’’ ரவியும், ஆம், மாமா’’ என்று அவர் கூறியதை ஆமோதித்தான். அந்த சமயத்தில் பிரதீப், ரவியிடம், ரவி, உனக்குத் தெரியுமா? கனவு என்பது தூக்கத்தில் நீ காண்பது அல்ல. மாறாக, உன்னைத் தூங்க விடாமல் செய்வதே கனவு.’’ சேகரும், தன்னுடைய மருமகப்பிள்ளையின் கூர்ந்த அறிவை மெச்சக்கூடிய விதத்தில் அவன் கூறியதை ஆமோதித்துத் தலையை ஆட்டினார்.
சுமன் தன் பையன்கள் புத்திசாலித்தனமாக பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் நேசத்துடனும் பெருமையுடனும் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் பையன்கள் இருவரும் அபியுடன் வீட்டிற்குள் சென்று தங்களுடைய டிராலி பைகளை இழுத்துக்கொண்டே காத்துக்கொண்டிருந்த வாகனத்தை நோக்கி வந்தார்கள்.
ஒவ்வொருவரும் அவற்றை வண்டியில் ஏற்றியபோது, திடீரென்று பிரதீப் எழுந்து மீண்டும் எதையே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டதுபோல் வீட்டிற்குள் திரும்பி ஓடினான். இவர்களைப் பார்ப்ப்தற்காகக் காத்துக்கொண்டிருந்த நாய்க்குட்டிகளிடம் சென்று அவற்றின் முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு, பின்னர்,  நண்பர்களே, உங்களுடன் பொழுது இனிதே கழிந்தது. போய்வருகிறோம்.  ஜாக்கிரதையாக இருங்கள்,’’ என்று கூறி  அவற்றிடமிருந்து விடைபெற்றான்.  அவையும் தங்கள் வால்களை வேகமாக ஆட்டி அவனுக்குப் பிரியாவிடை கொடுத்து அனுப்பின.
அவர்கள் அனைவரும் மூன்றாவது பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.  அப்போது  போபால் செல்லும் ரயில் மூன்றாவது பிளாட்பாரத்திற்கு இன்னும் ஐந்து நிமிடங்களில் வந்து சேரும் என்று அறிவிப்பு வந்தது. ஆனால், உண்மையில் ஏற்கனவே அங்கு ரயில் வந்துவிட்டது.  இவர்கள் தங்கள் லக்கேஜ்களுடன் தங்கள் பெட்டியை நோக்கி விரைந்தார்கள்.
அனைவரின் முகத்திலும் பாசமிகு புன்னகை. அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டனர்.  இளையோர்கள் முதியோரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்கள்.
வண்டி நகரத்தொடங்கியதும், சேகர், நாம் பேசியவை தொடர்பாக என்ன செய்தீர்கள் என்பது குறித்து உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள மிக ஆவலுடன் காத்திருப்பேன். அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள்,’’ என்று சுற்றிலும் இருந்த சத்தத்தையும் மீறி, கைகளை ஆட்டிக்கொண்டே கூறினார். அவர்களும் ரயிலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார்கள்.
நிச்சயமா, மாமா’’ என்று பையன்களும் கத்தினார்கள். ரயில் வேகமாக செல்லத் தொடங்கியது.
பையன்கள் கதவருகில் நின்று கொண்டு, கைகளை உயர்த்தி, பாரதம் வாழ்க, பகாசுரன்கள் வீழ்க’’ என்று கோஷமிட்டார்கள். ஸ்டேஷனிலிருந்தவர்கள் எல்லாம் ஆச்சர்யத்துடன் இவர்களைப் பார்ப்பதைக்கண்டு அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டுக்கொண்டே இருந்தார்கள். ரயில் வேகமாகச் செல்லத்தொடங்கிவிட்டது.
அவர்கள் கண்களில் இருந்த மறையும் வரைக்கும் இவர்களும் கைகளை வீசிக்கொண்டே இருந்தார்கள். சேகரின் குடும்பம் ரயில் சென்று மறையும்வரை அங்கேயே நின்று கொண்டிருந்தது.
…..



முடிவுரை

பிரதீப்பும், ரவியும் வந்து சென்ற சில நாட்கள் கழித்து, சேகர் அவர்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பினார்:
பாரதம் வாழ்க, பகாசுரன்கள் வீழ்க.’’ 
பகாசுரன்களுக்கு எதிரான உங்கள் பிரச்சாரம்  வலுப்பெற்றுக் கொண்டிருக்கும் என நம்புகிறேன். அதே சமயத்தில், இவ்விஷயத்தில் நாம் ஏற்கனவே சில வெற்றிகளை ஈட்டத் தொடங்கியிருக்கிறோம் என்பதையும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன். முதன்முறையாக இவ்வாறு நடந்துள்ளது.
நீங்கள் பத்திரிகைகளில் படித்திருந்திருக்கலாம். சமீபத்தில், உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்புகள் மூலமாக அரசியல்வாதிகளுக்கு இரட்டை அதிர்ச்சியைக் கொடுத்தது. கிரிமினல்களிடமிருந்து அரசியலைக் காப்பாற்றிட நாட்டிற்கு இத்தீர்ப்புகள் மிகப்பெரிய அளவில் நிவாரணைத்தைக் கொண்டு வந்தன. இவ்வாறு தீர்ப்புகள் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட மாபெரும் வழக்கறிஞர் லில்லி தாமசுக்கும்,  மக்கள் காவலர் இயக்கத்தின் செயல்வீரருமான வசந்த் சௌத்திரிக்கும்  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
முதலாவதாக, லில்லி தாமஸ் மனுவின் மீதான தீர்ப்பானது தண்டனை பெற்ற நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களின் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இத்தனை ஆண்டு காலமும் இவர்கள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8(4)ஆவது பிரிவின் கீழான ஷரத்துக்களின் கீழ் மிகவும் வசதியாக அனுகூலங்களைப் பெற்று சுகபோகமாக வாழ்ந்து வந்தார்கள். மேற்படி 8(4)ஆவது பிரிவின்படி தண்டனை பெற்ற காலத்திற்குப் பின் 3 மாதங்கள் வரை அல்லது மேல்முறையீடு முடியும் இறுதியாக முடியும்வரை இவர்கள் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களாகத்  தொடர்ந்து இருந்திட முடியும். இப்போது, நீதிமன்றம் இந்தப் பிரிவினை அடித்துவிட்டதன் மூலம் இனி இந்த நிவாரணத்தை இவர்கள் பெற முடியாது. அதுமட்டுமல்ல, இவர்கள் தங்கள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்து அவை நிலுவையில் இருந்தாலும்கூட, இனி தேர்தல்களில் இவர்கள் போட்டிபோடவும் முடியாத அளவிற்குத் தடை விதித்து விட்டது. இது மிகப்பெரிய விஷயம், இல்லையா?
அடுத்தது, அரசியல்வாதிகளுக்கு ஆப்பு வைக்கும் விதத்தில், மக்கள் காவலர் மனு மீது பாட்னா உயர்நீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்து பகர்ந்துள்ள தீர்ப்பாகும்.  நீதியரசர்கள், சிறைத்தண்டனை காரணமாகவோ அல்லது நாடு கடத்தல் காரணமாகவோ அல்லது வேறெந்த விதத்திலாவதோ, அல்லது மேலும் போலீசின்கீழ் சட்டப்படியான காவலிலோ,  சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எந்தவொரு நபரும் என்று கூறும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 62(5)ஆவது பிரிவின் அதிகார வரம்பெல்லையை, தங்கள் தீர்ப்பின் மூலம் தெள்ளத்தெளிவாக்கி இருக்கிறார்கள். வாக்காளராக இல்லாத எவரும் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினராகவும் ஆக முடியாது என்று தெளிவுபட தீர்ப்புரைத்திருக்கிறார்கள்.  சிறையில் இருக்கும் நபர் வாக்களிக்க அனுமதிக்கப்பட முடியாது என்கிறபோது, எப்படி  அவரை போட்டிபோட மட்டும் அனுமதிக்க முடியும்?’’ என்று நீதிமன்றம் மிகச் சரியாகவே கேட்டிருக்கிறது.  நீதியரசர்களை வாழ்த்துவோம். நீதிமான்கள் நாட்டிற்கு மாபெரும் சேவை புரிந்திருக்கிறார்கள், இல்லையா?
நிச்சயமாக, இவைகள் நம்முடைய தேர்தல் அமைப்பு முறையை சுத்தப்படுத்திட மேற்கொள்ளப் பட்டுள்ள ஆரம்ப நடவடிக்கைகளாகும். ஒருவேளை, வரவிருக்கும் காலங்கள் நம் நாட்டிற்கும், நம் ஜனநாயகத்திற்கும் மேலும் சிறப்புற அமையலாம். அவசரப்பட்டு ஜனநாயகம் என்று எழுதிவிட்டேன். பொறுத்துக் கொள்க. நாம் இன்னமும் உண்மையான ஜனநாயகத்தைப் பெறவில்லை.  ஒரு சில குடும்பத்தினரின் ஆட்சி நடப்பதாக வேண்டுமானால் சொல்லலாம். ஆட்சி அதிகாரங்களை ருசி பார்த்த பகாசுரர்களின் வாரிசுகள் - நவீன மன்னராட்சி - ஆட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. எவ்விதமான பழிபாவத்திற்கும் அஞ்சாத தங்கள் தந்தைமார்களின் ஆட்சியைப் பார்த்த இவர்களது வாரிசுகளும் தங்கள் தந்தையைப்போன்றே அடாவடித் தனமாக ஆட்சியை நடத்திடத் தயங்குவதில்லை. இல்லாவிட்டால், மிகவும் நேர்மையான இளம் ஐஏஎஸ் அதிகாரியாக விளங்கிய துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு வேறென்ன விளக்கத்தைக் கூற முடியும்? அவர் செய்த குற்றம்தான் என்ன? நாட்டின் மாபெரும் மாநிலம் ஒன்றில் ஆட்சியிலிருந்த பகாசுரன்களுக்கு உடந்தையாக இருந்த நொய்டா மணல் கொள்ளையரை, கொள்ளையடிக்க முடியாதவகையில் அவர் தடுத்தார் என்பதுதான் அவர் செய்த மாபெரும் (?) குற்றம். இதற்காகத்தானே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  அதேபோன்று கேம்கா என்னும் நேர்மையான அதிகாரி மிகவும் துணிச்சலான முறையில், ராபர்ட் வாத்ராவின் தவறான செயல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தபோது, அவை தவறு என்று எப்படிக் கூற முடியும்?
நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், பலரைப் போலவே நானும் இத்தகைய அரசியல்வாதிகளைப்பற்றி கவலைப்பட்டதில்லை. எத்தனை காலத்திற்குத்தான் இத்தகைய கிரிமினல்கள் தொடர்ந்து ஆட்சி புரிந்துகொண்டிருப்பார்கள். அநேகமாக அனைத்துக் கட்சிகளுமே இத்தகைய பேர்வழிகளின் புகழ்பாடி, இவர்களை ஆதரித்துக்கொண்டிருக்கும் நிலையில்தான் இத்தகைய தீர்ப்புகள் வரத்தொடங்கி இருக்கின்றன. நிச்சயமாக, இந்தத் தீர்ப்புகள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும்.
 மத்திய தகவல் ஆணையமானது அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் வாங்கும் நன்கொடைகள் குறித்து வெளிப்படையாக அறிவித்திட வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருப்பதைக் கண்டு அரசியல்வாதிகள் ஏற்கனவே  ஆடிப்போய் இருக்கிறார்கள். இந்தச் சட்டத்தை எப்படியாவது திருத்த வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை ஒன்றே இவர்களின் பேரங்கள் எல்லாம் எந்த அளவிற்கு மோசமானவை என்பதை வெளிப்படுத்தும். இவர்கள் தங்களுக்கு வரும் நன்கொடைகள் தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன் இருக்க விரும்பமாட்டார்கள். இப்போது, வெளியாகி இருக்கும் தீர்ப்புகள் காரணமாக, அவர்கள் ஒறுத்து அடக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவோ அல்லது நாடாளுமன்றத்தின் மூலம் சட்டத்தைத் திருத்தவோ முயலக்கூடும். அதன்மூலம் நாடாளுமன்றமே உயர்ந்தது என்று நிறுவு முயற்சிக்கக்கூடும். தங்கள் மோசமான ஆட்சி எப்படியாவது தொடர வேண்டும் என்பதே அவர்களது அவா. இவர்களது இத்தகைய முயற்சிகளை நீதிமன்றம் நிலைகுலையச்செய்திடும் என்று நாம் நம்புவோம்.
அதே சமயத்தில், இத்தீர்ப்புகளை நாம் நன்கு கொண்டாடி வரவேற்போம். இவ்விரண்டு தீர்ப்புகளுக்கும் எதிராக அரசியல்வாதிகளும், அவர்தம் சட்டவல்லுநர்களும் மேல்முறையீடு செய்வதற்கு முயற்சித்தபோதிலும், நம்முடைய ஊழல்மிகுந்த, மோசடிகள் நிறைந்த, கிரிமினல்மயமாகிப்போன அரசியலால் நொந்து நூலாகிப்போயிருந்த நம் மக்களின் முகங்களில் இவ்விரு தீர்ப்புகளும் இன்றைய நிலையில் லட்சக்கணக்கான மக்களின் முகங்களில் மலர்ச்சியைக் கொண்டு வந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. மனச் சான்றுடன்கூடிய நீதிபதிகள் நம் நீதிமன்றத்தின் நாற்காலிகளில் அமர்ந்திருக்கும்போது, மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன?
நாமும் புன்னகைப்போம். இப்போது இதனை நாம் கொண்டாடுவோம். ஏனெனில் நம் எதிர்பார்ப்புகள் கனியக்கூடிய வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. குறைந்தபட்சம், கிரிமினல்கள் இனி ஆட்சி அதிகாரத்தில் இருக்க மாட்டார்கள். இனியும் அவர்கள்வெள்ளையும் சள்ளையுமான அரசியல் தலைவர்களாக பவனிவருவது என்பது நடைபெறாது.
இத்தகைய மன்னர்கள் ஆட்சிக்கும், ஒருசில குடும்பத்தினரின் குடும்ப ஆட்சிக்கும் இனிவருங் காலங்களில் இடம் இருக்காது என்று நம்புவோம். ஏனெனில், இனி நாடு மக்களின் மீது அளவற்ற அன்பும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட நேர்மையான தலைவர்களின் கைகளில் ஒப்படைக்கப்படும்.  ஒரு வலுவான லோக்பால் சட்டம் அத்தகைய நேர்மை யாளர்களை மட்டுமே ஆட்சியில் அமர்த்திடும். கேடுகெட்ட பகாசுரன்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டி அடித்திடும்.   இந்தியா ஓர் உண்மையான ஜனநாயக நாடாக மிளிரும்.
போபாலில், ரவியும் பிரதீப்பும் பகாசுரன் ஒழிக, பாரதம் வாழ்க’’ என்று சந்தோஷ மிகுதியில் குதித்துக்கொண்டே ரயிலை விட்ட இறங்கினார்கள். அதே சமயத்தில், சேகர் அனுப்பிய மின் அஞ்சல் புதிதாக  உருவான இளைஞர் பிரிகேட் மூலம் பல நண்பர்களைச் சென்றடைந்தது.  அடுத்தடுத்த நாட்களில் மேலும் மேலும் பல்லாயிரம் நண்பர்களைச் சென்றடைந்தது. அவர்கள் ஏற்கனவே ஐயாயிரம் பகாசுரர்களின் பெயர்களை தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மத்தியில் பதிவேற்றி இருக்கிறார்கள்.

….

No comments: