Tuesday, January 8, 2013

பணப் பட்டுவாடா திட்டம்- மக்கள் வயிற்றில் அடிக்கும் திட்டம்



மிகவும் ஆரவாரத்துடன் மத்திய அரசாங்கம் புத்தாண்டு முதல் நேரடி பணப்பட்டு வாடாத் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. இது தொடர்பாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலிருந்து முன்னதாக அறிவிப்பினைச் செய்ததை, குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற் றுக் கொண்டிருக்கையில் வந்ததாகக் கூறி, தேர்தல் ஆணையம் கடுமையாக விமர்சித்தி ருந்தது. மேலும், இத்திட்டம் தொடர்பாக இத் திட்டத்துடன் அரசாங்கம் ஒரு முழக்கத்தை யும் அறிவித்திருந்தது. அதாவது, “உங்கள் பணம், உங்கள் கையில்என்று பொருள் படும் ஆப் கா பைசா. ஆப் கே சாத்என்ற முழக்கத்தையும் அறிவித்திருந்தது. இது 2014 பொதுத் தேர்தலை மனதில் கொண்டு, மக்க ளுக்கு லஞ்சம் கொடுப்பதுபோலத் தோன்று வதாக விமர்சனங்கள் வந்தபின், அரசாங்கம் இதனை மாற்றியிருப்பதுபோல் தெரிகிறது. மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட இத்திட்டம், ஆரம்பத்தில் நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 43 மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது, பின்னர் அது 20 மாவட் டங்களாகக் குறைந்து, பின்னர் அதுவும் மத்திய அரசின் விதவைகளுக்கான ஓய்வூதி யங்கள், தலித்/பழங்குடியினர் மற்றும் சிறு பான்மையினருக்கான கல்வி உதவிப் பணம் போன்று தெரிவு செய்யப்பட்ட 26 மத்தியத் திட்டங்களுக்கு மட்டும் என்று கூறப்பட்டி ருக்கிறது. தற்சமயம் இதில் உணவு, உரம் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகம் கொண்டுவரப்பட வில்லை. இத்திட்டம் அரசின் மானியங்கள் அளிக்கப்படும் அனைத் துத் திட்டங்களுக்கும் படிப்படியாக விரிவாக் கப்படவுள்ளது. 

இத்திட்டத்தில் உள்ள பலவீனங்கள் மற் றும் எல்லைகள் குறித்தும் இது எப்படி நாட்டின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்குப் போய்ச் சேராது என்பதையும் விவாதிக்க இருக்கும் அதேசமயத்தில், இத்திட்டம் குறித்து இது வரையும் நாடாளுமன்றத்தில் சட்டம் எதுவும் நிறைவேற்றப்படாததால் இது சட்டப்படி செல்லத்தக்க தல்ல என்பதை அடிக்கோடிட் டுக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக “2010ஆம் ஆண்டு தேசிய அடையாள ஆணையமைப்பு சட்டமுன்வடிவு” (““The National Identification Authority of India Bill 2010,,) ஒன்று இந்தியாவில் வசிக்கும் அனைவருக் கும் அடையாள எண்கள் கொடுப்பது தொடர் பாகவும் அவர்கள் அதன்மூலம் அரசாங்கம் அளித்திடும் பயன்களைப் பெற்றுக் கொள்ள வும் வகை செய்வதற்காகக் கொண்டுவரப்பட் டது. ஆனால் இச்சட்டமுன்வடிவு இன்ன மும் நாடாளுமன்றத்தின் முன் நிறைவேற்றப் படாமல் நிலுவையில்தான் உள்ளது. இச்சட்ட முன்வடிவு மாநிலங்களவையில் 2010 டிசம் பர் 3 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, அங்கி ருந்து அது நிதித்துறை நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது, இந்நிலைக்குழு இதன்மீது தன்னுடைய அறிக்கையை 2011 டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்திருக்கிறது.

நாடாளுமன்ற நிலைக்குழு இத்திட்டம் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு, தன் னுடைய அறிக்கையில் இறுதியாகக் கூறியி ருப்பதாவது: இத்திட்டம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், குறிப்பாக அரசாங்கங்களுக்குள் ளேயே முரண்பாடுகளும் ஐயங்களும் எழுப் பப்படும் சூழ்நிலையில், இக்குழு எவ்வித ஐயத்திற்கிடமின்றி இச்சட்டமுன்வடிவை இப்போதுள்ள அதே வடிவத்தில் ஏற்பதற் கில்லை என்கிற தன் முடிவைத் தெரிவித்துக் கொள்கிறது. இத்திட்டத்தின் கீழ் தொகுக்கப் பட்டிருக்கும் விவரங்களை அரசாங்கம் விரும் பும் பட்சத்தில் அப்படியே தேசிய மக்கள் தொகை பதிவு அலுவலகத்திற்கு மாற்றிட லாம். இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்றும், தேவையான மாற்றங் களுடன் புதியதொரு சட்டமுன் வடிவை நாடாளுமன்றத்தின் முன் கொண்டு வர வேண்டும் என்றும் அரசாங்கத்தை நிலைக் குழு வலியுறுத்துகிறது.’’

ஆனால் அரசாங்கம் இதுவரை நிலைக் குழு அளித்திட்ட அறிக்கை மீது தன் கருத்தி னைத் தந்திடவில்லை என்பது மட்டுமல்ல, நிலைக்குழு கூறியுள்ளவாறு இச்சட்டமுன் வடிவைக் கைவிட்டு விட்டு, புதியதொரு சட்டமுன்வடிவையும் நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவரவில்லை. நாடாளுமன்றத் தில் இச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப் படா மல் நிலுவையில் இருந்த போதிலும், அரசாங் கம் தன்னுடைய அதிகாரங்களைப் பயன் படுத்தி சாதாரண மனிதனின் அதிகாரம்எனப் பொருள்படும் ஆதார் எண்களை வெளி யிடவும், இத்திட்டத்தை மேற்கொள்ளவும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருப்பதன் அடிப்படையில் இப்போது இது கொண்டு வரப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் இத்தகைய நிலைப்பாட்டு டன் நாடாளுமன்ற நிலைக்குழு முழுமையாக ஒத்துப்போகவில்லை. இச்சட்டமுன்வடிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற் றும் பணி நிலுவையில் இருக்கும் சமயத்தில், இவ்வாறு அரசாங்கம் முடிவு எடுத்திருப்பது நன்னெறி சாராத (unethical) செயல் என்றும், நாடாளுமன்றத்தின் பிரத்யேக உரிமைகளை மீறும் செயல் என்றும் நிலைக்குழு கூறியிருக் கிறது. 

இவ்வாறு அரசாங்கம் இத்திட்டத்தை அமல்படுத்த முன்வந்திருப்பது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்பதுடன், இதில் உள்ள இயல்பான பலவீனங்களும் மிகவும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ‘‘நாட் டின் மக்கள்தொகையில் தோராயமாக ஐந்து விழுக்காட்டு மக்களின் கைரேகைகள் பல் வேறு காயவடுக்களின் காரணமாகவும், வயது முதிர்ச்சியின் காரணமாகவும் தெளிவற்று இருக்கும்’’ என்று ஹைதராபாத்தை மைய மாகக் கொண்டு செயல்பட்டுவரும் 4ஜி அடையாளத் தீர்வுகள் (4G Identity Solutions) மையம் கூறுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத் தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற தொழிலாளர் களின் கைரேகைகளைக் கொண்டு அவர் களை அடையாளம் காணும் முயற்சி முழு மையாக வெற்றிபெறவில்லை என்பதே நம் அனுபவமுமாகும். 

இரண்டாவதாக, இம்முறை முழுமையாக வெற்றி பெற, நாடு முழுவதும் நம்பகமான கணி னியுடன் இணைக்கப்பட வேண்டும். இந் தியா இன்னமும் இந்நிலைக்கு வரவில்லை. 2012 ஆகஸ்டில், இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.சுப்பாராவ் பேசுகை யில், “ஆதார் அடிப்படையிலான அடையா ளம் காணும் தொழில்நுட்ப முறையானது, இன் னமும் முழுமையாக மெய்ப்பிக்கப்பட வில்லைஎன்று கூறினார். 

மூன்றாவதாக, பண மாற்றல்கள் பயனாளி களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட இருக்கின்றன. இந்தியாவில், இன் றைய நிலையில் கிராமப்புறப்பகுதிகளில் சுமார் 32 ஆயிரம் வங்கிக் கிளைகள் இருக் கின்றன. அதாவது நாட்டில் உள்ள ஆறு லட் சம் கிராமங்களில் 20 விழுக்காட்டிற்கும் குறைவான நிலையிலேயே வங்கிக் கிளை கள் உள்ளன. 1992இல் ஆட்சியாளர்கள் நவீன தாராளமய சீர்திருத்தங்களைத் தொடங் கிய பின்னர், கிராமப்புறங்களில் செயல்பட்டு வந்த கிட்டத்தட்ட 26 ஆயிரம் வங்கிக்கிளை கள் மூடப்பட்டு விட்டன. 

நான்காவதாக, இவ்வாறு வங்கிகள் இல்லா நிலையில், கிராமங்களுக்கு வங்கிச் சேவைகளை எடுத்துச் செல்ல வங்கித் தொடர்பாளர்கள்அளிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருக்கிறது. மக்களுக்கு அளிக்கப்படும் மானிய உதவிகளில் கசிவுகள் மற்றும் லஞ்ச லாவண்யங்கள் எதுவும் இல் லாமல் நேரடியாகச் செல்வதை உத்தரவாதப் படுத்துவதற்காக ஆதார் திட்டம் அறிமுகப் படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது அமல்படுத்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஊழல் மற்றும் கசிவுகள் வேறொரு ரூபத் தில் உருவாகி இருப்பதைப் பார்க்க முடி கிறது. 

ஐந்தாவதாக, ஆதார் திட்டம் என்பது ஒருவரை அடையாளம் காணும் திட்டம். ஆனால், ஒருவர் மானியங்கள் பெறத் தகுதி யுடையவரா என்பது தகுதியின் அடிப்படை யில் (eligibility) தான் அமையவேண்டுமேயொ ழிய, அடையாளத்தின் அடிப்படையில் (idendity) அல்ல, பொது விநியோக முறை உட்பட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு, திட்டக் கமிஷனின் மதிப்பீட்டின்படி தகுதி பெறுவோரின் எண்ணிக்கை ஒரே சீராய் இல் லை என்பது மட்டுமல்ல, மாநிலத்திற்கு மாநி லமும் வேறுபடுகிறது. எனவே ஒருவருக்கு அரசின் பயன்கள் கிடைக்காமல் விடப்படுகி றார் என்பதற்கு அவருக்கு அடையாளம் இல் லாததனால் அல்ல, மாறாக வறுமை குறித்த அரசின் தான்தோன்றித்தனமான வரையறை களே காரணங்களாகும். 

பண மாற்றுத் திட்டங்கள் பிரேசில், மெக்சி கோ போன்ற நாடுகளில் வெற்றி பெற்றிருப் பதாக அரசாங்கத்தால் அடிக்கடி கூறப்படு கின்றன. ஆனால், இந்நாடுகளில் ஏற்கனவே இருந்த மானியங்கள் அல்லது திட்டங்களுக் குப் பதிலாக ரொக்க மாற்றுத் திட்டம் கொண்டுவரப்படவில்லை. மாறாக ஏற்க னவே இருந்ததுடன் கூடுதலாக அத்திட்ட மும் மக்களுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தி யாவில், ஏற்கனவே இருக்கும் திட்டங்களை மாற்றியமைத்திடுவதற்காக பணப் பட்டு வாடாத் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இது தொடர்பாக 2011 பட்ஜெட்டின்போதே அரசு சூசகமாகத் தெரிவித்துவிட்டது. இத்திட்டத் தின் அடிப்படை நோக்கம், வரவிருக்கும் காலங்களில் அரசாங்கம் சமூகநலத்துறை யில் அளித்து வந்த அனைத்துவிதமான மானியங்களையும், உதவிகளையும் கை கழுவி விடும் என்பதேயாகும். 

பணப் பட்டுவாடாத் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்கத்தின் மானியங்களைக் குறைத்து விடும். பொருள்களின் விலைகள் உயரும். ஆனால் மக்கள் தாங்கள் பெறும் ரொக் கத்தின் மூலம் வாங்கும் பொருள்களின் அளவு குறைந்திடும். ஆட்சியாளர்கள் தங்க ளுடைய நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையி லேயே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், நவீன தாராளமய யுகத்தில், ஆட்சியாளர்கள் சமூகநலத் திட் டங்கள் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்க்கத் துணிந்துவிட்டனர். ஏற்கனவே சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் தனி யார் கொள்ளைலாபம் ஈட்டுவதற்கு வகை செய்திடும் விதத்தில், அவற்றைத் தனியாரி டம் கணிசமான அளவிற்குத் தாரைவார்த்து விட்டனர். இப்போது, இந்த பணப்பட்டு வாடாத் திட்டமும் மிகவும் கொடூரமான முறை யில் பெரும்பான்மையாகவுள்ள மக்களின் வயிற்றில் அடிப்பதற்கான திட்டமேயாகும். 

தமிழில்: ச.வீரமணி



No comments: