Thursday, April 19, 2012

சவால்களைச் சந்தித்திட சபதம்


கேரள மாநிலம் கோழிக்கோட்டில், 2012 ஏப்ரல் 4 முதல் 9ம் தேதி வரையில், 727 பிரதிநிதிகள் மற்றும் 74 பார்வை யாளர்களின் பங்கேற்புடன் ஆறு நாட்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு நடை பெற்றது. வரைவு அரசியல் தீர்மானம், சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானம், மற்றும் அரசியல் - ஸ்தாபன அறிக்கை ஆகிய முக்கிய மூன்று ஆவ ணங்கள் மீது விவாதங்கள் நடத்தி அவற்றை நிறைவேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பின்பற்றப்படும் உள்கட்சி ஜனநாயக நடைமுறைக்கிணங்க, முதல் இரு ஆவணங்களின் நகல்களும் மாநாட்டிற்கு இரு மாதங்களுக்கு முன்பே கட்சி அணி களுக்கு வெளியிடப்பட்டுவிட்டன. கட்சி யின் இணையதளத்திலும் அவை வெளி யிடப்பட்டன. அதனை அடுத்து அவற் றின் மீது 3 ஆயிரத்து 713 திருத்தங்கள் மாநாட்டிற்கு முன்பே வரப்பெற்று, பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் அரசியல் தீர்மானத்தின் மீது வரப்பெற்ற 163 திருத்தங்கள் ஏற்கப்பட்டன. அதே போன்று, தத்துவார்த்தத் தீர்மானத்தின் மீதும் 1,014 திருத்தங்கள் வரப்பெற்று, பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் 38 திருத் தங்கள் ஏற்கப்பட்டன. கூடுதலாக, மாநாட் டின் பிரதிநிதிகள் அரசியல் தீர்மானத்தின் மீது 349 திருத்தங்களையும், தத்துவார்த் தத் தீர்மானத்தின் மீது 235 திருத்தங் களையும் முன்மொழிந்தனர். மாநாடு அவை ஒவ்வொன்றையும் உன்னிப்பாக ஆராய்ந்து அவற்றில் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளன. இவ்வாறு மிகவும் ஆழ மான மற்றும் வலுவான விவாதங்களின் வெளிப்பாடாக நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானங்கள், கட்சிக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் பின்பற்ற வேண் டிய அரசியல்-நடைமுறை உத்திகளை வகுத்துத் தந்திருக்கின்றன. 1930களில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார மந்தத்தைவிட மிக மோச மான அளவில் இன்றைய தினம் உலகப் பொருளாதார முதலாளித்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்னணியில்தான் கட்சி யின் 20ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இது, முதலாளித்துவம் என்பது எந்தக்காலத்திலும் மனிதனைச் சுரண்டாத மற்றும் நெருக்கடிகளுக்கு ஆளாகாத ஓர் அமைப்பாக இருக்க முடி யாது என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிச-லெனினிசப் புரி தலை மிகவும் உரத்து மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. முந்தைய சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசம் தகர்ந்தபின் கடந்த இருபதாண்டுகளில் முதன் முதலாக, முதலாளித்துவ நெருக்கடிக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள மக்கள் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகியுள்ள உலக மக் களின் பெரும்பான்மையினர், முதலாளித் துவ அமைப்பை கேள்விக்கு உட்படுத்த வும், இதற்கு மாற்று தேவை என்பதை உரத்துக்கூறவும் தொடங்கியிருக் கின்றனர். அதேபோன்று இந்தியாவிலும், இந்திய ஆளும் வர்க்கங்களால் பின்பற்றப் படும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக விளைந் துள்ள துன்ப துயரங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் கிளர்ச்சிகளும் போராட் டங்களும் இவற்றைப் பிரதிபலிக்கின்றன. மனித சமுதாயம் உருவாக்கியுள்ள முன்னேற்றங்கள் அனைத்தும், மனித குலம் முழுமைக்கும் சென்றடைய வேண் டும், அதனை மனிதகுலத்தின் ஒருசிலர் மட்டும் பறித்திடக் கூடாது என்கிற, மனிதகுல சுரண்டலமைப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கிற, சோசலிச அமைப்பு மட்டுமே அதற்கு மாற்றாக இருக்க முடியும் என்கிற மார்க்சிச-லெனினிசப் புரிந்து ணர்வை, மக்கள் தங்கள் சொந்த அனுப வங்களின் மூலம் மீண்டும் ஒருமுறை நன்கு உணர்ந்துகொண்டு விட்டார்கள். முதலாளித்துவத்திற்கு எதிராக இத் தகைய மாற்றுக்கான தேவை உலகம் முழுவதும் மிக வேகமாக வளர்ந்து கொண் டிருக்கிறது. ஆயினும், நம் முன்னுள்ள முக்கிய பிரச் சனை என்ன? மார்க்ஸ் கூறிய புகழ் பெற்ற வாசகமான, இன்றைய உலக நிலைமை குறித்துப் பல்வேறு விதங் களில் வியாக்கியானம் செய்தால் மட்டும் போதாது, அதனை எப்படி மாற்றப் போகிறோம் என்பதேயாகும். கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாட்டில் பிர தானமாக விவாதிக்கப்பட்ட பிரச்சனை இதுவேயாகும்: ‘‘இந்தியாவில் உள்ள துல் லியமான நிலைமைகளில், முதலாளித்து வத்திற்கு எதிரானதோர் அரசியல் மாற்றை எப்படி வலுப்படுத்தப் போகி றோம்?’’ அத்தகையதோர் மாற்றை வலுப்படுத் துவது என்பது, இந்தியாவில் இடது மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப் படுத்துவதன் மூலம் மட்டுமே முடியும். இதனை எப்படி எய்த வேண்டும் என்பதே அரசியல் தீர்மானத்தின் சாராம்சமாகும். அடுத்த மூன்றாண்டுகளுக்கு - அதாவது அடுத்த அகில இந்திய மாநாடு வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் - நடைமுறை உத்திகளின் பிர தானத் தலையீடு (main thrust) என்பது தற் போது ஆளும் வர்க்கங்களால் கடைப் பிடிக்கப்பட்டு வரும் சமூகப் பொருளா தாரக் கொள்கைகளின் விளைவாக வளர்ந்துவரும் துன்பதுயரங்களுக்கு எதிராக வலுவான முறையில் மக்கள் போராட்டங்கள் மூலமாக, இடது மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவது என்பதேயாகும். நாட்டின் புறச்சூழல் (objective situation) முதலாளித்துவத்திற்கு ஓர் அரசியல் மாற்றை வலுப்படுத்த வேண்டியதன் தேவையைக் கூர்மை யாகச் சுட்டிக்காட்டும் அதே சமயத்தில், அகக் காரணியானது subjective factor), அதாவது தொழிலாளர் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் அனைத்து சுரண்டப்படும் பிரிவினரின் போராட் டங்களின் ஒற்றுமை என்பது, அத்தகைய தோர் அரசியல் மாற்றை உருவாக்கக் கூடிய அளவிற்கு வலுப்படுத்த வேண் டிய நிலையில் இருந்து வருகிறது. இவ்வாறு அகக்காரணியை வலுப் படுத்தும் குறிக்கோளை எய்திடுவதற் காகவும், இடது மற்றும் ஜனநாயக சக்தி களை வலுப்படுத்தி ஓர் அரசியல் மாற்றை நிறுவிடுவதற்காகவும், கட்சியின் அகில இந்திய மாநாடு, நாம் எதிர் கொண்டு வெல்ல வேண்டிய சவால்க ளாக எட்டு அம்சங்களை நமக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறது. முதலாவதாக, மார்க்சிசம் மற்றும் சோசலிசத்திற்கு எதிராக ஏகாதிபத் தியமும், பிற்போக்கு சக்திகளும் கட்ட விழ்த்துவிட்டுள்ள தத்துவார்த்த ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிப் பது நம்முன் உள்ள முக்கியமான மற்றும் அவசரமான பணிகளில் ஒன்றாகும். கடந்த இருபதாண்டுகளாக, அவர்கள் முதலாளித்துவமே `நிரந்தரமானது` (eternal) என்றும், மார்க்சிசமும், சோசலிசமும் இறந்துவிட்டன என்றும் பிரச்சாரம் செய்து வந்தார்கள். மிகவும் மோசமான உலகப் பொருளாதார நெருக்கடி நிலவும் இன்று, இவர்கள் தங்கள் தத்துவார்த்த ரீதியான தாக்குதலை, பின் நவீனத்துவம் என்னும் புதிய சித்தாந்தத்தின் மூலமாக ஏவத் தொடங்கியிருக்கிறார்கள். இவர் களது அனைத்துத் தத்துவார்த்த ரீதியான தாக்குதல்களின் அடிப்படை என்ன வெனில், வர்க்கச் சுரண்டல் நிலவுவதை யும், வர்க்கப் போராட்டத்தையும் மறுப்ப தும், உள்ளூர் நிலைமைகளுக்கேற்ப பெருவாரியான மக்கள் நலன் அடங்கி யிருக்கிறது என்று சித்தரிப்பதுமாகும். இத்தகைய தத்துவார்த்தத் தாக்குதல்கள், நடைமுறையில் உக்கிரமாக நடைபெற்று வரும் மனிதகுலச் சுரண்டல் குறித்து மக் களுக்குத் தெரியாமல் மறைத்து, அவர் களை மழுங்கடையச் செய்வதற்கு இட் டுச் செல்கின்றன. எனவே இதற்கு எதி ரான போராட்டத்தை மேற்கொள்ள வேண் டியதன் அவசியத்தை தீர்மானம் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறது. இரண்டாவதாக, நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சுரண்டப்பட்டு வரும் மக் களின் போராட்டங்களை வலுப்படுத்துவ தன் மூலம் மட்டுமே இடது மற்றும் ஜன நாயக சக்திகளை வலுப்படுத்துவதென் பதும் சாத்தியமாகும். நாடாளுமன்றத் திற்கு அப்பாலான இத்தகைய போராட் டங்களும் வலுப்படுத்தப்பட வேண்டும். மேலும், இத்தகைய போராட்டங்களின் வலு மட்டுமே, நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப் பேரவைகளிலும் மற்றும் பல்வேறு ஜனநாயக உள்ளாட்சி அமைப் புகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் பிரதி பலித்திடும். இவற்றை வெறும் அரசியல் கூட்டணிகள் ((political manoeuvring) மூலம் மட்டுமோ அல்லது நாடாளுமன்ற உத்திகள் (parliamentary tactics) மூலம் மட்டுமோ எய்திட முடியாது. மாறாக நாம் நம் குறிக்கோளை எய்திட நாடாளு மன்றத்திற்குள்ளே நாம் மேற்கொள்ளும் போராட்டங்களை, நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெறும் போராட்டங் களுடன் மிகவும் சரியான முறையில் பொருத்திட வேண்டும். மூன்றாவதாக, நாட்டில் பெருவாரி யான மக்கள் பங்கேற்கும் போராட் டங்களை வலுப்படுத்துவதென்பது எப் படிச் சாத்தியமாகும்? போராட்டங்களில் தொழிலாளர் வர்க்கத்திற்கும், ஏழை விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக் கும் இடையேயான ஒற்றுமையைக் கட் டுவதன் மூலமே இதனை எய்திட முடியும். வெகுஜனப் போராட்டங்கள் வலுப்படுத் தப்படுவதற்கு இத்தகைய தொழிலாளர்-விவசாயி ஒற்றுமையே அடித்தளமாக அமைந்திடும். நான்காவதாக, தொழிலாளி-விவசாயி ஒற்றுமையை வலுப்படுத்துவதை எப்படி எய்துவது? தொழிலாளி வர்க்கம் தன் னுடைய ஒற்றுமையை வலுப்படுத்துவ தன் மூலம் மட்டுமே இதனையும் எய்திட முடியும். நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தற்போது அணிதிரட்டப்பட்டுள்ள தொழி லாளர் வர்க்கத்தையே கூட மிகவும் வேக மாக முறைசாராத் தொழிலாளர் வரிசைக் குத் தள்ளிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு, நிரந்தரப் பணியில் இருக்கும் தொழிலாளர் களையும் ஊழியர்களையும் கேசுவல் மற்றும் ஒப்பந்த ஊழியர்களாக மாற்றும் வேலையையும், தாங்கள் கொள்ளை லாபம் ஈட்டும் வேலையோடு சேர்த்தே, ஆளும் வர்க்கங்கள் செய்து வருகின்றன. அதன் மூலம் தொழிலாளர் வர்க்க ஒற்று மையையும் உடைத்திடவும், சீர்குலைத் திடவும் முயற்சிகளை மேற்கொண்டு வரு கின்றன. அணிதிரட்டப்பட்ட தொழிலாளர் இயக்கத்தோடு, நாளும் வேகமாக அதி கரித்து வரும் முறைசாராத் தொழிலாளர்க ளையும் இணைப்பதன் மூலம் இந்த சவாலை நாம் எதிர்கொண்டு முறியடித் தாக வேண்டும். ஐந்தாவதாக, பின் நவீனத்துவம் போன்ற மார்க்சிய எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்புத் தத்துவங்கள் மூலமாக அதி கரித்து வரும் அடையாள அரசியல், மீண் டும் சுரண்டப்படும் பிரிவினர்களின் வர்க்க ஒற்றுமையைச் சீர்குலைத்து வரு கின்றன. இந்தியா போன்றதொரு நாட்டில் வர்க்கப்போராட்டத்தை வலுப்படுத்தி, முன்னெடுத்துச் செல்வதென்பது பொரு ளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட் டங்களையும், சமூக ஒடுக்குமுறைக்சகு எதிரான போராட்டங்களையும் ஒரே சம யத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் மட் டுமே இயலும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எப்போதும் சொல்லி வந்தி ருக்கிறது. சாதி, இனம், பாலினம் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்ட சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பிரச்ச னைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகள் தங்கள் கைகளில் எடுத்துப் போராடாமல் இருந்திருந்தால், இப்பிரிவினர் இத்தகைய அடையாள அரசியலுக்குப் பலியாகி இருப்பார்கள், நாம் வலுப்படுத்த விரும்பும் வர்க்க ஒற்றுமை மேலும் சீர் குலைக்கப் பட்டிருந்திருக்கும். எனவே, பொருளா தாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத் தையும், சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தையும் ஒருசேர முன்னெடுத் துச் செல்ல வேண் டியது அவசியமாகும். ஆறாவதாக, வகுப்புவாத சவால். பெரும்பான்மை இந்து வகுப்புவாதம் மற்றும் அனைத்துவிதமான சிறுபான்மை மத அடிப்படைவாதம் ஆகிய இரண்டுமே எதிர்கொண்டு முறியடிக்கப்பட்டாக வேண்டும். இவைகளும் சுரண்டப்படும் மக்கள் பிரிவினரை, மதத்தின் பேரால் ஒன்றுசேர விடாமல் பிரிக்க முயல்கின் றன. அதன் மூலம், இத்தகைய சக்திகள், மக்களின் மத நம்பிக்கைகளை தங்களின் குறுகிய மதவெறிக்கும் (sectarian), சீர் குலைவு அரசியல் குறிக்கோள்களுக்கும் (disruptive) பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவின் அடித்தளங் களை வலுவிழக்கச் செய்வதோடு, வகுப்புவாதம் சுரண்டப்படும் பிரிவினர் களின் ஒற்றுமையையும் சீர்குலைக்கிறது. எனவே இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவதற்கு வகுப்பு வாதத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும், ஏழாவதாக, உலகிலேயே வேறெங்கும் இல்லாத அளவிற்கு சமூக-கலாச்சார-மத வேற்றுமைகள் நிறைந்த நம் நாட்டில், பல்வேறு இனத்தினர் வாழும் நம் நாட்டில், மக்களைத் தங்களுடைய குறுகிய சாதி வெறி, மதவெறி, இனவெறி, தேசியவெறி அடிப்படையில் பிரித்திட பிற்போக்கு சக் திகள் முயற்சித்து வருகின்றன. இத்த கைய மக்கள் பிரிவினரிடையே இவர் களுக்கு இழைக்கப்படும் ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல் லும் அதே சமயத்தில், ஒடுக்கப்படும் பிரி வினரின் ஒற்றுமையைச் சீர்குலைத்திட முயலும் இத்தகைய மதவெறி, இனவெறி சக்திகளின் சவால்களையும் எதிர்த்து, முறியடித்திட வேண்டும். எட்டாவதாக, நாட்டில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள பகுதி களில் உள்ள மக்களின் போராட்டங் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரரீதியாக பிற்பட்ட நிலைமை இருப்பதைப் பயன் படுத்திக் கொண்டு, தற்போது இருந்து வரும் மாநிலங்களையே மறுசீரமைப்பு செய்திட வேண்டும் என்றும், தற்போ துள்ள மொழிவாரி மாநிலங்கள் அடிப்ப டையில் அமைந்துள்ள மாநிலங்களையே பிரித்திட வேண்டும் என்றும் இத்தகைய சீர்குலைவு சக்திகள் கோரி வருகின்றன. இத்தகைய சக்திகளும் சுரண்டப்படும் பிரிவினரின் வர்க்க ஒற்றுமையைச் சீர் குலைத்திடும். எனவே இத்தகைய சக்தி களையும் எதிர்த்து முறியடித்தாக வேண்டும். இத்தகைய சவால்களை எதிர் கொண்டு முறியடிப்பதன் மூலம்தான் இடது ஜனநாயக மாற்றை வலுப்படுத்து வதற்கான குறிக்கோளை எய்திட முடியும். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனரீதியாக வலுப்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியமாகும். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபன ரீதியாக வலுப்படுத்தாது, அதன் அடிப் படையில் நாட்டில் உள்ள சுரண்டப்படும் பிரிவினரின் ஒற்றுமையைக் கட்டாது, மேலே குறிப்பிட்டுள்ள எட்டு சவால் களையும் எதிர்த்து முறியடித்திட முடி யாது. இந்தப் பணிகள் அனைத்தும் அரசியல் ஸ்தாபன அறிக்கையில் விவரிக் கப்பட்டிருக்கின்றன. தற்போது நம்முன் உள்ள எதிரி வர்க் கத்தின் தத்துவார்த்த, அரசியல் மற்றும் ஸ்தாபனரீதியான சவால்கள் அனைத்தை யும் - எதிர்த்து முறியடித்திடவும், தற்போது ஆளும் வர்க்கங்களால் கடைப்பிடிக்கப் பட்டு வரும் நவீன தாராளமய முதலாளித் துவப் பாதைக்கு மாற்றான அரசியல் பாதையை வலுப்படுத்திடவும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு, இவ்வாறு, முன் னிலும் இருமடங்கு உறுதிபூண்டிருக் கிறது. நாட்டிலுள்ள ஒடுக்கப்படும் வர்க் கங்கள் அனைத்தையும் அணிதிரட்டிட வும், அதன் மூலம் நாட்டில் மக்கள் ஜன நாயக அரசை நிறுவக்கூடிய விதத்தில் புரட்சிகரமான போராட்டத்தை நடத்தவும் மற்றும் அதன் அடித்தளத்தில், மனிதகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்க மான சோசலிசத்தை நிர்மாணித்திடவும், இவ்வாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் புரட்சிகரக் கடமைகளை நிறை வேற்றிட உறுதிபூண்டுள்ளது. (தமிழில்: ச.வீரமணி)

No comments: