Sunday, December 20, 2015

அமெரிக்காவிடம் சரணாகதி


மோடி அரசாங்கம் ஆசியாவில் அமெரிக்காவின் போர்த் தந்திர நடவடிக்கைகளுக்கு சேவை செய் திட தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்டது என்பது, ஜப்பான் பிரதமர் சின்சோஅபே வருகையின் மூலம் உறுதியாகி விட்டது. அவரது வருகையின்போது, எண்ணற்ற ஒப்பந்தங்கள் கையெழுத் தாகியுள்ளன. இவை அனைத்தும் ஜப்பானுடன் மிகவும் நெருக்கமான முறையில் ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை நிறுவியிருக்கின்றன. ஆசிய-பசிபிக்பிராந்தியத்தில் இரு நாடுகளும் இரு தூண்களாகும் என்பதால் இரு நாடு களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு வேண்டும் என்றுதான் அமெரிக்கா விரும்பியது.
அமெரிக்கா வற்புறுத்தியதன் விளைவாகத்தான் 2014 செப்டம்பரில் ஜப்பா னுக்கு மோடி விஜயம் செய்தபோது, முத் தரப்பு பாதுகாப்புக் கூட்டணி உருவானது. ஜப்பான் பிரதமர் அபே வருகை தந்தபோது, இரு நாடுகளும் சேர்ந்து கூட்டாகராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய் திடவும் மற்றும் ராணுவத் தகவல்களை இரு நாடுகளுக்கும் இடையே பகிர்ந்துகொள்வதைப் பாதுகாத்திடவும் இரு பாதுகாப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தா யின.
அமெரிக்காவின் நிர்ப்பந்தம்
மேலும், மலபார் கப்பல்படை பயிற்சிகளின் ஒரு நிரந்தர உறுப்பினராக ஜப் பானும் மாறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுவரை, மலபார் கப்பல்படையில் நடைபெற்ற பயிற்சிகள் இந்தியா - அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான ஒன்றாகத்தான் இருந்து வந்தன. ஜப்பான் இரண்டு அல்லது மூன்றுதடவைகள்மட்டும்தான் அவற்றில் பங் கெடுத்துக் கொண்டது. இப்போது இது மூன்று நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு கப்பல்படை பயிற்சியாக மாறி யிருக்கிறது. இவ்வாறு மிகவும் நெருக்கமான முறையில் ராணுவம் மற்றும் போர்த்தந்திர உறவுகளை மேற்கொண்டிருப்பதன் அடிப்ப டையில்தான், ஜப்பான் இந்தியாவுடன் ஓர் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைக் கொள்கையளவில் செய்துகொள்ளவும் ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தமும் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கிய மான ஒன்றாகும்.
ஏனெனில் ஜப்பானில் உள்ள தோஷிபா, ஹிட்டாச்சி போன்ற கம்பெனிகள் அமெரிக்க கம்பெனிகளான வெஸ்டிங்ஹவுஸ், ஜெனரல் எலக்ட்ரிக் போன்றவற்றிற்கு, கேந்திரமான சாதனங்களை அளிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் அனுமதி அளித்தால்தான் அமெரிக்க கம்பெனிகள் இந்தியாவிற்கு அணுஉலைகளை அளித்திட முடியும்.
அமைதி வழியிலிருந்து விலகும் ஜப்பான்
இந்த அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஜப்பான் நாடாளுமன்றத்தால் ஏற்பளிப்பு செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. ஜப்பான் மக்கள் மத்தி யில் இதுபோன்றதொரு ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்களைப் பாதித்த ஃபுகு ஷிமா அணுஉலை பேரிடர் இப்போதும் மக்களின் மனதில் நிலைத்து நின்று அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. ஹிரோ ஷிமா, நாகசாகி நிகழ்வுகளுக்குப் பின்னர்அணு ஆயுதங்களுக்கு எதிரான மன நிலையிலேயே ஜப்பானிய மக்கள் இப் போதும் இருந்து வருகிறார்கள். இந்தியா போன்ற அணு ஆயுதங் கள் வைத்திருக்கக்கூடிய நாடுகளுடன் அணுசக்தி ஒத்துழைப்பை முன்னெடுத்துச்செல்ல அவர்கள் விரும்ப வில்லை.
ஆனால், சின்சோ அபேயின் வலதுசாரி அரசாங்கம் நாட்டை மீண்டும் ராணுவமயமாக்க நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. இதற்காக வெளி நாடுகளில் ராணுவ நடவடிக்கையைத் தடை செய்துள்ள ஜப்பானிய அரசமைப்புச் சட்டத்தையே திரித்து வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு ராணுவ சாதனங்களை விற்பனை செய்வது என்பது ஜப்பான் இதுநாள்வரை பின்பற்றிவந்த அமைதி வழிக் கொள்கையிலிருந்து விலகிச் செல்வதன் சமிக்ஞையேயாகும்.மோடி அரசாங்கம் முந்தைய மன்மோகன்சிங் அரசாங்கம் போன்றே மிகப்பெரிய அளவில் அணு உலைகளை இறக்குமதி செய்திடும் கொள்கையையே பின்பற்றிக் கொண்டிருக்கிறது. ஆபத்தை விளைவிப்பவைகுஜராத் மாநிலத்தில் மிதி விர்தி என்னு மிடத்திலும், ஆந்திரப் பிரதேசத்தில் கொவ் வாடா என்னுமிடத்திலும் அமெரிக்க அணு உலைகளை நிறுவும் செயல்கள் அதிக செலவு பிடிக்கக்கூடியவை மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் மக்களின்பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவையுமாகும்.
பிரெஞ்சு அணு உலைகள் நிறுவப்பட இருக்கும் ஜெய்தாபூர்திட்டத்திற்கும் இவை பொருந்தக் கூடியதேயாகும். இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவிற்கு வருகை புரிந்தபோது கையெழுத்தான ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் கூட்டுத் தொலைநோக்கு அறிக்கை (Joint Vision Statement on Asia-Pacific and Indian Ocean)யைப் போன்றே, இப்போது இந் தியா - ஜப்பான் இடையே கையெழுத்தா கியுள்ள தொலை நோக்கு அறிக்கையும் போர்த்தந்திரம் மற்றும் உலக அளவிலான ஒத்துழைப்பு குறித்துப் பேசுவதுடன், இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக் காவின் நலன்களைப் பிரதிபலிக்கிறது.
ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா,ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அணிசேர்க்கை ஏற்பட்டிருப்பதையே இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்துகிறது.
அமெரிக்காவுக்கு சேவை செய்யவே
ஜப்பான், இந்தியாவில் கட்டமைப்பு வசதிகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் காலங்காலமாகவே முதலீடுகளைச் செய்து வந்திருக்கிறது. எனவே, ஆசியாவில் உள்ள இரு பெரிய நாடுகளுக்கு இடையே பொருளாதார உறவுகள் விரிவடைவது என்பது இயற்கையானது மட்டுமல்ல, அவசியமுமாகும். ஆனால், இது இந்தியாவை ஆசியாவில் ஓர் அணிக்குள் தள்ளி அதனை சுருக்கிவிடக்கூடிய ஒருபோர்த்தந்திர உறவாக இருந்திடக்கூடாது. (But this should not entail a strategic relationship which confines India to one bloc in Asia.)
இப்போது உருவாகியிருக்கிற அமெ ரிக்க, ஜப்பானிய, இந்திய ராணுவ - பாதுகாப்பு அணிவரிசை சீனாவைக் கட்டுக்குள் வைத்திட அமெரிக்கா மேற்கொண் டுள்ள திட்டங்களுக்கு சேவை செய்வதற்கேயாகும்.
நிச்சயமாக இது இந்தியாவின் நலன்களுக்கானதாக இருந்திட முடியாது. பிரதமர் சின்சோ அபேயின் கீழ் உள்ள ஜப்பான், சீனாவிற்கு எதிராக ஒரு அதிதீவிர தேசவெறி நிலைப்பாட்டை (ultra nationalist posture) பின்பற்றிக் கொண்டிருக்கிறது.
மோடி அரசாங்கத்தின் குறுகிய பார்வையே அதனை அமெரிக் காவின் சூழ்ச்சித் திட்டங்களுக்கு இரை யாக்கி இருக்கிறது.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: