Sunday, September 30, 2012

‘‘சீர்திருத்தங்கள்’’ மீதான விவாதம்



இந்தியா, 1991இல் நவீன தாராளமய ‘‘சீர்திருத்தங்களை’’த் தழுவிக் கொண்ட சமயத்தில், பொருள்கள் (goods), சேவைகள் மற்றும் மூலதனம் நம் நாட்டிற்குள் தாராளமாகப் பாய்வதற்கு வழிகாணப்பட்டிருப்பதானது, நாட்டில் உள்ள பெரும்பான்மையான உழைப் பாளி மக்களின் வாழ்வாதாரங்கள் மீது, சர்வதேச ஊகவர்த்தகர்களின் நடவடிக் கைகளுக்கு இணங்க, கடும் பாதிப்பு களை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் வாதிட்டனர். ஊக வர்த்தகர்கள் நம் பொருளாதாரத்தின் மீது ‘‘நம்பிக்கை’’ இழந்து, அவர்கள் நம் நாட்டில் போட் டுள்ள முதலீடுகளைத் திரும்ப எடுத்துக் கொண்டுவிட்டார்களானால், பின் இவர்களின் ‘‘நம்பிக்கை’’யைப் புதுப்பித் திட தவிர்க்கவியலாத வகையில் அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக் கும். இவ்வாறு மேற்கொள்ளும் நட வடிக்கைகள் நிச்சயமாக மக்களுக்கு ஊறு விளைவித்திடும். ஏனெனில் பணக்காரர்கள், கார்ப்பரேட்டுகள், நிதி முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு எதி ராக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத் தால் நிச்சயமாக அது பொருளாதாரத் தில் எதிர்மறை விளைவையே அளித் திடும். இவ்வாறு, மிகச் சிறிய அளவி லான சர்வதேச ஊகவர்த்தகர்கள் நம் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ் வைத் தீர்மானித்திட அனுமதிப்பது என் பதன் பொருள், நாம் ஜனநாயகத்தை, சமத்துவத்தை, இறையாண்மையையே மறுதலிக்கிறோம் என்பதாகும் என்று அவர்கள் வாதிட்டனர்.

அப்போது நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கும், நவீன தாராளமயக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கியவர் களும் விமர்சகர்களின் இவ்வாதத்தை எள்ளிநகையாடினர். பத்தாம்பசலிகள் என்று பரிகசித்தார்கள். பொருளாதா ரத்தை இவ்வாறு தாராளமாகத் திறந்து விடுவது நம் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும், ‘‘திறமைமிகுந்த தாக’’ மாற்றும், சர்வதேச அளவில் போட்டிபோட்டு முன்னேறச் செய்து, ஒரு வெற்றிகரமான ஏற்றுமதியாளராக நம் நாட்டை உருவாக்கிடும், சர்வதேச மூல தனத்திற்கு ஒரு சாதகமான இடமாக நம் நாடு மாறும் என்றெல்லாம் கதை அளந் தார்கள். பணம் சமநிலை நெருக்கடி Balance of Payments crisis) 1991இல் நாட் டைத் தாக்கியபோது, அதற்குக் காரணம் நாம் தாராளமய சீர்திருத்தங்களைக் கடைப்பிடிக்காததே என்றும், மாறாகப் பிற்போக்குக் கொள்கைகளைப் பின்பற்றி யதுதான் என்றும் கூறினார்கள். ‘‘சீர் திருத்தங்கள்’’ மூலம் இத்தகைய பிற் போக்குத்தனங்களிலிருந்து நாம் மீண்டு விட்டால், இத்தகைய பணம் சமநிலை நெருக்கடிகள் என்பது வராது என்றும், அவை கடந்தகாலங்களில் நடைபெற்ற விஷயங்களாக மாறிப்போகும் என்றும் தம்பட்டம் அடித்தார்கள்.

ஆனால், செப்டம்பர் 21 அன்று மன் மோகன் சிங் நாட்டிற்கு அளித்த தொலைக்காட்சி உரையில், விமர்சகர் கள் முன்வைத்த வாதங்கள் மிகச்சரி யானவை என்பதையும், நவீன தாராள மயத்திற்கு வக்காலத்து வாங்கியவர்கள் கூறிய அனைத்தும் தவறாகிப் போன தையும் தெள்ளத்தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அவ்வாறு அவர் ஒப்புக்கொண்டுள்ள அதே சமயத்தில், நாட்டின் ‘‘ஏற்றுமதி-வெற்றி’’ குறித்தும், இந்தியா ‘‘பொருளா தார வல்லமைமிக்க நாடாக’’ உருவாகியிருப்பதாக அளந்து கொண்டிருக்கும் அதே சம யத்தில், சர்வதேச ஊக வர்த்தகர்கள் திடீ ரென நம்பிக்கையிழந்துள்ள நிலையில், அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, அரசாங்கம் மக்களை மேலும் படுகுழி யில் தள்ளக்கூடிய விதத்தில், மிகமோச மான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சுருக்கமாகச் சொல்வதென்றால், பொரு ளாதாரத்தை அந்நிய நிதிமூலதனத்திற்கு சுதந்திரமாகத் திறந்துவிட்டதுதான், நிதி நெருக்கடிகளுக்கும் காரணமாகும். இத்தகைய தாராளமயப் பொருளாதாரத் தில் ‘‘ஊகவர்த்தகர்களின் நம்பிக்கை யைப்’’ பெற வேண்டியது மிகவும் முக் கியமாகையால், மக்களின் வாழ்நிலையை அதற்கேற்றவகையில் சரி செய்ய வேண் டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.

மன்மோகன் சிங் அரசாங்கம் அறி வித்திருக்கிற பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளும், பொதுத்துறை நிறு வனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல், அதன் மூலம் மக்களின் சொத்தை, உள்நாடு மற்றும் வெளிநாட்டு மூலதனங்களிடம் ஒப்படைத்தல் ஆகிய நடவடிக்கைகள் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்தி, ரூபாய் மதிப்பு குறைந்து வருவதையும் சரி செய்திடும் என்று வாதத்திற்காக ஒப்புக்கொள்வோம். இதன் காரணமாக அயல்நாடுகளி லிருந்து மேலும் அதிக அளவில் நிதி கொட்டும் என்றும், அது ஒரு புதிய ‘‘நீர்க் குமிழி’’யை உருவாக்கி, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச் சியை புதுப்பித்திடும் என்றும் வைத்துக் கொள்வோம்.

சிறிது காலம் கழித்து, உலக அளவில் அல்லது நம் நாட்டின் வளர்ச்சிப்போக்கு கள் ஊகவர்த்தகர்களின் ‘‘நம்பிக் கையை’’ நிலைகுலையச் செய்தால், (அவ்வாறுதான் அவ்வப்போது நடைபெற் றுக் கொண்டிருக்கிறது) பின்னர் இவர் கள் கூறிடும் நீர்க்குமிழி அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் மீண் டும் ஒருமுறை நிலைகுலைந்து வீழ்ச்சி யடைந்தால், இவர்களின் ‘‘நம்பிக் கை’’யை மீண்டும் புதுப்பிப்பதற்காக மக் களின் மேல், மேலும் கொடூரமான முறை யில் தாக்குதல்களை அறிவிப்பார்கள். இவ்வாறு ஆட்சியாளர்கள் ‘‘ஊகவர்த்த கர்களின்’’ நம்பிக்கையைப் பெறுவதற் காக மக்களை மேலும் மேலும் கசக்கிப் பிழியும் நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

நவீன தாராளமயக் கொள்கைக ளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இவ் வாறு நடவடிக்கைகள் எடுக்காது வேறு ‘‘மாற்று வழி’’ இல்லை என்றும், தனியார் மய,தாராளமய, உலகமயக் கொள்கைகள் தொடர வேண்டும் என்றும் கூறுவார்கள். இதுதான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக் கும் நல்லது என்றும் உரைப்பார்கள். ஆனால், இவை அனைத்தும் உண்மை யல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு அளித்துள்ள உரிமைக ளையும் வாழ்வாதாரங்களையும் ஆட்சி யாளர்களின் உலகமய நிதிக் கொள்கை கள் பறித்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய கொள்கைகளைக் கடைப் பிடிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என்று ஆட்சியாளர்கள் நம்புவார்களா னால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அவர்கள் ஆட்சியில் நீடிக்க அவர்களுக்கு எவ்விதத் தார்மீக உரிமை யும் கிடையாது.

தமிழில்: ச.வீரமணி

Wednesday, September 5, 2012

மதவெறி தீயை துவக்கத்திலேயே அணைத்திடுவோம்!



வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு முக்கிய தீர்ப்புகளை நீதித்துறை சமீபத் தில் வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றம், மிகவும் கொடூரமான 26/11 மும்பை பயங்கரவாதிகளின் தாக்குதலைப் புரிந்திட்ட கயவர்களில் ஒருவரான முகமது அஜ்மல் அமீர் காசப்பின் வேண்டுகோளை நிராகரித்து விட்டு, அவனுக்கு உயர்நீதிமன்றம் விதித் திருந்த மரணதண்டனையை உறுதி செய் திருக்கிறது. இக்கோரத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர், 238 பேர் கொடுங் காயங்கள் அடைந்தனர். தீர்ப்பை அளித்திட்ட இரு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, நாட் டிற்கு எதிராக யுத்தம் புரிந்துள்ள காசப் குற்றவாளிதான் என்று முடிவு செய் திருக்கிறது.

மற்றொரு தீர்ப்பினை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. 2002இல் குஜராத் மாநிலத்தில் கோத்ரா சம்பவத்திற்குப் பின் நடைபெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதி ரான இனப்படுகொலை சம்பவங்களில் நரோடா பாட்டியா என்னும் இடத்தில் நடை பெற்ற படுகொலை சம்பவத்தில் 97 முஸ்லிம் இனத்தினர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 32 பேருக்கு தண்டனை வழங்கி யுள்ளது. சதி மற்றும் கொலைக் குற்றங்களுக் காகத் தண்டிக்கப்பட்டுள்ள நபர்களில் நரேந் திர மோடி அரசாங்கத்தின் முன்னாள் அமைச் சர்களில் ஒருவரும், நரோடா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பின ரும் அடங்குவர். பாஜகவின் பிரபலத் தலைவர் களில் ஒருவரான இவர் டெகல்கா தொலைக் காட்சி மறைமுகமாக எடுத்த பேட்டியில் தன் னைத்தானே மகாரானா பிரதாப் என்பவருடன் ஒப்பிட்டுக்கொண்டு, இவ்வாறு முஸ்லிம் மக் களை படுகொலை செய்ததற்குப் பெருமை கொள்வதாகக் பீற்றிக் கொண்டவர் ஆவார்.

இந்த தீர்ப்பானது படுகொலைகள் நடை பெற்று பத்தாண்டுகளுக்குப் பின்னர் வந் திருந்தபோதிலும், இவ்விரு தீர்ப்புகளையும் ஒருங்கே வைத்துப் பார்க்கும்போது, சமீப காலத்தில் நீதித்துறை மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக அரிக் கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, நீதித்துறை மீதான நம் பிக்கையை மீளவும் மக்களுக்கு அளித்திருக் கிறது.

நீதித்துறையின் தீர்ப்புகள் இவ்வாறு நம் பிக்கை அளிக்கும் நிலையில் இருக்கக்கூடிய அதே சமயத்தில், நாட்டில் நடைபெற்றுள்ள மற்ற பல்வேறு நிகழ்ச்சிப் போக்குகள் மிகவும் கவலை அளிப்பவனவாக உள்ளன. அசாம் மாநிலத்தில் போடோலாண்ட் பகுதிகளில் அரசு அளித்துள்ள அதிகாரபூர்வமான தகவல் களின் அடிப்படையில் சுமார் நூறு பேர் கொல் லப்பட்டிருக்கின்றனர். இரண்டு லட்சத்திற் கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளைத் துறந்து வெளியேறி, தற்சமயம் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள 224 நிவாரண முகாம் களில் அடைக்கப் பட்டுள்ளார்கள். சமூக ஆர் வலர்கள் இந்த எண்ணிக்கையை மிகவும் குறைவானவை என்று கருதுகிறார்கள். கடந்த சில வாரங்களில் இப்பகுதிகளில் நடைபெற்ற மோதல் சம்பவங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நடாளுமன்ற உறுப் பினர்கள் கலவரம் நடந்த பகுதிகளுக்குச் சென்று வந்ததையும் நம் ஏடுகளில் வெளி யிட்டிருக்கிறோம்.

2003இல் போடோலாண்ட் எல்லை சுயாட்சி மாவட்டங்கள் (க்ஷகூஹனு-க்ஷடினடிடயனே கூநசசவைடிசயைட ஹரவடிnடிஅடிரள னுளைவசiஉவள) உருவான பின்னர், பதற்ற நிலைமை அதிகரித்துவிட்டது. (2003இல் அசாமிலிருந்த எட்டு மாவட்டங் களில்) நான்கு மாவட்டங்கள் போடோலாண்ட் எல்லை சுயாட்சி மாவட்டங்களாக உருவாக்கப் பட்டன. இவற்றின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் போடோ இனத்தவ ராவார்கள். முன்னதாக 1993இல் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கம் போடோக்களுக்குத் தனி மாநில உரிமை அளிக்க மறுத்து வந்தது. அம்மாநிலத்தில் அவர்கள் சிறுபான்மையின ராக இருந்ததால் அவ்வாறு அரசாங்கம் மறுத்து வந்தது. அம்மாநில மக்களில் போடோக்கள் தவிர முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினர் கணிசமாக இருக்கின்றனர். போடோலாண்ட் எல்லை சுயாட்சி மாவட்டங்கள் அமைக்கப் பட்ட பிறகு, அம்மாவட்டங்களில் போடோக் கள் ஆதிக்க இனத்தினராக மாறிவிட்டதால், முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாகவும், பழங் குடியினருக்கு எதிரானவர்களாகவும் மாறத் தொடங்கி விட்டார்கள்.

இதன்காரணமாக பதற்றநிலைமை அதி கரிக்கத் தொடங்கிவிட்டது. அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படியே 1996க்கும் 1998க் கும் இடைப்பட்ட காலத்தில் போடோ - பழங் குடியினர் இடையிலான மோதல்களில் மட்டும் 1,213 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல லட்சம் பேர் இன்றும்கூட நிவாரண முகாம் களில் தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.

இந்த வன்முறைச் சம்பவங்களும் அவற் றின் காரணமாக மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகளும் மிக வும் விரிவான முறையில் கண்டிக்கப்பட் டிருக்கின்றன. ஆயினும், இந்த நிலைமையை மதவெறி சக்திகள் நாடு முழுவதும் மதவெறித் தீயை விசிறி விடப் பயன்படுத்திக் கொண் டிருக்கின்றன.

நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டிப்பதிலும், அமைதியை நிலைநாட்டக் கோரியதிலும், அபூர்வமான முறையில் கட்சி வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு நாடாளு மன்றத்தில் உறுப்பினர்களிடையே கருத் தொற்றுமை ஏற்பட்ட அதே சமயத்தில், பாஜக உறுப்பினர்கள் உடனடியாக எழுந்து, ‘வங்க தேசத்திலிருந்து வந்துள்ள அகதிகள்’ என்ற பூச்சாண்டியை எழுப்பி, இதுதான் அங்கே பதற்றத்திற்கான பிரதான காரணம் என்று கூறி னார்கள். மற்றொரு பக்கத்தில், மும்பையில் ராசா அகாதமி (சுயணய ஹஉயனநஅல) என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அசாமில் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள் என்று ஒரு பிரச்சனையை எழுப்பி, கிளர்ச்சியில் ஈடு பட்டு காவல்துறையினருடன் வன்முறை மோதல் வரை சென்றுள்ளார்கள். நாடு முழு வதும் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கின்ற வடகிழக்கு மாநிலத்தவர் மத்தியில் அச்ச உணர்வு காட்டுத் தீ போல பரவியது. கர் நாடகாவில் அம்மக்கள் அச்சுறுத்தப்பட்டதன் காரணமாக மாநிலத்தை விட்டே பயந்து அவர்களை ஓட வைத்தது. மிகவும் விசித்திர மான முறையில், இவ்வாறு பயந்து ஓடுபவர் களை சுமந்து செல்வதற்காக சிறப்பு ரயில் களே விடப்பட்டன. இதன் பின்னணியில் கர் நாடக மாநில பாஜக அரசாங்கம் கள்ளத்தன மாக உடந்தையாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்து குடியேறியுள்ள முஸ்லிம்கள்தான் உள் ளூர் மக்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர் என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரி வாரங்களும் அதன் மதவெறித் துணை அமைப்புகளும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகின்றன.

சட்டவிரோதமாகக் குடியேறுவது தடுக்கப் பட வேண்டியது அவசியமே. இதற்காக இரு நாடுகளின் எல்லையில் வேலியிடப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெகு காலமாகவே கோரி வருகிறது. ஆயினும் 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கீட்டை ஆராய்ந்தோமானால், வன் முறைச் சம்பவங்கள் நடைபெறும் கோஹ்ரஜ் கர் பகுதியில் முஸ்லிம் மக்கள் தொகை 2001இல் 14.49 விழுக்காடாக இருந்தது, 2011இல் 5.19 விழுக்காடாகக் குறைந்திருக் கிறது என்பதைக் காண முடியும். எனவே ஆர்எஸ்எஸ்/பாஜகவினர் கட்டவிழ்த்துவிடும் மதவெறிப் பிரச்சாரம் கட்டுக்கதையே தவிர வேறல்ல.

மற்றொரு கோணத்திலும் இப் பிரச்ச னையை ஆராயும்போது, அசாம் மாநிலத்தில் அசாம் சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்வது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஹஐருனுகு-ஹடட ஐனேயை ருnவைநன னுநஅடிஉசயவiஉ கசடிவே) என்னும் கட்சி யாகும். முஸ்லிம்களின் உரிமைகளுக்காக உள்ள முஸ்லிம்கள் கட்சி என்று வெளிப்படை யாக இது தன்னைக் கூறிக் கொள்கிறது. 2006 தேர்தலுக்குப்பின் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை. சட்டமன்றத்தில் போடோ சட்ட மன்ற உறுப்பினர்கள் 11 பேர் இருக்கிறார்கள், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்ன ணிக்கு 10 பேர் இருக்கிறார்கள். எனவே காங் கிரஸ், போடோ இனத்தவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ளது. இதுவும் மாநிலத் தில் வகுப்புத் துவேஷத்தை அதிகரிக்க இட் டுச் சென்றுள்ளது. மாநில அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக இல்லை என்ற உணர்வை முஸ்லிம்கள் மத்தியில் உரு வாக்கியுள்ளது. மேலும், மாநில அரசாங்க மானது வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வந்துள்ள இந்துக்களுக்கு அகதிகள் அந் தஸ்து அளிக்கத் தயாராக உள்ள அதே சமயத் தில், அவ்வாறு வந்துள்ள முஸ்லிம்களுக்கு அளிக்கத் தயாராக இல்லை. காங்கிரசின் இத்தகைய வகுப்புவாத அணுகுமுறைதான் அதற்கு 128 இடங்கள் கொண்ட சட்டமன்றத் தில் 78 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றிட வழிவகுத்துத்தந்துள்ளது. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 இடங் களிலிருந்து 18 இடங்களைப் பெற்று இரண் டாவது பெரிய கட்சியாக வந்திருக்கிறது.

அசாம் நிலைமை மிகவும் ஆழமான முறை யில் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசாங்கத்தால் தீர்வுகாணப்பட வேண்டிய அதே சமயத்தில், தற்போது நம்மை மிகவும் சங்கடத்திற்குள் ளாக்கி இருக்கும் விஷயம் என்னவெனில், அசாம் நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு நாடு முழுதும் மதவெறித் தீ விசிறி விடப்படுவதுதான்.

நிலக்கரிச் சுரங்கங்கள் ஊழல் பிரச்சனை யில் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி, நாடாளுமன்றத்தை நடத்த விடாது பாஜக நாடாளுமன்றக்குழு சீர் குலைத்துவரும் உத்தியைக் கடைப்பிடித்து வருகிறது. இது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.

ஆயினும் பாஜகவின் உத்திகளை, நாட் டின் பல பகுதிகளிலும் நடைபெறும் மதக் கல வரங்களுடன் இணைத்துப் பார்க்கையில், நாட்டில் விரைவில் பொதுத் தேர்தலை நடத் திட அது திட்டமிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. மதவெறித் தீயை விசிறிவிட்டு அதன்மூலம் தேர்தல் ஆதாயம் அடைந்துவிட லாம் என்று அது பார்க்கிறது. இவ்வழியில் சில மாநிலங்களில் புதிய மாநிலக் கட்சிகள் கூட அதனுடன் சேர்ந்துகொள்ளக்கூடும்.

இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜன நாயக மாண்புக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய விதத்தில் நாட்டில் மதவெறித் தீ விசிறி விடப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை ஆரம்பத்திலேயே அணைக்க வேண்டியது அவசியமாகும்.

மதவெறித்தீயை விசிறிவிட்டு அதன் மூலம் ஆதாயம் அடையலாம் என்று எண் ணக்கூடிய மதவெறியர்கள் வெற்றி பெற அனு மதித்திடக் கூடாது. இதனைத் தீர்மானகர மான முறையில் மக்கள் நிராகரித்திட வேண் டும். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தடுக் கப்பட வேண்டும். மக்களிடையே நிலவும் வள மான சமூகப் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்க முயலும் சக்திகள் தோற்கடிக்கப் பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Tuesday, September 4, 2012

2013 பிப்ரவரி 20 -21 இரு நாட்கள் வேலை நிறுத்தம்-தொழிலாளர் - ஊழியர்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல்





புதுதில்லி, செப். 4-
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 2013 பிப்ரவரி 20 - 21 ஆகியஇரு நாட்கள் 48 மணிநேரம் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று புதுதில்லியில் நடைபெற்ற தொழிலாளர் - ஊழியர்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.
அகில இந்தியஅளவில் இயங்கிடும் மத்தியத் தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், ஆசிரியர்கள் கூட்டமைப்பு, இன்சூரன்ஸ ஊழியர் சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கங்கள்மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற மாபெரும் தேசிய சிறப்பு மாநாடு புதுதில்லியில் உள்ள தல்கடோரா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரசின் ஐஎன்டியுசி, எதிர்க்கட்சியான பாஜகவின் பிஎம்எஸ உட்பட சிஐடியு, ஏஐடியுசி, யுடியுசி, ஏஐசிசிடியு முதலிய மத்தியத் தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியரகளின் மகா சம்மேளனம், அகில இந்திய மாநில  அரசு ஊழியர சங்கத்தின் பதாகையில் அனைத்து மாநில அரசு ஊழியரகள், பல்வேறு ஆசிரியர்களின் சங்கங்கள், இன்சூரன்ஸ ஊழியர் சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கங்கள் ஆகியவற்றின் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் சிறப்பு மாநாட்டில் பங்கேற்றனர்.
தேசிய சிறப்பு மாநாட்டை சிஐடியு தலைவர் ஏ.கே. பத்மநாபன் உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்களின் தலைவர்களைக் கொண்ட தலைமைக்குழு நடத்தியது. மாநாட்டில் ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் சஞ்சீவரெட்டி, ஏஐடியுசி பொதுச் செயலாளர் குருதா ஸ்தா ஸ்குப்தா,  சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினார்கள்.
மாநாட்டில் நிரந்தரத் தொழிலுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களைப் பணி நியமனம் செய்வது ஒழிக்கப்பட வேண்டும், தற்போது ஒப்பந்த ஊழியர்களாக உள்ள அனைவரும் நிரந்தரம் செய்யப்பட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் பத்தாயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டு, அது விலைவாசிப் புள்ளி அட்டவணையோடு இணைக்கப்பட வேண்டும். போனஸ, வைப்புநிதி, பணிக்கொடை ஆகியவற்றிற்குள்ள உச்சவரம்புகள் நீக்கப்பட வேண்டும், அனைவரும் ஓய்வூதியம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், 45 நாட்களுக்குள் தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும், சர்வதேச தொழிலாளர் ஸதாபனத்தின் 87 மற்றும் 98 ஆகிய கன்வென்ஷன்கள் சரி என்று ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை சிறப்பு மாநாடு முன்வைத்தது. 
இவற்றினை எய்திட 2012 செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் துறைவாரி அலுவலகங்கள், மாவட்ட, மாநில அளவில்  கூட்டு இயக்கங்கள் நடத்துவது என்றும், டிசம்பர் 18, 19 தேதிகளில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சத்தியாக்கிரகம், சிறை நிரப்பும் போர் முதலான போராட்டங்களை மேற்கொள்வது என்றும்,
டிசம்பர் 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்துவது என்றும், பின்னர் அனைத்துக்கும் முத்தாய்ப்பாக 2013 பிப்ரவரி 20, 11 தேதிகளில் 48 மணிநேரம் தொடர் வேலைநிறுத்தத் மேற்கொள்வது என்றும் சிறப்பு மாநாடு தீர்மானித்தது.
இச்சிறப்பு மாநாட்டிற்குத் தமிழகத்திலிருந்து சிஐடியு சார்பில் அதன் மாநில நிர்வாகிகள் சிங்காரவேலு, அ. சவுந்தரராசன், கருமலையான், சந்திரன், டிஆர்இயு இளங்கோவன், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் உட்பட சிஐடியு, அரசு ஊழியர் சங்க மாநில / மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள்  என நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தார்கள்.
(ச.வீரமணி)


Sunday, September 2, 2012

நிலக்கரி சுரங்க ஊழல் தனியார்மயத்திற்கு தரப்பட்ட விலை!


                                                                 -பிரகாஷ் காரத்
நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய கணக்கு மற்றும் தணிக் கைத்துறைத் தலைவர் (சிஏஜி) அறிக்கை, எப்படியெல்லாம் நாட்டின் நிலக்கரி வளம் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு உதவி டும் வகையில் ஒப்படைக்கப்பட்டிருக் கின்றன என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. சிஏஜியின் அறிக்கையின் படி, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக் கப்பட்ட ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான’ நிலக்கரிப் படுகைகள் அந்நிறுவனங் களுக்கு சுமார் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆதா யத்தை அளித்திருக்கின்றன.

நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு கள் என்பவை பெரும் முதலாளிகளும் கார்ப்பரேட்டுகளும் நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க வழி செய்து தருகின்ற ஐ.மு.கூட்டணி அர சாங்கத்தின் கொள்கையின் ஒரு பகுதி யேயாகும். இயற்கை எரிவாயு, நிலம் மற்றும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஆகியவற்றிலும் அதுதான் நடந்தது.

சிஏஜியின் அறிக்கையானது, நிலக் கரி போன்ற நாட்டின் இயற்கை வளங் களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது தொடர்பாக மத்தியில் 1991இலிருந்தே ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங் கங்களின் ஒட்டுமொத்த தலையீடு குறித்தும் ஆராயவில்லை என்பது உண் மைதான். அது 2006-07 இலிருந்து 2010-11ஆம் ஆண்டுக்கு உட்பட்ட காலத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்தும், 2004ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் நிலக்கரித் துறை அமைச்சகத்தால் நிலக்கரிப் படுகை கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்தும் தான் தணிக்கை மேற்கொண்டிருக் கிறது.

நிலக்கரியைப் பொறுத்தவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகிய இரு அரசாங்கங்களுமே ஓர் இடை யூறை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாட்டில் இருந்த நிலக்கரிச் சுரங்கங்கள் அனைத்தும் 1972-73ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்டுவிட்டன. 1973இல் நிலக்கரிச் சுரங்கங்கள் (தேசியமயம்) சட்டம் நிறைவேற்றப் பட்டது. காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான அரசாங்கங்கள் எவ் வளவோ முயன்றும் நிலக்கரிச் சுரங்கங் களுக்குள் தனியார் நுழைவதற்கு ஏற்றவகையில் சட்டத்தைத் திருத்தும் முயற்சியில் அவற்றால் வெற்றி பெற முடியவில்லை. 2000இல் தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசாங்கத்தால் நிலக்கரிச் சுரங்கங்களில் தனியார் துறையை அனுமதிப்பதற்கு வகை செய் யக்கூடிய விதத்தில் நிலக்கரி தேசிய மயத் திருத்தச் சட்டமுன்வடிவு அறி முகப்படுத்தப்பட்டது. ஆயினும் அச் சட்டமுன்வடிவு இதுநாள்வரையில் நிறைவேற்றப்படவில்லை. நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் சங்கங்களும் நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற் சங்கங்களும் நிலக்கரிச் சுரங்கங் களைத் தனியாருக்குத் தாரை வார்ப் பதை உறுதியுடன் எதிர்த்து வந்தன. நிலக்கரிச் சுரங்கங்களில் தனியார்மயத் திற்கு எதிராக தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன.

இந்தச் சங்கடத்திலிருந்து மீள்வதற் காக “குறிப்பிட்டநோக்கத்திற்கான சுரங்கங்கள்” (“captive coal blocks”) ஒதுக்கீடு மார்க்கம் என்ற ஒன்று புதிதாக உரு வாக்கப்பட்டது. 1993இலும் 1996இலும் பிரதான சட்டத்திற்கு இதன் மூலம் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, மின் சார உற்பத்தி மற்றும் சிமெண்ட் உற்பத்தி யில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் “குறிப் பிட்ட நோக்கத்திற்கான” நிலக்கரிச் சுரங்கங்களைப் பெற்றிட அனுமதிக்கப் பட்டன. 1976இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்துடன் இந்தப் புதிய ஷரத்தும் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்பட் டது. இதன்படி இரும்பு மற்றும் உருக்கு உற்பத்தியாளர்கள் “குறிப்பிட்ட நோக் கத்திற்கான” நிலக்கரிச் சுரங்கங்க ளைத் தங்கள் உபயோகத்திற்காக அனு மதித்துக் கொள்ளலாம். “குறிப்பிட்டநோக்கத்திற்கான” சுரங்கங் களின்’ ஒதுக்கீடுகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள், ‘‘ஒதுக்கீடுகள் இறுதிப் பய னாளருக்கு (end user) மட்டுமே - அதாவது, உருக்கு அல்லது மின் உற்பத்தி யாளர்களுக்கு மட்டுமே - அளிக்கப்படும்’’ என்றுதான் ஆரம்பத்தில் கூறியது. ஆனால் இதுவும் 2006இல் நீர்த்துப் போகும்படி செய் யப்பட்டது. இப்போது என்ன நிலைமை என் றால், ஒரு சுரங்க நிறுவனம் தனக்கு நிலக்கரி விநியோகம் செய்ய வேண்டும் என்று இறுதிப் பயனாளருடன் ஒப்பந்தம் செய்துகொண் டிருந்தால் அவை நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்து கொள்ள முடியும்.

இவ்வாறுதான், அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கண்காணிக்கும் குழு (screening committee) நிலக்கரிப் படுகை களை பலருக்கு ஒதுக்கி இருக்கிறது. இப் போது அவர்களில் பலர் அந்தப் படுகைக ளிலிருந்து நிலக்கரி எடுக்கவில்லை. மாறாக வேறொருவருக்கு அதனை விற்றிருக்கிறார் கள். சில ஒதுக்கீடுகள் தொடர்பாக ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) புலனாய்வு மேற்கொண்டிருக்கிறது. அவர்களின் மீது மோசடி மற்றும் பல்வேறு கிரிமினல் குற்றங் களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகைகளை’ ஒப்படைக்கும் வேலைகள் என்பவை 2000க்குப் பின்னர் தான் சூடுபிடித்தது. இதற்குப் பிரதானமாக முன்வைக்கப்பட்ட வாதம் என்ன தெரியுமா? நாட்டில் அதிகரித்து வரும் மின் உற்பத்தி மற் றும் பல்வேறு காரணங்களுக்காக அதிகரித்து வரும் நிலக்கரித் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் கோல் இந்தியா லிமிடெட் (Coal Indian Limited) நிறுவனம் மற்றும் அதன் துணை உறுப்புக்கள் இருக்கின்றனவாம். போதிய அளவிற்கு நிலக்கரி உற்பத்தி இலக் குகள் நிறைவேற்றப்படாததால் உண்டான முட்டுக்கட்டையானது உருக்கு, சிமென்ட் மற் றும் அவற்றுடன் இணைந்த பல்வேறு தொழில்பிரிவுகளின் வளர்ச்சியைப் பாதித்துக் கொண்டிருந்தது. பொதுத்துறையின் கீழ் இயங்கிவந்த நிலக்கரித் துறை நிறுவனங் களின் செயல்பாடுகள் படிப்படியாக வலு விழக்கப்பட்டு, கீழ்நிலைக்கு இறக்கப்பட்டு இவ்வாறு சாக்குப் போக்காகச் சொல்லப் பட்டது. கோல் இந்தியா லிமிடெட் நிறுவ னத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, நிலக்கரித் துறையில் நிலவி வந்த ஊழல் மற்றும் ஆடம்பர செயல்பாடுகளையும், குறை பாடுகளையும் சரி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான ஐ.மு.கூட்டணி மற்றும் தே.ஜ.கூட்டணி ஆகிய இரு அரசாங்கங்களுமே நிலக்கரித் துறையில் தனியார் நுழைவதற்கு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சூழ்நிலையை உருவாக்கிச் செயல் பட்டன.

மத்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் (சிஏஜி) அறிக்கை, தனி யார்மயத்திற்குப் பாதை அமைத்துத்தரும் அரசாங்கத்தின் ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரி’ என்னும் குதர்க்கமான வாதத்தை நன்கு தோலுரித்துக்காட்டியிருக்கிறது. அந்த அறிக்கையின்படி, (2010-11 முடியவுள்ள) பதினோராவது திட்டக் காலத்தில், 86 நிலக்கரிப் படுகைகள் 73 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்திட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 28 படுகைகளில் மட்டுமே (இவற் றில் 15 படுகைகள் மட்டுமே தனியாருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது) 2010-11ஆம் ஆண் டில் 34.64 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகைகளி லிருந்து’ நிலக்கரி உற்பத்தியில் 52.55 விழுக் காடு குறைவு ஏற்பட்டது. 68 படுகைகளில் உற்பத்தி முழுமையாகத் தொடங்கப்படவே இல்லை.

அரசின் இந்தப் புதிய ‘குறிப்பிட்ட நோக் கத்திற்கான நிலக்கரிச்சுரங்கங்கள்’ என்னும் கொள்கையை நிலக்கரி அமைச்சகம் கோல் இந்தியா லிமிடெட்டை பலவீனப் படுத்துவதற்கும், பொதுத்துறை நிலக்கரி சுரங்கங்கள் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கும் நன்கு பயன்படுத்திக்கொண்டது. கோல் இந் தியா லிமிடெட் நிறுவனம் தனியாருக்கு ஒதுக் குவதற்குக் கடும் ஆட்சேபணைகள் தெரி வித்து, தனக்கு ஒதுக்குமாறு எவ்வளவோ வற் புறுத்தியும் அமைச்சகம் தன் கீழ் இருந்த நிலக்கரிப் படுகைகளை அதற்கு ஒதுக்க மறுத்துவிட்டது. இவ்வாறு கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் 116 படுகைகளை 49,790 மில்லியன் டன்கள் இருப்புடன் தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரியிருந்ததற்கு ஒப்புதலே அளித்திடவில்லை. சிஏஜியின் அறிக்கை இவ்வாறு அமைச்சகம் நடந்து கொண்டதானது கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தித் திட்டத்தைக் கடு மையாகப் பாதித்துவிட்டது என்று குறிப் பிட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரதமரின் அறிக்கையானது, எவ்விதத்திலும் நியாயம் என்று கூறமுடியாத ஒரு கொள்கை யைப் பாதுகாத்திட மேற்கொள்ளப்பட்ட கேவலமான முயற்சியாகும். பிரதமரின் மேற் பார்வையுடன் நிலக்கரி அமைச்சகத்திற் கென்று இரு இணை அமைச்சர்களின் கீழ் நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய் வதற்கான ஒழுங்கீனமான முறை உந்தித் தள் ளப்பட்டது. ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகைகள்’ தாங்கள் உற்பத்தி செய்த நிலக்கரியை கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு விதி இருந்தது. 2010இன் பிற் பகுதியில் அதனை பிரதமர் அலுவலகம் மாற்றிவிட்டது. உற்பத்தி செய்யப்பட்ட உபரி நிலக்கரியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய நிறுவனங்களைப் பிரதமர் அலு வலகம் தாங்கிப்பிடித்திருக்கிறது. (மற்றொரு சிஏஜியின் அறிக்கை சசன் பவர் பிராஜக்ட் நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட படுகை களில் உற்பத்தியாகி மிகையாக இருந்த நிலக் கரியை உபயோகப்படுத்திக்கொள்ள ரிலை யன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தை அனு மதித்திருப்பதற்காக அரசாங்கத்தைக் குற் றஞ்சாட்டியிருக்கிறது.) ஐ.மு.கூட்டணி அரசாங்கமும், காங்கிரஸ் கட்சித் தலைமையும் உயர்மட்ட அளவில் நடைபெற் றுள்ள ஊழல் புகார்களிலிருந்து தங்கள் பொறுப்புக்களைத் தட்டிக் கழித்து தப்பித் துக்கொள்ள முடியாது.

பிரதமர் ராஜினாமா செய்திட வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தை நடக்கவிடா மல் சீர்குலைத்து வரும் பாஜகவின் கபட நாடகம் மிகவும் அதிசயமான ஒன்று. ‘குறிப் பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகை’ என்னும் மார்க்கத்தைத் தோற்றுவித்ததே பாஜக தான். நாடாளுமன்றத்தில் நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியார்மயமாக்குவதற்கான சட்டமுன்வடிவைக் கொண்டு வந்ததும் அதுதான். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம்தான் நிலக்கரி விலை மீதிருந்த அரசின் கட்டுப்பாட்டை நீக்கியது. அதனைத் தொடர்ந்து கோல் இந்தியா லிமிடெட் நிறு வனத்தைப் பலவீனப்படுத்தப் பல்வேறு நட வடிக்கைகளையும் அது எடுத்தது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசாங்கங்கள் மிகவும் மோசடியான நிறுவனங்களுக்கு நிலக்கரிப் படுகைகளை ஒப்படைப்பதில் இதே பாதையைத்தான் பின்பற்றிக் கொண்டிருக் கின்றன. இவ்வாறு நாட்டின் இயற்கை வளங் களைக் கொள்ளையடித்திட பெரும் வர்த்தக நிறுவனங்களை அனுமதிப்பதில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் போட்டிபோட்டுக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன.

தனியார்மயத்திற்கு ஆதரவாகக் கொண்டு வரப்பட்ட ‘‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரி படுகை’’ என்கிற மார்க்கமானது, அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட விதி முறைகளை அமைச்சகமே மீறி நடந்து கொள்ளுதல், ‘‘குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலக்கரி படுகைகளை’’ ஒருவர் பெற்றபின் விரைந்து லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக, சில நிறுவனங் களுக்குக் கொள்ளை லாபத்திற்கு மாற்றுதல் ஆகியவற்றிற்கு இட்டுச் சென்றன என்பது தெளிவாகி இருக்கிறது.

சிஏஜி அறிக்கை மீதான கூக்குரல் நிலக் கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்வதில் போட்டியால் நிர்ணயிக்கப்படுகிற ஒரு நேர்மையான முறையின் தேவைக்கு அனை வரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தனி யாருக்கு நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்யும்போது பாரபட்சமாக நடந்துகொள் வதையும், ஊழலுக்கு இரையாவதையும் ஒழித்திட வேண்டுமானால் இப்போது இருக் கும் முறையைவிட ஏலம் விடும் முறை சிறந்த முறையாகும். (ஏலம் விடும் முறையையும் கூட தனியார் தங்கள் வசப்படுத்திக்கொள்ள முடியும். இதுகுறித்து இக்கட்டுரையின் பிற்பகுதியில் ஆராய்வோம்.) ஆயினும், மிகவும் பிரதானமான பிரச்சனை என்னவெனில், நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதா, கூடாதா என்பதாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத் தவரை, நிலக்கரித் துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை அது உறுதியுடன் எதிர்க் கிறது. அதனால்தான், நிலக்கரித்துறைக்குள் தனியார் நிறுவனங்களைப் புக வழிவகுத்துத் தந்துள்ள ‘‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக் கரிப் படுகைகள் மார்க்கத்தைப்’’ பயன்படுத் துவதையும் அது எதிர்த்துக் கொண்டிருக் கிறது. நிலக்கரி என்பது பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் ஓர் எரிபொருள், புதுப் பிக்க முடியாத ஓர் இயற்கை வளமாகும். கோடிக்கணக்கான உள்நாட்டு நுகர்வோரும், ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் மின்சாரத்திற்கும் எரிசக்திக்கும் தங்களின் பிரதான மூலக் கூறாக நிலக்கரியையே சார்ந்திருக்கின்றன. எனவே, மிகவும் எச்சரிக்கையுடன் திட்ட மிட்டு நாட்டின் வளர்ச்சியையும், சமத்துவத் தையும் மேம்படுத்தக்கூடிய அளவில் நிலக் கரி பயன்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. நிலக்கரிச் சுரங்கங்களை அரசாங்கம் தன் சொந்த இருப்பிலேயே வைத்துக் கொள்ள வேண்டுமேயொழிய, தனியார் நிறுவனங்ள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகவோ அல்லது தாங்களே அதிக வருவாயைப் பெறக்கூடிய விதத்திலோ இவற்றை மாற்றிடக் கருதக்கூடாது.

அதனால்தான், நிலக்கரி எடுக்கும் பணி பொதுத்துறையால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்கிறோம். தனியார்துறையில் அமைந்துள்ள மின்சாரம் மற்றும் உருக்குத் தொழிற்சாலைகளுக்கு நிலக்கரித் தேவை எனில், அதற்கான ஒதுக்கீடு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் மூலமாகவே செய்யப்பட வேண்டும். கோல் இந்தியா லிமிடெட்டும் அதன் துணை அமைப் புகளும் நிலக்கரித் தோண்டி எடுக்கும் பணி களைச் செய்து அவைதான் படுகைகளை அவற்றிற்கு வழங்கிட வேண்டும். மாநிலங் களில், அந்தந்த மாநில அரசுகளால் நடத்தப் படும் சுரங்க நிறுவனங்கள் மூலமாக இப் பணியினைச் செய்து கொள்ள முடியும். தனி யார் துறை, உருக்கு உற்பத்தி போன்றவற்றிற் கான மின் உற்பத்தித் தேவைகளை இவ்வாறு நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

உலகில் நிலக்கரி வளம் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை வகிக்கிறது. மின் உற்பத்திக் கொள்ளளவில் 55 விழுக்காடு அனல் மின் திட்டங்கள் மூலம் தான் மேற்கொள்ளப்படுகின்றன. பொருளா தாரத்தில் நிலக்கரியின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்வேறு காரணங்களால், நிலக்கரி உற்பத்தியையும், மின் உற்பத்தியை யும் அதிகரிப்பதற்கான இலக்குகள் எட்டப் படமுடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், நிலக்கரித் தொழிலை தனியார்மயமாக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, பொதுத் துறை நிலக்கரி நிறுவனங்களை வலுப்படுத் திட அரசாங்கம் முன்வர வேண்டும், அவற் றின் தொழில்நுட்பங்களை மேம்படுத்திட வேண்டும், போதுமான அளவிற்கு நிலக்கரிச் சுரங்கங்கள்  அமைத்திட நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நிலக்கரியைப் பெறுவதற்கு ஏலம் விடும் முறை மிகவும் ஆழமான முறையில் சிரமங் களை உருவாக்கக்கூடும். ஏலம் விடும் முறை, தனியார் பெருமுதலாளிகளுக்குச் சாத கமாக அமைந்திடும். அது தனியார் ஏகபோகத் திற்கும், அவர்களுக்குள் ஓர் ரகசிய உடன் பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இட்டுச் செல்லும். அவர்களுடன் பொதுத்துறை நிறு வனங்கள் - அது மத்திய பொதுத்துறை நிறு வனமாக இருந்தாலும் சரி, அல்லது மாநிலப் பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் சரி, - போட்டிபோடவே முடியாது. மேலும், இது வரை நிலக்கரிப் படுகை ஒதுக்கீட்டில் நமக் குக் கிடைத்த அனுபவம் என்ன? ஒரு குறிப் பிட்ட நோக்கத்திற்காக அவர்கள் நிலக்கரிப் படுகைகளைப் பெற்றாலும், அந்த நோக் கத்தை அவர்கள் நிறைவேற்றினார்களா என் றால், இல்லை என்பதுதான். அதனை உத்தர வாதப்படுத்திடவும் முடியாது. ஏலம் விடு வதன் மூலம் ஏற்படும் மற்றொரு அம்சம், மின் உற்பத்திச் செலவினத்தை இது அதிகப் படுத்திடும். விளைவு, மின்துறையில் மின்கட் டணத்தை உயர்த்த இது நிர்ப்பந்தித்திடும்.

நிலக்கரிச் சுரங்கங்களைக் கொண்டுள்ள மாநிலங்கள் ஒரு வலுவான வாதத்தை முன் வைத்துள்ளன. தங்கள் மாநிலங்களில் உள்ள நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்வ தில், தங்கள் அனுமதியைப் பெற்று ஒதுக்கீடு செய்தால் மட்டுமே, தாங்கள் தங்கள் மாநி லத்தில் உள்ள தொழில் வளர்ச்சி மற்றும் எரி சக்தித் தேவைகளைத் தங்களால் நிறை வேற்றிக்கொள்ள முடியும் என்று அவை கூறு கின்றன.

‘‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகைகள்” தொடர்பாக கடந்த பதினைந்து ஆண்டு காலத்திற்கும் மேலாக மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் எடுத்த நிலை கீழ்க்கண்ட மூலக்கூறுகளை அடிப்படை யாகக் கொண்டிருந்தது.

முதலாவதாக, ஒதுக்கீட்டில் மாநில அரசாங்கமும் முற்றிலும் ஈடுபட வேண்டும். இரண்டாவதாக, மாநில அரசின் கருத்தைக் கேட்காமல், எந்தவொரு தனியார் நிறுவனத் திற்கும் நிலக்கரிப் படுகைகள் நேரடியாக ஒதுக்கீடு செய்யக்கூடாது. மூன்றாவதாக, மாநில அரசின் கவனத்திற்கு வராமல் எங் கெல்லாம் நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றதோ அங்கெல்லாம், சம்பந் தப்பட்ட உருக்கு அல்லது மின் நிறுவனத் துடன் மாநில நிலக்கரி கார்ப்பரேஷனை ஒரு கூட்டு ஸ்தாபனமாக (joint venture) ஏற்படுத் திக் கொண்டு நிலக்கரி எடுக்கப்பட வேண் டும், பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

நேரடியான ஏலம் விடும் முறை குறித்து இடது முன்னணி அரசாங்கத்திற்கு இருந்த ஐயங்கள் தொடர்பாக வலதுசாரி கார்ப்பரேட் ஊடகங்களில் சில, தங்கள் இஷ்டத்திற்கு திரித்து செய்திகளை வெளியிட்டன. ஊழ லுக்கு எதிராக இயக்கம் நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால் வகையறாக் களும் அவ்வாறே உண்மையைத் திரித்துக் கூறினர். தெரிந்துதான் செய்கிறார்களா அல் லது தெரியாமல்தான் செய்கிறார்களா என்று தெரியவில்லை, இவர்கள் நோக்கம் எல்லாம் நாட்டில் உள்ள நிலக்கரி சொத்துக்கள் ஏலம் விடும் முறை மூலம் முழுமையாகத் தனியாரி டம் சென்றடைய வேண்டும் என்பதேயாகும்.

மன்மோகன்சிங் அரசை முழுமையாக சூழ்ந்துகொண்டுள்ள நிலக்கரிப் படுகை ஊழல், ஆட்சியாளர்களின் கொள்கைகள் மூலம் ‘‘நாட்டின் வளங்களைக் கொள்ளை யடிக்கும்’’ கயவர்களை அடையாளம் காட்டு வதற்கு மட்டுமல்ல, இயற்கை மற்றும் கனிம வளங்களைத் தனியார்மயமாக்க வேண்டும் என்கிற அரசின் கொள்கையை அடியோடு மாற்றி அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைப்பதற்கும் ஒரு வாய்ப்பாகும்.

நிலக்கரிப் படுகைக் கொள்கையில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதற்கு ஓர் உயர்மட்ட அளவிலான புலனாய்வு அவசியம். இதற்குப் பொறுப்பான வர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண் டும். முறைகேடாக வழங்கப்பட்டுள்ள அனைத்து ஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட வேண்டும். கொள்ளை லாபம் ஈட்டப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளிலும், அரசுக்கு ஏற் பட்டுள்ள இழப்புகளை மீட்டிட உரிய நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய அதே சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நாட்டின் வளங்கள் கொள்ளைபோவதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணுகிற நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நிலக்கரி ஒதுக்கீடுகளும் நிலக்கரிச் சுரங்கப்பணிகளும் எதிர்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக மட் டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோர வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)