Sunday, January 13, 2013

அராஜக அரசியலை முறியடிப்போம்


மேற்கு வங்கத்தில் 2013 ஜனவரி 8 புதனன்று ஜனநாயகம் கொடூரமானமுறையில் வன்புணர்வுக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற, இடது முன்னணி அரசாங்கத்தில் நிலச் சீர்திருத்த அமைச்சராகச் செயல்பட்டு வந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் அப்துர் ரெசாக் முல்லா ஜனவரி 6 அன்று சென்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அரபுல் இஸ்லாம் என்கிற திரிணாமுல் காங்கிரஸ் குண்டர் தலைமையில் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட் டார்.

இத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பேரணி கொல்கத்தாவில் செவ்வாய்க் கிழமை அன்று நடைபெற்றது. ரெசாக் முல்லா மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாய சங் கத்தின் மாவட்ட மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தார். போகும்வழியில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அலுவலகத்தைப் பார்க்கச் சென்றபோதுதான் அவ்வாறு கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். உடனடியாக அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். 

திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் உள்ள மாநில அரசு நிர்வாகம், மனிதாபிமானமற்று மிகவும் இழிவான முறையில், அவருக்கு முறையான சிகிச்சை எதுவும் அளிக்காமல் உடனடியாக அவரை டிஸ்சார்ஜ்செய்யுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறது. அவர் கொடூரமான முறையில் தாக்கப்படவில்லை என்று காட்டுவதே இதன்பின்னணியில் உள்ள அரசின் நோக்கமாகும். ஆயினும் அந்த மருத்துவமனையில் அவர் காயங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கையானது, அவருக்கு இடுப்புக்கு அருகே முதுகெலும் பில் மிகவும் ஆழமான முறிவு இருப்பதைக் காட்டியிருக்கிறது. மிகவும் வஞ்சகமான முறையில், தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய அரபுல் இஸ்லாம், அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தான் காயம் அடைந்ததாகக் கூறிக் கொண்டிருந்திருக்கிறான். ஆயினும் அம்மருத்துவமனை மருத்துவர்கள் அவனுக்குக் காயங்கள் எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளார்கள்.இந்தத் தாக்குதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை ஏற்றி வந்த இருபதுக்கும் மேற்பட்ட வாகனங் கள் தாக்கப்பட்டு, தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன.

மூவருக்குத் துப்பாக்கிக் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 27 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். இதனை எழுதிக்கொண்டிருக்கக்கூடிய இத்தருணத்தில் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுத்தவர் கள் மீது நடவடிக்கை எதுவும் எடுப்பதற்குப் பதிலாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் கட்டளைக் கிணங்க மாநில காவல்துறையினர் இத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு காயம் அடைந்தவர்களையே கைது செய்துள்ளனர். பொய்க் குற்றச்சாட்டுக்களின்கீழ் காயமடைந்தோர் கைது செய்யப்பட்டுள்ள அதே சமயத்தில், இக்குற்றங்களைச் செய்திட்ட குண்டர்களோ மிகவும் சுதந்திரமாக சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர்.அனைத்தையும்விட மிகவும் மோசமான அம்சம் என்னவெனில், மாநில அரசின் மூத்த அமைச்சர்கள் இத்தாக்குதலை வெளிப்படையாகவே நியாயப்படுத்தி இருப்பதும், இது திரிணாமுல் காங்கிரசார் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடுத்த தாக்குதல் என்றும் கூற முயற்சித் திருப்பதாகும். அமைதியான முறையில் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் உரிமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழும், நாட்டின் சட்டங்களின் கீழும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் சட்டங்களை அமல்படுத்துவதை உத்தரவாதப்படுத்துவதற்குப் பதிலாக திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் உள்ள மாநில அரசாங்கம் நடைமுறையில் அமைதியான முறையில் எதிர்ப்பினைத் தெரி விக்கக்கூடிய உரிமையை மக்களுக்கு மறுக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சி ஆதரவாளர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைந்திடவும் மாநில நிர்வாகத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. 

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பின்னர் அதாவது 2011 மே மாதத்திற்குப் பின்னர், 2013 டிசம்பர் 31 வரையிலான காலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் 85 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பாக 848 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் 129 வழக்குகள் மிகவும் கொடூரமான முறையில் அவர்கள் மீதான வன்புணர்வுக்குற் றங்களுக்கானதாகும். இவ்வழக்குகள் பலவற்றில், கயவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, முதல்வர் உட்பட திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களையே கேலி செய்து வருகின்றனர். வன்புணர்வு மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் என்பவை திரிணாமுல் காங்கிரசின் அரசியல் அதிகாரத்தைக் காட்டும் கருவியாக மாறி இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி ஆதரவாளர்கள் 42 ஆயிரத்து 724 பேர், அவர்தம் முறையான குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் மூவாயிரம் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, கொள்ளையடிக் கப்பட்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான 646 அலுவலகங்கள் தாக் கப்பட்டு சூறையாடப் பட்டிருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மார்க்சிஸ்ட் கட்சி சார்பான 222 தொழிற் சங்கங்களையும் வெகுஜன அமைப்புகளின் கட்டடங்களையும் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றி இருக்கிறார்கள். கல்வி நிலையங்கள் மீதும் பெரிய அளவில் தாக் குதலைத் தொடுத்துள்ளார்கள். மாணவர் சங்கங்களுக்கான தேர்தல்கள் நடை பெற்ற இடங்களில் எங்கெல்லாம் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர்கள் தோற்றார்களோ அங்கெல்லாம் இந்திய மாணவர்கள் சங்கத்தின் அலுவலகங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர். இவ்வாறு 84 அலுவலகங்களை அவர்கள் கைப்பற்றி யிருக்கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் முன்னணி ஊழியர்களும் 3336 பேர் பொய்யாகப் புனையப்பட்ட குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.மாநிலம் முழுவதும் திரிணாமுல் குண்டர்கள் பெரிய அளவில் மக்களை அச்சுறுத்திப் பணம் பறிக்கும் வேலை யிலும் இறங்கி யிருக்கின்றனர். சுமார் பத்தாயிரம் பேரிடமிருந்து திரிணாமுல் குண்டர்கள் வலுக்கட்டாயமாக வசூலித்த தொகை சுமார் 28 கோடி ரூபாய்களாகும்.ரெசாக் முல்லா நிலச்சீர்திருத்தத் துறை அமைச்சராக இருந்து வந்ததால் திரிணாமுல் காங்கிரசார் அவர் மீது குறி வைத்திருந்தனர். இடது முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் உச்ச வரம்புக்கு மேலே சட்டவிரோதமாக வைத்திருந்த நிலங்கள் அனைத்தும் நிலப்பிரபுக்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. ரெசாக் முல்லா நிலச்சீர்திருத்தத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் இதனை மிகவும் உறுதியாக மேற்கொண்டார். 

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு, இவ்வாறு நிலங்களைப் பெற்ற விவ சாயிகளிடமிருந்தும் விவசாயத் தொழிலாளர்களிடமிருந்தும் நிலங்களை மீண்டும் கையகப்படுத்தி நிலப்பிரபுக்களிடமே ஒப்படைத்திருக்கிறார்கள். சுமார் 3500 விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை உழுது பயிரிட அனுமதிக்கப்பட வில்லை. குத்தகைப் பதிவுச் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியாகப் பதிவு செய்யப்பட்டிருந்த 27 ஆயிரத்து 283 பட்டாதாரர்கள் சுமார் பத்தாயிரம் ஏக்கர் அளவுள்ள அவர்களது நிலங் களிலிருந்தும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். 2011 மே மாதத்திற்குப்பின்னால் இவர் கள் கொண்டுவந்துள்ள மாற்றம்’ (`parivartan’) என்பது இதுதான்.

திரிணாமுல் காங்கிரசை எதிர்க்கும் எவராக இருந்தாலும் - அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் - அவர் தயவுதாட்சண்யம் எதுவுமின்றி கண் மூடித்தனமாகத் தாக்கப்படுகிறார். ஜனநாயகம் பட்டப்பகலில் படுகொலை செய் யப்படுகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. சிவில் உரிமைகள் மீதான பட்டவர்த்தனமான இத்தகைய தாக்குதல்களையும், மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதப் படுத்தியுள்ள ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் சகித்துக் கொள்ள முடியாது. 1970களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரைப் பாசிச அடக்குமுறை வெறியாட் டங்களை மேற்கு வங்கம் மறந்துவிட வில்லை. இப்போதைய திரிணாமுல் காங் கிரசும் அங்கமாக இருந்த அன்றைய காங் கிரசின் ஐந்தாண்டு கால ஆட்சியில் ஜன நாயகமும், ஜனநாயக உரிமைகளும் கடு மையாகத் தாக்கப்பட்ட சமயத்தில், நாட்டில் இருந்த பல அரசியல் சக்திகள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த எச் சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, இத் தகைய தாக்குதல்கள் ஒரு சிறிய வடு தான் என்றும் மேற்கு வங்கத்தில் மட்டும் தான் இது நடைபெறும் என்றும் கூறி நழுவிக் கொண்டார்கள். ஆனால் பின்னர் 1975இல் அவசர நிலைப் பிரகடனம் செய் யப்பட்டு நாடு முழுவதும் இத்தகைய அடக்குமுறைகள் விரிவாக்கப்பட்டு, மக் களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப் பட்ட சமயத்தில் அவர்களின் மாயைகள் தூள்தூளாயின. ஜனநாயகத்தை மீட்டெ டுத்திட நாட்டு மக்கள் நடத்திய போராட் டம்தான் 1977இல் வெற்றி பெற்றது. அத னைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் இடது முன்னணி வெற்றி பெற்றது. ஏழு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.காங்கிரஸ் மேற்கொண்ட அரைப் பாசிச அடக்குமுறையை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி உறுதியோடு எதிர்த்து நின்றது. இப்போராட்டத்தில் 12 ஆயிரத் திற்கும் மேற்பட்ட முன்னணி ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல்லா யிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளைத் துறந்து வெளியேறின. பல தலைவர்கள் தலைமறைவாக இருந்து செயல்பட்டார்கள். இறுதியில், மேற்கு வங்க மக்கள் நாட்டின் பிறபகுதி மக்க ளுடன் இணைந்து நின்று வெற்றிவாகை சூடினார்கள். இவ்வரலாற்றை மறந்து அடக்குமுறையை ஏவுவோர் நிச்சயமாக இதேபோன்ற கதியையே அடைவார்கள். மக்கள் அவர்களை அரசியல்ரீதியாக முறியடிப்பார்கள் என்பது உறுதி.
மேற்கு வங்க மக்கள் இத்தகைய தாக் குதல்களுக்கு எப்போதும் அடிபணிந்த தில்லை. வன்முறை மற்றும் அராஜக அர சியல் மூலமாக மக்களை அச்சுறுத்திப் பணிய வைத்து வரவிருக்கும் பஞ்சாயத் துத் தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட லாம் என்கிற அவர்களது அரக்கத் தனத்தை மக்கள் ஜனநாயக முறையில் அரசியல் ரீதியாக முறியடிப்பார்கள். நம் அரசியலமைப்புச் சட்டத்தை மதித்திடும் அனைவரும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையில் நம்பிக்கை வைத் திருக்கும் அனைவரும் இத்தகைய வன்முறை வெறியாட்ட அரசியலை, மனி தாபிமானமற்ற இழி நடவடிக்கைகளை அமைதியான பார்வையாளர்களாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இத்தகைய வன்முறை வெறி யாட்டங்களுக்கு ஜனநாயகத்தில் இடம் கிடையாது. இது நாட்டை விட்டே துரத்தப்பட வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி


No comments: