பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்துப் பொய்யாகப் பிணைக்கின்ற நீசத்தனமானதும்அதிர்ச்சியளிக்கக்கூடியதுமான விவரங்கள் தில்லி
உயர்நீதிமன்றம் தில்லியில்2005 நடைபெற்ற தொடர்
வெடிகுண்டுத்தாக்குதல் தொடர்பாகப் பிணைக்கப்பட்ட மூன்று
முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்திருப்பதிலிருந்து மீண்டும்ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. முகமது
உசேன்
பஸ்லி
மற்றும் முகமதுரபிக் ஷா
என்கிற
இளைஞர்கள் அவர்களுக்கு எதிராகப் புனையப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். தாரிக்
அகமது
தார்
என்கிற
இளைஞர்
வெடிகுண்டுத் தாக்குதலில் எந்தத்
தொடர்பும்இல்லை என்ற
போதிலும் அவர்
ஒருபயங்கரவாத அமைப்பில் உறுப்பினராகஇருந்தார் என்பதற்காக தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
நீதிமன்றம் கண்டனம்
முஸ்லிம்களுக்கு எதிராக
ஒருதலைப்பட்சமாக காவல்துறையினரால் வகுப்புவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் விளைவாக,தில்லியில் 67 பேர்
கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியஉண்மைக் கயவர்கள் கண்டுபிடிக்கப்படாமல் விடுபட்டுவிட்டார்கள். இதுஇவ்வழக்கில் பொய்யாகப் புனையப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோர் மத்தியில் மிகப்பெரிய அளவில்
வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.முகமது
உசேன்
பஸ்லி
மற்றும் முகமதுரபிக் ஷா
ஆகிய
இருவரும் காவல்துறையினரின் கடும்
சித்ரவதைகளுக்கும், காவலடைப்புக்கும் ஆளாகிவிட்டு, சுதந்திரக்காற்றை அனுபவிப்பதற்கு 12 ஆண்டுகாலமாகி இருக்கிறது. காவல்துறையினரின் கடும்
சித்ரவதைகள், பொய்யாகப் புனையப்பட்ட சாட்சியங்கள், அப்பாவி இளைஞர்களைச் சிக்க
வைக்க
வேண்டும்என்பதற்காக உண்மைகளை மூடி
மறைத்திடும் இழிநடவடிக்கைகள் அனைத்தும், அநீதியான இத்தகைய நீதிமன்ற விசாரணைக்குப்பின்னே உள்ளன.உதாரணமாக, காஷ்மீர் பல்கலைக்கழக மாணவரான 22 வயது ரபிக் ஷா,
தில்லியில் இந்தத்
தாக்குதல் நடைபெற்ற சமயத்தில், ஸ்ரீநகரில் உள்ள
தன்
கல்லூரிவகுப்பறையில் பாடங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த
உண்மையை காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் பதிவாளரால் எழுதப்பட்ட கடிதம்
உறுதி
செய்கிறது. எனினும் இந்த
உண்மையை புலனாய்வினை மேற்கொண்ட காவல்துறையினர் வேண்டுமென்றே மூடிமறைத்துவிட்டனர்.அப்பாவி மக்கள்
மீது
அட்டூழியங்கள்புரிந்து பொய்யாக வழக்கைப்புனைந்திட்ட தில்லி
காவல்துறையின் தனிப்
பிரிவினை நீதிமன்றத்தின் தீர்ப்புரை இடித்துரைத்திருக்கிறது.
14 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை
கடந்த
பதினைந்து ஆண்டு
காலமாக,
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய வழக்குகள் அனைத்திலும் ஒன்றன்பின்ஒன்றாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அவற்றில் பொய்யாகப் பிணைக்கப்பட்ட,முஸ்லிம்கள் விடுதலையாகி வருகின்றனர். பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறும்போதெல்லாம், எப்படி
அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சுற்றி
வளைக்கப்பட்டு, அந்த
சம்பவத்துடன் பொய்யாகப் பிணைக்கப்படுகிறார்கள் என்பதை
நீதித்துறையின் தீர்ப்புகள் தோலுரித்துக் காட்டியுள்ளன. காவல்துறை புலனாய்வுஏஜன்சிகள், குறிப்பாக தனிப்பிரிவு செல்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்குழுக்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிரான
மனோபாவம் கொண்டவர்களைக் கொண்டு
அமைக்கப்பட்டிருப்பதையும், அதிலும் குறிப்பாக காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக
இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கின்றன.2012இல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, பொய்யாகப் புனையப்பட்ட வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்ட (discharged) அல்லது
விடுதலை செய்யப்பட்ட (acquitted) 22 முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை எடுத்துக்கொண்டது. இவ்வாறு வழக்குகளில் பிணைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர்
முகமது
அமின்.
தில்லியைச் சேர்ந்த இவர்
18 வயதில்
கைது
செய்யப்பட்டு, 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்து பின்னர் தன்மீது புனையப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, விடுதலையானார். மற்றொருவர் மக்பூல் ஷா.
ஸ்ரீநகரைச் சேர்ந்த இவர்
14ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்து, பின்னர் விடுதலையானார்.
மறுவாழ்வுக்கு இழப்பீடு
- இவ்வாறு இதுபோன்று வழக்குகளில் பொய்யாகப் புனையப்பட்டு விடுதலையான அப்பாவிகளின் மறுவாழ்வுக்காக உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
- சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்திட சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, ஓராண்டு காலத்திற்குள் வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
- வழக்குகளின் முடிவில் அப்பாவிகள் மீது பொய்யாக வழக்குகள்புனையப்பட்டதாக நீதிமன்றங்கள்கண்டுபிடித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்திடும் சமயத்தில், அவ்வாறு அப்பாவிகள் மீது பொய்யாகவழக்குகளைப் புனைந்த காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
- சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தில் (Unlawful Activities Prohibition
- Act) உள்ள கொடுமையான ஷரத்து நீக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இவ்வாறு இந்தப்பிரச்சனையை மத்திய அரசிடமும், குடியரசுத்தலைவரிடமும் எடுத்துச்சென்ற பின்னரும்கூட, இப்பிரச்சனையை சரிசெய்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது தில்லி உயர்நீதிமன்றம் காவல்துறையினரின் புலனாய்வினை கடுமையாக இடித்துரைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது, இதில் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்திட வேண்டும். இந்த வழக்கில் நீதிபதிகளால் கண்டிக்கப்பட்டிருக்கின்ற காவல்துறையினருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.அரசாங்கம் பாதிப்புக்கு உள்ளாகி விடுதலையாகியுள்ள இரு முஸ்லிம் இளைஞர்களுக்கும் உரிய இழப்பீடு அளித்து அவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
(பிப்ரவரி 22,2017)
தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment