ஆண்டு பட்ஜெட் வரவிருப்பதை அடுத்து, மக்கள் மத்தியில் அதுதொடர்பான ஆர்வமும்
அதிகரித்துள்ளது. மக்கள் பொதுவா கவும், பல்வேறு பிரிவினர் குறிப்பாகவும் பட்ஜெட் சமயத்தில் வாங்கவேண்டிய
பொருள்களின் பட்டியல்களைத் தயாரிப்பது இயற்கையே.நாட்டில் பொருளாதார வளர்ச்சி
மிகவும் மோசமாகவுள்ள ஆண்டுகளில் ஒன்றாக இந்த ஆண்டு விளங்குகிறது. இந்தப் பின்ன
ணியில் வரவிருக்கும் பட்ஜெட் சமர்ப்பிக்கப் படவிருக்கிறது. முடிவடைய விருக்கும்
இந்த நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற் பத்தி (ழுனுஞ) வளர்ச்சி விகிதம்
விரைவில் அறி விக்கப்பட உள்ளது. எப்படி மதிப்பிட்டுப் பார்த் தாலும் அது 6 விழுக்காடு அளவிற்குத்தான் இருக்கும்
என்று தெரிகிறது. இதன் விளை வாக பொருளாதாரம் மிகப்பெரிய அளவிற்கு மந்த நிலைக்குத்
தள்ளப்படும். அதன் தொடர்ச்சியாக வேலையில்லாத் திண்டாட் டமும் அதிகரித்திடும், வருவாய் அளவுகளும் குறைந்திடும். எல்லாவற்றிற்கும்
மேலாக அனைத்துப் பண்டங்களின் விலைகளும் குறிப்பாக உணவுப் பொருள்களின் விலைகள்
தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால், மக்களின் உண்மை ஊதியம் (real wage) கணிசமான அளவிற்கு மதிப்பிழப்பது தொட
ரும். இத்தகைய நிலைகளின் காரணமாக, ஏதேனும்
சலுகைகள் அளிக்கப்படலாம் என்று மக்கள் பிரிவினரில் பல்வேறு பிரிவின ரும்
எதிர்பார்ப்பது இயற்கையே.சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் எதிர் பார்ப்புப்
பட்டியல்களில்,
மிகவும் செல்வாக்கு செலுத்துவது
என்பது, நவீன தாராளமயத் திற்குத் தலைமை
தாங்குகிற சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகள்தான்.
இது, தான் மேலும் உச்சபட்ச லாபம் ஈட்டும் விதத் தில் நம் நாட்டின்
பொருளாதாரத்தின் கதவு களை மேலும் அகலத் திறந்து வைக்கக் கோருகிறது. இதன்
காரணமாகத்தான் சென் செக்ஸ் ஏற்கனவே 20 ஆயிரம் புள்ளிகளைக் கிட்டத்தட்ட எட்டியிருக்கிறது. தற்போதைய ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் நிச்சயமாக சர்வதேச
நிதிமூலதனம் மற்றும் இந்தியப் பெரும் வர்த்தகர்களைத் திருப்திப்படுத்தக் கூடிய
விதத்தில் வளைந்து கொடுத்திடும் என்று நம்பப்படுவதே இதற்குக் காரணமா கும். ஏற்கனவே, நாட்டில் மிகவும் விரிவான வகையில் கடும்
எதிர்ப்பு இருந்தபோதிலும் கூட, சில்லரை
வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. வங்கி கள்
தேசியமயமாக்கப்பட்டதன் பயன்களை முற்றிலுமாக அழிக்கக்கூடிய விதத்தில் வங் கிச்
சீர்திருத்தங்கள் சட்டமாக்கப்பட்டுவிட் டன. அதன் மூலம் அந்நிய வங்கிகள் இந்தியா
வில் உள்ள தனியார் வங்கிகளைக் கபளீகரம் செய்திட வழிவகுத்துக் கொடுக்கப்பட்டுவிட்
டது. இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்கி
றது. வரி ஏய்ப்பாளர்களைக் கட்டுப்படுத்தக் கூடிய விதத்தில் கொண்டுவரப்பட்ட பொது
வரி ஏய்ப்புத் தவிர்ப்பு விதிகள் (GARR) ஈராண்டு காலத் திற்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. இது
சென்ற பட்ஜெட்டின்போதுதான் அப்போ தைய நிதியமைச்சராகவும் தற்போது குடிய ரசுத்
தலைவராகவும் இருக்கின்ற பிரணாப் முகர்ஜியால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிய
நாட்டு முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக
மொரீசியஸ் வழியாக வருகின்றவர் களுக்கு, லாபத்தின் மீதான அனைத்து வரி களிலிருந்தும் தப்பித்துக் கொள்ள, இவ்வாறு இவ்விதிகள் ஒத்தி
வைக்கப்பட்டதானது மிகப்பெரிய நிவாரணமாக வந்திருக்கிறது. மேலும், இச்சட்டவிதிகள் அமல்படுத்தப்பட
விருக்கும் 2016-17இல்கூட, மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டுபவர்கள் மட் டுமே
வரி கட்டக்கூடிய விதத்தில் இச்சட்ட விதிகள் பொருந்தக்கூடிய விதத்தில் இது
மாற்றியமைக்கப்பட்டும் விட்டது. மேலும், இந்தியரல்லாத அந்நிய நிறுவன முதலீட்டா ளர்களுக்கும், இரட்டை
வரி தவிர்ப்பு ஒப்பந்தத் தின் கீழ் வரிச் சலுகை
பெறாதவர்களுக்கும் இச்சட்ட விதி பொருந்தாது என்றும் கூறப்பட்டுவிட் டது. இவ்வாறான
அறிவிப்புகள் மூலமாக மிகப்பெரிய அளவில் வரிஏய்ப்பவர்கள் தப்பித் துக்கொள்ள வழிவகை
செய்து தரப்பட்டுவிட் டது. நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கை கள் மேலும் தீவிரமாக
அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் சமிக்ஞை காண்பித்து விட்டார். எனவே நாட்டில்
ஒளிரும் இந்தியர் களுக்கும் இருளில் வாடும் இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளி
மேலும் அதிகரிக் கும் என்பது திண்ணம். சர்வதேச நிதி மூல தனத்தை
குஷிப்படுத்தக்கூடிய விதத்தில் பல்வேறு சலுகைகள் வரவிருக்கும் பட்ஜெட் டில்
காணப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. அந்நிய நிதிமூலதனம் பெரிய அளவில்
வந் தால் அதன் காரணமாக முதலீட்டுக்கான நிதி அதிகரித்திடும். அதன் தொடர்ச்சி யாக
பொருளதார வளர்ச்சி விகிதம் மேலும் அதி கரித்திடும் என்றும், நம் மக்களின் வாழ்வாதா ரம் மேம்படும்
என்றும் ஒரு தவறான புரிந் துணர்வினை ஐ.மு.கூட்டணி அரசாங்கம் கூறிக்
கொண்டிருக்கிறது.
ஆனால் உண்மை நிலை என்ன? அந்நிய மூலதனம் அதிகமாக வந்தால் அதன்
உச்சபட்ச லாபத் தை அதிகரித்திடும். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பொருளாதார
மந்தத்தின் காரண மாக உச்ச பட்ச லாபம் என்பது இல்லாது ஒழிந்துள்ள நிலையில், நம் நாட்டில் உச்ச பட்ச லாபத்தை
எடுத்துச்செல்ல அது முயன் றிடும். மேலும், அவர்களின் நிதி முதலீடுகள் மூலம் நம் நாட்டில் வளர்ச்சி அதிகரித்திட
வேண்டுமானால்,
அவர்கள் உற்பத்தி செய்தி டும்
பொருள் களை மக்கள் வாங்க வேண்டும். நாம் பல முறை விவாதித் திருப்பதைப்போல, நம் நாட்டு மக்களின் கைகளில் வாங்கும்
சக்தி குறைந்துள்ள இன்றைய சூழ்நிலையில், வளர்ச்சி அதிகரித்திடும் என்று நம்புவது வெறும் மாயையேயாகும். இவ்வாறு
அரசின் உத்திகள் நாட்டில் ஏற்கனவே பணக்காரர் களாக உள்ளவர்கள் மேலும் லாபம் ஈட்ட
உதவிடுமேயல்லாது, பெரும்பான்மையான
நாட்டு மக்களின் மீது பொருளாதாரச் சுமை களை மேலும் அதிகரித்திடவே இட்டுச் செல்லும்.ஆட்சியாளர்கள், தாங்கள் கடைப்பிடிக் கும் மேற்படி
உத்திகளின் ஒரு பகுதியாக, கடந்த சில
ஆண்டுகளாக அளித்துவருவது போன்று பெரிய அளவிலான வரிச் சலுகை களை பணக்காரர்களுக்கு
மேலும் தொடர லாம். சென்ற ஆண்டு பட்ஜெட் ஆவணங்கள், இவ்வாறு 5.28 லட்சம் கோடி ரூபாய் அள விற்கு வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டிருப்ப
தாகக் காட்டுகின்றன. முன்னெப்போதும் இல் லாத அளவிற்கு நிதிப் பற்றாக்குறை 6.9 விழுக் காடாக (அதாவது மொத்த உள்நாட்டு
உற்பத்தி யில் 5.22 லட்சம்
கோடி ரூபாய்களாக) இருந்த போதிலும், 5.28 லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆட்சியாளர்கள்
இவ்வாறு வரிச்சலுகைகள் அளிக்காது, அத்தொகையை
அவர்களிடமி ருந்து வசூலித்திருந்தால் நிதிப்பற்றாக்குறை யையும் போக்கி, 6 ஆயிரம் ரூபாய் உபரியாக வும் பெற்றிருக்க
முடியும். மாறாக, அரசு என்ன
செய்கிறது? நிதி நிலைமையில் கட்டுப்பாட்டைக் கொண்டு
வருகிறோம் என்ற பெயரில், அதீதமாகவுள்ள
நிதிப்பற்றாக் குறையைச் சரிக்கட்ட வேண் டும் என்பதற்காக, அரசாங்கம் மக்கள் மீது இரக்கமேதுமின்றி
மிகவும் கொடூரமான முறையில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. அவற்றிற்கு
அளித்து வந்த மானியங்களையும் வெட்டிக் குறைத்துள்ளன. இது தொடரும் என்றும்
அரசாங்கம் மக்களை மிரட்டியிருக்கிறது. மக்களைச் சொல்லொண்ணாத் துயரத்திற்கு
உள்ளாக்கி, பணக்காரர்களைக் கொழுக்க வைக்க வேண்டுமா
என்று கேட்பவர்களைப் பார்த்து பிரதமர் அவர்கள் ‘‘பணம் மரத்தில் காய்க்காது’’ என்று எள்ளிநகையாடி இருக் கிறார்.
இவ்வாறு ஆட்சியாளர்களின் கொள் கைத்
திசைவழி காரணமாக மிகவும் அவதிக் குள்ளாகி இருப்பது கிராமப்புறங்களில் வாழும்
நாட்டுப்புற ஏழை மக்களேயாவர். விவ சாய நெருக்கடி தொடர்கிறது, இதன் காரண மாக விவசாயிகளின்
தற்கொலைகளும் தொடர்கின்றன. விவசாயிகளில் 40 விழுக் காட்டினர் கடும் கடன்வலையில் சிக்கியிருப் பதாக ஆய்வுகள்
காட்டுகின்றன. அரசாங்கத் தால் கடந்த இருபதாண்டுகளில் பயிர்க் காப் பீடு பத்து
விழுக்காட்டுப் பயிர்களுக்கு மேல் தரமுடியவில்லை.
வேளாண் இடுபொருட்க ளின் செலவினம்
அதிகரித்திருக்கக்கூடிய அளவிற்கு அவர்களது விளைபொருட்களுக் கான விலை
கிடைத்திடவில்லை. ஐந்து ஏக் கர் நிலத்தில் ஒரு விவசாயி உற்பத்தி செய் திடும்
பருப்பு வகைகள் மற்றும் தானியங்க ளுக்கு அவனுக்கு மாதத்திற்கு மூவாயிரம்
ரூபாய்க்கு மேல் கிடைக்கவில்லை. மாநிலங்களவையில் 2012 நவம்பர் 30 அன்று வேளாண் உற்பத்திச் செலவினம் சம் பந்தமான கேள்வி
ஒன்றுக்கு மத்திய வேளாண் அமைச்சர், வேளாண் செலவினம் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (ஊடிஅஅளைளiடிn கடிச ஹபசiஉரடவரசயட
ஊடிளவள யனே ஞசiஉநள) அளித்திட்ட தகவல்களின்
அடிப்படையில் 2010-11க்கும் 2011-12க்கும் இடைப்பட்ட காலத்தில் நெல்
உற்பத்திச் செலவினம் குவிண்டால் ஒன்றுக்கு 146 ரூபாய் அளவிற் குச் சென்றுள்ள அதே சமயத்தில், அதற்குக் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச
ஆதார விலை என்பது வெறும் 80 ரூபாய்
மட்டுமே என்று பதிலளித்திருக்கிறார். அதேபோன்று, கோதுமைக்கான உற்பத்திச் செலவினம் 2011-12க்கும் 2012-13க்கும் இடைப்பட்ட காலத்தில்
குவிண்டாலுக்கு 171 ரூபாய்
உயர்ந் துள்ள அதேசமயத்தில், அதற்குக்
கிடைக் கும் குறைந்தபட்ச ஆதாரவிலை வெறும் 65 ரூபாய் மட்டுமே என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு, விவசாயிகளுக்கு உரிய ஆதரவு விலையை
அரசாங்கம் கொடுத்துக்கொண்டி ருக்கிறது என்று அரசுத்தரப்பில் கூறப்படுவ தெல்லாம்
போலி, பாசாங்கு, வஞ்சகம் என்பது நிரூபணமாகி இருக்கிறது.ஆட்சியாளர்கள் தங்களின்
இத்தகைய கொள்கைத் திசைவழி காரணமாக மக்கள் மீது மேலும் கொடூரமான முறையில் தாக்கு
தல்களைத் தொடுத்துள்ளனர். இன்றைய தினம் அரசாங்கத்திடம் உள்ள உணவு இருப்பு 665 லட்சம் டன்கள் ஆகும். அதாவது வழக்கமாக
இந்தத் தருணத்தில் கிடைத் திடும் அளவைவிட இந்த ஆண்டு அபரிமித மான உற்பத்தியின்
காரணமாக மும்மடங்கு இருப்பினைப் பெற்றுள்ளது. ஆயினும், வெளிச் சந்தையில் அரிசி மற்றும் கோதுமை
யின் விலைகள் உயர்ந்து, மக்கள்
மீது கடும் சுமைகளை ஏற்றியுள்ள நிலையில், அதனை மட்டுப்படுத்திடக்கூடிய வகையில், ஆட்சி யாளர்கள் தங்கள் வசம் உள்ள உணவு இருப் பிலிருந்து
மிகையாகவுள்ள அரிசியையும் கோதுமையையும் மாநிலங்களுக்கு வழங்கிட மறுக்கிறார்கள். ஒவ்வொரு
மாதமும் அரசாங் கம் தன் வசம் உள்ள கிடங்குகளில் ஒரு டன் உணவு தானியங்களைச்
சேமித்து வைத்திட டன்னுக்கு 200 ரூபாய்
செலவு செய்கிறது. உணவு மானியத்தில் பெரும்பகுதி இத்த கைய செலவினத்திற்குத்தான்
செல்கிறதே யொழிய, மக்களுக்கு
நிவாரணம் அளிப்பதற் குச் செல்லவில்லை. இந்த ஆண்டும் கோது மை அமோகமாக
விளைந்திருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் உணவுப் பொருள்களை இருப்பு
வைப்பதற்கான செல வினத்தை மேலும் அதிகரித்திடும். எனவே ஆட்சியாளர்கள் உணவுக்காக
ஒதுக்கியுள்ள மானியங்கள் மக்களுக்குப் பயன்படப் போவ தில்லை. நாட்டில் இவ்வாறு
அமோகமான முறையில் அறுவடை நடைபெற்றிருந்த போதிலும், சராசரியாக ஒவ்வொரு நபருக்கும் கிடைத்திடும் உணவு தானியங்களின்
அளவு குறைந்துகொண்டே செல்கிறது. ஆட்சியாளர் கள் சீர்திருத்தக் கொள்கைகளைக் கடைப்
பிடிக்கத் தொடங்குவதற்கு முன்னர் 1990-91 இல் ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு 490 கிராம்கள் உணவுதானியங்கள் கிடைத் தன. ஆனால்
2007-09இல் இது 440 கிராம் களாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு
உணவு தானிய உற்பத்தி அதிகரித்திருந்த போதிலும் அது மக்களின் வளர்ச்சிக்கேற்ற
முறையில் அவர்களுக்குச் சென்றடைந்திட வில்லை. விளைவு, மக்கள் உட்கொள்ளும் உணவின் அளவு
குறைந்துள்ளது. இந்தியாவில் கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு 2200 கலோரி உணவுக்குக் கீழ் உண்பவர்கள்
வறுமையில் வாடுவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.
இவர்கள் 1993-94இல் 58.5 விழுக்காடு அளவிற்கு இருந் தார்கள். அது
2009-10ஆம் ஆண்டில் 75 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. அதே
போன்று, நகர்ப்புற இந்தியாவில் கலோரி வரை யறை 2100 கலோரிகளாகும். இது 1993-94இல் 57 விழுக்காடாக இருந்தது. இப்போது 2009-10இல் இது 73 விழுக்காடாக அதி கரித்திருக்கிறது.ஆட்சியாளர்கள், தங்கள் வசம் அதிகமான அளவில் உள்ள உணவு
இருப்பின் மூலமாக, நாட்டில்
உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் (வறுமைக்கோட்டுக்குக் கீழ்/வறுமைக்கோட் டுக்கு
மேல் என்று) எவ்விதப் பாகுபாடுமின்றி ஒரு கிலோ கிராம் 2 ரூபாய் விலையில் 35 கிலோ கிராம் உணவு தானியங்களை ஒவ் வொரு
மாதமும் வழங்கிட முடியும். அதன் மூலம் அனைவருக்குமான உணவுப் பாது காப்பை
உத்தரவாதப்படுத்திட முடியும். ஆட்சியாளர்கள் பணக்காரர்களுக்கு வழங்கிடும்
வரிச்சலுகைகளுக்குப் பதிலாக, அவர்கள்
அளிக்க வேண்டிய வரிகளை வசூல் செய்து அதனை பொது முதலீடுகளில் செலுத்தி, நமக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைப்
பெருக்கியது என்றால், அதன்
மூலயமாக மிகப்பெரிய அளவில் நாட்டு மக் களின் வேலை வாய்ப்பும் பெருகும், அத னைத்தொடர்ந்து, அவர்களின் குடும்பத் தேவைகளும்
அதிகரித்திடும். அது மக்கள் மத்தியில் ஒரு நிலையான வளர்ச்சிக்கும் உதவிடும். ஆனால்
ஆட்சியாளர்கள் பணக்காரர்க ளுக்கு வெண்சாமரம் வீசிடும் தங்கள் கொள் கையை மாற்றிக்
கொள்வார்களா?
சந்தேகமே. மக்களைத் திரட்டி
மகத்தான போராட்டங் களை நடத்துவதன் மூலமே அதனைச் செய் திட முடியும். வரவிருக்கும்
காலங்களில் அதற்கான மக்கள் இயக்கங்களை வலுப் படுத்திடுவோம்.
தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment