Friday, December 11, 2009

இடிக்கப்பட்டது பாபர் மசூதி மட்டுமல்ல,நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் அடித்தளமுமாகும்-மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

பாபர் மசூதி மட்டும் இடிக்கப்படவில்லை, நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் அடித்தளமும் இடிக்கப்பட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில் லிபரான் ஆணைய அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

‘‘இன்று நாம் பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமாக லிபரான் ஆணையம் என்ன கூறியிருக்கிறது என்பது குறித்தே இப்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோம். பாபர் மசூதி எப்படி இடிக்கப்பட்டது? அது இடிக்கப்படுவதற்கான சூழ்நிலைகள் என்ன? லிபரான் ஆணையம் தன் அறிக்கையில் இடையில் என்னவெல்லாம் கூறியிருந்தாலும், முடிவாக ‘‘பாபர் மசூதியானது கரசேவகர்களால் மேற்கொள்ளப்பட்டது, இதனை இடிப்பதற்கு இவர்கள் எண்ணற்றவர்களைப் பயன்படுத்தினார்கள், மசூதியின் மாடங்களுக்குள் நுழைந்தார்கள், சிலைகளையும் அங்கிருந்த ரொக்கப் பணத்தையும் அள்ளிச் சென்றார்கள், பின்னர் அங்கே திடீர் கோவிலை (அயமந ளாகைவ வநஅயீடந) அமைத்தார்கள். இந்த இடிப்பு நிகழ்வானது மிகவும் நன்கு திட்டமிடப்பட்டு, முன்தயாரிப்பு வேலைகளுடன் மேற்கொள்ளப்பட்டது.’’ என்று கண்டிருக்கிறது. ஆணையம் இவ்வாறுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. தன்னிடமிருந்து சில சாட்சியங்களின் அடிப்படையில் ஆணையம் இவ்வாறு முடிவுக்கு வந்திருக்கிறது.
ஆணையத்தின் மையக் கருத்து, மசூதி எப்படி தரைமட்டமாக்கப்பட்டது, எப்படி இது செயல்படுத்தப்பட்டது, இதற்கு யார் பொறுப்பாளிகள் என்பவைகளேயாகும். அதனால்தான், 17 ஆண்டுகளான பிறகும் இது வந்திருக்கிறது. தாமதம் குறித்து நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆம், மேற்படி ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கியதற்கு இங்குள்ள ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு. அவர்களால் 14 முறையும் மற்றவர்களால் 32 முறையும் கொடுக்கப்பட்டது. உண்மையில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் கூட காலநீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது இதற்கு யார் காரணம் என்று ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. நாட்டின் நலன், எதிர்காலத்தின் நலனைக் கணக்கில் கொண்டு இந்த ஆணையத்தின் அறிக்கை முன்னமேயே வந்திருக்க வேண்டும்.

இரு முரண்பட்ட அம்சங்களின் அடிப்படையில் இதன்மீதான விவாதத்தைத் தொடங்க விரும்புகிறேன். முதலாவது அம்சம், அறிக்கையானது பாபர் மசூதி மிகவும் துல்லியமாக முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டு இடிக்கப்பட்டுள்ளது என்பதை சட்டபூர்வமாக உறுதி செய்துள்ளது. எனக்கு நன்றாக நினைவுக்கு வருகிறது. இது பதிவுருக்களால் முழுமையாக அப்போதே நன்கு மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. தோழர் ஜோதிபாசு ஆணையத்தின் முன் வாக்குமூலம் அளிக்கையில் இது தொடர்பாக ஒரு குறுந்தகட்டையும் அளித்திருக்கிறார். அப்போது உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த கல்யாண்சிங் அந்த சமயத்தில் கொல்கத்தா சென்றபோது, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ‘‘பாபர் மசூதியை இடிக்கும் பொறுப்பை ஒப்பந்தக்காரர்களிடம் கொடுத்திருந்தால், அவர்கள் அதனைச் செய்து முடிக்க சில நாட்கள் ஆகியிருக்கும். ஆனால் எங்களுடைய கரசேவகர்கள்ஐந்தே மணி நேரத்தில் இதனைச் செய்து முடித்து விட்டார்கள். இது உலக வரலாற்றில் மாபெரும் சாதனையாகும்.’’ என்று பீற்றிக்கொண்டார். இவ்வாறு அனைத்தும் அவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டவைகள்தான். நம் அனைவருக்கும் இது தெரியும். ஆயினும் அதனைச் சட்டபூர்வமாகச் சொல்வதற்கு இத்தனை ஆண்டு காலம் ஆகியிருக்கிறது.

‘‘தாமதமாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும்’’ என்று சொல்லப்படுவதுண்டு. ஆயினும், இப்போதாவது நீதி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நம் அமைப்பின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை தகர்க்கப்படாதிருக்க வேண்டுமானால் நீதி இனி மேலாவது காலங்கடத்தாது வழங்கப்பட வேண்டும்.

இதுபோன்ற ஆணையங்கள் எண்ணற்றவைகளை கடந்த காலங்களிலும் நாம் கண்டிருக்கிறோம். அவைகள் பரிந்துரைத்த எதுவும் அமல்படுத்தப்பட்டதில்லை. ஏன், அயோத்தியா நிகழ்வு குறித்து 1997இலேயே குற்ற அறிக்கை ஒன்று லக்னோ கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இப்போது ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நபர்கள் அத்தனைபேர் மீதும் அப்போதே அமர்வு நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆயினும் 1997க்குப்பின் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து, வழக்கும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. எனவே, தாமதம்குறித்துப் பேசுவதில் அர்த்தமே இல்லை. இதனை நான் கூறுகிறேன் என்றால், நம் அமைப்பின் மீதான நம்பகத்தன்மையே நாளுக்கு நாள் வீழ்ந்து கொண்ருக்கிறது.

ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்றீர்கள். அதன்மீது எதுவும் நடக்கவில்லை. இதுபோல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலகங்கள்குறித்து ஒன்பது ஆணையங்களின் அறிக்கைகள் அரசிடம் உள்ளன . அவற்றின் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பார்த்தோமானால் நீதியரசர் ஜகன்மோகன் ரெட்டி ஆணையம், நீதியரசர் டி.பி. மதன் ஆணையம், நீதியரசர் விதைதால் ஆணையம், நீதியரசர் ஜிதேந்திர நாராயண் ஆணையம், கன்னியாகுமரி கலகம் தொடர்பாக நடைபெற்ற நீதியரசர் வேணுகோபால் ஆணையம் - இப்படி எண்ணற்ற ஆணையங்கள். ஆயினும் எந்த ஆணையத்தின் பரிந்துரைகளும் அமல்படுத்தப்படவில்லை.

இப்போது நாம் தெரிந்துகொள்ள விரும்புவது என்னவெனில், இதன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதுதான்.

அரசாங்கம் இதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை (ஹகூசு - ஹஉவiடிn கூயமநn சுநயீடிசவ) தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் அது முற்றிலும் திருப்தியற்ற நிலையிலேயே இருக்கிறது. இதில் நீதி எப்படி வழங்கப்படவிருக்கிறது என்பது குறித்து எதுவுமே இல்லை.

நாட்டின் பல பகுதிகளில் பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து இதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆயினும், இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் முடிவு எதுவும் எடுக்கும்வரை, எதுவும் செய்திட முடியாது. உண்மையில் அரசாங்கம் இதில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், இவ்வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக்கி, உச்ச நீதி மன்றத்திற்குக் கொண்டுவந்து, விரைவில் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இல்லாவிடில் இன்னும் பல ஆண்டுகளுக்கு இவை இழுத்தடிக்கப்படலாம்.

முக்கியமான அம்சம் என்னவெனில், நம் அமைப்பின் மீது நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டியது முக்கியம். இதனையே நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இடிக்கப்பட்டது வெறும் பாபர் மசூதியோ அல்லது ஒரு கட்டிடமோ அல்ல, மாறாக நவீன இந்தியாவின் தூண்கள் மற்றும் அடித்தளங்களே இடிக்கப்படுவதற்கான முயற்சி என்றே நான் கருதுகிறேன். இதனை இடிப்பதற்கு முன் இவ்வாறு இடிக்கப்படுவதற்கு ஆதரவாக நாடு முழுதும் அரசியல் பிரச்சாரமே மேற் கொள்ளப்பட்டது. நாடு முழுதும் மதவெறித் தீ விசிறிவிடப்பட்டது. இறுதியாக பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

அவற்றை லிபரான் ஆணையம் பட்டியலிட்டிருக்கிறது. அப்போது பிரதமராக இருந்தவரே இதனை ஒப்புக்கொண்டு, கூறியதாவது: ‘‘ 1989இல் மட்டும் மதவெறி நிகழ்வுகளால் 505 பேர் கொல்லப்பட்டனர், 768 பேர் காயமடைந்தனர். 1990இல் அத்வானி ரத யாத்திரை சென்றபோது, 312 மதவெறி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 483 பேர் கொல்லப்பட்டனர், 2000 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர், 210 மசூதிகளும் 35 கோவில்களும் சேதமடைந்தன அல்லது தரைமட்டமாக்கப்பட்டன.’’
இவற்றை அடுத்துத்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன்பின்னரும் நாடு முழுதும் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

நவீன இந்தியாவின் அடித்தளமே இடிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான், இவற்றி லிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சமாகும். நாட்டின் மதச்சார்பற்ற அடித்தளத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலை அப்படியே தொடர நாம் அனுமதித்திடக் கூடாது.
மசூதியை இடித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு ஏன் மசூதி இடிக்கப்பட்டது. வாக்கு வங்கி அரசியலின் மிகக் கேவலமான வெளிப்பாடே இது. இதற்கு ஆணையத்தின் அறிக்கையோ அல்லது எந்தவிதச் சான்றும் தேவையில்லை.

நம் நாட்டில் மூன்று விதமான அரசியல் கண்ணோட்டங்கள் 1920களில் தொடங்கின. ஆர்எஸ்எஸ் இயக்கம் அப்போதுதான் தொடங்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்போதுதான் துவங்கப்பட்டன. மோதிலால் நேரு குழுவின் பரிந்துரைகள், காங்கிரஸ் என்னும் அமைப்பை வரையறுத்தன. பின்ன அது 1928இல் அமைக்கப்பட்டது. அதன் பிறகு நவீன இந்தியா எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதில் இம்மூன்று விதமான அரசியல் முகாம்களுக்கும் இடையே போராட்டங்கள் நடைபெற்று வந்தன. நாம் சுதந்திரம் பெற்ற சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பு என்கிற கண்ணோட்டம் இருந்தது. மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தின் மீது நவீன இந்தியா கட்டப்பட்டது.

அதேபோன்று இடதுசாரிகள் கண்ணோட்டம். இதன் அடிப்படையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். வெறுமனே மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை நிறுவினால் மட்டும் போதாது, நாட்டிற்குக் கிடைத்துள்ள அரசியல் சுதந்திரத்தை, மக்களின் பொருளாதார சுதந்திரம் கிடைப்பதற்கான முறையில் மாற்றவில்லை என்றால், இப்போது நாம் பெற்றிருக்கும் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவைக் கூட தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று நாங்கள் கூறுகிறோம். எனவே, மதச்சார்பற்ற ஜனநாயகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், இதனை மாற்றியமைத்தாக வேண்டும் என்று கூறி, அத்தகையதோர் சமூக மாற்றத்திற்காகவும், மக்களுக்கு உண்மையான பொருளாதார சுதந்திரம் கிடைத்திடவும் நாங்கள் போராடி வருகிறோம்.

ஆனால், இவ்விரண்டுக்கும் பகையான ஒரு கண்ணோட்டம் மதவெறி அமைப்புகளால் செயல்படுத்தப்பட்டன. அது, சுதந்திர இந்தியாவின் எதிர்காலம் மதப் பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிற கண்ணோட்டமாகும்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மக்களவையில் கூறியதுபோல் இரு விதமான கண்ணோட்டங்களுக்கிடையே போராட்டம் அல்ல, இவ்வாறு மூன்று விதமான கண்ணோட்டங்களுக்கிடையே போராட்டம் நடந்து வருகிறது.
முஸ்லீம் லீக் தனி இஸ்லாம் நாடு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது, ஆர்எஸ்எஸ் இந்து ராஷ்ட்ரம் என்று கூறி வந்தது.

முகமது அலி ஜின்னா, ‘இரு தேசக் கொள்கையை’ அறிவித்தார். சாவர்கரும் இந்து மகாசபையில் தலைமையுரையாற்றுகையில் இதனை ஒப்புக்கொண்டு பேசியிருக்கிறார். ‘‘இந்தியா ஒரே கடவுளின் கீழ் இருக்க முடியாது. மாறாக இங்கு இந்துக்கள் ஒரு தேசமாகவும், முஸ்லீம்கள் ஒரு தேசமாகவும் இருக்கிறார்கள்.’’ என்றார். 1943இல் மீண்டும் சாவர்கர், ‘‘எனக்கு ஜின்னாவின் ‘இரு தேசக் கொள்கை’யுடன் எந்த சண்டையும் கிடையாது. இந்துக்களாகிய நமக்கு ஒரு தேசம் உண்டு. இது வரலாற்று உண்மை. முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் உண்டு,’’ என்றார்.

இத்தகைய மதவெறிக் கிருமி நம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி இன்றளவும் அது நம் வாழ்வில் பாதிப்புகளைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மூன்று கண்ணோட்டங்களுக்கு இடையே போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாட்டின் வேற்றுமைப் பண்புகளுக் கிடையே ஒற்றுமையுடன் வாழும் மக்கள் மத்தியில் மதவெறியைக் கிளப்பி ஆதாயம் அடைய நினைக்கும் அரசியல் சக்திகளைத் தனிமைப்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறோம்.எனவேதான் பாபர் மசூதி இடிப்பு என்பது பெறும் ஒரு கட்டிடத்தை - ஒரு மசூதியை- இடித்த செயல் அல்ல, மாறாக ‘நவீன இந்தியா’வின் அடித்தளத்தையை இடித்த ஒரு செயலாகும் என்று நான் கூறவிரும்புகிறேன்.
எனவேதான் பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமாகவும் அதனையொட்டி எழுந்துள்ள வழக்குகளிலும் நீதி விரைவில் வழங்கப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்,

Tuesday, December 8, 2009

மதவெறி சக்திகளுடன் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டதால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது மக்களவையில் பாசுதேவ் ஆச்சார்யா பேச்சு



புதுதில்லி, டிச. 8-

மதவெறி சக்திகளுடன் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டதால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற நடத்தை விதி 193ஆவது பிரிவின்கீழ் லிபரான் ஆணையத்தின் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாசுதேவ் ஆச்சார்யா கூறியதாவது:

‘‘பாபர் மசூதி இடிக்கப்பட்டது சம்பந்தமாக லிபரான் ஆணையத்தின் அறிக்கை மீது அவையில் கடந்த இரு நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது. 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுதும் ஆயிரக்கணக்கான மககள் கொல்லப்பட்ட சம்பவங்களையும், வன்முறை வெறியாட்டங்கள் தலைவிரித்தாடியதையும் பார்த்தோம். டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதானது சங் பரிவாரக்கூட்டத்தால் மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்ட ஒன்று.

பாபர் மசூதி இருந்த இடத்தில் பாபர் மசூதி - ராமஜன்ம பூமி தாவா எப்போது ஏற்பட்டது? இந்தத் தாவா உண்மையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த பிரச்சனை. அது எப்படி தேசியப் பிரச்சனையாக உருவெடுத்தது? 1949 டிசம்பர் 23 அன்று பாபர் மசூதி இருக்கும் இடத்தில் கள்ளத்தனமாக ராமர் சிலை ஒன்று புதைக்கப்பட்டது. இது தொடர்பாக பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்தச் செயலைக் கண்டித்தும், இதனை ஏற்க முடியாது என்று கூறியும் உத்தரப்பிரதேச முதலமைச்சருக்கு தந்தி அனுப்பினார். இதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலும் கள்ளத்தனமாக ராமர் சிலையை அங்கு வைத்த செய்கையை ஏற்கவில்லை.

பாபர் மசூதி - ராமஜன்ம பூமி தாவா ஓர் உள்ளூர் பிரச்சனை. ஆனால் இது ஏன் தேசிய பிரச்சனையாக உருவெடுத்தது? 1986இல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, இப்பிரச்சனை தொடர்பாக ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் நாங்கள் எங்கள் கட்சியின் சார்பில் பாபர் மசூதி இருக்கும் இடம் திறக்கப்படக் கூடாது என்று கூறினோம்.
அந்த சமயத்தில் பாஜகவின் சார்பில் நாடாளுமன்றத்தில் இருவர்தான் உறுப்பினர்களாக இருந்தார்கள். ஒருவர் குஜராத்திலிருந்தும் மற்றொருவர் ஆந்திராவிலிருந்தும் உறுப்பினர்களாகத் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்கள் இந்த உள்ளூர் பிரச்சனையை நாடு தழுவிய அளவில் ஊதிப் பெரிதாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முயற்சித்தார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். இரண்டு உறுப்பினர்களாக இருந்த இந்த அவையில் அவர்களது எண்ணிக்கை 88ஆக உயர்ந்தது.
வி.பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி உருவாகி ஆட்சியை அமைத்தது. இடதுசாரிகளாகிய நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம். பாஜக தேசிய முன்னணியில் அங்கம் வகிக்க விருப்பப்பட்டது. ஆயினும் நாங்கள் கடுமையாக ஆட்சேபித்ததால், அதுவும் வெளியிலிருந்து ஆதரவு அளித்தது.,
அதன்பின்னர் பாஜக பாபர் மசூதி - ராமஜன்ம பூமி பிரச்சனையை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்வதற்காக அத்வானி தலைமையில் ரத யாத்திரையை நடத்தியது. ரத யாத்திரை சென்ற இடமெல்லாம் ரத்தக்களறி. மதக் கலவரங்கள், நான் சார்ந்துள்ள புருலியா மாவட்டம் மதநல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்கும் மாவட்டமாகும். அங்கு அத்வானியின் ரதயாத்திரை வந்த சமயத்தில் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன. 14 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அது பீகார் சென்றபோது, அங்கு முதல்வராக இருந்த லல்லுபிரசாத் யாதவ் அதனை அனுமதிக்கவில்லை. அத்வானியையும் கைது செய்தார். நாடு முழுதும் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன.

உத்தரப்பிரதேசத்தில் அப்போது முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்தார். அந்த சமயத்தில் பாபர் மசூதியை இடிக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முலாயம் சிங் யாதவ் உறுதியான நடவடிக்கை எடுத்து அதனைத் தடுத்துநிறுத்தினார். பாபர் மசூதி அப்போது பாதுகாக்கப்பட்டது. பாபர் மசூதி மட்டுமல்ல, நாடே பாதுகாக்கப்பட்டது.
இதனையடுத்து, மத்தியில் வி.பி. சிங் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொள்ளத் தீர்மானித்தது. அந்த சமயத்தில் காங்கிரசும் பாஜகவும் இணைந்து நின்று வி.பி. சிங் அரசைப் பதவி இழக்கச் செய்தன. அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியானது மதவெறி சக்திகளுடன் சமரசம் செய்து கொண்டது. வி.பி. சிங் அரசு கவிழ்க்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியானது இந்துமத அடிப்படைவாதிகளுடன் மட்டுமல்ல, முஸ்லீம் மத அடிப்படைவாதிகளுடனும் சமரசம் செய்து கொண்டது. இவ்வாறு சமரசப் போக்கை காங்கிரஸ் பின்பற்றாமலிருந்திருந்தால் பாபர் மசூதி காப்பாற்றப்பட்டிருக்கும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபின் உத்தரப்பிரதேசம் உட்பட பாஜக ஆட்சியிலிருந்த நான்கு மாநிலங்களையும் அரசியலமைப்புச் சட்டம் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி கலைத்திட மத்திய அரசு முன்வந்தது. நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தினைப் பயன்படுத்துவதை எப்போதும் ஆதரிப்பதில்லை. ஆயினும் முதன்முறையாக பாஜக ஆட்சியிலிருந்த இந்த நான்கு மாநிலங்களையும் கலைத்திட ஆதரவு அளித்தோம். ஏனெனில் இந்த நான்கு மாநில அரசுகளும் பாபர் மசூதி இடிப்புக்கு அனைத்து விதங்களிலும் உதவிகள் செய்திருந்தன. கர சேவகர்களை அனுப்பி வைத்திருந்தன. வன்முறை வெறியாட்டங்கள் நடத்திட அனுமதி அளித்திருந்தன. நாட்டின் மதச்சார்பற்ற மாண்பினை நசுக்கிட அனைத்து விதங்களிலும் உதவிகள் செய்து வந்தன.

பாபர் மசூதி இடிக்கப்படும் சமயத்தில் பிரதமர் நரசிம்மராவின் பங்கு எவ்வாறிருந்தது? அவர் அந்த சம்பவம் நடந்து முடியும் வரை தூங்கிக் கொண்டிருந்தார். அவர் தூக்கத்திலிருந்து திடீரென்று விழிக்கும் சமயத்தில், பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டிருந்தது.
பாபர் மசூதி இடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றிருந்த தோழர் ஹர்கிசன்சிங் சுர்ஜித், பிரதமர் நரசிம்மராவுக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். பாபர் மசூதியை இடித்திட சங்பரிவாரக் கூட்டம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். எப்படியாவது மசூதியைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஜோதிபாசுவும் இதுபோல் நரசிம்மராவைக் கேட்டுக் கொண்டார்.
மத்திய உள்துறை செயலாளரும் இதனை உறுதி செய்திருந்தார். பாபர் மசூதியைக் காக்க வேண்டுமானால், அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கருதியிருந்தது. இது தொடர்பாக நவம்பர் 20 அன்று அரசின் குறிப்பு கூட தயாராகிவிட்டது. ஆனாலும் உயர்மட்டத்திலிருந்த தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு நரசிம்மராவுக்கம் சாதுக்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை.

நவம்பர் 23 அன்று புதுடில்லியில் தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளவில்லை. கலந்த கொள்ளாத மற்றொரு கட்சி அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கூட்டத்தில் ஹர்கிசன் சிங் சுர்ஜித் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அ ந்தத் தீர்மானம் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘பாபர் மசூதியைப் பாதுகாக்க எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்திட அத்தீர்மானம் பிரதமருக்கு முழு அதிகாரம் அளித்திருந்தது.’ ஆயினும் நரசிம்மராவ் எந்த நடவடிக்கையும் எடுத்திடவில்லை.

இது குறித்து லிபரான் ஆணையம் ஏன் மவுனம் சாதிக்கிறது? பிரதமர் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தாரானால் பாபர் மசூதி காப்பாற்றப்பட்டிருக்கும். நாட்டின் மதச்சார்பற்ற மாண்பு இடிக்கப்பட்டிருக்காது.
நேற்ற அவையில் பேசிய பாஜக உறுப்பினர் ராஜ்நாத் சிங் சங் பரிவாரத்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்திப் பேசினார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுதும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இவை தொடர்பாக நாடு முழுதும் பல வழக்குகள் பல நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி, விரைந்து விசாரணை மேற்கொண்டு, கயவர்கள் தண்டிக்கப்பட, உரிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இனியும் அவர்களைச் சுதந்திரமாக உலவ அரசு அனுமதிக்கக்கூடாது. அதன்மூலம் நாட்டின் மதச்சார்பற்ற மாண்பினை வலுப்படுத்திட முன்வர வேண்டும்.

இவ்வாறு பாசுதேவ் ஆச்சார்யா கூறினார்.

(சவீரமணி)

Thursday, December 3, 2009

மேற்கு வங்கத்திற்கு மத்தியக்குழு



மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமைகள் தொடர்பாக மேற்கு வங்க அரசின் அதிகாரிகளுடன் விவாதங்கள் மேற் கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளை மத்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தினை இது முழுமையாக மீறும் செயல் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனைக் கடுமையான முறையில் எதிர்த்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாநில அரசின் கீழ் வருகின்ற, ‘‘மாநிலப் பட்டியலின்’’ கீழ் வரும் பிரச்சனைகள் குறித்து மத்திய அரசின் தலையீடு எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்தின் கலந்தாலோசனை மற்றும் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது.

மத்தியக் குழு மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதை, திரிணாமுல் காங்கிரஸ், ‘மேற்கு வங்க மாநில அரசை அரசியலமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் டிஸ்மிஸ் செய்து அங்கே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான முதல் நடவடிக்கை இது’ என்கிற முறையில் வியாக்கியானம் செய்துகொண்டிருக்கிறது. ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் விரைவில் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் திரும்பத் திரும்ப வெளிப்படையாகவே கோரி வருகிறது. உண்மையில், இதனை எய்தும் விதத்திலேயே அதன் அனைத்து நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகளைப் பயன்படுத்திக்கொண்டு, வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் தொடர்ந்து மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்திடவும் அது முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இதனை சாக்காக வைத்துக்கொண்டுதான் மத்திய அரசின் தலையீட்டை அது கோரிக்கொண்டிருக்கிறது. இவ்வாறான அவர்களது கீழ்த்தரமான சூழ்ச்சியின் காரணமாகத்தான் மேற்கு வங்கத்தில் மக்கள் மீது இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவிற்கு தாக்குதல்களை அவர்கள் தொடுத்துள்ளார்கள், நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் - மாவோயிஸ்ட்டுகள் இடையேயுள்ள தொடர்பு, இவர்களால் மார்க்சிஸ்ட் ஊழியர்கள் மற்றும் மக்கள் மீது 2008 நவம்பரில் இவர்கள் தொடுத்த தாக்குதல்கள், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைக் கொல்ல இவர்கள் மேற்கொண்ட முயற்சி தனியே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் பின்னணியில், உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார். மேற்கு வங்கத்திற்கு உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கக்கூடிய விதத்தில் அந்த அறிக்கை இருந்தது. மத்திய அரசாங்கத்தால் நான்கு விஷயங்கள் அதில் தெள்ளத்தெளிவாக்கப் பட்டுவிட்டன: (1) அதிகாரிகள் குழு அங்கு செல்வது மோதல் போக்குடன் அல்ல, (2) அவர்கள் மாநில அரசின் அதிகாரிகளுடன் மட்டும்தான் விவாதங்களை மேற்கொள்வார்கள். (3) மாநில அரசாங்கம் கேட்டுக்கொண்டால் அல்லது வசதிசெய்து கொடுத்தால் மட்டுமே அவர்கள் மோதல் நடைபெறும் மாவட்டங்கள் அல்லது பகுதிகளுக்குச் செல்வார்கள், (4) அவர்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து மனுக்களைப் பெறலாம். ஆனால் அவர்களுடன் அதிகாரிகள் எவ்விதப் பேச்சுவார்த்தையும் மேற்கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அரசின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையானது, மத்தியக் குழுவின் விஜயம், மாநில அரசுக்கு உதவத் தானே யொழிய, திரிணாமுல் காங்கிரஸ் சொல்வதுபோல் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை மதிப்பிடுவதற்காக அல்ல. தற்சமயம் மத்திய - மாநிலப் பாதுகாப்புப் படையினர் இணைந்து மிட்னாபூர் மாவட்டத்தில் லால்கார் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாவோயிஸ்ட் வன்முறைக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன. அப்பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டு, மாநில அரசின் நீதி நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கு அவை முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

நாம் இப்பகுதியில் ஏற்கனவே பல முறை சொல்லியிருப்பதுபோல, காங்கிரஸ் கட்சியானது தன்னுடைய கூட்டணியில் திரிணாமுல் காங்கிரசை ஓர் அங்கமாக இணைத்துக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல. ஏனெனில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பலமுறை வெளிப்படையாகவே, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, மாவோயிஸ்ட் வன்முறை என்று பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், திரிணாமுல் காங்கிரசோ நேரடியாகவும், வெளிப்படையாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விடுகின்ற, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கின்ற, அராஜகத்தை உருவாக்குகின்ற, எண்ணற்ற அப்பாவிகளின் உயிர்களைக் கொன்று குவிக்கின்ற மாவோயிஸ்ட்டுகளுக்கு உடந்தை யாக இருந்து வருகிறது. இத்தகைய மோசமான முரண்பாடுகளுடன் இருக்கின்ற ஒரு கட்சியுடன் எப்படிக் கூட்டு வைத்துக்கொண்டு, தங்கள் அமைச்சரவையில் நீடிக்க அனுமதிக்கிறோம் என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும்.

கொலைபாதகத் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிகளையும் வங்கத்தில் பலவீனப்படுத்த முயற்சிப்பதே தங்கள் அரசியல் குறிக்கோள் என்று கருதுவார்களானால், அவர்கள் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள வில்லை என்றே நாம் கூற முடியும். மார்க்சிஸ்ட்டுகளைத் தாக்க இடது அதிதீவிரவாதிகளைப் பயன்படுத்திக்கொள்வது என்பது மேற்கு வங்கத்திற்கு புதிதல்ல. 1972க்கும் 1977க்கும் இடையே ஓர் ஐந்தாண்டு காலம், இதுபோன்றதோர் அரசியல் சேர்மானத்தால், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஓர் அரைப் பாசிச அராஜகமே கட்டவிழ்த்துவிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி அதனை எதிர்த்து முறியடித்தது மட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து கடந்த முப்பதாண்டு காலமாக அங்கே எவரும் வெல்லமுடியாத அளவிற்கு,தேர்தல்களில் வெற்றிபெற்று அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உருக்கு போன்று உருவாக்கப்பட்டுள்ள இடது முன்னணியை உடைக்க முடியாததாலும், மக்கள் ஏற்கக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கை எதையும் முன்வைக்க முடியாததாலும், திரிணாமுல் காங்கிரசானாது, மாவோயிஸ்ட்டு களிலிருந்து சில முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகள் உட்பட அனைத்துப் பிற்போக்கு சக்திகளுடனும் சேர்ந்துகொண்டு, வன்முறை மூலமாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. திரிணாமுல் காங்கிரசின் இத்தகைய புனிதமற்ற கூட்டணிதான் மேற்கு வங்கத்தில் தற்சமயம் நடைபெற்று வரும் அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாகும். இத்தகைய ஜனநாயக விரோத கும்பல் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், மேற்கு வங்க மக்களுக்கு எதிராகவும் அவை மேற்கொண்டுள்ள வன்முறைத் தாக்குதல்கள் அரசியல்ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியம்.

(தமிழில்: ச.வீரமணி)

மாவோயிஸ்ட்டுகளுக்குத் துணைபோகிறவர்களைத் தனிமைப்படுத்திடுவோம்-சீத்தாராம் யெச்சூரி




புதுதில்லி டிச. 3-
மாவோயிஸ்ட்டுகளுக்குத் துணை போகிறவர்களைத் தனிமைப்படுத்திடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர்நடைபெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்னும் தலைப்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

‘‘பயங்கரவாதம் தொடர்பாக, ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற சமயத்தில், ரவீந்திரநாத் தாகூர், பிரிட்டிஷார் தனக்கு அளித்த கவுரவப் பட்டத்தைத் திருப்பி அளித்து, கூறிய சொற்றொடரே என் நினைவுக்கு வருகிறது.

இப்போது நடைபெறும் பயங்ரவாத அச்சுறுத்தல்களுக்கும் எதிராக அதுவே மிகச் சரியான மிக வலுவான வெளிப்பாடு என்று கருதுகிறேன். தாகூர் சொன்னார்: ‘‘எனக்கு இடியோசை போன்ற குரலைக் கொடுங்கள், இத்தகைய தன் இனத்தையே தின்னும் இத்தகைய அரக்கர்களுக்கு எதிராக என் கருத்தை வீசியெறிகிறேன். இவர்களது கொலைபாதக நடவடிக்கைகள் தாயையும் விட்டுவைக்காது, குழந்தையையும் விட்டுவைக்காது.’’ இவ்வாறு பயங்கரவாத அச்சுறுத்தல் என்பது தேசவிரோத, மனிதகுல விரோத நடவடிக்கைகளாகும். இது தாயையும் விட்டு வைக்காது, குழந்தையையும் விட்டுவைக்காது. இதுபோன்ற செயல்களை நானோ என் கட்சியோ ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. எனவே, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்தியாவில் பயங்கரவாதம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட பிரிவிற்குள்ளும் வகைப்படுத்த முடியாது. அதேபோல் இதனை எந்த ஒரு எல்லைக்குள்ளும் அல்லது எந்த ஒரு மத வரையறுக்குள்ளும் முடக்கி விடவும் முடியாது.

நாம் நம்முடைய நாட்டில் மகாத்மா காந்தியை ஒரு மதவெறியனின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலி கொடுத்தோம்; நாம் நம் பிரதமர் ஒருவரை சீக்கிய வெறியனின் குண்டுகளுக்கு இரையாக்கியுள்ளோம்; தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த நம் பிரதமர் ஒருவரை எல்டிடிஇ-இனரின் மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பலி கொடுத்தோம். இப்போது ஒவ்வொரு நாளும் எண்ணற்றோரை இழந்து கொண்டிருக்கிறோம். நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் பல்வேறு பிரிவினைவாதக் குழுக்களின் நடவடிக்கைகளின் காரணமாக நூற்றுக்கணக்கானோரை பலி கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அனைத்துவிதமான மத அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தினையும் எதிர்த்து முறியடிக்க வேண்டிய நிலையில் நாம் இருந்து வருகிறோம். இந்துத்வா பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம்.

நாட்டில் பயங்கரவாதம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு, குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்திற்கு, அல்லது குறிப்பிட்ட ஒரு குழுவினருக்குச் சொந்தமானது அல்ல. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மதவெறிக் கண்ணோட்டத்துடனோ அல்லது அரசியல்சாயத்துடனோ பார்த்தால், அதன் முழு பரிணாமத்தை உணரத்தவறிவிடுவோம்.
இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளில் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பது மாவோயிஸ்ட் வன்முறை என்று பிரதமர் கூறியிருக்கிறார். இதனை எதிர்த்து முறியடித்திட வேண்டுமானால், நாம் அனைவரும் அவரது கூற்றை ஐயமற ஏற்றுக்கொள்ள வேண்டும். அது வளர்வதற்கான சூழ்நிலையை எந்தவிதத்திலும் அனுமதித்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லையெனில் இதனை நாம் முறியடித்திட முடியாது.

அடுத்ததாக, நாட்டில் வளர்ந்துவரும் பொருளாதார சமத்துவமின்மை. ஆம், பயங்கரவாதம் வளர்வதற்கான வளமையான மண்ணாக பொருளாதார சமத்துவமின்மை இருந்திடும். இன்று ஒருபக்கத்தில் நாம் ஆசியாவிலேயே மிகப் பெரிய எண்ணிக்கையில் பில்லியனர்களைப் பெற்றிருக்கிறோம். தங்கள் வீட்டைக்கட்டுவதற்காக 4000 கோடி ரூபாய் செலவு செய்யக்கூடிய நபர்களும் இந்தியாவில் இருக்கிறார்கள். அதே சமயத்தில் மறுபக்கத்தில் ஒரு நாளைக்கு 20 ரூபாய்கூட வருமானம் இல்லாத நபர்களும்இருக்கிறார்கள். இவ்வாறு இருப்பவர்கள் நாட்டில் 77 சதவீதமாகும். இத்தகைய பொருளாதார சமத்துவமின்னை மேலும் மேலும் விரிவாகிக்கொண்டே போனால், அதுதான் பயங்கரவாத நடவடிக்கைகள் வளர்வதற்கான வளமான அடிப்படையாகும்.

அடுத்து சில மாநிலங்களில் ஆட்சி யாளர்களே கொடுங்கோலர்களாக இருத்தல். சொராபுதீன் வழக்கு உங்களுக்குத் தெரியும், இஸ்ரத் ஜஹான் வழக்கு உங்களுக்குத் தெரியும், இத்தகைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் விரக்தியின் விளைவாக இத்தகைய பயங்கரவாத செயல்களில் இறங்கிடத் தள்ளப்படுகிறார்கள். அதுபோன்று நடைபெற அனுமதிக்கக் கூடாது. எனவே, மக்களை வகுப்புவாத ரீதியாகவோ, மதரீதியாகவோ, சாதிய ரீதியாகவோ, வேறெந்த விதத்திலுமோ பிரித்திட அனுமதிக்கக் கூடாது.
26/11 தாக்குதலின் ஓராண்டு தினத்தை அனுசரித்துக்கொண்டிருக்கிறோம். 26/11 தாக்குதல் நடைபெற்றதை அடுத்து இந்த அவையில், பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் அரசுக்குப் போதிய அதிகாரங் களை அளிக்கும் வகையில் இரு புதிய சட்டங்களை நிறைவேற்றினோம். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் கூட்டாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அதில் சில வழிகாட்டும் நெறிமுறைகள் கூறப்பட்டிருந்தன. ஆனால் அவை இதுநாள் வரை பின்பற்றப்படவில்லை. கடந்த ஓராண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் அதனை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும். பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக ஏராளமாகப் பேசினோம். ஆனால் எடுத்த முடிவின் அடிப்படையில் அநேகமாக எதுவுமே செய்யப்பட வில்லை. மத்திய - மாநில அரசுகளின் கீழ் இயங்கிடும் உளவு அமைப்புகளுக்கிடையே எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லை. அதேபோல் நம் கடல் எல்லையைப் பாதுகாத்திட பல்வேறு விதமான ரோந்துப் படைகள் உள்ளன. அவற்றிற்கிடையிலும் எந்தவிதமான ஒருங் கிணைப்பும் கிடையாது.

நாம் நாடு முழுதும் கடைப்பிடித்து வரும் 1861ஆம் ஆண்டு போலீஸ் சட்டம், ‘மிகவும் மோசமான’ ஒன்று. ‘மிகவும் மோசமான’ என்று நான் கூறுவதற்குக் காரணம் இச்சட்டமானது நம் ‘நாட்டு மக்களை’ (இப்படித்தான் பிரிட்டிஷார் அதனை அழைத்தார்கள்) ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம். ஆனால் அதனை அப்படியேதான் பின்பற்றுகிறோமேயொழிய எந்தவிதமான புதிய மாற்றத்தையும் அதில் கொண்டுவரவில்லை. ஐ.நா. ஸ்தாபனமானது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு, குறைந்தபட்சம் 222 போலீசார் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறது. ஆனால் நம் நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு 145 போலீசார் என்பதுதான் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் உள்ள விகிதம் என்பது ஒரு லட்சம் பேருக்கு 117 என்பதேயாகும். இவை அனைத்திலும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்திடாமல், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதென்பது நடைமுறை சாத்தியமில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக துல்லியமான முறையில் நடவடிக்கைகள் எடுத்திட முன்வர வேண்டும். அரசு, 26/11 தாக்குதல் தினத்தை அனுசரித்துக்கொண்டிருக்கும் இப்போதாவது இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தக்கூடிய வகையில் பாதுகாப்புத்துறையில் மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திட வேண்டும்.

மாவோயிஸ்ட் வன்முறை

மாவோயிஸ்ட் வன்முறை வளர்ந்து வருவது தொடர்பாக ஏராளமான விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையிலிருந்து சில வாக்கியங்கi மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
‘‘இடதுசாதி அதிதீவிரவாதம் என்பது மாபெரும் சவாலாக எழுந்திருக்கிறது. சமீப காலங்களில் நக்சலைட் குழுக்களால் பாதுகாப்புப் படையினர் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மோசமான வகையில் தாக்கக்கூடும் என்று தகவல்கள் வந்துள்ளன. இடதுசாரி அதிதீவிரவாதம் என்பது உண்மையில் மிகவும் சிக்கலான ஒன்று. இதனை மிகவும் நுட்பமான முறையில் எதிர்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு பக்கத்தில் நக்சலைட் வன்முறைக்கு ஆளாகியுள்ள பகுதிகளில் சட்ட ஆட்சியை ஏற்படுத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அதே சமயத்தில் நக்சலிசம் போன்ற பிரச்சனைகள் உருவாவதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைந்திட வேண்டும்.’’
பிரதமர் இவ்வாறு இரு அணுகுமுறைகளை அடிக்கோடிட்டிருக்கிறார். சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மற்றும் நக்சலிசம் தோன்றுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைதல். பிரதமர் தன் உரையில் பல புள்ளிவிவரங்களை அளித்திருக்கிறார். 2009 இல் நவம்பர் 16 வரை கிடைத்துள்ள தகவல்களின்படி, நாட்டில் கொல்லப்பட்டுள்ள 1979 நபர்களில் மாவோயிஸ்ட் வன்முறையாளர் களால் மட்டும் 873 பேர் கொல்லப் பட்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார். நாட்டில் செயல்படும் அனைத்துவிதமான பயங்கரவாத அமைப்புகள் குறித்தும் ஆய்வு செய்யும்போது, மாவோயிஸ்ட்டுகள்தான் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தெரியவருகிறது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இது நிறுவப்பட்டிருக்கிறது. பிரதமர் கூறும் இதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம் எனில், நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று இதனை முறியடித்திட முன்வர வேண்டும். மாறாக, வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்களை அரசியலாக்கியதுபோல் இதனையும் நீங்கள் அரசியலாக்க முயற்சித்தால், நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுகிறோம் என்றே நான் சொல்வேன். நான் இவ்வாறு சொல்வதற்குக் காரணம் என்ன?
மேற்கு வங்கத்தில் கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வருகிறோம். இப்போதுதான் அங்கே மாவோயிஸ்ட் வன்முறை தோன்றியிருக்கிறது. காரணம் என்ன?

இன்று (புதன்கிழமை) காலைகூட எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்கள் முன்னாலேயே மாவோ யிஸ்ட்டுகளால் வெட்டிக் கொல்லப் பட்டிருக்கிறார். பொதுத் தேர்தலுக்குப் பின் நடைபெற்றுள்ள மாவோயிஸ்ட் வன்முறைச் சம்பவங்களால் எங்கள் முன்னணி ஊழியர்கள் 130 பேரை நாங்கள் இழந்திருக்கிறோம். எனவே மிகுந்த மன வலியோடும், மனவேதனையோடும் இங்கே இதனை நான் பேசிக் கொண்டிருக் கிறேன்.

மாவோயிஸ்ட்டுகளும் மார்க்சிஸ்ட்டுகளும் ஒன்றுவிட்ட அண்ணன் - தம்பிகள் என்றும் மாவோயிஸ்ட் வன்முறைக்கு எதிராக மிகவும் தாமதமாக மார்க்சிஸ்ட் விழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.
மக்கள் வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 1967இல் ‘நக்சலைட்’ என்கிற வார்த்தை உருவானது. மேற்கு வங்கத்தில், நக்சல்பாரி என்னும் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த சென்ற ஒருசிலர் பிரிந்து சென்றனர். பின்னர் தங்கள் கட்சியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) என்று அமைத்துக் கொண்டனர். ‘‘நாங்கள் பூர்ஷ்வா ஜனநாயகத்தைப் பின்பற்றுகிறோம்’’ என்று கூறி அவர்கள் எங்களைவிட்டு விலகிச் சென்றனர். நாங்கள் இடதுசாரி சக்திகளை ஜனநாயக நீரோடைக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கும் அதேசமயத்தில், மாவோயிஸ்ட்டுகள் அவர்களை அராஜகம் மற்றும் வன்முறை வலைக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும் அதே சமயத்தில், அவர்கள் அதனை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் நாங்கள் ‘‘பூர்ஷ்வா ஜனநாயகத்தை’’ உயர்த்திப் பிடிக்கிறோமாம். அன்றிலிருந்து இன்றுவரை நாங்கள்தான் அவர்களின் பிரதான இலக்காக இருந்து வந்திருக்கிறோம். நாங்கள் அவர்களின் தாக்குதலுக்கு ஆயிரக்கணக்கான தோழர்களைப் பலிகொடுத்திருக்கிறோம். நக்சலைட்டுகளின் தாக்குதலில் எங்கள் கட்சி ஊழியர்களை இழந்த அளவிற்கு வேறெந்தக் கட்சியும் இழந்ததில்லை. வங்கத்தில் மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் எண்ணற்றவர்களை இழந் திருக்கிறோம். ஆந்திராவில் கம்யூனிஸ்ட் இயக்கம் கிட்டத்தட்ட மூன்று பகுதிகளாகப் பிளவுண்டது.
மார்க்சிய தத்துவத்தைத் தவறான வகையில் புரிந்துகொண்டதன் அடிப்படையில் நக்சலைட் இயக்கம் (இன்று அது மாவோயிஸ்ட் இயக்கம் என்று அழைக்கப்படுகிறது) உருவானது. இவர்களது தவறான சித்தாந்தத்திற்கு எதிராக இவ்வியக்கம் தோன்றிய நாளிலிருந்தே நாங்கள் கடுமையாகப் போராடி வருகிறோம். அதனைத் தொடர்ந்து நாங்கள் மேற்கொள்வோம். எனவே எங்கள் இவர்களுடன் இணைத்து, ஒருவர்க்கொருவர் ‘ஒன்றுவிட்ட அண்ணன் தம்பிகள்’ என்று விழிப்பதென்பது, வரலாற்றை வேண்டுமென்றே திரித்துக்கூறும் செயலேயாகும். உண்மையை வேண்டுமென்றே மறைத்திடும் செயலேயாகும்.

இன்று மிகமுக்கியமான கேள்வி என்னவெனில், மேற்கு வங்கத்தில் உருவான நக்சலைட்டுகள் 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் அங்கே வந்தது எப்படி என்பதேயாகும். இதனை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறோம்.
காங்கிரஸ் உறுப்பினர் கேசவ ராவ் பேசியதுபோல், நிலச் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முழக்கமிட்டபோதிலும், உண்மையில் அவர்கள் அதனைச் செய்திடவில்லை. இதனை அவர் தன் உரையின்போது ஒப்புக்கொண்டுள்ளார். நிலச்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததால்தான் நக்சலிசம் வளர்ந்ததென்று அவர் கூறினார். இதனை அவர் ஒப்புக்கொண்டு பதிவு செய்துள்ளார். அதற்காக நான் அவருக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் மேற்கு வங்கத்தில் நிலச் சீர்திருத்தங்கள் முழுமையாக அமல் படுத்தப்பட்ட பின்னணியில் 32 ஆண்டுகள் கழித்து அவர்கள் எப்படி மீள நுழைய முடிந்தது? இந்தியாவிலேயே மிக அதிகமான அளவில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, மேற்கு வங்கத்தில்தான். நாட்டில் மேற்கு வங்கம், கேரளா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில்தான் நிலச் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப் பட்டிருக்கின்றன.

துணைத் தலைவர்: கர்நாடக மாநிலத்திலும் ...

சீத்தாராம் யெச்சூரி: அந்த அளவிற்குக் கிடையாது. நான் நிலச்சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். ‘உழுபவனுக்கு நிலம் அளிப்பது’ குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். ‘சுரங்க உடைமை யாளர்களுக்கு (அiநே டிறநேசள) அளிப்பது குறித்து அல்ல. (குறுக்கீடு). கர்நாடகாவில் நடந்திருப்பது அதுதான். நான் உழுபவனுக்கு நிலம் அளிப்பது குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன்.

மாண்புமிகு உள்துறை அமைச்சர் இங்கே இருக்கிறார். எப்படி மாவோயிஸ்ட்டுகள் மேற்கு வங்கத்திற்குள் மீள வந்தார்கள்? புறச் சூழ்நிலைகள் அவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் அவர்கள் அங்கு வரவில்லை. அவர்கள் அங்கே இறக்குமதி செய்யப்பட்டு, கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படி இறக்குமதி செய்யப்பட்டார்கள் என்பதை உங்களுக்கு இப்போது கூறவிரும்புகிறேன்.

உங்கள் அரசாங்கத்தில் கூட்டணியாக உள்ள ஒரு கட்சியால் அவர்கள் அங்கே இறக்குமதி செய்யப்பட்டார்கள். (குறுக்கீடு)

இது உண்மை.
(குறுக்கீடு)

மாவோயிஸ்ட்டுகளின் நந்திகிராம் மண்டலக் குழு, வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையை படிக்கிறேன்.

(பின்னர் சீத்தாராம் யெச்சூரி படித்தவை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.)

துணைத்தலைவர்: பெயரைக் கூறாதீர்கள். அதனை அடித்துவிடுங்கள்.
‘‘...நீங்கள் சொனாசுராவில் நடைபெற்ற பேரணியில், 2007இல் மார்க்சிஸ்ட்டுகள்தான் நந்திகிராமுக்கு எங்களைக் கொண்டுவந்ததாகக் கூறியிருக்கிறீர்கள். இது பொய் என்று உங்களுக்குத் தெரியும்.’’ இது மாவோயிஸ்ட்டு மண்டலக் குழுவின் மாவோயிஸ்ட் தலைவரால் கூறப்பட்டது. மேலும் அவர் கூறுகிறார்...(குறுக்கீடு)

அவர் பேசிய உரையிலிருந்து எப்படி, ஒரு கட்சியைச் சேர்ந்த நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மாவோயிஸ்ட்டுகளுடன் கூட்டாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டிருந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்களுடன் சேர்ந்து நின்று பேசியிருக்கிறார்கள் என்பதையும் காட்டவே இதனைக் கூறுகிறேன்.
(குறுக்கீடு)

துணைத்தலைவர்: பேச்சை முடித்துக் கொள்ளுங்கள்.

சீத்தாராம் யெச்சூரி:
பிரதமர் அவர்களும், உள்துறை அமைச்சர் அவர்களும் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மாவோயிஸ்ட் வன்முறை என்று பலமுறை கூறியிருக்கிறார்கள். இந்த வன்முறையாளர் களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இதனைத்தான் நான் கூற விரும்புகிறேன். ஆனால் அவ்வாறு கூறவிடாமல் பொறுமையின்றி என்னைத் தடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பேச்சை முடித்துக் கொள்ளுமாறு கேட்கிறீர்கள்.

துணைத் தலைவர்: இல்லை, இல்லை, நான் ஒன்றும் பொறுமையின்றி இல்லை.
விவாதத்தை முடிக்க வேண்டிய நிலையில் உள்ளேன்.

சீத்தாராம் யெச்சூரி:
இந்த அவையின் மூலமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாம் உருவாக்கிய நம் சொந்த ஃபிரான்கன்ஸ்டீன்களால் அதாவது ஆக்கியவர்களையே அழிக்கும் அரக்கர்களால் - நம் தலைவர்கள் பலரை நாம் இழந்திருக்கிறோம். குறிப்பாக காங்கிரஸ் பல தலைவர்களை இழந்திருக்கிறது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் ஃபிரான்கன்ஸ்டீன்களால் கொல்லப்பட்டார்கள். மேலும் இதேமாதிரி ஃபிரான்கன்ஸ்டீன்களை உருவாக்காதீர்கள். ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய ஃபிரான்கன்ஸ்டீன்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை ஆதரிக்காதீர்கள். (குறுக்கீடு). மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்திடும் நபர்களோடு சகவாசம் வைத்துக் கொள்ளாதீர்கள். (குறுக்கீடு)
நம்முடைய சொந்த அனுபவங்களிலிருந்து அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் ஐந்தாண்டு காலம் ஆட்சிபுரிய மக்கள் உங்களுக்கு அதிகாரம் அளித்திருக்கிறார்கள். ஃபிரான்கன்ஸ்டீன்களுக்கு ஆதரவு அளிப்பவர்களின் ஆதரவு உங்களுக்குத் தேவையே இல்லை. இருந்தும் ஏன் நீங்கள் அத்தகைய அணுகுமுறையைக் கையாளு கிறீர்கள்? (குறுக்கீடு)

இங்குள்ள அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களையும், அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பயங்கரவாத நடவடிக்கைகளை மதவெறிக் கண்ணோட்டத்தோடு அணுகாதீர்கள், சொந்த குறுகிய அரசியல் லாப நோக்கோடு அணுகாதீர்கள். நாம் அனைவரும் ஒன்றுபட்டு அதற்கு எதிராக நின்று போராடுவோம்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

(ச.வீரமணி)

Tuesday, December 1, 2009

லிபரான் ஆணையத்தின் மீதான விவாதம் ஒத்தி வைத்திருப்பதை ஏற்கமுடியாது:சீத்தாராம் யெச்சூரி

புதுதில்லி, டிச.1-

மத்தியஅரசு லிபரான் ஆணையத்தின் அறிக்கை மீதான விவாதத்தை ஒத்தி வைத்திருப்பதை ஏற்பதற்கில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை அன்று மதியம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

‘‘முதலாவதாக, லிபரான் ஆணைய அறிக்கை மீதான விவாதத்தை அரசு ஒத்தி வைத்திருப்பது தொடர்பாகக் குறிப்பிட விரும்புகிறோம். அரசின் இந்த முடிவு மிகவும் விசித்திரமானது. லிபரான் ஆணையம் அரசுக்கு அறிக்கைஅனுப்பி ஐந்து மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இப்போது அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் அதன் இந்தி மொழிபெயர்ப்பு இல்லை என்று காரணம் கூறி அதன் மீதான விவாதத்தை அரசு ஒத்தி வைத்திருக்கிறது. இது முற்றிலும் ஏற்புடையதல்ல. அரசின் இந்த முடிவானது, அரசின் நம்பகத்தன்மையையே சந்தேகிக்க வைக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் மத்தியில் ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் தலைமையிலான நரசிம்மராவ் அரசாங்கம்தான். லிபரான் ஆணையம் நரசிம்மராவ் அரசாங்கம் மீது மிகவும் மேலோட்டமான முறையிலேயே கருத்து தெரிவித்திருக்கிறது. இப்போது அரசு விவாதத்தை ஒத்திவைத்திருப்பதும். இதன் மீதான விவாதத்தைத் தவிர்க்கும் ஒன்றாகவே தெரிகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்ற மதவெறி சம்பவங்கள் அனைத்திலும், சம்பவங்களுக்குக் காரணமான கயவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், அவர்கள் மீதான விசாரணைகளை விரைந்து நடத்தி, அவர்களுக்கு எதிராக நீதி வழங்குவதில் மிகுந்த மந்த நிலையே நீடிக்கிறது. இது நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பை உயர்த்திப் பிடிக்க உதவாது. குஜராத் மதக் கலவரமாக இருந்தாலும் சரி, பம்பாயில் நடைபெற்ற கலவரம் மீதான ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை மீதான நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி - எதுவாக இருந்தாலும் சரி இவற்றின் மீதான நீதி விசாரணைகள் நத்தை வேகத்திலேயே நடைபெறுகின்றன. இது மக்களுக்கு நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பின் மீதுள்ள நம்பிக்கையையே அரித்துவிடும். எனவே இதனைப் போக்கி, இதனை வலுப்படுத்தக்கூடிய வகையில் நீதி விசாரணைகள் முடுக்கிவிடப்பட வேண்டும்.

அடுத்ததாக, மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு சட்டம் - ஒழுங்கு நிலைமை தொடர்பாக மத்தியக் குழு ஒன்றை அனுப்பியிருப்பது தொடர்பாகக் குறிப்பிட விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கள் கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் மற்றும் பல கட்சிகளும் இரு அவைகளிலும் இது தொடர்பாக பிரச்சனையை எழுப்பியதை அடுத்து, மத்திய அரசின் சார்பில் மிகத் தெளிவான முறையில், மத்தியக் குழுவானது மேற்கு வங்க அரசுக்கு உதவுவதற்காகத்தான் (assist) அனுப்பப்பட்டிருக்கிறதேயொழிய, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மதிப்பிடுவதற்காக (assess)அல்ல என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. இதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மாநில அரசுடன் மத்திய அரசு எவ்விதமான மோதல் போக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் அங்கே மேற்கொள்ளாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மேலும் மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவே மத்தியக்குழு அங்கு சென்றிருக்கிறது என்றும், மாநில அரசின் ஆலோசனைப்படிதான் அது அங்கு செயல்படும் என்றும் மாநில அரசுக்கு உதவுவதற்காகவும். வசதி செய்து தருவதற்காகவும்தான் அது சென்றிருக்கிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மத்தியக்குழு எந்த அரசியல் கட்சியுடனும் எவ்விதமான விவாதத்தையும் மேற்கொள்ளாது என்றும், எந்த அரசியல் கட்சியாவது மனு எதுவும் கொடுத்தால் அதனைப் பெற்றுக்கொண்டு அதனை மத்திய அரசிடம் கொண்டு வந்து ஒப்படைத்துவிடும் என்றும் மாறாக அந்த அரசியல் கட்சிகளுடன் எவ்விதமான விவாதத்தையும் மேற்கொள்ளாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த நான்கு அம்சங்களும் விவகாரத்தைத் தெளிவுபடுத்திவிட்டது.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். மத்தியக் குழு அனுப்பப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பின் ஏன் அமளியில் ஈடுபட்டார்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, அரசு இப்போது அளித்துள்ள விளக்கத்தை முன்பு அளிக்கவில்லை என்றும் ஊடகங்களில் வந்த செய்திகளில் மாநில அரசுக்கு உதவுவதற்காக அது அனுப்பப்பட்டதாகக் கூறப்படவில்லை என்றும், மாநில அரசின் அனுமதியின்று மத்தியக்குழு சென்றிருந்தால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயல் என்றும் எனவேதான் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆவேசமடைந்தார்கள் என்றும், இப்போது அரசு தெளிவுபடுத்திவிட்டது, சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
----