
அதிகாரம் என்பது வெறித்தனமான போதையை அளிக்கக்கூடிய ஒன்று. வெற்றிக் களிப்பில் மிதக்கும்போது அரசியல் தலைவர்கள் அடிக்கடி அவசியமற்ற நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். மேற்குவங்க முதல மைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் அபரிமிதமான செல்வாக்கை செலுத்துகிறார். இது அவரை மிகவும் பணிவுள்ளவராகவும், ஜனநாயக நடைமுறைகளுக்கு மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்பவராகவும் ஆக்கி இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதிகார போதையும், மக்கள் ஆதரவும் ஜனநாயகத்தின் இதயமாக விளங்கும். வாதம் மற்றும் கருத்து வேறுபாடுகளை அவமதிக்கும் போக்கை அவரிடம் ஏற்படுத்தி இருக் கிறது. அரசின் நூலகங்களும் அரசு ஆதரவுடன் இயங்கும் நூலகங்களும் அரசால் அங்கீகரிக்கப்படும் செய்தித் தாள்களை மட்டுமே வாங்க வேண் டும் என்று தாக்கீது அனுப்பியிருப் பதற்கு என்ன காரணம் என்பதை எவராலும் விளக்க முடியவில்லை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் 13 செய்தித்தாள்கள் (இவற்றில் பெரும்பாலானவை மிகவும் சிறிய மற்றும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட முடியாத செய்தித்தாள்களாகும்) மட்டுமே காணப்படுகின்றன. ஆனந்த பசார் பத்திரிகா, டெலிகிராப் உட்பட மேற்கு வங்கத்தில் அதிகமாக விற்ப னையாகும் நாளிதழ்கள் அந்தப் பட்டியலில் இல்லை. சிறிய செய்தித்தாள்களைப் பாதுகாத்திடவும் மேம்படுத்திடவும் அரசாங்கம் விழைகிறது என்கிற அரசு அதிகாரிகளின் வாதம் மேற் படி பட்டியலில் அதிக விற்பனை யாகும் செய்தித்தாள்களும் இடம் பெற்றிருப்பதிலிருந்து அடிபட்டுப் போகிறது. அந்தப் பட்டியலைப் பரிசீ லிக்கும்போது, முதலமைச்சரின் கொள்கைகளை விமர்சிக்கும் செய்தித்தாள்கள் மட்டும் ஒதுக்கப் பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டிருப் பதை அறியமுடிகிறது. இது மிகவும் ஆழமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறும் கூற்றுக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய வைகளாகும். சுயசிந்தனையை ஊக்குவிக்கும் வகையிலேயே முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்று ஓர் அதிகாரி கூறினார். அடுத்து அவர், சில அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்திடும் செய்தித்தாள்களை ஆதரிக்கத் தேவையில்லை என்று அரசாங்கம் கருதுவதாக அவர் சொன்னார். முதலமைச்சர் மேலும் ஒருபடி சென்று, எதிர்காலத்தில் எந்த செய்தித்தாளை வாங்கிப் படிக்க வேண்டும் என்று கூட சொல்ல இருப்பதாகக் கூறியிருக்கி றார். இத்தகைய அறிக்கைகள் குறித்து அஞ்சவேண்டியதில்லை, மாறாக சிரித்து ஒதுக்கப்பட வேண்டியவையாக கருதப்பட வேண்டியவைகளே. அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகைகளின் வாசகர்கள் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அரசுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயத்தையே கட்டுப்படுத்திட ஓர் ஆழமான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. முதலமைச் சரின் கடுங்கோபத்திற்கு ஆளானவர்களுக்கு கடுந்துன்பம் வந்து சேரும் என்று அரசாங்கம் செய்தித்தாள்களை எச்சரித்துள்ளது.
ஆனால் மேற்கு வங்கத்திலிருந்து வெளிவரும் இவ்வாறான சுதந்திர மான பத்திரிகைகள் அளித்திட்ட விளம்பரங்கள் மூலமாகத்தான் மம்தா பானர்ஜி இந்த அளவிற்குப் புகழடைந்தார் என்பதை அவர் மிகவும் சவுகரியமாக மறந்துவிட்டார். ஜனநாயகத்தில், பத்திரிகைகள் என்பவை எந்த அளவிற்கு ஒருவருக்கு/ஒரு விஷயத்திற்கு எதிராக இருக்கிறதோ அதே அளவிற்கு ஒருவருக்கு/ஒரு விஷயத் திற்கு ஆதரவாகவும் இருந்திடும்.
அரசாங்கத்திடமிருந்து பழிவாங்கும் நடவடிக்கைகள் வருமோ என்ற அச்சத்திற்கு இடம் தராது கருத்துக் களை வெளியிடும் உரிமை ஜனநாய கத்தின் மிக முக்கிய அங்கமாகும். செல்வி மம்தா பானர்ஜி ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் என்ற முறையில் விமர்சனத்தினை எதிர்கொள்ள மறுக்கும் தொட்டாற்சிணுங்கியாக இருக்கக் கூடாது. ஊடகங்கள் சொல்லும் கடும் விமர்சனங்களை யெல்லாம் பற்றி அவர் கவலைப்படாது மேற்கு வங்கத்தின் நன்மைக்காக அவர் தம் பணியைத் தொடர்ந்திட வேண்டும். ஊடகங்களின் பணி என்பது அவை தங்களுடைய சொந்தக் கருத்துக்களை முன்வைப்பது. முதலமைச்சரின் பணி என்பது நிர்வாகம் செய்வது. எவ்வித மன சஞ்சலத்திற்கும் ஆளா காமல் முறையாக நிர்வாகம் செய்திட கற்றுக்கொள்ள வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment