Friday, March 30, 2012
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாட்டை நோக்கி...பிரகாஷ் காரத்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு வரும் 2012 ஏப்ரல் 4 - 9 தேதிகளில் கேரள மாநிலம் கோழிக்கோடில் நடைபெறவிருக்கிறது. கட்சியின் அகில இந்திய மாநாடு என்பது கட்சியின் ஓர் உயர்ந்தபட்ச அமைப்பாகும். அதுதான் எதிர்கால அரசியல் உத்திகளைத் தீர்மானித்திடும். அதுமட்டுமல்லாமல் அதுதான் கடந்த அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர் நடைபெற்ற வேலைகளை ஆய்வு செய்து, கட்சி ஸ்தாபனத்தின் திசைவழியைத் தீர்மானித்திடும். முக்கியமான தத்துவார்த்த பிரச்சனைகளை விவாதிக்கும் அமைப்பாகவும் இது திகழும்.
கட்சியின் 19ஆவது அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர் கடந்த நான்காண்டுகள் உலகப் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து, வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது. இந்நாடுகள் பின்பற்றிய நவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாக இந்நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களின் மீது கடும் தாக்குதல்களை ஏற்படுத்தியது, வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்தது. மீண்டும் ஒருதடவை, முதலாளித்துவ அமைப்பு என்பது நெருக்கடியற்ற, சுரண்டலற்ற ஓர் அமைப்பாக இருக்க முடியாது என்பதை இது மீண்டும் ஒரு தடவைக் காட்டிவிட்டது. இதன் காரணமாக சமீப காலத்தில் இந்நாடுகளில் தங்கள் உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக எண்ணற்ற போராட்டங்களிலும் இயக்கங்களிலும் மேலும் மேலும் மக்கள் இணைந்த வண்ணம் உள்ளார்கள். நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு வளர்ந்து கொண்டிருப்பதன் மூலம், இடது மாற்றை உருவாக்குவதற்கான வாய்ப்பும் உலகம் முழுதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகள் முன்னேறிக் கொண்டிருப்பது இவ்வுண்மைக்கு சாட்சியமாகும்.
நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம்
தேசிய அளவில், கடந்த இருபதாண்டுகளாக ஆட்சியாளர்கள் வெறித்தனமாகக் கடைப்பிடித்து வந்த தாராளமயக் கொள்கைகள் இரு வித இந்தியர்களை உருவாக்கி இருக்கிறது. முதல்விதமானவர்கள், நவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாக பயனடைந்த இந்திய மற்றும் வெளிநாட்டுப் பெரு முதலாளிகள், நிதி மற்றும் ரியல் எஸ்டேட் ஊக வர்த்தகர்கள் மற்றும் இந்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடித்திட உரிமங்கள் வழங்கப்பட்டவர்கள். இரண்டாவது விதமானவர்கள் கோடிக்கணக்கான சாமானிய மக்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறிய கடை வணிகர்கள், கைவினைஞர்கள், மற்றும் அற்பக் கூலி பெறும் மக்கள். இவர்களில் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரும் அடங்குவர். உணவுப் பொருள்களின் கடும் விலை உயர்வாலும், வேலையில்லாக் கொடுமையாலும், விவசாய நெருக்கடியாலும், பாரம்பர்ய வாழ்வாதாரங்களை இழந்ததாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். இவர்களில் வேலை கிடைத்தோருக்கும் உரிய ஊதியம் தர மறுப்பதோடு அற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. இவர்களுக்கு எவ்விதமான சமூகப் பாதுகாப்பும் கிடையாது. இப்பிரிவினரை எவ்விதம் அணிதிரட்டப்போகிறோம் என்பதையும், அவர்கள் பிரச்சனைகளை முன்னிலைப் படுத்தி இயக்கங்களையும் போராட்டங்களையும் எங்ஙனம் வளர்த்தெடுக்கப்போகிறோம் என்பதையும், கட்சியின் அகில இந்திய மாநாடு விவாதிக்க இருக்கிறது. உழைக்கும் மக்களின் ஒற்றுமையை எப்படி வளர்த்தெடுப்பது மற்றும் அவர்களின் ஒன்றுபட்ட போராட்டங்களை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பன மாநாட்டின் நிகழ்ச்சி நிரலாக அமைந்துள்ளன.
சாதி, மதம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ள சமூக ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளையும் எடுத்துக் கொண்டு போராட்ட வியூகங்களை அமைத்திட கட்சி தீர்மானித்திருக்கிறது. இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் விரிவாக்கப்பட வேண்டும். இவை, இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக இயக்கத்தின் மேடையின் ஓர் அங்கமாக மாற வேண்டும். இப்பிரச்சனை மீதும் கட்சியின் அகில இந்திய மாநாடு விவாதிக்க இருக்கிறது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, மிகவும் உருக்குபோன்று உறுதியான படையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளங்குகிறது. சமீப ஆண்டுகளில், எப்படி ஐமுகூ அரசாங்கம் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையைக் கைகழுவிவிட்டு, அமெரிக்க ஆதரவுடன் கூடியதொரு போர்த்தந்திரக் கூட்டணியை (strategic alliance) உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். இது நம் நாட்டின் இறையாண்மை மீது கடும் விளைவுகளை ஏற்படுத்தியதோடு, நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் மீது திணிக்கக்கூடிய அளவிற்கு இட்டுச் சென்றுள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான இயக்கங்களையும் எப்படி வலுப்படுத்தப் போகிறோம் என்பதையும், கட்சியின் அகில இந்திய மாநாடு விவாதிக்க இருக்கிறது.
கட்சியின் சுயேட்சையான பங்கினை வலுப்படுத்துவோம்.
நம் கட்சியின் சுயேட்சையான பங்கினையும் செயல்பாடுகளையும் அதன் அரசியல் தளத்தையும் செல்வாக்கையும் எங்ஙனம் உயர்த்தப் போகிறோம் என்பதுதான் மாநாட்டின் அரசியல் தீர்மானத்தில் விவாதத்திற்காக முன்வைத்துள்ள மையக் கேள்வியாகும். இதற்கு, கட்சி, நம் அடிப்படை வர்க்கங்களின் - ஐமுகூ அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளின் மோசமான விளைவுகளை நேரடியாக அனுபவிக்கின்ற தொழிலாளர் வர்க்கம், ஏழை விவசாய வர்க்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் - போராட்டங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. நாட்டிலுள்ள பல்வேறு பகுதி மக்களையும் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவுகள் எப்படியெல்லாம் பாதித்திருக்கின்றன என்பது குறித்து துல்லியமானதோர் ஆய்வினை நடத்தி, அவர்களின் பிரச்சனைகளை அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது.
முறைசாராத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் நாட்டுப்புற ஏழைகள் என்று கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து விடாப்பிடியாக போராட்டப்பாதையில் அணிதிரட்ட வேண்டிய பணியினை, ஒட்டுமொத்த கட்சியின், செல்லும் திசைவழியை, விவாதிப்பதே மாநாட்டின் பிரதானப் பணியாக இருந்திடும்.
இந்தியாவில் வகுப்புவாதம் ஆளும் வர்க்கங்களின் போர்த்தந்திரங்களுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. உழைக்கும் வர்க்கங்களைப் பிரிப்பதற்கும், வலதுசாரி நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு முட்டுக் கொடுப்பதற்கும் அவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது பாஜக-வாக இருந்தாலும் சரி, சிவ சேனைக் கட்சியாக இருந்தாலும் சரி, அல்லது வேறெந்த வகுப்புவாத சக்திகளாக இருந்தாலும் சரி - அவை பெரு மூலதனம் மற்றும் சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளின் அமலாக்கத்தை எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி ஏற்றுக் கொள்பவைகளேயாகும். வகுப்புவாதக் கட்சியால் நடத்தப்படும் அரசாங்கங்கள் எப்படி பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் ஏவலர்கள்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதற்கு குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ள பாஜக அரசாங்கங்களின் செயல்பாடுகளே எடுத்துக் காட்டுகளாகும். எனவே, நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் வகுப்புவாதத்திற்கெதிராக போராடுவது என்பதை இணைத்தே நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
அரசியல் நிலைப்பாடு
அரசியல்ரீதியாக இதன் பொருள், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு பெரும் பெரு முதலாளிகள் கட்சிகளையும் எதிர்த்திட வேண்டும் என்பதேயாகும். இன்றைய சூழ்நிலையில், நாடு முழுதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் சுயேட்சையான வளர்ச்சியையும் வலுப்படுத்துவதென்பதே நம்முன் உள்ள மிகவும் முக்கியமான பணியாகும். இதனுடன், இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்திடவும், இடதுசாரி அரசியலை முன்னிறுத்தக்கூடிய விதத்தில் அனைத்து இடதுசாரி சக்திகளையும் ஒன்றுதிரட்டிடவும் வேண்டும். இடது மற்றும் ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கும் பணியும் கட்சியின் முன்னேயுள்ளது. ஏனெனில், அதுதான் பெரு முதலாளிகளின் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிரான உண்மையான மாற்றாக இருக்க முடியும். நாம் தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் இதர பிரிவினரையும் போராட்டங்கள் மற்றும் ஒன்றுபட்ட இயக்கங்கள் மூலமாக அணிதிரட்டிடும்போது, ஒரு வலுவான இடது மற்றும் ஜனநாயக முன்னணி உருவாகிடும். காங்கிரசையும் பாஜகவையும் எதிர்த்திடும் போராட்டத்தில் இத்தகையதொரு கூட்டணியைக் கட்டிட முயற்சிக்கும் வேளையில், கட்சி மக்கள் பிரச்சனைகளின் மேல் நடத்தப்படும் போராட்டங்களிலும், மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திலும் இதர ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளுடன் ஒத்துழைத்திடவும் முயல வேண்டும்.
கட்சியின் 19ஆவது அகில இந்திய மாநாட்டிற்குப் பிந்தைய கால கட்டம் கட்சிக்கு மிகவும் சிரமமான மற்றும் மிகக் கடினமான ஒன்றாக இருந்திருக்கிறது. வலுவான தளம் இருந்த மேற்கு வங்கத்தில் கட்சி கடுமையான தாக்குதலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த மாநாட்டிற்குப் பின்னர் இதுவரை 570க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் மேற்கு வங்கத்தில் நாம் இழந்திருக்கிறோம். மக்களவைத் தேர்தல்களிலும் சட்டமன்றத் தேர்தல்களிலும் நமக்கு ஏற்பட்ட தேர்தல் பின்னடைவுகளைப் பயன்படுத்திக் கொண்டு நமக்கு எதிரான தாக்குதல்கள் உக்கிரமாகி இருக்கின்றன. நமது கட்சி இந்த நிலைமையை உறுதியுடன் எதிர்த்து நின்று நாம் இழந்த தளத்தை மீண்டும் பெற்றிட மக்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்களின் பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொண்டு போராட்டங்களையும் இயக்கங்களையும் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் நாம் இழந்த தளத்தை மீண்டும் அடைவதற்காக நாம் நடத்தும் போராட்டமானது கட்சியின் சுயேட்சையான அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியேயாகும்.
தத்துவார்த்தப் பிரச்சனைகள்
மாநாட்டில் கட்சி எடுத்துக் கொண்டுள்ள மற்றுமொரு முக்கியமான பணி, சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானத்தை விவாதித்து, நிறைவேற்ற இருப்பதாகும். மத்தியக் குழுவால் தயார் செய்யப்பட்ட வரைவு கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. மார்க்சிய - லெனினியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய சித்தாந்த (theoretical) மற்றும் தத்துவார்த்த (ideological) புரிதலை இடைவிடாமல் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய உலக வளர்ச்சிப்போக்கில், ஏகாதிபத்தியம் என்று அழைக்கப்படுவதை அங்கீகரிக்க மறுக்கும் எண்ணற்றோரை நாம் பார்த்து வருகிறோம். ஏன், இடதுசாரிகள் மத்தியில் கூட சிலரிடம் இத்தகைய கண்ணோட்டம் இருக்கிறது. இன்றைய உலக வளர்ச்சிப்போக்கில் ஏகாதிபத்தியம் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மிகவும் சரியாகக் கணிக்க வேண்டியது நம்முன்னுள்ள முக்கிய கடமையாகும். உலக நிதிமூலதனத்தினால் நன்கு மாற்றியமைக்கப்பட்டுள்ள இன்றைய முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர் வர்க்கம் ஒரு புரட்சிகரமான சக்தியாக தன் பங்களிப்பினைச் செய்திட முடியாது என்கிற கருத்து பலரிடம் காணப்படுகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் மீள உறுதிசெய்யப்பட வேண்டியிருக்கிறது. அதே சமயத்தில், இன்றைய ஏகாதிபத்திய உலகமய காலகட்டத்தில், அரசியல், தத்துவம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களையும் நாம் அலசி ஆராய வேண்டியிருக்கிறது. அவ்வாறு ஆராய்ந்து எதிர்காலத்தில் எப்படி வர்க்கப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும், இந்தியாவில் உள்ள நிலைமைகளில், அரசியல், தத்துவார்த்த மற்றும் பொருளாதாரப் போராட்டங்களை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் இத்தீர்மானத்தில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ்தாபனத்தைக் கட்டுக
இன்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பத்து லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. ஆயினும் இதனை ஓர் அகில இந்தியப் போராடும் சக்தியாக, புதிய பகுதிகளுக்கும் மக்களின் பல்வேறுபட்ட புதிய பிரிவினருக்கும் இடையில் செயல்படக்கூடிய கட்சியாக, மாற்றக்கூடிய விதத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்கான அத்தியாவசியமான ஸ்தாபன நடவடிக்கைகள் அனைத்தையும் அகில இந்திய மாநாடு தீர்மானித்திடும்.
கோழிக்கோடிலிருந்து அறைகூவல்
கேரள மாநிலம், கம்யூனிஸ்ட் இயக்கம் வலுவாக வேரூன்றியுள்ள ஒரு மாநிலமாகும். கடந்த பல ஆண்டுகளாக எண்ணற்றப் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் மூலமாக வீரம் விளைந்த பூமியாகும். இத்தகைய மாநிலத்தில் கோழிக்கோடில் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு நடைபெறவிருக்கிறது.
நாடு எதிர்கொண்டுள்ள அனைத்து சவால்களையும் எதிர்கொண்டிட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடது மற்றும் ஜனநாயக சக்திகளை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, அறைகூவல் விடுப்பதற்கான சரியான மற்றும் பொருத்தமானதொரு இடமாக, அகில இந்திய மாநாட்டிற்கு, கோழிக்கோடு அமைந்திடும்.
(தமிழில்: ச.வீரமணி)
Thursday, March 22, 2012
புரட்சியாளர் பகத்சிங்
(பகத் சிங் பற்றி தோழர் சிவவர்மா எழுதிய கட்டுரை இங்கு தரப்படுகிறது. சிவவர்மா, பகத்சிங்கின் தோழர். அவ ருடன் இணைந்து வெள்ளை யருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட் டவர். பகத்சிங் கைதான வழக் கில் குற்றவாளியாக இணைக்கப்பட்ட சிவவர்மா வயதில் இளையவர் என் பதற்காக ஆயுள் தண்டனை பெற்றவர். பகத்சிங் வரலாறு குறித்து ஒரு நூலும் எழுதியுள்ளார்.)
1980களில் ஒரு நாள், நான் கான்பூரி லிருந்து லக்னோவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர், நான் அப் போதுதான் படித்து முடித்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அது, பகத்சிங் எழுதிய ‘‘நான் ஏன்
நாத்திகன்?’’ ஆகும். ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘‘இந்த அளவிற்கு ஆழமான விஷயங்களை எழுதக்கூடிய அள விற்கு, உண்மையில் அவன் திறமை படைத் தவனா?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் தத்துவத்துறை விரிவுரையாள ராகப் பணியாற்றுகிறாராம். ஒரு புரட்சியாளன் பற்றி அவர் வைத்திருந்த மதிப்பீடே அலாதி யானது. உயரமாக, உறுதிமிக்கவனாக இருப் பான், அவன் மண்டையில் ஒன்றும் இருக் காது, நிறைய வெடிகுண்டுகளும், ரிவால்வர் களும் வைத்திருப்பான், தன்னல மறுப்பும் தைரியமும் கொண்டிருந்தாலும் மனிதர் களைக் கொல்வதில் இன்பம் காணும் பேர் வழி, ரத்த தாகம் எடுத்த அதிதீவிரவாதி. ஆயினும் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த இளைஞர்கள் அவ்வளவு அறிவு பெற் றிருக்க மாட்டார்கள். இதேபோன்று பலர் புரட் சியாளர்கள் குறித்துச் சொல்லும் கதை களையே இவரும் இதுவரை கேட்டிருந் திருக்கிறார். இத்தகைய மனிதர்கள் குறித்து இரக்கப்படுவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும்?
ஆனாலும் நம் வீரத்தியாகிகள் குறித்து வேண்டும் என்றே சீர்குலைவுப் பிரச்சாரம் மேற்கொள்வோர் குறித்து நாம் என்ன நிலை எடுப்பது? ஒரு சமயம், 1950களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடப் புத்தகம் ஒன்றைப் புரட்டிப் பார்த்தேன். அதில் ஆசாத் குறித்து ஓர் ஐந்தாறு பத்திகள் குறிப்பிடப்பட் டிருந்தன. ‘‘சந்திரசேகர் ஆசாத்’ என்னும் உள் தலைப்பில், ஆசாத் ரத்தம் சிந்துவதிலும், கொள்ளையடிப்பதிலும் நம்பிக்கை கொண் டவன் என்றும், ஆனால் அதிர்ஷ்டவசமாக நாடு அவனது போராட்டப் பாதையை ஏற்றுக் கொள்ளாமல் காந்திஜியின் பாதையைத் தேர்ந்தெடுத்தது என்றும் அதை எழுதிய நபர் குறிப்பிட்டிருந்தார். ஏ.எல். ஸ்ரீவஸ்தவா என்கிற அந்த நபர், புரட்சியாளர்கள் குறித்து இவ்வளவு இழிவாக எழுதியிருந்ததை என் னால் நம்புவதற்கே மிகவும் கடினமாக இருந் தது. இந்த நபர் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் தயவால், புகழ் பெற்ற வரலாற்றாசிரியராகக் கருதப்பட்டவர். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று விட்டாலும், அவர்கள் உருவாக்கிய அடிமை கள் அடிமைப்புத்தியுடன் இன்னும் இருந்து வருகிறார்கள் என்பதும், வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய அடிமைப்புத்தி இன்றும் அவர்களை விட்டு நீங்கிடவில்லை என் பதும் இதிலிருந்து தெளிவாகிறது. அதனால் தான் இப்பேர்வழி, புரட்சியாளர்களை ரத்த தாகம் எடுத்த பேய்கள் என்றும், இவர் களுக்கு வாழ்க்கையில் எவ்விதமான கொள் கையும் லட்சியமும் குறிக்கோளும் கிடை யாது என்றும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள்.
இதேபோன்ற கருத்துக்கள் பரப்பப்படு வதற்கு நம்முடைய பழைய புரட்சியாளர்கள் சிலரும் காரணமாவார்கள். நம் மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக நம் இளைஞர் களில் சிலர், நம் வீரத் தியாகிகளின் வீரத் தையும், அவர்கள் நாட்டிற்காகப் புரிந்திட்ட வீரசாகசங்களையும் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் கைதட்டல் பெற வேண்டும் என்பதற்காக, நம் பழைய புரட்சியாளர்கள் குறித்து மிகைப் படுத்தி - பல சமயங்களில் மிகவும் அபத்த மான அளவிற்கு - கதைகளை அளக்கத் தொடங்கினார்கள். உண்மையில் நடந்த நிகழ்வுகளுக்கும் இவர்கள் விட்ட சரடு களுக்கும் சம்பந்தமே இருக்காது. எனவே, ஒட்டுமொத்த விளைவு என்பது, அநேகமாக அதே போன்றதுதான்.
பகத்சிங் உண்மையில் எப்படிப்பட்ட நபர் என்பதை சாமானிய மக்கள் அறிய மாட்டார் கள். அவர்களைப் பொறுத்தவரை, பகத்சிங், நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியவர் என்றும், லாலாஜியைக் கொன்றதற்காக, சாண்டர்ஸ் என்கிற வெள்ளை அதிகாரியைப் பழிக்குப்பழி வாங்கிய வீரர் என்றும்தான் அறி வார்கள். அதே பகத்சிங், பல்வேறு திறமைகள் பெற்றிருந்த ஒரு மாபெரும் அறிவுஜீவி என்பது பலருக்குத் தெரியாது. அதன் காரண மாகத்தான் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த் தப் பகுதியை - அதிலும் குறிப்பாக பகத்சிங் நிலையினைச் சீர்குலைப்பது என்பது பல ருக்கு எளிதாக இருக்கிறது. தங்களுக்கேற்ற வகையில் புரட்சி இயக்கத்திற்கு உருவம் கொடுப்பதற்கு இறங்கியிருக்கிறார்கள். எனவே அத்தகைய சீர்குலைவு நடவடிக் கைகளை எதிர்த்துப் போராடுவதென்பது இன்று நம்முன் உள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.
நம் அனைவரையும் விட பகத்சிங் ஒரு மாபெரும் அறிவுஜீவியாவார். தூக்குக் கயிற் றில் ஏற்றுபவன் அவர் வாழும் உரிமையைப் பறித்தெடுக்க வந்த சமயத்தில் வாழ்வின் 24ஆவது வசந்தத்தை அனுபவிக்கக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. ஆயினும், வாழ்வின் அந்தக் குறுகிய காலத்திற்குள் ளேயே, அரசியல், கடவுள், மதம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், அழகு, தற்கொலை, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பல்வேறு ஆய்வுப் பொருள்களிலும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்து விட்டார். அவர் புரட்சி இயக்கத்தின் வர லாற்றை, அதனுடைய தத்துவார்த்தப் போராட்டம் மற்றும் வளர்ச்சிப் போக்குகள் ஆகியவற்றை ஆழமாக ஆய்வு செய்து, அவற் றிலிருந்து சரியான முடிவுகளுக்கு வந்திருந் தார். பகத்சிங்கை முறையாகப் புரிந்து கொண்டு, சரியாகப் பாராட்ட வேண்டுமா னால், அவர் வாழ்ந்த பின்னணியையும் நாம் சற்றே ஆழ்ந்து பரிசீலித்துப் பார்க்க வேண் டியது அவசியம். இதற்கு நாம், புரட்சி இயக் கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி வரலாறு குறித்து குறைந்தபட்சமாவது தெரிந்து கொள் வது அவசியம்.
புரட்சி இயக்கத்தை, புரட்சியாளர்களை எவ்வாறு விளிப்பது? பலவிதமான கட்டுரை யாளர்கள் பல பெயர்களில் குறிப்பிட்டிருக்கி றார்கள். பயங்கரவாதிகள், புரட்சிகரப் பயங் கரவாதிகள், பயங்கரவாதப் புரட்சியாளர்கள், தேசியப் புரட்சியாளர்கள், அராஜகவாதிகள் - இப்படி எண்ணற்ற பெயர்களில் விளித்திருக் கிறார்கள். இவை எதுவுமே பொருத்தமான சொற்றொடராக நான் கருதவில்லை. புரட்சி யாளர்கள் மிகவும் பரவலாக ‘பயங்கரவாதி கள்’ என்றே விளிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது வேண்டும் என்றே கறை பூச வேண்டும் என்று நினைத்தவர்கள் மட்டு மல்ல, அவர்கள் மீது உளமார மதிப்பும் மரி யாதையும் வைத்திருந்தவர்கள் கூட அவ் வாறு விளித்தார்கள்.
ஓர் இயக்கம் என்பது, தான் ஏற்றுக் கொண்டிருக்கிற அடிப்படைக் கொள்கை மற்றும் போராட்டங்களின் அடிப்படை யிலேயே அழைக்கப்பட வேண்டும். மாறாக, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அது மேற்கொண்ட நடவடிக் கைகளின் அடிப்படையில் அழைக்கப்படக் கூடாது. சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல் நடவடிக்கைகளும் மாறுபடும். ஆனால் அடிப்படைக் கொள்கை மாறாது. மேலும், பயங்கரவாதம் என்பது புரட்சியா ளர்களின் இலக்காக எப்போதும் இருந்தது கிடையாது. பயங்கரவாதத்தின் மூலமாக மட்டுமே சுதந்திரத்தை அடைந்துவிட முடி யும் என்று அவர்கள் எப்போதும் நம்பியது மில்லை. ஓர் இடைக்கால ஏற்பாடாகத்தான் எதிர்-பயங்கரவாத நடவடிக்கையை அவர் கள் கையில் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
டாக்டர் ஜி. அதிகாரி மற்றும் சிலர் அவர் களை ‘தேசிய புரட்சியாளர்கள்’ என்று விளிக்கிறார்கள். இந்தச் சொற்றொடரும் தவறான பொருளைத் தருவதாகவே கருது கிறேன். இந்தியப் புரட்சியாளர்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் தேசியவாதிகளாக மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கும் சர்வதேசியத்திற்கும் சம்பந்தமே இல்லை என்ற கருத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கு இத்தகைய சொற்றொடர் ஓர் எளிய ஆயுத மாகக் கிடைத்து விடக்கூடிய அபாயம் இருக் கிறது. அராஜகவாதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் எந்தவிதமான அரசமைப்பையும் ஏற்கவில்லை. புரட்சியாளர்கள், இவர்களின் பார்வையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருபதுகளில், புரட்சியாளர்கள் ‘வெடிகுண் டின் தத்துவம்’ என்று அழைக்கப்பட்ட அவர் களுடைய அறிக்கையின் மூலமாக, தொழிலா ளர் வர்க்க சர்வாதிகாரத்துக்காக நிற்கிறோம் என்று பிரகடனம் செய்தார்கள். மேலே குறிப் பிட்ட அனைத்துக் காரணங்களினாலும், இன்னும் சரியான சொற்றொடர் கிடைக்காதத னாலும், நாம் அவர்களை மிக எளிய வார்த் தைகளில் ‘புரட்சியாளர்கள்’ அல்லது ‘இந் தியப் புரட்சியாளர்கள்’ என்றே அழைத்திட லாம்.
1980களில் ஒரு நாள், நான் கான்பூரி லிருந்து லக்னோவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர், நான் அப் போதுதான் படித்து முடித்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அது, பகத்சிங் எழுதிய ‘‘நான் ஏன்
நாத்திகன்?’’ ஆகும். ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘‘இந்த அளவிற்கு ஆழமான விஷயங்களை எழுதக்கூடிய அள விற்கு, உண்மையில் அவன் திறமை படைத் தவனா?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் தத்துவத்துறை விரிவுரையாள ராகப் பணியாற்றுகிறாராம். ஒரு புரட்சியாளன் பற்றி அவர் வைத்திருந்த மதிப்பீடே அலாதி யானது. உயரமாக, உறுதிமிக்கவனாக இருப் பான், அவன் மண்டையில் ஒன்றும் இருக் காது, நிறைய வெடிகுண்டுகளும், ரிவால்வர் களும் வைத்திருப்பான், தன்னல மறுப்பும் தைரியமும் கொண்டிருந்தாலும் மனிதர் களைக் கொல்வதில் இன்பம் காணும் பேர் வழி, ரத்த தாகம் எடுத்த அதிதீவிரவாதி. ஆயினும் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த இளைஞர்கள் அவ்வளவு அறிவு பெற் றிருக்க மாட்டார்கள். இதேபோன்று பலர் புரட் சியாளர்கள் குறித்துச் சொல்லும் கதை களையே இவரும் இதுவரை கேட்டிருந் திருக்கிறார். இத்தகைய மனிதர்கள் குறித்து இரக்கப்படுவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும்?
ஆனாலும் நம் வீரத்தியாகிகள் குறித்து வேண்டும் என்றே சீர்குலைவுப் பிரச்சாரம் மேற்கொள்வோர் குறித்து நாம் என்ன நிலை எடுப்பது? ஒரு சமயம், 1950களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடப் புத்தகம் ஒன்றைப் புரட்டிப் பார்த்தேன். அதில் ஆசாத் குறித்து ஓர் ஐந்தாறு பத்திகள் குறிப்பிடப்பட் டிருந்தன. ‘‘சந்திரசேகர் ஆசாத்’ என்னும் உள் தலைப்பில், ஆசாத் ரத்தம் சிந்துவதிலும், கொள்ளையடிப்பதிலும் நம்பிக்கை கொண் டவன் என்றும், ஆனால் அதிர்ஷ்டவசமாக நாடு அவனது போராட்டப் பாதையை ஏற்றுக் கொள்ளாமல் காந்திஜியின் பாதையைத் தேர்ந்தெடுத்தது என்றும் அதை எழுதிய நபர் குறிப்பிட்டிருந்தார். ஏ.எல். ஸ்ரீவஸ்தவா என்கிற அந்த நபர், புரட்சியாளர்கள் குறித்து இவ்வளவு இழிவாக எழுதியிருந்ததை என் னால் நம்புவதற்கே மிகவும் கடினமாக இருந் தது. இந்த நபர் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் தயவால், புகழ் பெற்ற வரலாற்றாசிரியராகக் கருதப்பட்டவர். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று விட்டாலும், அவர்கள் உருவாக்கிய அடிமை கள் அடிமைப்புத்தியுடன் இன்னும் இருந்து வருகிறார்கள் என்பதும், வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய அடிமைப்புத்தி இன்றும் அவர்களை விட்டு நீங்கிடவில்லை என் பதும் இதிலிருந்து தெளிவாகிறது. அதனால் தான் இப்பேர்வழி, புரட்சியாளர்களை ரத்த தாகம் எடுத்த பேய்கள் என்றும், இவர் களுக்கு வாழ்க்கையில் எவ்விதமான கொள் கையும் லட்சியமும் குறிக்கோளும் கிடை யாது என்றும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள்.
இதேபோன்ற கருத்துக்கள் பரப்பப்படு வதற்கு நம்முடைய பழைய புரட்சியாளர்கள் சிலரும் காரணமாவார்கள். நம் மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக நம் இளைஞர் களில் சிலர், நம் வீரத் தியாகிகளின் வீரத் தையும், அவர்கள் நாட்டிற்காகப் புரிந்திட்ட வீரசாகசங்களையும் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் கைதட்டல் பெற வேண்டும் என்பதற்காக, நம் பழைய புரட்சியாளர்கள் குறித்து மிகைப் படுத்தி - பல சமயங்களில் மிகவும் அபத்த மான அளவிற்கு - கதைகளை அளக்கத் தொடங்கினார்கள். உண்மையில் நடந்த நிகழ்வுகளுக்கும் இவர்கள் விட்ட சரடு களுக்கும் சம்பந்தமே இருக்காது. எனவே, ஒட்டுமொத்த விளைவு என்பது, அநேகமாக அதே போன்றதுதான்.
பகத்சிங் உண்மையில் எப்படிப்பட்ட நபர் என்பதை சாமானிய மக்கள் அறிய மாட்டார் கள். அவர்களைப் பொறுத்தவரை, பகத்சிங், நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியவர் என்றும், லாலாஜியைக் கொன்றதற்காக, சாண்டர்ஸ் என்கிற வெள்ளை அதிகாரியைப் பழிக்குப்பழி வாங்கிய வீரர் என்றும்தான் அறி வார்கள். அதே பகத்சிங், பல்வேறு திறமைகள் பெற்றிருந்த ஒரு மாபெரும் அறிவுஜீவி என்பது பலருக்குத் தெரியாது. அதன் காரண மாகத்தான் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த் தப் பகுதியை - அதிலும் குறிப்பாக பகத்சிங் நிலையினைச் சீர்குலைப்பது என்பது பல ருக்கு எளிதாக இருக்கிறது. தங்களுக்கேற்ற வகையில் புரட்சி இயக்கத்திற்கு உருவம் கொடுப்பதற்கு இறங்கியிருக்கிறார்கள். எனவே அத்தகைய சீர்குலைவு நடவடிக் கைகளை எதிர்த்துப் போராடுவதென்பது இன்று நம்முன் உள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.
நம் அனைவரையும் விட பகத்சிங் ஒரு மாபெரும் அறிவுஜீவியாவார். தூக்குக் கயிற் றில் ஏற்றுபவன் அவர் வாழும் உரிமையைப் பறித்தெடுக்க வந்த சமயத்தில் வாழ்வின் 24ஆவது வசந்தத்தை அனுபவிக்கக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. ஆயினும், வாழ்வின் அந்தக் குறுகிய காலத்திற்குள் ளேயே, அரசியல், கடவுள், மதம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், அழகு, தற்கொலை, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பல்வேறு ஆய்வுப் பொருள்களிலும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்து விட்டார். அவர் புரட்சி இயக்கத்தின் வர லாற்றை, அதனுடைய தத்துவார்த்தப் போராட்டம் மற்றும் வளர்ச்சிப் போக்குகள் ஆகியவற்றை ஆழமாக ஆய்வு செய்து, அவற் றிலிருந்து சரியான முடிவுகளுக்கு வந்திருந் தார். பகத்சிங்கை முறையாகப் புரிந்து கொண்டு, சரியாகப் பாராட்ட வேண்டுமா னால், அவர் வாழ்ந்த பின்னணியையும் நாம் சற்றே ஆழ்ந்து பரிசீலித்துப் பார்க்க வேண் டியது அவசியம். இதற்கு நாம், புரட்சி இயக் கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி வரலாறு குறித்து குறைந்தபட்சமாவது தெரிந்து கொள் வது அவசியம்.
புரட்சி இயக்கத்தை, புரட்சியாளர்களை எவ்வாறு விளிப்பது? பலவிதமான கட்டுரை யாளர்கள் பல பெயர்களில் குறிப்பிட்டிருக்கி றார்கள். பயங்கரவாதிகள், புரட்சிகரப் பயங் கரவாதிகள், பயங்கரவாதப் புரட்சியாளர்கள், தேசியப் புரட்சியாளர்கள், அராஜகவாதிகள் - இப்படி எண்ணற்ற பெயர்களில் விளித்திருக் கிறார்கள். இவை எதுவுமே பொருத்தமான சொற்றொடராக நான் கருதவில்லை. புரட்சி யாளர்கள் மிகவும் பரவலாக ‘பயங்கரவாதி கள்’ என்றே விளிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது வேண்டும் என்றே கறை பூச வேண்டும் என்று நினைத்தவர்கள் மட்டு மல்ல, அவர்கள் மீது உளமார மதிப்பும் மரி யாதையும் வைத்திருந்தவர்கள் கூட அவ் வாறு விளித்தார்கள்.
ஓர் இயக்கம் என்பது, தான் ஏற்றுக் கொண்டிருக்கிற அடிப்படைக் கொள்கை மற்றும் போராட்டங்களின் அடிப்படை யிலேயே அழைக்கப்பட வேண்டும். மாறாக, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அது மேற்கொண்ட நடவடிக் கைகளின் அடிப்படையில் அழைக்கப்படக் கூடாது. சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல் நடவடிக்கைகளும் மாறுபடும். ஆனால் அடிப்படைக் கொள்கை மாறாது. மேலும், பயங்கரவாதம் என்பது புரட்சியா ளர்களின் இலக்காக எப்போதும் இருந்தது கிடையாது. பயங்கரவாதத்தின் மூலமாக மட்டுமே சுதந்திரத்தை அடைந்துவிட முடி யும் என்று அவர்கள் எப்போதும் நம்பியது மில்லை. ஓர் இடைக்கால ஏற்பாடாகத்தான் எதிர்-பயங்கரவாத நடவடிக்கையை அவர் கள் கையில் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
டாக்டர் ஜி. அதிகாரி மற்றும் சிலர் அவர் களை ‘தேசிய புரட்சியாளர்கள்’ என்று விளிக்கிறார்கள். இந்தச் சொற்றொடரும் தவறான பொருளைத் தருவதாகவே கருது கிறேன். இந்தியப் புரட்சியாளர்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் தேசியவாதிகளாக மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கும் சர்வதேசியத்திற்கும் சம்பந்தமே இல்லை என்ற கருத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கு இத்தகைய சொற்றொடர் ஓர் எளிய ஆயுத மாகக் கிடைத்து விடக்கூடிய அபாயம் இருக் கிறது. அராஜகவாதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் எந்தவிதமான அரசமைப்பையும் ஏற்கவில்லை. புரட்சியாளர்கள், இவர்களின் பார்வையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருபதுகளில், புரட்சியாளர்கள் ‘வெடிகுண் டின் தத்துவம்’ என்று அழைக்கப்பட்ட அவர் களுடைய அறிக்கையின் மூலமாக, தொழிலா ளர் வர்க்க சர்வாதிகாரத்துக்காக நிற்கிறோம் என்று பிரகடனம் செய்தார்கள். மேலே குறிப் பிட்ட அனைத்துக் காரணங்களினாலும், இன்னும் சரியான சொற்றொடர் கிடைக்காதத னாலும், நாம் அவர்களை மிக எளிய வார்த் தைகளில் ‘புரட்சியாளர்கள்’ அல்லது ‘இந் தியப் புரட்சியாளர்கள்’ என்றே அழைத்திட லாம்.
Sunday, March 18, 2012
ஏழைகள்பால் அக்கறை செலுத்தா அரசு
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் துவக்குவதற்கு முன் நடைபெற்றுள்ள இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் சமீப காலத்தில் மிக நீண்டதொரு உரையை குடியரசுத் தலைவர் நிகழ்த்தி இருக்கிறார். (ராஜேந்திர பிரசாத் தவிர) குடியரசுத் தலைவர் பதவி வகித்த எவரொருவரும் திரும்பவும் அப்பதவிக்கு வருவதில்லை என்கிற உண்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இப்போது குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையை இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர் ஆற்றிய பிரிவுபசார உரையாகவே கொள்ளலாம்.அவரது உரை 106 பத்திகளைக் கொண்டிருந்தது. ஆயினும்கூட, அதில் தொலைநோக்குப் பார்வையோ அல்லது அவர் கடந்த சில ஆண்டுகளாக அள்ளி வீசிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாகவோ எதுவுமே இல்லை என்பதைக் கூற வேண்டிய நிலையில் இருக்கிறோம். நம் நாட்டு மக்களில் பெரும்பான்மையாக உள்ள ஏழை எளிய மக்களை வாட்டி வதைத்திடும் விலை வாசி உயர்வு குறித்தோ, நம் நாட்டு விவசா யிகள் தற்கொலைப் பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருப்பது குறித்தோ அவர் எதுவும் கூறாது மவுனம் சாதித்திருப்பதிலிருந்து, அவர் மூலமாக இந்த அரசு ஏழை எளிய மக்களின் அவல நிலை குறித்துக் கிஞ்சிற்றும் சொர ணையற்று தடித்தனத்துடன் இருப்ப தைத் தெரிந்து கொள்ள முடிகிறது. பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய புத்தாண்டு உரையை, குடியரசுத் தலைவர், அநேகமாக அப்படியே மீண்டும் கையாண்டிருந்ததானது இதற்கு முன்னெப்போதும் இல்லாத புதியதோர் அம்சமாகும். ‘‘என்னுடைய அரசாங்கம் இன்றைய தினம் நாடு எதிர் நோக்கியுள்ள ஐந்து முக்கிய சவால்களின் மீது செயலாற்றும்,’’ என்று குடியரசுத் தலைவர் உரையாற்றி இருக்கிறார். அந்த சவால்கள் என்னென்ன? பிரதமர் புத்தாண்டு உரையில் குறிப்பிட்டிருந்த அதே ஐந்து சவால்கள்தான். அதாவது, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதா ரங்கள் மீதான பாதுகாப்பு (அதாவது மக்களின் கல்வி, உணவு, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் மீதான பாதுகாப்பு) என்கிற அதே ஐந்து சவால்களைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சவால்களை இந்த அரசு எப்படி எதிர்கொண்டு சமாளிக்க இருக்கிறது? நாட்டின் பாதுகாப்பைப் பொறுத்த வரை - அது உள்நாட்டுப்பாதுகாப்பாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாட்டுப் பாதுகாப்பாக இருந்தாலும் சரி - அவற் றை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்பதில் எவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆயினும் குடியரசுத் தலைவர், பிரதமர் புத்தாண்டு உரையாற்றியபோது கூறிய இதர மூன்று குறிக் கோள்களான பொருளாதாரம், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பாதுகாப்பு களுக்கு வலியுறுத்திய, இகழார்ந்த பொது - தனியார் - ஒத்துழைப்பு (PPP_Public – Private - Partnership) மீது அதிக அழுத்தம் தந்து எதிரொலித்திருக்கிறார். இவர்கள் மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான பாதுகாப்பு குறித்து எந்த அளவுக்கு ‘சாதனை’ படைத்திருக்கிறார்கள் என்பதை குடியரசுத் தலைவர் உரையாற்றியதற்கு அடுத்த நாள் வெளியிடப்பட்டுள்ள 2011ஆம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையே மிகவும் தெள்ளத்தெளி வாகக் காட்டிவிட்டது. ‘‘நம் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் இரு இந்தியர்களை, அதாவது ஒரு பக்கத்தில் ‘ஒளிரும்’ இந்தியர்களையும் மறுபக்கத்தில் ‘அவ திப்படும்’ இந்தியர்களையும், அதாவது ஒரு மிகச்சிறிய அளவிலான சிறுபான் மையினருக்கு ‘ஒளியையும்’, மற்ற பெரும்பான்மையாக உள்ள அனைவருக்கும் ‘அவதியையும்’ உருவாக்கி இருக்கி றது’’ என்று நாம் அடிக்கடி கூறி வந்ததை, இதே குடியரசுத் தலைவர் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதவியேற்ற வுடன் ஆற்றிய கன்னிப் பேச்சில் தெரிவித்ததை, மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெள்ளத்தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறது. நவீன தாராளமய சீர்திருத்தங்களுக்கு வக்காலத்து வாங்கும் தலைவர்கள், நாட்டில் 53.2 விழுக்காட்டினர் - அதாவது சுமார் 60 கோடி பேர் - மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதே விழுக்காட்டு அளவிற்கு நம் நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கு முறையான கழிப்பிட வசதி இல்லை என்பதை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வெளிப்படுத்தி இருக்கிறது. சுமார் 50 விழுக்காட்டினருக்கு முறையான துப்புரவு வசதி கிடையாது. 68 விழுக்காட் டினர் சுத்திகரிக்கப்படாத தண்ணீரையே அருந்துகிறார்கள். 37.1 விழுக்காட்டினர் ஒரேயொரு அறையிலேயே வசித்து வரு கிறார்கள். நம் மக்கள் தொகையில் மூன் றில் ஒரு பகுதியினருக்கு மின் இணைப் புகள் கிடையாது. 50 விழுக்காட்டுக் குடும்பங்கள் இன்னமும் விறகையே தங்கள் எரிபொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. 5 விழுக்காட் டிற்கும் குறைவான குடும்பத்தினரே கார் வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட மோசமான அம்சம் என்னவெனில், 18 விழுக்காட்டுக் குடும்பத்தினர் (இதில் கிராமப்புறங்களில் 23 விழுக்காட்டுக் குடும்பத்தினரும் அடக்கம்) எவ்வித சொத்துக்களும் இல்லாதவர்கள். இதன் பொருள், இவர்களுக்கு ஓர் அறைகூட வசிப்பதற்குக் கிடையாது. அதாவது, நாட்டுப்புற மக்களில் நான்கில் ஒருவர் வசிக்க வீடு என்று எதுவுமில்லாமல் வெட்ட வெளியில் வானமே கூரையாக வாழ்ந்து வருகிறார்கள். இன்றைய இந்தியாவில் மக்கள் வாழ்க்கைத் தரத்தின் எதார்த்த நிலை இதுவேயாகும்.இந்நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால் நிச்சயமாக ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் - சமத்துவமின்மையை அதிகரிக்க வகைசெய்யும் - கொள்கைகளை மாற்றியமைத்திட வேண்டும். ஆனால் இதனை இந்த அர சாங்கம் செய்யப்போவதில்லை என்பதையே குடியரசுத் தலைவர் தன்னுடைய நீண்டதொரு உரையில் தெளிவுபடச் சொல்லி இருக்கிறார். மாறாக புதிய நவீன தாராளமய சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்த இருக்கிறார்களாம். அதன் மூலம் இரு இந்தியர்களுக்கும் இடையேயான இடைவெளி மேலும் அதிகமாகும் என்பது திண்ணம்.சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், இவர்கள் கூறிய ஐந்து பாதுகாப்புகளையும் எய்த வேண்டியது அவசியம் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால், நாட்டு மக்க ளில் பெரும்பான்மையோருக்கு இதற்கு எதிரானவற்றையே ஆட்சியாளர்கள் அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எதார்த்தமாகவுள்ளது. இவ்வாறு நாட்டு மக்களுக்கு சிறந்ததோர் வாழ்வாதாரத்திற்கான பாதுகாப்பை அளித்திட வேண்டுமானால், அவர்கள் தங்கள் சுகாதாரத்தை மேம்படுத்துவதற் கான வழியை ஏற்படுத்தித் தர வேண்டு மானால், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓர் உண்மையான வாழ்வாதாரப் பாது காப்பை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் அரசின் கொள்கைத் திசை வழியை மாற்றியமைத்திட வெகுஜனப் போராட்டங்களைத் தீவிரமாக்கிட வேண்டியது அவசியம்.
தமிழில்: ச.வீரமணி
Sunday, March 11, 2012
பயங்கரவாதத்துக்கா, கூட்டாட்சித் தத்துவத்துக்கா - எதற்குக் குறி?
ஐ.மு.கூட்டணி-2 அரசு தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது குறித்து தன்னிச்சையாக அறிவித்திருக் கும் முடிவை, ஐ.மு.கூட்டணியில் உள்ள சில கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள், ‘மாநிலங்களின் உரிமைகளில் கை வைத்திடும் மற்றோர் ஆக்கிரமிப்பு நடவடிக்கை’ என்று மிக வும் சரியாகவே சீற்றத்துடன் எதிர்த் திருக்கின்றன. இது மத்திய - மாநில உற வுகள் மீது புதியதொரு விவாதத்தை முடுக்கி விட்டிருக்கிறது.
நம் அரசமைப்புச் சட்டத்தின் முதல் வாக்கியமே ‘‘பாரதம் எனப்படும் இந் தியா என்பது மாநிலங்களின் ஓர் ஒன்றியமாகும்’’ என்றுதான் தொடங்கு கிறது என்பதைத் துரதிர்ஷ்டவசமாக ஐ.மு.கூட்டணி-2 அரசுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. இந்த வரையறையிலிருந்துதான் நம் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு தொடங் குகிறது. நம் நாட்டின் உச்சநீதிமன்றத் தாலும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படை அம்சமாக இது உயர்த்திப் பிடிக் கப்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டு களாகவே மாநிலங்களின் உரிமைகளும், நம் அரசமைப்புச் சட்டத்தின் கூட் டாட்சித் தத்துவமும் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக அரிக்கப்பட்டு, அதனை ஒரேகுடையின் கீழான அமைப் பாக மாற்றுவதற்கான (ரnவையசல ளவயவந ளவசரஉவரசந) வேலை துவங்கிவிட்டது.
1977இலேயே, தோழர் ஜோதிபாசுவை முதல்வராகக் கொண்டு மேற்கு வங் கத்தில் முதல் இடது முன்னணி அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோதே, நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கேற்ப மத்திய- மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மாற்றியமைக்கக்கூடிய விதத்தில் ஒரு 15 அம்சக் கோரிக்கை சாசனத்தை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.
இதனைத் தொடர்ந்து 1983இல் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையி லான தொடர்புகள் குறித்து காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களின் முன் முயற்சிகளின் காரணமாக பல சிறப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. இவற்றில் முதல் சிறப்பு மாநாடு அப்போது ஜம்மு-காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா அவர்களால் நடத்தப்பட்டது. இவ்வாறு மாநாடுகள் நடைபெற்றதன் விளைவாகவே மத்திய-மாநில உறவுகள் மீதான சர்க்காரியா ஆணையம் 1983இல் அமைக்கப்பட்டது. ஆணையம் தன் அறிக்கையை 1988இல் சமர்ப்பித்தது. அது அளித்திட்ட பரிந்துரைகளில் பல மத்திய அரசின் கோப்புகளில் தூசி படிந்து கிடப்பது தொடர்கின்றன. இடது சாரிக் கட்சிகள் வெளியில் இருந்து அளித்த ஆதரவின் துணை கொண்டு ஆட்சியில் நீடித்து வந்த ஐ.மு. கூட்டணி-1 அரசு, இப்பிரச்சனை மீது 2007 ஏப்ரலில் எம்.எம்.புஞ்சி (ஆ.ஆ. ஞரnஉாாi) தலைமையில் ஓர் ஆணை யத்தை அமைத்தது. அது தன் அறிக் கையை 2010இல் சமர்ப்பித்தது. ஆனால் அதன் பரிந்துரைகள் மீதும் எவ்விதமான விவாதமும் இதுவரை நடை பெறவில்லை, உருப்படியான காரியம் எதுவும் அமல்படுத்தப்படவும் இல்லை.
அறிவித்திருக்கும் தேசியப் பயங்கர வாத எதிர்ப்பு மையம் தொடர்பாக எழுந் துள்ள நியாயமான கவலைகளைப் போக்கும் விதத்தில் பிரதமர், இந்த அமைப்பு மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்காது என்று உறுதி அளிக்க முயற் சித்திருக்கிறார். ஏழு மாநில முதலமைச் சர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றில், ‘‘இவ்வாறு அரசாங்கம் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைத்த தன் மூலம், மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயுள்ள அதிகார ஒதுக்கீடுகள் மற்றும் அரசமைப்புச் சட்ட விதிகளைப் பாதிக்கும் எதையும் அரசு செய்யாது’’ என்று எழுதியிருக்கிறார். நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு இடையே ஓர் ஒருங் கிணைப்பை ஏற்படுத்த வேண்டியதன் தேவையை விளக்கி, பிரதமர் மேலும், ‘‘இதன் காரணமாகத்தான் தேசிய தீவிர வாத எதிர்ப்பு மையம் தனியொரு அமைப்பாக உருவாக்கப்படாமல் புல னாய்வு பீரோவின் ஒரு பிரிவாக அமைக்கப்பட்டிருக்கிறது’’ என்றும் கூறியிருக்கிறார்.
பிரதமர் இவ்வாறு இந்த அமைப்பை அமைப்பது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்திலேயே முன்னுக்குப் பின் முரண்படுகிறார். புலனாய்வு பீரோ இந்த வேலையை ஏற்கனவே செய்து கொண் டிருக்கும்போது, பின் எதற்குப் புதிதாக ஓர் அமைப்பு? மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, இதே ஐ.மு.கூட்டணி அரசாங்கம், தேசி யப் புலனாய்வு ஏஜென்சியை அமைத்தது. அந்த அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மேலும் ஒரு அமைப்பை உரு வாக்க வேண்டிய அவசியம் என்ன?
நாடாளுமன்றத்தில் தேசியப் புல னாய்வு ஏஜென்சி அமைப்பது தொடர் பாக விவாதங்கள் நடைபெற்ற சமயத் தில், இடதுசாரிக் கட்சிகள் மாநிலங் களின் உரிமைகள் தொடர்பாக தங்கள் நியாயமான கவலைகளைத் தெரி வித்தன. அதாவது ‘சட்டம் - ஒழுங்கு’, குற்றவியல் புலனாய்வு மற்றும் குற்ற வியல் வழக்குகளில் நீதிவழங்குதல் ஆகிய அனைத்தும் மாநிலங்களின் பட்டி யலில் உள்ள உரிமைகளாகும். இவ்வாறு ஓர் அமைப்பு மத்திய அரசால் அமைக் கப்படும்போது, அது மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதாகாதா என்று தங்கள் கவலைகளைத் தெரி வித்தன. இதற்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர், இந்த அமைப்பு அமைக் கப்பட்டபின் அதன் முதல் ஆறு மாத கால அனுபவங்களின் அடிப்படையில் , இப்பிரச்சனை மீண்டும் நாடாளு மன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடலாம் என்று உறுதி அளித்தார். ஆயினும் இது நடைபெறவே இல்லை.
இந்தப் பின்னணியில்தான் தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைக்கப் படுதல் என்பதும் அதன் உண்மையான குறிக்கோள்கள் குறித்து நியாயமான சந்தேகங்களையும் கவலைகளையும் எழுப்பி இருக்கிறது. தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்திற்கு சோதனைகள் செய்வதற்கும், கைது செய்வதற்கும் அதிகாரம் அளிக்கப்படுதல் என்பது அவற்றை இந்த அமைப்பு துஷ்பிர யோகம் செய்வதற்கு ஏராளமான வாய்ப்பு வசதிகளைச் செய்து தந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள எப்.பி.ஐ. (குக்ஷஐ) உட்பட அனைத்து நவீன ஜனநாயக நாடு களின் அனுபவமும் இதுதான். இந்தியா வில் உள்ள சூழ்நிலையின் பின்னணி யில், அரசமைப்புச் சட்டத்தின் கூட் டாட்சிக் கட்டமைப்பும் மாநிலங்களின் உரிமைகளும் பறிக்கப்பட இது இட்டுச் செல்லக்கூடும். மேலும் இந்தியாவில் இதுவரை புலனாய்வு பீரோ என்பது மத்திய ஆட்சியாளர்களின் எடுபிடி யாகவே இருந்து வந்திருக்கின்றன. எனவேதான் எதிர்க் கட்சிகளின் தலைமையில் இயங்கும் மாநில அர சாங்கங்கள் இவ்வாறு நியாயமான சந் தேகங்களை எழுப்பி இருக்கின்றன.
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைக்கப்படுவது தொடர்பாக அவசர அவசரமாக ஐமுகூ அரசு அறிவித் திருப்பதைப் பார்க்கும்போது, நாட்டில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதைவிட, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடி பணிந்துதான் அவ்வாறு அது செய் திருக்கிறதோ என்று தோன்றுகிறது. அவ் வாறிருப்பின் அது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, மத்திய உள் துறை அமைச்சர் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டார். அப்போது மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘‘அமெரிக்காவில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனங்கள் மற்றும் அமைப் புகள் குறித்து புரிந்துகொள்வதற்காக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருப்ப தாக’’ கூறப்பட்டிருந்தது. அமெரிக்கா வின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு களில் பணியாற்றி வந்த மூத்த அதி காரிகளை அவர் சந்தித்தார். பின்னர் 2010 ஜூலையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ஒரு பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட் டுறவு ஒப்பந்தம் (ஊடிரவேநச கூநசசடிசளைஅ ஊடிடியீநசயவiடிn ஐnவையைவiஎந) ஒன்றில் கையெழுத் திட்டார்கள். இதனைத் தொடர்ந்து 2010 நவம்பரில் புதியதொரு உள்நாட்டு பாது காப்பு பேச்சுவார்த்தை அறிவிக்கப்பட்டது. இப்பேச்சு வார்த்தையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சரும் அமெரிக்க அரசின் உள் நாட்டுப் பாதுகாப்பு செயலாளரும் ( கலந்து கொண் டார்கள்.
இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் வாஜ்பாய் தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் காலத்தில் அமெரிக்க அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட போர்த்தந்திர உடன்படிக்கையின் ஒரு பகுதியேயாகும். இதனை ஐ.மு.கூட்டணி அரசும் மிகவும் தீவிரத்துடன் முன்னெடுத்துச் சென்றது. இதன் காரணமாகத்தான் அமெரிக்க அரசின் பயங்கரவாத எதிர்ப்புக்கான உதவி அமைப்பு நமது நாட்டில் 79 காவல்துறை பயிற்சி வகுப்புகளை நடத்தி, 1500க்கும் மேற்பட்ட இந்திய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்திருக் கிறது. இதனை புதுதில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறது.
தேச விரோத பயங்கரவாத நடவடிக் கைகளை ஒடுக்கிட நாட்டு மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் இந்திய நாடாளுமன்றம் எப் போதும் அரசின் நடவடிக்கைகளுக்கு எவ்விதக் கட்சி வித்தியாசமுமின்றி ஒரே மனிதனாக நின்று உறுதுணையாக இருந்து வந்திருக்கிறது. இதன் கார ணமாகத்தான் தேசியப் புலனாய்வு ஏஜென்சிக்கான சட்டமுன்வடிவும் மற்றும் பல்வேறு சட்டங்களும் ஒருமன தாக நிறைவேற்றப்பட்டன. ஆயினும் இதனை நம் நாட்டின் பாதுகாப்பு அமைப் புகளில் அமெரிக்க அரசின் ஏஜென்சி கள் ஊடுருவ அளித்திட்ட அனுமதியாக அரசு கருதிவிடக் கூடாது. அமெரிக்க அரசின் நிறுவனக் கட்டமைப்பை இந்தி யாவில் அமைத்திட அளிக்கப்பட்ட உரிம மாக இதனை ஐ.மு.கூட்டணி அரசாங் கம் கருதிடக் கூடாது. பயங்கர வாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அமெரிக்காவில் உள்ளது போன்ற கட்டமைப்புகளை இந்தியாவில் கொண்டுவர முயற்சிப்பது என்பது நாட்டிற்கும், நாட்டின் ஜனநாயக மாண்பு களுக்கும் நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் பேரழி வினை உருவாக்கிடும். அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறையில் கைதிகள் அனுபவித்த மனிதாபிமானமற்ற காட்டு மிராண்டித்தனமான அடக்குமுறைக் கொடுமைகளே இதற்கு எடுத்துக்காட்டு களாகும்.
எந்த விதத்தில் பார்த்தாலும், ஐ.மு. கூட்டணி-2 அரசானது தேசியப் பயங் கரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது தொடர்பாக தற்போது செயலற்று உறக்க நிலையில் இருந்திடும் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின் சிறப்பு அமர்வைக் கூட்டி, இது தொடர்பாக விவாதத்தை நடத்த வேண்டும். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் தொடர்பாக நாடாளுமன்றத் திலும் முழுமையான விவாதத்தினை மேற்கொள்ள வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி
Thursday, March 8, 2012
சட்டமன்றத் தேர்தல்கள்: முடிவுகளும் விளைவுகளும்
சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து எண்ணற்ற வகையில் வியாக்கி யானங்கள் செய்யப்பட்டு வந்த போதி லும், அனைவரின் ஆய்வுகளிலும் ஒன்று மட்டும் பொதுவான அம்சமாக முன் வந் திருப்பதைப் பார்க்க முடியும். அதாவது, எளிய மக்கள் தலையில் தொடர்ந்து பொருளாதாரச் சுமைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக, மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக, குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவருக் கும் எதிராக அதிருப்தி அதிகரித்திருப் பது தெரிகிறது.
பஞ்சாப்பில் ஆட்சி புரிந்து வரும் சிரோன்மணி அகாலிதளம் - பாஜக ஆட் சிக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து வந்த கோபத்தைக் காட்டிலும், மத்திய ஆட்சியாளர்கள் மீது அதிகமாக கோபம் இருந்ததால்தான், மக்கள் மீண்டும் சிரோன்மணி அகாலிதளம் - பாஜக ஆட் சியையே தேர்வு செய்திருக்கிறார்கள். இதேபோன்றுதான், உத்தரகாண்ட் நிலை மையும். அங்கே ஒரேயொரு இடத்தை பாஜகவை விட அதிகமாகப் பெற்றிருப் பதன் மூலம் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரசைப் பொறுத்தவரை அனைத்து மாநிலங்களின் நிலைமை களுக்கும் ஒரேயொரு விதிவிலக்கு மணிப்பூர்தான். ஆயினும், இது மற்ற மாநி லங்களில் உள்ள பொதுவான தன்மையை மாற்றி அமைத்திடவில்லை. இதனை அம்மாநில மக்களின் ஸ்தல நிலைமை களுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்குக் கிடைத்துள்ள மகத்தான வெற்றி வாக்காளப் பெருமக்களின் அரசியல் முதிர்ச்சிக்கு சாட்சியமளிக் கிறது. அம்மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சிக்கு எதிராக மிகவும் ஆழமான விதத்தில் வெறுப்பு இருந்து வந் ததை இது மிகவும் தெளிவுபடுத்தி யுள்ளது. சென்ற தேர்தல்களின்போது இதே மக்கள்தான் பகுஜன் சமாஜ் கட் சியை முன்னெப்போதும் இல்லாத அள விற்கு ஆட்சி பீடத்தில் அமர்த்தியவர்கள். பிரதானமாக நான்கு முனைப் போட்டி யில், வாக்காளர்கள் சமாஜ்வாதி கட் சியை எவ்வித ஐயப்பாட்டிற்கும் இட மில்லாத வகையில் மிகவும் தெளிவாக ஆட்சிபீடத்தில் அமர்த்திவிட்டார்கள். இதன்மூலம் மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் அமையலாம், அதன் காரண மாக மத்தியிலும், மாநிலத்திலும் கட்சி களின் கூட்டணியில் மாற்றங்கள் ஏற் படலாம் போன்ற பல்வேறு ஊகங்களுக் கும் மக்கள் விடைகொடுத்துவிட்டார் கள். ஆயினும், உத்தரப்பிரதேச வாக்கா ளர்கள், கடைசியாக, சாதி மற்றும் மத வித்தியாசங்களையெல்லாம் முற்றிலு மாக முறித்துக்கொண்டு, அவற்றையெல் லாம் கடந்து வந்து விட்டார்கள் என்று அளவுக்குமீறிய தன்னம்பிக்கையுடன் முடிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாநில அரசாங்கம் ஸ்திரத் தன்மையுடன் இருக்க வேண்டும் என் பதில் மக்கள் உறுதியுடன் இருப்பது ஐய மற நன்கு வெளிப்பட்டிருக்கிறது. தொங்கு சட்டமன்றம் அமையுமானால், அதனை யொட்டி உருவாகக்கூடிய கட்சிகளின் அணி சேர்க்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில், அவர்களின் வாயை அடைக்கக்கூடிய விதத்தில் மக்கள் தெளிவான விதத்தில் பதிலளித்துவிட்டார்கள்.
கோவா மாநிலத்தில் மக்கள் மத்தி யில் ஆட்சியாளர்களுக்கு எதிராக இருந்த அதிருப்தி உணர்வைப் பயன்படுத்திக் கொண்டு பாஜக ஆதாயம் அடைந்திட்ட போதிலும்கூட, மற்ற மாநிலங்களில், குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் மக்கள் மனதை அதனால் வெல்ல முடிய வில்லை. காரணம், தங்கள் மீது பொரு ளாதாரச் சுமைகளை ஏற்றுவதில் காங் கிரசிலிருந்து பாஜகவை வேறுபடுத்தி அவர்களால் பார்க்க முடியவில்லை. பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்தில் காங் கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கம் கொண்டு வந்த நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கை கள் அனைத்தையும் பாஜக ஆதரித் திருக்கிறது. ஊழலிலும் கூட, காங்கிர சிலிருந்து பாஜக வேறுபட்டதல்ல என் பது நன்கு வெளிப்பட்டுவிட்டது. பல் வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில், குறிப்பாக கர்நாடகாவில், அதன் தலை வர்களும் இடம்பெற்றிருப்பதானது மக் கள் மத்தியில், ஓர் யோக்கியமான கட்சி என்று இருந்த நிலையிலிருந்து அது ஓரங்கட்டப்பட்டு விட்டது. இது தொடர் பாக அதன் யோக்கியதை இன்றைய தினம் வெட்டவெளிச்சமாகிவிட்டது.
ஆயினும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் கொடுக்காகச் செயல்படும் பாஜக பிரதிநிதித்துவப்படுத்தும் வகுப்பு வாதம் பின்னுக்குச் சென்றுவிட்டது என்ற முடிவுக்கு வருவோமானால், மாபெரும் தவறைப் புரிந்தவர்களாவோம். மதவெறி உணர்வை ஊதி விட்டு வாக்கு களைச் சேகரித்திட அக்கட்சி மேற் கொண்ட முயற்சிகள் தற்போது வெற்றி பெறவில்லை. ஆயினும், நவீன இந்தி யாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித் தளங்களைத் தகர்க்கக்கூடிய விதத் திலும், மக்களின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய விதத்திலும் ஆர் எஸ்எஸ்/பாஜக தன் வெறிபிடித்த மத வெறி நிகழ்ச்சிநிரலை மீண்டும் உயிர்ப் பித்திடலாம். எனவே, நாடும், நாட்டு மக்களும் இவ்வாறு இவர்களது மதவெறி நிகழ்ச்சிநிரலை எதிர்கொள்ள எப் போதும் தயாராக இருந்திட வேண்டும் என்பது மட்டுமல்ல, அவ்வாறு மத வெறிக் கிளப்பப்படுமானால், விழிப்புடன் இருந்து அதனை முறியடித்திடவும் தயா ராக இருக்க வேண்டும்.
மீண்டும் ஒருமுறை, அனைத்துக் கருத்துக்கணிப்புகளும், குறிப்பாக வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வருபவர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்புகளும் முழுமையாகப் பொய்த்துப்போய்விட்டன. அந்தக் காலத் தில் கருத்துக் கணிப்புகளைக் கிண்டல் செய்து ஆர்.கே.லெட்சுமணன் ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தார். அக்கார்ட் டூனில் வாக்களித்து விட்டு வெளியே வரும் கணவர் தன் மனைவியிடம் கூறு வதாக அது அமைந்திருக்கும். அதில் அவர், தனக்கு அளித்த வாக்குச் சீட் டைத் தவறான பெட்டியில் போட்டு விட் டதாகவும், ஆயினும் வெளியே வந்தபின் கருத்துக்கணிப்பு கோரியவரிடம் வாக்க ளித்ததை மாற்றிக்கூறி, அத்தவறைத் தான் சரி செய்துவிட்டதாகவும் கூறுவார். ‘காசுக்கு செய்தி’ (‘paid news') வெளி யிடும் இழிவானப் போக்கு மேலோங்கியுள்ள இன்றைய காலகட்டத்தில், நாட்டின் ஜனநாயக நலன்களில் அக்கறை கொண்டு, இது தொடர்பாக புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
தேர்தல் முடிவுகளிலிருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் ஏதேனும் படிப்பி னையைப் பெற்றுக் கொண்டிருக்கிறதா என்பதே நம்முன் வந்துள்ள பிரதான கேள்வி. துரதிர்ஷ்டவசமாக, அவ்வாறு எதையும் அக்கட்சி பெறவில்லை என்றே தோன்றுகிறது. அவ்வாறு அது பாடம் கற்றுக்கொண்டிருக்குமானால், அது வரவிருக்கும் பட்ஜெட்டில் நிச்சய மாக பிரதிபலித்தாக வேண்டும். கார்ப் பரேட் முதலாளிகள் மேலும் கொள்ளை லாபம் அடையக்கூடிய விதத்தில் அவர் களுக்கு வரிச்சலுகைகள் அளிப்பதற் குப் பதிலாக, அத்தொகைகள் நம் அவ சியத் தேவைகளான கட்டமைப்பு வசதி களை உருவாக்கக்கூடிய விதத்தில் பெருமளவில் பொது முதலீடுகளில் செல வழித்தோமானால், அதன் மூலமாக பெரு மளவில் வேலைவாய்ப்புகளை அதிகப் படுத்திட முடியும், மக்களின் வாங்கும் சக்தியையும் அதிகரித்திட முடியும். இத னைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் உள்நாட்டுத் தேவையும் அதிகரித்து, நிலையான வளர்ச்சிப் பாதையை உரு வாக்கிட முடியும். இதனைச் செய்யா விடில், தேர்தல்களின்போது மக்கள், காங்கிரஸ் கட்சியைக் கழட்டிவிடுவது என்பது தொடரும்.
மத்தியில் ஆட்சியில் உள்ள ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கத்தை தற்சமயம் சமாஜ்வாதி கட்சியும் வெளியிலிருந்து ஆதரித்து வருகிறது. பகுஜன் சமாஜ் கட் சியும் அதேபோன்று வெளியிலிருந்து ஆதரித்து வருகிறது. இதில் மாற்றம் வராதவரை ஐ.மு.கூட்டணி-2 அரசாங் கத்தின் ஸ்திரத்தன்மைக்கு உடனடி அச் சுறுத்தல் எதுவும் கிடையாது. இன்றைய சூழ்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி, மத்திய ஆட்சியாளர்களைப் பகைத் துக் கொள்ளாது என்றே தெரிகிறது. சமாஜ் வாதி கட்சியும் கூட மத்திய அரசாங்கத் துடன் நல்லுறவு வைத்துக் கொள்வதே உசிதம் என்று நினைக்கக் கூடும்.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளிலிருந்து ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமும், காங்கிரஸ் கட்சியும் சரியான பாடங்களைக் கற்றுக் கொண்டு, தங்கள் மக்கள் விரோத நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைத்திட முன் வந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு அது தன்னை மாற்றிக்கொள்ளாது, தொடர்ந்து மக்கள் விரோதப் பாதையிலேயே செல்லு மானால், ஆட்சியாளர்களின் கேடுபயக் கும் பொருளாதாரத் திசைவழியை மாற்றி யமைத்திடக்கூடிய வகையில், மக்கள் போராட்டங்களைப் பெருமளவில் முன் னெடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி
Subscribe to:
Posts (Atom)