Friday, July 25, 2008

மன்மோகன் சிங் அரசின் துரோகம்




ந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற மன்மோகன் சிங் அரசாங்கம் விடாப்பிடியாக இருப் பதைத்தொடர்ந்து, இடதுசாரிக் கட்சிகள் அதற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதையடுத்து, நாடாளு மன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசியல் ஒழுக்கமின்மை என்பது மிகவும் தரம் தாழ்ந்த நிலைக்குச் சென்றது. சுதந்திர இந்தியாவில், நாடாளுமன்ற ஜனநாயகம் இந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து இதற்கு முன் சென்றதில்லை. நாடாளுமன்றத் திலேயே கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளை உறுப்பினர்கள் உயர்த்திப் பிடித்துக் காட்டியதானது, அரசாங் கத்தை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பதற்காக, திரைமறைவில் எந்த அளவிற்கு இழிவான முறையில் குதிரை பேரங்கள் நடைபெற்று வந்திருக் கின்றன என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டின. தொலைக்காட்சி அலைவரிசைகளில் திரும்பத் திரும்ப காட்டப்பட்ட இந்தக் காட்சி நாட்டு மக்களின் உணர்வினைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதிலிருந்து மக்கள் விடுபட வெகுநாட்களாகும்.

பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றிருக்கலாம், ஆனல் அவரது அரசாங்கம் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. எப்படிப்பார்த்தாலும், இது ‘‘நம்பிக்கை’’ வாக்கெடுப்பே அல்ல. பலவிதங்களில் இதனை ‘‘துரோக’’ வாக்கெடுப்பு என்று கூறிட முடியும்.

முதலாவதாக, அணுசக்தி ஒப்பந்தத்தில் ஐமுகூ அரசாங்கம் எப்படிச் செயல்படவிருக்கிறது என்று பிரதமர் இடதுசாரிக் கட்சிகளுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளை மீறிய “துரோக”த்தை ஆமோதிக்கும் வகையில் இந்த வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. ஐமுகூ அரசாங்கமானது இடதுசாரிக் கட்சிகளுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளை மூன்று தடவைகள் மீறியிருப்பதை நாம் ஏற்கனவே விளக்கி இருக்கிறோம். நாடாளுமன்ற மக்களவை இவ்வாறு உறுதிமொழிகளை மீறி இந்த அரசாங்கம் துரோகம் இழைத்திருப்பதை இந்த வாக்கெடுப்பின் மூலம் ஆமோதித்திருக்கிறது. மிக இழிவான முறையில் குதிரை பேரம் நடைபெறாமல் இருந்திருந்தால், தங்கள் கட்சிக் கொறடாக்கள் விடுத்த கட்டளைகளை மீறி கட்சி மாறி ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கையைக் கழித்துவிட் டுப் பார்த்தோமானால் ஆளும் கூட்டணிக்கு 268 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கும். இவ்வாறு குதிரை பேரம் நடத்தி எண்ணிக்கையை பெருக் கிக் கொண்ட இத்தகைய அரசியல் ஒழுக்கமின்மையின் மூலம் நாட்டிற்கு ஆளும் கூட்டணி மற்றொரு துரோகத்தைப் புரிந்திருக்கிறது.

நாட்டு மக்களுக்கு மற்றொரு விதத்திலும் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து உயர்ந்துவரும் பணவீக்கமும், அத்தியாவசியப் பொருள்களின் விண்ணைமுட்டும் விலைவாசியும் சாமானிய மக்களின் மீது சொல்லொண்ணா அளவிற்கு சுமைகளை ஏற்றிக்கொண்டிருக் கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு இவற்றிலிருந்து ஏதேனும் நிவாரணம் அளிப்பதற்குப் பதிலாக, ஐமுகூ அரசாங்கமானது அமெரிக்க புஷ் நிர்வாகத்தைக் குஷிப்படுத்தும் வகை யில் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலேயே அதன்மூலம் இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளி யாக மாற்றக்கூடிய வகையிலேயே முழுமையாக செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. மக்கள் எதிர்கொள்ளும் பிரச் சனைகள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாது இங்ஙனம் செயல்படுவதன் மூலம் ஐமுகூ அரசு மக்களின் நலன்களுக்கு முழுமையான முறையில் துரோகம் இழைத்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் தன்னால் கொண்டுவரப்படக்கூடிய நம்பிக் கை வாக்கெடுப்பின் மீதான தீர்மானத் தில் தன்னாலேயே வாக்களிக்க முடியாத சூழ்நிலை -பிரதமருக்கு ஏற்பட்டிருப்பது நாடாளுமன்ற வரலாற்றில் இதுதான் முதல்முறையாகும். இது ஒரு சிறிய பிரச்ச னைதான். இந்திய அரசியலமைப்புச் சட்டமானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள உறுப்பினர்களில் எவர் ஒருவரும் பிரதமராக இருந்திட அனுமதிக்கிறது. இதைவிட மிக முக்கிய பிரச்சனை என்னவெனில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர் விவாதங்களுக்குப் பதிலளிக்க இயலாத நிலை பிரதமருக்கு ஏற்பட்டதும் இதுவே முதல்முறையாகும். மிகக் கேவலமான குதிரைபேரத்திற்கு எதிராக, உறுப்பினர் கள் எதிர்ப்புக் குரல் எழுப்பிக்கொண் டிருந்ததற்கு இடையே, மன்மோகன் சிங் தன் பேச்சின் நகலை அவையில் தாக் கல் செய்துவிட்டார். தன்னுடைய உரையில் பிரதமர், தன்னை ‘‘கொத்தடிமை’’ போல் நடத்திட விரும்பினர் என்று இடதுசாரிக் கட்சிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இடதுசாரிக் கட்சிகளின் வலுவான ஆதரவின் காரணமாக ஆட்சிபுரிந்து வந்த பிரதம ருக்கு இத்தகைய குற்றச்சாட்டுகளை வாரியிறைப்பதற்கு நான்காண்டு காலம் பிடித்திருப்பது வேடிக்கை. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான பேச்சுவார்த்தைகளை முழுமை யாக பூர்த்தி செய்திடவும், அதன்பின்னர் அதனை இறுதியாக நடைமுறைப் படுத்தும் சமயத்தில் அதன் விவரங் களை நாடாளுமன்றத்தில் தெரிவிப்பதற் கும் இடதுசாரிகள் அவரை அனுமதிக்க வில்லையாம். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமானது, அமெரிக்க காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்பு தல் அளிக்கப்பட்டபின், இந்திய நாடாளு மன்றம் அதனை ஆதரிப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை என் பதை நன்கு புரிந்துகொண்டிருக்கும் காரணத்தாலேயே இடதுசாரிக் கட்சிகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தமானது சர்வதேச அணுசக்தி முகமையின் ஆளுநர் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டால், அதன் அடுத்த நடவடிக்கை என்பது, அதன் அமலாக்கம்தான். ஆக வேதான், பேச்சுவார்த்தைக்கு முன்ன மேயே அதனை நிறுத்த இடதுசாரிக் கட்சிகள் முடிவு செய்தன. இடதுசாரிக் கட்சிகள் இந்த விஷயத்தில் எப்போதும் திறந்தமனதுடனும் வெளிப்படையாகவும் செயல்பட்டன. இந்த ஒப்பந்தமானது எவ்வாறெல்லாம் நாட்டின் நலன்களுக்கு எதிரானது என்று வாதிட்டன. பிரதமரும் ஐமுகூ அரசாங்கமும் வேறெது வேண்டு மானாலும் நினைத்துவிட்டுப் போகட் டும். இது குறித்து மக்கள் தீர்மானிக் கட்டும். மிகவும் கேவலமான முறையில் குதிரைபேரத்தில் ஈடுபட்டு, பெரும்பான் மையைப் பெற்று மக்களவையில் நம்பிக் கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தாலேயே, நாடு, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்துவிட்டதாகக் கருதிவிட முடியாது. இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு எவ்விதத் தார்மீகப் பொறுப் பும் ஐமுகூ அரசாங்கத்திற்குக் கிடையாது. கடந்த நான்காண்டுகளாக, குறைந்த பட்ச பொதுச்செயல் திட்டத்தின் அடிப் படையில், ஐமுகூ அரசாங்கத்திற்கு, இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு அளித்து வந்தன. பிரதமரும், ஐமுகூ அரசாங்கமும் தனிப்பட்ட எவருக்கும் ‘கொத்தடிமை’ களாக இருந்திட வேண்டியதில்லை. மாறாக, அவர்கள் இந்தக் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திற்கு ‘கொத்தடி மை’களாக இருந்திருக்க வேண்டும். ஆனால், குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதி மொழிகளில் பல குறித்து சிறு துரும்பும் அசைக்கப்படவில்லை. நிறைவேற்றப் பட்டுள்ள உறுதிமொழிகளில் ஒருசில வும் வேண்டாவெறுப்பாகவே செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக மட்டுமே, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பழங்குடியினருக்கான வன உரிமைகள் சட்டம், தகவல் அறியும் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டிருக் கின்றன. இவை ஒவ்வொன்றும் நிறை வேற்றப்படும் சமயத்திலும் மன்மோகன் சிங் அரசாங்கம் இவற்றை நிறை வேற்றுவதற்கு முகம் சுளித்ததையும் நிறைவேற்றப்பட்டபின் இதனை அமல் படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெத்தனமாகவும், நத்தை வேகத்திலும் செயல்பட்டுவரு வதையும் பார்க்கிறோம். அமல்படுத்தப் படும் பல இடங்களில் அரசாங்க அதி காரிகளின் லஞ்சலாவண்யம் என்னும் சேற்றில் சிக்கிக்கொண்டு வெளிவர முடி யாது தத்தளிப்பதையும் பார்க்கிறோம். குறைந்தபட்ச பொது செயல்திட்டத் தைப் பொறுத்த அளவில் உண்மை நிலை மைகள் இவ்வாறிருக்கும் சமயத்தில், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந் தத்தை நிறைவேற்ற மிக மோசமான முறையில் அவசரப்படுவதற்கான அவ சியம் என்ன? உண்மையில் இந்த ஒப்பந் தம் குறித்து குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில் லை. இதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் கூற முடியும். பிரதமர் தாமாகவே தன்னை ‘ஒரு கொத்தடிமை’ என்று குறிப்பிட் டிருப்பதால், தன் எஜமானரையும் அவ் வாறே அவர் தீர்மானித்துக்கொண்டு விட்டார் என்றே தோன்றுகிறது. மற்றொரு விஷயமும் இங்கே கவனிக் கத்தக்கதாகும். பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிச மானவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் அல்லது எதிர்த்து வாக்களிக்காமல் இருந்திருக் கிறார்கள். மிகக் கேவலமான முறையில் நடைபெற்ற குதிரைபேரத்தில் இவர்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அல்லது, அதற்கும் மேல் இதற்கு ஏதே னும் காரணங்கள் இருக்கிறதா? பாஜக வின் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இதனை ஆராய்ந்தோமானால், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந் தத்திற்கு பாஜகவின் எதிர்ப்பு என்பது, உண்மையானதல்ல என்பதையும், பெயரளவிலான ஒன்றே என்பதையும் பார்க்க முடியும். எனவே பாஜகவும் அதன் தலைமையிலானதேசிய ஜனநாய கக் கூட்டணியும் வாக்கெடுப்பில் ஐமுகூ அரசாங்கம் வெற்றி பெறக்கூடிய வகையில் கண்டும்காணாமல் இருந்து விட்டதோ? தன் உறுப்பினர்களில் சில ரைப் பணம் பெற்றுக்கொள்ள அனுமதித் திருக்கிறதோ? வரவிருக்கும் காலங்களில் இதற்கான பதில்கள் நிச்சயமாகத் தெரிந்துவிடும். இடதுசாரிக் கட்சிகள், இந்திய - அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் விளை வாக நாட்டின் இறையாண்மைக்கு, இந்தி யாவின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத் துக்கள் குறித்து மக்களுக்கு விளக்குவதற் காக ஜூலை 14லிருந்து நாடு தழுவிய அளவில் பிரச்சார இயக்கங்களை நடத்த உள்ளன. இவ்வியக்கமானது இப்போது பாஜக அல்லாத இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்திடும் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத் துழைப்போடும் தீவிரப்படுத்தப்பட விருக்கிறது.

தமிழில்: ச. வீரமணி

No comments: