Saturday, July 30, 2016



பிரேம்சந்த் பிறந்த தினம் இன்று. கூகுள் இணையதளம் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தி இருக்கிறது, வாழ்த்துக்கள்.

பிரேம்சந்தின் சில கதைகளை ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருந்த்தாலும், மனதினில் சில தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும், நச்சென்று ஐந்து சிறுகதைகளை தந்துள்ள தோழர்.வீரமணியை பாராட்டாமல் இருக்க முடியாது என்று தோழர் தஞ்சை ரமேஷ் நான் எழுதிய பிரேம்சந்தின் சிறுகதைத் தொகுப்பிற்கு விமர்சனம் எழுதியிருப்பார்,

பிரேம்சந்த் ஒருமுறை. சரத்சந்திரரிடம் போய் தனது முதல் சிறு கதை தொகுப்புக்கு முன்னுரை எழுதித் தருமாறு கேட்க, அவர் அதற்கு, “வங்காளத்தில் ரவிந்தரநாத் தாகூர் எழுதக்கூடிய அளவிற்கு உங்கள் கதை உள்ளது. இதற்கு முன்னுரை எழுதும் தகுதி எனக்கு இல்லைஎன்று கூறியிருக்கிறார் என்றால் பிரேம்சந்த் கதைகள் எந்த அளவிற்கு அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?
 
பிரேம்சந்த் இந்தி இலக்கியத்தின் பிதாமகர். சுமார் 250 சிறு கதைகளையும், 10 நாவல்களையும் எழுதியிருக்கிறார். அன்றைய இந்தியாவின் சமுக நிலமைகளையும், வெள்ளை ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், மன்னர் சமஸ்தானங்க்களுக்கு எதிராகவும், கிளர்ந்தெழுந்த மக்கள் இயக்கங்களையும், நாட்டில் நிலவி வந்த சமூகக் கொடுமைகளையும் மிகவும் நுணுக்கமாகத் தன் படைப்புகளில் அவர் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ”

பிரேம்சந்தின் சிறு கதைகள் சில தமிழில் வெளிவந்திருக்கின்றன. ஆயினும் அவரை முழுமையாக புரிந்து கொள்ள அவை போதுமானதல்ல. குறிப்பாக சமூக நீதிக்காக அவர் குரல் கொடுத்திருக்கிறார் என்பது இத்தொகுப்பில் உள்ள கதைகள் மூலம் அறியலாம்.”

இத்தொகுப்பில் உள்ள கதைகளை படிக்கும் போது, 1901களில் இப்படி சிந்திந்திருக்க முடியுமா எனும் வியப்பு ஒரு பக்கம், இதை இந்த அளவிற்கு நேர்த்தியாக தமிழில் பிரேம்சந்த் உணர்வோடே வந்திருக்கிறதே எனும் வியப்பு மறு பக்கம் எழுகிறது.

ஒவ்வொரு கதையின் கடைசி பத்திகள் இக்கால பஞ்ச் டயலாக் என்று சொல்லுகிறார்களே, அதெல்லாம் தூசுக்கு சமம் எனும் கருத்து எழுவதை தடுக்கவே முடியாது.

முதல் கதையான கடவுள் இல்லம் கடைசி வரிதன் குழந்தையின் மீது அளப்பரிய வைத்திருந்த ஒரு தாயின் கதை இவ்வாறு முடிவுற்றுவிட்டது

இரண்டாவது கதையான மோட்சம் கடைசி வரிஐயரின் கட்டளைகளை, காலை முதல் மாலை வரை மிகவும் உண்மையுடனும், பயபக்தியுடனும் நிறைவேற்றிய ஒரு சக்கிலியனின் சடலத்திற்கு இவ்வாறு மோட்சம் கிடைத்தது.”

மூன்றாம் கதையான பண்பாளன் என்பவன் யார்? கடைசி வரி:  “இரு கதைகளையும் நான் கேள்வி பட்டேன். பண்பாளன் என்றால் யார் என்பது இப்போது எனக்கு நன்றாகவே புரிந்தது. வஞ்ககத்தின் மறு பெயரே பண்புடைமை என்பதை இப்போது நான் சரியாகவே புரிந்து கொண்டேன். ஒருவன் எவ்வளவு வேண்டுமானாலும் அயோக்கியத்தனங்கள் செய்யலாம். ஆனால் அவற்றை நன்கு மறைக்கத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி இருந்து விட்டானானால் அவன்தான் சிறந்த பண்பாளன், ஜென்டில்மேன்.”
நான்காவது கதையான குழந்தை கடைசி வரி  “நான் அன்பே உருவானவனா? என்னுடைய மத்தியதர வர்க்க ஒழுக்கநெறிகள் கங்குவின் நேர்மைக்கு முன்பு எதிர்த்து நிற்க முடியாமல் வெட்கித் தலை குனிந்தன……..”

ஐந்தாவது கதையான நம்பிக்கை தகர்வு கதையில் நடுவில் வரும் ஒரு வரி, “பணப்பசி இருக்கே அது திருப்தியே படாது. பணம் வர வர பசியும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.”

இன்னும் எழுத நிரம்ப தோன்றினாலும், நீங்கள் படித்தால்தான் ருசியை அனுபவிக்கமுடியும். படியுங்கள். நிச்சயமாக வியப்புறுவீர்கள்.
மோட்சம்வெளியீடு: பாரதி புத்தகாலயம். விலை ரூ 40/- 
பிரேம்சந்தின் பிறந்த நாள் நினைவாக இதனை நம் முகநூல் நண்பர்களுக்காக மீளவும் பதிவேற்றம் செய்துள்ளேன், இதுவரை மோட்சம் சிறுகதைத் தொகுப்பை வாங்கிப்படிக்காதவர்கள் வாங்கிப்படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,

அன்புடன் ச.வீரமணி

No comments: