ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் இரட்டை நாக்குடன்
பேசக்கூடியது என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்றுதான். தங்களுடைய இருவேறு
நிகழ்ச்சி நிரல்களையும் ஒரே சமயத்தில் பின்பற்றுவதற்கு அவ்வாறு இதனை அது பயன்படுத்திக்
கொள்கிறது. ஒன்று,
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆணிவேராக விளங்கும் நிகழ்ச்சிநிரலை -
அதாவது மக்கள் மத்தியில் மதவெறியைக் கூர்மைப் படுத்துவதை - பின்பற்றுவது. அதே
சமயத்தில் மற்றொரு நிகழ்ச்சிநிரல் பொது நுகர்வோரியத்தை முன்னெடுத்துச் செல் வது.
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் இவ்வாறு இருவித நிகழ்ச்சிநிரலையும் தன் னுடைய தேர்தல்
பிரச்சாரத்தின்போது நடைமுறைப்படுத்தியதை முன்னரே பார்த்தோம்.
2002ஆம் ஆண்டில் குஜராத்மாநிலத்தில் முஸ்லிம்
சிறுபான்மையின ருக்கு எதிரான படுகொலைகளை அரங்கேற்றியதன் மூலம் புகழ்பெற்ற, நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக
முன்னி றுத்தியதிலிருந்தே மதவெறித் தீயை எந்த அளவிற்கு விசிறிவிட அவர்கள் தயாராகி
விட்டார்கள் என்பது நன்கு விளங்கும். அதேசமயத்தில், மறுபக்கத்தில், தாங்கள்
மதவெறிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக `குஜராத்
மாடல்’ வளர்ச்சி மற்றும் `நல்லதோர் ஆட்சி’ என்றும் கூறி, வாக்காளர்களின் ஆதர வினைக் கோரினார்கள்.
இவ்வாறான ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் இரட்டை வேடத்தை
மிகவும் திறமையாக இவர்கள் அணிந்து கொண்டதன்மூலம் தேர்தல் ஆதாயங்களை நன்கு அறுவடை
செய்து விட்டார்கள். ஆயினும், நரேந்திர மோடி அரசாங்கம் பதவிப் பிரமாணம் எடுத்த
சமயத்திலும் மற்றும் அதற்கு அடுத்த நாளும், அவர்களது உண்மையான நிகழ்ச்சிநிரலின் சொரூபம்
வெளிவரத் தொடங்கிவிட்டது. இந்துத்துவா அமைப்புகளால் கட்ட விழ்த்துவிடப்பட்ட
பயங்காரவாதத் தாக்கு தல்கள் பலவற்றில் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர்களில்
ஒருவரும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இந்த்ரேஷ் குமார், மத்தி
யப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தேசியப் புலனாய்வு ஏஜன்சி மற்றும் பயங்கர வாத
எதிர்ப்புக் குழு(ATS-Anti-Terror
Squad) ஆகியவற்றால் புலனாய்வு மேற்கொள்ளப்பட்ட அனைத்து வழக்கு
களையும் விலக்கிக் கொள்ளுமாறு கோரிஇருக்கிறார். “தேர்தல் முடிவுகள் எங்க ளுக்கு இரண்டாவது
விடுதலையாக வந்திருக்கிறது,’’ என்று அவர் ஒரு தேசிய நாளிதழுக்கு அளித்துள்ள
நேர்காணலில் தெரிவித்துள்ளார். (தி இந்தியன் எக்ஸ் பிரஸ், மே 24, 2014)பதவியேற்றவுடனேயே பிரதமர் அலுவலகத்திற்குப் பொறுப்பான புதிய இணை அமைச்சர்
ஜிதேந்திர சிங்,
தங்களுடைய அரசாங்கம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது
பிரிவைத் தொடர்வது சம்பந்தமாக மறு ஆய்வு செய்திடத் தயாராக இருக்கிறது என்று
பிரகடனம் செய்திருக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது
பிரிவின்கீழ்தான்,
நம்முடைய நாடு சுதந் திரம் அடைந்த சமயத்திலும் மற்றும்
பிரிவினை அடைந்த சமயத்திலும், ஜம்மு- காஷ்மீர் மாநிலம் இந்திய யூனியனுடன்
இணைய உடன்பட்டது என்பதை வாசகர்கள் நினைவுகூர்ந்திட வேண் டும். இவ்வாறு
அரசியலமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவை நீக்கிட உரியநடவடிக்கைகள்/விவாதங்கள்
மேற் கொள்ள வேண்டும் என்று இவர்கள் மிக வும் தெளிவான முறையில் அறிக்கை
விடுத்திருப்பதானது ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகள்
ஆகிய இரு தரப்பினர் மத்தியி லிருந்தும் கூர்மையான முறையில் இயற்கையாகவே கண்டனக்
குரலை வர வழைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது
பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பது இவர்களது “உண்மையான நிகழ்ச்சிநிரலின்’’ ஒரு
பகுதியே யாகும்.
வாஜ்பாயி அரசாங்கம் இருந்த காலத்தில்
தங்களுக்குப் போதிய பெரும்பான்மை இல்லாததால் இதனைச் செய்ய முடியவில்லை என்று
அவர்கள்கூறிக்கொண்டிருந்தார்கள். “இந்த சட்டப்பிரிவை ரத்து செய்திட உறுதி
பூண்டிருக் கிறோம்,’’
என்று பாஜக தேர்தல் அறிக்கை யில் கூறியிருக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரத்தின் ஆணிவேராக அமைந்திருக்கக்கூடிய இந்துத்துவா நிகழ்ச்சி
நிரல் என்பவை அயோத்தியில் தாவாவுக் குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது என்பதும், நாடு
முழுவதும் ஒரே சீரான சிவில் சட்டம் அமல்படுத்துவது என்பதும், அரசியலமைப்புச்
சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்குவது என் பதுமாகும்.
இவையன்றி மதச் சிறுபான்மையினருக்கு இட
ஒதுக்கீடுகள் அளிப்பது தொடர்பாகவும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள்
கருத்துக்களைக் கூறத் தொடங்கி இருக் கிறார்கள். சமூக நீதிக்கான அமைச்சர் தவர்சந்த்
ஜெஹ்லாத் ஊடகங்களி டையே, உரையாற்றுகையில், “சிறுபான் மையினருக்கு 4.5 சதவீதம்
உள் இட ஒதுக்கீடு செய்வதை பாஜக அரசாங்கம் எதிர்க்கிறது’’ என்றும், “ஏனெனில்
மதஅடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோத மானது’’ (“unconstitutional”) என்றும்
கூறியிருக்கிறார்.
சிறுபான்மையினர் விவகாரங் களுக்கான அமைச்சர்
நஜ்மா ஹெப்துல் லாவும்கூட, சிறுபான்மை யினருக்கான இட ஒதுக்கீட்டைத் தான்
எதிர்ப்பதாகவும்,
ஏனெனில் இடஒதுக்கீடு என்பது போட்டி உணர்வையே
கொன்றுவிடுகிறது என்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார். (டைம்ஸ் ஆப் இந்தியா, மே 28, 2014)அவர் மேலும்,
முஸ்லிம்கள் சிறு பான்மையினர் இல்லை என்றும், ஏனெனில்
அவர்கள்நாட்டில் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்றும் கூறியிருப்பதுடன், அவர்
ஒருபடி மேலும் சென்று, பார்சிக்களை அவர்களின் மக்கள்தொகை சுருங்கி
வருவதால் இத்தகைய வரையறைக்குள் கொண்டுவரலாம் என்றும் வாதிட் டுள்ளார். முஸ்லிம்கள்
நலன் தொடர் பாக முந்தைய ஐமுகூ அரசாங்கம் மேற் கொண்ட கொள்கைகளைக் கைவிட அவர் முடிவு
செய்துவிட்டதுபோலவே தோன்றுகிறது.
“முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை.
பார்சிக்கள் தான் சிறுபான்மையினர். அவர்கள் எண்ணிக்கை மேலும் குறையா வண்ணம்
இருப்பதற்கு அவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று பார்க்கவேண்டியிருக்கிறது,’’ என்று
ஊடகங் களிடையே அவர் கூறியிருக்கிறார். (டைம்ஸ் ஆப் இந்தியா, மே 28, 2014)
முஸ்லிம் சிறுபான்மையினரின் பொருளாதார மற்றும்
சமூக நிலைகுறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட நீதியரசர் சச்சார் குழு, அவர்களின்
வாழ்நிலை தலித்துகள்/பழங்குடியினர் நிலைமைகளைவிட கீழானதாக இருக்கிறது என்று
அறிக்கை தாக்கல் செய்திருந்ததையும், அதன் அடிப்படை யில் ஐமுகூ அரசாங்கம் நீதியரசர்
ரங்க னாத் மிஷ்ரா ஆணையம் அமைத்து, அவர் களின் நிலைமையை மேம்படுத்திட ஆலோசனைகள்
கோரியதையும் வாச கர்கள் நினைவுகூர்ந்திட வேண்டும். அது அளித்த பரிந்துரைகளின்
அடிப்படையில்தான்,
2011 டிசம்பரில் ஐமுகூ அரசாங்கம், இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத
ஒதுக்கீட்டில், முஸ்லிம் சிறுபான்மை யினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வெட்டி உருவாக்கியது.
நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா ஆணையத்தின்
அறிக்கையின் அடிப்படை யில்தான் மேற்கு வங்கத்தில் முந்தைய இடது முன்னணி
அரசாங்கமும் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டிய லில் இருந்த பல்வேறு
முஸ்லீம் குழுவினருக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு, இதரபிற்படுத்தப்பட்டவர்கள்
ஒதுக்கீட்டிற் குள்ளேயே ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சனையில் மத்திய அரசாங்கம்
முடிவுகள் மேற்கொள்வதற்கு முன்பே மேற்கு வங்க முந்தைய இடது முன்னணி அரசு இவ்வாறு
முடிவெடுத்திருந்தது. முஸ்லிம்களை சிறுபான்மையின ராகக் கருதுவது என்பதை அவர் களின்
மக்கள் தொகை எண்ணிக்கையை வைத்துப்
பரிசீலிக்கக்கூடாது, மாறாக அவர்களின் பொருளா தார மற்றும் சமூக
நிலையின் அடிப் படையில்தான் பரிசீலிக்க வேண்டும் என்று இப்போது சிறுபான்மையினர்
நலன்களுக்காகப் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சருக்கு, சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
முஸ்லிம் சிறுபான்மையினரை, பார்சிக்கள் போன்ற சிறுபான்மையின ரோடு
ஒப்பிடுவது மிகவும் குரூரமான ஒன்று.
இந்துத்துவா நிகழ்ச்சிநிரலின் பல முக்கிய
அம்சங்கள் அரசாங்கத்தின் கொள்கை விவகாரங்களில் இவ்வாறு பலவிதங்களிலும்
பிரதிபலிக்கத் தொடங்கியுள்ள அதே சமயத்தில், நாட்டின் பலபகுதிகளிலும் மதவெறியைக்
கூர்மைப்படுத்தக்கூடிய விதத்தில், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் தன் கோர முகத்தை, உயர்த்தி
இருப்பதும் ஆழ்ந்து பரிசீலிக்கப் பட வேண்டிய ஒன்றாகும்.
மோடி அரசாங்கம் தில்லியில் பதவிப் பிரமாணம்
எடுத்துக்கொள்வதற்கு ஒருநாள் முன்பு, ஞாயிறு அன்று, கர் நாடகா மாநிலம் மங்களூரில் இந்துத் துவா
அமைப்புகள் சில கிளர்ச்சிப் போராட்டங்களை மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள்
வெளியாகி இருக்கின்றன.
என்ன கோரிக்கை தெரியுமா? முஸ்லிம்கள்
தொழுகையில் ஈடுபடுவ தைத் தடை செய்ய வேண்டுமாம். தேர்தல் முடிவுகள் வெளிவரத்
தொடங்கியதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மதப் பதற்ற நிலைமை
உருவாக்கப்பட்டிருக்கிறது. (டூ சர்க்கிள்ஸ்.நெட், மே 27, 2014).
மோடி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அதே
நாளன்று அதனைக் கொண்டாடும் விதத்தில் கர்நாடகா மாநிலம் பிஜப்பூரில் பாஜக ஊர்வலம்
ஒன்று நகரின் மையப்பகுதியான காய்கறி சந்தை அருகில் செல்லும்போது வகுப்புக்கலவரமாக
வெடித்து 15பேர் காயமடைந்திருக்கின்றனர், சந்தை யையே நிர்மூலமாக்கி சூறையாடி இருக்
கின்றனர். உள்ளூர் தொலைக்காட்சி சானல்கள் இவ்வன்முறையை ஒளிபரப்பி யுள்ளன.
தில்லியில் பதவிப் பிரமாணம் நடை பெறும் சமயத்தில், குஜராத் தலைநகரான அகமதாபாத்தில் கோம்டிபூர்
பகுதியிலும், வகுப்புக்கலவரங்கள் வெடித்துள்ளன. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடை யிலான
மோதலைத் தகர்ப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
இரு வகுப்பின ருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு
வாய்த்தகராறுதான் இம்மோதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இம்மோதலில்
அங்கிருந்த சில கடைகள், ஒரு மினிபேருந்து, ஒருசில
இரு சக்கர வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. (ஏஎப்பி சர்வதேச
ஏஜன்சி நிறுவனத்தின் செய்தியை மேற்கோள் காட்டி, மும்பையி லிருந்து வெளியாகும் டிஎன்ஏ நாளிதழ்
வெளியிட்டுள்ள செய்தி, மே 27, 2014)
பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரையில், நவீன
தாராள மயச் சீர்திருத்தங்கள் தொடர அனைத்துநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டன.
பாதுகாப்புத்துறை அமைச்சர், பாதுகாப்புத் தளவாடங்களை வாங்குவது தொடர்பாக
அந்நிய நேரடிமுதலீட்டுக்கான உச்சவரம்பு தற் போதுள்ள 26 சதவீதத்திலிருந்து
மேலும் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை
முதன்முறையாக அமல் படுத்தியது பாஜக தலைமையிலான வாஜ்பாய் அரசாங்கம்தான் என்பதை
இங்கே நினைவுகூர்ந்திட வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு இது ஊறு விளைவிக்கும்
என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அப்போது அது
பொருட்படுத்தவில்லை.இப்போதைய அரசாங்கத்தின் ஆரம்ப அறிகுறிகள், ஒருபக்கத்தில்
மதவெறியைக் கூர்மைப்படுத்தும் அதே சமயத்தில் மறுபக்கத்தில் தாராளமயப் பொருளாதார
சீர்திருத்தங்களை அமல்படுத்தும் வேலையிலும் அது ஈடுபடும் என்று நாம் வெளிவிட்டு
வந்த சந்தேகங்கள் அனைத்தும் மீண்டும் உறுதிசெய்யும் வண்ணம் அமைந்துள்ளதாகவே
கருதுகிறோம். உண்மையில், பாஜக அரசாங்கத்தின் இவ்வாறு இரு
பக்கங்களிலிருந்தும் வரக்கூடிய தாக்குதல்களைச் சந்திக்கத் தயாராயிருக்கக்கூடிய அதே
சமயத் தில், எதிர்காலத்தில் நம் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப்
பாதுகாத்திடக்கூடிய விதத்திலும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திடக்
கூடிய விதத்திலும் வலுவான போராட் டங்களுக்கும் தயாராவோம்.
- தமிழில்:
ச.வீரமணி
No comments:
Post a Comment